• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 59(1)(final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
காதல் அடைமழை காலம்-59(1)
இறுதி அத்தியாயம்

" திருச்சி மாநகரை சேர்ந்த மர்ஹூம்(காலஞ்சென்ற) ஜனாப்(திரு).அப்துல் ஹம்ஸா -ஜனாபா(திருமதி). கமரூன்னிஸா ஆகியோரின் பேத்தியும்,ஜனாப். தாமிர் ஆசாத்- ஜனாபா. ரசியா சுல்தானா ஆகியோரின் மகனுமாகிய தீன்குலச்செல்வன். ஜிஷான் ரிஸ்வி ஆகிய நீங்கள்...... திருச்சி மாநகரை சேர்ந்த (மர்ஹூம்)ஜனாப்.அப்துல் ஹம்ஸா- கமரூன்னிஸா,(மர்ஹூம்)ஜனாப். தஸ்தகீர் ஆகியோரின் பேத்தியும் (மர்ஹூம்) ஜனாப். முபாரக் அலி - ஜனாபா. சபூரா பேகம் ஆகியோரின் தீன்குலச்செல்வி. மைசரா மெஹர் என்ற பெண்ணை அவர் கேட்டபடி பிரிந்திருக்கும் குடும்பத்தை ஒன்று சேர்க்கும் உண்மையை கண்டுபிடித்து அதையே மஹராக கொடுத்து அவரை மனைவியாக ஏற்றுக் கொள்ள சம்மதமா?

" சம்மதம்.அல்ஹம்துலில்லாஹ்...." ( எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே)

உறவுகள் சூழ்ந்திருக்க, ஜமாஅத்தார் முன்னிலையில் ரிஸ்வி- மெஹர் திருமணம் நடைபெற்று கொண்டிருந்தது. சம்மதம் கூறியதை தொடர்ந்து ஜமாத்தாரால் கொடுக்கப்பட்ட நிக்காஹ் புத்தகத்தில் கையொப்பமிட்டு தன் மனதை திருடிய மெஹரை அதிகாரபூர்வமாக மனைவியாக ஆக்கி கொண்டான் ரிஸ்வி. நிக்காஹ்(திருமணம்) வை நடத்தி முடித்த ஜமாஅத்தார் ரிஸ்வியை ஆச்சரியமாக ஏறிட்டனர்.

" பொதுவா நகையோ பணமோ தானே மஹராக கொடுப்பாங்க தம்பி.... ஆனா நீங்க வேற எதையோ குறிப்பிட்டிருக்கீங்களே...." என்றார் ஜமாஅத்தாரில் ஒருவர் கேள்வியாக.

" அது..... என்னோட வருங்கால மனைவி இதை தான் என் கிட்ட மஹரா கேட்டாங்க. அதனால அதையே நானும் கொடுத்திட்டேன். அந்த உண்மையை பற்றி சுருக்கமா எழுதி நிக்காஹ் அனுமதி கடித்ததில இணைச்சிருக்கோம்" என்றான் ரிஸ்வி நிமிர்வாக.

" ஆச்சரியமா இருக்கு தம்பி.... இந்த காலத்தில முதல்ல யாரும் பெண்ணை மஹர் கேட்கவே விடுறதில்ல.... அதே மாதிரி எந்த பெண்ணும் இப்படி ஒரு மஹரையும் கேட்க மாட்டாங்க. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப காலம் சந்தோஷமா, அல்லாஹ்வோட கிருபையோட குழந்தை செல்வங்களை பெற்று சீரும் சிறப்புமா வாழ நான் துவா(பிராத்தனை) செய்றேன்" என‌ உளமார வாழ்த்தினார்.

அவர் மட்டுமல்ல வந்திருந்த அனைவருமே இவர்களின் மஹரை கண்டு வியந்து மனமார வாழ்த்தினர். மஹரை பற்றியும் இஸ்லாமிய திருமண முறை பற்றியும், ஜமாஅத் பற்றியும் ஏற்கனவே 31(2), 37(1) மற்றும் 54(1) எபிசோடில் எழுதியிருக்கிறேன். புரியாதவர்கள்/ மறந்தவர்கள் அங்கே படித்துக் கொள்ளலாம் வாசக நட்புகளே.....

மணமகனின் சம்மதத்தை கேட்டறிந்த ஜமாஅத்தார் அடுத்து மணமகளின் பகுதிக்கு சென்றனர். அவர்களின் வருகையறிந்து இளவயது பெண்கள் சிட்டாக பறந்து மறைய, மணப்பெண் அருகே வயது முதிர்ந்த பெண்மணிகள் நிறைவாக முக்காட்டிட்டு அமர்ந்திருந்தனர். மணமகனிடம் கேட்டது போலவே மணப்பெண்ணிடமும் சம்மதம் கேட்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் ரிஸ்வி தன்னிடம் காதல் கேட்கும் போதெல்லாம் மனதை அழுத்தும் இமாலய பாரம் இப்போது சுத்தமாய் இறங்கியிருக்க, நாணமும் உவகையும் குழைத்து பூசிய முகம் அன்றலர்ந்த மலர் போல் விகசிக்க, " சம்மதம்" என்ற ஒன்றை வார்த்தையில் தன் காதல் மனதை திறந்தாள் மைசரா மெஹர்.

மருதாணியிட்ட கையினால் தன் மனதை கையொப்பமாய் வரைந்து, ரிஸ்வியை தன் கணவனாய் நிறைவான மனதோடு அங்கீகாரித்தாள். உறவுகள் யாவருக்கும் பேரானந்தம். பிரிந்திருந்த குடும்பம் மட்டுமல்ல தவிந்திருந்த மனங்களும் அங்கே சுகமாய் சங்கமித்தது.

நிக்காஹ் முடிந்த கையோடு ரசியா தன் மருமகளுக்கு பத்து பவுனில் தங்க ஆரத்தை அணிவித்தார்.

" மாமி..... நான் தான் மஹர் வாங்கிட்டேனே" என தயக்கமாய் மெஹர் கேட்க,

" இது மஹர் இல்ல... என் பப்ளிமாஸுக்கு.... என் வீட்டு மூத்த மருமகளுக்கு நான் கொடுக்குற அன்பளிப்பு" என கூறி மெஹரின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டார் அந்த மாமியார்.

பின் அழகிய வடிவமைப்பில் கற்கள் பதித்த தங்க வளையல்களை யாஸ்மினுக்கு அணிவித்து," ஒரு மாமியா உனக்கு நான் எவ்வளவோ செய்திருக்கனும். அதுக்கு இது ஒரு தொடக்கம்" என கூறவும் அவரை நேசத்தோடு கட்டிக் கொண்டாள் யாஸ்மின்.

ஆனந்த கண்ணீரில் தத்தளித்த கமர் பேத்தியை உச்சி முகர்ந்தார். சபூரா மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார். கணவர் இல்லையே என்ற துக்கம் மனதின் ஒரு ஓரத்தில் அரித்துக் கொண்டிருந்தாலும் தன்னுடைய உரிமையும், உறவுகளும் தன்னிடமே மீண்டுவிட்டதில் மனம் நிறைந்திருந்தார். நடந்து விட்ட எதையும் மாற்றியமைக்கும் வல்லமை இல்லை என்றாலும் இனி நடக்கப் போவதை நல்லதாக்கி விட வேண்டும் என்ற நம்பிக்கையோடும் முனைப்போடும் முகம் கொள்ளா சிரிப்புடன் வலம் வந்தார் ரசியா. இத்தனை நாளாய் ஊருக்கும் உறவுக்கும் பயந்து அயோக்கியனுக்கு மனைவியாய் வாழ்ந்து, இன்று அவனை துச்சமென தூக்கி போட்டு விட்டு நிமிர்வோடு அமர்ந்திருந்தார் அஸ்மா. வெகு காலத்திற்கு பிறகு தன் தமக்கையின் வாழ்வில் வசந்தம் வீசுவதை சந்தோஷமாக பார்த்து கொண்டிருந்தார் சபூராவின் ஒரே உறவான தங்கை ஹாஜிரா.

ஜமாஅத்தாரோடு ஒட்டிக் கொண்டு வந்த அயான் தன் விழிவலையை கூட்டத்தில் வீச, அவன் தேடிய புள்ளி மான் பட்டு சேலையில் கிட்டி, அவனை ஒரேயடியாக வீழ்த்திவிட்டது.

" பட்டுசேலையில கல்யாண பொண்ணு மாதிரி தெரியுற ரிதா. பேசாம இரண்டு கல்யாணத்தையும் ஒன்னா வைச்சிருக்கலாம்..." என அங்கிருந்த படியே குறுஞ்செய்தியில் குறும்பு பேசினான்.

அவனது செய்தியில் முகம் சிவந்தவள்," இப்போ யோசிச்சி என்ன பண்றது சித்.... இட்ஸ் டூ லேட்..." என பதில் செய்தி அனுப்பி சீண்டினாள் பாவை.

" அதனால என்ன ஜமாஅத் ஆளுங்க ரெடியா இருக்காங்க. நீ 'ம்' னு ஒரு வார்த்தை சொன்னா போதும்" என கண்ணடித்த இமோஜியோடு ஒரு செய்தியை பறக்க விட,

ரிதாவோ சிறிதும் இரக்கமின்றி,' ம்' என அனுப்பி அவனை சோதித்தாள்.

" அடேய்.... ஜமாஅத் ஆளுங்க எல்லாம் போயாச்சி ஸ்டேஜ் ஓரமா நின்னு போன்ல என்னத்த நோண்டிட்டு இருக்குற" ரமீஸ் அடிக்குரலில் கேட்க

ரிதாவில் சோதனையில் உணர்ச்சி குவியலாயிருந்தவன்," மச்சான்.... ரிதாவ இப்போவே கட்டி தாங்க " என கேட்க,

" அடிங்க... காலையிருந்து ஒரு மார்க்கமா தான்டா பேசிட்டு இருக்குற.... வெளிய வா... வெளுத்து விடுறேன்... முதல்ல இடத்தை காலி பண்ணுலே.." என சீறயவன் கையோடு அவனை இழுத்துக் கொண்டு போனான். கிளுக்கி சிரிக்கும் தன்னவளின் அழகை விழிகளில் நிரப்பி கொண்டு அவ்விடம் நீங்கி போனான் அயான் சித்திக்.

இருமனங்களின் சம்மத்தோடு நிக்காஹ் பதிவேட்டில் திருமணம் பதிவு செய்யப்பட்டது. பின் விருந்து உபசரிப்பு ஒரு புறம் தொடங்க, மணமகனை மணப்பெண் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றனர். மெஹரின் தந்தை ஸ்தானத்தில் இருந்து ரியாஸ் அவளது கரத்தை ரிஸ்வியின் கரத்தில் கோர்த்து அவர்களது முதல் தொடுகையை கைக்குட்டை கொண்டு மறைத்து விட்டு துவா செய்தார்.

முதன்முறையாக தீண்டும் ரிஸ்வியின் ஸ்பரிசம் மெஹருள் ஒரு வித சுகமான நடுக்கத்தை தோற்றுவிக்க, தன்னவளின் மலர் கரங்களின் மென்மையோ அவ்வன்மையான கரத்தை வெகுவாக சீண்டி பார்த்தது. அவள் கரத்தில் உணர்ந்த லேசான நடுக்கத்தை தன் சிறு இறுக்கத்தால் அடக்கினான் ரிஸ்வி.

அன்று தங்களின் எதிர்பாரா இரவு சந்திப்பின் முதல் இன்று வரை அவனின் சுண்டு விரல் கூட தன் மேல் பட்டதில்லை என்பதை அந்த முதல் ஸ்பரிசம் அவளுக்கு உணர்த்தியது. மணமகளின் மனம் எங்கும் காதல் சாரல்.

துவா ஓதி முடித்ததும் மணமக்களை மேடையில் ஜோடியாக அமர வைத்தனர். உறவுகள் வாழ்த்தி பரிசளித்த பின் விருந்துக்காக கூட்டம் சிறிது கலைய," சனோ... பொண்ணு மாப்பிள்ளை ய கொஞ்ச நேரம் அந்த ரூம்ல இருக்க வை மா. அவங்க கொஞ்சம் ப்ரெஷ் ஆகிட்டு வரட்டும். டைனிங் ஹால்ல கூட்டம் குறைஞ்சது சாப்பிட அழைச்சிட்டு போவோம்" என்றார் அஸ்மா.

அவ்வாறே செய்த சனோபர் சற்று நேரம் கழித்து வருவதாக கூறிவிட்டு செல்ல, அவர் சென்ற அடுத்த வினாடி கதவை பூட்டி தாளிட்டான் ரிஸ்வி. அவனது அதிரடியில் அதிர்ந்த மெஹர் எச்சிலை கூட்டி விழுங்கினாள். கணவன் தான்..... இதயம் நிறைந்த காதலன் தான்.... ஆனாலும் உறவுகள் வெளியே கூடியிருக்கும் வேளையில் இவன் செய்யும் காரியத்தில் அவளின் இதயமோ படபடவென அடித்துக் கொண்டது.

" இப்போ எதுக்கு கதவை சாத்துனீங்க" என கேட்க நினைத்த வார்த்தைகள் அவனது வருகையில் வாய்க்குள்ளேயே உலர்ந்து போனது.அவன் முன்னோக்கி வந்த வேகத்தில் இவள் பின்னோக்கி செல்ல, சுவற்றில் தட்டி நின்றவளின் பக்கவாட்டில் தன் கரங்கள் கொண்டு அரண் அமைத்தான். அவளது வட்ட கண்கள் விரிந்து தன் அச்சத்தை அறிவிக்க, அதில் கிறங்கியவனோ தன் மூச்சு காற்று அவள் நாசி தொடும் தூரம் நெருங்கி நின்றான்.

" மெஹர்" பொதுவாக வார்த்தைகளை அழுத்தம் திருத்தமாக உச்சரிப்பவன் இவளின் பெயரை மட்டும் வெண்ணெய் தடவி விளிப்பது ஏனோ. அதில் நழுவுவது தன்னவளின் இதயம் என்பதாலா?

அவன் வன்மையான இதழ்கள் மென்மையாக உச்சரிக்கும் தன் பெயரை கேட்டு உருகியவள் அவனின் மூச்சு காற்றின் வெப்பம் தாளாமல் விழிகளை மூடிக் கொண்டாள்.

" மெஹர்.... என்னை பாரு...." தன்னவன் கட்டளையிட்டதும் மலரவளின் விழிகள் மலர்ந்தது.

"நீ.... நீ உண்மையிலேயே என்னை லவ் பண்றியா" ரிஸ்வி கேட்க, சற்றும் எதிர்பாராத கேள்வி என்பதை அவள் நெற்றி சுருக்கி பார்த்த விதத்தில் புரிந்தது.

" இல்ல.... இதுவரைக்கும் நீ உன் லவ்வ சொல்லல... அப்கோர்ஸ்.... எனக்கு தெரியும் நீயும் என்னை லவ் பண்றனு. பட் நீ.... நீ நேரடியா சொல்லயே..... ஒருவேளை நம்ம பிரிஞ்சிருக்க குடும்பம் ஒன்னு சேரனும் னு ஓ.கே சொல்லிட்டியோ னு மனசுல ஒரு ஓரத்தில சின்ன உறுத்தல். இந்த உறுத்தலோட நம்ம வாழ்க்கைய தொடங்க விருப்பமில்லை.சோ.... எனக்கு உண்மை தெரியணும்" தன் மனதின் ஓரத்தில் குறுகுறுக்கும் சிறு உறுத்தலை முன் வைத்தான் ரிஸ்வி.

அவனுள் இப்படி ஒரு தவிப்பு இருப்பதை இதுவரை அறியவில்லை பெண்ணவள். உறவுகளின் சங்கமத்தில் முக்குளித்தவள் தன்னை கண்ட நாள் முதல் காதல் அடைமழையில் நனைந்து கொண்டிருப்பவனை மறந்துவிட்டாள் போலும். தன் காதலை எல்லாம் கண்ணில் தேக்கி ஏக்கமாய் பார்ப்பவனை என்ன சொல்லி மீட்டுவது என எண்ணியவளின் விழிமணிகள் அங்குமிங்கும் நார்த்தனமாட, அதில் ரிஸ்வியின் எண்ண அலைகளோ திருச்சியில் தன் அறைக்கு தவறுதலாக வந்துவிட்ட மெஹர் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. மருண்ட விழி வழியே தன்னை மொத்தமாய் ஆட்கொண்ட தருணமல்லவா அது?

அவளின் விழியசைவையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். என்ன சொல்வது.... எப்படி உணர்த்துவது.... தவிப்பில் அவள்.....

கையில் வைத்திருந்த சிறு அலங்கார பையிலிருந்து ஒரு வெள்ளி ப்ரெஸ்லெட்டை எடுத்தாள் மெஹர். அவர்களின் முதல் தனிமையில் கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தாள். ஆனால் அந்த தனிமை திருமணம் முடிந்து இத்தனை சீக்கிரம் அமையும் என எதிர்பார்க்கவில்லை.

அதை எடுத்து அவனது இடது மணிக்கட்டில் போட்டு விட்டாள் மெஹர். அதில் 'MEHAR'S RIZVI' என நுணுக்கமாக பொரித்திருந்தது. அதாவது அவன் மெஹரின் ரிஸ்வியாம். அவள் அளித்த பரிசில், அதில் தெரிந்த அவளது உரிமையான நேசத்தில் மனம் குளிர்ந்தான் ரிஸ்வி.

அவன் கண்களோடு தன் கண்களை கோர்த்தவள்,"உடம்புக்குள்ள ஒளிஞ்சிருக்குற உயிர் மாதிரி எனக்குள்ள நீங்க நிறைஞ்சு இருக்கீங்க மச்சான்....." என உரைக்க, அவளின் ஒவ்வொரு சொல்லும் அவனின் மன வானத்தில் இடி மின்னலாய் முழங்கி, காதல் அடைமழையாய் வலுக்க, தன்னவளின் மச்சான் என்ற அழைப்பை கேட்ட நொடி தன்னை மறந்தவன் தன் புத்தம் புது மனைவியை இழுத்து இதழோடு இதழ் பதித்தான். அவனின் செய்கையில் அதிர்ந்தவள் இரு கைகளையும் அவன் நெஞ்சில் ஊன்றி தள்ள, ம்ஹூம்.... இம்மியும் நகரவில்லை அந்த ராட்சசன்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top