• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 57(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
காதல் அடைமழை காலம் - 57(1)

காசிம் சபூராவை கலக்கமாக ஏறிட, சபூராவோ நிமிர்ந்து அவனை நேருக்கு நேராக பார்த்தார்.

அன்று தனக்கு நேரெதிராக நின்ற போது அவரது கண்களில் எத்தனை நிமிர்வும் உறுதியும் தெரிந்ததோ அதே நிமிர்வும் உறுதியும் இன்றும் தெரிந்தது. கால ஓட்டத்தால் உடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் அவரது பார்வையின் தீட்சண்யம் மாறவேயில்லை. தொண்டையில்‌ கிளம்பிய வார்த்தை உதடுக்கு வருவதற்கு முன்பே உலர்ந்து‌ போனது.

அவன் பேச போவதில்லை என்பதை உணர்ந்தவர், "காசிம்...... திருக்குரானில் ஒரு வசனமுண்டு தெரியுமா? நபியவர்களை கயவர்கள் கொல்ல திட்டமிட்ட போது இறைவன் நபியவர்களுக்கு ஒரு செய்தி அனுப்பினான். அதுல ' இறைவன்.... சூழ்ச்சி செய்பவனுக்கெல்லாம் பெரிய சூழ்ச்சிக்காரன் .' னு சொல்லியிருந்தான். அதாவது ஒருவன் இன்னொருத்தனுக்கு எதிரா சூழ்ச்சி செய்தா இறைவன் அவனுக்கு எதிராக சூழ்ச்சி செய்வானாம்.

நபியை கொல்ல வந்த ரெண்டு பேரும் எதிர்பாராதவிதமான ஒருத்தர ஒருத்தர் வெட்டிகிட்டு இறந்து போனாங்க. அந்த மாதிரி என்னை சூழ்ச்சி செய்து வீட்டை விட்டு துரத்தி விட்டே.... ஆனா ஆண்டவன் உன்னை வைச்சே என்னை இந்த வீட்டுக்குள்ள கொண்டு வந்துட்டான் பார்த்தியா?.... என்ன பாக்குற காசிம்...... அந்த போட்டோவ எனக்கும் ரசியாக்கும் அனுப்புனது நீ தான் னு எனக்கு அப்பவே தெரியும்.... " என்றதும் காசிம் திடுக்கிட்டு பார்த்தான். மன்சூர் தலை கவிழ்ந்து நின்றான்.

" பெண்களோட மானத்தை பகடை காயாக வைச்சி விளையாடுற பழக்கம் உன்னை தவிர அந்த வீட்டுல வேற யாருக்கும் இல்ல காசிம்.... நேத்து நீ விளையாடுன இன்னைக்கு உன் மகன் விளையாடுறான். அவ்ளோ தான் வித்தியாசம்..... என் மகள் னு தெரிஞ்சா நீ என் மகளை மானபங்கம்படுத்துவ.... ரசியா என் மேல உள்ள கோபத்துல சராவ வார்த்தையால காயப்படுத்துவா னு தான் நா அவள ரிதாவோட சிநேகிதியா அனுப்பி வைச்சேன். ஆனா நீங்க ரெண்டு பேரும் மாறவேயில்ல சரா யாரோவ இருக்கும் போதும் கூட அதேயே தான் செய்தீங்க...." என்றவரின் குரல் வேதனையை காட்டியது.

காசிமின் முகம் கறுத்து விட, ரசியாவோ உயிர் வலியில் துடித்தார்.

இப்போது ரசியாவை பார்த்தவர்," இப்போ தெரியுதா ரசியா.... நா ஏன் ஒதுங்கியிருந்தேன்னு? காகாவோட மனைவிய நடத்தை கெட்டவள் னு சொல்றது உனக்கு வேணா சாதாரணமா இருக்கலாம். ஆனா தன் உம்மா நடத்தை கெட்டவள் னு கேள்விபட்டா அது என் பிள்ளைகளுக்கு பேரிடியா இருக்கும். அவங்களால அந்த வலிய தாங்க முடியாது.... நீ திருடினு சொன்னதையே தாங்க முடியாம சரா எப்படி இருந்தா னு பார்த்த தானே? என் பிள்ளைகளுக்கு அந்த வலிய கொடுக்க கூடாது னு நினைச்சேன்" என்றார் கண்ணீர் வடித்தபடி.

இப்போது ரசியா வார்த்தை வற்றிய நிலையில் தோய்ந்திருந்தார்.

" ரசியா.... உன் கிட்ட ஒரே ஒரு கேள்விய மட்டும் கேட்கணும்.... அன்னைக்கு என் அறையிலிருந்து ஒருத்தன் வந்த மாதிரி அஸ்மா அறையிலிருந்து ஒருத்தன் வர்றத பார்த்திருந்தா அப்போ அஸ்மாவையும் சந்தேகம் பட்டிருப்பியா? உன் மனச தொட்டு சொல்லு பார்க்கலாம்.... சராவும் ரிஸ்வியும் நெருக்கமா இருக்குற மாதிரி தெரிஞ்ச போட்டோவ பார்த்தப்ப கூட நீ சராவ தான் குற்றவாளியாக்குனீயே தவிர அப்பவும் உண்மைய தீர விசாரிக்கல. இதுலேருந்து என்ன தெரியுது.... உன்ன பொறுத்தவரை பணக்காரங்க தான் பண்புள்ளவங்க.... ஏழைகள் எல்லாம் கெட்டவங்க. அப்படி தானே..." சபூராவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் குத்தீட்டியாய் ரசியாவின் இதயத்தில் பாய்ந்தது. இத்தனை நாள் எத்தனை பேரிடம் தன் வார்த்தை ஈட்டிகளை எய்திருப்பார்? அவை பூம்மராங் போல இன்று அவரிடமே திரும்பியது.

கணவரின் மார்பில் புதைந்து கதறினார் ரசியா. ரிஸ்வியின் கண்கள் கூட கலங்கிவிட்டது. இத்தனை நாளும் அவனின் மெஹர் அனுபவித்த வலியை இன்று அவன் அனுபவித்தான். உம்மாவை ஒரு கண்ணிலும் தன்னவளை மறு கண்ணிலும் தாங்கியவன் குற்றவுணர்வோடு மெஹரை ஏறிட்டான். தன் அன்னை மீதிருந்த களங்கம் விலகியதில் அவள் முகம் தெளிந்திருந்தது.

அதற்கு மேல் சபூராவின் வார்த்தைகளை கேட்க இயலாமல் ரசியா சபூராவின் கரங்களை பற்றிக் கொண்டார்.

" முடியல மச்சி.... இத்தனை வருஷத்துல உங்கள எத்தனையோ தடவை நா நிற்க வைச்சி கேள்வி கேட்டிருக்கேன். ஆனா இன்னைக்கு நீங்க கேட்கும் போது என் உயிரே வலிக்குது மச்சி.... உங்களோட ஒரு கேள்விக்கு கூட‌ என் கிட்ட பதிலில்ல மச்சி.... உங்க கிட்ட மன்னிப்பு கேட்பதை தவிர என் கிட்ட வேற எந்த விளக்கமும் இல்லை .... த...த... தயவுசெய்து என்னை மன்னிச்சிடுங்க மச்சி." என கதறினார்.

ரசியாவின் கதறலில் இத்தனை நாளாய் அழுத்திக் கொண்டிருந்த பாரம் இறங்கியதாய் உணர்ந்தாள் மைசரா மெஹர். தன் அன்னையின் களங்கம் விலகியதில் உள்ளம் நிம்மதியில் திளைத்திருந்தது.
ஆனால் ரசியாவின் மன்னிப்பை சபூராவால் அத்தனை எளிதாக ஏற்க முடியவில்லை. எத்தனை வருட கண்ணீர்? எத்தனை பெரிய களங்கம்? எப்பேர்ப்பட்ட கொடிய வார்த்தைகள்? அத்தனை எளிதாய் அதனை மறந்திட முடியுமா இல்லை மன்னிக்க தான் முடியுமா? மன்னிப்பை யாசித்து தன் முகம் நோக்கி நிற்கும் ரசியாவை மன்னிக்கவும் முடியவில்லை தண்டிக்கவும் முடியவில்லை.

" நீ.... நீ... அல்லாஹ் கிட்ட மன்னிப்பு கேளு ரசியா..." என்றார் ரசியாவின் கண்களை நேருக்கு நேராக நோக்காமல்.

அவரது கரங்களை இன்னும் இறுக பற்றியவர், " கண்டிப்பா நா ஆண்டவன் கிட்ட மன்னிப்பு கேட்பேன் மச்சி. ஆனா ஒருத்தர் இன்னொருத்தருக்கு தீமை செய்தா பாதிக்கப்பட்டவங்க மன்னிக்கும் வரை அல்லாஹ் மன்னிப்பதில்லையே மச்சி.... நாங்க மார்க்க சட்டம் அது தானே... அதனால நா முதல்ல உங்க கிட்ட தான் மன்னிப்பு கேட்கணும்? என்னை மன்னிப்பீங்களா மச்சி?" என்றார் கெஞ்சலாக.

" மன்னிப்புன்றது வெறும் வார்த்தை இல்லை ரசியா.... உதட்டிலிருந்து வர்றதுக்கு.... அது மனசுலேருந்து வரணும்..... நீ தெரிஞ்சோ தெரியாமலோ செய்த செயல் அவங்க வாழ்க்கையையே புரட்டி போட்டிருக்கு... அதனால சபூரா லாத்தா மன்னிக்கிற வரைக்கும் நீ காத்திருக்கறது தான் நியாயம்" என உணர்ச்சி பெருக்கில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மனைவியை மெல்ல சமன்படுத்தினார் ஆசாத்.

" நா... நா.... ரொம்ப பெரிய‌ அநியாயம் செய்திட்டேங்க.... இந்த காசிமோட திட்டங்கள எனக்கே தெரியாம அழகா நடத்தி கொடுத்திருக்கேன்ங்க.... அய்யோ.... இந்த பாவத்திலேருந்து எப்படி நா மீளுவேன்" என அரற்றிய ரசியாவை கண்டவர்களுக்கு இதயம் கனத்தது. கண்ணால் காண்பதும் பொய்.... காதால் கேட்பதும் பொய்.... தீர விசாரிப்பதே மெய்.‌‌.. ‌என்ற முதுமொழி எத்தனை நிதர்சனமானது.....?

" அழாத ரசியா.... உன்னை கஷ்டபடுத்தணும்னோ காயப்படுத்தணும்னோ பழி வாங்கணும்னோ நா அப்படி சொல்லல ரசியா.... என்னால.... என்னால...." எப்படி விளக்குவது என புரியாமல் தடுமாறினார் சபூரா.

" நீங்க சொல்ல வர்றது புரியுது மச்சி...." என்றார் ரசியா. கணவரின் தேற்றலில் சிறிது தெளிந்திருந்தார். கமருக்கு மகளின் தோற்றம் வருத்தத்தை அளித்தாலும் இனி வரும் காலங்களில் அவர் மிகுந்த பொறுமையுடனும், கனிவுடனும் நடந்துக் கொள்வார் என நம்பிக்கை பிறந்தது. மகளை எழுந்து வந்து அணைத்துக் கொண்டார். வெகு நாளுக்கு பிறகான தாயின் அரவணைப்பில் எல்லையில்லா நிம்மதியையும், நிறைவையும் உணர்ந்தார் ரசியா....

நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த காசிமிற்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்தது. இங்கே அவரை மன்னிக்கவும் யாருமில்லை, தண்டிக்கவும் யாருமில்லை.... யாரும் அவரை ஒரு பொருட்டாவே மதிக்கவில்லை. அழகான பூந்தோட்டத்தின் நடுவே வளர்ந்த ஒரு களையாக இன்று அவர் நீக்கப்பட்டார்.

" என்ன மச்சான்.... இன்னும் என்ன சூழ்ச்சி செய்து சேர்ந்த குடும்பத்தை பிரிக்கலாம் னு யோசிக்கிறீங்களா?" எள்ளலாக கேட்டார் ரியாஸ். காசிம் அமைதியாக நிற்க," நாங்க நினைச்சிருந்தா உங்கள எப்பவோ உண்டுல்ல னு பண்ணியிருப்போம். ஏன்.... இப்போ உங்கள உள்ள தள்ள கூட முடியும். ஆனா அப்படி செய்ய எங்களுக்கு விருப்பமில்லை. ஒவ்வொரு தடவையும் நீங்க தப்பிக்கறது நீங்க செய்ற சூழ்ச்சியினால இல்ல அஸ்மா லாத்தா வால.... அவங்களுக்காக தான் நாங்க அமைதியா இருக்கோம். அது மட்டுமில்லாம நீங்க பண்ண கீழ்த்தரமான வேலைகள வெளியே சொல்லி நீங்க ஊரெல்லாம் பரப்ப நினைச்சத நாங்களே பரப்ப விரும்பல.... ஆனா இன்னொரு முறை விளையாடி பார்க்கலாம் னு நினைச்சா சேதாரம் பெருசா தான் இருக்கும்" என எச்சரித்தார்.

அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வெளியே சென்றுவிட்டார் காசிம்.

உள்ளம் சுக்கு நூறாக உடைந்திருக்க, உணர்ச்சி துடைத்த முகத்துடன் எழுந்தான் மன்சூர். " என் வாப்பா செய்த தப்புக்கு மன்னிப்பே கிடையாது. சை... அந்தாள என் வாப்பா னு சொல்ல கூட கூசுது. அத விட அந்தாளோட சேர்ந்து நானும் கெடுதல் செய்த நினைச்சா ரொம்ப ரொம்ப அவமானமா இருக்கு. முடிஞ்சா என்னை எல்லாரும் மன்னிச்சிடுங்க. இன்ஷா அல்லாஹ்( இறைவன் நாடினால்).... இதுக்கப்புறம் நா நம்ம குடும்பத்துக்கு உண்மையாவும் பாதுகாப்பாவும் இருப்பேன்" என்ற பேரனை ஆதுரமாக தட்டி கொடுத்தார் கமர்.

ரிஸ்வியிடம் வநதவன்," காகா... நா மச்சி கிட்ட பேசலாமா?" என கேட்டான்.

" தாராளமா பேசு மன்சூர்."

" மச்சி.... நா.... நா.... உங்கிட்ட ரொம்ப தரங்கெட்ட தனமா நடந்துகிட்டேன். உங்களுக்கு கெடுதல் செய்யும் போது உறுத்தாத மனசு என் உம்மாக்கு கெடுதல் நடந்தது தெரியும் போது பதறுது. நா‌ செய்த விஷயம் உங்கள எவ்வளவு பாதிச்சிருக்கும் னு இப்போ புரியுது மச்சி. என்னை மன்னிச்சிருங்க மச்சி..." என்றான் மனதார.

" மன்சூர்.... நீ என் மேல விருப்பப்பட்டது தவறில்ல ஆனா அதே விருப்பம் என்கிட்டயும் வந்தேயாகணும் னு நினைச்சது தான் தப்பு. உன்னுடைய விருப்பம் மறுக்கபட்டதும் உனக்கு கோபம் வந்தது கூட சரி தான். ஆனா அத நீ நேருக்கு நேரா காட்டியிருக்கணுமே தவிர இப்படி என் நன்நடத்தைய சிதைச்சி முதுகுல குத்த கூடாது" எனவும் அவன் தலைகவிழ்ந்து நின்றான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top