• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 45(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
காதல் அடைமழை காலம் – 45

அத்தியாயம் 46

ஒரு வாரம் கடந்திருந்தது.....

மைசராவின் மன அமைதிகாக ரிஸ்வி நல்லபிள்ளையாக அவளை சீண்டாமல் இருந்தான். நடுவில் இரண்டு நாட்கள் அவன் திருச்சி சென்று வந்தது மைசரா இங்கே பொருந்தி கொள்வதற்கு ஏதுவாக இருந்தது.

எடுபுடி வேலை என்றாலும் அதிலும் நிறைய நுணுக்கங்களை கற்றுக் கொண்டனர் பெண்கள். இன்று ஹசினா அவர்களுக்கு புதிதாய் ஒரு வேலையை கொடுத்தார்.

“ கேர்ள்ஸ்..... இந்த இன்டர்ன்ஷிப்காக நீங்க வரைந்த டிரஸ்ஸ தான் இன்னைக்கு டிசைன் பண்ண போறீங்க... உங்க டிசைனுக்கான பேப்ரிக்க செலக்ட் பண்ணுங்க...” என்றவர் இன்னும் சற்று விளக்கி விட்டு அக்பரிடம் பொறுப்பை கொடுத்து விட்டு நகர்ந்தார்.

மாணவிகள் தாங்கள் வரைந்த உடைகான துணியை தேர்ந்தெடுத்து விட்டு அதை தேர்ந்தெடுத்ததற்காக காரணத்தை விளக்கிக் கொண்டிருந்தனர். மூன்றாவது ஆளாக மைசரா பேசிக் கொண்டிருக்க, சட்டென அவள் நாசியில் உரைத்த அத்தர் வாசம் ரிஸ்வியின் வரவை அவளுக்கு திரும்பாமலே உணர்த்தியது. முதுகில் ஊசியாய் குத்தும் உணர்வில் பேசிய படியே திரும்பி பார்த்தாள்.

அவளை தலை முதல் கால் வரை பார்வையால் வருடிக் கொண்டிருந்தான் ரிஸ்வி. அவள் திரும்பி பார்ப்பாள் என நினையாதவன் அவள் பார்த்ததும் மிக லேசாய் விழி விரித்தவன் அரும்பிய மென்னகையை இதழ்களுக்குள்ளேயே மறைத்தான்.

“ நான் வந்ததும் ஏன் நிறுத்திட்டீங்க? நீங்க எக்ஸ்ப்ளைன் பண்ணுங்க” என்றவன் மேஜையில் சாய்ந்து கை கட்டி கொண்டு வசதியாக அவளை சைட் அடித்தான். ஒரு வழியாக திக்கி திணறி விளக்கி முடித்தவள் ஒப்புதலுகாக அக்பரை ஏறிட, அவரோ ரிஸ்வியின் முகம் பார்க்க, மைசராவின் விழிகளும் அவனிடமே சென்றன.

“ நீங்க சொன்னதெல்லாம் சரி தான். ஆனாலும் எனக்கு திருப்தி இல்லை. பேசாம நீங்க வேற டிரஸ் டிசைன் பண்ணிடுங்களேன்...” எனவும் அவனை வழக்கம் போல் ஒற்றை புருவம் தூக்கி முறைத்தாள். தான் எண்ணியதை போல தன்னை அவமானபடுத்த தான் வரவழைத்திருக்கிறான் என நினைத்தவள்,” இந்த டிரஸ் டிசைன் பண்ணதுக்கு தானே நான் இந்த இன்டர்ன்ஷிப்கே செலக்ட் ஆனேன். அப்புறம் எதுக்கு இந்த டிசைன ரிஜெக்ட் பண்றீங்க” என்றாள் முயன்று வரவழைத்த சாதாரண குரலில்.

“ அப்போ அந்த டிரஸ் பிடிச்சிருந்தது. இப்போ பிடிக்கலை. ஏன் உங்களால வேற டிசைன் வரைய முடியாதா?” என்றான் சீண்டலாக. ரிதா கூட ரிஸ்வியை முறைத்தாள். ஆனால் அதையெல்லாம் சட்டை செய்யாமல் மைசராவை நேருக்கு நேராக பார்க்க அவனது பார்வையின் கூர்மையில் தலை கவிழ்ந்தவள் பேசாமல் ஒரு வெள்ளை தாளை எடுத்து கொண்டு அமர்ந்தாள்.

மற்றவர்களும் தங்கள் விளக்கத்தை கூறி முடிக்க, அனைவரது டிசைனுக்கும் ஒப்புதல் அளித்தான் ரிஸ்வி. அவனது செய்கையில் கண்ணை கரித்துக் கொண்டு வந்தது சராவுக்கு. அவன் உள்ளே சென்றதும் அவள் அருகில் வந்தாள் ரிதா.

“ பார்த்தல்ல..... உன் மச்சான் வேணும்னே தானே என் டிசைன ரிஜெக்ட் பண்ணாங்க. அவங்க என்னை பழி வாங்க தான் ப்ளான் பண்ணியிருக்காங்க ரிதா.”என்றாள் அழுகை முட்டிய குரலில்.

தோழியின் வருத்தத்தில் தானும் வருந்தியவள் நேராக ரிஸ்வியின் அறைக்கு சென்றாள்.

“ என் ஆளு வந்து நிற்பா னு பார்த்தா என் தம்பியோட ஆளு வந்து நிற்குது...” என கேலியாக சிரித்தான் ரிஸ்வி.

“ ஏன் மச்சான் அவள இப்படி சீண்டுறீங்க.... அவ அழறா தெரியுமா?” என்றாள் ரிதா கோபமாக.

“ யாரு அவ அழறாளா? இன்னும் கொஞ்ச நேரத்தில சிலுத்துகிட்டு வந்து நிற்பா பாரு..... என்னை மொளகா பஜ்ஜி னு சொன்னா னு சொன்னயில்ல.... அப்போ காரத்த காட்ட வேண்டாம்?” என்றான் முறுவலித்தபடி.

“ அதுக்காக இப்படியா? எனக்கே ஒரு மாதிரி ஆகிடுச்சு”

“ என்ன பண்றது உன் ப்ரெண்ட் சண்டை போட மட்டும் தான் என்னை தேடி வர்றா...” என சொல்லி கொண்டிருக்கும் போதே கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் சரா.

“ நா சொல்லல....” என்பதை போல ரிதாவை பார்த்து விட்டு சராவின் புறம் திரும்பினான்.

ரிஸ்வி கதவை ஒரு பார்வை பார்த்து விட்டு சராவை ஏறிட, அவனது பார்வையின் அர்த்தத்தை புரிந்தவள்,” கதவெல்லாம் தட்ட முடியாது. ஏன்னா நா எம்.டி கிட்ட பேச வரல. என்னோட.....” தன்னையறியாமல் பேசிவிட்டதில் ரிஸ்வியின் முகம் கனிய, மேற்கொண்டு பேச முடியாமல் தடுமாறினாள் மைசரா.

“ உன்னோட....?” ரிதா எடுத்து கொடுக்க

“ ஆங்.... எ... என்னோட என்னோட.... ஆங்... என்னோட ஆசாத் மாமா மகன் கிட்ட பேச வந்தேன்.”

“ பரவாயில்லை.... பட்சி கொஞ்சம் இறங்கி வருது....” என சிலாகித்தவன்,” சரி இப்போ மச்சான் கிட்ட என்ன பேசணும்” என்றான் தன்மையாக.

“ ஹலோ..... நா ஒன்னும் மச்சான் னு சொல்லலயே....” ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க

“ அய்யோ ஆண்டவா.... எங்க ஊருல மாமா மகன மச்சான் னு தான் சொல்லுவோம். உங்க ஊருல எப்படி சித்தப்பா னு சொல்லுவீங்களா” என கடிக்க, அடக்க முடியாமல் சிரித்துவிட்டாள் ரிதா.

அவளை சரா முறை முறையென முறைக்க, “ ஆ.... ஊ.... னா இப்படி புருவத்தை தூக்குறீயே உனக்கு வலிக்கலயா” என்று வேறு கேட்டு வைக்க, ரிதா சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டாள்.

அவன் செய்த அலம்பலில் பேச வந்த விஷயத்தையே மறந்து விட்டு நின்றாள் மைசரா.

ரிதா ஒரு விஷயத்தை நன்றாக கவனித்தாள். அனைவரிடமும் முறைப்பாக பேசும் ரிஸ்வி மைசராவிடம் மட்டும் கனிந்துவிடுகிறான். எல்லோரிடமும் கனிவாக பேசும் மைசராவோ ரிஸ்வியிடம் மட்டும் முறைத்து கொள்கிறாள். காதலில் இயல்பை தொலைத்து விட்டு நிற்கும் காதலர்களை ரசித்துக் கொண்டிருந்தாள் ரிதா.

விறு விறுவென மலையேறுபவளை தடுக்கும் பொருட்டு,” ஓ.கே.... என்ன விஷயமா பேச வந்த” என விஷயத்துக்கு வந்தான் ரிஸ்வி.

“ ஏன் என்னோட டிசைன ரிஜெக்ட் பண்ணீங்க? உங்களுக்கு என்ன தான் பிரச்சனை? ஆரம்பத்தில இருந்தே உங்களுக்கு என்னை கண்டா பிடிக்கல.... என்னை வேணும்னே வேணும்னே சீண்டுறீங்க.... இன்ஸல்ட் பண்றீங்க....” என முறையிட்டாள் மைசரா.

“ எனக்காடி உன்னை பிடிக்கல? நீ வேணும் வேணும் னு தானேடி சீண்டினேன்” என மனதில் எண்ணியவன்,” ஏன் நான் மட்டும் தான் இன்ஸல்ட் பண்ணேனா? நீ பண்ணவேயில்லையா?” என்றான் காரமாக.

“ நா என்ன பண்ணேன்? அன்னைக்கு எல்லாரும் பார்சல் கொடுக்கும் போது இவ இந்த குடும்பத்து ஆளில்லை னு நீங்க இன்ஸல்ட் பண்ணல?”

“ அப்படி பண்ணு போது நான் வெளியாள் இல்ல.... முபாரக் மக னு கெத்தா சொல்ல வேண்டியது தானே. அத விட்டுட்டு சோக கீதம் வாசிச்சி சிம்பத்தி க்ரீயேக்ட் பண்ணி என்னை ஸாரி கேட்க வைக்கல?”

“ஆமா.... பெரிய ஸாரி கேட்டுட்டீங்க? மறுநாள் பிக்னிக் போனப்ப குடிச்சிட்டு என்கிட்ட கலாட்டா பண்ணல?” இது எப்போ என விழி விரித்தாள் ரிதா.

“ யாரு.... நா குடிச்சேன்? அத நீ பார்த்தே?” மைசராவோடு சரிக்கு சரியாக மல்லு கட்டினாலும் அவன் முகத்தில் விளையாட்டுத்தனமே தெரிந்தது. ஆனால் அதை சரா தான் கண்டுகொள்ளவில்லை.

“ஹ.... நான் தான் பார்த்தேனே..... கார் பின்னாடி நின்னு அந்த கண்றாவிய குடிச்சீங்களே? என வெகுவாய் முகம் சுளித்தாள்.

“ கார் பின்னாடி நின்னு குடிச்சா அது பிராந்தி தானா? சரி..... அப்படி பார்த்தாலும் நா தானே குடிச்சேன். நீ ஏன் கொதிக்கிற சாம்பார என் கையில ஊத்துனே?....”

“ பின்னே.... என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா னு கேட்டா அப்படி தான் ஊத்துவேன். நீங்க மட்டும் என்ன ஒழுங்கா? அதுக்கு தானே நா குடிக்கிற டீயில பெப்பர் சால்ட்ட அள்ளி போட்டீங்க.... மறந்துட்டீங்களா”

சிறு பிள்ளைகளை போல இருவரும் ஒருவர் லீலையை ஒருவர் அவிழ்த்து விட தலையில் அடித்துக் கொண்டாள் ரிதா.

“ நம்மள அமுக்கினி.... அமுக்கினி னு திட்டிட்டு இதுங்க கமுக்கமா எவ்ளோ வேலை பாத்திருக்குதுங்க.....” என புலம்பி கொண்டவள்” இதுங்க சண்ட இப்போ ஓயாது.... “ என எழுந்து சென்றாள்.

“ ஹே.... ரிதா எங்க போற?” சண்டையை நிறுத்தி விட்டு இருவரும் ஒரு குரலாய் கேட்டனர்.

“ ம்.... நீங்க சாவகாசமா உங்க எல்.கே.ஜி சண்டைய முடிச்சிட்டு வாங்க.... நா போறேன்” என்றவள் வெளியே சென்றுவிட்டாள். அப்போது தான் இருவரும் தாங்கள் பேசியதை உணர்ந்தனர். அதன் பின் என்ன பேசுவது என்றே தெரியாமல் மைசரா இதழ் கடித்த படி நிற்க, அந்த இதழை விடுவிக்க பரபரக்கும் விரலை மடக்கியபடி சிரித்தான் ரிஸ்வி.

“ இவ்ளோ நேரம் சண்டை போட்டுட்டு இப்போ எப்படி சிரிக்கிறான்..... பாரு....” என முனங்கியவள்,” இது இப்போ நான் டிசைன் பண்ணது.....” என கையிலிருந்த காகிதத்தை நீட்டியவள் அவனது கண்களை பராமல் அதை குறித்து விளக்கினாள்.

“ வாவ் ஃபன்டாஸ்டிட்..... இதையே டிசைன் பண்ணிடுங்க” என உற்சாகமாக ஒப்புதல் அளித்தான் ரிஸ்வி.

“ தேங்க்யூ....” என்று விட்டு திரும்பியவளின் முதுகில் ஊசியாய் அவன் பார்வை குத்தினாலும் திரும்பி பார்க்க தைரியமில்லாமல் சென்றுவிட்டாள் மைசரா.

அதன்பின் சரா துரிதமாக வேலையில் இறங்க, ரிதா ஒரு புறம் அவளை படுத்திக் கொண்டிருந்தாள்.

“ எரும மாடு..... இவ்ளோ நடந்திருக்கு. ரெண்டு பேரும் என் கிட்ட எதையும் சொல்லவேயில்லல.” என பொரிந்தாள் ரிதா. அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றாள் மைசரா.

“ அதென்ன? என் மச்சான் குடிச்சாங்க குடிச்சாங்க னு குதிக்கிற? ரிஸ்வி மச்சான் அப்படியெல்லாம் கிடையாது சரா.”

“ உனக்கு உன் மச்சான் பத்தி தெரியாது ரிதா.... அந்த பேச்ச விடு.”

“ சரி... மச்சான் கல்யாணம் பண்ணிக்கிறியா னு கேட்டாங்களா..... சொல்லவேயில்ல....” என்றாள் தோளை இடித்தபடி.

“ ஆமா.... ஆமா.... சொன்னாங்க.... சுரைக்காய்க்கு உப்பு இல்லை னு.... போய் வேலைய பாருடி..... என் டிசைன இப்போ தான் உன் மச்சான் அப்ரூவ் பண்ணியிருக்காங்க....” என போனவளை கரம் பிடித்து நிறுத்தியவள்,” நம்ம மச்சான் னு சொல்லு சரா....” என்றாள் ரிதா வழக்கம் போல் குறும்பாக.

“ போடி.... அத மட்டும் சொல்ல மாட்டேன்.... ” என முறுக்கி கொண்டு செல்பவளை பார்த்து முறுவலித்தவள்,” உன்ன சொல்ல வைக்காம என் மச்சான் விட மாட்டாங்க சரா” என தனக்குள் சொல்லி கொண்டாள்.

வேலை முடிந்து கிளம்பிய தோழிகள் இருவரும் பேசியபடி பார்க்கிங் வந்தனர். வழக்கமாக அவர்கள் கிளம்பும் நேரம் ரிஸ்வி கடையின் நுழைவாயிலில் தான் நிற்பான். ஆனால் இன்றோ அவன் அரைமணி நேரத்திற்கு முன்பே எங்கோ கிளம்பியிருந்தான்.

“ வண்டில ஏறு ரிதா..... என்ன பார்த்துட்டு இருக்கே....” தோழியின் அருகே வண்டியை நிறுத்தியவள் கேட்டாள்.

“ இல்ல.... எப்பவும் மச்சான் கிளம்பும் போது நமக்கு டாட்டா காட்டுவாங்க... இன்னைக்கு ஆள காணோம்.” என விழிகளால் ரிஸ்வியை தேடியபடியே ஏறினாள் ரிதா.

“ நமக்கு இல்ல உனக்கு...”

“ எல்லாம் ஒன்னு தான். வண்டிய கிளப்புமா நீ...” என அவளை ரிதா பாடாய்படுத்தி கொண்டிருக்க, கீரிச்....என்ற சத்தத்தோடு அருகில் வந்து நின்றது ஒரு வெள்ளை மகிழ்வுந்து. இருவரும் பேச்சை நிறுத்தி திரும்பி பார்க்க, அவர்களுக்கு கையசைத்தபடி இறங்கினான் ரமீஸ்.

யுவதிகளின் விழிகள் தாமரையாய் விரிய, புன்னகைத்தபடி அருகில் வந்தான் அவன். லண்டன் குளுமையால் தேகம் மினுமினுக்க, மிஸ்பாவின் துணையால் முகம் பூரித்திருந்தது. அதிர்ச்சி ஆச்சரியமாய் மாற, பதட்டம் பரவசமாய் நிறைந்தது.

“ காகா....” என்ற கூவலோடு அவனை அணைத்து கொண்டனர் தங்கைகள்.

“ வாட் எ ப்ளசென்ட் சர்பரைஸ் காகா.... ஐ காண்ட் பிலீவ் திஸ்” என குதித்தாள் ரிதா உற்சாகமாக.

“ வரேன் சொல்லியிருந்தா ஏர்போர்டுக்கே வந்திருப்போமே காகா” என்றாள் மைசரா.

“ இட்ஸ் ஓ.கே டா. ஒரு முக்கியமான வேலையா வந்தேன். உங்களுக்கு சர்ப்ரைஸா இருக்கட்டுமே னு தான் சொல்லல.” என்றவன் நலம் விசாரித்து கொண்டான்.

“ அச்சோ.... இந்த நேரம் னு பார்த்து ரிஸ்வி மச்சான் இங்க இல்லையே....” என கையை பிசைந்தாள் ரிதா.

“ பரவாயில்ல டா.... நா உங்கள பார்க்க தான் வந்தேன். ஓ.கே.... சரா வண்டிய இங்கேயே பார்க் பண்ணிட்டு வா.... நாம ஒன்னா காருல போலாம்” என்றான் ரமீஸ்.

“ ஓ.கே காகா.... பட் நாம எங்க போறோம்?”

“ எங்கே னு சொன்னா தான் மேடம் வருவீங்களா?” அவன் எதிர் கேள்வி கேட்க, சிரித்த படி வண்டியை மீண்டும் அதே இடத்தில் நிறுத்தி விட்டு காரில் ஏறிக்கொண்டாள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top