• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 47(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
“ பரவாயில்லை மச்சி. நா சும்மா விளையாட்டுக்கு தான் கேட்டேன். அப்புறம் நீங்க செய்த பிரியாணி சூப்பரா இருந்திச்சாம்..... மாமி ரொம்ப நல்லா உபசரிச்சாங்கலாம்.... ரிஸ்வி சொன்னான்” என்றதும் மீண்டும் திடுக்கிட்டாள்.

“ அது.... அது... நான் செய்யல. ரிதா தான் செய்தா” என இழுக்க,

கடகடவென சிரித்தவன்,” ரிதா சமையல் பண்ணா னு சொன்னா விரல் சூப்புற பாப்பா கூட நம்பாது மச்சி.” எனவும் இடையில் கை வைத்து முறைத்தாள் ரிதா.

“ ஏய் சரா.... நான் தான் சமைச்சேன் னு சொல்ல சொல்லி நான் உன்னை கேட்டனாலா? ஏன்லா என் மானத்த வாங்குறே...” என பல்லை கடித்தாள்.

“ ஸாரி....”

“ நான் தான் சமைச்சேன் னு சொல்றதுல உங்களுக்கு என்ன தயக்கம் மச்சி. நீங்க சொல்லலனாலும் ரிஸ்வி கண்டுபிடிச்சிடுவான். அவனுக்கு உங்க சமையல் ரொம்ப பிடிக்கும்.” என்றவன் சிறிது நேரம் பேசி விட்டு கிளம்பினான்.

வெளியே வந்ததோ, கை தன்போல் வேலை செய்வதோ , பக்கத்தில் அமர்ந்திருக்கும் ரிதா தொணதொணப்பதோ எதையும் உணரவில்லை அவள் சிந்தை. அயான் பேசிவிட்டு போனது மட்டுமே மீண்டும் மீண்டும் அவள் சிந்தையில் எதிரோலித்தது.

“ நான் தான் சமைச்சேன் அந்த மொளகா பஜ்ஜி கண்டுபிடிச்சிட்டானா? அப்புறம் ஏன் கரீம் பாய் பிரியாணி சூப்பர் னு சொன்னான்? அவன் ஏற்கனவே என் சமையலை சாப்பிட்ட மாதிரி அயான் மச்சான் பேசுறாங்க?” என மண்டையை போட்டு குடைந்தவளுக்கு அப்போது தான் அந்த விஷயம் நினைவு வந்தது.

“ அட ஆமால..... திருச்சில ஒரு முறை அவன் நா செய்த பிரியாணிய சாப்பிட்டான்ல....சே.... இப்பவும் பல்பு வாங்கிட்டேனா.....” என எண்ணியவளுக்கு திருச்சியில் ரிஸ்வி சாப்பிட்டு வந்து “ கரீம் பாய் பிரியாணி சூப்பர்” என கூறியது நினைவு வந்தது.

“ ஹேய்.... அப்பவும் அவன் அப்படி தான் சொன்னான்ல....”என யோசித்தவளுக்கு இப்போது கரீம் பாய் யாரென நன்றாகவே தெரிந்தது.

“ ரைட்டு.... மன்சூர் ப்ரெண்ட்ஸ்க்கு சமைச்சி கொடுத்த கரீம் பாய தானே நமக்கும் சமைக்க சொன்னாங்க ஆச்சா... ஆனா அவனுக்கு அப்பவும் நான் தான் அந்த பிரியாணிய செய்திருக்கேன் னு தெரிஞ்சிருக்கு. எப்படி?...” என புது கேள்வி தோன்றினாலும் இப்போது தான் ஆசுவாசமாக இருந்தது.

“ சை.... இந்த கரீம் பாய் யாரு னு யோசிச்சி யோசிச்சி என் மண்டை காய்ந்து போச்சு.” என பெருமூச்சு விட்டவள் எழுந்து சென்று தண்ணீர் குடித்து விட்டு வந்தாள்.

“ ஏய் சரா... தனியா மாட்டிட்டு முழிக்கிறேன். வந்து காப்பாற்று டி” என கத்தினாள் ரிதா. அப்போது தான் தோழிகள் அனைவரும் அவளை சூழ்ந்திருந்ததை கவனித்தாள் சரா.

“ என்னாச்சு டி” என வந்தவளை காதை பிடித்து திருகினாள் ரேஷ்மா.

“ ஆ... ஏன் டி காதை பிடிச்சி திருவுற?” என அவள் பிடியிலிருந்து நகர்ந்தவள் தன் சிவந்த காதை தேய்த்துவிட்டாள்.

“ எதுக்கு டி ரெண்டு பேரும் இது உங்க மச்சான் கடை னு சொல்லாம மறைச்சீங்க” என்றாள் கோபமாக.

“ நா எங்க மறைச்சேன் இதோ இந்த பக்கி தான் மறைச்சது. இங்க வர வரைக்கும் எனக்கே தெரியாது....” என ரிதாவை கை காட்ட,

“ அடிப்பாவி.... சமயம் பார்த்து கோர்த்து விடுறியே” என அலறினாள் ரிதா.

“ ஏய்.... யாரு கிட்ட கதை விடுற சரா? உன் மாமி மகன் கடைய உனக்கு தெரியாதா? இத நம்புறதுக்கு நாங்க ஒன்னும் பப்பா இல்ல...” அவர்கள் ரிதாவை விட்டு விட்டு சராவை பிடித்து கொண்டார்கள்.

“ நிஜமாகவே எனக்கு தெரியாது ரேஷ்மா. அவங்க பேமிலிக்கும் எங்களுக்கும் ஒத்துவராது. அதனால எனக்கு இது தெரியாதுடி.”

“ பார்றா.... ஆகாத மச்சான பார்க்க தான் மேடம் பொசுக் பொசுக் னு அவங்க கேபினுக்கு போனீங்களோ” என இன்னொருத்தி இடையிட, அடக்க மாட்டாமல் சிரித்து வைத்தாள் ரிதா.

“ எதுக்குடி எங்ககிட்ட சொல்லல? நாங்க ஏதாவது அட்வான்டேஜ் எடுத்துப்போம் னு நினைச்சியா?” என்றாள் ரேஷ்மா ஆதங்கமாக.

“ சே... சே.... கண்டிப்பா இல்லடி. விஷயத்த சொன்னா இந்த லூசு வராது அதுக்கு தான் சொல்லல. ஸாரி டி....” என வருத்தம் தெரிவித்தாள் ரிதா.

“ ஓ.கே.... ஓ.கே.... லீவ் இட்.... இதுல யாரு யாருக்கு ரூட் விடுறது. கரெக்டா சொல்லுங்க....” அதி முக்கிய கேள்வியை கேட்டாள் ரேஷ்மா.

“ எனக்கு என்னவோ இன்னைக்கு வந்த எம்.டி தம்பிக்கும் ரிதா மேடத்துக்கும் தனி ட்ராக் ஓடுறதா தோணுது” என தன் கணிப்பை கூறினாள் நஸ்ரின்.

“வாவ்.... எப்படி டி கண்டுபிடிச்சீங்க பாவிகளா” என்றாள் மைசரா ஆச்சரியமா.

“ அதெல்லாம் ஞான கண்ணுல பார்த்து தெரிஞ்சிருக்கிறதுமா”

“ஹா.... ஹா.... ஹா.... ரிதா என்னலா இவ்ளோ ஈசியா கண்டுபிடிக்கிற அளவுக்கு லவ் பண்ணி வச்சிருக்க...” என சரா வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க,

“ இன்னொரு ரூட் மேலயும் ஒரு டவுட்டு இருக்கு பட் இன்னும் கன்பார்ம் ஆகல” எனவும் சரா சிரிப்பதை நிறுத்தி விழிக்க, இப்போது ரிதா சிரிக்க தொடங்கினாள்.

“ போதும்.... போதும்.... எல்லாரும் போய் வேலைய பாருங்கடி...” என அவர்களின் எண்ணவோட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் சரா அதட்ட,

“ ஹேய் எம்.டியம்மா சொல்லிட்டாங்க போங்கடி சீக்கிரம்” என கூறிவிட்டு சிரித்தபடி அனைவரும் கலைந்து சென்றனர்.

அவர்கள் சென்றதும் மைசராவின் கண்கள் தன்னிச்சையாக ரிஸ்வியின் அறை வாயிலை நோக்க, அங்கே ரிஸ்வி நிற்பான் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இதழ்களில் சிறு புன்னகை தவழ, கண்கள் முழுவதும் நேசத்தை தேக்கி தன்னவளை பார்வையால் வருட, அவனது கெஞ்சும் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக அவள் இதயத்தில் இறங்கியது.

ரிதாவோடு அவனை சேர்த்து பேசிய போது பெருங்கோபம் கொண்டு சித்திரை மாத வெயிலென தகித்தவன், இப்போது தன்னோடு அவனை சேர்த்து பேசிய போது மார்கழி மாத வாடையாய் குளிர்ந்த பார்வை வீசினான். அவளுக்கு நடுநிசியில் தோன்றிய சந்தேகம் இந்த நொடியில் ஊர்ஜிதமாக அவள் உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.

மையிட்ட கண்களுக்கு மட்டும் தான் வசியம் செய்யும் மாயம் தெரியுமோ இங்கே ரிஸ்வியின் வெளிபூச்சு இல்லாத கண்கள் காதலை அடைமழையென பொழிந்து தன்னவளை மொத்தமாய் சுருட்டி கொண்டது.

இத்தனை நாளாய் அவனது பார்வைக்கு விடை தெரியாமல் எதிர்பார்வை பார்ப்பவள், இப்போது அவனது பார்வை நடு நெஞ்சில் நங்கூரமிட்டு தன் காதலை சொல்ல, பெண்ணவள் மெல்ல இமை குடை கவிழ்த்தாள்.

அவளை அதிகம் சோதிக்கும் எண்ணமில்லாமல் ரிஸ்வி உள் சென்று விட, நிறுத்தி வைத்த சுவாசத்தை வெளியிட்டாள் பெண்.

“ எப்படி..... எப்படி இது சாத்தியம்? எத்தனை அகராதியில் தேடி பார்த்தாலும் ரிஸ்வி பார்வைக்கு காதல் என்றே பொருள் தந்தது. ரிஸ்வி தன்னை காதலிக்கிறான் என்பதை அவளால் நம்பவும் முடியவில்லை நம்பாமல் மறுக்கவும் முடியவில்லை. அலையில் சிக்கிய மலராக தன் உணர்வுகளோடு போராடினாள் மைசரா.

மாலை நெருங்கும் நேரம் ஹசினா அனைவரையும் அழைத்தார்.

“ கேர்ள்ஸ்.... லாஸ்ட் வீக் நீங்க டிசைன் பண்ண டிரஸ்ஸஸ்ஸ எம்.டி கிட்ட காட்ட போறோம். எந்த கரெக்ஷன்ஸும் இல்லாத டிரஸ் இப்போவே சேல்ஸுக்கு போயிடும்.” எனவும் ஹே என ஆர்பரித்தனர் மாணவிகள்.

ரிஸ்வியை காண போகிறோம் என்றவுடன் மைசராவின் வயிற்றில் ஒரு பயபந்து உருண்டது. சிறிது நேரத்தில் ரிஸ்வி வந்து ஆடைகளை பார்வையிட்டான். சிலரின் தவறுகளை சுட்டி காட்டி அதை எப்படி சரிபடுத்த வேண்டும் என விளக்கினான். மைசரா அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அவனின் பார்வையை எதிர்கொள்ளும் சக்தி அவளிடம் சத்தியமாய் இல்லை.

இறுதியாக மைசராவின் ஆடையை பார்வையிட்டவன் வழக்கம் போல் குறை கூறி உடனடியாக அதை சரி செய்து காண்பிக்க கூறினான்.

“ சை.... நாம தான் இவன் நம்மள லவ் பண்றானோ னு தப்பா நினைச்சிட்டோம் போல.... மொளகா பஜ்ஜி வேணும்னே குறை சொல்றான் பாரு....” என முனங்கினாள் மைசரா.

“ ஹசினா நான் சொன்ன ட்ரஸ் எல்லாம் ஷோரூம் அனுப்பிடுங்க....” என்றவன் மைசரா புறம் திரும்பி” நீங்க இன்னும் பதினைஞ்சி நிமிஷத்துல ட்ரஸ்ஸ சரி பண்ணி கொண்டு வரணும்” என பணித்துவிட்டு சென்றான்.

அவன் சென்றதும் தோழிகள் அனைவரும்,” ஓ...கோ....” என கத்தினர்.

“ ஆஹா சரா... எவ்ளோ பாலிஷா உன்னை கேபினுக்கு வர சொல்லிட்டு போறாரு மனுஷன். செம ஷார்ப் டி.” என தோழிகள் கேலி செய்ய,

“ ஓஹோ.... நம்மள வர வைக்க தான் இப்படி பண்றானா?பழி வாங்க இல்லையா?” என ஒரு வழியாய் புரிந்து தொலைத்தது அவளது மரமண்டைக்கு.

இங்கு வந்த முதல் நாள் அவர்களுக்குள் நடந்த உரையாடல் அவளுக்கு நினைவு வந்தது.

“ இந்த இன்டர்ன்ஷிப்.... தயவுசெய்து தற்செயலா அமைந்தது னு சமாளிக்காதீங்க. நான் நம்பமாட்டேன்”

“வாவ்.... யூ ஆர் ப்ரில்லியண்ட். இது தற்செயல் இல்லை.... ப்ளான்டு தான்” என்றான் நிதானமாக.

“ என்ன ப்ளான் ?”

“ அதையும் நீயே கண்டுபிடிக்க வேண்டியது தானே. நீ தான் ரொம்ப புத்திசாலி ஆச்சே....” அவன் முகத்தில் அன்று தெரிந்த சுவாரசியம் இன்று விளங்கியது இவளுக்கு.

“ அடப்பாவி என்னை லவ் பண்ண தான் இந்த இன்டர்ன்ஷிப்பே அரேன்ஜ் பண்ணியா” அவனது செயலில் வாய் பிளந்தாள்.

“ மச்சான் சொன்ன 15 மினிட்ஸ் முடிய போகுது. சீக்கிரம் வேலைய முடி” என ரிதா உந்த,

“ ம்.... மச்சானுக்கு நல்லா ஜால்ரா தட்டுறடி.” என எண்ணியவள் ஆடையை சரி செய்துவிட்டு உள்ளே சென்றாள்.

கதவை தட்டி விட்டு உள்ளே சென்றவள் அவனை நிமிர்ந்தும் பாராமல் ஆடையை நீட்டினாள்.

அதை வாங்கி ஓரமாக வைத்தவன்,” கரீம் பாய் யாரு னு கண்டுபிடிச்சிட்டியா?” என்றான் ஆவலாக.

“ அத மட்டுமா கண்டுபிடிச்சேன். நீ சைட்டடிக்கிறதையும் கண்டுபிடிச்சிட்டேன்” என எண்ணியவள் சில நொடிகள் அமைதியாக நின்றாள். பின் “ நான் தான் அன்னைக்கு பிரியாணி செய்தேன் உங்களுக்கு தெரியுமா?” என்றாள் தயக்கமாக.

“ தெரியும்...”

“ நான் திருச்சில சமைச்சத பத்தி கேட்டேன்.”

“ நானும் திருச்சில சாப்பிட்டத பத்தி தான் சொன்னேன்.” அவன் புன்னகை மாறாமல் கூற, அவளது இதழ்களிலும் புன்னகை அரும்பியது. எதுவும் கூறாமல் அவள் திரும்ப,

“ மெஹர்.....” என மிக மிக மென்மையாய் அழைத்தான் ரிஸ்வி. அவனது அழைப்பில் அழகாக விழி விரித்தாள் மைசரா. கண் இருப்பதே காதலை கடத்த தான் என்பது போல அவன் காதல்மழையை பொழிய, அதில் பிடிக்கிறதா இல்லையா என தெரியாமலே நனைந்தாள் அவனது மெஹர்.

அவனது வன்மையாக இதழ்கள் இத்தனை மென்மையாய் தன் பெயரை இசைக்குமா என வியந்து போனாள் பெண்.

மழை தூறலை ரசிக்கலாம், சாரலில் நனையலாம், மழையில் ஆடலாம் ஆனால் அடைமழையில்? எங்கனம் ரசிக்க கூடும்? நனைய கூடும்? ஆட கூடும்? வீட்டுக்குள்ளேயே முடக்கி போட்டுவிடும் அல்லவா?

இந்த முரடனின் காதலும் அடைமழை போல தானே? அவன் தன் காதலை தூறலாய் பொழிந்திருந்தால் அவள் ரசித்திருப்பாள். சாரலாய் வருடியிருந்தால் நனைந்திருப்பாள். மழையாக கொட்டியிருந்தால் வானவில்லாய் ஆடியிருப்பாள். இடியும் மின்னலும் முழங்கும் அடைமழையென பெய்தால் சிறு பூ எங்கனம் தாங்கும்?

வார்த்தைகளே இல்லாத அந்த மௌனத்தில் மன்னவனும் பேசவில்லை மங்கையவளும் கேட்கவில்லை. கலந்த கண்கள் பிரியும் வரை இருவரின் மனமும் நிலையில் இல்லை.

- மழை வரும்.....
தங்கள் கருத்துகளை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
சராவிக்கு காதல் பல்பு இப்பவாது எரிந்ததே, பாவம் ரிஸ்வி அவன் காதல் பார்வையை புரிந்துகொள்ளமுடியாதா சரா, நல்லவேளை மெஹர் என்று மென்மையாக அழைத்து தன் காதலை ரிஸ்வி உணர்த்தி விட்டான் அவன் காதல் அடைமழையில் சரா நனைய நினைத்துவிட்டாளா ♥♥♥???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top