• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் சதுரங்கம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
கட்டம் -1


'அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்



அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்



அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன்



அவன் அருளை பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்..ஆஆஆ..."



என்று ரேடியோவில் பி.சுசீலா அவர்களின் தேன் குரல் திவ்யமாக ஒளித்துக்கொண்டிருக்க அந்த வீட்டின் அதிகாலை வேளை செவ்வனே



ஆரம்பித்தது.அதன் இனிய சூழலிலயே தன் சமையல் வேலையை கவனித்துக்கொண்டிருந்த இல்லத்தரசி ரேகா தன் கணவரின் செவிப்பறை



கிழியும் சத்தத்தில் பூவுலகிற்கு வந்தார்.



"இந்த வீட்டில எல்லாருக்கும் காதுன்னு ஒன்னு ஆண்டவன் படைச்சானா இல்லையா?..எவ்வளவு நேரம் தொண்டை தண்ணி வத்துற



அளவுக்கு கத்துறது?."என்று வீடு அதிரும் அளவு கத்த



ரேகா மனதிற்குள் "இந்த மனுஷனுக்கு காபி எல்லாம் கொடுத்துட்டு தானே சமையல் வேலைக்கே வந்தேன்.அப்புறம் எதுக்கு இப்படி



காலையிலயே ஆரம்பிச்சிட்டார்.?"என்று முணுமுணுத்தப்படி கூடத்திற்கு வர



அங்கே அவரின் கணவர் திருவாளர் வெங்கடசுப்பு ரௌத்திர மூர்த்தியாக நின்றிருந்தார்.



ரேகாவிற்கு அவரின் காரணமில்லாத கோபம் எரிச்சலை அளித்தாலும் காலையிலயே வாக்குவாதம் செய்ய மனமில்லாததால்



சற்று பொறுமையாகவே அவரை அணுகினார்.



"என்னாச்சுங்க...என்னனு சொன்னாதானே தெரியும்?..இப்படி காலையிலயே கத்துற அளவிற்கு என்ன நடந்தது?" என்று கேட்க



வெங்கடம் பதில் கூறாமல் முறைக்க, இப்போது எரிச்சலுறுவது ரேகாவின் முறையானது.



"என்னங்க இது..இப்படி தொண்டை கிழியிற மாதிரி கத்திட்டு பதில் பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்? என்று சற்றே கடுமையான



தொனியில் கேட்க



இதற்கு மேல் பிகு செய்தால் தனக்கு மரியாதை இல்லை என்று அறிந்து வெங்கடம் தன் திருவாயை திறந்தார்.



"என்னடி சொல்லணும்?..உன் சீமந்த புத்திரன் தன் மனசில என்ன நினைச்சிட்டு இருக்கான்.?உன் பையனை மாதிரி தேங்காமுரி



வக்கீலுக்கு வரன் அமையறதே பெரிய விஷயம்..இதுல நானா அலைஞ்சு திரிஞ்சு ஒரு பொண்ணை பார்த்து வைச்சா அவங்க வீட்டுக்கு



போய் என்ன பண்ணிட்டு வந்திருக்கானு தெரியுமா?."என்று கேட்க



ஒன்றும் அறியாத ரேகா பேந்த பேந்த விழிக்க அதை பார்த்த வெங்கடம் பல்லை கடிக்க



"என்ன பண்ணினேன்?...பாருடிம்மா..எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமே இல்லை.தேவையில்லாமல் எங்க அப்பா பேச்சை நம்பி உங்க



எதிர்காலத்தை கெடுத்துகாதேம்மான்னு நல்ல புத்திமதி சொல்லிட்டு வந்தேன்.இதில என்ன தப்பு?."என்று கேட்டப்படி நம் கதாநாயகனே



திரையில் (!!) தோன்றினான்.



அதை கேட்டு இன்னும் கோபமுற்றார் வெங்கடம்..ரேகா அதிர்ச்சியுடன்



"என்னடா கார்த்திக் சொல்றே?..நீ போய் இப்படி எல்லாம் பேசினியா?..உனக்கென்ன பைத்தியமாடா?."என்று கேட்க



கார்த்திக்கோ சற்றும் அசராமல் "ஆமாமா...எத்தனை வாட்டி சொல்றது?..எனக்கு பொண்ணு பார்க்காதீங்க..பார்க்காதீங்கன்னு..ஒரு தடவை



சொன்னா புரியாது?..அம்மா..தயவுசெய்து என்னை இதுக்கு மேல் தொந்தரவு பண்ணாதீங்க..எனக்கு 28 வயசாகுது?..எனக்கு எது தேவை எது



தேவையில்லைன்னு எனக்கு தெரியும்.அந்த அளவுக்கு எனக்கு அறிவு இருக்குன்னு நம்பறேன்.ப்ளீஸ் இன்னொரு வாட்டி என்னை இந்த



மாதிரி செய்ய வைக்காதீங்க.":என்று அழுத்தமான ஆனால் தெளிவான குரலில் கூற



தாய் தந்தை இருவருமே ஸ்தம்பித்து தான் போயினர்.



கார்த்திக் என்கிற கார்த்திக்கேயன் 28 வயதான இளம் வக்கீல்..சிறு வயதிலருந்தே தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக



இருந்து தீர்க்கமாக முடிவெடுக்கும் வழமை உண்டு என்றாலும் அதே சிறு வயதிலிருந்தே அவனை நம்பாமல் சந்தேகித்தே வாழ்ந்து



கொண்டிருக்கும் அவன் தகப்பனாருக்கு இதில் முற்றிலும் வழக்கத்திற்கு மாறான ஒன்றாகத்தான் தோன்றியது.இதனால் தான் தந்தை



மகன் இருவருக்கும் எக்காலத்திலும் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டதே இல்லை.ஏதோ ஜெனரேஷன் கேப்... என்பார்களே அந்த பரம்பரை



இடைவெளி இவர்களுக்கு சற்றே அதிகமாக இருப்பதால் இருவருக்குள்ளும் சண்டைக்கு அளவே இல்லை.



இப்படி தினமும் அடித்துக்கொள்ளும் இருவரிடம் இருந்து தன்னையும் பாதுகாத்துக்கொண்டு இவர்களையும் பாதுகாத்துக்கொண்டிருக்கும்



ஒரே ஜீவன் வேறு யார் நம் ரேகா தான்.



இப்படியாக இவர்களின் அறிமுகம் முடிந்துவிட்டதால் நாம் நேராக பிரிச்சினைக்கு போகலாம்.



அவன் பேசியதை கேட்ட வெங்கடம் அவனிடம் பேசாமல் ரேகாவிடம் திரும்பி "எவ்ளோ தைரியம் இருந்தா உன்பையன் இப்படி பேசுவான்?



எல்லாம் சம்பாதிக்கிற திமிர் இவனை இப்படி எல்லாம் பேசவைக்குது."என்று தன் சத்தத்தை கூட்ட



கார்த்திக்கும் பதிலுக்கு "ஏன் எனக்கு திமிர் இருந்தா என்ன குறைச்சல்?..நான் தலையெடுத்ததுக்கு அப்புறம் தான் இந்த வீடு



கொஞ்சமாச்சும் உருப்பட்டிருக்கு.இல்லைன்னு சொல்லுங்க பார்ப்போம்.30 வருஷமா கலெக்டர் ஆபிஸ் கிளர்க்காவே இருந்து



கிளர்க்காவே ரிடையர்ட் ஆகி பிரயோஜனமே இல்லாத வாழ்க்கையையா நான் வாழுறேன்"என்று பதிலடி கொடுக்க



வெங்கடத்திற்கு தலைக்கு மேல் கோபம் பொத்துக்கொண்டு வர ரேகாவை ஒரு தீப்பார்வை பார்க்க



ரேகா இவர்கள் இருவரையும் இதற்கு மேல் பேசவிட்டால் மூன்றாம் உலகப்போரே வந்துவிடும் என்றறிந்து



"டேய்..வாயை மூடுடா..அப்பான்னு ஒரு மரியாதை இல்லாமல் பேசுறே நீ.அவர் இல்லைன்னா நீ இப்போ படிச்சு சம்பாதிச்சிருக்கவே



முடியாது அதை முதலில் ஞாபகம் வைச்சிக்கோ. உனக்கென்ன நாங்க உனக்காக எந்த பொண்ணையும் பார்க்ககூடாது



அதானே..சரிப்பா இனி நாங்க எதுவும் செய்யலை..அதுக்கு போய் வாய்க்கு வந்ததை பேசுறே..போடா போய் வேலைக்கு



கிளம்பற வழியை பாரு "என்று அதட்டுவது போல் அதட்டி தன் கணவனையும் குளிரவைத்து தன் பிள்ளைக்கு ஏற்றாற்போலவும்



நியாயத்தை வழங்கி புத்திசாலித்தனமாக அந்த சூழ்நிலையை அணுகினார் ரேகா.இதனால் அங்கே ஏற்பட இருந்த பூகம்பத்தின்



திவீரம் சற்றே மட்டுப்பட்டது என்றே கூறலாம்.



கார்த்திக் தன் தாயின் அதட்டலுக்கான காரணம் அறிந்தவனே ஆதலால்...தனக்கு சாதகமான செய்தியும் கிடைத்து விட்டப்படியால்



அங்கே நிற்காமல் தன் வேலையை பார்க்க ஆரம்பிக்க



ரேகாவும் வெங்கடத்திடம் திரும்பி "இன்னும் என்னங்க 'பே'னு பார்த்துட்டு இருக்கீங்க..போங்க போய் கடைக்கு போய் காய்கறி கொஞ்சம்



வாங்கிட்டு வாங்க..வீட்டுல ஒரு காய் இல்லை."என்று அவரையும் விரட்டியபடி தன் சமையல் வேலையை தொடர



இப்போது சுத்தமாக குழம்பி நின்றது வெங்கடசுப்பு தான்.



"இப்போ இங்க என்ன நடந்துச்சு...அவன் தான் பொண்ணு பார்க்க வேண்டாம்னு சொன்னானா இவளும் சரின்னுட்டாளே.நம்மக்கிட்ட ஒரு



வார்த்தை கூட கேட்கலையே?..இவ நம்மளுக்கு சப்போர்ட் பண்ணாளா?.இல்லை அவனுக்கு சப்போர்ட் பண்ணாளா?.ஒன்னும்



புரியலையே "என்று புலம்பிக்கொண்டிருக்கும் போதே ரேகாவின் குரல் அதிரடியாக ஒலித்தது.



"ஏங்க இன்னுமா நின்னுட்டு இருக்கீங்க..போங்க கடைக்கு போயிட்டு வாங்க...அடப்போங்கன்னா.."என்று கையில் ஒரு பையை திணித்து



அனுப்ப...தன் விதியை நொந்துக்கொண்டே தன் திருமதிக்காக கடைவீதி சென்றார் வெங்கடம்.



@@@@@@



"டேய்..உனக்கு என்னதாண்டா பிரச்சினை..இந்த வரன் நிஜமாவே நல்ல வரன்..இதை போய் இப்படி கெடுத்திட்டியே?.உங்க அப்பா



கத்துறதுல தப்பே இல்லை."என்று ரேகா இப்போது நடுநிலையாக தன் மகனிடம் தனியாக அவன் மனதை கேட்டறிய



அவனோ சிரிப்புடன் தன் தாயை ஏறிட்டான்.



ரேகா "ஏண்டா நான் பாட்டுக்கு கேட்டுட்டு இருக்கேன்.நீ ஒண்ணும் பேசாமல் சிரிச்சா என்ன அர்த்தம்? நான் என்ன உங்க அப்பாவை



மாதிரி கத்திட்டா இருக்கேன்.மனசு விட்டு பேசணும்னு தானே கேக்குறேன்.சொல்லுடா"என்று கேட்க



கார்த்திக் அதே சிரிப்புடன் "ஏம்மா நான் எத்தனை வாட்டி சொல்றது?.எனக்கு இந்த அரேஞ்ச்டு மேரேஜ்ல நம்பிக்கை கிடையாதுன்னு.



சும்மா போயிட்டு சொஜ்ஜி பஜ்ஜி சாப்பிட்டுட்டு அஞ்சே நிமிஷம் பேசிட்டு அந்த பொண்ணு முகத்தை கூட பார்க்காமல் நிச்சயம்



பண்றதெல்லாம் ஒரு கல்யாணமா சொல்லு.?அது என் வருங்கால மனைவிக்கு பண்ற துரோகம்மா.."என்று வாதாட



ரேகா "ஏண்டா அப்போ லவ் மேரேஜ் தான் பண்ணுவியா?"என்று அழுத்தமாக கேட்க



கார்த்திக் "ஏம்மா லவ் மேரேஜ்ல என்ன தப்பு?."என்று கேட்க



ரேகா "டேய்..ஏண்டா இப்படி பைத்தியம் மாதிரி பேசுறே? உங்கப்பாவுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது கதகளியே ஆடிருவாருடா.



உனக்கு ஏண்டா அரேஞ்ச்டு மேரேஜ்ல இவ்ளோ வெறுப்பு?.:என்று கெஞ்சல் தொனியில் கேட்க



கார்த்திக் "எனக்கு ஏன் இந்த வெறுப்புன்னு உனக்கே தெரியும்மா..?" என்று கூற



ரேகா "என்னடா எனக்கு எப்படி தெரியும்?."என்று புரியாமல் கேட்க



கார்த்திக் "நீயும் அப்பாவும் அரேஞ்சுடு மேரேஜா லவ் மேரேஜா?"என்று கேட்க



ரேகாவுக்கு சட்டென்று யாரோ கன்னத்தில் அறைந்தது போல இருந்தது..அவர் தன் மகனையே வெறித்துப்பார்க்க



கார்த்திக்கோ கையை கட்டிக்கொண்டு அவரையே பார்த்துக்கொண்டிருந்தான்.



பின் "சொல்லும்மா..உனக்கும் அப்பாவும் அரேஞ்சுடு மேரேஜா இல்லை லவ் மேரேஜா?."



ரேகா மெல்லிய குரலில் "இதென்னடா கேள்வி எங்க காலத்துல ஏது லவ் எல்லாம்? அரேஞ்சுடு தான்" என்று கூற



கார்த்திக் மெல்லிய சிரிப்புடன் "அதனால தான்மா எனக்கு அதுக்கு மேல இருந்த நம்பிக்கையே போச்சு.நீயும் அப்பாவும் ஒண்ணா



உட்கார்ந்து சிரிச்சு பேசின நாளே நான் பார்த்ததில்லை.ஒத்த ரசனையோட ஒண்ணா வேலை பார்த்தோ இல்லை சுவாரசியமான



விஷயங்களை பேசியோ நான் பார்த்ததே இல்லை.ஏன் ஒரு நாள் கூட அவர் உன்னை வம்பிழுக்காமல் சண்டை போடாமல் இருந்த



நாளை நான் பார்த்ததே இல்லை.இப்போ சொல்லும்மா உங்களை பார்த்த எனக்கு எப்படி இந்த மாதிரி கல்யாணத்தில் பிடித்தம் வரும்"



என்று கேட்க



ரேகா இப்போது அர்த்தமுள்ள சிரிப்புட அவனை ஏறிட்டாள்.



"அன்பில் நிறைய வகை இருக்கு கார்த்திக்.எல்லாராலும் அன்பை வெளிப்படையாக காட்ட முடியாது.அதுக்கும் நம்ம வரம் வாங்கிட்டு



வந்திருக்கணும்.நீ சொல்ற மாதிரி சில பேர் இருக்கலாம்.ஆனால் இப்படியெல்லாம் இருந்தா தான் அவங்க மனமொத்த தம்பதிகள் என்று



அர்த்தம் இல்லை.அதை புரிஞ்சிக்கோ."என்று அவனுக்கு புரியவைக்க முயற்சிக்க



அவனோ தான் பிடித்த பிடியில் உடும்பாய் இருந்தான்,



"இருக்கலாம்மா..ஆனால் அந்த மாதிரி அன்பை நானறிய உங்க கிட்ட பார்த்ததே இல்லை.என்னால கடனுக்கு ஒரு வாழ்க்கை வாழ



முடியாதும்மா..எனக்கு வரப்போரவ என்னில் பாதியா இருக்கணும்.என் மனசும் அவ மனசும் எல்லா விஷயத்திலும் ஒத்துப்போகணும்.



என் கண்ணோட்டம் என் பிடித்தங்களை எல்லாத்தையும் அவளும் ரசிக்கணும்.இதுக்கெல்லாம் மனசில் காதல் இருந்தால் தான் முடியும்.



அதனால் தான் சொல்றேன் எனக்கு காதல் திருமணம் தான்.இதை உன் மணாளன் கிட்ட சொல்லி சம்மதம் வாங்க வேண்டியது உன்



பொறுப்பு."என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக கூறிவிட்டு தன் அலுவலகத்திற்கு கிளம்பிவிட ,ரேகா சிலையென நின்றார்.



ஒரே மகன் என்பதாலோ என்னவோ ரேகா சிறு வயதிலிருந்து கார்த்திக்கின் எந்த ஒரு நியாயமான ஆசைக்கும் தடையிட்டதில்லை.



அதே போல் அவனும் தன் சுதந்திரத்தை உணர்ந்து தான் இதுவரை இருந்து வந்தான்.ஆனால் இந்த விஷயத்தில் என்னவோ



அவன் சற்றே அதிகமாக முரண்டு பிடிப்பதாக அவருக்கு தோன்றியது.வாழ்வில் நெளிவு சுழிவுகளை தெரிந்துக்கொள்ளாமல்



விட்டுவிடுவானோ என்று அஞ்சினார்.



அவனின் இந்த முடிவுக்கு தானும் தன் கணவரும் தான் காரணம் என்ற எண்ணம் வேறு அவர் மனதை சிறிது காயப்படுத்தியிருந்தது.



பிள்ளைகளின் சில பிடிவாத குணங்களுக்கு,தப்பான கண்ணோட்டங்களுக்கு பெற்றவர்களின் வாழ்வே பல சமயம் காரணமாக இருந்து



விடுகிறது.இதில் ரேகாவின் வாழ்க்கையும் முக்கியமான எடுத்துக்காட்டு.



ஆயினும் மனிதன் என்னதான் கணக்கிட்டு வாழ்ந்தாலும் இறுதியில் முடிவெடுப்பது இறைவன் ஒருத்தனே அல்லவா?.



கார்த்திக்கின் ஆசை நிறைவேறுமா?.இல்லை நிலைதடுமாறுமா?..



பொறுத்திருந்து பார்ப்போம்..



(முதல் நகர்வு முடிந்தது.)
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
கட்டம்- 2




S.K.S LAW FIRM & ASSOCIATES



சென்னை மாநகரின் இருதயபகுதியில் இருக்கும் ஒரு வானளாவிய கட்டத்தின் ஒரு பகுதியில் இருந்தது அந்த அலுவலகம்.



இந்த அலுவலகத்தில் முக்கிய பங்குதாரர் மூவர்...பள்ளி முதல் சட்டக்கல்லூரி வரை ஒன்றாக ஒன்றாக படித்து ஒன்றாகவே வளர்ந்த



மூவர் தான் அது. சரவணன்,கார்த்திக் மற்றும் சுஜிதா ஆகிய மூவர் தான் அது.



இரண்டு வருடங்களுக்கு முன் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அலுவலகம் இப்போது தனக்கென ஒரு நன்மதிப்பை



பெற்றிருப்பதற்கு காரணமும் இந்த மூவர் தான்.



இதில் சரவணனுக்கு திருமணம் ஆகி ஒரு மகளுக்கு இருமாதங்களுக்கு முன் தந்தையாகி இருக்க ,சுஜிதாவிற்கு இன்னும் மூன்று



மாதங்களில் திருமணம் நிச்சயமாகி இருக்க இப்போது அலுவலகத்தில் தனித்து விடப்பட்டிருப்பது நம் கார்த்திக் தான்.



காலை சுமார் 11 மணிப்போல அலுவலகம் வந்தவனை ஆச்சரியத்துடன் எதிர்க்கொண்டான் சரவணன்.



"என்னடா இவ்வளவு லேட்டா வரே..நீ இப்படியெல்லாம் தாமதமா வந்து நான் பார்த்ததே இல்லையே?."என்று கேட்க



அவனை ஒரு முறை முறைத்தான் கார்த்திக்.



அவன் பார்வை புரியாமல் சரவணன் குழம்பிப்போய் "என்னடா முறைக்கிறே?"என்று கேட்க



கார்த்திக் இப்போது நக்கலாக "ஏண்டா இரண்டு மாசத்துல இன்னைக்கு தான் நீ அதிசயமா ஆபிசுக்கே வரே..நீ என்னை சொல்றியா?



அதெல்லாம் நான் ஆபிஸ் டைமிங்க் மாத்தியாச்சு..போ..போய் குழந்தைக்கு குருவி ரொட்டியும் குச்சி மிட்டாயும் வாங்கி கொடு போ"



என்று கூற



சரவணன் அசடு வழிந்தபடி "ஹி...ஹி..அது வீட்ல பாப்பாவை விட்டுட்டு வரமுடியலைடா அதான்."என்று கூற



கார்த்திக் கலகலவென சிரித்து "ஏண்டா பொய் சொல்றே..வீட்ல ஹேமா உருட்டுக்கட்டையை எடுத்துக்கிட்டு வேலை வாங்குறான்னு



சொல்லிட்டு போயேன்.சரி சரி பொழைச்சு போ.."என்று விட்டுவிட



சரவணன் "டேய்..ரொம்ப பேசாதேடா..ஏதோ ரெண்டு நாள் வரலை இதுக்கு போய் ஓவரா பேசுறே?"என்று எகிற



கார்த்திக் "ஹேய்..அடங்குடா..ரெண்டு நாளா ரெண்டு மாசமாகுது நி ஒழுங்கா வந்து..ஆனா என்ன சொல்லு..என் செல்லக்குட்டி சுஜி



மாதிரி சின்சியர் யாருமே வரமாட்டாங்க..இன்னும் மூணு மாசத்துல கல்யாணத்தை நிச்சயம் செஞ்சாலும் அவ தினமும் வருவாடா..



கடமை வீரிடா அவ..அட்டக்காச சுஜி..ஆர்ப்பரிக்கிற சுஜி..சின்சியர் சுஜி..சிறுத்தை புலி..சீ...சுஜி "என்று சுஜிதாவை வாழ்த்தி ஒரு மடலையே



படிக்க அவன் முடிக்கும் முன் அங்கே வந்து சேர்ந்தாள் சுஜி.



அவளை பார்த்த கார்த்திக் "வந்துட்டாய்யா..வந்துட்டாயா..என் தளபதி வந்துட்டாயா..என் உயிர்த்தோழி வந்துட்டாயா.."என்று ஆர்ப்பரிக்க



சரவணன் "இவன் அளப்பறை இன்னைக்கு ஓவரா இருக்கே.."என்று பல்லை கடிக்க



அலுவலகத்திற்கு வந்த சுஜி "என்னடா இன்னைக்கு இவன் அளப்பறை ஓவரா இருக்கு"என்று அதையே கேட்க



சரவணன் வாய்விட்டு சிரிக்க கார்த்திக் இருவரையும் முறைத்தான்.



சரவணன் "அது ஒண்ணுமில்லை சுஜி..வழக்கம்போல நட்டு லூசாகிடுச்சு.ஆமா சுஜி..என்ன கல்யாண வேலை எல்லாம் எப்படி



போயிட்டிருக்கு?."என்று விசாரிக்க



சுஜி "அதை தாண்டா சொல்ல வந்தேன்..ஒரு மூணு மாசத்துக்கு என்னை எதுக்கும் எதிர்ப்பார்க்காதீங்கடா..நான் அப்பப்போ தான் வருவேன்.



தலைக்கு மேல வேலை இருக்கு.இப்போ கூட பாரு என் ஹேண்ட் பேக் விட்டுட்டு போயிட்டேன் அதுக்கு தான் வந்தேன்.இப்போ



உடனே கிளம்பணும்."என்றபடி அவள் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்ப



இப்போது அசடு வழிவது கார்த்திக்கின் முறையானது.



அதை பார்த்த சரவணன் "பேசுடா..இப்போ பேசு..மவனே..நானே இன்னைக்கு பாவம் பார்த்து தனியா கஷ்டப்படுவியேன்னு வந்தா நீ



ரொம்ப ஓவரா பேசுறே..இனி சொல்றேண்டா..என்னையும் மூணு மாசம் எதிர்ப்பார்க்காதே..நானும் அப்பப்ப தான் வருவேன்.நீயே கிடந்து



எல்லா வேலையும் செய் அப்போதான் உனக்கு புத்தி வரும்."என்று அவனும் திட்டிவிட்டு கிளம்ப



கார்த்திக் "அடேய்..அடேய்...ப்ளீஸ் டா..என்னை தனியா தவிக்க விட்டுட்டுப் போயிடாதடா?.."என்று சினிமாவில் வரும் கதாநாயகி போல்



புலம்ப



சரவணன் கெத்தாக "அது அந்த பயம் இருக்கணும் 'என்று மிரட்ட



கார்த்திக்கோ "வர வர எனக்கு நேரமே சரியில்லை..வீட்ல தான் காலையில ஒரு வாய்க்கால் தகராறை இழுத்துவிட்டுக்கிட்டு



வந்தேன்..இப்போ உங்கிட்டயும்..கஷ்டகாலம் டா சாமி "என்று புலம்ப



சரவணன் புரியாமல் "வீட்ல என்னடா பிரச்சினை ?"என்று விசாரிக்க



கார்த்திக் ஒரு பெருமூச்சுடன் "எல்லாம் என்ன கல்யாண பிரச்சினை தான்.உனக்கு தான் தெரியுமே?" என்று எடுத்துக்கொடுக்க



சரவணன் "உங்களோட ஒரே அக்கப்போரா போச்சுடா...வீட்ல பார்க்கிற பொண்ணை தான் கல்யாணம் பண்ணித்தொலையேன்."என்று



அலுத்துக்கொள்ள



கார்த்திக்கிற்கோ கோபம் பொத்துக்கொண்டு வந்தது.



"ஏண்டா..நீயும் லவ் மேரேஜு...இதோ போகுதே ஒரு கழுதை...அதுவும் லவ் மேரேஜு..இப்படி எல்லாரும் ஜாலியா காதலிச்சு கல்யாணம்



பண்ணுவீங்க.நான் மட்டும் பட்டிக்காட்டான் மாதிரி யாருன்னே தெரியாத பொண்ணை கல்யாணம் பண்ணி கஷ்டப்படணும்.நல்லா



இருக்குடா உங்க நியாயம்."என்று கூற



சரவணன் "இதென்னடா அநியாயமா இருக்கு..எங்களுக்கு செட் ஆச்சு..கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.நீயும் லவ் பன்ணா பரவாயில்லை.



சும்மா சீன் போடுறது யாரை கல்யாணம் பண்ணா என்ன?"என்று அவனை சீண்ட



கார்த்திக் " டேய் ஓவரா பேசாதடா..எனக்கென்ன ஆள் கிடைக்காதா?."என்று சீற



சரவணன் சிரித்தப்படி "சரிடா சும்மா வெறுப்பேத்தினேன் டென்ஷன் ஆகாதேடா..கார்த்திக் காதலிச்சு பண்ணாதான் கல்யாணம்னு இல்லை.



ஏன் எங்களுக்குள்ளையே தினமும் ஆயிரத்தெட்டு பிரச்சினை வந்துட்டு தான் இருக்கும்.ஆனால் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிருக்கிறதால



பெரிசா எதுவும் வெடிக்கிறதில்லை.என்று முடிப்பதற்கு முன்



கார்த்திக் "அதான்...அதான் எப்படி புரிஞ்சிருக்கீங்க?..காதலிக்கிறதால் தான்.இதை பாரு சரவணா...நான் எடுத்த முடிவு தான் கரெக்டா



இருக்கும்னு நான் பேசலை.ஏதோ என் மனசில் அப்படி பதிஞ்சு போச்சு.சரியோ தப்போ நான் எடுத்த முடிவிலயே என் வாழ்க்கையை



வாழ ஆசைப்படுறேன்.ப்ளீஸ் என் மனசை மாத்த பார்க்காதீங்க.அவ்ளோதான்."என்று அழுத்தமாக கூறிவிட்டு சென்றவனை



ஒரு பெருமூச்சுடன் பார்த்துக்கொண்டிருந்தான் சரவணன்.



சிறிது நேரம் கழித்து கதவை பட்டென்று திறக்கும் சப்தம் கேட்க,அதிர்வுடன் சரவணன் திரும்பிப்பார்க்க



கதவின் இடுக்கில் வழியே தலையை நீட்டிய கார்த்திக்



"ஹலோ சார்...ஓவர் பீலிங்க்ஸ் உடம்புக்கு ஆகாது..நீங்க இப்படி ஆழ்ந்து யோசிச்செல்லாம் என்னை திருத்தமுடியாது.வாங்க



ஒரு கிளையண்ட் வந்திருக்கார்.ஒரு கேஸ் பத்தி கலந்தாலோசிக்கணும்."என்று குறும்பாக கூற



சரவணனும் சிரித்தப்படி வர, இருவரும் தங்கள் வேலைகளில் மூழ்கிப்போயினர்.



வாழ்வில் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு கண்ணோட்டம்,வாழ்க்கையை எதிர்நோக்கும் பார்வை இருக்கும்...எந்த ஒரு உயிரினமும்



ஒரே போல் அச்சில் வார்த்த ரசனைகளுடன் இருப்பதில்லை.இந்த வித்தியாசம் தான் தங்களை தனித்து காட்ட உதவுகிறது.இந்த



வித்தியாசம் தான் நம் வாழ்வை சுவாரசியாமாக்குகிறது..நாம் இதை உணர்ந்து வாழ்ந்தால் எந்த வித தடையுமில்லை.ஆனால் இதை



உணராத போதுதான் அனைத்து சங்கடங்களும் நெருங்குகிறது.



இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால்..? பொறுத்திருந்து பார்ப்போம்.



(இரண்டாம் நகர்வு முடிந்தது.)
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
கட்டம்-3




அன்று காலையே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது கார்த்திக்கின் அலுவலகம்.



அவனுக்கு உதவியாக சரவணனும் ஈடுக்கொடுத்து அவ்வபோது உதவிக்கொண்டிருந்தான்.ஆனாலும் இவர்களுக்குள் இருக்கும்



பிணைப்பு மற்றும் திறமையால் அலுவலகம் எவ்வித இடையூறும் இன்றி நன்றாகவே இயங்கிக்கொண்டிருந்தது.



அன்று காலை அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்த சரவணனின் கைப்பேசி செல்லமாய் சிணுங்க, அதற்கு தன் செவியை பரிசளித்து



சமாதானப்படுத்தினான்.



அதில் வந்த செய்திக்கு பதிலேதும் கூறாமல் "ம்ம்..ம்ம்.."என்று மட்டுமே பதிலளித்து தொடர்பை துண்டித்தவன்.



தன் காரை கிளப்பி அலுவலகத்திற்கு உசுப்பினான்....அதி வேகத்தில்...



@@@@@



காலையே கார்த்திக் ஃபோனும், மீட்டிங்குமாக இருக்க அவனிடம் அந்த விஷயத்தை கூற முடியாமல் சரவணன் தவிக்க



அதை எல்லாம் உணராத கார்த்திக், தன் வேலைகளிலயே கவனமாக இருக்க அவன் இடத்திற்கே சென்றான் சரவணன்.



அதையும் காணாமல் கார்த்திக் தன் கைப்பேசியில் "ஒண்ணும் கவலைப்படாதீங்க ஜி...ஃபைனல் ஹியரிங்க் நாளைக்கு வருதே..



கொஞ்சம் பிரிப்பேர்டா இருங்க..ஒண்ணும் பிரச்சினை இல்லை.இது பரம்பரை சொத்து..கண்டிப்பா உங்களுக்கு ஒரு பங்கு தந்தே தான்



ஆகணும்.உங்க அக்கா புருஷன் கிட்ட இருந்து கண்டிப்பா சொத்தை மீட்டுடலாம்.."என்று அவன் பேசிக்கொண்டிருக்க



சரவணன் கிசுகிசுப்பாக "டேய்...டேய்...சு..சு"என்று முன்னால் நின்று கையை ஆட்ட அவனோ தலையை குனிந்தபடி பேனாவால்



மேஜையின் மீது கோலம் போட்டுக்கொண்டிருந்த



சரவணனோ பொறுமை இழந்து "அடேய்.."என்று அவன் தலையில் குட்ட, அந்த குட்டலின் வலியில் சட்டென்று தலையை உயர்த்தி பார்த்த



கார்த்திக் எரிச்சலில் "என்னடா.."என்று கைப்பேசியின் ஒலிவாங்கிப்பகுதியை அணைத்தவாறு கேட்க



சரவணன் "Code :RED டா...ஒரு கேஸ் வந்திருக்கு."என்று கிசுகிசுப்பாக கூற



கார்த்திக் பேசிக்கொண்டிருந்த கைப்பேசியை அப்படியே அணைத்துவிட்டு



"Code :Red ஆ..என்ன கேஸ் டா?.."என்று ஆர்வத்துடன் கேட்க



சரவணனோ சிரித்தப்படி "சொல்றேன்..சொல்றேன்.,"என்றான்.



@@@@@



"டேய்.வர வர நீ இந்தா மாதிரி கேஸில் என்ன பண்ணப்போறேன்னே சொல்லமாட்டேங்குறே..நீ பாட்டுக்கு ஒரு பிளான் போடுறே.



நீ பாட்டுக்கு நடத்துறே யாருகிட்டயும் ஒரு வார்த்தை கேட்கமாட்டியா சொல்லு."என்று பொருமினான் சரவணன்.



ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஒரு வித தெய்வீக சிந்தனையில் இருந்தான் கார்த்திக்.



சரவணன் எரிச்சலுடன் அவனை உலுக்கி " டேய் லூசு..நான் உங்கிட்ட கேஸை பத்தி சொல்லி ஒரு நாள் கூட ஆகலை.



அதுக்குள்ளே எப்படிடா பிளானை செயல்படுத்தப்போறே..சொதப்பிடுச்சினா மானம் போயிடும் டா..ஒரே நாளில் செஞ்சு முடிச்சுருவேன்னு



கம்பீரமா சொல்லிட்டு வந்துட்டே..எனக்கு பயமா இருக்குடா.."என்று புலம்ப



சரவணனின் அத்தனை புலம்பல்களுக்கும் கார்த்திக் தந்த ஒரே பதில் அதே தெய்வீகப்புன்னகையுடன்



"யாமிருக்க பயமேன் "என்பது மட்டும் தான்.



@@@@@@



அது ஒரு நவநாகரீக பல்பொருள் அங்காடி.



பக்கத்து தெரு அண்ணாச்சி கடையையும் ,தெருவோர பெட்டிக்கடைகளையும் மறந்துவிட்ட இக்கால யுவன்களும் யுவதிகளும்



கால் கடுக்க அடுக்கடுக்காக சுத்தி தங்களுக்கு தேவையானவற்றை பாதியும் தேவையில்லாதவற்றை மீதியுமாக வாங்கி குவிக்குமிடம்.



வாங்குபவர்களும் அங்கே வேலை பார்ப்பவர்களும் தேனீக்களாக சுழன்றுக்கொண்டிருக்க



மனமே இல்லாமல் அங்கே இன்னொரு ஜீவனும் கூடையை தூக்கிக்கொண்டு இலக்கே இல்லாமல் சுற்றி சுற்றி வந்துக்கொண்டிருந்தது.



"நீரஜா.." என்று அந்த வார்த்தைகளுக்கும் வலித்துவிடுமோ என்று மென்மையாக கூப்பிட்ட அந்த குரலை திரும்பிப்பார்க்கலாமலயே



அவளுக்கு அடையாளம் புரிந்துவிட அவளோ கோபத்தில் வேகமாக நகர ஆரம்பித்தாள்.



"நீரு..நான் சொல்றதை கேளு."என்று அந்த குரலுக்கு சொந்தகாரனோ விடாமல் அவளை துரத்த



நீரஜா "ப்ளீஸ் வசந்த்..என் பின்னால் வராதீங்க.போதும்..உருகி உருகி காதலிச்சு அப்புறம் நீங்க என்னை துச்சமா மதிச்சீங்களே..அதுவே



போதும்.இனிமேலும் இந்த உருகலுக்கெல்லாம் நான் ஏமாறமாட்டேன்.ப்ளீஸ் என்னை விட்டுடுங்க.."என்று அப்போதும் திரும்பி



பார்க்கலாம் நீரஜா நகர



வசந்தோ " நீரு..உன் மனசு எனக்கு புரியுது.நான் கொஞ்சமில்லை நிறையவே மோசமா நடந்துட்டேன். எனக்கு புரியுது நீரு."என்று

ஒப்புக்கொள்ள



நீருவின் நடை இப்போது சற்றே வேகம் குறைந்தது.



வசந்த் "நீ கிடைக்கிற வரை கிடைப்பியோ மாட்டியோன்னு இருந்த பயம் மாறி நீ எனக்கு கிடைச்சதுக்கு அப்புறம் எனக்கு ஒரு



என்ன சொல்றது ஒரு தெனாவட்டுன்னு சொல்லலாம்.அதனால் தான் இவ்ளோ பிரச்சினையும். நீ ஒரு வார்த்தை கூட பேசாமல்



காலை காபி கூட எனக்கு டைவோஸ் நோட்டீஸ் கொடுத்தப்போ தான் நான் எவ்ளோ தூரம் உன்னை விட்டு தள்ளிப்போயிட்டேன்னு



தெரிஞ்சது நீரு.இதுவரை நீ எனக்கு மனைவியா தான் இருக்கே.உங்கப்பா அம்மாக்கு கூட இந்த விஷயத்தை சொல்லலை.இப்போ தான்



தெரிஞ்சது..நீ எவ்ளோ உயர்ந்தவ..நான் எவ்ளோ தாழ்ந்தவனு..நான் இப்போ கூட என்னை மன்னிச்சிடுன்னு கேட்கவரலை நீரு..



உனக்கு இன்னும் என் மேல் அன்பு இருந்தா என்னை ஒரு தடவை ஒரே தடவை திரும்பிப்பாரு..அது போதும்."என்று கூற



அப்போதும் நீரஜாவிற்கு கோபம் குறையவில்லை. ஏனென்றால் திருமண நாளில் இருந்தே ஏமாற்றத்தையும் தோல்விகளையும்



சந்தித்து சந்தித்து துவண்டு போயிருந்தாள்.ஆதலால் ஒன்றும் பேசாமல் நடக்க ஆரம்பிக்க



வசந்த் "ஒரு நிமிஷம்..ஒரே ஒரு நிமிஷம்..என்னை திரும்பிப்பார் நீரு..கணவனா இல்லை..ஒரு காலத்தில் நீ காதலிச்சியே அந்த



வசந்தா கேட்குறேன்.ப்ளீஸ் திரும்பி என்னை ஒரு நிமிஷம் பார்."என்று கெஞ்ச



அதற்கு அவளால் மறுக்கமுடியாமல் போக, ஒருவித எரிச்சலுடன் தான் திரும்பி பார்த்தாள்.



பார்த்தவளால் அவள் கண்களையே நம்ப முடியவில்லை.



கண்களில் காதலும் முகத்தில் ஏக்கமுமாக ,அதற்கும் மேல் அவன் முகத்தில் தெரிந்த அந்த மாற்றம்...அவள் மிகவும்



ஆசைப்பட்ட அந்த மாற்றம்... அவளை ஏதோ செய்ய



தாளமுடியாமல் "வசு..."என்று கட்டியணைத்தாள் அந்த மங்கை..



ஒரு வழியாக அந்த காதல் ஜோடிகள் தங்கள் பிரிவை மறந்து ஒன்று கூடினர்.



@@@@@



"டேய்..எப்படிடா..இதெல்லாம்..எப்படி பண்ணே?. எனக்கு ஒண்ணுமே புரியலையேடா.'என்று சரவணன் மண்டையை பீய்த்துக்கொள்ள



கார்த்திக் அதே தெய்வீக சிரிப்புடன் நின்றுக்கொண்டிருக்க,சரவணன் "ஹேய்..இந்த சிரிப்பை முதலில் நிறுத்து டா..கடுப்பாகுது."என்று



பல்லை கடிக்க



கார்த்திக் "சரி சரி டென்ஷன் ஆகாதேடா..நம்ம கிளையண்ட் கிட்ட ஒரு மாற்றத்தை நீ கவனிச்சியா?."என்று நூல் விட



ஒன்றும் புரியாமல் சரவணன் தலையை சொறிந்தான்.



"ஒண்ணும் தெரியலையே கார்த்திக்."என்று கூற



கார்த்திக் "இது புரிஞ்சா தான் நீ எங்கேயோ போயிருப்பியே?."என்று அவனை வாரியபடி



"நல்லா பார்த்து சொல்லுடா..ஒண்ணும் பிரச்சினை இல்லை.டைம் எடுத்துக்கோ." என்று கூற



சரவணன் இன்னும் நன்றாக வசந்தின் முகத்தை ஞாபகத்திற்கு கொண்டு வர முயல,அப்போதுதான் அவனுக்கு நன்றாக அந்த



வித்தியாசம் தெரிந்தது. அதை உணர்ந்ததும் "டேய்...மீசை...மீசை..முதல் நாள் மீசை இருந்துதே..இப்போ இல்லையே..அதுவா?"என்று கேட்க



கலகலவென சிரித்த கார்த்திக் "பரவாயில்லை மச்சான்.உனக்கு கூட மூளை இருக்கு."என்று அவனை கலாய்க்க



சரவணனுக்கு இன்னும் குழம்பியது.



"டேய்...எனக்கு ஒண்ணும் புரியலை.மீசையை வைச்சு எப்படிடா மடக்குனே?."என்று கேட்க



கார்த்திக் "எல்லாம் சொல்றேன் மகனே?..பொறுமை அவசியம்."என்றான் அதே சினேகப்புன்னகையுடன்,



இவர்களுக்குள் நடப்பது என்ன?..



கட்டங்கள் வேகமாக நகர்த்தப்படும்..



பொறுத்திருந்து பார்ப்போம்...



(மூன்றாம் நகர்வு முடிந்தது..)
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
கட்டம் -4



சரவணன் கார்த்திக் சுஜிதா இவர்கள் மூவருமே குற்றப்பிரிவு வக்கீல்களாக இருந்தாலும் இவர்களுக்கு இன்னொரு மறைமுக வேலையும்



இருக்கிறது.வேலை என்று கூறுவதை விட இதை ஒரு சேவையாக நினைத்தே செய்கின்றனர் என்று கூறலாம்.இவர்கள் மூவரும்



கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே இருந்த ஒரே கவலை விவாகரத்து வழக்குகள் நம் நாட்டில் பெருகிக்கொண்டே போவதுதான்.



என்னதான் குற்றப்பிரிவில் சிறந்து விளங்கினாலும் நம் நாட்டின் அடிப்படையான கலாச்சார பழக்கவழக்கங்களையும் பாதுக்காக்க



வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அவர்கள்.இந்த விவாகரத்து வழக்குகள் மற்றவர்களுக்கு சாதாரண விஷயமாக தெரிந்தாலும்



அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அது ஒரு வாழ்நாள் வடு தான்..அதுதான் தீர்வு என்பவர்களுக்கு விவாகரத்து சரி என்றாலும் சில பேருக்கு



அது வீணான வெற்று பிடிவாதத்தின் வாயிலாகவே தோன்றுகிறது.இதனால் ஆரம்பிக்கும் முன்பே முடியும் சூழலும் அமைகிறது.



இதற்கு தான் நண்பர் மூவரும் சேர்ந்து இவ்வேலையை ஆரம்பித்தனர். கோட்-ரெட் (CODE -RED) என்பது அவர்களுக்குள் இருக்கும்



சங்கேத வார்த்தை ஆகும். முதலில் அவரின் நண்பருக்கு தான் முதலில் இந்த வேலையை செய்ய ஆரம்பித்தனர்.



அதாவது வெறுப்பு இல்லாமல் அளவிற்குஅதிகமான பிடித்தத்தாலும் பிரியும் வசந்த்-நீரஜா தம்பதியர் போன்றவர்களை சேர்ப்பதகென்றே



ஆரம்பித்தனர் இந்த கோட்-ரெட்டை. இவர்களை போன்றவர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த தயங்கியோ அல்லது தெரியாமலயே



வாழ்வை பாலைவனமாக்கி விடுகின்றனர்.



இவர்களுக்கு குட்டி லீலைகள் நடத்தி இதுவரை பொங்காத ரசாயனத்தை பொங்க வைப்பதே நண்பர் குழுவின் நோக்கமாகும்.



இவர்களை பற்றி மேலும் விரிவாக இன்னும் பார்ப்போம்.



@@@@@


"டேய் மச்சான் கேட்டுட்டே இருக்கேனில்லடா...சொல்லுடா.எனக்கு மண்டையே வெடிச்சிரும் போலிருக்கு "என்று ஆர்வம் தாங்காமல்



சரவணன் இப்போது சற்றே எரிச்சல் தொனியுடன் கூற இதற்கு மேல் மறைத்தால் நம் காதை கடித்துவிடுவான் என்று பயந்து தன்



கெத்தை சற்றே குறைத்து கொண்டு கூறத்துவங்கினான்.



"டேய்..அவங்களோட முதல் சண்டை எதில் வந்தது தெரியுமா?."என்று கேட்க



சரவணனோ குழப்பத்துடன் "இல்லையே..அதெல்லாம் அவர் சொல்லவே இல்லையே?."என்று வாயை விட



கார்த்திக் "அடேய்..நீ அப்போ உன் புள்ளைக்கு ஹக்கீஸ் வாங்க போயிருந்தேடா..பக்கி." என்று வாரிவிட்டு அவன் முறைப்பை



பொருட்படுத்தாது சிரிக்க ஆரம்பித்தான்.



@@@@@



காதலித்து திருமணம் செய்தவர்களின் சொர்க்க காலமான தேனிலவு....



காதலும் கலவியும் ஒரே சேர முக்குளித்து முத்தாய் கலந்து வைரமாய் உறுதிப்படும் காலம்.



வசந்தும் நீரஜாவும் காதலித்து திருமணம் செய்தவர்கள் கேட்கவா வேண்டும்..அவர்கள் சந்தோஷத்தில் திளைப்பார்கள் என தான்



அனைவரும் எதிர்ப்பார்ப்பார்கள்.



ஆனால் அந்த எண்ணம் எல்லாம் பொய்க்க முதல் நாளே வந்தது வினை..



காதலர்கள் வந்த களைப்பில் உலகத்தை மறந்து தூங்கி ஒருவரை ஒருவர் ஒரு செண்டிமீட்டர் இடைவெளி கூட பிரியாமல்



அணைத்துக்கொண்டு படுத்துக்கிடந்தனர்.



மெல்ல கண்விழித்த நீரஜா தன் மனங்கவர்ந்தவனின் அணைப்பில் இருப்பதை பார்த்து அவளுக்கு வெட்கமும் காதலும் போட்டிப்போட்டு



கொண்டு வர இன்னும் அவன் அணைப்பில் புதைந்தவள்,



"வசு...இதெல்லாம் நாம நினைச்சே பார்க்கலை இல்ல..இவ்ளோ ஈசியா நாம சேருவோம்னு..."என்று கொஞ்சலாக கூற



"ம்ம்ம்..."என்று வசந்தும் கொஞ்சலுடன் அவள் கைகளின் தேடலை ஆரம்பிக்க



நீரஜா " ஹே..சும்மா இரு வசு..நாம இடத்தை சுத்திப்பார்க்கப்போகணும்..ஞாபகம் இருக்கா."என்று அவள் முடிக்கும் முன்பே



அவன் கைகள் அத்துமீற ஆரம்பிக்க அதை மெல்ல தன் வழிக்கு கொண்டு வந்தவள்,மெல்ல அவன் நெஞ்சில் சாய்ந்து அவன் மீசையை



நிமிண்டியபடி



"வசு..இந்த மீசையை எடுத்துடேன்..உனக்கு நல்லாவே இல்லை."என்று சிரிப்புடன் கூற



வசந்தும் "முடியாதே.."என்று குறும்பாக கூற



நீரஜா "ப்ளீஸ் வசு..இது நல்லாவே இல்லை.."என்று அழுத்திக்கூற



வசந்த் "ஆம்பளைக்கு அழகே மீசை தாண்டி...அதை எடுத்துட்டு நான் என்ன பண்றது? "என்று இன்னும் அழுத்திக் கூற



நீரஜா "மீசை வச்சாதான் ஆம்பளைன்னு இல்லை."என்று சட்டென்று வாயை விட்டு விட



ஏற்கனவே முன் கோபம் அதிகமான வசந்திற்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது.



"ஆமாண்டி..நான் ஆம்பளை இல்லதான்.உனக்கும் உங்கப்பனுக்கும் தான் வசதியில்லாத என்னை பார்த்தா ஆம்பளையாவே தெரியாதே.."



என்று பொங்க ஆரம்பிக்க நீரஜாவிற்கு தன் தந்தையை கூறியதும் இன்னும் கோபம் வந்தது.



"இப்போ எங்கப்பாவை எதுக்குப்பா இழுக்குறீங்க..அவர் கொஞ்சம் நம்ம கல்யாணத்தை எதிர்த்தார் தான்..அதுக்காக இப்படியா பேசுறது?



நீங்க ஒரு அப்பாவா இருந்தாலும் இதையே தான் செய்திருப்பீங்க."என்று கத்திவிட



வசந்தனுக்கும் இன்னும் தலைக்குமேல் கோபம் வந்தது."அப்படி சொல்லு..அப்படின்னா என்னை எதுக்கும் லாயக்கில்லாதவன்னு



நீயும் நினைக்கிறே.சரி இதுக்கு மேல் நானும் சொல்றேன்..உங்கப்பாவை மாதிரி நானும் இந்த சமுதாயத்தில் பெரிய ஆளாகி காட்டுறேன்.



அப்புறம் நீ பேசு..மீசை எடுக்கணுமாம்..மீசையை...அதுக்கு வேற ஆளை பாரு.."என்று அவன் பாட்டுக்கு படபடவென பொரிந்துவிட்டு



வெளியேற



நீரஜா அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள்..



அந்த சண்டை எப்படியோ முடிந்துவிட, அடுத்து வந்த நாட்களில் வசந்தோ வேலை வேலை என பணம் சம்பாதிப்பதில் உன்னிப்பாக



இறங்க..நீரஜா தான் மிகவும் திணறிப்போனாள்..அவளுக்கென யாருமில்லாமல் தனித்து விடப்பட்டது போன்ற உணர்வு.



போக போக வசந்த் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் வீட்டிற்கே வர ஆரம்பித்தான்.



அவன் வரும் நேரத்தில் அவள் ஆற்றாமையை கோபமாய் இறக்கி வைக்க அதற்கு அவனும் கத்த,இப்படி சண்டை பெரிசாகி கொண்டே



போனது.



ஒரு கட்டத்தில் அவள் தந்தையிடம் அனைத்தையும் சொல்லி குமுற, அவரோ தன் ஒரே மகள் அழுவதை பொறுக்க மாட்டாமல்



சட்டென்று விவாவகரத்து முடிவு எடுத்துவிட்டார். இதை இருவருமே எதிர்ப்பார்க்கவில்லை என்றாலும் இருவருக்குமே அதை



தடுக்கவும் அவர்களின் ஆணவமும் பிடிவாதமும் இடங்கொடுக்கவில்லை எனலாம்.



இப்படியானப்பட்ட வேளையில் தான் வசந்த் இவர்கள் உதவியை நாடியது...



அவனுக்கு என்னதான் கோபம் இருந்தாலும் நீரு இல்லாத ஒரு வாழ்வை அவனால் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை.



அவளும் அவனையே போல் தான் தத்தளிப்பாள் என்று அவனுக்கு தெரியும்.ஆனாலும் அவளின் பிடிவாதம் அவளை ஒத்துக்கொள்ள



வைக்காது என்று அவனுக்கும் தெரியும்.அதனால் தன் நண்பரின் மூலமாக சரவணனை பற்றி அறிந்து அவனை தொடர்பு கொள்ள



கார்த்திக்கின் யோசனை மூலமாக இருவரும் சேர்ந்தும் விட்டனர்.



@@@@@@



"டேய் மச்சான்..நானும் உன்னை என்னவோ நினைச்சேன் டா..ஆனால் உனக்கும் கடவுள் மூளைன்னு ஒரு பகுதியை வைச்சிருக்காருடா"



என்று கார்த்திக்கை வாரினாலும் அவன் நண்பனை பற்றி அவனை நன்றாக தெரியும்.



கார்த்திக்கிற்கு காதலை பிடிக்கும்..காதலை மதிக்கும் உண்மையான காதலர்களை பிடிக்கும்.



காதலை கேளிக்கையாக நினைத்து தன்னிடம் வருபவர்களை கண்டுப்பிடிக்கவும் தெரியும்.அவர்களை ஓட ஓடவிரட்டவும் தெரியும்.



முதலில் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த விளையாட்டு இப்போது பல பேரின் புன்னகைக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாக



இருப்பதற்கு ஒரே காரணம் கார்த்திக் தான்.



அவன் வாரியதை பார்த்து முறைத்த கார்த்திக் "ஓவரா பேசாதேடா..எப்படி ஒரு மீசையை வைச்சே ஒரு கேஸை முடிச்சேன் பார்த்தியா?"



என்று காலரை தூக்கி விட்டுக்கொள்ள



சரவணன் சிரித்துவிட்டு "ஆமா...எப்படிடா இப்படி யோசிச்சே" "என்று கேட்க



கார்த்திக் "இதெல்லாம் ரொம்ப சிம்பிள்டா..பொண்ணுங்களுக்கு நீ பெரிசா எதுவும் செய்யணும்னே இல்லை..அவங்களோட ஆசைகள்



ரொம்ப சின்னது.அந்த இடம் பார்த்து தட்டினா போதும்..எப்பேர்ப்பட்ட கல்நெஞ்சமா இருந்தாலும் கரைஞ்சிடும்."என்று அவர்கள்



பேசிக்கொண்டிருக்கும் போதே கதவு தட்டப்பட்ட



கார்த்திக் "உள்ளே வாங்க "என்று கூற



சிரித்தப்படி திறந்துக்கொண்டு வந்தனர் வசந்தும் நீரஜாவும்...



@@@@@@



கார்த்திக் "என்ன சார்..குடும்பமா வந்திருக்கீங்க..அதிசயமா இருக்கு..இங்க விவாகரத்தெல்லாம் பண்ணிவைக்கிறதில்லை."என்று நக்கலாக



கூற



வசந்த் " சார் ரொம்ப வாராதீங்க..முடியலை.."என்று வெட்கத்துடன் கூற



நீரஜாவும் மெலிதாக புன்னகைத்தான்.



கார்த்திக் "பாருடா..வெட்கத்தை..சரி சரி..இன்னேரம் அடிச்சிக்கிட்டு ரெண்டு பேரும் ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆகியிருப்பீங்கன்னு


பார்த்தேன்..பார்த்தா சிரிச்சிட்டு வர்றீங்க."என்று குறும்பாக கூற



"அய்யோ.."என்று வசந்து நீரஜாவும் கையெடுத்து கும்பிட்டனர்.



வசந்த் "சார்..தெரியாமல் உங்ககிட்ட மாட்டிக்கிட்டோம்..தயவு செஞ்சு மன்னிச்சு விட்டுருங்க சார்.."என்று கெஞ்ச



கார்த்திக்கும் சரவணனும் சிரித்தப்படி அவர்களை விட்டனர்.



நீரஜா தான் முதலில் ஆரம்பித்தாள் " ரொம்ப தேங்க்ஸ் சார்...இவர் முதலில் சொன்னப்ப நான் நம்பலை..ஆனால் இப்போ தான் நீங்க



இதில் எவளோ உதவி பண்ணிருக்கீங்கன்னு தெரியுது."என்று உண்மையான நன்றியுடன் கூற



வசந்தும் மகிழ்ந்து போனான்.



கார்த்திக் "பார்த்தீங்களா ?இவ்வளவு தான் வாழ்க்கை..சின்ன சண்டைகளும் விட்டுக்கொடுத்தலும் இருக்கணுமே தவிர அதை மீறி



எந்த ஒரு முடிவும் உங்க நினைப்புக்கு கூட தோணக்கூடாது.வசந்த உங்ககூட சரியா பேசலைன்னா அதுக்கு காரணம் உங்களை



பிடிக்கலைன்னு இல்லை நீரஜா..உங்களை ரொம்ப பிடிச்சுப்போய் தான் உங்களை ராணி மாதிரி வச்சுக்கணும்னு வேலை வேலைன்னு



அலைஞ்சிருக்கார்.அதை புரிஞ்சிக்காமல் நீங்களும் அவரை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க..அதே சமயம் வசந்த் "என்று வசந்திடம் திரும்பி



"பொண்ணுங்களுக்கு கற்பனை திறன் ரொம்ப ஜாஸ்தி..நீங்க கொஞ்சம் முகத்தை சுளிச்சாலும் அவங்க மனக்குதிரை தறிக்கெட்டு



ஓட ஆரம்பிச்சிடும்.அதே சமயம் அவங்களை ஏமாத்துறதும் ரொம்ப ஈசி. என்ன வேணாலும் பண்ணிட்டு சாரிடா செல்லம்னு



பல்லிளிச்சா போதும் வேற எதுவுமே வேணாம்.அவங்க சந்தோஷத்துக்காக கோடிகள் சேர்த்து வைக்கணும்னு இல்லை.தெருக்கோடி



பூக்கடையில் ஒரு முழம் பூ வாங்கிக்கொடுத்தா போதும்.இப்ப இதை புரிஞ்சிருப்பிங்கன்னு நினைக்கிறேன்."என்று நிறுத்த



மூவருமே அவனை பிளந்த வாய் மூடாமல் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.



சரவணன் உண்மையிலயே பெருமை பட்டான்.



கார்த்திக்கால் அனைவரின் சூழலையும் மனநிலையும் இந்த சிறிய வயதில் எப்படி புரிந்துக்கொள்ள முடிகிறது என்று பல சமயம்'



ஆச்சரியப்பட்டுள்ளான்.அதனால் தான் அவர்களின் வேலை இன்றளவும் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.ஒரு தேர்ந்த



மனோதத்துவம் படித்தவரை போல் விமர்சனம் செய்ய அவனால் மட்டும் தான் முடியும்.அவனின் புத்திசாலித்தனம் தான் அவர்கள்



கால் பதித்த அத்தனை இடத்திலும் வெற்றியை குவித்தது.



இப்படியான நண்பனின் நினைவுகளில் இருந்து வெளியில் வந்தவன் குறும்பாக



"ஆமா...இவன் விட்டா கதாகலேட்ஷபமே நடத்திடுவான்..விடுங்க...ஆமா வில்லன் சார் என்ன பண்றார்?"என்று கேட்க



கார்த்திக் "வில்லனா ?யாருடா?"என்று அவன் புரியாமல் கேட்க



சரவணன் "அதாண்டா நீரஜா அப்பா...துப்பாக்கி எடுத்து சுட்டுடுவேன்னு மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி கத்திட்டு இருந்தாரே ?"என்று கூற



மூவரும் பக்கென சிரித்து விட்டனர்.



வசந்த் தான் புகுந்து "அய்யோ சார்..இப்போ ரொம்ப ஃபீல் பண்றது அவர்தான்.அவசரப்பட்டு பொண்ணு வாழ்க்கையை நாசமாக்க



இருந்தோமேன்னு ரொம்ப வருத்தப்பட்டார்.எங்கிட்ட மன்னிப்பும் கேட்டார்."என்று வக்காலத்து வாங்க நீரஜா அவனை காதலுடன் பார்க்க



கார்த்திக்கும் சரவணனும் ஒரு புரிதல் பார்வை பார்த்துக்கொண்டனர்.



பிறகு வசந்த் "உங்களுக்கு நாங்க ஒரு சின்ன அன்பளிப்பு கொடுக்கலாம்னு..கார் உங்க ஆபிசுக்கு வெளியே தான் நிக்குது."என்று அந்த



விலையுயர்ந்த காரின் சாவியை தர நண்பர்கள் இருவருமே அதை மறுத்தனர்.



"நாங்க இதை காசுக்காக செய்யறதில்லை..ஒரு நட்புக்காக தான் செய்யறோம்..எங்க வேலையிலயே எங்களுக்கு பணம் வருது.



எங்களுக்கு அது போதும் "என்று நாசுக்காக மறுத்து விட



தம்பதிகள் அதே நட்புடன் அவர்களிடம் கைக்குலுக்கி விடைப்பெற்றனர்.



இனி அவர்கள் வாழ்க்கையில் பூசல்கள் இருந்தாலும் புகைச்சல்கள் இருக்காது என்ற நம்பிக்கையுடன் இருவரிடமும் உற்சாகமாக



பேசி வழியனுப்பிவைத்தனர்.



"ஆனால் மச்சான்..நீ இருக்கிறதால் பொழைச்சோம்..இல்லை நாம் பண்ற வேலைக்கு என்னைக்கோ தூக்கி உள்ளே வைச்சுருப்பாங்க "என்று



கூற



கார்த்திக் "ஏண்டா நாம் என்ன மத்தவங்களுக்கு கெட்டதா செய்யறோம்..ஒரு நண்பன் என்ன செய்வானோ அதைத்தான் நாம் செய்யறோம்.



முதலில் நாம் செய்யற வேலையை நாம் மதிக்கணும்.புரியுதா ?"என்று அதட்ட



சரவணன் சிரித்தப்படி அவன் தோள் மேல் கைப்போட்டு " இப்படியே இருடா கார்த்திக்.எதுக்காகவும் உன்னை மாத்திக்காதே..உன்



மனசுக்கும் எண்ணத்துக்கும் ஏத்த மாதிரியே ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோடா..அப்போதான் உன் உதவி பலபேருக்கு



கிடைக்கும்..ப்ளீஸ்டா "என்று நெகிழ்ச்சியாக கூற



கார்த்திக் அவனை அணைத்து "கவலைப்படாதேடா..என்னை போலதான் எனக்கு வரவளும் யோசிப்பா..பாரேன் பிற்காலத்தில் நாங்க



ரெண்டு பேருமே சேர்ந்து கூட இந்த வேலையில் ஈடுபடுவோம்."என்று அழுத்தமாக கூற



விதி அவனை பார்த்து அழுத்தமாக சிரித்தது..



(நான்காம் நகர்வு முடிந்தது..)
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
கட்டம் -5


அன்றைய காலை வழக்கம்போல தனி அழகுடன் விடிய அதை கொஞ்சமும் ரசிக்காமல் சோம்பல் முறித்தப்படியே வந்தான் கார்த்திக்.



"அம்மா..காபி..காபின்னு எவ்ளோ தடவை தான் கத்துறது?...இந்த வீட்ல எதுவுமே கேட்ட உடனே கிடைக்காதா?."என்று சலித்துக்கொள்ள



அவன் பேச்சில் சிறிதும் சுவாரசியமில்லாதவராக சமையல் வேலையில் கவனமாக இருந்தார் ரேகா.



அவரை பிடித்து உலுக்கிய கார்த்திக் "ஏம்மா..வர வர நீ சரியே இல்லை..எப்போ பார்த்தாலும் ஏதாவது யோசனையிலயே இருக்கே?.



ஒருத்தன் இங்கே கத்திட்டு தானே இருக்கேன்..காதிலயே விழலை."என்று கத்த



ரேகா அவன் முகத்தையே பார்க்காமல் வேறெங்கோ பார்த்தப்படி " என்ன காபிதானே ?அதோ பிளாஸ்கில் வச்சிருக்கேன் போய் எடுத்து



குடி "என்று கூற



கார்த்திக் " காபியும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்..கொஞ்ச நாளாவே நீ சரியில்லை.என்ன எதுக்குன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும்."



என்று கூற



ரேகா "நான் எப்படி இருந்தால் உனக்கென்ன? நீயும் உங்கப்பாவும் என்னைக்கு என்னை பத்தி யோசிச்சிருக்கீங்க?.." என்று கூறும் போதே



குரல் கம்மியிருக்க கார்த்திக்கால் தாயின் மனநிலையை சற்றே அறிய முடிந்திருந்தது.



அவரை அப்படியே அணைத்தப்படி ஸ்டொவ்வை நிறுத்திவிட்டு வரவேற்பரையில் இருந்த சோபாவில் அமர்த்திவிட்டு அவரின் காலின் கீழ்



அமர்ந்து "அம்மா..ஏம்மா..இப்படி பேசுறீங்க?..என்ன விஷயம்னு எனக்கு சொன்னால் தானே தெரியும்?."என்று கூற



"பின்ன என்னடா?..உங்கப்பா என்னடான்னா உனக்கு எப்படியாவது கல்யாணம் பண்ணியே தீரணும்னு ஒத்தக்காலில் நிக்கிறாரு.அதுவும்



ஜாதி அந்தஸ்து எல்லாத்திலயும் நம்மை மாதிரியே வேணும்னு கண்ணில் விளக்கெண்ணையை ஊத்தி தேடிட்டு இருக்கார்.நீ என்னடான்னா



லவ் மேரேஜ் தான் பண்ணிப்பேன்னு உறுதியா இருக்கே..அதுவும் எங்களை பார்த்து தான் அரேஞ்ச்டு மேரேஜே பிடிக்கலைன்னு வாதம்



செய்யறே?..இதில் நான் ஒருத்தி நடுவில் இருந்திட்டு என்ன பண்றது சொல்லு?."என்று கூற



கார்த்திக் பதில் கூறாமல் அவரையே பார்த்தான்.



ரேகா மேலும் தொடர்ந்தார். " இதை பாரு கார்த்திக்..நான் உன் அம்மா.எனக்கு தெரியும் நீ ஒரு முடிவு எடுத்தா சரியாதான் இருக்கும்னு.



நீ எங்களை பத்தி சொல்லும்போது கஷ்டமா தான் இருந்தது.ஆனாலும் இது உன் வாழ்க்கை.உன் இஷ்டப்படி அதை ஆரம்பிக்கணும்னு தான்



நான் நினைச்சேன்.ஆனால் உங்கப்பாவும் என்னை மாதிரி யோசிப்பார்னு சொல்ல முடியாது கார்த்திக்.உனக்கே தெரியாமல் நான் எவ்ளோ



வருஷம் உன்னை காப்பாத்திருக்கேன்னு எனக்கு தான் தெரியும்.என்னால் அவரை ஓரளவுக்கு மேல் கட்டுப்படுத்த முடியாது,நீ சொன்ன



காரணத்தை சொன்னால் உங்கப்பா ருத்ரதாண்டவம் ஆடுவார்னு உனக்கே தெரியும்.அதனால் தான் உன்னோட முடிவை பத்தி சொல்லாமல்



வைச்சிருக்கேன் புரியுதா? "என்று கூற அவரிடம் இருந்த நியாயம் கார்த்திக்கை இன்னும் மௌனமாக்கியது.



"நீ இப்போ மௌனமா இருக்கிற மாதிரி எப்பவுமே இருந்திட முடியாது கார்த்திக்.நான் உனக்கு கொடுத்த சுதந்திரத்தை ஓரளவுக்கு தான்



என்னாலயே நியாயப்படுத்த முடியும்.அதுக்கும் மேல சுதந்திரத்தை கொடுக்க என்னால் முடியாது.உன் அம்மாவை பத்தி உனக்கே தெரியும்.



உங்கப்பாவோட சர்வாதிகார குணம் உன்னோட சுயத்தை அழிக்காமல் இவ்ளோ நாள் உன்னை பார்த்துக்கிட்டேன்.இனிமேலும் அப்படி



பாதுக்காக்க முடியுமான்னு எனக்கு தெரியலை.நான் தூங்கி எவ்ளோ நாள் ஆச்சு தெரியுமா உனக்கு?."என்று கூற



கார்த்திக் "ஏம்மா இப்படி கவலைப்படுறே? நான் என்னைக்குமே நீ கொடுத்த சுதந்திரத்தை தவறா உபயோகிக்க மாட்டேன்.இப்போ நான்



என்ன செய்யணும்னு சொல்லு நான் செய்யறேன்..நான் கொஞ்சம் முரண்டு பிடிச்சவன் தான்.அதுக்காக உன்னோட உணர்வுகளை



புரிஞ்சிக்காத முட்டாள் கிடையாது."என்று உறுதியாக கூற



அவனை கண்ட ரேகா தான் வளர்த்த விதம் என்றும் என்றுமே தவறிப்போகாது என்று நம்பிக்கை கொண்டார்.



"இல்லைடா உனக்கு காதல் திருமணம் தான் செய்யணும்னா அதை சீக்கிரம் செய்னு சொல்றேன்.ஒரு காரணமே இல்லாமல் நானும்



உங்கப்பாவும் எங்க ஒரே பையனோட வாழ்க்கையில் நடக்கிற முக்கியமான விஷயத்தை எவ்வளவு நாள் தான் தடுத்து நிறுத்தமுடியும்.



உங்கப்பா ஒரு முரடர் தான்.அவர் பார்க்கிற இடம் வேணா தப்பா இருக்கலாம்.ஆனால் அவரோட நோக்கம் என்னை பொறுத்த வரை



சரிதான்."என்று தன் பக்க நியாயத்தை கூற



அவனால் அதற்கு மேல் தன்னை மற்றுமே சிந்தித்து பார்க்க முடியவில்லை.அவன் தாய் கூற்றிலிருந்து அவனுக்கு அப்போதுதான்



வேறொரு கண்ணோட்டம் தோன்றியது.



ஒரு முடிவுடன் நிமிர்ந்தவன் "சரிம்மா..உனக்கு எது சரின்னு படுதோ சொல்லு?..நான் செய்யறேன்.நீ பார்க்கிற பொண்ணையே கல்யாணம்



பண்ணனுமா?...அதை வேணாலும் சொல்லு.நான் செய்யறேன்" என்று கூற



ரேகாவிற்கு மனதுள் சிறிதாக சந்தோஷம் பூத்தது..தன் மனதை எந்தவித தயக்கமும் இன்றி அவன் ஒத்துக்கொண்ட விதம் தனக்காக



தன் ஆசையை கூட தவிர்த்து அவன் பேசும் விதம் அனைத்தையும் கண்ட ரேகா ஒரு தாயாக அவனின் ஆசையையும் நிறைவேற்ற



இசைந்தார்.



"இதை பாரு கார்த்திக் நீ இப்படி சொல்றது எனக்கு சந்தோஷமா தான் இருக்கு.ஆனால் உன் ஆசைக்கு சமாதி கட்டிட்டு என்னால்



நிம்மதியா இருக்கமுடியாது.அதுக்காக நான் இன்னும் ஒரு மாசம் உனக்கு டைம் தரேன்.அதுக்குள்ள உனக்கு பிடிச்ச பெண்ணை



கூட்டிட்டு வா.என் உயிரே போனாலும் பரவாயில்லை.அந்த பொண்ணை நான் உங்கூட சேர்த்து வைக்கிறேன்.ஆனால் அதுக்குள்ளே



உன்னால் அந்த பொண்ணை கண்டுப்பிடிக்க முடியலைன்னா நானோ உங்கப்பாவோ பார்க்கிற பொண்ணை நீ மனசில் எந்த வித



கசப்பும் இல்லாமல் கல்யாணம் பண்ணனும்.என்ன கார்த்திக்? சரியா?."என்று கேட்க



கார்த்திக் குழம்பிப்போனான்.இவ்வளவு நாளாக தன் கண்ணில் படாத அந்த பெண் இந்த ஒரு மாதத்தில் எப்படி தன்னிடம் வருவாள்?



என்ற மாபெரும் சந்தேகம் அவனை அலைகழித்தது.ஆயினும் தன் தாயின் மனக்கலக்கத்தையும் அவனால் ஒதுக்கித்தள்ள இயலவில்லை.



என்னதான் இருந்தாலும் அவன் முதலில் அவருடைய மகன் பிறகுதானே ஊரறிந்த வக்கீல்.



நெடுநேர யோசனைக்குப்பின் "சரிம்மா..நீ சொல்றபடியே நான் செய்யறேன்.இந்த ஒரு மாசத்துக்குள்ளே என மனசுக்கு பிடிச்சவ கிடைச்சா



என் கல்யாணம் எனக்கேத்த மாதிரி நடக்கட்டும் இல்லை உங்களுக்கு ஏத்த மாதிரி நடக்கட்டும்.இந்த ரெண்டுல எது நடந்தாலும் எனக்கு



சந்தோஷம் தான்."என்று மனதில் குழப்பத்துடனே கூறிவிட்டு அலுவலகத்திற்கு சென்றான்.



இன்றிலிருந்து அவன் வாழ்க்கை வேறு கோணத்தில் செல்ல இருப்பதை அறிந்தால் அவன் அவ்வாறு வாக்கு கொடுத்திருக்கமாட்டானோ??



@@@@@@



"சுஜி...உனக்குனு ஒரு ஆபிஸ் இருக்கு..ஞாபகம் இருக்கா இல்லையா செல்லம்..நீ பாட்டுக்கு ஷாப்பிங்க்.பேஷியல்னு இருக்கியே தவிர



கேஸ் கட்டெடுத்து ஒரு மாசம் ஆகுது."என்று கடிந்துகொள்வதை போல் கலாய்த்துக்கொண்டிருந்தான் சரவணன்.



மறுமுனையில் சுஜிதா "சும்மா சீன் போடாதே சரவணா..வர்ற கேஸையும் சுஜிக்கு கல்யாணம்னு நீயும் கார்த்திக்குமே வரிஞ்சு கட்டிட்டு



பார்க்குறது எனக்கு தெரியும்.அதனால் இந்த ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் நடிப்பையெல்லாம் விட்டுட்டு வந்து எனக்கு இன்விடேஷன் செலக்ட்



பண்ணிக்கொடுங்க ரெண்டு பேரும் புரியுதா?"என்று கேட்க



சரவணன் "அதை விட எங்களுக்கு வேற வேலையெல்லாம் இருக்கு புரியுதா?"என்று கூற



சுஜிதா "எது இருந்தாலும் நீங்க வந்துதான் ஆகணும்.வேற வழியில்லை புரியுதா?"என்று அவனை போலவே பேச



சரவணன் அடக்கமுடியாமல் சிரித்தான்.



பிறகு கல்யாண வேலையை பற்றி அனைத்தும் உரையாடிவிட்டு அவன் கைப்பேசியை அணைக்கவும் இருண்டு போன முகத்துடன்



கார்த்திக் வரவும் சரியாக இருந்தது.


அதை பார்த்து ஏதோ சரியில்லை என்று கணித்த சரவணன்



"என்னடா என்ன பிரச்சினை ? உன் முகமே சரியில்லையே ? என்னாச்சு ?"என்று கேட்க



கார்த்திக் பேசாமல் எங்கேயோ பார்த்துக்கொண்டிருக்க



சரவணன் "மச்சி...சொன்னாதானே டா தெரியும்? நீ இப்படி எல்லாம் இருந்ததே கிடையாதே?."என்று மீண்டும் நோண்ட



கார்த்திக் ஒரு வித சலிப்புடன் நடந்ததை கூற



சிறிது நேரம் யோசித்த சரவணன் "சரிடா இதுக்கு ஏன் சோகமா இருக்கே?..அதான் ஒரு மாசம் டைம் இருக்கே?"என்று அசால்டாக கூற



அவனை முறைத்த கார்த்திக் "ஒரு மாசம் தாண்டா ?அதுக்குள்ள எப்படிடா அந்த பொண்ணை கண்டுப்பிடிச்சு காதலிச்சு எனக்கு ஒண்ணும்



புரியலை.இதில் நீ வேற எரிச்சல் படுத்தாதே?"என்று எகிற



சரவணன் "டென்ஷன் ஆகாமல் நான் சொல்றதை கேளு..எப்படி இருந்தாலும் உங்கம்மா அப்பா உனக்கு பிடிக்காத பொண்ணை கல்யாணம்



பண்ணிவைக்கமாட்டாங்க புரியுதா?..அவங்க பார்த்தாலும் பிடிக்கலை பிடிக்கலைன்னு சொல்லி முடிஞ்சவரை தள்ளிப்போடு அப்புறம்



உனக்கேத்த பொண்ணு கிடைச்சதும் கூட்டிட்டு போய் நின்னுடு..இல்லை நாம ஏதாவது பிளான் பண்ணி அதை அரேஞ்சுடு மேரேஜ்



ஆக்கிரலாம்.கவலையை விடு"என்று கூற கார்த்திக் அப்போதுதான் சற்றே தெளிந்தான்.



சரவணன் "என்னடா நான் சொல்றது புரிஞ்சுதா?..இப்பவாவது கொஞ்சம் தெளிடா..இதுக்கே நீ சோர்ந்துப்போயிட்டேனா ?இன்னும் செய்ய



வேண்டியது எவ்வளவோ இருக்கு.."என்று சமாதானப்படுத்த



கார்த்திக்கிற்கு இப்போது புதுபலம் வந்தது..எது நடந்தாலும் சமாளிக்கலாம் என்ற தைரியமும் வந்தது.



ஆனால் அவன் நினைப்பிற்கெல்லாம் நேர்மாறாக வாழ்க்கை அவனை இழுத்துக்கொண்டு செல்லப்போவதை அவன் அப்போது



அறியவில்லை.



@@@@

ஒரு மாதம் எந்த வித அலம்பலும் இன்றி மெதுவாக நகர ஆரம்பித்தது.



ஆனால் கார்த்திக்கிற்கு ஏற்ற பெண் தான் கிடைத்தபாடில்லை.ஆயினும் அவன் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்றே கூறலாம்.



அவனிடம் சரவணன் கூறிய அறிவுரை அவனை அவ்வளவு தூரம் மெருகேற்றியிருந்தது.



இப்படியாக நகர்ந்துக்கொண்டிருந்த நாட்களில் ஒரு முறை....



சரவணன் அன்று கலக்கத்துடன் காணப்பட்டான்.



அதை கண்டப்படியே வந்த கார்த்திக் தன் நண்பனின் தோளை தட்டி



'என்னடா...ஒரு மாதிரி இருக்கே?..என்ன விஷயம்?"என்று கேட்க



சரவணன் "ஆறு மாசத்துக்கு முன்னாடி நம்மளை தேடி ஒரு கிளையண்ட் வந்தாரே ஞாபகம் இருக்கா?"என்று கேட்க



கார்த்திக் புன்சிரிப்புடன் " நம்மளை தேடி தினமும் பத்து கிளையண்ட் வர்றாங்க..நீ எந்த கிளையண்டை சொல்றே?"என்று கேட்க



சரவணன் "ப்ச்" என்று சலிப்புடன் "சாதாரண கிளையண்ட் இல்லைடா Code Red டா மடையா?."என்று எரிந்து விழ



கார்த்திக்கிற்கு இப்போதும் புரியவில்லை.



"ஒண்ணு பேரை சொல்லு..இல்லை என்ன விஷயம்னு சொல்லு..ஒண்ணுமே சொல்லாமல் மொட்டையா பேசிட்டு இருந்தா என்ன அர்த்தம்?"



என்று கேட்க



சரவணன் "அது இல்லைடா..ஆறு மாசத்துக்கு முன்னாடி நம்மகிட்ட சித்தார்த்துனு ஒருத்தர் வந்தாரே ஞாபம் இருக்கா?."என்று வினவ



கார்த்திக்கிற்கு இப்போதுதான் மூளை பிரகாசமாக எரிந்தது.



"அட ஆமா மறக்கமுடியுமா?அவர் பாட்டுக்கு வந்தாரு அவசரமா உங்களை பார்க்கணும்னு சொன்னாரு.நாம வந்து அஞ்சு நிமிஷத்துக்குள்ளே



ஏதோ ஃபோன் வந்து ஓடினாரு..அப்புறம் ஆளு வரவே இல்லை...நாம கூட என்ன விஷயமா இருக்கும்? என்ன விஷயமா இருக்கும்னு



ஒரு வாரமா மண்டையை பிச்சிக்கிட்டோமே?." என்று பாயிண்டை பிடிக்க



சரவணன் "கரெக்ட்..அவரை பத்தி இன்னைக்கு பேப்பர்ல வந்திருக்கு பார்த்தியா ?"என்று கேட்க



கார்த்திக் "என்னடா சொல்லுறே பேப்பர்லயா?."என்று கேட்க



சரவணன் "ஆமா..எப்போ பார்த்தாலும் ஹிந்து,எக்ஸ்பிரஸ்னு பீட்டர்ஸ் பத்திரிக்கையாவே படிக்கக்கூடாது தம்பி..கொஞ்சம் நம்ம ஊர்



பத்திரிக்கையும் படிக்கணும்.இன்னைக்கு தமிழ் நீயூஸில் இவர் தான் ஹாட் டாபிக்."என்று கூறிவிட்டு நிறுத்த



கார்த்திக்கிற்கு ஆர்வம் தாங்கவில்லை.



"அப்படி என்னடா ஆச்சு?"என்று கேட்க



சரவணன் "ஹ்ம்ம்...டைவோர்ஸ் ஆச்சு.."என்று கூற



கார்த்திக் அதிர்ந்து போய் "என்ன சொன்னே?..டைவோர்ஸா?"என்று கேட்க



சரவணன் "ஆமா..அது ஆகிடக்கூடாதுன்னு தான் நம்மகிட்ட ஹெல்ப் கேட்டு வந்திருப்பாருன்னு நினைக்கிறேன்.ஆனால் பாவம் இப்படி



ஆகிடுச்சு?.."என்று கூற



"என்னடா அசால்டா சொல்றே?..நாம் நம்மால் முயன்ற உதவியை செஞ்சிருந்தா இப்படி ஆகிருக்குமா?..அவர் வந்தன்னைக்கே ஏதோ



ஒரு குழப்பத்தில் தான் இருந்தார்.நாம அவரை அப்படியே விட்டிருக்கக்கூடாதோ?."என்று கார்த்திக் புலம்ப ஆரம்பிக்க



சரவணன் "என்ன விளையாடுறியா?..நம்ம Code Red உடைய சட்டத்திட்டம் தெரியும் தானே?..கிளையண்டா வந்து நம்மகிட்ட உதவி



கேட்டாதான் நாம் உதவி செய்யணும்.நாம் அவங்களை Trace பண்ணக்கூடாது.அவங்களோட தனிப்பட்ட பிரைவசியில் மூக்கை



நுழைக்கக்கூடாது."என்று கூறி முடிக்குமுன்



கார்த்திக் "ஓஹோ'என்று கேட்க



சரவணன் "என்ன ஓஹோ?...ஏதோ புதுசா கேக்குறவன் மாதிரி கேக்குறே?..ரூல்ஸ் போட்டதே நீதானே?.'என்று கூற



கார்த்திக்கோ இன்னும் குழப்பத்துடனே "டேய்..இந்த விஷயத்தை நீதான் ஆரம்பிச்சே..அப்புறம் நீயே இப்படி பேசினா எப்படி?"என்று கேட்க



என்று புரியாமல் கேட்டான்.சத்தியமாக முக்கியக்காரணம் இல்லாமல் இந்த பேச்சை சரவணன் ஆரம்பித்திருக்கமாட்டான் என்று



தெரியும்.அந்த சுவாரசியத்தை அறியவே அவன் ஆவல் கொண்டான்.



சரவணன் "அதுக்கு காரணம் இருக்கு கார்த்திக்.இன்னைக்கு பத்திரிக்கையில் வந்ததை சொல்றேன்.அந்த சித்தார்த் மிகப்பெரிய



கோடீஸ்வரர்.நகரத்திலயே பெரும்புள்ளி..Philantropist உம் கூட.நிறைய ஏழை குழந்தைகள்,வயசானவங்களுக்கு உதவி செஞ்சிருக்கார்.



அவருக்கு நேத்து விவாகரத்து கிடைச்சிருக்கு."என்று கூறிவிட்டு நிறுத்த



கார்த்திக் "அடிச்சிருவேண்டா...இதைத்தான் சொல்லிட்டியே?.விவாகரத்தில் என்னடா பிரச்சினை?



சரவணன் " விவாகரத்து பிரச்சினை இல்லை..விவாகரத்தை வாங்கிக்கொடுத்தவங்க தான் பிரச்சினை.?" சித்தார்த்தோட மனைவி சைடு



லாயர் அவ்ளோ ஸ்டெடி..யாரு தெரியுமா?"என்று கேட்க



கார்த்திக் "யாரு ?"என்று கேட்க



சரவணன் "எல்லாம் உன் ஆளு தான்."என்று நக்கல் சிரிப்புடன்



கார்த்திக் "என்னடா உளர்றே?."என்று கேட்க



சரவணன் "தேவசேனா டா...ஞாபகம் இருக்கா?."என்று விலாவரியாக கூற



கார்த்திக் ஒரு வினாடி போல யோசித்து பின் முகம் மாறினான்.



பின் அதுவே அவனுக்கு ஞாபகம் வந்துவிட்டதற்கான அடையாளமாக நினைத்த சரவணன்



"இப்போ அவ பெயர் என்ன தெரியுமா?...டைவோர்ஸ் தேவசேனா..." என்று கூறிவிட்டு வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க



கார்த்திக் பல்லை கடித்தான்.



ஆனால் விதியோ அவர்களை சந்திக்கவைக்க நல்ல நாள் பார்த்துக்கொண்டிருந்தது.



(ஐந்தாம் நகர்வு முடிந்தது..)
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
கட்டம்-6


வருடம் -2008



அரசு சட்டக்கல்லூரி -சென்னை


"தேவசேனா...நீ சும்மா என் லைனில் கிராஸ் பண்ணிட்டே இருக்கே..இது நல்லதுக்கு இல்லை ஞாபகம் வைச்சிக்கோ?..."என்று கார்த்திக்



அன்று ஐம்பதாவது முறையாக அவளிடம் சண்டையிட்டு கொண்டிருந்தான்.



அதற்காக பெரிய தங்கமலை ரகசியம் என்று யாரும் தவறாக எண்ணி விட வேண்டாம்.



வரப்போகும் கல்லூரி ஆண்டுவிழாவிற்கு யார் முழு பொறுப்பையும் ஏற்று நடத்துவது என்ற உப்புசப்பில்லாத சண்டை தான் அது.



கல்லூரியில் இரண்டாம் வருடத்தின் மாணவர் பிரதிநிதி என்பதால் கார்த்திக் தான் நடத்துவதாக கூற



செல்வி தேவசேனா அவர்களோ "ஏன் போனவாட்டி மிகப்பெரிய தொழிலதிபர்னு சொல்லிட்டு ஊசி மணி பாசி மணி விற்கிறவரை



கூட்டிட்டு வந்தியே அந்த மாதிரியா?." என்று எகிறிக்கொண்டிருந்தார்கள்.



கார்த்திக்கோ வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு " அவர் ஒண்ணு ஊசி மணி பாசி மணி விற்கிறவர் இல்லை.ஆன்லைன் ஃபேஷன்



ஜவல்லரி ஷாப் ஓனர்.அது மட்டுமில்லை இவ்ளோ பேசிட்டு அவர்கிட்டயே உன் ப்ரெண்ட்ஸ் எத்தனை ஓசி நகையை ஆட்டைய



போட்டாங்கன்னு எனக்கு தெரியும்..ரொம்ப பேசாதே" என்று ஒரு போடு போட



தேவசேனா தன் தோழிகளை முறைத்து " அடியேய்..இதெல்லாம் எப்போடி நடந்தது?."என்று கேட்க



அவள் தோழிகளோ அசடு வழிய



தேவசேனா மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டாலும் பின் சுதாரித்து "இருக்கட்டுமே?....அவரோட நம்பிக்கைத்தன்மை எப்படின்னு



பார்க்க வாங்கிருப்பாங்க? இதெல்லாம் ஒரு பிரச்சினையா?.என்னதான் இருந்தாலும் ஒரு கல்லூரிங்கிறது ஒரு கட்டுக்கோப்பான நிறுவனம்



இதில் படிப்பு சம்பந்தமான ஆட்களை நகரத்தில் ஒரு நல்ல பேர் வாங்குன ஒருத்தரை கூட்டிட்டு வருவது தான் நமக்கும் பெருமை



இந்த கல்லூரிக்கும் பெருமை."என்று கடகடவென பேசி மூச்சு வாங்க முடிக்க அனைவரும் தேவா கூறியதற்கே சரியென வந்தனர்.



கார்த்திக்கோ உச்சப்பட்ச எரிச்சலில் அந்த இடத்தை விட்டு அகன்றான்.



இப்படி எல்லா காரணத்திலும் சில சமயம் காரணமே இல்லாமல் கூட இவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்படுவது சகஜம் தான்.,



ஆயினும் ஒவ்வொரு தடவை சண்டை வரும்பொழுதும் அந்த கல்லூரியையே ஒரு கலக்கு கலக்கிவிட்டு தான் போகும்.



மொத்தத்தில் கூறினால் இவர்கள் இருவரும் ஆளும்கட்சி எதிர்கட்சி போல்...ஒரு விஷயத்திலும் ஒத்துப்போகாது.



ஆனால் இவர்கள் இருவருக்கு இடையிலும் ஒரு பாலமாக இருந்த ஒரே ஜீவன் திவ்யா மட்டும் தான்..



திவ்யா அவர்கள் இருவருக்குமே தோழி..



இப்படியாக சண்டை உச்சத்தை எட்டும் பொழுது திவ்யா வந்தால் தான் அங்கே அமைதியே ஏற்படும் என்பது எழுதப்படாத விதி.



ஒருநாள் கார்த்திக்கே திவ்யாவிடம் " நீ மட்டும் இன்னைக்கு இடையில் வரலை நான் அவளை கொலை கூட செஞ்சிருப்பேன்.ஆமா நீ



எப்படி அந்த ராட்சசி கூட இருக்கே?"என்று அவளிடம் அவன் கேட்க



ஆனால் திவ்யா அவளை பற்றி தவறாக ஒரு வார்த்தை கூட கூறமாட்டாள்.



சிரித்துக்கொண்டே "இப்படி தான் அவளும் கேக்குறா?..நான் அவக்கிட்ட என்ன சொல்றது ?'என்று திருப்பியடிப்பாள்.



அவள் கார்த்திக்கோடு இணைந்து போவதாலயே இரண்டு பேருக்கும் உள்ள கெமிஸ்ட்ரியை கல்லூரியில் அனைவரும் அறிவர்..



சில சமயம் இவர்கள் இருவரும் காதலிப்பதாக சரவணனும் சுஜாதாவுமே கிண்டல் செய்திருக்கின்றனர்.



ஆனால் இவர்களுக்குள் அப்படிப்பட்ட எதுவும் இருப்பதாக இருவருமே ஒத்துக்கொள்ளவில்லை.



ஆனாலும் அவர்களுக்குள் கல்லூரிக்காலம் முடியும் வரை ஒருவித அன்பு மிளிர்ந்துக்கொண்டே இருந்தது.ஆயினும் அதை விட



மேலாக பேசப்பட்ட ஒன்று கார்த்திக்-தேவா பகை தான்.



இப்படியாகப்பட்ட மோதல், காதல் எல்லாம் கல்லூரி காலத்தில் அனைவரிடமும் உள்ள ஒன்று தான் என்பதால் யாரும் அதை



பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..



நாளாவட்டத்தில் காலப்போக்கில் அதை மறந்தே விட்டார்கள் எனலாம்.



இப்போது தேவையில்லாமல் சரவணன் அதை ஞாபகப்படுத்துவதும் கார்த்திக்கிற்கு தலைக்கு மேல் கோபம் எகிறியது.



@@@@@



"டேய்..இப்போ எதுக்கு அவளை பத்தி பேசுறே?."என்று கேட்க



சரவணன் " பேச வேண்டிய அவசியம் வந்துருச்சேடா?..இப்போ பாரு அவ பெரிய டிவோர்ஸ் லாயர் ஆகிட்டா போல..நம்ம கூட



படிச்ச கிளாஸ்மேட் இப்படி ஒரு புகழ்பெற்ற வக்கீல் ஆனால் நமக்கு தானேடா பெருமை.."என்று நக்கலாக கூற



கார்த்திக் "அறிவுக்கெட்ட இவனே?..அவளுக்கும் எனக்கு ஆகாதுன்னு தெரியும்..அப்புறம் எதுக்கு இப்படி ஓவரா பேசுறே?."என்று கேட்க



சரவணன் "அப்படியெல்லாம் ஒதுக்க முடியாது."என்று எகத்தாளமாக கூற



கார்த்திக் "ப்ச்"என்று சலித்து "சுத்தி வளைக்காமல் உனக்கு என்ன வேணும்னு சொல்லு"என்று கூற



சரவணன் "நாம ஏன் இந்த கேசை எடுத்துக்ககூடாது...This case is killing me..நாம ஏன் இந்த சித்தார்த்தை அவர் மனைவியோட



சேர்த்து வைக்ககூடாது."



கார்த்திக் "ஆனா சரவணா?? ":என்று இழுக்க



"எனக்கு தெரியும்.இது நம்ம சட்டத்துக்கு எதிரானது தான்.ஆனாலும் நம்ம கிட்ட உதவின்னு வந்தவங்களை நாம என்னைக்குமே



ஏமாத்தினது இல்லை.அப்படி இருக்கும் போது இந்த கேசை நாம கண்டுக்கலையோன்னு ஒரு குற்றவுணர்ச்சி எனக்கு இந்த நியூஸ்



பார்த்ததில் இருந்து வந்துட்டே இருக்கு.அதனால் தான் சொல்றேன்..இந்த கேசை ஏன் நாம எடுத்துக்ககூடாது."என்று கேட்க



கார்த்திக் "இது எப்படி சாத்தியம் சரவணா?..அவங்களுக்கு விவாகரத்து கிடைச்சாச்சு..இனி எப்படி?"என்று இழுக்க



சரவணன் 'ஏன் முடியாது கார்த்தி..?சட்டம் தான் அவங்களை பிரிக்கமுடியும்..தாம்பத்யம் அவங்களை பிரிக்கமுடியாது. இதை ஒரு



வக்கீலா இருந்துட்டு நான் சொல்லக்கூடாது தான்.ஆனாலும் நம்மால முடிஞ்சதை செய்வோமே?"என்று ஊக்கம் கொடுக்க



கார்த்திக் "சரிடா...கண்டிப்பா நம்மால முடிஞ்சதை செய்வோம்."என்று உறுதியளிக்க



அதை கேட்ட சரவணனும் மகிழ்ந்து பின் "ஆனாலும் இந்த தேவா எமகாதகிடா..எப்படி விவாகரத்து வாங்கிக்கொடுத்தாள் என்று



தெரியலை..ஆனாலும் அதை கண்டுப்பிடிக்கணும்.இவளை எப்படி புடிக்கிறதுன்னு நான் பார்த்துக்கிறேன்..அவளை எப்படி



சமாளிக்கிறதுன்னு நீ பார்த்துக்கோ.."என்று கூற



கார்த்திக் "அவளே ஒரு அடங்காபிடாரி..அவளை சமாளிக்க ஒருத்தன் பிறந்துதான் வரணும்."என்று நக்கலாக கூற



சரவணன் "வாழ்க்கையோட விளையாட்டை பார்த்தியா?..நீங்க ரெண்டு பேரும் காலேஜ்லயே எல்லாத்துலயும் எதிரும் புதிரும் தான்.



இப்போ இத்தனை வருஷத்துக்கு அப்புறமும் எதிரும் புதிருமாவே சந்திக்கப்போறீங்க..ஆனால் உனக்கு ஒண்ணு தெரியுமா?



எப்போதும் எதிர் துருவங்கள் தான் ஒண்ணு சேரும்."என்று சிரிப்புடன் கண்ணடித்து கூற



கார்த்திக் "இப்போ என் கை உன் கன்னத்தோட சேரப்போகுது..வாயை மூடிட்டு வேலையை பாரு." என்று அதட்ட



சரவணனும் மெல்லிய சிரிப்புடன் வாயை மூடிக்கொண்டு தன் வேலையில் ஈடுப்பட்டான்.



@@@@



அந்த எதிர் துருவங்கள் சந்தித்து கொள்ளும் வேளையும் நெருங்கிக்கொண்டிருந்தது..



சரவணன் தன் வேலையான அனைத்து முக்கிய தகவல்களையும் சேகரித்துக்கொண்டிருந்தது.



அந்த இரு ஆண்களும் அவர்களுக்கு தெரியாமலயே அந்த வழக்கில் தங்கள் முழு கவனத்தையும் தர ஆரம்பித்தனர்.



ஏதோ ஒரு வகையில் அந்த வழக்கு அவர்களை ஈர்த்தது..



ஆனால் அதுவே பின்னாளில் எழப்போகும் ஒரு முக்கிய குழப்பத்திற்கு வழிவகுக்கப்போவதை எவருமே அறியவில்லை.



ஆயினும் இந்த குழப்பங்கள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை அல்லவா?



இப்படியாக இரு ஆண்களும் சேர்ந்து சுஜிதா வின் உதவியுடன் சித்தார்த்தனின் முழுவிவரத்தையும் கேட்டறிந்தனர்.



அவர்கள் அறிந்தவரையில் சித்தார்த்தனிடம் எந்தவித தவறான அபிப்பிராயங்களும் எழவில்லை.



ஆனாலும் அவனுக்கு தேவசேனா எவ்வாறு விவாகரத்து வாங்கி தந்தாள் என்பதும் சரிவர தெரியவில்லை.



"டேய்..இப்படி மண்டையை உடைச்சிட்டு இருக்கிறதுக்கு பேசாமல் தேவாகிட்டயே பேசலாம் டா"என்று சுஜிதா சலித்துக்கொள்ள



சரவணனனோ கார்த்திக்கை கை காண்பித்தான்.



"எங்கிட்ட கேட்டா?அவன் கிட்ட கேளு..அவந்தான் அவகிட்டயே போகமாட்டேனு ஒத்தக்காலில் நிக்கிறான்."என்று கூற



சுஜிதா கார்த்திக்கை முறைக்க



கார்த்திக் "சுஜிதா ..உனக்கு தான் தெரியும்ல..எனக்கும் அவளுக்கும் ஒத்துவராது..இவ்வளவு வருஷத்தக்கப்புறமும் அவ மாறமாட்டாள்.



அவளை பத்தி எனக்கு நல்லா தெரியும்.நான் கேட்டா சண்டை தான் வரும்"என்று கூற



சுஜிதா தலையில் அடித்துக்கொண்டாள்.



"இதெல்லாம் ஒரு காரணம்..நீங்க ரெண்டு பேரும் எதுக்கு சண்டை போடுறீங்கன்னு உங்களுக்கே தெரியாது.இதில் என்னமோ தேவர்மகன்



சிவாஜி மாதிரி டையலாக் வேற..""என்று கத்த



கார்த்திக் பேசாமல் இருக்க



சுஜிதா "இந்த கேசில் அப்படி என்ன தான் இருக்குன்னு நீங்க ரெண்டு பேரும் ஓவரா இதில் மூக்கை நுழைக்கிறீங்க?.



கிளையண்டா வந்து கேட்காமல் நாம அவங்க விஷயத்தில் மூக்கை நுழைக்ககூடாதுன்னு சட்டம் போட்டதே நாமதானே? இப்போ நாமே



ஏதோ துப்பறியும் சாம்பு மாதிரி வேலை பார்த்தா எப்படி?.அப்படி ஒண்ணும் இது பெரிய கேஸும் இல்லை "என்று அலுத்துக்கொள்ள



கார்த்திக் "அப்படி சொல்லாதே சுஜி...இதை அப்படி எங்களால் விடமுடியலை.சித்தார்த்தும் சரி அவர் மனைவியும் சரி ஒருத்தர் மேல்



ஒருத்தர் உயிரையே வைச்சிருக்கவங்க..காதல் கல்யாணம் செய்துக்கிட்டவங்க..நாம எதுக்காக இந்த Code Red ஐ ஆரம்பிச்சோம்?.நம்ம



நாட்டில் ஊழலை விட இப்ப ரொம்ப அதிகமாயிட்டு இருக்கிறது விவாகரத்து தான்.இதை தடுக்க முடியாது அட்லீஸ்ட் குறைக்கவாவது



நம்மால் முடிஞ்சதை செய்யணும்னு தானே இதை ஆரம்பிச்சோம்.எவ்வளவு நாள் இராத்தூக்கத்தை கெடுத்துட்டு நாம இதில்



ஈடுப்பட்டிருப்போம்.இப்போ நீயே இப்படி பேசினால் எப்படி? என்று சற்றே வருத்தத்துடன் கூற



சுஜிதாவிற்கும் சற்றே புரிந்தது..சொல்லப்போனால் இந்த மாதிரி ஐடியாவை தந்ததே சுஜி தான்.என்னதான் வக்கீல் துறையில் நன்றாகவே



கால் ஊன்றி நின்றாலும் மூவரின் பெற்றோர் வாழ்க்கையும் ஒன்றுதான்.அனைவருமே எலியும் பூனையுமாக சண்டையிட்டு



கொள்பவர்கள்.சண்டை சண்டை எந்நாளும் சண்டைதான். இதில் வேடிக்கை என்னவென்றால் மூவரின் பெற்றோருமே நிச்சயித்து



திருமணம் செய்தவர்கள்.அதுவே அவர்கள் மூவரின் மனதிலும் நிச்சயித்த திருமணத்தை வேப்பங்காயாக வெறுப்பதற்கான காரணமாக



அமைந்தது.



இப்படியாகப்பட்ட சிறு சிறு விஷயங்கள் தான் நண்பர்கள் மூவரும் சேர்த்து இப்படி விவாகரத்து செய்யக்கோரி நிற்பவர்களை சேர்த்து



வைப்பதற்கான முயற்சியை செய்யத்தூண்டியது என்று கூறலாம்.அவர்கள் பெற்றோர் மேலிருந்த கசப்பு தான் கார்த்திக்கின் இந்த



முடிவிற்கு காரணம் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே..



அங்கு நிலவிய கனத்த மௌனத்தை கலைத்தது சரவணன் தான்.



"டேய் விடுங்கடா....கதை ரொம்ப மொக்கையா போகுது..ஒரு அடிதடி,வெட்டு குத்து ஒண்ணுமே இல்லாமல் விக்ரமன் படம் மாதிரி இருந்தா



நமக்கும் போர்..மத்தவங்களுக்கும் போர்.இப்போ நாம பார்க்க வேண்டிய காரியம் சித்தார்த்தனை எப்படி அவங்க வைஃபோட சேர்த்து



வைக்கிறதுங்கிறதை பத்தி தான்."என்று முக்கியக்கட்டத்திற்கு வர



சுஜிதா "இதுக்கு ஒரே வழி..நாம வெளிப்படையாவே இறங்கி விசாரிக்கிறது தான்.நாம மத்த கேஸ் மாதிரி அண்டர்க்ரவுண்ட் வேலை



பார்க்கமுடியாது..முக்கியமா தேவா கிட்ட பேசித்தான் ஆகணும்."என்று கூற



கார்த்திக்கின் முகம் ஏதோ மாதிரி சுளிக்க



அதை கண்ட சரவணன் "ஏன் இப்போ முகம் சுளிக்கிற அளவிற்கு என்ன நடந்தது கார்த்திக்.அவளும் உன்னை மாதிரி ஒரு வக்கீல்..



அப்படி நினைச்சுப்பார்.அப்ப இந்த மாதிரி சுளிப்பெல்லாம் உனக்கு வராது."என்று கொஞ்சம் காட்டமாகவே கூற



கார்த்திக் அவனை ஒரு முறை முறைத்து "Law காலேஜில் படிச்ச எல்லாரும் வக்கீல் தாண்டா..அது பிரச்சினை இல்லை.ஆனால் எந்த



மாதிரி வக்கீல்.அதுதான் மேட்டர்..காசுக்காக குடும்பங்களையும் மனசையும் பிரிக்கிற அவ வக்கீலா ?சொல்லுடா..அவளும் நானும் ஒரு



விஷயத்தில கூட ஒத்துப்போகமுடியாது.அதை முதலில் ஞாபகம் வைச்சிக்கோ.இப்போ கூட பாரு நான் சேர்த்து வைக்கிறேன் ,அவ



பிரிச்சு வைக்கிறா..எனக்கும் அவளுக்கு எப்படி ஒத்துப்போகும்?.நீயே சொல்லு."என்று அவனும் பதிலுக்கு காட்டமாக



சுஜிதா தான் இருவரையும் சமாதானப்படுத்தினாள்.பின் கார்த்திக்கிடம்



"கார்த்திக் நீ எல்லாத்தையும் ஒருதலையாவே பார்க்கிறே..அதுவும் உன் கண்ணோட்டத்தில் இருந்தே பார்க்குறே..இது தப்பு கார்த்திக்.



எத்தனையோ பேருக்கு விவாகரத்து ஒரு வரம் தான்.."என்று கூற



கார்த்திக் "அப்படிப்பட்டவங்களுக்கு சரி..ஆனால் சித்தார்த்தனுக்கு..."என்று கேட்க



சுஜிதாவால் ஒன்றும் கூற முடியவில்லை.



சரவணன் "சரிடா..உன் இஷ்டப்படியே யாருகிட்ட விசாரிக்கணுமோ போகலாம்..தேவா கிட்ட பேசவேண்டாம்"என்று கூற



அந்த பேச்சு அத்துடன் நின்றது..



அடுத்த நாள்....



ஒரு அதிர்ச்சிக்கரத்தகவல் இவர்களை வந்தடைந்தது..



(ஆறாம் நகர்வு முடிந்தது..)
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
கட்டம்-7




அன்று காலையே கார்த்திக்கிற்கு கவலையுடன் தான் ஆரம்பித்தது.



கடந்த ஒரு மாதமாக தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்த ரேகா இன்று தான் அவனை அணுகினார்.



அதற்கான காரணம் என்னவென்றும் அவனுக்கு புரிந்தது..



அவர் அவனிடம் தன் திருமணத்தை தானே நிச்சயிக்க கொடுத்த ஒரு மாதம் கெடு முடியும் நாள் இன்று.



தன் அன்னை என்றாவது ஒருநாள் இப்படி கத்திமுனையில் நிற்கவைப்பார் என்பது அவனுக்கு தெரிந்த விஷயம் தான்.



ஆனால் சரியாக ஒரு மாதக்கெடு முடிந்த அடுத்த நாளே கந்துவட்டிக்காரனை போல் ரேகா வருவார் என்று அவன் நினைக்கவில்லை தான்.



அந்த அளவிற்கா தன் திருமணம் அவர்களுக்கு முக்கியமாகி விட்டது ?என்று சற்று ஆச்சரியமாக கூட இருந்தது.



இப்படியாக அவன் மனதில் சஞ்சலங்கள் ஓடிக்கொண்டிருந்த நேரம்...



ரேகா நேராக விஷயத்திற்கு வந்தார்.



"என்ன முடிவு பண்ணிருக்கே? 'என்று கேட்க



கார்த்திக்கிற்கு அவர் தொனியில் எரிச்சல் வர "டிபனுக்காம்மா?..இட்லி இல்லைன்னா தோசைன்னு முடிவு பண்ணிருக்கேன்."என்று கூற



ரேகா சலிப்புடன் அவனை பார்க்க



கார்த்திக் "என்னம்மா எரிச்சலா இருக்கா?..எனக்கும் அப்படி தான் இருக்கு.ஏதோ கடங்காரன் மாதிரி வழியில் வந்து நின்னுட்டு



என்ன முடிவு பண்ணிருக்கே?..ந்னு கேட்டா என்ன அர்த்தம்?..இந்த ஒரு மாசமா நீங்க எங்கிட்ட மூஞ்சி கொடுத்து கூட பேசலை.



இப்போ கரெக்டா வந்து பேசினா எனக்கு கோபம் வராதா?. என்று எகிற



ரேகா "இந்த ஒரு மாசமா நீ வந்து எங்கிட்ட பேசிருக்கலாம்ல..உனக்கு அவ்ளோ ஈகோ இருந்தா நான் உன் அம்மா..எனக்கு எவ்ளோ



இருக்கும்.அது மட்டுமில்லாமல் நீ அன்னைக்கு பேசின பேச்சு அப்படி..அப்போ எப்படி நானா வந்து உங்கிட்ட பேசுவேன்னு



எதிர்பார்க்கிறே?.."என்று அமைதியாகவே கூற



தன் தவறை உணர்ந்தான் கார்த்திக்.என்ன தான் இருந்தாலும் தன் பெற்றோரின் தாம்பத்தியத்தை பற்றி விமர்சனம் பேச



அவனுக்கு உரிமை இல்லைதான்..அப்படி ஒன்றும் அவன் வாழ்க்கையை தறிக்கெட்டு விடவில்லை அவர்கள்.கட்டுக்கோப்பாக இருந்து



அவனையும் படிக்கவைத்து இப்போது சமூகத்தில் அவனையும் உயர்த்தியிருப்பது அவனது பெற்றோர்கள் தான்.அப்படிப்பட்டவர்களைப்



பற்றி பேசியது தவறுதான் என்று உணர்ந்த கார்த்திக் மனமுவந்து



"சாரிம்மா...நான் அன்னைக்கு அப்படி பேசினது தப்புதான்.என் தரப்பு நியாயத்தை சொல்லிருக்கணுமே தவிர..உங்களோட வாழ்க்கையை



விமர்சனம் செய்ய எனக்கு தகுதியில்லை.சாரிம்மா என்னை மன்னிச்சிடு."என்று மன்னிப்பு கேட்க



அதற்கு அந்த தாயாலும் தன் தனயன் பரிதவிப்பதை காணமுடியவில்லை.



மெதுவாக அவன் தலையை கோதி "சரிவிடுடா...நடந்தது நடந்தது போச்சு..இனி பேசும் போது கவனமா பேசு..அப்புறம்..இன்னைக்கு தான்



நான் கொடுத்த கெடு முடியுது...என்ன முடிவு பண்ணிருக்கே?."என்று தன் காரியத்திலயே கண்ணாய் இருக்க



கார்த்திக்கிற்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை..



"அம்மா..எந்த நேரத்தில் நீ கெடு வைச்சியோ?..ஒரு பொண்ணை கூட நான் பார்க்கலை..நான் தோத்துட்டேன்மா..நீ என்ன சொன்னாலும்



நான் கேக்குறேன்."என்று கூற



ரேகாவிற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை.



"என்னடா சொல்றே?..நிஜமாவா சொல்றே?."என்று கேட்க



கார்த்திக்கும் "ஆமாம்மா..எனக்கும் கழுதை வயசாகுது..இன்னும் எவ்ளோ நாள் தான் கல்யாணத்தை தள்ளி தள்ளி போடுறது..



நீயா பார்த்து என்ன முடிவு செஞ்சாலும் சரி.."என்று கூற



ரேகா "நான் கும்பிட்ட முருகன் என்னை கைவிடலை..நான் நினைச்ச மாதிரியே நீ சொல்லிட்டே..நீ வேணா பாரு..உனக்கேத்த



மகாராணியை நானே பார்த்து கட்டிவைக்கிறேன்."என்று கூறி முடிப்பதற்குள்



கார்த்திக் "அம்மா..ரொம்ப சந்தோஷப்படாதே..இதில் ஒரு கண்டிஷன் இருக்கு "என்று குண்டை தூக்கி போட



ரேகாவின் முகம் மாறியது..அதற்குள் கார்த்திக் 'அது ஒண்ணுமில்லைம்மா..நானே அந்த பொண்ணை பார்த்து ஓகேன்னு



தலையாட்டினா தான் நீ கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யணும்..புரியுதா?"என்று கூற



அவன் அன்னையின் முகத்தில் சற்றே ஆசுவாசம் காணப்பட்டது..



"ஃபூ...இவ்ளோதானே?..உன் சம்மதம் கூட இல்லாமலா கல்யாணம் பண்ணுவாங்க..கண்டிப்பா உன் சம்மதத்தோட தான் கல்யாணம்



நடக்கும்."என்று உறுதியளித்தார்..



ஆனால் பாவம் அவனின் இந்த நிபந்தனையை கூட நிறைவேற்ற முடியாமல் அவன் திருமணத்தை செய்விக்கப்போவதை அவர்



அறியவில்லை.



ஒருவழியாக கார்த்திக் திருமணத்திற்கு ஒத்துக்கொண்ட மகிழ்ச்சியில் ரேகா திளைக்க



கார்த்திக் ஒருவித நமுட்டு சிரிப்புடன் அலுவலகத்திற்கு கிளம்பினான்.



"என் சம்மதம் இருந்தால் தானே கல்யாணம்...நீ பார்க்கிற எல்லா பொண்ணையும் பிடிக்கலைன்னு தான் சொல்வேன்.அப்போ என்ன



செய்வீங்க?."என்று வில்லத்தனமாக கணக்கு போட



விதி அவன் தலையில் கொட்ட வேறு விதமாக கணக்கு போட்டது..



@@@@@@



அன்று இதுவரை தன் அன்னையிடன் கொண்டிருந்த பூசல் அனைத்தும் விலகி சற்றே ஆசுவாசத்துடனே அலுவலகம் சென்றான் கார்த்திக்.



சரவணன் கூட கேட்டான்.."என்னடா..இன்னைக்கு முகம் அதிசயமா பளிச்சுன்னு இருக்கு..எதாவது ஆள் செட் ஆகிடுச்சா?"என்று



கண்ணடித்தவாறே கேட்க...



கார்த்திக் பெருமூச்சுடன் "அதெல்லாம் என் வாழ்க்கையில் நடக்குமாடா?.."என்று கேட்க



சரவணன் "அதென்னடா அப்படி கேட்டுட்டே.நீதான் நம்ம குரூப்லயே கனவுக்கண்ணன்...கலியுக மன்னன்..நீ போய் இப்படி எல்லாம்



கேட்கலாமாடா?..."என்று கேட்க



கார்த்திக் "அடப்போடா..எங்கம்மா கொடுத்த கெடு முடிஞ்சு அவங்களே எனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க..இப்ப போய்



கண்ணன்,மன்னன் என்று சாவடிக்கிறே.."என்று அலுத்துக்கொள்ள



சரவணன் "அட ஆமாடா...அதுக்குள்ள ஒரு மாசம் ஆகிடுச்சா..இன்னும் கொஞ்சம் டைம் கேக்குறதுதானே?"என்று நக்கலாக கேட்க



கார்த்திக் "எங்கம்மா என்ன ஹைக்கோர்ட் ஜட்ஜா வாய்தா வாங்க...அப்படி கேட்டா அவங்க என்னை வாங்கு வாங்குன்னு



வாங்கிருவாங்க..அதான் நீங்களே பொண்ணு பாருங்கன்னு சொல்லிட்டேன்.."என்று கூற



சரவணன் அதிர்ந்து "அப்படின்னா காதல் கல்யாணம் பண்ணுவேன்னு சபதம் போட்டதெல்லாம் தக்காளி தொக்கா?."என்று கிண்டலடிக்க



கார்த்திக் எரிச்சலுடன் அவனை பார்த்து "அடப்போடா லூசு..இதுக்கு மேல நான் சாக்கு சொன்னேனா,எங்கம்மா என்னை கொன்னுடுவாங்க..



எப்படியும் என் விருப்பத்தை கேட்டுதானே அவங்க கல்யாணம் செய்யணும்..நான் ஒத்துக்கலைன்னா?"என்று நமுட்டு சிரிப்புடன் கேட்க



சரவணன் "ஒஹ்...நான் சொன்ன ஐடியாவா?..ஓகே..ஓகே..ஆனால் அதுவும் ஓரளவுக்குத்தான் சரிப்பட்டு வரும் யோசிச்சிக்கோ?.என்று



எச்சரிக்க



கார்த்திக் "அதுக்குள்ளே என் காதலி என்னை தேடி வருவா மச்சான்...அவளை அப்படியே தூக்கிட்டு போய் எங்கம்மா காலில் விழுவேன்."



என்று கூற



சரவணன் "ரொம்ப நாளா நீ இப்படியே சொல்லிட்டு இருக்கே..இது சரியில்லை..கடைசியில் காதலிக்க நேரமில்லை பாட்டில் வர்ற



முத்துராமன் வயசில தான் உனக்கு கல்யாணம் ஆகும் பார்த்துக்கோ."என்று கூற



கார்த்திக் "பரவாயில்லை நேரா அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கிறேன் போடா.."என்று சளைக்காமல் கூற



சரவணன் "அடப்பாவி..எல்லாத்துக்கும் ரெடியாதான் டா இருக்கே நீ.."என்று சொல்லிவிட்டு சிரிக்க



கார்த்திக்கும் கலகலவென சிரித்தான்.



அப்போதுதான் அங்கு ஓடிவந்த சுஜிதாவை பார்த்த கார்த்திக்



"பழைய பில்டிங்கில் ஓடாதே ஓடாதேனு உனக்கு எத்தனை வாட்டி சொல்றது?..என்று நக்கலடிக்க



அவன் தலையில் கொட்டிய சுஜிதா " என்னை கலாய்க்கிறது இருக்கட்டும்..ரெண்டு பேரும் இன்னைக்கு நியூஸ் பார்த்தீங்களா?"என்று கேட்க



ஆண்கள் இருவரும் புதிராய் பார்க்க சுஜிதா "சித்தார்த்துக்கு மேஜர் ஆக்சிடெண்ட்டாம்..இப்போ மலர் ஆஸ்பிடலில் அட்மிட்



பண்ணிருக்காங்களாம்.உங்களுக்கு தெரியுமா தெரியாதா?'என்று கேட்க



இருவரும் அதிர்ந்து "தெரியாதே..எப்போ?..எப்படி?"என்று கேட்க



சுஜி "இன்னைக்கு விடியற்காலை தான்..அவர் ஆபிசில் இருந்து வீட்டுக்கு போகும் வழியில்...சுயநினைவே இல்லைன்னு சொல்றாங்க'



என்று கூற



கார்த்திக் "நாம உடனே போய் அவரை பார்ப்போம்..இது விபத்தா ?இல்லை வேற எதாவதான்னு எனக்கு தெரியணும்."என்று புறப்பட



சுஜி "கார்த்திக்..எந்த அடிப்படையில் நாம போறது?..யாருன்னு கேட்டா? என்று யோசிக்க



கார்த்திக் சிரித்தப்படி "இப்பதிலிருந்து அவரோட பெர்சனல் லாயர் நான் "என்று கண்ணடித்து கூற



சரவணன் "போச்சு..இனி எல்லாம் குட்டையை குழப்பப்போறானோ தெரியலையே?"என்று கூறியபடி தலையில் அடித்துக்கொண்டு



புறப்பட்டான்.



@@@@@



ஒருவழியாக புறப்பட்டு அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல



அங்கு உள்ளே நுழைவதற்கே பெரும் பிரயத்தனப்படவேண்டி இருந்தது..எப்படியோ அங்குள்ள மருத்தவர் ஒருவரை தெரியும் என்பதால்



அவரை உள்ளே வந்தாயிற்று..



அந்த மருத்துவரே சித்தார்த்தனை பார்க்கும் மருத்துவரிடமும் அவர்களை சேர்பிக்க



"கொஞ்சம் கிரிட்டிக்கல் ஸ்டேஜ் தான்...மூளையில் ஒரு இடத்தில் ரத்தம் கட்டியிருக்கு..அதனால் கோமாக்கு போயிட்டார்..நினைவு



எப்போ திரும்பும்னு சொல்லமுடியாது.சர்ஜரிக்கு ஏற்பாடு செஞ்சிட்டு இருக்கோம்"என்று உதட்டை பிதுக்கி கூறிவிட



"நாங்க அவரை பார்க்கலாமா?"என்று மூவரும் கேட்க



மருத்துவர் "இப்போ நீங்க பார்க்கிறது சரியா இருக்காது..அவர் இன்னும் ஐசியுவில் தான் இருக்கார்.அவர் வைஃபே காலையில் இருந்து



பார்க்கமுடியாமல் புலம்பிட்டு இருக்காங்க.."என்று கூற



கார்த்திக் "என்னது வைஃபா?"என்று அதிர்ச்சியுடன் கேட்க



மருத்துவர் "ஆமா அவர் வைஃபுனு தான் சொன்னாங்க...கூடவே அவங்க ஃப்ரெண்டும் இருந்தாங்களே...அதோ...அவங்கதான்"என்று



கைகாட்டிய திசையில் கண்ட இருவரையும் பார்த்து அதிர்ந்து போயினர் நண்பர்கள்..



(ஏழாம் நகர்வு முடிந்தது...)
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
கட்டம்-8


"டேய்...அது...அது..யாருன்னு தெரியுதாடா உனக்கு?" என்று திக்கி திணறி சரவணன் கேட்க



சுஜி "ஆமாடா...அது திவ்..திவ்யாதானே?.."என்று கேட்க



கார்த்திக் "ஆமாடா...அது கண்டிப்பா திவ்யாதான்."என்று உறுதிப்படுத்த



சரவணன் "இப்படி ஹிந்தி சீரியல் டப்பிங்க் மாதிரி சொன்னதையே சொல்லாமல் அங்கே போய் பார்க்கலாம் வாங்கடா?."என்று



அருகில் விரைந்து செல்ல



அவர்கள் நினைத்ததை நூறு சதவிகிதம் உறுதிப்படுத்துவது போல் அங்கே அதிர்ந்து போய் அமர்ந்திருந்தது அவர்களின் தோழி திவ்யாவே



தான்.



அவர்கள் வந்ததை கூட அறியாமல் எங்கேயோ வெறித்து பார்த்தப்படி அமர்ந்திருந்த திவ்யா....அவர்கள் வந்து ஐந்து நிமிடமாகியும் கூட



கண்ணிமைக்கக்கூட இல்லை..



"இவ என்னடா இப்படி உட்கார்ந்திருக்கா?..சித்தார்த்தோட வைஃப் இவளா?...கல்யாணம் ஆனதை கூட நம்மக்கிட்ட சொல்லலையே? என்று



சுஜிதா கவலைப்பட



அவளை பார்த்து முறைத்த கார்த்திக் "உன் கவலை உனக்கு..அவளுக்கு டைவோர்ஸே ஆகிடுச்சு..இப்போ உட்கார்ந்து கல்யாணத்துக்கு



கூப்பிடலையேனு கவலைப்படுறே?"



சரவணன் "அதை விடுறா..அவனுக்கு ஆக்சிடெண்ட் ஆனதும் இப்படி பிரம்மை புடிச்ச மாதிரி உட்கார்ந்திருக்கா?..இவளா டைவோர்ஸ்



வேணும்னு ஒத்தைக்காலில் நின்னா.."என்று தன் வக்கீல் வாதத்தை எடுத்து வைக்க



கார்த்திக் "உனக்கு இப்போ வந்த சந்தேகம் எனக்கு எப்போவோ வந்திடுச்சு...இதெல்லாம் அந்த பொம்பளை நாரதர் வேலையா தான்



இருக்கும்." என்று பல்லை கடித்தப்படி கூற



சரவணன் "பொம்பளை நாரதரா அது யாரு?.."என்று கேட்க



அதே சமயம்...



"ஹே..நீங்களா?...இங்க எப்படி நீங்க? "என்று பின்னிருந்து ஒரு குரல் கேட்க



கார்த்திக் திரும்பாமலயே "நான் சொன்னேனில்ல...பொம்பளை நாரதர் அது இதுதான்.."என்று அடிக்குரலில் கூற



நண்பர்கள் இருவரும் சிரிப்பை அடக்கப்படாதபாடு பட்டனர்.



அந்த குரலுக்குரியவர் வேறு யாருமல்ல நம் நாயகி தேவசேனா தான்..



கையில் இரு தேநீர்க்கோப்பையுடன் "நீங்க இங்க..உங்களுக்கு எப்படி தெரியும்?"என்று அதிர்ச்சி பாதி ஆச்சரியம் மீதியாக கேட்ட



தேவா...28 வயதான இளம்பெண் வக்கீலுக்குரிய அத்தனை சாமுத்ரீகா லட்சணங்களையும் பெற்றிருந்தாள்..வெள்ளை நிறத்தில்



முட்டி வரை ஆடும் முழுக்கை குர்தா மற்றும் ஜீன்ஸ்..விரிந்த கூந்தலை கிளிப் வைத்து அடக்கி இலகுவாக கொண்டை



போட்டிருந்தாள்.பல நாள் தூக்கம் காணாத கண்கள் கருவளையங்களை கிறுக்கியிருந்தது. எந்தவித அழகு சாதனங்களையும் பார்க்காத



முகம் தன் கரடுமுரடான குணத்தை காட்ட ஆரம்பித்திருந்தது.ஆயினும் அவள் உடையிலும் நடையிலும் நேர்த்தி



இருந்தது..உன் வட்டத்திற்குள்ளேயே நில்..என்பது போல் பார்வையில் ஒரு தீட்சண்யம் தெரிந்தது.



.இப்படியாக ஒரு ஹைக்கூ கவிதை போலிருந்தவளை பார்க்கவே பலர் பயப்படுவர்..சில பேர் அவளை கொண்டாடுவர்.



ஆனால் கொண்டாடினாலும் தூற்றினாலும் அனைவருக்கும் அவள் தருவது ஒரு புன்னகை மட்டுமே..



இப்படியாக அவளை அளவெடுத்து விட்டப்படியால் இப்போது கதைக்கு செல்வோம்...



நண்பர்களை பார்த்ததும் தேவாவிற்கு அதிர்ச்சி தான் என்றாலும் மனத்தின் ஏதோ ஒரு மூலையில் ஆசுவாசமும் வந்தது


அது ஏன் என்று அவளுக்கே சொல்ல தெரியவில்லை.



ஆனால் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தன்னையே முறைத்துக்கொண்டிருந்தவர்களை பார்த்து குழம்பி



"என்னப்பா...நான் கேட்டுட்டே இருக்கேன்...நீங்க என்னை முறைச்சிட்டே இருக்கீங்க?"என்று கேட்க



கார்த்திக் முன்வந்து அமைதியாக நின்று அவளை பார்த்தான்.



"இல்லை நெருங்கின தோழிக்கே விவாகரத்து வாங்கிக்கொடுத்த பெரிய வக்கீல் டிவோர்ஸ் தேவசேனாவை வியந்து போய்



பார்க்கிறோம்"என்று நக்கலாக கூற



தேவசேனா அடிவாங்கினாற்போல் நிமிர்ந்து பின் கணநேரத்தில் முகத்தில் ஒரு அழுத்தமான புன்னகையை பதித்து



"நீங்க இன்னும் மாறவே இல்லை கார்த்திக்.அதே அவசரப்புத்தி உங்களை விட்டு இன்னும் போகலை."என்று அவனை கூர்மையான



பார்வை பார்த்து கூற



கார்த்திக் "நீங்களும் தான் இன்னும் மாறவே இல்லை தேவசேனா..அதே அவசரப்புத்தியோட தான் நீங்களும் இந்த வேலையை



செய்திருக்கீங்க.."என்று நக்கலாகவே கூற



தேவா எரிச்சலாகி "ஷட் ..அப்..என் தொழிலை பத்தி பேச உங்களுக்கு எந்த வித தகுதியும் இல்லை."என்று கூற



இது போகும் போக்கு சரிப்பட்டு வரவில்லை என்பதால் நடுவே

சரவணனும் சுஜியும் புகுந்து "டேய்...உங்க ரெண்டு பேர் சண்டைக்கு இது இடமே இல்லைடா...நமக்கு நிறைய வேலை இருக்கு..இவ்வளவு வருஷம் கழிச்சும்



உங்க சண்டையை விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது தப்புடா.."என்று சரவணன் சற்றே சாந்தமாய் பேச



அங்கே நடந்துக்கொண்டிருந்த உரையாடலின் சூடு கொஞ்சம் குறைந்தது.



சுஜிதா தான் தேவாவிடம் வந்து "தேவா..திவ்யாவுக்கு எப்போ கல்யாணம் ஆச்சு..எங்களுக்கெல்லாம் தெரியவே தெரியாது..சித்தார்த்தனுக்கு



எப்படி? எங்களுக்கு ஒரே குழப்பமா இருக்கு தேவா..சொல்லு."என்று கேட்க



தேவா அதற்கு ஒழுங்காக பதில் கூறி இருக்கலாம்.



அதற்கு மாறாக "அதெல்லாம் இருக்கட்டும் நீங்க எப்படி இங்க வந்தீங்க?..உங்களுக்கு எப்படி சித்தார்த்தனை தெரியும்?":என்று கேட்க



கார்த்திக்கிற்கு கோபம் பன்மடங்கு ஏறியது."உன் மனசில் என்ன நினைச்சிட்டு இருக்கே?.இதெல்லாம் தெரிஞ்சா தான் எங்கக்கிட்ட



சொல்வியா?.நாங்க ஒண்ணும் உன்னை விட அவளுக்கு துரோகம் செய்யப்போறதில்லை."என்று எகிற



தேவா பதிலுக்கு வாயை திறப்பதற்குள் சரவணன் "கார்த்திக் நீ கொஞ்சம் வாயை மூடிட்டு இருக்கிறதுன்னா இரு..இல்லை கீழே போய்



வெயிட் பண்ணு."என்று வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாக பேச அவனின் குரலில் இருந்த அழுத்தத்தை பார்த்து கார்த்திக் சற்றே



மட்டுப்பட்டான்.



அதன் பின் சரவணன் தேவாவிடம் திரும்பி " தேவா..நாங்க கேக்குறதெல்லாம் திவ்யாவோட நல்லதுக்கு தான்.நாங்க வந்ததே



சித்தார்த்தை பார்க்கத்தான்.எங்களுக்கு திவ்யா தான் சித்தார்த்தோட மனைவி என்றே தெரியாது.டிவி,நியூஸ்லயும் அவர் மனைவி



பெயர் பிரியா என்று போட்டிருந்ததாய் தான் ஞாபகம்,"என்று கூற



தேவா ஒரு மெல்லிய சிரிப்புடன் "திவ்யாவுக்கும் சித்தார்த்துக்கும் கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் ஆச்சு.காலேஜில் தான்



அவள் பெயர் திவ்யா.அவ முழுப்பெயர் திவ்யப்பிரியா.சித்தார்த் தன் எல்லா தொழில்களுக்கும் பிரியா பேர்லயே ஆரம்பிச்சதால



வெளிவட்டத்தில் பிரியா என்ற பேர் தான் எல்லாருக்கும் தெரியும்."என்று கூற



சுஜிதா "ஆனா எப்போ கல்யாணம் ஆச்சு?..கண்டிப்பா எங்களை கூப்பிடாமல் கல்யாணம் செய்திருக்கமாட்டாள்.என்ன மாதிரியான



சூழ்நிலையில் அவள் கல்யாணம் நடந்தது.?"என்று கேட்க



தேவா "நான் மறுபடியும் கேக்குறேன்.உங்களுக்கு எப்படி சித்தார்த்தை தெரியும்?"என்று கேட்க மூவரும் ஒருவரையொருவர்



பார்த்துக்கொண்டனர்.



இது தான் தேவசேனா.தான் பிடித்த பிடியை எந்த காரணம் கொண்டும் தளர்த்திக்கொள்ள மாட்டாள்.தனக்கு தேவையான தகவல்களை



பெறாமல் எதிராளிக்கு தகவல் தரமாட்டாள்.இதுதான் அவள் ஒரு பிரபல வக்கீலாய் இருப்பதற்கு காரணம்.



அவளை பற்றி தெரிந்த சரவணனும் சுஜிதாவும் தாங்கள் வந்த கதையை சொல்ல எத்தனிக்க



கார்த்திக் மட்டும் "அப்படி உங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிதான் எங்களுக்கு விவரம் தெரியணும்னு இல்லை.நாங்க வேற



ஆளை பார்த்துக்கிறோம்"என்று ஏதோ ஆட்டோக்காரனிடம் பேரம் பேசுவதை போல பேசிய கார்த்திக்கை பார்த்து மற்ற இருவரும்



பல்லை கடித்தனர்.



சரவணன் "கொஞ்சம் சும்மா இரு கார்த்திக்.அவ யாரு..நம்ம கிளாஸ்மெட் தானே..பாதிக்கப்பட்டிருக்கிறதும் நம்ம கிளாஸ்மெட்..



உண்மையை சொல்றதில் எதுவுமில்லை."என்று அழுத்தமாக கூற



கார்த்திக் "அந்த விஷயத்தை பத்தி யாருகிட்டயும் சொல்றதில்லைனு முடிவு செய்திருக்கோம்."என்று முகத்தை உர்ரென்று



வைத்தப்படி கூற



சரவணனுக்கும் சுஜிதாவிற்கும் தலையில் அடித்துக்கொள்ளலாம் போலயிருந்தது.சாதாரணமாக கார்த்திக் இப்படி பேசுபவனே அல்ல.



நிறைய தொழில் வரைமுறை கொண்டவன்.ஆனால் இன்றைக்கு தேவசேனாவை கண்டதில் இருந்தது சற்றும் பக்குவம் இல்லாமல்



பேசுபவனை என்னை செய்வதென்றே இருவருக்கும் தெரியவில்லை.



ஆனாலும் பல்லை கடித்தப்படி சரவணன் "இதை நாம சொல்லித்தான் ஆகணும் கார்த்திக்.வேற வழியில்லை..அவளோட



சந்தேகத்தையும் தீர்த்தாகணும்."என்று இரண்டே வரிகளில் கூறினாலும் அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுக்க



கார்த்திக் "சரி..ஏதோ செய்து தொலைங்க...ஆனால் நான் சொல்றேன்.இது நம்மளுக்கு ஆபத்தை தான் தரும்"என்று கூற



தேவசேனாவிற்கு பாய்ந்து அவனை கொல்லும் அளவிற்கு வெறி வந்தது.



"ஹலோ..மிஸ்டர்..நான் ஒண்ணும் மாஃபியா கிடையாது..ஆபத்தை உண்டாக்குறது.சும்மா வாய்க்கு வந்தப்படி பேசாமல் கொஞ்சம்



பக்குவமா பேசினா நல்லா இருக்கும்..தகவல் தெரிய வேண்டியது உங்களுக்கு தான் எனக்கு இல்லை."என்று கூற



கார்த்திக் "ஹே..என்ன ஓவரா பேசுறே...அப்படி ஒண்ணும் உங்கிட்ட இருந்து எங்களுக்கு எதுவும் தெரியவேண்டாம்" என்று



விதண்டாவாதமாய் பேச



சரவணன் நடுவே புகுந்து "கார்த்திக்..நீ தயவுசெய்து இந்த விஷயத்தில் தலையிடாதே..எதுவென்றாலும் நீ இங்கே இருந்து



கிளம்பினதுக்கப்புறம் பேசு..இதுதான் நான் கடைசியா உன்னை எச்சரிக்கிறது.இனி ஒரு தரம் நீ குதர்க்கமாய்பேசினே நானும்



சுஜியும் கிளம்பிடுவோம்."என்று எகிற



கார்த்திக் வேறு வழியின்றி வாயை முடினான்.



அதற்கு மேல் தாமதிக்காமல் சரவணன் "ஒண்ணுமில்லை தேவா...எங்களை பார்க்க ஒருதடவை சித்தார்த் வந்திருந்தார்.ஆனால்



வந்த விஷயத்தை சொல்லாமலே எங்க ஆபிசில் இருந்து கிளம்பிட்டார்..நாங்களும் என்ன விஷயமாயிருக்கும் இருக்கும் அப்படின்னு



மண்டையை பிச்சிக்கிட்டோம்.அப்புறமா தான் தெரிஞ்சது அவருக்கு விவாகரத்து ஆனது..அதுக்கப்புறம் தான் அவர் எங்கக்கிட்ட உதவி



கேட்டு வந்திருக்கலாம் என்று தெரிஞ்சது..."என்று சரவணன் கூறிக்கொண்டே போக



தேவாவிற்கு தெளிவதற்கு பதிலாக குழம்பியது.



" ஒரு நிமிஷம்..எனக்கு ஒண்ணுமே புரியலை.சித்தார்த் ஏன் உங்களை வந்து பார்க்கணும்?."என்று தான் பிடித்த பிடியில் உறுதியாய்



இருக்க



சரவணனும் சுஜிதாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு தங்கள் முழுகதையும் கூற ஆரம்பித்தனர்.



இந்த இருவரும் தேவாவிடம் இவ்வளவு நெருங்குவது பிடிக்காமல் கருவினான் கார்த்திக்..



ஆனால் அவனுக்கு தெரியவில்லை...இனியுள்ள ஒவ்வொரு நாளும் அவளுடனே பயணிக்கும்படி விதி விளையாடப்போகிறது என்று..



ஆயினும் இங்கு நடந்து களேபரம் ஒன்றை கூட கண்டுக்கொள்ளாமல் தன் கணவனை பற்றிய நினைவில் வெறித்தப்படி



அமர்ந்திருந்தாள் சித்தார்த்தின் மனைவி திவ்யா...



காலம் இவர்களை எங்கே சென்று இணைக்கப்போகிறது?..



காத்திருப்போம்...



(எட்டாம் நகர்வு முடிந்தது..)
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
கட்டம்-9


ஒருவழியாக அவர்கள் வழக்குரைஞர் படிப்பை முடித்தவுடன் சொந்தமாக தொழில் செய்ய திட்டமிட்டது,



பிறகு ஓரளவு பிரபலமடைந்தது,பிறகு விளையாட்டு போல விவாகரத்து கோரி வருவபவர்களை சேர்த்துவைக்கத்திட்டமிட்டது,



அதில் ஓரளவு வெற்றியும் அடைந்தது என அனைத்தையும் அவர்கள் கூறி முடிப்பதற்குள் இரண்டு மணிநேரம் ஆகியிருந்தது.



அனைத்தையும் கேட்ட தேவாவின் முகத்தில் மெல்லியதாக புன்னகை தோன்றியது..



"கங்கிராட்ஸ்..நீங்க செய்யறது கண்டிப்பாவே பாராட்டப்படவேண்டிய விஷயம்.எனக்கு ரொம்ப சந்தோஷம்."என்று கூற



கார்த்திக் வாயை பொத்திக்கொண்டு சிரித்தான்.



எரிச்சலுடன் மூவரும் அவனை பார்க்க,சுதாரித்த அவன்



"இல்லை இந்த வார்த்தையை நீ சொல்ற பார்...அதுதான் சிரிப்பு வந்திருச்சு.."என்று கூற



சரவணனும் சுஜிதாவும் "கார்த்திக்க்க்க்...."என்று பல்லை கடித்து கூற



"ஓகேஏஏஏஏ" என்று அடங்கினான் அவன்...



முதலில் புரியாமல் விழித்த தேவாவிற்கு அவன் கூறியதன் காரணம் புரிந்தவுடன் அவனை கொல்லும் அளவிற்கு கோபம் வந்தது.



அதனை அடக்கி "நான் பேமிலி லாயர் தான்..ஆனால் அதுக்காக விவாகரத்தை மட்டும் தான் ஆதரிப்பேன்னு அர்த்தம் இல்லை."என்று



அழுத்தமான குரலில் தெளிவாக கூற



"சாத்தான் வேதம் மட்டும் ஓதாமல் பைபிளையும் சேர்த்து ஓதுகிற கதையா இருக்கே?"என்று கூற



தேவா "ஏய்..என்ன நானும் பார்க்கிறேன்..ஓவரா பேசிட்டு இருக்கே...நீயென்ன பெரிய இவனா?...இவ்வளவு நாளில் நீ ஒரு நிரபராதிக்கு



கூட தண்டனை வாங்கிக்கொடுத்ததில்லையா?.. இதெல்லாம் தெரிஞ்சிட்டு தான் நாம் இந்த வக்கீல் தொழில் எடுத்திருக்கோம்.அதை



முதலில் ஞாபகம் வைச்சிக்கோ.?"என்று நறுக்கு தெறித்தாற்போல் கூற



கார்த்திக் "ஹே...என்ன மரியாதை குறையுது?."என்று எகிற



சரவணன் கார்த்திக்கின் வாயை பொத்தியபடி "தேவா..நீ தயவுசெய்து தப்பா எடுத்துக்காதே..இவனுக்கு இன்னைக்கு என்ன ஆச்சுன்னே



தெரியலை..ப்ளீஸ்..இப்படி ஒருத்தன் உன் முன்னாடி நிக்கிறதையே மறந்திடு."என்று மன்றாடி கேட்க



தேவா தன் கோபத்தை சற்றே குறைத்தாலும் கார்த்திக்கின் முகம் பார்க்காமல் திரும்பியடி நின்றாள்.



அதற்கு மேல் கார்த்திக்கும் ஒன்றும் பேசாமல் மனதுக்குள் கருவியபடி நின்றிருந்தான்.



பின் சுஜிதா திவ்யாவை பார்த்து "தேவா...இவ ஏன் இப்படி உட்கார்ந்திருக்கா?..தயவுசெய்து சொல்லு..என்ன நடந்தது?" என்று கெஞ்சி கேட்க



அதற்கு மேல் தேவாவிற்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை.



திவ்யாவின் அருகில் சென்று அமர்ந்து அவள் கையை பிடித்தவள்



"இதை சொல்றது சரியா தப்பானு எனக்கு தெரியலை..ஆனால் இதை சொன்னால் நல்லது நடக்கும்னு தோணுது..அதான் சொல்றேன்.



என்னை மன்னிச்சிடு திவ்யா.."என்று மெல்லியதாக கூறி



தனக்கு தெரிந்தவற்றை ஒவ்வொன்றாக கூற ஆரம்பித்தாள்.



@@@@@



திவ்யா தன் படிப்பை முடித்துவிட்டு சென்னையிலயே ஒரு பிரபல வக்கீலிடம் ஜூனியராக வேலைக்கு சேர்ந்திருந்தாள்..



இவ்வளவு நாள் இருந்த குழந்தைத்தனம் மாறி முழு நேர வக்கீலாக உருவாகிக்கொண்டிருந்த நேரம் அது..



அவளின் குருவாகவும் ஆசானாகவும் இருந்து அவளை வழிநடத்திக்கொண்டிருந்தார் வக்கீல் சங்கரன்.



சங்கரன் அவர்கள் பல வளர்ந்து வரும் கம்பெனிகளின் வணிகவியல் ஆலோசகராகவும் இருந்து வந்தார்..



அப்படிப்பட்ட வளர்ந்துக்கொண்டிருந்த தொழிலதிபர்களில் ஒருவன் தான் சித்தார்த்.



நகரத்தின் மையப்பகுதியில் சிறியதாக சூப்பர் மார்க்கெட் எனப்படும் பல்பொருள் அங்காடியை துவங்கியிருந்தான் சித்தார்த்.



"இப்போ சின்ன அளவில் இருந்தாலும் பையன் நல்ல ஸ்மார்ட் திவ்யா...இன்னும் கொஞ்ச நாளில் பெரிய ஆளாகிடுவான்.Mark my



words." என்று அடிக்கடி சங்கரன் திவ்யாவிடம் சிலாகிப்பது உண்டு.



அப்போதெல்லாம் திவ்யாவிற்கு தெரியாது அவன் தான் தன் எல்லாமாகவும் இருக்கப்போகிறான் என்பது.



தொழில்முறை பழக்கம் என்பதால் திவ்யாவிற்கும் சித்தார்த்திற்கும் இடையில் இருந்தது மெல்லிய நட்பு மட்டுமே.



அதற்கு மேல் செல்ல இருவருக்குமே நேரமும் இல்லை எண்ணமும் இல்லை.



ஏனெனில் திவ்யா தொழிலில் கண்ணும் கருத்துமாய் இருந்தாள் என்றால் சித்தார்த்தனோ வெற்றிக்கொள்ளும் வெறியில் இருந்தான்.



சித்தார்த்தனுக்கு பூர்வீகம் தஞ்சையிலுள்ள சிறிய கிராமம் தான்...தந்தை ஒரு நடுத்தர வசதியுடைய விவசாயி..அவனுக்கு தந்தை மட்டும்



தான்.தாய் இல்லை...ஒற்றை பிள்ளையாய் வேறு பெண் துணையின்றி இவனை வளர்க்கப்படாத பாடு பட்டார்.ஆயினும் இன்னொரு



திருமணத்தை பற்றி அவர் நினைத்து கூட பார்க்கவில்லை.ஊரில் உள்ள அனைவரும் வற்புறுத்தினாலும் அவரின் முடிவை



மாற்றிக்கொள்ளவில்லை..இப்படியாக தந்தையின் அரவணைப்பிலயே அடைக்கோழியாக வளர்ந்தான் சித்தார்த்தன்.படிப்பில் கெட்டி



என்பதால் பள்ளியில் நன்மதிப்பெண்கள் எடுத்து தேறி கல்லூரியில் சேர்ந்து வணிகவியல் மற்றும் மேலாண்மை படிப்பை முதல்



வகுப்பில் முடித்தான்.பல கம்பெனிகளில் இருந்து அவனுக்கு வேலைக்கான அழைப்புகள் வந்தபடி இருந்தன.



இதனால் படிப்பை முடித்தவிட்டு வீட்டிற்குவந்து தந்தையிடம் கலந்தாலோசித்துவிட்டு வேலைக்கான முடிவை எடுக்கலாம் என்று



தன் ஊருக்கு வந்திருந்தான் சித்தார்த்தன்.



அப்போதுதான் அவன் வாழ்வில் முதல் புயல் வீசியது...அந்த புயல் தான் அவனை அந்த ஊரையே வெறுத்து வர வைத்தது என்று கூறலாம்.



@@@@@



அன்று காலை தான் ஊருக்கு வந்திருந்தான் சித்தார்த்தன்..



அவன் தந்தை வேலுமாணிக்கம் அவனிற்காகவே காத்திருந்து அவனை அழைத்து வந்திருந்தார்..



"ராசா..கொஞ்சம் படுத்து அசருய்யா...ராவெல்லாம் ரயிலில் சரியா உறங்கிருக்கமாட்டே...கொஞ்சம் கண்ணசரு..நான் சட்டுனு



கோழிக்குழம்பும் இட்லியும் செஞ்சு வைச்சிட்டு எழுப்புறேன்."என்று வாஞ்சையுடன் அவன் தலையை கோதி கூற



சித்தார்த்தனும் "அய்யா...நீ எனக்கு அய்யனா கிடைச்சதுக்கு நான் கொடுத்து வைச்சிருக்கணும்..அம்மா இருந்தா கூட என்னை



இப்படி பார்த்துக்குமான்னு தெரியாதுய்யா..இத்தனை வருஷத்தில எனக்கு அம்மா ஞாபகமே வந்ததில்லைன்னா அதுக்கு நீதான்



காரணம் அய்யா.."என்று அவர் தோளின் மேல் சாய, அவன் தாயை பற்றி பேசியதும் மாணிக்கத்தின் முகத்தில் கணநேரத்தில் ஒருவித



பதற்றம் மின்னி மறைந்தது.



ஆயினும் அதை மறைத்துக்கொண்டு "ராசா...நான் வாழ்றதே உனக்காகத்தானேய்யா..இப்படியெல்லாம் பேசக்கூடாது..எதை பத்தியும்



யோசிக்காமல் படுத்து உறங்கு...நான் சமைச்சு வச்சிடுறேன்."என்று கூறிவிட்டு செல்ல சித்தார்த்தனின் கண்ணோரத்தில் ஒரு துளி



கண்ணீர் எட்டிப்பார்த்தது.



இப்படியாக தந்தையும் மகனும் சிற்றுண்டியை முடிக்க



சித்தார்த்தன் "அய்யா...நானும் வயக்காட்டுக்கு வரேன்..கொஞ்சம் வேலை விஷயமா பேசணும்..அப்படியே வயலையும் பார்த்தது போல



இருக்கும் "என்று கேட்க மாணிக்கமும் ஒத்துக்கொண்டார்.



இருவரும் வேலை விஷயத்தை பற்றி பேசியபடியே வயலிற்கு வந்தனர்..



வேலுமாணிக்கத்திற்கு இருந்த இரண்டு ஏக்கர் பூமி தான் அவர்களை இவ்வளவு நாள் காப்பாற்றி வந்தது. அதில் ஒரு ஏக்கரில் நெற்பயிரும்



மீதமுள்ள ஏக்கரில் தென்னை,வாழை,மாமரம் ஆகியவற்றை வளர்த்துவந்தார்..ஒரு சிறிய இடத்தில் காய்கறி தோட்டமும் போட்டிருந்தார்.



இதனால் அவர்களின் உணவிற்கும் பிற செலவுகளும் மட்டுப்பட்டன..இப்படியாக அந்த இடமே சொர்க்கலோகம் போல காட்சியளித்தது.



வெயில் காலங்களில் வழிப்போக்கர்கள் கூட அங்கே வந்து தங்கிசெல்வது வழக்கம்..அவர்கள் யாரையும் மாணிக்கம் தடுத்ததே இல்லை.



முடிந்தவரை மற்றவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்யவேண்டும் என்பது மாணிக்கத்தின் குணம்.அவரின் குணம் தான் அவரை



மரியாதையுடன் வாழவைத்தது.



வயல்காட்டிற்கு வந்தவுடன் சற்றுநேரம் இயற்கை அழகில் தன்னை தொலைத்து சித்தார்த்தன் நிற்க



அவன் தோளை தொட்ட மாணிக்கம் " என்ன ராசா..திகைச்சுப்போய் நிக்குற..?"என்று கேட்க



சித்தார்த்தன் "இந்த இடத்திற்கு வந்தா போகவே மனசில்லைய்யா..ரொம்ப அழகா இருக்கு..இதில் இருக்கும் ஒவ்வொரு மரத்திலயும் உன்



உழைப்பு தான்யா தெரியுது.."என்று புகழ



மாணிக்கம் சிரிப்புடன் "பூமியை நாம மதிச்சா நம்மளை அது வாழவைக்கும் ராசா..இந்த இடத்தில் தான் என் கடைசி மூச்சு வரை



இருக்கணும்..அதுதான் என் ஆசை."என்று நெகிழ்ச்சியுடன் கூற



சித்தார்த்தன் "என்னய்யா..பெரிய வார்த்தை பேசிட்டு..இவ்வளவு நாள் தனியா இருந்தது போதும்யா..என் கூட டவுனுக்கு வந்திரு..



எனக்கும் வேலை கிடைச்சிடுச்சு..இன்னும் ஏன் நீ வேலை செஞ்சு கஷ்டப்படணும்.?..எல்லாத்தையும் ஆள் பார்த்து ஒப்படைச்சிட்டு



எங்கூட வாய்யா?"என்று அன்பாக கூப்பிட



அவரோ அதே மெல்லிய சிரிப்புடன் "ராசா...உனக்கு ஒண்ணு தெரியுமா? நான் பொறந்ததே இந்த தோட்டத்து மோட்டார் ரூம்ல தான்.



உங்க ஆச்சி வயக்காட்டுல வேலை பார்த்துட்டு இருக்கும்போது தான் வலி வந்து என்னை பெத்தா..அதனால் என் மூச்சில கலந்ததுய்யா



இந்த பூமி..இதை விட்டுட்டு வந்தா என் பொணம் தான் வரும்."என்று கூறிமுடிக்கும் அவர் வாயை பொத்தினான் மகன்.



"என்னய்யா..நீ..இந்த மாதிரி இனியொரு தரம் இந்த வார்த்தையை சொல்லாதே..உனக்கென்ன?..இங்கேயே தானே இருக்கணும்.இங்கேயே



இரு...நான் உன்னை வற்புறுத்தலை.."என்று கூறிவிட்டு முகத்தை திருப்ப



மாணிக்கம் அவனை சமாதானப்படுத்துவதற்குள் அங்கே ஊர்க்காரர்கள் சித்தார்த்தனை கண்டு நலம் விசாரிக்கவந்தனர்..



"என்னப்பு..நல்லாயிருக்கியா?..இந்த ஊரை மறந்துராதேய்யா."என்று ஒரு பெரியவர் ஆரம்பிக்க



சித்தார்த்தன் தன் மனநிலையை மாற்றிக்கொண்டு சிரித்தான்.



பின்பு மாணிக்கத்திடம் திரும்பி "என்ன மாணிக்கம்?..மவனுக்கு கல்யாணத்துக்கு பார்த்திருக்கியோ?"என்று லேசாக கொளுத்திப்போட



மாணிக்கம் லேசான சிரிப்புடன் "இப்போதான் அவனுக்கு வேலையே கிடைச்சிருக்குய்யா..கொஞ்ச நாள் போகட்டுமே.."என்று முடிக்க



அவரோ விடாமல் "உன் மவன் பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கான்..கைநிறைய சம்பாதிக்கிறான்.பெரிய கையா தான் பாப்பே.."



என்று குதர்க்கமாக பேச, சித்தார்த்தனோ நெளிந்தான்.



ஆனால் மாணிக்கமோ தடுமாறாமல் "அதெல்லாம் இல்லைய்யா...நல்ல குடும்பமா குணமான பொண்ணா இருந்தா போதும்.அதுவே



பெரிய செல்வம்தான் "என்று கள்ளங்கபடமில்லாமல் கூற சித்தார்த்தனுக்கு சற்று பெருமையாக கூட இருந்தது.



ஆனால் அவர்களின் வளர்ச்சியை பிடிக்காத ஊர்க்கார பெரியவரோ இடம் பொருள் எதையும் பார்க்காமல் அந்த வார்த்தையை



வீசினார்..அந்த வார்த்தை தான் அன்று அந்த குடும்பத்தையே உலுக்கி சுக்கு நூறாக்கி போட்டது.



அவர் சொன்னது இதுதான்.



"அது சரி..அதே மாதிரி பொண்ணு வீட்டுக்காரங்களும் பார்ப்பாகளே..அப்போ என்ன செய்ய?.உன் பொண்டாட்டி செஞ்ச காரியம் அப்படி



ஆச்சே.?"என்று நக்கலாக கூற கூட வந்தவர்களும் கலகலவென சிரித்தனர்.



சித்தார்த்தன் அந்த வார்த்தைகளில் அதிர்ச்சியுற்றான்..



இதுநாள் வரை அவன் தாய் இறந்துவிட்டதாக தான் கூறி மாணிக்கம் அவனை வளர்த்தார்...அதுவும் ஊர்க்காரர்களிடம் அவனை



ஒன்றவே விடமாட்டார்..யாராவது வீட்டிற்கு வந்தால் கூட அவனை உள்ளே அனுப்பிவிட்டு தான் பேசவே ஆரம்பிப்பார்.பள்ளி



கல்லூரி அனைத்தையும் வெளியூரிலயே படிக்கவைத்தார்..அதனால் சித்தார்த்தன் இந்த 23 வயது வரை இம்மாதிரி வார்த்தைகளை



கேட்டதே இல்லை.இப்போது திடீரென கேட்டதும் அவன் இதயமே ஒரு கணம் நொறுங்கி தீயாய் எரிய அவன் தந்தையை பார்க்க



அவரோ குனிந்த தலை நிமிராமல் நிற்க



வந்தவர்களோ இன்னும் எள்ளி நகையாட ஆரம்பித்தனர்..



"ஆனால் ஒண்ணு மாணிக்கம்..உன் பொண்டாட்டியை கண்டுக்காமல் விட்டமாதிரி உன் புள்ளையையும் விட்டிராதே..ஜாக்கிரதை இரு.."



என்று ஒருத்தரும்...



"அதெல்லாம் மாணிக்கம் சூடு பட்ட பூனைய்யா..ஜாக்கிரதையா தான் இருப்பான்."என்று இன்னொருவரும்...



"என்ன சொல்லு..உன் பொண்டாட்டி மட்டும் உன்னை விட்டு ஓடாமல் இருந்திருந்தா இப்போ நீயும் குடும்பமா சந்தோஷமா இருந்திருப்பே..



என்ன பண்றது அந்த பொம்பளைக்கு கொடுத்துவைக்கலை."என்று மாறி மாறி திராவகத்தை வீசிவிட்டு அவர்களே சமாதானமாகிவிட்டு



செல்ல



சித்தார்த்தன் மாணிக்கத்தை கூர்மையாக பார்க்க,அவரோ குனிந்த தலை நிமிரவில்லை..



பின்னர் அவன் சொன்ன ஒரு வார்த்தை அவரை உயிரோடு புதைத்தது..



"அய்யா...இதெல்லாம் பொய்னு ஒரு வார்த்தை சொல்லுய்யா.."என்று சித்தார்த்தன் பாவமாக கூற



வேலுமாணிக்கத்திற்கு அந்த கணமே இறந்துவிடமாட்டோமா?என்று இருந்தது..



ஆயினும் இதுநாள் வரை மறைத்தது போல் இனியும் மறைக்கமுடியாது என்று அறிந்த அவர்



"இல்ல்ல்....லையா..அவ..ங்க சொன்னது உண்ண்...மை தான் ராசா.."என்று திக்கி திணறி கூற



சித்தார்த்தன் சுக்கலாக கசங்கிப்போனான்...



(ஒன்பதாம் நகர்வு முடிந்தது..)
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
கட்டம்-10


சித்தார்த்தனால் இன்னும் தான் கேட்டதையே நம்பமுடியவில்லை..



எப்படி இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள் என அவர்களுக்கே தெரியவில்லை.



எப்படியோ இருவரும் வீடு வந்து சேர்ந்து இரண்டு மணிநேரம் ஆகியிருக்க வீடே ஒளியின்றி இருண்டு கிடக்க முதலில் சுதாரித்தது



வேலுமாணிக்கம் தான்.



வயதின் தள்ளாட்டம் உடலையும் அசைக்க தட்டு தடுமாறி எழுந்தவர் வீட்டிற்கு ஒளியூற்றி பூஜை அறையில் விளக்கேற்றினார்.



பின்னர் கல்லாய் சமைந்து அமர்ந்திருக்கும் தன் மகன் அருகில் வந்து வாஞ்சையுடன் தலையை கோத அவர் கையை பிடித்து தடுத்த



சித்தார்த்தன்.



"ஏன்யா இதை மறைச்சீங்க?"என்று கூற



அவரோ பதில் சொல்லமுடியாமல் திணற,சித்தார்த்தன் அவரையோ உறுத்து விழித்தான்.



அவர் பதில் ஏதும் கூறாமல் நிற்க "சொல்லுங்கய்யா...இதுநாள் வரை நீங்க பொய்யே சொல்லமாட்டீங்கன்னு நினைச்சேன்...எங்கிட்ட



எதையுமே மறைச்சதில்லைன்னு பெருமைப்பட்டேன்.ஆனால் நீங்க என் அம்மாவை பத்தின உண்மையவே மறைச்சிட்டீங்களே..இனி



நான் உங்களை எப்படி நம்பறது?.சொல்லுங்க..ஏன் அவங்க உங்களை விட்டு போனாங்க?...அவங்க உயிரோட இருக்காங்களா?இல்லையா?



என்று கத்த



அவன் தந்தை அப்போதும் மௌனத்தையே மொழியாக கொண்டிருந்தார்..



சித்தார்த்தன் தன் பொறுமையின் எல்லை மீற "அய்யா...நீ இப்படி பேசாமல் இருந்தால் தான் எனக்கு இன்னும் கோவம் வரும்.



தயவுசெய்து வாயை திறந்து சொல்லுய்யா..எங்கம்மா உயிரோட இருக்காளா? இல்லை அவளை கொன்னுட்டியா?.."என்று அவர்



சட்டையை பிடித்து உலுக்க



வேலுமாணிக்கம் அவனை சட்டென்று நிமிர்ந்து பார்த்தார்..அவர் கண்களில் அவன் இதுநாள் வரை பார்த்திராத கோபமும் சீற்றமும்



இருந்தது..



"என்ன ராசா சொன்னே?..நான் உன் அம்மாவை கொன்னுட்டேனா??..நான் அப்படிப்பட்ட ஆளா ராசா??..அவ தான்யா என்னை



கொன்னுட்டு போயிட்டா?..ஒரேடியா என் அன்பையும் ஊருல என் மானத்தையும் கொன்னுட்டு போயிட்டா.."என்று கத்த



சித்தார்த்தன் திகைத்துப்போனான்...



வாயடைத்து அவர் சட்டையை பற்றியிருந்த கைகளை விடுவிக்க



மாணிக்கம் "என்னய்யா..வாயடைச்சு போயிட்ட..அவதான் என்னை கொன்னுட்டு போயிட்டா............அவளை நான் ராசாத்தி மாதிரி தான்யா



வைச்சிருந்தேன்..அவதான் சினிமா பைத்தியம் புடிச்சு படத்தில் நடிக்கப்போறேனு பக்கத்து வீட்ல இருந்த டவுன் பையனோட



ஓடிபோயிட்டா..அதுவும் நீ பொறந்த மூணு மாசத்தில..அப்போதிலிருந்து உன்னை என் புள்ள மாதிரி இல்லைய்யா என் அப்பன் மாதிரி



தான் ராசா வளர்த்தேன்..ஆனால் என்னை பார்த்து நீ கேட்டியே ஒரு கேள்வி?..அவ என்னை பொறுத்த வரை செத்துட்டா...அதான் அவ



செத்துட்டான்னு உங்கிட்ட பொய் சொன்னேன்.ஆனால் இன்னைக்கு நீ என்னை ஒத்தவார்த்தையில் கொன்னுட்டியே ராசா.."என்று



ஆற்றாமையுடன் கூற சித்தார்த்தன் கூனிக்குறுகிப்போனான்.



பின்னர் அவரை அணைத்து "அய்யா..என்னை மன்னிச்சிடுய்யா...அந்த ஆளுக பேசினதில் குழம்பிப்போய் நான் ஏதோ உளறிட்டேன்ய்யா..



என்னை மன்னிச்சிடுய்யா....அம்மா இல்லாத என்னை வளர்க்க நீ எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு எனக்கு தெரியும்யா..



என்னை மன்னிச்சிடுய்யா...உன் காலில் வேணும்னாலும் விழறேன்.என்னை வெறுத்துடாதேய்யா.."என்று குலுங்கி குலுங்கி அழ



அங்கே ஓர் தந்தை மகன் உறவுப்பாலம் வலிமையாக பிணைக்கப்பட்டது.



ஒருவழியாக இருவரும் சமாதானமாக



மாணிக்கம் "விடு ராசா.என் மவனைப் பத்தி எனக்கு தெரியும்..இதுக்காவதான்யா உன்னை இந்த ஊருக்கே காட்டாமல் பொத்தி பொத்தி



வளத்தேன்..என் செய்ய?..இன்னைக்கு உனக்கு தெரிஞ்சிடுச்சு..அதுவும் நல்லதுதான் ராசா...ஏதோ பாரம் இறங்கின மாதிரி இருக்கு..வாய்யா



வந்து ஒரு வாய் சாப்பிடு."என்று பாசமாக அழைக்க



சித்தார்த்தன் அவர் கையை பற்றி "எனக்கு உன்னை தவிர வேற யாரும் வேண்டாய்யா..இப்போதான்யா உன்மேல் நான் வைச்ச



மரியாதை அதிகமாகுது..இனி உனக்கு நான்..எனக்கு நீ..வேற யாருமில்லய்யா.."என்று உறுதியுடன் கூற



மாணிக்கம் மெல்லிய சிரிப்புடன் "எனக்கு இனி என்னய்யா வேணும்..இப்போவே கண்ணை மூடினாலும் எனக்கு சந்தோஷம் தான் "



என்று கண்ணீருடன் கூற சித்தார்த்தன் அவர் வாயை பொத்தி



"வேண்டாம்ய்யா..நாம் இனிதான் வாழணும்..இந்த ஊரே மூக்கு மேல விரல் வைக்கிற மாதிரி நாம வாழ்ந்து காட்டணும்யா...நம்மளை



இன்னைக்கு கேலி செஞ்சவங்க எல்லாம் அன்னைக்கு நம்மகிட்ட கைக்கட்டி வருவாங்கய்யா..இது கண்டிப்பா நடக்கும்யா..இது உன் மேல



சத்தியம் "என்று சூளுரைக்க அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் அவன் தந்தை..



அவர் கண்களில் ஏதோ ஒரு வித நிம்மதி படர்ந்தது..



@@@@



அடுத்த நாள் காலை மெல்ல மெல்ல சூரியன் எழ ஆரம்பித்திருந்த நேரம்...



ஒரே பக்கமாய் படுத்திருந்ததால் கழுத்தோரம் வலி எடுக்க,மெல்ல தன் விழிகளை விரித்து பார்த்தான் சித்தார்த்தன்..



பொழுது விடிந்துக்கொண்டிருப்பதை கண்டவன்,அருகில் தன் தந்தை இல்லாததையும் கவனித்தான்.



எப்போதும் சீக்கிரமே விழித்துக்கொள்பவர் தன் தந்தை ஆதலால் அவனுக்கு ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை.



மெதுவாக எழுந்து முகம் கழுவிவிட்டு வந்தான்...அப்போதுதான் தன் தந்தை வீட்டில் இல்லாதது உரைத்தது..



எப்போதும் அவன் இருந்தால்,அவனை எழுப்பி விட்டு அவனிற்கு காபி கொடுத்துவிட்டு தான் வயலிற்கு கிளம்புவார்..



இன்று சீக்கிரமாகவே கிளம்பிவிட்டார் போலும் என்று நினைத்துவிட்டு காபியை அவனே கலந்துக்கொண்டு மாணிக்கத்திற்கும் ஒரு



செம்பில் எடுத்துக்கொண்டு வயலிற்கு கிளம்பினான்.



வயலிற்கு வந்தவன் அங்கே சுற்றும் முற்றும் பார்த்தும் யாரும் தென்படாமல் போக



தோப்பிற்கு சென்று தேடினான்...



அப்போதும் அவரை காணாமல் சற்றே பதற்றமடைய



அங்கே இருந்த சிலரை கேட்க அவர்கள் யாரும் மாணிக்கத்தை பார்க்கவில்லை என்றே கூறினர்.



பின்னர் அவனிற்கு ஏதோ தோன்ற, மோட்டர் ரூமை திறந்து பார்க்க



அங்கே சிலையாக உயிரற்று கிடந்தார் அவன் தந்தை வேலுமாணிக்கம்.



அதை பார்த்து சித்தார்த்தன் தன்னையும் மீறி "அய்ய்ய்ய்யாஆஆஅ" அலறிவிட...



"ராசா...உனக்கு ஒண்ணு தெரியுமா? நான் பொறந்ததே இந்த தோட்டத்து மோட்டார் ரூம்ல தான்.



உங்க ஆச்சி வயக்காட்டுல வேலை பார்த்துட்டு இருக்கும்போது தான் வலி வந்து என்னை பெத்தா..அதனால் என் மூச்சில கலந்ததுய்யா



இந்த பூமி..இதை விட்டுட்டு வந்தா என் பொணம் தான் வரும்."



என்று அவர் கூறிய வார்த்தைகள் அவன் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தன..



அவர் கூறியபடியே அவரின் பிறப்பிடத்திலயே மெல்லிய புன்னகையுடன் அவரின் இறப்பும் ஏற்பட்டிருந்தது..



கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.....



@@@@@@



இன்றோடு அவன் தந்தை இறந்து பத்து நாட்கள் ஆகியிருந்தது...



யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் தன் உழைப்பில் வாழ்ந்து முன்னேறி,ஒரே மகனை கண்ணாய் வளர்த்து ஆளாக்கி,



அவனின் அருகாமையிலயே புன்னகையுடன் உயிர்நீத்திருந்தார் அந்த புண்ணியவான்.



ஏதோ வாழவேண்டும் என்பதற்காக வாழ்ந்தான் அவன்...ஆயினும் அவன் மாணிக்கத்திடம் அளித்த கடைசி சபதம் மட்டும் மனதில்



கனன்றுக்கொண்டே இருந்தது..



முன்னேறவேண்டும்! எப்படியாவது முன்னேறவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு இருக்க....அதை எப்படி



செயல்படுத்தப்போகிறோம் என்பது மலையேறும் விஷயமாக இருந்தது..இதற்கெல்லாம் மேலாக அந்த ஊரில் இருக்கவும் அவனுக்கு



பிடிக்கவில்லை.தன் தந்தையின் மனதை கொன்று அவரின் மேல் என்னையே கோபப்படவைத்து அதன்பின் அவரை மரணம் வரை



இழுத்துச்சென்ற ஊரை அவனுக்கு சற்றும் பிடிக்கவில்லை.



அங்கிருந்து கிளம்பினால் போதும் என்று இருந்தது..



ஆயினும் அதை எந்த வகையில் செயல்படுத்துவது என்பது தான் குழப்பமாக இருந்தது.



நெடுநேரம் நிதானமாக யோசித்து சில முடிவுகள் எடுத்தான்..ஆலோசித்துப்பார்த்ததில் இதுதான் சிறந்த முடிவு என்று தோன்றியது..



அதன்படி ஊரில் உள்ள பெரியவர்களின் உதவியோடு தன் வீட்டை விற்க ஏற்பாடு செய்தான்..அவன் தந்தையில் உயிர் பிரிந்த



அவ்வீட்டில் வாழ ஏனோ அவனிற்கு பிடிக்கவில்லை.பின்னர் தங்களின் இரு ஏக்கர் நிலத்தை வரையறுத்து தன் தந்தையின் உயிர்



பிரிந்த அந்த அரை ஏக்கர் நிலத்தை மட்டும் விட்டுவிட்டு மற்ற ஒண்ணரை ஏக்கர் நிலத்தையும் விற்கமுற்பட்டான்.



இதன்மூலம் அவனுக்கு பத்து லட்சத்திற்கு மேலயே பணம் வந்தது..அதை எடுத்து வந்து சென்னையில் அப்போது வளர்ந்துக்கொண்டிருந்த



இடத்தில் சற்றே பெரியதாக ஒரு பல்பொருள் அங்காடியை துவங்கினான்...முதலில் சற்றே தொய்வுடன் சென்றாலும் அவனிற்கு



நம்பிக்கை இருந்தது..கண்டிப்பாக இந்த இடம் பிற்காலத்தில் மையப்பகுதியாக மாறும் என்று...அதன்படி இரண்டே வேலையாட்களைக்



கொண்டு அல்லும் பகலும் உழைக்க...அடுத்த இரண்டே வருடத்தில் அந்த பகுதியில் ஓர் தகவல் தொழில்நுட்பப்பூங்கா ஆரம்பிக்கப்பட



அவனின் தொழில் மெதுவாக வளர ஆரம்பித்தது...அடுத்த ஆறு மாதங்களில் போட்ட முதலீடையே எடுத்துவிடும் லாபம் வர



கடையை இன்னும் பெரிதளவில் உருவாக்கினான்..இப்போது கணிசமான லாபத்தில் தொழில் சென்றுக்கொண்டிருக்க புதிதாக



ஒரு வீடு வாங்கினான்..அதுவரை அங்காடியிலயே இருக்கும் ஒரு சிறிய அறையில் தான் தங்கிக்கொண்டிருந்தான் சித்தார்த்தன்.



அந்த அளவிற்கு தான் வருமானம் இருந்தது..அங்கேயே கழிவறையும் இருந்ததால் அதையே வீடாக மாற்றிக்கொண்டான்.இப்போது தான்



முதன்முறையாக தன் வருமானத்தில் வாங்கிய வீட்டில் வாழப்போகிறான்.



ஆனாலும் அந்த சந்தோஷம் மனதில் சற்றும் இல்லாமல் முழுக்க தந்தையின் ஞாபகமாகவே இருக்க கண்களில் கண்ணீர் ஊற்று



அவனை அறியாமல் பொங்கிக்கொண்டிருந்தது..



"அய்யா..நீ ஆசைப்பட்ட மாதிரியே நான் இன்னைக்கு ஜெயிச்சிட்டேன்ய்யா...ஆனால் நீ இல்லையேய்யா??.....இன்னும் கொஞ்ச நாள்



எங்கூட இருந்திருக்கலாமேய்யா நீ....அப்படி என்ன நடந்திரிச்சுன்னு என்னை விட்டுட்டு போனேய்யா நீ...இப்போ எங்கிட்ட எல்லாம்



இருக்குய்யா...பேர் ,பணம்,புகழ் எல்லாமே இருக்குய்யா.அன்னைக்கு நம்மளை கேவலப்படுத்தினவன் எல்லாம் இன்னைக்கு எங்கிட்ட



இளிச்சிட்டு பேசுறான்யா.என் பொண்ணை கட்டிக்கோ,அவன் பொண்ணை கட்டிக்கோன்னு தாங்குறான்..ஆனால் இதெல்லாம் பார்க்க நீ



இல்லையேய்யா...ஏன்ய்யா..என்னை விட்டுட்டுப்போனே?..எனக்கு இனிமே சந்தோஷமே கிடையாதா?..



என் வாழ்க்கையில் இனிமே யாருமே கிடையாதா?...சொல்லுங்கய்ய்யா..."என்று ஒரு கட்டத்தில் தாங்கமுடியாமல் அவன் தந்தையின்



ஆளுயர புகைப்படத்தின் முன் தலைவைத்து அழ ஆரம்பிக்க...



அவன் தந்தையில் புகைப்படத்தில் இருந்த ஓர் பூ அவன் தலையில் விழுந்தது..



அந்த ஸ்பரிசத்தில் அவன் நிமிர்ந்துப்பார்க்கவும் , வாசலில் "வணக்கம் சார்..உள்ளே வரலாமா?.."என்று ஒரு பெண்குரல் கேட்கவும்



சரியாக இருக்க



சித்தார்த்தன் சட்டென்று சுதாரித்துக்கொண்டு திரும்பிப்பார்க்க அங்கே புன்னகையுடன் நின்றிருந்தாள் திவ்யா..



@@@@@@



"வணக்கம்..வாங்க...நீங்க...சங்கரன் சார்..ஜுனியர் தானே?."என்று சித்தார்த்தன் கேட்க



திவ்யா சிரிப்புடன் "பரவாயில்லையே சார்..என்னை ஞாபகம் இருக்கா?..உங்களுக்கு என்னை தெரிஞ்சிருக்காதுன்னு நினைச்சேன்,"என்று



கூற



சித்தார்த்தன் "என்னை மாதிரி பிசினஸில் இருப்பவர்களுக்கு எல்லா சமயமும் எல்லா புலன்களும் விழிப்போட இருக்கணும் மேடம்.



இல்லைன்னா ஏமாந்திருவோம்.அதுவும் இல்லாமல் உங்களை நான் நிறைய வாட்டி பார்த்துருக்கேன்..மேலும் சங்கரன் சார் எப்பவும்



உங்களை பத்தி தான் பேசிட்டு இருப்பார்..அதனால் நீங்க எனக்கு புதுசில்ல.."என்று சிறிதும் பந்தா இல்லாமல் கூறியவனை திவ்யாவிற்கும்



பிடித்தது..



அவளுக்கும் அவனை தெரியும்..சங்கரன் அவளிடம் அவனை பற்றி பேசாத நாளே கிடையாது.ஆயினும் அவனிடம் தனிப்பட்ட முறையில்



பேசுவது அவளுக்கு இதுதான் முதல் தடவை.அவனின் நடத்தை எப்படியிருக்குமோ என்ற குழப்பத்தில் வந்தவளுக்கு சற்றே



நிம்மதியானது...



பின்னர் அவனிடம் "சங்கரன் சார் ஒரு வேலை விஷயமா வெளியூர் போயிருக்கார்..நீங்க புது வீடு குடிப்போறதா சொன்னதால்



இந்த கிஃப்டை உங்கக்கிட்ட கொடுக்கச்சொன்னார்..என் மனம் கனிந்த வாழ்த்துக்கள் சார்..அவரே இன்னைக்கு சாயந்திரம் உங்களுக்கு



கால் பண்ணுவார்."என்று தான் வந்த விஷயத்தை கூறிவிட்டு பரிசை கொடுக்க அவன் முகத்தில் ஒரு விரக்தியான சிரிப்பு



இருந்ததே தவிர வேறு எதுவும் இல்லை.



அதை கவனித்த திவ்யா "என்ன சார்...பிசினஸில் ஜெயிச்சு இப்போ புது வீடு வாங்குற அளவிற்கு வந்திருக்கீங்க...ஆனாலும் இப்படி



சந்தோஷம் இல்லாமல் இருக்கீங்களே? சாரி சார்..ஏதோ மனசில் பட்டதை கேட்டேன்..தப்பா நினைச்சிக்காதீங்க.."என்று கூற



சித்தார்த்தன் "சே..நீங்க கேட்டதில் தப்பில்லை...எப்பவும் சந்தோஷம் கூட ஒருத்தர் இருந்தால் தான் இரட்டிப்பாகும்.எங்கூட தான்



யாருமில்லையே.."என்று ஏக்கத்துடன் கூற



திவ்யா சந்தேகத்துடன் "சார்..அப்போ உங்க அம்மா..அப்பா..?"என்று இழுக்க



சித்தார்த்தன் "இரண்டு பேரும் இல்லை..நான் அனாதை.."என்று கூற அந்த வார்த்தையில் திவ்யாவின் மனதில் ஏதோ ஒன்று தைக்க



"சார்..ஏன் சார் பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க?.இந்த உலகத்தில் அடுத்த மனுஷன் இருக்கிற வரை யாருமே அனாதை இல்லைன்னு



எங்க பாட்டி சொல்லுவாங்க..இந்த வார்த்தையை சொல்லாதீங்க சார்.உங்களை பெத்தவங்க இப்போ இல்லாமல் இருக்கலாம் சார்



ஆனால் உங்களுக்காக பொறந்தவங்க இருப்பாங்க இல்லையா?"என்று கேட்க



சித்தார்த்தன் புரியாமல் பார்க்க அவளோ குறும்புடன் "என்ன சார் புரியலையா?..நீங்க ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்க மனைவி



தானே உங்களுக்காக பொறந்தவங்க..அதை தான் சொன்னேன்..சீக்கிரம் நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க சார்."



என்று கூறிவிட்டு சிரிக்க



ஏனோ சித்தார்த்தனின் முகத்தில் சட்டென்று கோபம் கனன்றது..கணநேரத்தில் அவன் மனத்திரையில் தன் தாயின் நடத்தையும் அதனால்



தான் பட்ட அவமானமும் வந்து செல்ல



"சாரி..உங்க பேச்சு எனக்கு பிடிக்கலை..என் வாழ்க்கையில் கல்யாணம் எல்லாம் கிடையாது..ஒரு பொண்ணை நம்பி என் வாழ்க்கையை



ஒப்படைக்க எனக்கு விருப்பமில்லை."என்று முகத்தில் அடித்தாற்போல் கூற



திவ்யா ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனாள்..ஆயினும் வக்கீல் ஆயிற்றே...சுதாரித்துவிட்டு



"சார்...நான் இப்போ என்ன சொல்லிட்டேனு..."என்று ஆரம்பிக்குமுன்



சித்தார்த்தன் முகம் இருண்டு "ப்ளீஸ்..இதுக்கு மேல் இதை பத்தி நான் பேச விரும்பலை."என்று கத்தரித்தாற்போல் பேசிவிட



திவ்யா சித்தார்த்தனிடம் நிகழ்த்திய முதல் சந்திப்பே மோசமாக போனதை எண்ணி வெகுண்டாள்..



"இடியட்...ஒரு பொண்ணு கிட்ட எப்படி பேசுறதுன்னு தெரியலை.இப்போ நான் என்ன சொல்லிட்டேன்"என்று முணுமுணுத்துவிட்டு செல்ல



சித்தார்த்தன் அதை காதில் வாங்கியும் வாங்காதவனாய் அறைக்குள் நுழைந்தான்..



ஆனால் அதே சித்தார்த்தன் சில மாதங்கள் கழித்து



@@@@@@



"கெட்டிமேளம்..கெட்டிமேளம்..."என்று ஐயர் குரல் கொடுக்க



அதற்கேற்றால்போல் மேளம் முழங்க,முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக திவ்யாவின் மணிக்கழுத்தில் மங்கலநாண் பூட்டினான்..



அவனை ஒரு நொடி ஏறிட்டுப்பார்த்த திவ்யாவின் முகமோ உயிரற்றுப்போய் இருக்க,



சித்தார்த்தனின் முகமோ சொல்லோணா உணர்ச்சியில் விகசித்துக்கொண்டிருந்தது..



இந்த திருமணத்திற்கு அடிப்படை என்ன?...



இந்த ஜோடியின் நிலை இனி என்ன?



காத்திருப்போம்.



(பத்தாம் நகர்வு முடிந்தது.)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top