• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 46(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
காதல் அடைமழை காலம் – 46

அத்தியாயம் 47

அந்த பனி சூழ்ந்த அதிகாலை பொழுது அத்தனை ரம்மியமாய் புலர்ந்து கொண்டிருந்தது. கீழ் வானில் துளிர்க்கும் ஒளி இருளோடு சேர்ந்து வானின் நிறத்தை பல பரிமாணங்களில் காட்டிக் கொண்டிருந்தது. வாடை காற்றில் அலைபாயும் கூந்தலை ஒதுக்கும் எண்ணமின்றி மொட்டை மாடியில் நின்றிருந்தாள் மைசரா. குளிரில் சிலிர்க்கும் தேகத்திற்கு அவள் கரங்களிலிருந்த சூடான தேநீர் இதமளித்து கொண்டிருந்தது.

பெண்ணவளின் விழிகள் முன்னோக்கி பார்த்திருக்க, எண்ணங்களோ பின்னோக்கி விரைந்து கொண்டிருந்தன. ரிஸ்வியின் நேற்றைய பரிமாணம் வானின் நீல ஜாலத்தை விட விச்சித்திரமாக இருந்தது. . நேற்று ரிஸ்வி பேசும் போது அவள் உள்ளம் பூரித்தது என்னவோ உண்மை தான் ஆனாலும் சில நிகழ்வுகள்..... சில வார்த்தைகள்..... அவளுக்கு நெருடலாகவே இருந்தது.

தேநீர் கோப்பையை கீழே வைத்த நொடி அவளது கண்களை இரு கரங்கள் மூட, “ ரிதா....” என்றாள்.

“ வாவ்.... கண்டுபிடிச்சிட்டியா” என அவள் சிரிக்க, அவளது கரங்களை பிரிதெடுத்து விட்டு விழி மூடிய ரிதாவை முறைத்தாள் பெண்.

“ வீட்டுல இருக்குறதே மூணு பேரு..... நா இங்க இருக்கேன்.... உம்மா மாடிக்கு வரவே மாட்டாங்க.... அப்புறம் கண் மூடுனது எந்த விளக்கெண்ணெய் னு தெரியாதா...” என சலித்து கொண்டாள்.

“ ஓ.கே.... ஓ.கே.... மேடம் காலங்காத்தால சீரியஸா என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க....” அருகில் வைத்திருந்த தேநீரை பருகியபடி கேட்டாள் ரிதா.

“ ஒன்னுமில்ல....” என்றவளின் முகமே ஏதோ இருப்பதாக சொல்ல,

அவளை சீண்டும் எண்ணத்தில்,” ரிஸ்வி மச்சான பற்றி நினைச்சிட்டு இருக்கியா சரா...” எனவும், ஆம் என்பது போல் தலையசைத்தாள் சரா.

ரிதா ஒரு நொடி வாயடைத்து போக, “ உண்மையாவா சரா..... இப்போவாவது ரிஸ்வி மச்சான் உன் மேல எவ்ளோ ல....” என இழுத்தவள் சற்று நிதானித்து,” எவ்ளோ அக்கறையா இருக்காங்கனு புரிஞ்சிகிட்டியா” என்றாள்.

மைசரா பதிலளிக்காமல் சிறு கோடென உதிர்த்த சிரிப்பில் குழம்பி போனாள் ரிதா.

“ ஏன்லா சிரிக்குற....”

“ உன் மச்சான் எனக்காக யோசிச்சது, மன்சூர் கூட சண்டை போட்டது எல்லாம் சரி. நேற்று காகா சொல்லும் போது எனக்கும் ஷாக் அண்டு சர்ப்ரைஸ் தான் ஆனா.... ஆனா.... அந்த போட்டோவ ஏன் எடுத்தாங்க ரிதா.... எடுத்தா....” அவள் முடிக்கும் முன்,

“ அதான் அப்போ மச்சான் நிதானத்துல இல்ல னு சொன்னாங்கல்ல” என இடையிட்டாள் ரிதா.

“ சரி ரிதா.... ஏதோ நிதானம் இல்லாம எடுத்துட்டாங்க சரி.... ஆனா அதுக்கப்புறம் அத அழிச்சிருக்கலாம் இல்லையா? அத அழிக்காம விட்டதால தானே அது மன்சூர் கைக்கு கிடைச்சது?” என்றவளின் மண்டையில் நறுக்கென கொட்டி,

“ ரிஸ்வி மச்சான் அந்த போட்டோவ போதைல எடுக்கல, உன் மேல பொங்கி வந்த லவ்வுல எடுத்தாங்க.... அதனால தான் அத அழிக்காம பத்திரபடுத்தி வைச்சிருக்காங்க” என கூற துடித்த இதழ்களை சபூராவிடம் கொடுத்த வாக்கு மனக்கண்ணில் வலம்வர இதழ்களை மடித்து அதனை அமைதிபடுத்தினாள் ரிதா.

“ பேசு ரிதா....”

“ என்னத்த பேச.... இன்னைக்கு மச்சான் லன்ச்க்கு இங்க தானே வாரங்க... போய் அவங்க கிட்டயே கேளேன் சரா. என் போட்டோவ ஏன் அழிக்காம வைச்சிருக்கீங்க னு....” என்றாள் குறும்பு மின்ன,

“ போடி.... அந்த கருமத்த வேற போய் கேட்கணுமா.... “ என சிணுங்கினாள் பெண்.

“ உன் போட்டோவ மிஸ்யூஸ் பண்ணது மன்சூர். ஆனா நீ மச்சான் மேல கோபப்படுறியே சரா.... “ என்றவள் முகத்தை திருப்பி எங்கோ பார்த்தாள்.

“ ம்.... உன் மச்சான நீ விட்டு கொடுப்பியா.... அந்த போட்டோவ அழிச்சியிருந்தா இப்படி ஒரு பிரச்சனையே வந்திருக்காது... அத தானே சொன்னேன்” என்றவளை முறைத்தாள் ரிதா.

“ அந்த போட்டோவ அழிச்சியிருந்தாலும் பிரச்சனை வந்திருக்கும் சரா.... ரொம்ப பெருசா இத விட கேவலமா வந்திருக்கும். என்ன பாக்குற.... மன்சூருக்கு உன்னையும் மச்சானையும் எப்படியாவது பழி வாங்கணும். அதுக்கு இந்த போட்டோவ யூஸ் பண்ணிக்கிட்டான். அவ்ளோ தான்.... இப்போ கூட மச்சான் உனக்காக தான் அவன அடிச்சதோட விட்டு வைச்சிருக்காங்க. இல்லைனா அவன ஒரு வழியாக்கிருப்பாங்க....”

“ எனக்காக இல்ல.... உம்மாவுக்காக...” என்றவளை புரியாமல் ஏறிட்டாள் ரிதா.

“ சொன்னாங்கல்ல..... கிடைச்ச உறவு மறுபடியும் தொலைஞ்சிட கூடாது னு..... இந்தளவுக்கு எங்க உம்மாவ மதிக்குறதே எனக்கு ஆறுதலா இருக்கு ரிதா.... போதும் இதுக்கு மேல அவங்க எதுவும் செய்ய வேண்டாம்....” என்றாள் மைசரா. சற்று நேரம் அங்கே காற்றின் மொழி மட்டுமே கேட்டு கொண்டிருந்தது.

ரிஸ்வி கூறியதை போல மைசராவிடம் காதலை சொல்வதை விட அதை அவள் உணர்வது தான் உசிதம் என்றே ரிதாவிற்கும் தோன்றியது. ரசியா ஏற்படுத்திய காயம் மிக ஆழமாய் அவள் மனதை ரணமாக்கியிருந்தது. எந்நேரமும் தன் தாயின் முகத்தில் தெரியும் வலி, ரசியாவை காணும் போது அவருள் எழும் பதட்டம், ரசியா பேசும் போது அவர் கண்களில் தெரியும் பயம்.... மைசராவை வெகுவாய் பாதித்தது. இந்நிலையில் ரிஸ்வியை தன் உறவினனாக கூட நினைக்க அவளுக்கு கசந்தது. அவளையுமறியாமல் மனம் அவனுக்கெதிராகவே வாதிட்டது. ரசியாவின் மகன் செய்யும் எந்த உதவியும் பாசத்தையும் ஏற்காதே என எச்சரித்து கொண்டேயிருந்தது.

இருள் விலகி ஒளி பெருகும் வானத்தில் கண் பதிந்திருந்தவளை ரிதாவின் “ சரா....” என்ற அழைப்பு கலைத்தது.

“ என்ன ரிதா?”

“ சரா.... நீ ரசியா மாமி மேல இருக்குற வெறுப்போடவும், கோபத்தோடவுமே எல்லாத்தையும் பார்க்குற... அத விட்டு கொஞ்சம் வெளியே வா.... வெளியே வந்து யோசி.... அப்போ தான் நடந்த பிரச்சனைக்கெல்லாம் மன்சூர் தான் காரணம். ரிஸ்வி மச்சான் இல்லை.... னு உனக்கு புரியும்.” முடிந்த மட்டும் தோழிக்கு விளக்கினாள் ரிதா.

“ம்.... இப்போ அதையெல்லாம் யோசிச்சி நா என்ன பண்ண போறேன் ரிதா.... விடு... ஆனா மன்சூர் நம்மள விட சின்ன பையன் அவனால இப்படி எல்லாம் கூட யோசிக்க முடியுமா? ஹாரிபிள்....” என்றாள் மைசரா.

“ அது அவனா செய்யுறதில்ல சரா.... காசிம் மாமா சொல்லி தான் செய்திருப்பான்.”

“ சரி... இந்த காசிம் மாமா ஏன் இப்படியெல்லாம் பண்றாங்க.... நேற்று ரசியா பேசும் போது கூட அவரு தூண்டி விட்டு தான் இவன் செய்திருப்பான் னு சொன்னாங்கல்ல..... அவங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சினை? அந்த பஜாரி அவர் கூடவும் சண்டை போட்டுட்டாளா....” எனவும், ரிதா முகம் மாறினாள்.

“ மாமிய அப்படி சொல்லதா சரா. அன்னிக்கு மட்டும் அவங்க சண்டை போடலனா காசிம் மாமாவோட ஆட்டம் இன்னும் கோரமா இருந்திருக்கும்”

“ மாமா என்ன பண்ணாங்க ரிதா?”

“ அந்த கண்றாவிய ஏன் கேட்குற சரா? அத சொல்ல கூட எனக்கு கூசுது....”

“ அப்படியென்ன விவகாரம்....” என்பதை போல மைசரா பார்க்க, ரிதாவே தொடர்ந்தாள்.

“ காசிம் மாமா ரொம்ப மோசம் சரா. கல்யாணம் முடிஞ்ச ஆறு மாசத்திலயே அவங்க காகாங்க சொத்து கொடுக்காம ஏமாத்திட்டதா சொல்லி திருச்சிக்கு வந்திட்டாங்க. அவங்க மேல கேஸ் போட்டு தனக்கான பங்கை வாங்குற வரைக்கும் நம்ம வீட்டுல இருந்துக்குறதா சொன்னாங்க. வாப்பாவும் சரி னு சொல்லிட்டாங்க சரா. அதுக்கப்புறம் ரசியா மாமிக்கும் சபூரா மாமிக்கும் பிரச்சனை வந்து சாச்சி வீட்டை விட்டு போயிட்டாங்களா.... வாப்பா தனியா கடைய சமாளிச்சிட்டு இருந்த சமயம் வியாபாரத்திலையும் வந்து ஒட்டிக்கிட்டாரு..... அதுக்கப்புறம் எல்லாம் அவரு ராஜ்ஜியமா போச்சு....” என்றாள் ரிதா.

“ அந்த கேஸ் என்னாச்சு ரிதா?”

“ நீ வேற சரா.... எல்லாம் கப்சா... அவருக்கான பங்கை எப்பவோ அவங்க அண்ணன்ங்க கிட்ட சண்டை போட்டு வாங்கிட்டாராம்.... ஆனா நம்ம கிட்ட அவங்க அண்ணனுங்க ஏதேதோ சதி செய்து தனக்கு பங்கில்லாம ஆக்கிட்டாங்க னு பொய் சொல்லிட்டாரு....”

“ அப்போ அந்த பணம்....”

ரிதா ஒரு நிமிடம் அமைதியாக இருந்தாள். பின்,” பெத்தவங்க இல்லாத காசிம் மாமாவ அவங்க வீட்ல ஏமாத்திட்டாங்க னு தான் வாப்பா அவங்களுக்கு நம்ம கடையில சகல பொறுப்புகளயும் கொடுத்து ரொம்ப மரியாதையா வைச்சிருந்தாங்க சரா. அவங்களுக்கு சங்கோஜமா இருக்க கூடாது னு நம்ம வீட்டு பக்கத்துலயே ஒரு வீட்டை வாங்கி தனியா குடிவச்சாங்க. எல்லாம் நல்லா தான் போயிட்டிருந்துச்சு...”

ரிதா ஏதோ பெரிய விஷயம் சொல்ல போவதை புரிந்து கலவரமாக பார்த்துக் கொண்டிருந்தாள் மைசரா.

“ மன்சூருக்கு ஒரு ஆறு வயசு இருக்கும். அப்போ தான் அவருக்கு வேற ஒரு பொண்ணோட தொடர்பு இருந்ததே தெரிஞ்சது. அதுமட்டுமில்ல சீட்டாட்டம், சூதாட்டம் னு ஏகப்பட்ட கெட்ட பழக்கம் வேற...” எனவும் அதிர்ந்து போனாள் மைசரா...

“ நீ... நீ.... என்ன சொல்ற ரிதா?”

“ ஆமா சரா. அவரோட பங்கு பணத்தை மொத்தமும் தவறான வழிகள்ல விட்டுட்டாரு.... “

“ ச்சீ.... இவ்வளவு கேவலமான ஒரு ஆம்பளையா?” மைசரா அருவருப்பில் முகம் சுளித்தாள்.

“ இதுக்கே ஷாக்கான எப்படி? மெயின் ட்விஸ்டே இனிமே தான் இருக்கு” என தொடர்ந்தாள்.

“ இந்த விஷயம் தெரிந்து வீட்டுல பெரிய பிரச்சனை ஆகிடுச்சு. பாவம் அஸ்மா மாமி தான் ரொம்ப உடைஞ்சி போயிட்டாங்களாம். வாப்பாவும் சாச்சாவும் அவர் கையில பணம் புழங்குற எல்லா பொறுப்புகளையும் வாங்கிட்டாங்க. உடனே அவர் நாலஞ்சி பேர கூட்டிட்டு வீட்டிற்கு வந்துட்டார்."

“ எதுக்கு.....?”

“ அஸ்மா மாமிய பார்த்து தலாக் சொல்ல தான்....” எனவும் மைசரா அதிர்ந்து போனாள். தலாக் என்றால் விவகாரத்து என பொருள். ஒரு கணவனுக்கு மனைவியை பிடிக்கவில்லை என்றால் இந்த வார்த்தையை மூன்று முறை உயோகித்தால் விவகாரத்து நிகழ்ந்து விடும்.

“ நியாயமா பார்த்தா அஸ்மா மாமி தான் அவர வேண்டாம் னு சொல்லணும். ஆனா அவன் இப்படி சொல்லியிருக்கான்” உணர்ச்சி வேகத்தில் மரியாதை எல்லாம் காற்றில் பறந்தது.

“ம்.... திமிரு தான் வேற என்ன? என்னை எதிர்த்து கேள்வி கேட்குற பொண்டாட்டி எனக்கு வேண்டாம் னு சொல்லிட்டாராம்”

“ ஸ்கோன்ட்ரல்.... பொம்பளங்க னா அவ்ளோ இளக்காரமா போச்சா அவனுக்கு? அப்புறம் இந்த பிரச்சனை எப்படி தான் தீர்ந்தது?”

அதன்பின் ரிதா கூறிய வார்த்தைகள் யாவும் சராவின் மனதில் காட்சியாய் விரிந்தது.....

சொல்லாமல் கொள்ளாமல் ஆட்களை கூட்டி வந்து அமர்ந்திருக்கும் காசிமை வெட்டவா குத்தவா என முறைத்து கொண்டிருந்தனர் கமரின் மூத்த மகனாக அமீரும், இளையவரான ரியாஸூம்.

“ இப்போ எதுக்கு இவங்கள எல்லாம் கூட்டிட்டு வந்தீருக்கீங்க? யாரு இவங்களாம்?” என்றார் அமீர்.

“ இவங்களாம் என் உறவுமுறைங்க...”

“ நாம என்ன நல்ல காரியமா பேச போறோம் உறவுமுறைகள கூட்டிட்டு வர? உங்க காகா ரெண்டு பேரையும் வர சொல்லுங்க.” என்றார் அமீர்.

“ அவனுங்களுக்கும் எனக்கும் தான் ஒட்டுமில்ல உறவுமில்ல னு ஆகி போச்சே? அவனுங்களாம் வர மாட்டாங்க” விட்டேத்தியாய் வந்தது பதில்.

“ இவங்களுக்கு நம்ம குடும்பத்தை பற்றி என்ன தெரியும்? இவங்க கிட்ட என்ன பேசுறது....?”

“ நீங்க பேசுறதுக்காக நா இவங்கள கூட்டிட்டு வரல மச்சான். அஸ்மா என்னோட வாழ வர்றாளா கேளுங்க.... இல்லனா நா அவள தலாக் பண்ணிட்டு போயிட்டேயிருக்கேன். தலாக்குக்கு சாட்சியா தான் இவங்க வந்திருக்காங்க” என மின்னாமல் முழங்காமல் இடியை இறக்கினார் காசிம்.

“ யா அல்லாஹ்.... தலாக்கா? என் மவளுக்கு செய்ய கூடாத துரோகத்தை எல்லாம் செய்யததுமில்லாம அவளுக்கு இப்படியொரு அநியாயத்தை வேற செய்ய போறீங்களா? “ என குமுறினார் கமர்.

“ பின்னே.... எந்நேரமும் அழுது வடிஞ்ச முகத்தோட திரிஞ்சா.... அவளோட எப்படி வாழுறது... வீட்டுக்கு வந்தா மனுஷனுக்கு ஒரு நிம்மதி வேணாம்” என்றார் காசிம் மனைவியின் கண்ணீருக்கு தாம் தான் காரணம் என்ற நினைப்பேயில்லாமல்.

“ நீ கண்டவ பின்னாடி போனா பின்ன அவங்க எப்படி சிரிச்சிட்டு இருப்பாங்க. நிம்மதியாம் நிம்மதி என் லாத்தாவோட நிம்மதிய குழி தோண்டி புதைச்சிட்டு இவனுக்கு நிம்மதி வேண்டுமாம்” என எகிறிய ரியாஸ் காசிமின் சட்டையை கொத்தாக பிடித்தார்.

“ ஏலேய்.... மீசை கூட முழுசா முளைக்காத சின்ன பய நீ என்னை கேள்வி கேட்க வந்திட்டியா.... போய் ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பாருலே....” என்ற காசிம் அவரது பிடியிலிருந்து திமிறினார்.

உடன் வந்தவர்கள் இருவரையும் பிரித்து விட,” ஏலே ராசா.... தங்கம் இது நம்ம வீட்டு புள்ள வாழ்க்கை விஷயம் பா... பொறுமையா தான் பேசணும். அவசரபடாதலேய்....” என மகனின் நாடியை பிடித்து கெஞ்சினார் கமர்.

“ பொறுமையா இரு ரியாஸ். எடுத்தோம் கவிழ்ந்தோம் னு எதையும் செய்ய முடியாது பா” என தம்பியை அடக்கிய அமீர்,” தயவுசெய்து நீங்க எல்லாரும் கிளம்புங்க.... இது எங்க குடும்ப பிரச்சனை நாங்க பார்த்துக்குறோம்” என்றார்.
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் காசிம்மா, பெண் பிள்ளை வாழ்க்கை போய்ட கூடாதுனு அவரை ஆதரிக்க போய் தான் இன்னைக்கு அவர்கள் பிள்ளைகள் வாழ்க்கை பிரச்சனையாகிருசோ, சபுரா வாழ்க்கை பாலானதும், ரசியா சண்டை போட்டதும் எல்லாதுக்கும் சூத்துரதாரி இந்த காசிம் தானோ ??????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top