• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 54(3)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
கா.அ.ம - 54(3)

இத்தனை நாள் இல்லை இல்லை இத்தனை வருடங்களாக யாருக்கும் தெரியாமல் தான் ஆடிய ஆட்டத்தை எல்லாம் ஒருநாள் எல்லார் முன் தானே கூறுவோம் என என்றும் நினைத்ததில்லை காசிம். தவறு செய்யும் போது வெட்கமறியாத உள்ளம் அதை எல்லார் முன்பும் சொல்ல கூசியது. அதுவும் பெற்ற மகனை அருகில் வைத்துக் கொண்டு....

அனைவரும் கூரிய பார்வையோடு அவரை‌ பார்க்க காசிம் பேசலானார்.

" ச... சபூரா மேல எந்த தப்பும் இல்ல..‌... நடந்ததுக்கு எல்லாம் நான் தான் காரணம். கடை கணக்குல குளறுபடி பண்ணது நான், ச... சபூரா வீட்டை விட்டு வெளியே போகவும் நா தான் காரணம்." என்றதும் அனைவரும் அதிர்ந்து போயினர்.

" விவரமா சொல்லுங்க..." ரிஸ்வியின் குரல் கடுமையாக வந்தது.

எசசிலை கூட்டி விழுங்கியவர்," சின்ன வயசுல இருந்தே வசதியா வாழ்ந்துட்டேன். எனக்கு வாப்பா உம்மா இல்லாததால நா என்ன தப்பு செய்தாலும் காகா என்னை கண்டிச்சதே இல்ல.... கையில பண புழக்கம் வேற... எல்லா கெட்ட பழக்கமும் வந்துடுச்சி...." அதற்கு மேல் பேச முடியாமல் மௌனமானார் காசிம்.

'இத்தனை கெட்ட பழக்கமும் உள்ளவனையா தங்கைக்கு கணவனா பார்த்திருக்கோம்' என அதிர்ந்து போனார் ரசியா.

ரிஸ்வி " என்ன சாச்சா பேச முடியலயா? உங்க சரிதைய நான் சொல்லட்டுமா?" என இகழ்ச்சியாக கேட்டவன்," எல்லா கெட்ட பழக்கமும் வந்த பிறகு தான் இவங்களோட காகா கண்டிச்சிருக்காங்க. அதுக்கு காசிம் சாச்சா கோபப்பட்டு சண்டை போட்ருக்காங்க... சொத்தையும் பிரிச்சி கேட்டு வாங்கியிருக்காங்க. இவரை தனியா விட்டா இன்னும் கெட்டு போயிடுவாரு.... ஒரு கல்யாணத்த பண்ணி வைப்போம் னு பொண்ணு பார்த்த நேரத்தில தான் அஸ்மா மாமி பற்றி அவங்களுக்கு தெரிஞ்சது. அவங்க பொண்ணு கேட்டதும் நாமளும் கொடுத்திட்டோம். வாங்குன சொத்தை எல்லாம் ஆறே மாசத்துல அழிச்சவரு, அஸ்மா மாமி கிட்ட அவங்க காகாங்க ஏமாத்திட்டதா பொய் சொல்லி இங்க வந்தாரு... பணத்துலயே ஊறி, ஊதாரி தனமா செலவு செய்த இவரால பணமில்லாம இருக்க முடியல. பெரும் நம்பிக்கை வச்சிருக்க அமீர் மாமா கிட்ட இவரால பணம் கேட்க முடியல. வரவு செலவு மொத்தமும் சபூரா மாமி கிட்ட இருக்குறத தெரிஞ்சதும் தன் வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டாரு." என நிறுத்தியவன் சாச்சா.... இனிமே நடந்ததை நீங்க சொன்னா தான் சரியா இருக்கும்" என்றான்.

முள் மீது நிற்பதை போல நெளிந்த காசிம் வேறு வழியின்றி உண்மைகளை போட்டு உடைக்கலானார். அவர் பேச பேச சபூராவின் மனதில் வேதனை நிறைந்த அன்றைய நாட்கள் காட்சிகளாய் ஓட துவங்கியது.

" யாரை கேட்டு 50000 பணத்தை தூக்கி கொடுத்தீங்க நசீர் பாய்?" கோபமாக கேட்டார் சபூரா.

" அது வந்து லாத்தா..... காசிம் பாய் உங்க வீட்டு மருமகன். அவரு கேட்டு நா எப்படி மறுக்குறது? அவரு உங்க கிட்ட பேசிக்கிறேன் னு சொன்னாரு..‌" நெற்றியில் துளிர்த்த வேர்வையை துடைத்தபடி கூறினார் அந்த காசாளர்.

" யாராயிருந்தாலும் இனிமே என்னை கேட்காம நயா பைசா கொடுக்க கூடாது. இதுவே கடைசியா இருக்கட்டும்" என எச்சரிக்கை செய்து அனுப்பினார் சபூரா. காசிமின் இந்த செய்கை சிறிதும் பிடிக்கவில்லை சபூராக்கு. ஏற்கனவே திருமணம் முடிந்த சிறிது நாளிலேயே பிரச்சனையோடு வந்திருக்கும் தங்கையை நினைத்து கவலைபட்டு கொண்டிருக்கும் அமீரிடம் கூற விருப்பமில்லாது காசிமை அழைத்து கேட்டு முதல் தவறை செய்தார் சபூரா.

" அது வந்து லாத்தா... என் நிலைமை உங்களுக்கே தெரியும். என் காகாங்க என்னை ஏமாத்திட்டாங்க. கோர்ட்ல கேஸ் போட்டு தான் என் பங்கை வாங்கனும். கேஸ் நடத்த கூட கையில காசு இல்ல... அமீர் மச்சான் கிட்ட கேட்க சங்கடமா இருக்கு." என்ற காசிமை பரிதாபமாக பார்த்தார் சபூரா.

" உங்க நிலைமை புரியுது தம்பி. நா வேணும்னா மச்சான் கிட்ட பேசுறேனே"

" அச்சச்சோ.... வேண்டாம் லாத்தா. அது எனக்கு கவுரவமா இருக்காது. ஏற்கனவே மாமியார் வீட்டில வந்து தங்கியிருக்கோமே னு உளைச்சலா இருக்கு." என நல்லவரை போல் நடித்தார் காசிம்.

" அப்படியெல்லாம் நினைச்சி கவலைபடாதீங்க தம்பி. எல்லாம் தற்காலிகமா தானே. கண்டிப்பா கேஸ் உங்க பக்கம் தான் ஜெயிக்கும். எந்த தைரியத்தில உங்க காகாங்க உன் பங்கை தர மாட்டேன் னு சொல்றாங்க னு எனக்கு புரியவேயில்ல." என வெள்ளையாய் பேசும் சபூரா அன்று காசிம் கண்களுக்கு இளிச்சவாயாக தான் தெரிந்தார்.

தொடர்ந்து வந்த நாட்களில் காசிம் அடிக்கடி ஏதாவது காரணம் சொல்லி பணம் கேட்க சபூராவுக்கு தர்மசங்கடமானது. அமீரிடம் கூறினால் காசிமை அவமானப்படுத்தியதை போல ஆகிவிடுமே என அமைதி காத்தார். ஒரு நாள் காசிமிடம் வழக்கு குறித்து விசாரிக்க, அவர் மழுப்பிய விதத்தில் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தார் சபூரா.

இதற்கிடையில் தங்கையின் திருமணத்திற்காக முபாரக் கொடுத்த நிலத்தினை விற்க ஏற்பாடு செய்தார் சபூரா. அது விஷயமாக ஒருவரை காண செல்லும் போது தான் காசிம் ஒரு ஓட்டு வீட்டிலிருந்து வெளியே செல்வதை பார்த்தார். காசிமின் மீது சந்தேகம் மேலும் மேலும் வலுத்தது. ஆனால் என்ன ஏதேன்று தெளிவாக விசாரிக்காமல் வீட்டில் இதை பற்றி பேசினால்‌ தேவையற்ற பிரச்சனை தான் வரும் என யோசித்தவர் யாரிடமும் தன் எண்ணங்களை பற்றி பகிரவில்லை. ஜமீலா வீட்டு திருமணத்திற்கு அனைவரும் செல்ல அந்த நேரத்தில் தன் இடத்தை விற்க ஏற்பாடு செய்தவர் காசிமை பற்றியும் விசாரிக்க ஏற்பாடு செய்தார்.

அவர் சந்தேகித்தது போலவே காசிம் எந்த வழக்கும் தொடுக்கவில்லை. சபூராவிடம் வாங்கிய பணத்தை எல்லாம் குடி, சூது, சீட்டாட்டம் என பல தீய வழிகளில் செலவிட்டிருக்கிறார் என தெரியவர கொதித்து போனார் சபூரா. ஆனால் காசிம் அஸ்மாவை மணம் முடிக்கும் முன்னரிலிருந்தே ஒரு பெண்ணோடு தொடர்பில் இருக்கிறார் என்ற விஷயம் தான் அவரை முற்றிலுமாய் நிலைகுலைய செய்தது. திருமணம் முடிந்து ஆறு மாதங்களே ஆன, தாம்பத்யத்தின் சூட்சூமம் கூட இன்னும் அறிந்திடாத அஸ்மாவை எண்ணி பெருந்துயர் கொண்டார்.

தற்செயலாக காசிம் மீண்டும் வக்கீலுக்கு பணம் கொடுக்க வேண்டும் என வர, அவரை பிடிபிடியென பிடித்துவிட்டார் சபூரா. காசிமின் முகம் வெளிறியது. இனி தன் வாழ்க்கையை மாமியார் வீட்டிலேயே கழித்துவிடலாம். லாபம் கொழிக்கும் இந்த கடையில் மருமகன் என்ற சலுகையோடு நுழைந்து தன் உல்லாச வாழ்க்கையை தொடரலாம் என்ற அவரது ஆசையில் ஒரு கூடை மண்ணை வாரிக் கொட்டினார் சபூரா.

அத்தோடு நிற்காமல் காசிமின் காகாகளுக்கு போன் செய்து நியாயம் கேட்க, அவர்களோ "இனி எங்களுக்கும் அவனுக்கு எந்த உறவும் இல்லை. நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை" என்று கூறிவிட சபூராவிற்கு வந்தே கோபம்.

" நீங்க எல்லாரும் தானே முன்னே நின்று இந்த கல்யாணத்தை நடத்தி வச்சிங்க. இப்போ இப்படி விட்டேத்தியா பேசுறது என்னங்க நியாயம். அஸ்மாவோட வாழ்க்கைக்கு என்னங்க பதில்? உங்க தம்பி யோக்கியதை தெயிஞ்சும் எப்படி நீங்க கல்யாணம் பண்ணி வைக்கலாம்" என கத்திவிட்டார்.

" எனக்கு உங்க கஷ்டம் புரியுதுங்க. ஒரு கால்கட்டு போட்டாலாவது அவன் திருந்துவான் னு நினைச்சி தான் இந்த கல்யாணத்தை பண்ணி வச்சேன். ஆனா அவன் மாறவேயில்லைமா. பொண்டாட்டி வந்த பிறகாவது ஒழுங்கா இருடா னு கண்டிச்சி, தேவைக்கு மட்டும் தான் பணம் தருவேன் னு சொன்னேன். உடனே சண்டை போட்டுட்டு கிளம்பிட்டான். போகும் போது என் கடையில கஞ்சாவ வைச்சிட்டு போலீஸூக்கு தகவல் கொடுத்துட்டு போயிட்டான். அந்த கேஸுலேந்து வெளிய வரத்துக்குள்ள எங்களுக்கு போதும் போதும் னு ஆயிடுச்சு மா. இனி அவன் இருக்குற திசை பக்கம் கூட தலை வச்சி படுக்கமாட்டோம்" என விட்டு கழண்டு கொண்டனர்.

சபூரா இடத்தை விற்ற சென்ற நாளன்று காலையில் கடைக்கு வந்த காசிம் சபூரா இல்லாததை கவனித்தார். வீட்டில் கடைக்கு செல்வதாக கூறியதையும் கவனித்திருந்தார். ரசியாவிற்கும் சபூராவிற்கும் இடையிலான கருத்து வேறுபாட்டை மனைவி மூலம் தெரிந்திருந்தவர் சபூரா இல்லாத இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி கொண்டார். ஆடிட்டரை கையில் போட்டு கொண்டு வேன்டுமென்றே சபூரா கடைக்கு வராததை ரசியாவிற்கு தெரியபடுத்தினார்.

இடத்தை விற்ற காசோடும், கனத்த மனதோடும் வீடு வந்து சேர்ந்தார் சபூரா. கமர் ஊரிலிருந்து வந்ததும் நடந்தை எல்லாம் கூறி காசிமிற்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று சபூரா நினைத்திருக்க, ரசியா அன்றிரவு இழுத்த சண்டையை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.‌ ஏற்கனவே காசிமை ரசியா தான் தேர்ந்தெடுத்தார் என கடுப்பில் சபூரா கத்த, ரசியாவோ சபூராவை பற்றி காசிமிடமே தரக்குறைவாக பேசிக் கொண்டிருந்தார். காசிமோ சபூராவிற்கு சாதகமாக பேசிக் கொண்டிருந்தார். உண்மையில் சாதகமாக பேசுவதை போல பேசி இன்னும் ரசியாவின் கோபத்தை தூண்டிவிட்டார்.

சபூராவிற்கு கடுங்கோபம் பிறந்தது. காசிமை பற்றி புட்டு புட்டு வைக்க துடித்த மனதை அரும்பாடு பட்டு அடக்கினார். இப்போதுள்ள மனநிலையில் ரசியா கண்டிப்பாக தான் கூறுவதை காதை கொடுத்து கேட்க மாட்டாள் என்பதை உணர்ந்த சபூரா எதுவும் பேசாமல் தந்தை வீட்டிற்கு கிளம்பி விட்டார். அவருக்கு இன்னும் காசிம் பற்றிய உண்மைகளை ஆராய வேண்டி இருந்தது. இங்கே இருந்தால் ரசியா சண்டை போட்டு கொண்டே இருப்பார் என நினைத்து கிளம்பிவிட்டார்.

அவர் கிளம்பவும் காசிம் பின்னோடு வந்து எள்ளலாக அழைக்க, அவரை உறுத்து விழித்தவர்," இனி உன் ஆட்டம் செல்லாது...." எனவும் நக்கலாக சிரித்தார் காசிம்.

சபூரா வீட்டிற்கு வந்ததும்," அவசரப்பட்டுட்டீயே சபூராமா.... கோபப்பட்டு வீட்டை விட்டு வந்தது தப்புமா... இனி ரசியா காலத்துக்கும் இதையே தான் சொல்லி காட்டுவா...." என்றார் தந்தை தஸ்தகீர் வருத்தமாக.

" வாப்பா இப்போ பிரச்சனை அது இல்லை..." என்றவர் காசிம் பற்றின உண்மைகளை கூற ஆடி போய்விட்டார் மனிதர்.

" சை.... போயும் போயும் ஒரு பொறுக்கி பயலுக்கு பொண்ணு கொடுத்து வச்சிருக்கீங்க... கல்யாணத்துக்கு முன்னாடி விசாரிக்கலயா...." என்றார் கோபமாக.

" வாப்பா.... ரசியா தான் அந்தாள பார்த்து தேர்ந்தெடுத்தா.... நானும் மாமியும் எதுலயும் பெருசா கலந்துக்கலயே... ஜமீலா லாத்தா பத்தி உங்களுக்கே தெரியும். அவங்களுக்கு வீட்டை தவிர வேற ஒன்னும் தெரியாது... அமீர் மச்சானும் ரசியா சொன்னதும் சம்மதிச்சிட்டாங்க.... ப்ச்... இப்போ என்ன வாப்பா செய்றது. அஸ்மா புள்ள மாட்டிக்கிட்டாளே... " என பதறினார் சபூரா.

" இவ்ளோ பிரச்சனைய வச்சிகிட்டு இப்போ எதுக்குமா கிளம்பி வந்தே...."

" ப்ச்.... அந்த பொறுக்கி ரசியாவ நல்ல தூண்டி விடுறான் வாப்பா. இந்த ரசியாவும் யோசிக்காம சண்டைக்கு நிற்குறா. அவளுக்கு ஏன் தான் என் கண்டாலே பிடிக்க மாட்டுகுதோ தெரியல... மாமி வந்ததுக்கப்புறம் போய் விவரமா பேசிக்கிறேன் வாப்பா. அந்த ஈன பயல பார்த்தாலே கோவம் கோவமா வருது. அஸ்மாவ ஏமாத்த எப்படி தான் மனசு வந்ததோ தெரியல. அதுவுமில்லாம அவனை பற்றி கொஞ்சம் விசாரிக்க வேண்டியதிருக்கு. எல்லா வேலையையும் முடிச்சிட்டு மாமி வந்ததும் அவன் முகத்திரைய கிழிக்கிறேன்." என்ற சபூராவிற்கு பாவம் காசிமின் சுயரூபம் எத்தனை கோரமாய் இருக்கும் என தெரியவில்லை.

மறுநாள் காசிமின் முகத்திரைய கிழிக்க சபூரா திட்டமிட, அவன் திட்டத்தை முறியடிக்கும் சதியை இரவு தீட்டிவிட்டான் காசிம். பின்னே அவனுக்கு இது வாழ்க்கை போராட்டம் ஆச்சே.... சபூரா முந்திக் கொண்டால் தன் மொத்த வாழ்க்கையும் ஆட்டம் கண்டுவிடும், ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வரும் வரை தான் தனக்கு அவகாசம் என்பதை உணர்ந்தவனுக்கு உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என தோன்றியது.

முதல் வேலையாக சபூராவுக்கும் ரசியாவுக்கு சிண்டு முடித்து விட்டது நல்ல பலனை தர, இரண்டு பேரின் மனநிலையை துல்லியமாக புரிந்து கொண்டான் காசிம். ரசியாவுக்கு சபூரா மேலிருக்கும் மலிவான எண்ணங்கள் அவனுக்கு பேரானந்தத்தை தந்தது. ஆனால் இரவு உணவின் போது ரசியாவின் அமைதியும், குற்றவுணர்வு தாங்கிய முகமும் கண்டு அவன் மூளைக்குள் மணி அடித்தது.

இருவரும் மனம் விட்டு பேசிவிட்டால் பின் தன் குட்டு வெளிபட்டு விடும் என்று நினைத்தவன் விடியற்காலையில் ரசியா கிளம்பி செல்வதை பார்த்து தன் திட்டத்திற்கு அவரை பகடை காயாய் பயன்படுத்தி கொண்டான்.

- மழை வரும்....

தங்கள் கருத்துக்களை எதிர்நோக்கும்

- பர்வீன்.மை
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
அருமை 👌👌👌👌👌, ரசியா, சபூரா பற்றி தெரிந்து கொண்டு இருவருக்கும் இடையில் தன் குள்ளநரி தந்திரத்தை செய்யல் படுத்தி இருவரையும் பிரித்து விட்டான் காசிம், இது தெரியாமல் ரசியா இத்தனை ஆண்டுகளாக சபூ மேல் விரோதத்தை வளர்த்து கொண்டார் இப்ப காசிம் வாயாலே உண்மை தெரிந்து விட்டது இனி 🤭🤭🤭🤭🌺🌺🌺
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top