• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 54(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
காதல் அடைமழை காலம் - 54

அத்தியாயம் 55

" ரிஸ்வியை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா" என கமர் கேட்டதும் தன் அன்னையும், மாமியும் தான் மைசரா கண்முன் வந்தார்கள். ஒரு நொடி மறுத்து விட்டு அன்னையை இக்கட்டிலிருந்து காப்பாற்றி விடலாம் என தோன்றியது தான். ஆனால் எதிரில் அமர்ந்திருப்பவனின் அழுத்தம் திருத்தமான பார்வையும், மெஹர் என்ற அதட்டலான அழைப்பும் மனசு முழுக்க ரிஸ்வி நிறைந்துவிட்டத்தை பெண்ணவளுக்கு மீண்டும் மீண்டும் உணர்த்தியது. இனி இந்த மனசில் இன்னொருவன் நுழைய வாய்ப்பேயில்லையே.....

அன்னை தனக்கு மாப்பிள்ளை பார்ப்பதை நினைவு கூர்ந்தவளுக்கு, தன்னவனை கரம் பிடிக்க இதுவே கடைசி வாய்ப்பாக தெரிந்தது. தாயிக்காக ரிஸ்வியை விட்டு விலகலாம் ஆனால் அந்த இடத்தில் இன்னொருவனை நிரப்ப முடியாது. மனதை பறித்தவனிடமே தன்னையும் ஒப்படைக்க விழைந்தவள்," எனக்கு சம்மதம்" என கூறியிருந்தாள்.

அணையை உடைத்த வெள்ளமாய் காதல் மனமெங்கு பரவி ஆர்பரிக்க, பேய் மழை பெய்தது மங்கையவளின் இதயத்தில். அதை சுகிக்க கூட விடாமல் வரிந்து கட்டிக் கொண்டு சண்டையில் இறங்கினர் ரசியாவும் யாஸ்மின்னும்

"இத்தனை நாள் என் மகன வேணாம் வேணாம் னு சொல்லிட்டு இப்போ சம்மதம் சொல்ற.... உன் உம்மா மாதிரி நீயும் பசப்புக்காரி தான்....." ரசியா இகழ்ச்சியாய் மொழிய,

" இங்க பாருங்க மாமி.... என் உம்மாவயும் தங்கச்சியையும் கேவலமா பேசுனா நா கேட்டுட்டு சும்மா இருக்கமாட்டேன்." யாஸ்மின் சண்டைக்கு வந்தாள்.

" ஆமா.... அப்படியே உன் உம்மா உத்தமி..... வந்துட்டா பேச... இதே போல தான் உன் உம்மாவும் பண்ணா... இதுல கல்யாணத்துக்கு முன்னாடியே கைய நீட்டி காசு வாங்கியிருக்கா...." எதையோ மனதில் வைத்து கொண்டு எதையோ பேசிக் கொண்டிருந்தார் ரசியா.

சபூரா கூனி குறுகி நிற்க, யாஸ்மின் பதிலுக்கு கத்த," ஆனா ஒரு கண்டிஷன்" என கத்திக் கொண்டிருந்தவர்களின் வாயை அடைத்திருந்தாள் மைசரா.

அனைவரும்‌ அவளை கேள்வியாக பார்க்க," என்ன கண்டிஷன் சரா..." என கேட்டார் கமர். மதில் மேல் பூனையாக மறுகிக்கொண்டிருந்தவளின் மனக்கலக்கம் முடிவுக்கு வந்திருக்க, நிதானமாக யோசிக்க தொடங்கியிருந்தாள் மைசரா.

இனி தன்னவனை மட்டுமே நம்பியவள் நிமிர்ந்து அவனை காண, ரிஸ்வியின் மனதில் மென்சாரல்.

" உங்க பேரன் நான் கேட்குற மஹரை தருவாங்களா ஆச்சா?" கேள்வியை கமரிடம் தொடுத்தவள் பார்வையை ரிஸ்வியின் மேல் பதித்திருந்தாள்.

" சரா.... இப்போ எதுக்கு மஹர் பத்தி பேசுற? அது கல்யாண சமயத்தில ரிஸ்வி வீட்டுல சொல்லுவாங்க...." தங்கையின் கேள்வியில் யாஸ்மின் படபடத்தாள்.

" யாஸு மஹர் னா என்ன?" நிதானமாக கேட்டாள் சரா.

" அது... அது‌... கல்யாணத்துக்கு மாப்பிள்ளை வீட்டுல பெண்ணுக்கு கொடுக்குற மணகொடை"

" கொடுக்கணுமா? வாங்கணுமா?"

' இவ எதுக்கு சம்பந்தமில்லாம பேசுறா' என முழித்தாலும்," கொடுக்கணும்..." என இழுத்தாள்.

" அப்படி தான் குரான்ல சொல்லியிருக்கா?"

" பு.... புரியல சரா...." யாஸ்மின்னுக்கு மட்டுமல்ல அங்கிருந்த யாருக்குமே புரியவில்லை.

"மாப்பிள்ளை அவர் விரும்பியதை கொடுக்கணுமா? இல்ல பொண்ணு விரும்பியதை கேட்டு வாங்கணுமா?" கேள்வியை விளக்கினாள் சரா.

" பொண்ணு தான் விரும்பியதை கேட்டு வாங்கிக்கணும். ஆனா சரா அப்படியெல்லாம் இப்போ யாரும் கேட்குறதேயில்லயே.... அப்புறம் எப்படி?" யாஸ்மின் இழுக்க....

" யாரும் கேட்காகததால சட்டம் மாறிடாது யாஸு. 1400 வருஷத்துக்கு முன்னாடி குரான் எப்படி இருந்ததோ அப்படியே தான் இன்னுமும் இருக்கு. நாம தான் அதையெல்லாம் யோசிக்காம இஷ்டத்துக்கு வாழ்ந்திட்டிருக்கோம். என் கல்யாணத்துக்கான மஹரை நான் தான் கேட்பேன்" எனவும் அங்கிருந்த அனைவரும் அசந்து தான் போனார்கள்.

" சரா...." என சபூரா ஏதோ பேச வர, " இத்தனை நேரம் பேசாம தானே மா இருந்தீங்க. இப்பவும் பேசாதீங்க ப்ளீஸ்....." என்றவள் மீண்டும் ரிஸ்வியை நோக்க, அவனது புருவங்கள் உயர்ந்து வியப்பை காட்டின.

" சொல்லுங்க ஆச்சா....உங்க பேரன் நான் கேட்குற மஹரை தருவாங்களா?" மீண்டும் கேள்வியை கமரிடம் தொடுத்திருந்தவளின் பார்வை மீண்டும் ரிஸ்வியிடமே இருந்தது.

கமர் ரிஸ்வியை பார்க்க, " உங்க பேத்திக்கு என்ன வேணும் னு கேளுங்க கன்மா" என்றவனின் பார்வையும் தன் மெஹரின் மேல் தான் இருந்தது.

கமர் சராவை பார்க்க," ஆச்சா.... தங்க மலையே கூட கேட்கலாம் னு இஸ்லாம் சொல்லுது...." முதன் முறையாக ரிஸ்வியை சீண்டினாள் சரா.

அவளது சீண்டலில் சிலாகித்தவன்,"அப்படி சொன்ன அதே மார்க்கம் தான் அழகுக்காவும், பொருளுக்காகவும், குடும்ப பெயருக்காகவும் பெண்ணை மணக்காதீங்க.... மார்க்க பற்றுள்ள பெண்ணை மணந்து வாழ்க்கையில வெற்றி காணுங்க னு சொல்லிருக்கு. நா மார்க்க பற்றுள்ள பெண்ணை தான் கல்யாணம் பண்ணிக்க விரும்புகிறேன். சோ.... அவ கண்டிப்பா என் சக்திக்கு உட்பட்டு தான் கேட்பா னு திடமா நம்புறேன். மெஹரை தாராளமா கேட்க சொல்லுங்க" என்றவன் இருக்கையில் சாய்ந்து கைபிடியில் முட்டியை ஊன்றி ஆள்காட்டி விரல் பதிய முகத்தை தாங்கியவன் அவளை சுவாரஸ்யமாக பார்த்தான். ஆண்மகனது தோற்றமும், அவன் அமர்ந்திருந்த தோரணையும் அவனை கம்பீரமாக காட்ட, பெண்ணவள் ஒரு நொடி அவனது அழகில் மயங்கி தான் போனாள்.

இருவரையும் மாறி மாறி பார்த்த கமருக்கு பாவம் கழுத்து வலிக்கவே, இருவருக்கும் இடையே வாய் கொடுக்காமல் அமைதியாகவே பார்த்திருந்தார்.

கண்களில் அவனை நிரப்பிக் கொண்டவள்," என் உம்மாவுக்கும் உங்க உம்மாவுக்கு நடுவுல இருக்குற அந்த உண்மைய நீங்க கண்டுபிடிக்கணும்." மைசரா கூறி முடித்த நொடி," சரா.... என்னை பத்தின கவலை துளியும் இல்லாம உன் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்ட சரி.... அப்புறம் எதுக்கு உனக்கு அந்த உண்மை தெரியணும்?" சபூரா கோபத்தில் வெடிக்க, ரசியா அவரை பார்த்து இகழ்ச்சியாய் இதழ் வளைத்தார்.

" உம்மா.... இது என் உரிமை. எனக்கு எது தேவையோ அதை நான் கேட்குறேன். இதுல தலையிட யாருக்கும் உரிமையில்லை." அழுத்தம் திருத்தமாக உரைத்தாள் மைசரா.

" நாம‌ தான் இந்த உண்மை வெளிவரவே வேண்டாம் னு விட்டுட்டோமே மா"என்றார் ஆசாத்.

" இல்ல மாமா.... அந்த உண்மை வெளிவராம நம்ம குடும்ப பிரச்சனை தீராது. என் உம்மாவ அழ வைச்சிட்டு என்னால சந்தோஷமா வாழ முடியாது."

" அந்த உண்மை வெளி வந்தாலும் உன்னால சந்தோஷமா வாழ முடியாது. நீ உன் மனசை மாத்திக்கிறது நல்லது" என்றார் ரசியா.

" அது முடியாது மாமி. நடக்குறது நடக்கட்டும். எனக்கு ஆண்டவன் மேல நம்பிக்கை இருக்கு" என்றாள் சரா திடமாக.

இத்தனை நாள் தன் முன் தலைகுனிந்து நின்று, கண்ணீரில் கரைந்து, மனதை மறைத்து தனக்கு வலியை மட்டுமே கொடுத்தவள் இன்று நிமிர்வுடனும் தெளிவுடனும் பேசும் அழகில் மெஹரை வெகுவாக ரசித்தான் ரிஸ்வி.

" நீ தவறான முடிவு எடுத்திருக்க சரா..." சபூரா அழுத படி கூற, " இல்ல மா. ரொம்ப சரியான முடிவு தான் எடுத்திருக்கேன். சொல்ல போனா இது நீங்க எடுத்திருக்க வேண்டிய முடிவு." எனவும் சபூரா குழப்பமாக பார்த்தார்.

"உம்மா.... மஹர் இஸ்லாம் பெண்களுக்கு கொடுத்த மிக அற்புதமான உரிமை. ஆனா அது இங்க வெறும் சம்பிரதாயமா மட்டும் தான் பார்க்கப்படுது. ஏன் பெண்ணாகிய நமக்கே அதோட முக்கியத்துவம் தெரியறதில்ல.... வாப்பா உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிய ரகசியமா கொடுத்திருக்க தேவையே இல்லமா. நீங்களும் பயந்து பயந்து அதை வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. மஹராவே உரிமையா நீங்க அத வாங்கியிருக்கலாம் அல்லது வாப்பா கொடுத்திருக்கலாம்." பெற்ற அன்னைக்கே பாடம் சொன்னவள் ரசியாவின் புறம் திரும்பி ," ஏன் மாமி.... உழைச்சி சம்பாதிக்கிற ஆம்பளை தன்னை நம்பி வர்றவ கிட்ட காசு வாங்கினா வரதட்சணை, சீர், எதிர்கால சேமிப்பு னு அத கொண்டாடுவீங்க. அதுவே ஒரு பொண்ணு வாங்குனா அவள வேசி ரேஞ்சுக்கு பேசுவீங்கல்ல? என்றதும் முதன்முறையாக ரசியா தலைகுனிந்து நின்றார்.

" நா உங்கள மட்டும் சொல்ல மாமி. நம்ம சமூகத்தில பெரும்பாலானவங்க அப்படி தான் நினைக்கிறாங்க.... ஏன் ஆம்பளைக்கு மட்டும் தான் குடும்பம் இருக்குமா? பொறுப்பு கடமை எல்லாம் இருக்குமா? பெண்ணுக்கும் இருக்கு.... அதை மதிச்சி தான் இஸ்லாம் நமக்கு மஹர் ன்ற உரிமையை கொடுத்திருக்கு. நம்ம திறமைய மதிச்சி தான் மஹரை நம்ம இஷ்டப்படி பயன்படுத்திக்குற சலுகைய கொடுத்திருக்கு. எல்லாத்துக்கும் கணவனையே எதிர்பார்க்காம சுயமா வாழ வழி சொல்லிருக்கு. மஹர் கொடுத்த கணவன் கூட மனைவி அனுமதி இல்லாம அதை பயன்படுத்த முடியாது. அப்படி பட்ட அருமையான உரிமையை தான் விட்டு கொடுத்துட்டு நிறைய பெண்கள் அடிமையாவும், அவமானத்தோடும் வாழ்ந்திட்டிருக்காங்க."

ஒரு பெண்ணுடைய தேவை பணம்/ நகை/ பொருள்/ சொத்தாக மட்டும் இருக்காது என்பதை உணர்ந்து தான் இஸ்லாம் மஹரை என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம் னு சொல்லுது. தீய பழக்கங்களை கைவிட சொல்லலாம், படிக்க சொல்லலாம், படிக்க வைக்க சொல்லலாம், தன் எதிர்கால திட்டத்திற்கான அனுமதியை கூட மஹராக கேட்கலாம். எனக்கு தேவை நம்ம ரெண்டு குடும்பமும் ஒன்னு சேரணும். என் உம்மாவோட கண்ணீர் தீரணும். மாமியோட கோபம் அடங்கணும். அதுக்கு அந்த உண்மை வெளியே வரணும்.அது தான் நா கேட்குற மஹர்" தீர்க்கமாக பேசி முடித்தாள் மைசரா.

மஹரை பற்றி பேச ஆரம்பித்தால் பேசிக் கொண்டே போகலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. ஆனால் அதை பெண்கள் உணருவதுமில்லை.... உணர்த்தபடுவதுமில்லை..... தங்க மலையை கூட மஹராக கேட்கலாம் என இஸ்லாம் கூறுகிறது. அந்த அளவுக்கு பெண்களின் விருப்பத்தை இஸ்லாம் மதிக்கிறது. ஒரு பெண் மஹர் கேட்பதை வைத்தே ஓரளவு அவள் குணாதிசயத்தை புரிந்துக் கொள்ளலாம். பேராசைக்காரியா? கணவனின் சக்திக்கு மீறி ஆசைபடுபவளா? திறமையானவளா? என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

அதே போல பெண் கேட்கும் மஹரை கொடுக்கும் விததிலேயே ஆண்ணின் குணாதிசயத்தை புரிந்துக் கொள்ளலாம். ஒரு பெண்ணை வைத்து வாழுமளவுக்கு வசதி கொண்டவனா, மனமுவந்து கொடுக்குமளவுக்கு தன் மனைவியை நேசிப்பவனா? அவளது விருப்பத்தை மதிப்பவனா? என்பதை தெரிந்துக் கொள்ளலாம். இதனால் பொருத்தமற்ற திருமணங்கள், ஏமாற்று திருமணங்கள், திருமணத்திற்கு பின் வரும் கருத்து வேறுபாடுகள் ஓரளவு குறையும். இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலங்களிலாவது நம் பெண் மக்கள் தனக்கான மஹரை கேட்டு பெறட்டும்.நம் ஆண் மக்கள் மனமுவந்து அதை கொடுக்கட்டும்.

காலமெல்லாம் கணவனுக்கு தொண்டு செய்ய வருபவளுக்கு, தன் உயிரை உருக்கி உயிரை ஈன்றெடுப்பவளுக்கு, கணவனின் குடும்பத்தை அனுசரித்து, அரவணைத்து அன்பை பொழிபவளுக்கு, குழந்தைகளை இமை போல் காத்து வளர்ப்பவளுக்கு எவ்வளவு கொட்டி கொடுத்தாலும் தகும்.

இத்தனை காலமாய் இருவேறு மனநிலையில் சபூராவும் ரசியாவும் காத்து வந்த உண்மையை, எந்த இக்கட்டிலும் கூறிவிடாத ரகசியத்தை தன் உரிமையை கொண்டு உடைத்து விட்டாள் மைசரா.

" சரா.... உம்மா சொல்றத கேட்க மாட்டியா?" சபூரா தழுதழுக்க,

" ஸாரி மா.... இனியும் நான் பயந்து அமைதியா இருந்தனா அது நா உங்கள சந்தேகப்படுறதுக்கு சமம்" என்றாள் மைசரா.

ரசியாவும் சபூராவும் கைகளை பிசைந்தனர். " என்னங்க.... நீங்களும் இப்படி அமைதியா இருக்குறீங்க.... அவளுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லுங்க..."

" என்ன சொல்ல சொல்ற ரசியா? அவ வார்த்தை ஒவ்வொன்னும் வைரம். இது அவளோட உரிமை ரசியா... ரிஸ்விக்கும் சராவுக்கும் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம். நம்ம யாரும் தலையிட முடியாது. ரிஸ்வி மறுத்தா தான் உண்டு" என கையை விரித்தார் ஆசாத்.

அனைவரும் வாயடைத்து போயிருக்க ரிஸ்வியை நிமிர்ந்து பார்த்தவள், " ரிஸ்வி.... நா கேட்குற மஹரை கொடுத்து என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?" என நேருக்கு நேராக கேட்டு விட, ரிஸ்வியின் மனதில் எழுந்த உணர்வுக்கு அவனால் பெயரிட முடியவில்லை. நேற்று வரைக்கும் தனக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தவள் இன்று கண் முன்னே நின்று கேட்க, பலவிதமான எண்ணங்கள் ஆட்கொண்டது அவனை.

" வேண்டாம் ரிஸ்வி.... குடும்ப நல்லதுக்காக இவ கேட்குறா... ஆனா அது குடும்பத்துல நிம்மதியை கொடுக்காது. கொஞ்சம் யோசி ரிஸ்வி..." என்றார் ரசியா. சபூரா அவரை நன்றியோடு பார்க்க எள்ளும் கொள்ளும் வெடித்தது அவர் முகத்தில்.

" நோ மாம்.... அவ உம்மா மேல அவளுக்கு எவ்ளோ நம்பிக்கை இருக்கோ அவ்ளோ நம்பிக்கை உங்க மேல எனக்கு இருக்கு மாம்... உங்க பேச்சை கேட்டு இத நான் மறுத்துட்டா உங்க மேல நா சந்தேகப்பட்டதா ஆயிடும்." என மறுத்துவிட்டான் ரிஸ்வி.

" எல்லாம் சரி தான்... ஏம்மா சரா.... மாமி மவன் அதுலயும் நாளைக்கு கட்டிக்க போறவன்... என் பேரனை பேர் சொல்லி கூப்பிடுவியா? மச்சான் னு கூப்பிடுலா...." கமர் செல்ல சண்டை போட, ரிதா வாயை பொத்தி சிரித்தாள்.

" கூப்பிடு.... கூப்பிடு சரா...." என தோழியை கேலி செய்தவள்," மச்சான்.... அவ மச்சான் னு கூப்பிடாம நீங்க சம்மதம் சொல்ல கூடாது." என ரிதா ஆள்காட்டி விரலை ஆட்டி கட்டளையிட்டாள்.

" நா என்னைக்கு உன் வார்த்தையை மீறியிருக்கேன் ரிதாக்குட்டி" என்ற ரிஸ்வி தன் மெஹரை சுவாரஸ்யமாக பார்க்க அந்தி வானமாய் மாறி போனது மெஹரின் மென்முகம்.

அவள் கண்களை சுருக்கி ரகசியமாக கெஞ்ச, என்ன நினைத்தானோ," நீ கேட்ட மஹரை கொடுத்து உன்னை கல்யாணம் பண்ணிக்க எனக்கு பரிபூரண சம்மதம்." என்றான் ரிஸ்வி.

" மச்சான்..." என ரிதா இடுப்பில் கை வைத்து முறைக்க, " வால்லன்ட்ரியா சொல்ல வைக்கிறது தப்பு தானே ரிதா" என்றானவன்.

கூடிய விரைவில் மெஹரின் மஹரை நிறைவேற்றுவதாக ரிஸ்வி கூற, சபை கலைந்தது.
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
866
Reaction score
2,640
சூப்பர் எபி. எந்தக் காலம், எந்த மதம், இன மொழியா இருந்தாலும் பெண்களுக்குச் சாதகமான விசயங்கள் எல்லாம் மறைக்கப்படுது மறுக்கப்படுது. நான் பன்னிரண்டாவது படிக்கும் போது இந்துநாகரீகப் பாடத்தில வேதகாலத்துல ஆண் பெண்ணுக்குப் பொருள் கொடுத்துத் தான் மணம் முடித்தான் என்று படித்தனான். பேந்து எந்தக் கபோதிகளால பெண் வீட்டார் ஆண் வீட்டருக்கு சீதனம் கொடுக்கிற நிலைமைக்குக் கொண்டு வந்தாச்சு. இந்தக் காலத்துல பொண்ணோட அப்பாவின் தொண்டைக் குழி இறுகிற வரைக்கும் சீதனம் கேட்கிறாங்கள்.
1634188211936.png1634188506211.png
 




பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
சூப்பர் எபி. எந்தக் காலம், எந்த மதம், இன மொழியா இருந்தாலும் பெண்களுக்குச் சாதகமான விசயங்கள் எல்லாம் மறைக்கப்படுது மறுக்கப்படுது. நான் பன்னிரண்டாவது படிக்கும் போது இந்துநாகரீகப் பாடத்தில வேதகாலத்துல ஆண் பெண்ணுக்குப் பொருள் கொடுத்துத் தான் மணம் முடித்தான் என்று படித்தனான். பேந்து எந்தக் கபோதிகளால பெண் வீட்டார் ஆண் வீட்டருக்கு சீதனம் கொடுக்கிற நிலைமைக்குக் கொண்டு வந்தாச்சு. இந்தக் காலத்துல பொண்ணோட அப்பாவின் தொண்டைக் குழி இறுகிற வரைக்கும் சீதனம் கேட்கிறாங்கள்.
View attachment 31471View attachment 31472
உண்மை தான் சிஸ். பெண் பிள்ளைகள் பிறந்தது முதல் அவர்களின் திருமணத்திற்காக பணம் சேமிக்க வேண்டும் என்ற பயம் வந்து ஒட்டிக் கொள்கிறது. என் பிள்ளைகள் வளரும் முன் பணம் சேர்க்க வேண்டும் என்பதை விட இஸ்லாம் பெண்ணிற்கு தந்த உரிமைகளை மீட்க வேண்டும் என விரும்புகிறேன். இதற்காகவே ஒரு ஆண் பிள்ளை வேண்டும் என ஆசைப்படுகிறேன். வருங்காலத்தில் என் பெண் பிள்ளைகள் கேட்கிற மஹரை கொடுத்து மணம் முடிக்கும் மணமகன் வருவானா என தெரியவில்லை. ஆனால் இன்ஷா அல்லாஹ் எனக்கு ஆண் பிள்ளை பிறந்தால் பெண் விரும்பி கேட்கும் மஹரை கொடுத்து மணம் முடிப்பவனாக வளர்க்க ஆசைப்படுகிறேன்.
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
866
Reaction score
2,640
கண்டிப்பாக இறையருளால் உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். கவலைப் படாதீர்கள் சகோதரி. நானும் பிள் ளையாரப்பாவை வேண்டுகின்றேன். :love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
அருமையான பதிவு, சரா தனக்கு கல்யாணாதிற்கு ரிஸ்வியிடம் மெகர்ரை கேட்ப்பத்து அருமை 👌👌👌👌👌, அது தன் அன்னை, மாமி மனங்களில் உள்ள ரகசியம் தெரிந்த பின் தான் கல்யாணம் அவர்கள் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தால் தான் மகிழ்ச்சியுடன் கல்யாணம் செய்ய முடியும் என்று நினைத்து தன் விருப்பத்தை மெகர்ராக ரிஸ்வியிடம் நிறைவேற்ற சொல்வது அருமை 👌👌👌🌺🌺🌺🌺
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top