• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 53(2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
கா.அ.க - 53(2)

" ரிஸ்விக்கு நம்ம மெஹர எடுக்கலாம் னு எனக்கொரு ஆசை....." என கமர் கூறியதும்

" இல்ல மாமி இது சரிபட்டு வராது. என் மவளுக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை" வெடுக்கென கூறினார் சபூரா.

" ரொம்ப சந்தோஷம். உம்மா கிளம்புவோமா" சபூரா கூறியதில் ரசியாவின் ஈகோ தலை தூக்கியிருந்தது.

" மாம்... நாம இன்னும் கேட்க நினைச்சத கேட்லயே... ரிஸ்வி இடைபுக,

" ஸாரி ரிஸ்வி சில விஷயங்களை என்னால ஏத்துக்கவே முடியாது." என தன் மறுப்பை வெளிபடையாகவே கூறிவிட்டார் ரசியா.

" இரு... இரு... ரசியா...உன் மனசுல என்ன சங்கடம் இருக்கு னு சொன்னா தானே மா புரியும்.... என்ன மருமவனே நா சொல்றது" என ஆசாத்தின் உதவியை நாடினார் கமர்.

" சபூரா வாயை திறந்து பேசாம இந்த பிரச்சனை முடியாது மாமி. முதல்ல அவங்கள மனசு விட்டு பேச சொல்லுங்க... இவங்க ரெண்டு பேர் பிரச்சனை முடிஞ்சா தான் நம்மாள அடுத்த கட்டத்துக்கு போக முடியும்" என்றதும் கைகளை பிசைந்து கொண்டு நின்றார் சபூரா.

" சரி இப்போ அவ என்ன பேசணும்? ஆங்.... அந்த 2 லட்சம் எப்படி வந்துச்சி னு சொல்லணும். அதானே? அதுல தானே வினையே ஆரம்பிச்சிது?..." என கேட்டு விட்டு," சொல்லிடு சபூரா. அன்னைக்கு உன் ரூம்புல இருந்தது என்ன பணம்?" மருமகள் மீதிருந்த நம்பிக்கையில் தைரியமாக கேட்டார் கமர்.

ஆனால் சபூராவோ வாயை திறந்தால் தானே?

" மாமா சொல்றது சரி தான் மா. நீ இப்படி வாயே திறக்காம நின்னா அவங்க என்னனு தான் நினைப்பாங்க" என்றாள் யாஸ்மின்.

அறைக்குள்ளிருந்த படியே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த சராவுக்கு மனம் துடித்தது. தன் காதலால் தானே அன்னைக்கு இத்தனை நெருக்கடி என நினைத்தவள் எழுந்து வெளியே வந்தாள்.

" இப்போ எதுக்கு ஆளாளுக்கு உம்மாவ போட்டு படுத்துறீங்க...? இப்போ என்ன நா...." என ஏதோ பேச வந்தவள் ரிஸ்வி எழுந்து நின்ற வேகத்தில் அப்படியே பேச்சை நிறுத்தினாள்.

" மவளே... ஏதாவது ஏடாகூடாமா பேசி வைச்சே..." என்பதாக இருந்தது அவன் எழுந்து நின்ற விதம்.

" பெரியவங்க பேசிட்டு இருக்காங்கல்ல? அப்படி போய் நில்லு" என அவன் கர்ஜிக்க, திருச்சியில் பார்த்த அதே ரிஸ்வி திரும்பியிருந்தான். அதற்கு பிறகு மைசரா பேசுவாள்?

ஒரு கணம் அனைவருமே அவனது பேச்சில் அமைதியாகி விட," மாமி.... முபாரக் மாமா இருந்தா இந்த குடும்பத்துல உங்களுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்குமோ. அதே பாதுகாப்பு இனியும் கிடைக்கும். தைரியமா பேசுங்க மாமி" என ஊக்கினான்.

தன் அண்ணனின் உயர்ந்த குணத்துக்கும் இவளுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என நினைத்த ரசியா உள்ளுக்குள் நொடித்து கொண்டார்.

இதற்கு மேலும் மறைக்க முடியாது என உணர்ந்த சபூரா தன் வாய் பூட்டை திறந்தார். " அது உங்க மகன் எனக்கு கொடுத்த பணம்?"

" உங்க மகன் னா? முபாரக் காகாவா?" ரசியா இடையிட்டார். ஆம் என்பது போல் தலையசைத்தார் சபூரா.

" அதெப்படி? காகா இறந்து நாலு வருஷத்துக்கு அப்புறம் 2 லட்சம் தந்தாங்களா?" நம்பாத குரலில் கேட்டார் ரசியா. சபூரா தன் தவறை மறைக்க புதுக்கதை புனைவதாகவே நினைத்தார் அவர்.

" ரசியா.... அவ பேசட்டும்" என மகளை நிறுத்தினார் கமர்.

" நீ மேல சொல்லு சபூரா..."

சபூரா கண்ணீர் மல்க ரசியாவை பார்த்து விட்டு," மாமி.... நா வசதியில்லாத வீட்டுலேருந்து தான் வந்தேன். யாஸு வாப்பா முதல் முறையா அவங்க விருப்பத்தை சொல்லும் போது எனக்கு கொஞ்சமும் விருப்பமில்ல.... வயசான வாப்பா, வளர்ந்திட்டு இருக்குற தங்கச்சி, என் படிப்பக்காக வாங்குன கடன் இது மட்டும் தான் என் நினைப்புல இருந்துச்சு. அப்புறம் வசதியான வீட்டு பிள்ளையான அவங்களுக்கு நா கொஞ்சமும் பொருத்தமில்லாதவ னு நினைச்சி தான் மறுத்துட்டேன். நீங்க வந்து பேசும் போது தான் நா என் மனசுல இருந்தத சொன்னேன்.

ஆனா அதுக்கப்புறமும் யாஸு வாப்பா விலகவேயில்லை மாமி. மறுபடியும் என்னை பார்க்க வந்தாங்க. என்னோட என் பொறுப்புகளையும், கடமைகளையும் ஏத்துக்குறேன் னு சொன்னாங்க. ஆனா நான் சம்மதிக்கல." என்றவரின் வார்த்தைகள் அவர்களின் நேசத்தின் ஆழத்தை காட்சியாய் வரித்தது.

பள்ளி வேளை முடிந்து தன் தங்கையோடு வெளியே வந்த போது தான் சபூரா முபாரக்கை கவனித்தார். முபாரக் பேச விழைவதாக கூற, தன் மறுப்பை உறுதிபடுத்தும் பொருட்டு சபூராவும் பேச சம்மதித்தார். தங்கையை விளையாட சொல்லி விட்டு பள்ளி வளாகத்திலேயே இருந்த வேப்ப மரத்தடிக்கு இருவரும் வந்தனர்.

முபாரக் இரண்டாவது முறையாக தன் விருப்பத்தை வெளியிட, " எனக்கு இதுல உடன்பாடு இல்லங்க. என்னோட கஷ்டங்கள நீங்கயேன் சுமக்கணும்? அந்த அளவுக்கு நாம பழகலயே..." நெஞ்சில் புத்தகங்களை அணைத்தவாறு நின்றிருந்த சபூரா வினவினார்.

" நீங்க என் தோற்றம் பிடிக்காமயோ, குணம் பிடிக்காமயோ மறுத்திருந்தா நா மறுபடியும் வந்திருக்க மாட்டேன். ஆனா நீங்க உங்க குடும்ப நிலையை மனசுல வைச்சி மறுக்குறதா உம்மா சொன்னாங்க. அத என்னால ஏத்துக்க முடியல." என்றார் முபாரக்.

" உங்க நல்ல மனசு புரியுது. ஆனா இது தான் என் குணம். நா யார் கிட்டயும் எந்த உதவியும் எதிர்பார்த்ததில்ல...."

" நா உங்கள ஒன்று கேட்கலாமா?"
" கேளுங்க சார்."
" எதிர்காலத்தில உங்க கணவரோட குடும்பத்துல ஒரு பிரச்சனைனா உதவ மாட்டீங்களா? அது அவரோட பொறுப்பு னு விலகி நின்னு வேடிக்கை பார்ப்பீங்களா?" முபாரக்கின் கேள்விக்கு பதில் சொல்ல திணறினார் சபூரா.

" அது வந்து.... அது...."

" ஏது.... டீச்சருக்கே பதில் தெரியல போல" முபாரக் புன்னகைக்க, முதன்முறையாக அதில் சபூராவின் மனம் தடுமாறியது.

" சரி.... நீங்க கடமை எல்லாம் முடிச்சிட்டு வர்ற வரைக்கும் நான் காத்திருக்கேன்." முபாரக் இலகுவாக கூற, பதறியே போனார் சபூரா.

" ஏங்க.... இப்படி எல்லாம் பேசுறீங்க?"

" வேற என்னங்க சொல்லறது... அன்னைக்கு விசேஷ வீட்ல உங்கள பார்த்ததும் பிடிச்சது. அப்புறம் உங்கள பற்றி விசாரிச்சதுல ரொம்பவே பிடிச்சி போச்சு. கஷ்டத்துலயும் ஒழுக்கமா, வறுமையிலயும் நேர்மையா வாழ்றது அத்தனை சுலபமில்லங்க. அந்த குணம் எனக்கு பிடிச்சிருக்கு. ஆனா என் விருப்பத்துக்காக உங்கள வற்புறுத்த கூடாதில்லையா? அதனால தான் காத்திருக்கேன் னு சொன்னேன். " எந்த விதமான அலங்கார வார்த்தைகளும் இல்லாமல் தன் மனதை உறுதியாக கூறினார் முபாரக். இத்தகைய பேரன்பை யாரால் தான் மறுக்க முடியும்?

ஆனாலும் சபூரா முடிவெடுக்க முடியாமல் திணறினார். இருவரின் அந்தஸ்தும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் ஆயிற்றே....

" எப்படிங்க.... உங்க வசதிக்கும் அந்தஸ்துக்கும் நா பொருத்தமானவ இல்லையே?"

" ரெண்டு பேருக்கும் மனசு பொருந்தினா போதும் னு நினைக்கிறேன்."

" நீங்க சொல்றதெல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா நடைமுறைக்கு சாத்தியமா? நாளபின்ன பிரச்சனை ஏதும் வந்தா?"

" மனசுல அன்பிருந்தா எல்லாமே சாத்தியமாகுங்க.... நா உங்க குடும்பத்தை நேசிக்கிறேன். நீங்க என் குடும்பத்த நேசிங்க.... அப்புறம் பிரச்சனை எங்கிருந்து வரும்?"

அதன் பிறகு சபூராவால் மறுக்கவே முடியவில்லை. வரதட்சணை என்ற பெயரில் கொள்ளையடிக்கும் ஆண்களை பாரத்திருக்கிறார். எந்த வரதட்சணையும் வேண்டாம் என கூறும் ஆண்களை கூட பார்த்திருக்கிறார். ஆனால் காதலிக்கும் பெண்ணின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் ஆண்மகனை அவர் பார்த்ததையில்லை. சத்தமேயில்லாமல் எத்தனை பெரிய புரட்சியை செய்கிறார் இவர்? சபூரா மனதில் வான்னளவு மதிப்பை பெற்றார் முபாரக். மிக மகிழ்ச்சியாக சபூரா திருமணத்திற்கு சம்மதிக்க, முதல் வேலையாக சபூராவின் கடனை அடைத்தார் முபாரக்.

அதன் பின் தான் அவர்களது திருமணமே நடந்தது. காலங்கள் உருண்டோடின. மகிழ்ச்சி கடலில் மிதந்து கொண்டிருந்தார் சபூரா. எல்லாம் முபாரக்கின் உடல்நிலை பாதிக்கும் வரை தான். அதன் பின் ஆறு மாதங்கள் சிக்கிச்சைகாக மருத்துவமனைக்கும் வீட்டிற்கு அலைந்தனர். அப்படி ஒரு நாள் மருத்துவமனைக்கு போகும் போது தான் முபாரக் மருத்துவமனைக்கு செல்லாமல் பத்திரபதிவு அலுவலகத்திற்கு மனைவியை அழைத்து வந்தார்.

" இங்க எதுக்குங்க வந்திருக்கோம்?" கேட்டபடியே காரிலிருந்து இறங்கினார் சபூரா.

" சொல்றேன் சபூ.... ஆனா அதுக்கு முன்னாடி நா சொல்றத நீ செய்யணும் எந்த கேள்வியும் கேட்காம" எனவும் மறுபேச்சு பேசாமல் அவரோடு சென்றார் சபூரா.

திருச்சியின் முக்கியபகுதியிலிருந்த ஒரு இடம் சபூராவின் பெயருக்கு கிரயமானது. கண்ணீர் வழியும் கண்களுடன் கணவர் கூறிய இடங்களில் கையெழுத்திட்டார் சபூரா.

வீட்டிற்கு வரும் வரை சபூரா பேசவேயில்லை. அறைக்குள் நுழைந்ததும் அவர் வெடித்து அழ, மனைவியை அணைத்துக் கொண்டார் ஆசாத்.

" என்னை விட்டுட்டு போயிடலாம் னு முடிவே பண்ணிட்டீங்களா?" சபூரா அழுகையினூடே கேட்க, அவர் கண்களிலும் கண்ணீர் கோடுகள்.

மனைவியை சிறிது நேரம் அழ விட்டவர்," சபூ.... நா சொல்றத பொறுமையா கேளும்மா... இனிமே தான் நீ தைரியமா இருக்கணும்." என்றதற்கு

" மாட்டேன். எனக்கு இந்த சொத்தெல்லாம் வேண்டாம். நீங்க தான் வேணும்" என்றார் சிறுபிள்ளையாக.

" நான் உன் கூடவே தான் இருப்பேன் டா. ஆனா காலம் என்ன வச்சிருக்கு னு நமக்கு தெரியாதில்ல... டாக்டர்ஸ் வேற ஏதேதோ சொல்றாங்க..."

" அய்யோ இப்படி எல்லாம் பேசாதீங்க. நீங்க நல்லாயிருப்பீங்க. எனக்கு இந்த சொத்தெல்லாம் வேணாம்"

"உன் வார்த்தை பலிக்கட்டும் சபூ... ப்ளீஸ் நான் சொல்றத கொஞ்சம் கேளு.... இது உனக்கோ யாஸ்மின்னுக்கோ வாங்குனதில்ல சபூ..." எனவும் கணவரை கேள்வியாக பார்த்தார்.

" மறந்துட்டியா சபூ? உன்னோட பொறுப்பு கள நான் ஏததுக்குறேன் னு சொல்லி தானே உன்னை கல்யாணம் பண்ணேன்? உன் கடனை அடைச்சதை தவிர நா வேற எந்த உதவியும் செய்யவேயில்லயே சபூ‌... நீ செய்யவிட்டதும் இல்லயே.... ஆனா அதுக்காக நா கொடுத்த வாக்கை என்னால மறக்க முடியுமா? இந்த இடம் முழுக்க முழுக்க உன் குடும்ப தேவைக்காக வாங்குனது. உனக்காகவோ நம்ம யாஸுக்குட்டிக்காகவோ இதை பயன்படுத்திக்குற சூழ்நிலை வராது னு திடமா நம்புறேன். இதை நீ ஹாஜிராவோட படிப்புக்கோ... கல்யாணத்துக்கோ, மாமாவோட மருத்துவத்துக்கோ இல்ல வேற ஏதாவது நெருக்கடியான சமயத்திலோ இதை விற்று அந்த பணத்தை பயன்படுத்திக்கணும். சரியா?" முபாரக் தன் எண்ணத்தை வெளியிடை இன்னுமே அழ தொடங்கினார் சபூரா.

" ப்ளீஸ்.... அழாதடி" என வாஞ்சையாக அணைத்துக் கொண்டார்.

" இந்த விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும் என்ன? யாரு கிட்டயும் சொல்ல வேண்டாம்..."

" ஏன்?"

" ம்... இது நம்மோட தனிப்பட்ட விஷயம் சபூ. மத்தவங்க இத எப்படி எடுத்துப்பாங்க னு தெரியாது. யாரும் என் மனைவிய விமர்சிப்பதை நான் விரும்பல.சரி.... இப்போதைக்கு இதை மறந்திடுவோம். நல்லதையே நினைப்போம் சரியா?" என்றவரின் மார்பில் சபூரா தஞ்சமடைய, வேதனையில் துடிக்கும் மனைவிக்கு அவரே மருந்தானார்.

அடுதடுத்து வந்த நாட்களில் முபாரக்கின் உடல்நிலை மோசமடைய, எத்தனை நவீன சிகிச்சைகளை மேற்கொண்டும் பலனில்லாமல் ஒரு நாள் இறைவனடி சேர்ந்தார். மனைவியின் மணி வயிற்றில் இன்னுமொர் உயிரை விதைத்தது கூட தெரியாமல் போய் சேர்ந்துவிட்டார்.

முபாரக் இறந்த நான்கு ஆண்டுகள் வரை சபூராவுக்கு அவரது குடும்பத்தில் எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை. தந்தை தஸ்தகீர் ஹாஜிராவுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று கூறும்போது தான் அந்த இடத்தை விற்க வேண்டும் என நினைத்தார். அதற்கு தோதாக அனைவரும் ஜமீலா வீட்டு கல்யாணத்திற்கு கிளம்பினர். அந்த நேரத்தில் இடத்தை விற்று விட சபூரா ஏற்பாடுகளை செய்ய, ரசியா ஊருக்கு செல்லாமல் அங்கேயே இருந்துவிடுவார் என அவர் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே ஏற்பாடுகளை செய்திருந்ததால் பத்திர பதிவை தள்ளி போடவும் முடியவில்லை. ஆதலால் வேறு வழியின்றி கடைக்கு செல்வதாக கூறிவிட்டு பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று வந்தார். அந்த இடத்தை விற்று கொண்டு வந்த பணத்தை ரசியா பார்த்து விட, ஏற்கனவே அவர் மீது சந்தேகத்தில் இருந்தவர் சபூரா பணத்தை எடுத்துவிட்டதாகவே நினைத்துவிட்டார். ஆரம்பம் முதலே தன் மீது தவறான அபிப்ராயத்தில் இருக்கும் ரசியாவிடம் விளக்க சபூரா தயங்க, அதுவே ரசியாவின் கோபத்தை இன்னும் கிளறிவிட்டது. வழக்கம் போல கோபத்தில் நிதானத்தை இழந்து ரசியா கத்த, விளக்கம் சொல்ல முடியாத சபூராவோ வாயை மூடி வெளியே கிளம்பி விட்டார்.

தன் கணவருக்கும் தனக்குமான நேசத்தின் ஆழத்தை விளக்கி முடித்தார் சபூரா. யாஸ்மின் னும் சராவும் அன்னையை அணைத்து கொண்டனர். அன்பே வடிவான, ஆண்மகனுக்கு இலக்கணமான தங்கள் தந்தையை நினைத்து நெகிழ்ந்திருந்தார்கள். அவர்கள் மட்டுமல்ல ரிஸ்வி, ரிதா.... ஆசாத் கூட வியப்பில் ஆழ்ந்திருந்தனர். முபாரக்கின் காதல் நிச்சயம் போற்ற கூடியது. கட்டியவளை மட்டுமல்ல அவளை சார்ந்தவர்களையும் நேசிக்கும் ஆண்கள் வெகு சிலரே.....

வெளியிலிருந்து பார்ப்பவர்கள் சபூரா தன் கடனை அடைப்பதற்காகவும், குடும்ப கஷ்டத்தை தீர்த்து கொள்ளவும் தான் திருமணத்திற்கு சம்மதித்தாக கூறலாம். ஏன் ரசியாவே அப்படி தானே பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அது அவர்களின் நேசத்தின் ஒரு பரிமாணம் என்பதை எத்தனை பேர் புரிந்து கொள்ள கூடும்.....? கணவன் வீட்டு பிரச்சனைக்கு தன் நகையை கழட்டி தரும் மனைவியை போற்றும் இந்த சமூகம், மனைவியின் வீட்டிற்கு உதவி செய்யும் கணவனை பெரும்பாலும் போற்றுவதில்லை‌.
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
முபாரக் ♥சபூரா நேசம் அருமை 👌👌👌♥♥♥🌺🌺🌺🌺
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top