• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 45(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
ரிதா உவகை மிகுதியில் வளவளத்தபடி வர, மைசராவோ சிறு யோசனையில் வந்தாள். வழியில் சபூரா ஏறிக்கொள்ள இன்னும் குழம்பி போனாள் மைசரா. ரிதா இன்னும் உற்சாகமாகி போனாள்.

“ என்னம்மா தீடீர் னு காகா வந்திருக்காங்க? நம்மள வேற எங்கேயோ கூட்டிட்டு போறாங்க? என்ன விஷயம்?” மைசரா மெல்ல தாயிடம் விசாரித்தாள்.

“ எனக்கும் தெரியல சரா.... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ரமீஸ் எனக்கு போன் பேசி வர சொன்னான்.” என கையை விரித்தார்.

சற்று நேரத்தில் ஒரு நட்சத்திர விடுதி முன் நின்றது மகிழ்வுந்து. காவலாளியிடம் சாவியை கொடுத்து காரை பார்க் பண்ண சொல்லி விட்டு ரமீஸும் ரிதாவும் முன்னே செல்ல, தயங்கி தயங்கி பின்னே சென்றனர் தாயும் மகளும். ரமீஸின் அமைதியே அவர்களுக்கு ஒரு வித பயத்தை கொடுத்தது.

சில லகரங்களை விழுங்கி விட்டு பகட்டாக காட்சியளிக்கும் அந்த பிரமாண்ட ஹாலை தொடர்ந்து உள்ளே சென்றார்கள். தனிதனியே அமைந்திருந்த கேபின்களில் ஒன்றில் ரமீஸ் நுழைய, அவனை தொடர்ந்து இவர்களும் உள் நுழைந்தனர்.

ரமீஸை தாண்டி சென்ற அவர்களின் பார்வை அங்கே அமர்ந்திருந்தவர்களை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை பிரதிபலித்தது. ‘ப’ வடிவ குஷன் சோபாவில் ஒரு புறம் ஆசாத், ரசியா மற்றும் அயான் அமர்ந்திருக்க, பக்கவாட்டில் ரிஸ்வி அமர்ந்திருந்தான். அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்ததில் அனைவரின் முகத்திலும் அப்பட்டமான அதிர்ச்சி. அயானின் முகத்தில் மட்டும் ஆனந்தமோ??????

சபூரா கால்கள் வேறூன்றியதை போல் அப்படியே நிற்க, மைசரா தாயின் தோளை பற்றிக் கொண்டாள்.

“ ஏன் அங்கேயே நின்னுட்டீங்க சாச்சி.... உள்ளே வாங்க...” என அழைத்து விட்டு ரிஸ்வியின் அருகில் அமர்ந்தான் ரமீஸ்.

ரிஸ்வி அவனை யோசனையாக பார்க்க, ரமீஸ் இமையை மூடி திறந்து ஆசுவாசபடுத்தினான்.

“ வாங்க சாச்சி...” என ரிதா கரம் பற்றி இழுத்து சென்று அமர வைக்க, ரசியா வேகமாக எழுந்துவிட்டார்.

“ வாட் இஸ் திஸ் ரமீஸ்? எதுக்கு இவங்களை எல்லாம் இங்கே கூப்பிட்டு வந்திருக்கே....” என கோபமாக கூறவும்,

“ கொஞ்சம் உட்காருங்க மாமி.... நாம பேசலாம்”என ரமீஸ் ரசியாவை கையமர்த்தினான்.

“ ரசியா.... என்ன தான் பேசுறாங்க னு பார்ப்போம். அமைதியா இரு...” என்றார் ஆசாத்.

“ நோ... இவ கிட்டலாம் என்னால எதுவும் பேச முடியாது. இவ ஊரை விட்டு போன கதையை பேச தான் நீ லண்டனிலிருந்து கிளம்பி வந்தியா ரமீஸ்.... அதெல்லாம் முடிஞ்சது முடிஞ்சது தான்.... மறுபடியும் கிளறாத....” என அடிக்குரலில் சீறினார் ரசியா. பொது இடம் என்பதால் அவரது கனத்த தொண்டை திறக்கவில்லை போலும். ரமீஸும் இதற்கு தானே இந்த இடத்தை தேர்ந்தெடுத்தான்.

சபூராவோ நடுநடுங்கி போனார். அந்த ஏசி அறையிலும் அவருக்கு வியர்வை துளிர்த்தது.

“ மாமி.... நா என்ன சொல்ல வரேனா....”

“ நீ எதுவும் சொல்ல வேண்டாம் ரமீஸ். இரண்டு வருஷமா யாருக்கும் தெரியாம இவளோட உறவாடிட்டு தானே இருந்திருக்கே? நீ என்ன பேச போறே..... யாருக்காக பேச போற னு எனக்கு தெரியும்” ரமீஸை பேசவே விடாமல் பொரிந்தார் ரசியா.

“ ரசியா கன்ட்ரோல் யுவர் செல்ப்..... நா ஏற்கனவே சொன்ன மாதிரி நீ என்ன தான் வெறுத்தாலும் சபூரா லாத்தா இந்த வீட்டு மருமக. அவங்களுக்கான ஸ்பேஸ நீ தந்து தான் ஆகணும். புரிஞ்சிக்கோ....” என மனைவியை தன்மையாகவே அதட்டினார் ஆசாத்.

“ உங்க பாழா போன பழைய கதைய பேச நா வரல மாமி.... அது எங்களுக்கு தேவையுமில்லை. நான் பேச வந்தது வேற விஷயம். தயவுசெய்து கொஞ்ச நேரம் பேசாம இருங்க.” என்றான் ரமீஸ் சற்றே கோபமாக

நடப்பது எதுவும் புரியாமல் விழித்து கொண்டிருந்தாள் மைசரா. ரிதாவிடம் ஏதோ கேட்க திரும்ப அங்கே அயானுக்கும் அவளுக்கும் இடையே ஓர் பார்வை யுத்தம் நடந்துக் கொண்டிருந்தது.

“ ம்.... இந்த ரணகளத்திலயும் உங்களுக்கு குதூகலம் கேட்குதா? நடத்துங்க.... நடத்துங்க....” என திரும்பியவள் ரிஸ்வியை ஏறிட்டாள்.

“ இவன் ஏதாவது ப்ளான் பண்ணியிருப்பானோ.... ஆனா இவன் மூஞ்சிய பார்த்தா அப்படியெதும் தோணலயே” என ஆராய்ந்தாள்.

“ அடியேய் பப்ளிமாஸு.... மத்த நேரத்தில எல்லாம் மச்சான திரும்பி கூட பார்க்கமாட்டே.... இப்போ உம்மாவ பக்கத்துல வைச்சிகிட்டு இப்படி லுக் விடுறீயே....” என உள்ளுக்குள் புலம்பியவன் கவனமாக தன் பார்வையை அலைபேசியில் பதித்திருந்தான்.

அப்போது தான் ரசியா தன்னை முறைப்பதை உணர்ந்த சரா ,” ஆத்தி.... இவள மறந்துட்டோமே....” என பதறி போய் பார்வையை திருப்பிக் கொண்டாள். சற்று நேரம் நிலவிய அமைதியின் போது சிப்பந்தி ஆர்டருக்காக வந்து நின்றான்.

சூழ்நிலையின் கனம் உணர்ந்து ரமீஸ்,” 8 ஸ்வீட் கார்ன் சூப்.... “ என அனைவருக்கும் அவனே ஆர்டர் செய்தான்.

சிப்பந்தி சென்றதும்,” ஓ.கே.... நான் பேச வந்த விஷயத்தை பேசிடுறேன்... நா லண்டன் போனதுக்கப்புறம் இங்க நிறைய விஷயங்கள் நடந்திருக்கு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் ரிதாவும் ஆச்சாவும் இத பத்தி சொன்னாங்க..... கேட்டுட்டு உண்மையிலயே எனக்கு ரொம்ப வருத்தமாகிடுச்சி..... எனக்கு என் மாப்ள ரிஸ்விய பத்தியும் தெரியும்..... என் தங்கச்சி மைசராவ பத்தியும் தெரியும்..... நடந்த பிரச்சனையில அவங்க ரெண்டு பேருக்குமே எந்த சம்பந்தமும் இருக்காது னு நா திடமா நம்புறேன்” ரமீஸ் பேச பேச அன்று நடந்தவை யாவும் நினைவு வந்து அனைவரின் மனமும் கணமானது. அந்த நொடி ரிஸ்வியும் சராவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள வெகுவாக வெறுத்தனர்.

“ ஆக மொத்தத்தில அன்னைக்கு ரிஸ்வி குடிச்சதுனால தான் எல்லா பிரச்சனையும் வந்திருக்கு ரைட்? அப்படி தானே எல்லாரும் நினைக்கிறீங்க..... ஆமா.... அன்னைக்கு ரிஸ்வி குடிச்சிருந்தான் தான். ஏன் நிதானமில்லாத அவன வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததே நான் தான். ஆனா குடிப்பழக்கமே இல்லாத அவன் அன்னைக்கு ஏன் குடிச்சான் னு யாராவது யோசிச்சிங்களா?” கோபமில்லை என்றாலும் அழுத்தமான குரலில் கேட்டான் ரமீஸ்.

அனைவரும் ரிஸ்வியை கேள்வியாக பார்க்க,” வேண்டாம் மச்சான்..... எதுவும் சொல்ல வேண்டாம் விடுங்க...” என்றானவன்.

“ ஏன் மாப்ள சொல்ல கூடாது? எதுக்கு சொல்ல கூடாது? நீ என்ன தப்பு செஞ்ச?.... சொல்ல போனா சராவுக்கு நல்லது செய்ய போய் தான் உனக்கு இந்த கெட்ட பேரே வந்திச்சி” எனவும் மைசரா விழி அகல நிமிர்ந்து பார்த்தாள். அன்று ரயிலில் நடந்தது தொடங்கி மன்சூர் செய்த அனைத்து தகிடுதத்ததையும் கூறினான் ரமீஸ்.

அவன் கூறிவதை கேட்ட சபூராவின் முகம் பேறைந்ததை போல் மாறியது. சராவுக்கோ குற்றவுணர்வில் மனம் குறுகுறுத்தது.

“ பிளடி ராஸ்கல்.... அவனுக்கு எவ்ளோ திமிர் இருந்தா இந்தளவுக்கு ஆடியிருப்பான். எல்லாம் அவன் வாப்பா கொடுக்குற இடம். அந்த காசிம் என்னை பழி வாங்க தான் மகன தூண்டி விட்டிருப்பான். அவன சும்மாவா விட்ட ரிஸ்வி? அவன என்ன செய்றேன் பார்....” என்ற ரசியாவின் குரலில் கோபம் கொப்பளித்தது. தன்னை மறந்து கத்திவிட்டதில் ஒரிருவர் திரும்பி பார்க்க, ஆசாத் அவரை அமைதிபடுத்தினார்.

அதுவரை அமைதியாக இருந்த ரிஸ்வியோ, மாம், மாம் ப்ளீஸ்..... கொஞ்சம் அமைதியா இருங்க. ஏற்கனவே மன்சூர் போட்டோ விஷயத்துல என்னையும் அவளையும் ரொம்பவே கேவலபடுத்திட்டான். இப்போ அவன் போட்டோ எடுத்தது, மிஸ்பிகேஹ் பண்ணதெல்லாம் வெளியே தெரிஞ்சா அந்த பொண்ணு பேரு தான் கெடும். அதுவும் ரொம்ப வருஷத்துக்கப்புறம் இப்போ தான் மாமி கிடைச்சிருக்காங்க. சோ... அவசரபட வேண்டாம். இது கொஞ்சம் சென்சிட்டிவான விஷயம் மாம். பொறுமையா தான் ஹேண்டல் பண்ணணும்.” என்றான். மிக நிதானமாக பேசும் மகனை ரசியா ஆச்சரியமாக பார்த்தார்.

“ அன்று ரசியா அவசரப்பட்டதை போல் இன்று ரிஸ்வியும் அவசரப்பட்டிருந்தால் எனக்கு நடந்த கொடூரம் என் மகளுக்கும் அல்லவா நடந்திருக்கும்....” என கலங்கிய சபூரா, ரிஸ்வியை நன்றி பெருக்கோடு பார்த்தார்.

“ எனக்காகவா? எனக்காக இவன் இவ்ளோ விஷயம் பண்ணியிருக்கானா?என் மானத்தை காப்பாற்றுவதில் இவனுக்கு இத்தனை அக்கறையா?” விழி விரித்த நங்கையின் மனதினில் இருந்த அவனுக்கான பிம்பம் மெல்ல சரிந்தது.

“ அதுக்காக என் மகன் பழிய சுமக்கணுமா? அதெல்லாம் கவனிக்கிற முறையில கவனிச்சா.... துண்ட காணோம் துணிய காணோம் னு ஓடிடுவான்” என்றார் ரசியா சபூராவை பார்த்தவாறு.

“ ரிஸ்வி சொல்றது தான் கரெக்ட் மாமி.... நாம இப்போ பொறுமையா இருக்குறது தான் சரி. ரிஸ்வி அன்னைக்கு மன்சூர அடிச்சதுக்கே காசிம் மாமா எதுவும் கேட்கலனா அவரு வேற ஏதோ பெருசா ப்ளான் பண்றாரோ னு எனக்கு தோணுது மாமி. ரிஸ்விய தப்பா நினைச்சவங்களுக்கு உண்மை புரியணும் னு தான் நா இப்போ இந்தியா வந்தேன். முதல்ல நமக்குள்ள இருக்குற கருத்து வேறுபாடுகள சரி பண்ணினாலே போதும். பாதி பிரச்சனை தீர்ந்துடும்.” என்றான் ரமீஸ்.

“ என்னவோ ரமீஸ்.... நீங்க சொல்றதெல்லாம் எனக்கு சரியாவேபடல. நாளபின்ன அவன் ஏதாவது செஞ்சான்னா அப்புறம் நா பார்த்துட்டிருக்க மாட்டேன். சொல்லிட்டேன்” என்றார் அழுத்தமாக.

“ ரிஸ்வி.... ஒரு பொண்ணோட மரியாதைக்காக நீ இத்தனை தூரம் பொறுமையா இருந்திருக்குறத நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு பா.” என்றார் ஆசாத் உருகிய குரலில்.

ரசியா, “ நீ செய்திருக்குறது நல்ல விஷயம் தான் ரிஸ்வி. உன்ன நினைச்சி நானும் பெருமைபடுறேன். ஆனா அதுக்கு இவங்க தகுதியானவங்களே கிடையாது.” என ஒவ்வொரு வார்த்தையிலும் சபூரா குடும்பத்தை தள்ளி வைத்தவர்,” இதுல இன்டர்ன்ஷிப்ன்ற பேருல வேற அவள எதுக்குப்பா கடைக்கு வரவச்சிருக்குற?” எனவும், தன் மூளையை குடையும் கேள்விகான பதிலை எதிர்பார்த்து அவனை விழி எடுக்காமல் நோக்கினாள் மைசரா.

அனைவரின் பார்வையும் தன் மீதிருந்தாலும் தன்னவளின் பார்வை மட்டும் கண்களை ஊடுருவி இதயத்தில் தைப்பதாய் உணர்ந்தவன் அந்த நொடி தடுமாறி தான் போனான். மிக சுலபமாக கேட்டு விட்ட கேள்விக்கு பதில் கூறுவது தான் பெரும்படாய் இருந்தது அந்த காதல்கள்ளனுக்கு. இந்த நேரம் மைசரா இல்லாதிருந்தால் கூட தன் காதலை பற்றி தாயிடம் தைரியமாய் கூறியிருப்பான். ஆனால் அவனது காதல் தேவதையோ தன் இதயத்தை இன்னும் தராமல் தன்னவனை திணற வைத்துக் கொண்டிருக்கிறாளே.....

“ ரிஸ்வி....” என ரமீஸ் தோளை உலுக்க, அழகானதொரு புன்னகையை வெளியிட்டவன்,” கிடைச்ச உறவு மறுபடியும் தொலைஞ்சிட கூடாது னு தான் மா” என்றான். அவன் உறவு என கூறியது சபூராவையா இல்லை மைசராவையா என்பது சொன்னவனுக்கே வெளிச்சம்.

மைசராவின் மனக்கண்ணாடியில் ஆணவக்காரனாய், திமிர்பிடித்தவனாய், கோபக்காரனாய், பண்புகெட்டவனாய் தெரிந்த ரிஸ்வியின் பிம்பம் சரிய தொடங்கி இப்போது முற்று முழுசாய் மறைந்து, அவனை சிறந்த ஆண்மகனாய் பிரதிபலித்தது. வெகுநேரமாக தன்னை உறுத்தும் பாவையின் பார்வையை மன்னவன் எதிர்நோக்க, புரியாத உணர்வு புதிதாக தோன்றி பெண்ணவளை தடுமாற செய்தது. தன்னையுமறியாமல் சிவந்த முகத்தை எங்கனம் மறைப்பாள் பூவை?

அயானும் ரிதாவும் ஒருவரையொருவர் பார்வையிட்டு கொண்டிருந்தவர்கள் இப்போது பார்வையாளர்களாக மாறியிருந்தனர். ஆசாத்திற்கு மகனின் மனம் தெளிவாக புரிந்துவிட்டது. ரசியா தான் புரிந்தும் புரியாமலும் தவித்து கொண்டிருந்தார்.

பேசி பேசி காய்ந்து போன தொண்டையை இதமாக்க ஆவி பறக்கும் சூப் வந்து சேர, அவரவர் எண்ணங்களில் உழன்றபடி அனைவரும் குடித்து முடித்தனர்.

ரிதா கை கழுவி விட்டு வருவதாக கூறி முன் செல்ல, மலரை தேடும் வண்டாக அயான் பின்னே நழுவினான்.

கை கழுவி விட்டு திரும்பியவள் முன்னே வந்து நின்றான் அவளது சித். ரிதா அமைதியாக நிற்க,” அப்புறம் மச்சான பார்க்கவே மாட்ருகே” என்றான் சீண்டலாக.

“ நான் தான் ரிஸ்வி மச்சான தினமும் பார்க்குறேனே” என புரியாதது போல பேசி வம்பு வளர்த்தாள்.

“ அப்போ நான் உன் மச்சான் இல்லையா ரிதா?”

சிவந்த முகத்தை சிரித்து மறைத்தவள்,” அங்க எவ்ளோ பிரச்சனை போயிட்டிருக்கு.... நீங்க இங்க காமெடி பண்ணிட்டிருக்கீங்க” என்றாள் கேலியாக.

“ ஹேய்.... நான் ரொமன்ஸ் பண்றது உனக்கு காமெடி பண்ற மாதிரி இருக்கா?” என அவன் புருவத்தை ஏற்றி இறக்கி கேட்க,

அதற்கு மேல் வம்பு வளர்க்க தைரியமில்லாமல் ,” வழி விடுங்க சித்.... நா போகணும்” என்றாள் பாவை.

அவள் அழைத்த விதத்தில் கரைந்து போனவன்,” என் கிட்ட பேசிட்டு போ ரிதா...” என்றான் காதலாக.

“ பேசணுமா? என்ன பேசுறது?” என முழிக்க,

“ சரி..... அப்போ சொல்லிட்டு போ....” என்றான் விடாமல்.

“ சொல்லணுமா? என்ன சொல்றது?” என்றவளின் செவி புறம் குனிந்தவன் மிக மெல்லிய குரலில்,” ஐ.... லவ்..... யூ.....”என தன் நேசத்தை மூச்சு காற்றில் கலந்து அவளை கூச செய்தான் சித். அந்தி வானமாய் சிவந்து போனவள் அடுத்த நொடி சிட்டாக பறந்தாள்.

“ஹே ரிதா..... சொல்லிட்டு போ....” என்றவனின் வார்த்தைகள் காற்றில் மிதந்தன.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top