• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 45(3)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
ஆசாத்தும் ரசியாவும் சற்று நேரம் பேசிக் கொண்டிருக்க அயானும் ரிதாவும் பூ போல் வந்து சேர்ந்து கொண்டனர்.

“அப்போ.... நாங்க கிளம்புறோம் ரமீஸ்.... ஒரு விஷயம் நல்லா புரிஞ்சிக்கோங்க.... சில விஷயங்கள் என்னைக்கும் மாறாது” ரசியா அழுத்தமாக கூறிவிட்டு சென்றார்.

“ மனசுல எதையும் வைச்சிக்காதே மா. எல்லாம் நல்லபடியா முடியும்” என சராவிடம் கூறிவிட்டு சென்றார் ஆசாத். அவர்களோடு அயானும் விடைபெற்று சென்றான்.

இவ்வளவு நேரமும் ஒரு வார்த்தை கூட போசாதிருந்த சபூரா கலங்கி போய் அமர்ந்திருந்தார்.

“ சாச்சி..... ஏன் வருத்தபடுறீங்க? அந்த மன்சூர நாங்க பார்த்துக்குறோம்” என ஆறுதல்படுத்தினான் ரமீஸ்.

கலங்கிய கண்களை துடைத்து கொண்டவர்,” அந்த நம்பிக்கை எனக்கிருக்கு ரமீஸ்” என்றுவிட்டு,” ரிஸ்வி.... ரொம்ப நன்றி பா... என் மகளோட மானத்த காப்பாற்றிட்ட” என தழுதழுத்தார்.

“ அச்சோ.... என்ன மாமி நன்றி எல்லாம் சொல்லி கிட்டு.... “ என நெளிந்தான் ரிஸ்வி.

“ அதிரடியா ஒரு விசிட் போட்டு அசால்ட்டா பிரச்சனைய முடிச்சிட்டீங்களே காகா....” என்றாள் ரிதா உற்சாகமாக.

“ ஆமா ரமீஸ்.... நீ மட்டுமா வந்த? பாவம் மிஸ்பா எப்படி அங்க சமாளிப்பா?” என்றார் சபூரா அக்கறையாக.

“ அங்க பக்கத்துல நாலைஞ்சி இண்டியன் பேமிலீஸ் இருக்காங்க சாச்சி. மேனேஜ் பண்ணிப்பா.”

“ சரிப்பா.... நாளைக்கு நம்ம வீட்டுக்கு லன்ச்க்கு வந்திடு” என பாச மிகுதியில் அழைத்து விட்டு அருகில் நின்றிருந்த ரிஸ்வியை சங்கடமாக பார்த்தார் சபூரா.

மைசராவும் சங்கடமாக உணர்ந்தாள் போல....” ம்மா.... அவங்களையும் லன்ச்க்கு கூப்பிடுவோமா மா?” , எனவும் மகளின் மன மாற்றத்தில் கலவரமாக பார்த்தார் அவர்.

“ இல்ல மா.... மன்சூர் செய்த தப்புக்கு பாவம் நாம இவங்கள தப்பா நினைச்சிட்டோம் மா. ஆனா அப்போ கூட எனக்காக சப்போர்ட் பண்ணி பேசுறாங்க. அதான் அவங்களயும் கூப்பிடலாம் னு தோணிச்சு....” என்றாள் மெல்லிய குரலில்.

சபூராவிற்கும் ரிஸ்வியை அழைப்பதில் விருப்பம் தான். ஆனால் ரசியாவை நினைத்தும், ரிஸ்விக்கு தன் மகள் மேலிருக்கும் எண்ணத்தை நினைத்தும் அழைக்க தயங்கினார்.

“ என்ன சாச்சி உங்களுக்குள்ளயே பேசிக்கிறீங்க?”என இடையிட்டான் ரமீஸ்.

“ அதுவா காகா.... ரிஸ்வி மச்சானையும் லன்ச்க்கு கூப்பிடலாம் னு சரா ஆசபடுறா” என உண்மையை நயமாக போட்டு உடைத்தாள் ரிதா. ரிஸ்வி வியப்பாக சராவை நிமிர்ந்து பார்க்க, அவளோ செய்வதறியாது தலையை கவிழ்ந்தாள்.

வேறு வழியில்லாமல் சபூராவும்,” ரிஸ்வி... நாளைக்கு நீயும் ரமீஸோட லன்ச்க்கு வந்திடுப்பா....” என அழைத்தார்.

அவரது சங்கடத்தை உணர்ந்தவன்,” இருக்கட்டும் மாமி.... நான் இன்னொரு நாள் வரேன்” என மறுத்தான்.

ஆனால் ரமீஸோ,” அதெல்லாம் நா அவன கூட்டிட்டு வந்துடுவேன் சாச்சி.... நாளைக்கு நாங்க ரெண்டு பேரும் வரோம்” என்றான்.

“ சரிப்பா.... சிறப்பா வாங்க. நாங்க கிளம்புறோம்” என்று விட்டு சபூரா& கோ கிளம்பினர். ரமீஸிடம் கிளம்புவதாய் கூறிய சரா ரிஸ்வி பார்த்து தலையசைத்து விடைபெற்று செல்ல, ரிஸ்வி இமைக்கவும் மறந்து வியந்து போனான்.

எல்லையில்லா மகிழ்ச்சியோடு ரிதா வர, சராவுக்கு என்ன மனநிலையில் இருக்கிறோம் என்றே புரியவில்லை. இருவரும் தங்களது உணர்வுகளோடு உழன்றதில் பயம் அப்பிய முகத்தோடு வரும் சபூராவை கவனிக்கவில்லை.

“ அப்புறம் மாப்ள.... நாமும் கிளம்பலாமா?” பில்லுக்கு பணம் வைத்து விட்டு எழுந்தான் ரமீஸ்.

“ ரொம்ப தேங்க்ஸ் மச்சான்.... மெஹர் கிட்ட எப்படி இதையெல்லாம் சொல்றது.... சொன்னா நம்புவாளா னு ரொம்ப யோசிச்சிட்டு இருந்தேன். நீங்க சரியான நேரத்தில ஹெல்ப் பண்ணிட்டீங்க” என்றவன் ரமீஸை ஆர தழுவிக் கொண்டான்.

“ இதுல என்ன இருக்கு ரிஸ்வி.... அன்னைக்கு என்னோட நெருக்கடில நீ வந்து தோள் கொடுத்த.... இன்னைக்கு உன்னோட பிரச்சனையில நான் வந்து கை கொடுத்திருக்கேன். அவ்ளோ தான் ரிஸ்வி.... பீல் பீரி..... சீக்கிரம் மைசரா கிட்ட லவ்வ சொல்லிடு. சரியா....” என சிரித்தான் ரமீஸ்.

எப்போதும் ஒற்றை புருவத்தை தூக்கி வெயிலென தகிப்பவளின் இன்றைய கண்கள் கனிந்த ஒற்றை தலையசைப்பு ரிஸ்வியின் மனதை மழை சாரலாய் நனைத்தது.

- மழை வரும்

தங்கள் கருத்துகளை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top