• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் -59(2)(final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
தன் இதழ் இறுக்கத்தில் அவன் மன இறுக்கம் எல்லாம் தளர, உல்லாசமாய் தன் அணைப்பை இறுக்கினான் ரிஸ்வி. பாவம் இருக்கும் சூழ்நிலை புரிந்து மெஹர் தான் மூச்சு முட்டி தவித்தாள். அவளது மருண்ட விழிகளில் கிறங்கி போனவன் சுற்றம் மறந்து போனான்.

தடதடவென கதவு தட்டப்பட, மெஹருக்கு தூக்கி வாரி போட்டது.சற்று வேகமாக அவனை தள்ள, சத்தம் உணர்ந்து விலகி நின்றான் ரிஸ்வி.

" அய்யோ.... மானம் போச்சு...." என மனதுக்குள் பதறியவள் உல்லாசமாய் தன்னை நோக்கும் கணவனை ஒற்றை புருவம் தூக்கி முறைக்க, அதை ரசித்து வாய் விட்டு சிரித்தான் ரிஸ்வி.

" ப்ச்.... எல்லாம் கிண்டல் பண்ண போறாங்க" அவள் கைகளை பிசைய,

" பண்ணட்டுமே இப்போ என்ன?" என்றவன் மீண்டும் அருகில் வர, அவள் கிட்ட தட்ட அலறி விட்டாள்.

" கூல்.... கூல்.... நெற்றிச்சூட்டியை சரி பண்ண தான் வந்தேன்"

" ஒன்னும் வேணாம். முதல்ல கதவை திறங்க" சிடுசிடுத்தாள் அவள். அதையும் ரசித்தபடி கதவை திறந்தான் ரிஸ்வி.

" என்னடா நடக்குது இங்க?.... பட்ட பகல்ல.... கல்யாண மண்டபத்துல.... வந்தவங்க கூட இன்னும் கிளம்பலயே மாப்ளே.... அதுக்குள்ள இப்படி ரூம்ம லாக் பண்ணா எப்படி?" இடுப்பில் கை வைத்தபடி கேட்டான் ரமீஸ். கூட ஒரு கூட்டமே நின்றிருந்தது. மெஹருக்கு வெட்கம் பிடுங்கி தின்றது.

" அது.... மெஹர் தான் லாக் பண்ண சொன்னா...." என அவன் அந்தர் பல்டி அடிக்க," என்னது......" என அவள் அதிர்ந்து நிமிர்ந்தாள்.

" ரிஸ்வி எப்பவுமே பாஸ்ட் தான். ஆனா நம்ம சரா கூட பாஸ்ட் னு இப்போ தான் தெரியுது." என்று விட்டு நமுட்டு சிரிப்பு சிரித்தாள் மிஸ்பா.

" அடாடாடா.... ஏன் என் பொண்டாட்டிய ஆளாளுக்கு கிண்டல் பண்றீங்க?" என சடுதியில் பொண்டாட்டி தாசன் ஆகி போனான் ரிஸ்வி.

" கொஞ்சம் ரெப்ரெஷ் பண்ணிக்கோங்க னு விட்டுட்டு போன அந்த கேப்ல டூயட் பாடினா இப்படி தான் ஓட்டுவோம்" என்றாள் சனோபர்.

" நாங்க ரெப்ரெஷ் தான் பண்ணிட்டு இருந்தோம்.... ஆமா தானே மெஹர்?" என கேட்டு விஷமமாக பார்க்க, மானசீகமாக தலையில் அடித்து கொண்டாள் மைசரா.

" பொண்ணு மாப்பிள்ளைய சாப்பிட கூட்டிட்டு வாங்க னு அனுப்புனா சொன்னத செய்யாம இங்க என்ன அரட்டை.... எல்லாம் சாப்பிட போங்க...." என ரசியா வந்து ஒரு அதட்டல் போட மெஹருக்கு அப்பாடா என்றிருந்தது.

திருமணம் நல்ல படியாக முடிந்த கையோடு அனைவரும் திருச்சிக்கு கிளம்பினர்.இதில் உற்சாகத்தின் உச்சியிலிருந்தது ரிதா தான். தன் மச்சானும், தோழியாகிய சகோதரியும் இணைந்த மகிழ்ச்சி ஒருபுறம், சபூரா குடும்பத்தோடு இணைந்த மகிழ்ச்சி மறுபுறம் என திக்குமுக்காடி போனாள்.

கிட்ட தட்ட பதினேழு வருடங்கள் கழித்து திருச்சிக்கு பயணமானார் சபூரா‌. அன்று வயதுக்கு வந்த தங்கையோடும், விவரமறியா மழலைகளோடும், வயதான தந்தையோடும் வாழ வழியில்லாமல், தன் உறவுகளையும், உரிமைகளையும் விட்டு விட்டு கண்ணீரோடு வந்த சபூரா இன்று செழிப்பான வாழ்க்கை வாழும் தங்கையோடும், தாயிக்கே தாயான மகள்களோடும்,இழந்து விட்டதாய் எண்ணிய உறவுகளையும், உரிமைகளையும் மீட்டு கொண்டு புன்னகையோடு வந்திறங்கினார்.

அன்று போல் இன்றும் கம்பீரமாய் நின்றிருந்தது கமரின் இல்லம். திருமணம் என்பதால் வீடு முழுவதும் சீரியல் லைட் போட்டு ஜெகஜோதியாக காட்சியளித்தது. முபாரக்கின் மனைவியாக இந்த வீட்டில் காலெடுத்து வைத்தது நினைவில் நிழலாடியது. அதே வீட்டில் தன் மகளும் மருமகளாய் பிரவேசிப்பது அப்படி ஒரு உவகையை தந்தது அந்த தாய்க்கு.

மணமக்கள் வாசலில் வந்து நிற்க சனோபரை ஆரத்தி எடுத்து வர பணித்தார் கமர்.

" சரா மா.... சொன்னது போல உரிமையோட நம்ம வீட்டுக்கு வந்துட்ட...என் மகளுக்கு மருமகளா மட்டுமில்ல என் மருமகளையும் சேர்த்து கூட்டிட்டு வந்துட்டியே..‌‌..கெட்டிக்காரி...." என நாடி பிடித்து கொஞ்சியவர்,"இப்போ ஆரத்தி எடுக்கலாம் தானே..." என சிரிக்க, மனநிறைவோடு புன்னகைத்தாள் மைசரா மெஹர்.

சனோபர் வருவதற்கு முன் ரசியா ஆரத்தி தட்டை எடுத்து வந்தார்.

" என்ன ரசியா.... பொண்ணு மாப்பிள்ளைக்கு நீ ஆரத்தி எடுக்க போறீயா...."

" ஆரத்தி தான் எடுக்க போறேன்மா. ஆனா பொண்ணு மாப்பிள்ளைக்கு இல்ல..." என ஒரு கணம் நிறுத்தி விட்டு," என் மச்சிக்கு...." என்றாரே பார்க்கலாம்...

அனைவரும் வாயை பிளந்து பார்க்க," மச்சி.... என் மருமகள் உள்ள வர முன்னாடி உங்க வீட்டுக்குள்ள நீங்க வர வேணாமா... முதல்ல நீங்க உள்ள வாங்க... யாஸ்மின் எல்லாரையும் கூட்டிட்டு வாமா..." என்றார் ரசியா.

யாஸ்மின் கணவரின் குடும்பம் முதல் முறையாக யாஸ்மின் பிறந்த வீட்டை பார்த்து அதிசயித்து போயினர். முதலில் சபூராவுக்கும், தோள் பற்றி நிற்கும் மகள்களுக்கும், அவரின் மருமகன்கள் மற்றும் பேரனுக்கும் ஆரத்தி எடுத்தார் ரசியா. ரிஸ்வி, சராவை தவிர மற்றவர்கள் உள்ளே வந்து விட, இப்போது சனோபர் மணமக்களுக்கு ஆரத்தி எடுத்தார்.

சபூரா மனநிறைவோடு மகளை பார்த்துக் கொண்டிருக்க,தெருவில் நின்று பார்த்துக் கொண்டிருந்த காசிமை தற்செயலாக கவனித்தார். அவனும் சபூராவை தான் பார்த்துக் கொண்டிந்தான். வீட்டிலேயே அடைந்து கிடக்க முடியாமல் சற்று நேரம் நடந்து விட்டு வந்தவனின் கண்களில் இந்த காட்சி விழுந்திருந்தது.

காலத்தின் தீர்ப்பை இருவரும் படித்து கொண்டனர். காசிம் அமைதியாக அங்கிருந்து நகர்ந்து விட, சபூரா வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்மல்லவா?.....

மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று, பால் பழம் கொடுத்து, வந்த உறவுகளை உபசரித்து, என பரபரப்பாக இருந்தது வீடு.

" அப்புறம் ரசியா..... கொடுத்து வச்சவ தான் நீ... சொந்தத்துக்குள்ளயே ரெண்டு மருமகளையும் பார்த்துட்ட. மாமி... மாமி... ரெண்டு பேரும் தாங்குறாங்க. இனி மகாராணி தான் நீ.... அப்புறம் அயான் கல்யாணம் எப்போ" உறவு ஒன்று கேட்டதில் அந்த பக்கமாய் வந்த அயான் காதை தீட்டி கொண்டு கவனிக்க,

" இன்னும் ரிதா குட்டிக்கு படிப்பு முடிய நாலு மாசம் இருக்கு சாச்சி... அதுக்கப்பிறகு தான் யோசிக்கனும்"

" அப்போ மைசராவும் தானே படிச்சிட்டிருக்கா? "

"ஆமா சாச்சி... ஆனா இப்போ ரிஸ்வியும் சராவும் ரெண்டு பேருமே சென்னையில தானே இருக்காங்க. படிப்பும் கெட்டு போகாதே. அதான் கல்யாணத்த சட்டுபுட்டு னு முடிச்சிட்டோம். அயானுக்கு கல்யாணம் முடிச்சா ரிதா பெங்களூர் வந்திடுவாயில்ல... அப்போ படிப்பு கெட்டு போகுமே அதான் படிப்பு முடியட்டும் னு வையிட் பண்றோம்" என பதிலளித்து விட்டு நகர,

" அடியேய் பெங்களூர்காரி.... நாலு மாசத்துல பேக்கப் பண்ண ரெடியாகுடி..." என ரிதா காதில் முணுமுணுத்து விட்டு போனான் அவளின் சித்.

சபூரா தன் வீட்டை ஆச்சரியமாக பார்த்தார். நிறைய மாற்றங்கள், கூடுதல் அறைகள்.... ஆனாலும் பழைய கம்பீர தோற்றம் சற்றும் குறையவில்லை. கமர் மருமகளை அவரது அறைக்கு அழைத்து போனார்.

பூட்டியிருந்த கதவை திறந்தவர்," இந்தா சபூராமா.... உன் அறைய உன் கிட்டயே ஒப்படைச்சிட்டேன்" என சாவியை அவரது கையில் வைத்தார் கமர்.

உள்ளே சென்ற சபூராவுக்கு பழைய ஞாபகங்கள் அலையாய் பெருகியது. தான் விட்டு சென்ற அதே நிலையில் காணப்பட்டது அவரது அறை. அவர் உபயோகபடுத்திய பொருட்கள், படுக்கை,விட்டு சென்ற துணிமணிகள் எதுவும் இடம் மாறவில்லை. கணகளில் கண்ணீர் சூழ்ந்து காட்சியை மறைத்தது.

" என்ன மாமி.... ரூ.....ரூம் அப்படியே இருக்கு"

" ஆமா சபூரா.... இது உன் ரூம். இங்க இருக்குறது எல்லாம் உனக்கு சொந்தமானது.‌நீ என்ன காரணத்துக்காக இந்த வீட்டை விட்டு போயிருந்தாலும் கண்டிப்பா ஒரு நாள் திரும்பி வருவே னு நா திடமா நம்புனேன். இதோ இன்னைக்கு என் நம்பிக்கை உண்மையாகிடுச்சி. உன்னோட ரூம்ம‌ உன் கிட்டயே ஒப்படைச்சிட்டேன். இனிமே எது எது மாத்தனுமோ அத உன் இஷ்டப்படி மாத்திக்கோ மா...." என்றவரை கட்டிக் கொண்டார் சபூரா.

பின் பீரோவிலிருந்து பணக் கட்டுகளை எடுத்தவர்," இது உன்னோட பணம் சபூரா. நடுவுல‌ ஏதோ ரூவா செல்லாது னு சொன்னாங்கல்ல அப்போ இத பேங்குல மாத்தி வைச்சேன்" என்றார். வார்த்தைகள் எதுவும் வராமல் சமைந்திருந்தார் சபூரா.

" இது நா உனக்கு செய்து கொடுத்த வளையல். ஞாபகம் இருக்கா சபூரா?" என்றவாறை அந்த கற்கள் பதித்த வளையலை மருமகளுக்கு அணிவித்தார் கமர். சபூராவுக்கு தான் எதுவுமே இழக்கவில்லை என்பது போல் தோன்றியது.

" போதும் மாமி.... இவ்ளோ அன்பை என்னால தாங்க முடியாது. உங்கள ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்ல மாமி.... ஆனது ஆகட்டும் னு உங்க கிட்ட வந்திருக்கணும் இல்ல மாமி.... நானும் வைராக்கியமா இருந்திட்டேன்" என கண்ணீர் உகுந்தார் சபூரா.

" அழுததெல்லாம் போதும் மச்சி.... இனிமே நீங்க சிரிச்சிட்டே தான் இருக்கணும்" என உள்ளே வந்தார் ரசியா.சபூரா கைகளில் தவழ்ந்திருக்கும் வளையலை மகிழ்வோடு பார்த்தார்.

" மா..... மச்சி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரட்டும். இனிமே ரெண்டு பேருக்கும் என்ன வேலை ? மாமியாரும் மருமகளும் மாத்தி மாத்தி கொஞ்சிக்கோங்க. இப்போ என் மருமகள கவனிப்போம். வாமா...." என சபூராக்கு தனிமை கொடுத்து தாயை அழைத்து சென்றார் ரசியா. புன்னகையோடு கண்களை துடைத்தார் சபூரா.

அந்த அறை அவருக்கு கணவரோடு வாழ்ந்த நாட்களை எல்லாம் நினைவூட்டியது. கட்டிலில் அமர்ந்து கணவரின் மார்பில் சாய்ந்த காலமெல்லாம் கண்ணில் தோன்றியது. தலையணையில் தலை வைத்தவருக்கு அப்படி ஒரு நிம்மதி. கணவரின் அரவணைப்பு கிடைத்தாற் போன்ற பிரமை. இமைகளை மூடியவரை இதமான துயில் ஆட்கொண்டது.

முதலிரவு அறை.....

இளவட்டங்கள் படுத்தியப்பாட்டில் ஆனந்தமாக அலுத்திருந்தாள் மெஹர். மதியம் ரிஸ்வி செய்த சேட்டை தான் இப்போது ஹாட் டாப்பிக். ரிஸ்வி மேல் செல்ல கோபம் கொண்டிருந்தவள் அவனது வருகைக்காக காத்திருந்தாள்.

அன்று இதே அறையில் அந்நியவளாக நுழைந்தவள் இன்று உரிமையோடு நின்றிருந்தாள். ஜன்னல் வழியே தெரியும் நிலவை ரசித்திருந்தவளை ரசித்தபடி உள்ளே வந்தான் ரிஸ்வி. எப்போதும் கண்ணியமாய் முக்காடிட்டு இருப்பவள் இப்போது ரம்மியமாய் உடுத்தியிருந்தாள். இடை வரை நீண்டிருந்த கார்குழலும், தோள் வரை படர்ந்திருந்த மல்லிகை சரமும் அவனுக்கு அவளை புதிதாக காட்டியது. மெஹரின் முகத்தை தவிர வேறெதும் கண்டதில்லையே அவன்.....

அரவம் உணர்ந்து மெஹர் திரும்பி பாரக்க, மந்தகாச புன்னகையோடு நின்றிருந்தான் ரிஸ்வி. முறைப்பு மறைந்து, ஏக்கம் தணிந்து கனிவான பார்வை வீசி நின்றிருந்தவன் அவளுக்கும் புதியவன் தான். மனதில் நின்ற கோபம் எல்லாம் எங்கோ சென்றிருக்க, இதமான படபடப்பு ஒட்டிக் கொண்டது.

மெல்ல மனைவியை நெருங்கியவன் " உன் கைய பிடிக்கலாமா?" என அனுமதி கேட்க, மெஹரின் ஒற்றை புருவமோ மெல்ல உயர்ந்தது. மதியம் அனுமதி கேட்டு தான் இதழை சிறைபிடித்தானாமா?

" ஆமா.... ஆமா.... சார் எல்லாம் என் கிட்ட அனுமதி வாங்கி தான் செய்றீங்கல்ல..." என முறைக்க, அந்த முறைப்பில் உற்சாகமானான் ரிஸ்வி.

" ஓ... மதியம் மேடம் கிட்ட பெர்மிஷன் கேட்காம கிஸ் பண்ணது கோபமா..."

" அது மட்டுமா பண்ணீங்க.... எனக்கே தெரியாம என்னை போட்டோவும் எடுத்தீங்க தானே?" என கண்ணை உருட்ட,

" ம்.... ரிஸ்வி இதே ரூம்ல இதே பொண்ணு உன்னை பார்த்து விட்டுருங்க னு கெஞ்சுன காலமெல்லாம் இருந்தது.... ம்... இப்போ பொண்டாட்டி ஆனதும் எப்படி மிரட்டுது பார்த்தியா" என தனக்கு தானே புலம்பி கொண்டான் மெஹருக்கு கேட்பது போல.

" நான் மிரட்டுறேனா?"

" பின்ன இல்லையா? இப்படி கண்ணை உருட்டி கேள்வி கேட்டா அப்படி தான் தெரியுது" என்றவன் கட்டிலில் அமர்ந்தான்.

எதுவும் பேசாமல் சற்று நேரம் முறைத்தவள், " எனக்கு அந்த போட்டோவ பார்க்கணும்" என்றாள் அழுத்தமாக.

" எந்த போட்டோ?"

" ப்ச்.... இப்போ எந்த போட்டோவ பற்றி பேசிட்டிருந்தோமோ அந்த போட்டோ"

" எதுக்கு?"

"அப்போ இருந்த டென்ஷன்ல அத பார்க்க பிடிக்கல. இப்போ பார்க்கணும் னு ஆசையா இருக்கு. நீங்க என்னை லவ் பண்ண முதல் தருணமில்லையா அது?" என்றவளை கனிவாக பார்த்தவன் கரம் பற்றி அருகில் அமர செய்தான்.

" ப்ளீஸ்.... காட்டுங்க...."

" ம்.... அந்த போட்டோவ பார்க்கணும்னா நீ என் மனசுக்குள்ள போய் தான் பார்க்கணும்"

" வாட்....?"

" நா அத டெலீட் பண்ணிடேன் மெஹர்.... எல்லாரோட மொபைல்லயிருந்தும்...."

" ஏன் அப்படி? அது நம்ம லவ்வோட ஸ்பெஷல் போட்டோ தானே...?" ஆதங்கமாய் கேட்டாள்.

பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன், " அப்கோர்ஸ்.... அது ஸ்பெஷல் தான். ஆனா அந்த போட்டோ உன்னோட கண்ணியத்த குறைச்சிடுச்சு தானே? அதான் டெலீட் பண்ணிட்டேன். எதுக்காக இஸ்லாம் இத்தனை கட்டுபாடுகள விதிக்குது னு நாம அவமானம் படும் போது தான் புரியுது.இப்போ அது என் மனசுக்குள்ள பசுமையா இருக்குது. அத யாராலயும் களவாட முடியாது." என்றவனை நிறைவோடு பார்த்தாள் மெஹர்.

" சரி.... மதியம் எதுக்காக அப்படி ஒரு கேள்வி கேட்டீங்க? ஏன் என்னை பார்த்தா உங்கள லவ் பண்ணாத மாதிரி தெரியுதா?" என குறைப்பட்டாள் மெஹர்.

" அப்படி இல்லை.... ஆனாலும் ஒரு ஓரத்தில சின்ன உறுத்தல். அன்னைக்கு கல்யாணம் பேசி முடிச்ச அப்புறம் கூட நீ பேசவேயில்லை. உன் வீட்டுக்கு வந்தப்ப கூட கண்டுக்கல" என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு.

" யாரு நான் கண்டுக்கலயா?" என்றவள் தன் அலைபேசியை எடுத்து காண்பிக்க, அதில் கேலரி முழுக்க நிறைந்திருந்தான் ரிஸ்வி. வளைத்து வளைத்து அயான் செல்பி எடுத்ததின் முகாந்திரம் இப்போது புரிந்தது அவனுக்கு.... அது மட்டுமல்லாமல் ரிதா போன்னிலிருந்து வேறு சுட்டிருப்பாள் போலும். சிறு வயது ரிஸ்வி முதல் இன்று காலை அவளை கைபிடிக்கும் முன்பு வரையிலான மாப்பிள்ளை ரிஸ்வி வரை அவனே நிறைந்திருந்தான்.

" கேடி..... எனக்கே தெரியாம இவ்ளோ போட்டோஸ் எடுத்து வைச்சிருக்க...?" வாயை பிளந்தான் ரிஸ்வி.

" ஏன் நீங்க மட்டும் தான் போட்டோ எடுப்பீங்களா மச்சான்? நாங்களும் எடுப்போம்ல" என கெத்து காட்டியவள் கைபேசியை வைக்க எழவும், மனைவியின் கரம் பிடித்து ரிஸ்வி இழுத்ததில் கணவன் மீதே சரிந்திருந்தாள் பெண். அவர்களது முதல் அணைப்பு மனத்துக்குள் சிறு தூறலை கட்டவிழ்க்க, " மெஹர்.... மெஹர்.... மெஹர்...."என சிறு தூறல் சாராலாகி, அச்சாரல் பெருமழையாய் பொழிய துவங்கியது.

தன்னவளை மட்டுமல்ல பெண் என்பவளையே முதன் முதலாக ஆராய தொடங்கியவனின் மன வானில் இனி காதல் அடைமழை காலமே.

- மழை காலம் முடிந்தது.

இதுவரை என் கதைக்கு ரியாக்ட்/ கமெண்ட் மூலம் ஆதரவளித்த, எத்தனை தாமதமானலும் சலிப்படையாமல் படித்த, நான் துவண்ட போதெல்லாம் உற்சாகபடுத்திய அனைத்து வாசக நட்புகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.... எபிலாக் தரலாம் னு ஒரு ஆசை இருக்கு. இரண்டு நாட்களில் தர முயற்சிக்கிறேன்.

என் உடன்பிறந்த சகோதரி,என் முதல் வாசகி, என் நிறை குறைகளை அலசும் விமர்சகர், என் தவறுகளை திருத்த ஆலோசனை கொடுக்கும் குரு, என் மனநிலை தெரிந்தும் எபி கேட்டு காண்டாக்கியே ஊக்கபடுத்தும் திருமதி. ஜீனத் பர்வீனுக்கு என் தலையாய நன்றி.

வழக்கம் போல் தங்கள் கருத்துக்களை எதிர்நோக்கும்....

பர்வீன்.மை
 




Jothijk

புதிய முகம்
Joined
Jul 21, 2018
Messages
18
Reaction score
39
Location
Tuitucorin
Wait panni padichathukku worthy than intha kadhai. Muslims avanga pazhakka vazhakkam pathi romba theliva azhaga solliyirukeenga... Arumaya irrunthathu.. vera vera panbadu ah irunthaalum avanga kaatra paadhai onnuthan... Atha theliva sabura kaasim moolam theriya vechirukeenga... Yella charactersum super yenakku romba pidichathu kamar and ritha yentha soozhnilayilum kamar than marumagal mela vecha nambikkaya izhakkala ippadi patta maamiyaar gal varam...mothathil anbil adaimazhaikaalam yennai avanga anbukku adimai aakkiduchi super sister
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top