• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 40(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
காதல் அடைமழை காலம் – 40

அத்தியாயம் 41

சபூரா கண் விழித்து பார்த்த போது அருகில் கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தாள் யாஸ்மீன். மருந்து நெடியும், இறுக்கமான சூழ்நிலையும் தான் மருத்துவமனையில் இருப்பதை உறுதி செய்தது.

மெல்ல பார்வையை சூழல விட, மைசரா அறையில் ஒரு ஓரத்தில் தொழுது கொண்டிருந்தாள். மற்றொரு ஓரத்தில் ரிதா அமர்ந்திருந்தாள். மகளை வைத்த கண் வாங்காமல் பார்த்தார். நடந்த விஷயங்கள் அனைத்தும் படம் போல் மனதில் ஓடியது. ரசியாவின் பேச்சில் நிச்சயம் மனதொடிந்து போயிருப்பாள்.... போதாத குறைக்கு தானும் அல்லவா அவளை காயப்படுத்திவிட்டோம் . பிறகு ரசியாக்கும் தனக்கும் என்ன வித்தியாசம்? என மனம் குமைந்தார்.

தன் வாழ்வில் தன்னையும் மீறி நடந்துவிட்ட விபரீதங்களை நினைத்து மருகினார். இந்த ரசியா மட்டும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் அன்று தன் வாழ்வும் தடம் புரண்டிருக்காது. இன்று தன் மகளின் கண்ணியமும் சிதைந்திருக்காது. அன்பே உருவாய் பண்பே பழக்கமாய் தன்னை ஒவ்வொரு நாளும் தாய் போல் அரவணைத்த கணவரின் அன்பை இப்போது யாசித்தது அவர் மனம். அன்னையிடம் அசைவை உணர்ந்து அழைத்தாள் யாஸ்மீன்.

“ உம்மா.... உம்மா.... இப்போ உடம்பு பரவாயில்லையா”

“ம்.... பரவாயில்லை யாஸு.... கொஞ்சம் களைப்பாயிருக்கு அவ்வளவு தான்.” சிரமப்பட்டு பதில் கூறியவர் எழுந்தமர முயற்சிக்க, அவருக்கு யாஸ்மீன் வேண்டிய உதவிகளை செய்ய, ரிதா செவிலியரை அழைக்க சென்றாள்.

தொழுகை முடித்து விட்டு மைசரா தயங்கிய படியே அன்னை அருகே வந்தாள்.

“ உம்மா... “ என அவள் பேச துவங்கும் முன், “ மொதல்ல உம்மாவ மன்னிச்சிடு சரா” எனவும்,

“ ஏன்மா இப்படிலாம் பேசுற” என பதறிவிட்டாள் சரா.

“ இல்ல மா.... உம்மா தப்பு பண்ணிட்டேன். ஆயிரம் ஆதாரம் வந்தாலும் என் மகள் தப்பு பண்ணியிருக்க மாட்டா னு நான் உறுதியா சொல்லிருக்கணும். ஆனா சொல்லலயே....” என கலங்க, அன்னையை ஆனந்தமாய் கட்டிக் கொண்டாள் சரா.

“ உம்மா.... நீ என்னை நம்புறீயாமா? நா எந்த தப்பும் பண்ணலமா.” என சிறு பிள்ளை போல் அழுதாள்.

“ இல்ல டா... நீ எந்த தப்பும் பண்ணியிருக்கமாட்ட.... நா தான் அந்த போட்டோ பார்த்ததும் அதிர்ச்சியில ஏதேதோ பேசிட்டேன். ஸாரி டா...” என மனமுவந்து மன்னிப்பு கேட்க,

“ போ மா.... எங்கிட்ட போய் ஸாரி கேட்பியா. அந்த போட்டோவ பார்த்தா எந்த உம்மாவா இருந்தாலும் கோபம் தான் வரும். நீ என்னை நம்புறல அதுவே எனக்கு போதும்” என நிம்மதியாய் முகம் மலர்ந்தாள். தான் எந்த விளக்கமும் சொல்லாமலே தாய் தன்னை புரிந்து கொண்டதில் அத்தனை மகிழ்ச்சி அவளுக்கு.

செவிலியர் வந்து இரத்த அழுத்தம் சோதித்து விட்டு சரியாக இருப்பதாக கூறிச் சென்றார்.

“ரொம்ப பயமுறுத்திட்ட மா.... ரிதா வேற ஏதேதோ சொல்றா.... அந்த ரசியா என்னம்மா இவ்ளோ கேவலமா பேசியிருக்கா?” என ஆற்றாமையாக வினவினாள் யாஸ்மீன்.

“ ம்.... அவ எப்பவுமே அப்படி தான் மா. எதையும் யோசிக்கவேமாட்டா. கோபம் வந்துட்டா எல்லாத்தையும் மறந்திடுவா...”

“ அதுக்காக இப்படியா? நீயும் ஏன் மா அவள பேசவிட்ட?” என்ற கேள்விக்கு பெருமூச்சு மட்டுமே பதிலாக வந்தது.

“ எல்லா பிரச்சனையும் என்னால தானே சாச்சி? நான் தான் சராவ பிடிவாதமா திருச்சிக்கு கூட்டிட்டு போனேன்” என்றாள் ரிதா வாடிய குரலில்.

“ சே... சே...எது நடக்கணும் னு இருக்கோ அது நடந்து தான் ஆகும் ரிதா. நீ எதையும் நினைத்து கவலைபடக்கூடாது சரியா?” என்றார் அக்கறையாக. இப்போது அவர் பேச்சில் நல்ல தெளிவு இருந்தது.

“நா மைசரா கிட்ட எல்லாம் விசாரிச்சிட்டேன் மா. நம்ம சரா மேல எந்த தப்பும் இல்ல. இது தவறுதலா நடந்தது. நீ நிம்மதியா இரு மா” என்றாள் யாஸு.

“ இப்போ எனக்கு அந்த கவலை இல்ல மா....ரசியா கண்டிப்பா அமைதியா இருக்கமாட்டா. இந்நேரத்துக்கு அடுத்த பிரச்சனைய ஆரம்பிச்சிருப்பா.” எனவும்,

“ ஆமா சாச்சி.... நம்ம வீட்ல சண்டை போட்டுட்டு அவங்க திருச்சி போயிருக்காங்க. அங்கேயும் ஆச்சா கிட்ட சண்டை போட்டிருக்காங்க. ஆச்சா எனக்கு போன் பண்ணி கேட்டாங்க. நா இங்க நடந்தது எல்லாத்தையும் சொன்னேன் சாச்சி. ஆச்சா இங்க தான் கிளம்பி வந்துட்டிருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவாங்க” என நடப்பை கூறினாள் ரிதா.

“ அப்போ எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சிடுச்சா” என்றவரின் முகம் கலவரமானது.

“ விடு மா பார்த்துக்கலாம். தயவுசெய்து நீ டென்ஷன் ஆகாத. இப்போ தான் பிபி நார்மல் லெவலுக்கு வந்திருக்கு” என அவரை ஆசுவாசபடுத்தவும் கமரும் சனோபரும் உள்ளே நுழைந்தனர்.

“ வாங்க ஆச்சா.... வாங்க சாச்சி” என இளையவர்கள் வரவேற்க, சபூரா தலைகுனிந்து அமர்ந்திருந்தார். இப்போது கமரின் கேள்வி கணைகளை சமாளிக்க வேண்டுமே.

சபூராவை நலம் விசாரித்த சனோபர்,” உங்கள பற்றி மாமி நிறைய சொல்லியிருக்காங்க. இன்னைக்கு தான் பார்க்குறேன். சரா கூட எதுவும் சொல்லவேயில்ல. வீட்டுக்கு வாங்க லாத்தா” என பொறுப்பான மருமகளாக அழைத்தார்.

“ நீ கூப்பிட்டதே ரொம்ப சந்தோஷம் சனோபர். உன்னை பற்றியும் பிள்ளைங்க சொல்லியிருக்காங்க. உன்னை போட்டோல பார்த்திருக்கேன். இப்போ தான் நேர்ல பார்க்குறேன் “ என மெலிதாய் புன்னகைத்தார்.

கமர் சபூராவின் கைகளை பற்றிக் கொண்டு,” ரசியா பேசுனதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் சபூரா. என்ன நடந்திருந்தாலும் அவள் பேசுனது தப்பு. நீ இப்படி ஒதுங்கி வாழுற வரைக்கும் அவ இப்படி தான் பேசிகிட்டு இருப்பா.” என குரல் தழுதழுக்க பேசியவர்,” என்னம்மா நடந்தது? “ என மைசராவை விசாரித்தார்.

“ ஆச்சா.... நா திருச்சி வந்து இறங்கின அன்னைக்கு ரிதா ரூம்ல போய் படுத்துக்குறேன் னு சொன்னேனில்லையா ஆனா நா தூக்க கலக்கத்தில தவறுதலா அவங்க ரூம்முல போய் படுத்துட்டேன் ஆச்சா. விடியகாலையில தான் அவங்க பக்கத்துல படுத்திருக்குறத பா....பார்த்தேன் அப்புறம் எழுந்து வந்துட்டேன்.” யாஸ்மீனிடம் சொன்னதையே கமரிடம் கூறினாள் தலைகுனிந்து. அவன் போதையில் முத்தமிட வந்ததை கூற தயக்கமாக இருந்தது அவளுக்கு.

“ நீ ஏன் சராமா என்கிட்ட சொல்லல? அப்போவே சொல்லியிருந்தா ஆச்சா என்ன ஏது னு விசாரிச்சிருப்பேன்ல?” எனவும்,

சற்று தயங்கியவள்,” இல்ல ஆச்சா. இது தவறுதலா தானே நடந்திடுச்சு. பெருசு பண்ண வேணாம் னு நெனச்சேன்” என்றாள் மைசரா.

“ சரி.... இத யாரு படம் எடுத்தா?” எனவும் அங்கே அமைதி நிலவ, “ வேற யாரு.... ரிஸ்வி தான் எடுத்திருப்பாங்க” என்றாள் மைசரா மெல்லிய குரலில் எங்கோ பார்த்துக் கொண்டு.

“ ச்சீ.... ச்சீ... என் பேரன் அப்படியெல்லாம் செய்யமாட்டான். நீ அந்த படத்த பார்த்தயில்ல... அவனும் தூங்கிட்டு தானே இருக்கான்.” எனவும் பதிலில்லை அவளிடம். ஆனால் அவளது உள்மனம் அடித்து கூறியது அவன் தான் படம் எடுத்திருப்பான் என...

மைசரா தன் அருகில் நின்றிருந்த ரிதாவை ரகசியமாக கிள்ளி கண் காட்ட, “ ரிஸ்வி மச்சான் என்ன சொன்னாங்க ஆச்சா? இவ்ளோ பிரச்சனை நடந்திருக்கு ஒரு போன் கூட பண்ணல. நா பண்ணாலும் போகமாட்டிருக்கு” என கேட்டாள் ரிதா.

“ரிஸ்வியும் அவன் வாப்பாவும் வியாபார விஷயமா சிங்கப்பூர் போயிருக்காங்க மா. மருமவன் இருந்திருந்தா இவள இவ்ளோ பேசவிட்டிருக்க மாட்டாங்களே....”

“ பொறுக்கி.... இங்க கொளுத்தி போட்டுட்டு ஹாயாக சிங்கப்பூர் போயிட்டானா...” என மனதில் கறுவினாள் சரா.

அந்த நேரம் மருத்துவர் உள்ளே வர, பேச்சு தடைபட்டது.

“ ஏன்மா.... ஒரு பேஷண்ட் ரூம்ல இவ்ளோ பேரா இருக்குறது?” என மென்மையாக கடிந்துக் கொண்டு சபூராவின் மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்தவர், சபூராவை வீட்டிற்கு செல்லலாம் என கூறிச் சென்றார்.

“ ம்மா... நா போய் பில் செட்டில் பண்ணிட்டு வந்துடுறேன்” என யாஸ்மீன் கூற,” பில்லு பணம் நான் கொடுக்குறேன் யாஸு மா” என்றார் கமர். ஆனால் அதை மறுத்துவிட்டாள் யாஸ்மீன்.

“இன்னும் நாலஞ்சு நாள்ள ரிஸ்வியும், மருமவனும் வந்திடுவாங்க சபூரா. அதுக்கப்புறமா இத பற்றி நாம பேசுவோம். அதுக்குள்ள நீயும் உடம்பு தேறி வந்துடுவே. அதுவரைக்கும் கண்டதையும் யோசிச்சி உடம்ப கெடுத்துக்காதே.... சரி அப்போ நாங்க கிளம்பறோம்” என எழுந்தார்.

“ வீட்டுக்கு வாங்க ஆச்சா....” என சரா அழைக்க, கமர் சபூராவை பார்க்க, அவரோ மடிமேல் கோர்த்து வைத்திருந்த தன் கரங்களை தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

வெறுமையாக சிரித்து கொண்டவர்,” இன்னொரு நாள் கண்டிப்பாக வர்றேன்டா” என சராவின் கன்னத்தை வருடி விட்டு சென்றார்.

சிங்கப்பூர்......

பரப்பளவில் சிறியதானலும் அழகளவில் பெரிய நாடு. சினர்கள், மலாய் மக்கள், நம் இந்தியர்கள் என பல வகையான மக்கள், நாசி லெமாக், நாசி கோரங், ரோஜாக் என விதவிதமான உணவுகள், சீனம், மலாய், தமிழ் என பல்வேறு மொழிகள் என பல அம்சங்களை தன்னுள்ளே கொண்ட நாடு. சுற்றுலா செல்வதற்கும், வர்த்தகம் செய்வதற்கும் ஏற்ற நாடு. நம் தமிழ் மொழியை ஆட்சி மொழிகளில் ஒன்றாக கொண்ட நாடு. சாலைகளில் காணப்படும் சுத்தம் மக்கள் மனதிலும் காணப்படும். சொன்ன சொல் காப்பாற்ற வேண்டும் என எண்ணுபவர்கள். இனம், மதம், மொழி கடந்த ஒற்றுமை அந்நாட்டு மக்களிடைய உள்ளது.

தி புல்லர்டன் ஹோட்டல்.....

கதிரவன் இன்னும் பொறுப்பேற்காத விடியற்காலை பொழுது.....

அந்த பதினேட்டு மாடி கட்டிடத்தின் பதினேட்டாவது தளம் ஜகசோதியாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

அங்கே நம் மைசரா துன்ப கடலில் தத்தளித்து கொண்டிருக்க, பிரச்சனையின் நாயகனான ரிஸ்வியோ இங்கே உல்லாசமாய் நீந்திக் கொண்டிருந்தான். மல்லாந்தபடி பேக்ஸ்டோர்க் ஸ்டைலில் நீந்தி கொண்டிருந்ததால் இன்னும் பொழுது புலராத வானில் பிரகாசித்து கொண்டிருக்கும் வெண்நிலவை ரசித்து கொண்டிருந்தான். நிலவுக்கே ஒளி கொடுக்கும் சூரியன் கூட உதித்து மறைந்தாலும், தன்னிடத்தை மாற்றாத வெண்ணிலவுக்கு ரொம்ப தான் பிடிவாதம் என எண்ணிக் கொண்டது அவன் மனம்.

தன் தந்தையின் குரலில் பார்வையை திருப்பியவன், அவரது அழைப்பில் மனமேயில்லாமல் நீரிலிருந்து வெளியே வந்தான். அவர் நீட்டிய பூத்துவாலையை வாங்கி வழிந்தோடும் நீரை துடைத்து கொண்டவன் பாத்ரோப்பை எடுத்து அணிந்து கொண்டான். சில்லென்ற காற்றில் ஈரமான சிகை ஜிலுஜிலுத்தது.

“ விடிஞ்சும் விடியாம இங்க வந்துட்ட ரிஸ்வி.... எனி ப்ராபளம் ?” சூடான தேநீரை மகனுக்கு ஊற்றியபடி கேட்டார் ஆசாத். அவரது செய்கையை பார்த்துக் கொண்டிருந்தவன் தந்தையின் கேள்வியை கவனிக்கவில்லை.

பதிலளிக்காத மகனை திரும்பி பார்த்தவர்,” என்னாச்சு ரிஸ்வி அமைதியாகிட்ட..... அப்போ நிஜமாவே ப்ராபளம் தானா?” என்றார் கலவரமாக.

“ ப்ராபளம் தான் டாட். ஆனா நீங்க நினைக்குற மாதிரி ப்ராபளம் இல்ல” என இதழ்விரித்து சிரித்தான்.

மகனின் பூடகமான பதிலில் நெற்றி சுருக்கியவர்,” வர வர... புரியாத மாதிரியே பேசுற ரிஸ்வி. ப்ராபளம்ற ஆனா பளிச் னு சிரிக்குற.... என்ன விஷயம்?” எனவும்,

“ நத்திங் டாட்.” என மீண்டும் இதழ் சிரித்தவன் தந்தை நீட்டிய பிளைன் டீயை வாங்கி கொண்டான்.

காலை நேர தென்றலை சுகமாய் அனுபவித்து கொண்டிருந்தவனிடம்,” ரிஸ்வி இன்னைக்கு இங்க இஷூன்ல இருக்குற நம்ம சிக்கந்தர் மாமா வீட்ல வலிமா விருந்தாம். நான் சிங்கப்பூர்ல இருக்குறது தெரிஞ்சி கூப்பிட்டாரு.... போயிட்டு வந்திடுலாமா?” என்றார் ஆசாத்.

“ ஸாரி டாட்.... நா வரல நீங்க போயிட்டு வாங்க”

“ இங்க தனியா இருந்து என்ன பண்ண போற ரிஸ்வி? வந்த வேலையும் நல்லபடியா முடிஞ்சாச்சு. ப்ளைட்டுக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கு. தனியா இருக்காம என் கூட வரலாம்ல” என்றார் ஆதங்கமாக.

“ நோ டாட். ரெண்டு நாள் சிங்கப்பூர சுத்தி பார்க்கலாம் னு ஒரு ஐடியால இருக்கேன். அப்புறம் மாம் சில திங்க்ஸ் வாங்கிட்டு வர சொல்லியிருக்காங்க. சோ ஷாப்பிங் பண்ணணும்”

“ ஆமா மா. மறக்காம அவ சொன்னதை எல்லாம் வாங்கிடு....”

“ என்ன டாட்.... மாம்க்கு இப்படி பயப்படுறீங்க?” என சிரித்தான் ரிஸ்வி.

“ என்ன பண்றது? கோபம் வந்தா அவ அவளா இருக்கமாட்டாளே.... ஆனா ரிஸ்வி..... கோபம் இருக்குற அளவு என் மேல பாசமும் இருக்கு” என சிலாகித்தார்.

“ எக்ஸ்ஸட்லி....” என புன்னகைத்தவன் பாதி காய்ந்த தன் சிகையை கோதி விட்டு கொண்டான்.

இருவரும் அறைக்கு வந்து குளித்து தயாராகி காலை உணவை சாப்பிட்டு விட்டு , ஆசாத் இஷூன் கிளம்ப.... ரிஸ்வி அறைக்கு வந்தான். இரவில் சரியான தூக்கமில்லாததால் களைப்பாக உணர, திரைசீலைகளால் சாளரங்களை மூடிவிட்டு படுக்கையில் சாய்ந்தான்.
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
சபூரா தன் மகளிடம் நீ எந்ததப்பும் பண்ணிருக்க மாட்டடா, நான் உன்னை நம்பாமல் கோப்பட்டது தவறு என்று சொல்லுவதும், சரா தன் அன்னையை சந்தோசமாக ஆரத்தழுவிகொள்வதும் அருமை, கமர் தன் மகள் ரசியா நடந்து கொண்டதுக்கு மன்னிப்பு கேட்பதும், தன் பேரன் ரிஷ்வி தவறானவன் அல்ல என்று கூறுவதும் அருமை, இங்கு நடக்கும் பிரச்சனை சிங்கப்பூர்ல் இருக்கும் ரிஷ்விக்கு தெரியவில்லையோ, தெரிந்தால் அடுத்து என்ன செய்ய போறானோ ??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top