காதல் சொன்ன கணமே பகுதி 10

kavi nila

Author
Author
#1
காதல் 10


தேவலோக மங்கையாக சிவப்பு நிறப் பட்டு சேலையில் நடந்து வருகிறாள் இளமதி. அவளது மிதமான ஒப்பனையில் தன்னை மறந்து பார்த்துக் கொண்டுயிருந்தான் சித்தார்த். தனது அருகில் வரும் தேவதையை ரசித்துக் கொண்டுயிருந்தவனுக்கு தீடீரென கால் பாரமாக இருக்க கண்களை கசக்கி கொண்டு எழுந்தான்.

என்னடா கால் வலிக்கிறது என பார்க்க மதியின் கால் தேசம் கடந்து அவனின் மேல் இருந்தது. அதை பார்த்து,

அடிப்பாவி.. அது எப்படி பக்கத்தில் இருக்கிற அபியை தாண்டி என் மேல காலை போட்ட.. கேடி , என அவளது காலை எடுத்து கீழே வைத்தான்.

மதி ஒரு வாரமாக சித்தார்த்தின் அறையில் தான் தூங்குகிறாள். வீட்டில் யாருக்கும் தெரியாது என அவ நினைக்க, தெரிந்தும் தெரியாதது போல் இருந்தனர் அனைவரும்.

குளித்துவிட்டு கீழே தன் அன்னையிடம் வந்தவன், ‘அம்மா எனக்கு இன்னிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் இப்பவே கிளம்பரேன். கதிர் வந்ததுக்கு அப்புறம் மதியை அவன் கூட அனுப்புங்க’, என

சாப்பிட்டு கிளம்பலாம்ல கொஞ்ச நேரம் வைட் பன்னேன்,

இல்ல மா. நான் வரேன், என அவசரமாக கிளம்பி விட்டான்.

மதி வெளியே செல்ல தயாராக்கி கொண்டுயிருந்தாள். கண்ணாடியில் தனது பிம்பத்தை பார்த்துக் கொண்டு திரும்பி, அவளது செயின் ஆணியில் மாட்டி அரந்து விட்டது.

அச்சோ.. இந்த செயின் இல்லாமல் எப்படி நான் வெளியே போவேன். சாரி பேபி.. வந்து உன்னை சரி பன்றேன், மனசே இல்லாமல் வேற செயினை போட்டுக் கொண்டு வெளியே வந்தாள்.

ஆன்ட்டி! என கத்திக் கொண்டே சமையல் அறைக்கு வந்தாள்.

என்னமா எத்தனை முறை சொல்றேன் ஆன்ட்டி சொல்லாதை அத்தை சொல்லுனு,

அச்சோ.. மறந்துட்டேன் அத்தமா.. சாரி அடுத்த முறை நியாபகமாக கூப்பிடுறேன், என

சரி இப்ப எதுக்கு கத்தன,

மாலதி வர அத்தமா.. நான் போய் அவளை கூப்பிட்டு வரேன். அது வரைக்கும் அபியை பாத்துக்கோங்க, என கிளம்பி விட்டாள்.


காரில், டேய் சித்து உனக்கு அறிவே இல்லை.. நான் ஏன் இப்படி மாறிட்டேன்னு எனக்கே தெரியலை. எப்பவும் என் கூடவே இருக்கனும் மனசு ஏங்கி தவிக்கிது. ஆனா ஏன்னு காரணம் தெரியலை. எனக்கு இது மாதிரியெல்லாம் இருந்ததே இல்லை.. உன்னால தான் நான் இப்படி ஆகிட்டேன். ச்சை.. எல்லாத்துக்கும் உன்னை எதிர்பார்க்கிறேன். கடவுளே..... எனக்கு ஒரு வழி சொல்லு, என தன் மனம் போன போக்கில் புலம்பிக் கொண்டுயிருந்தாள்.

பேருந்து நிலையம் வர, காரை விட்டு வெளியே வந்து தன் உயிர் தோழிக்காக காத்தியிருந்தாள்.

மீட்டிங்கில் தனது கருந்துகளை கூறிக் கொண்டுயிருந்த சித்தார்த்திற்கு போன் வந்தது. சைலன்டில் போட மறந்ததால் அது அலறி அனைவரது கவனத்தையும் திசை திருப்பியது. அனைவரிடமும் மன்னிப்பை வேண்டி பின் மீட்டிங் தொடர, திரும்பவும் போன் அலறியது. இந்த முறை வைப்ரேட்டில்.

ப்ரைவீட் நம்பராக இருக்க அட்டன் செய்து காதில் வைத்தான்.

தப்பு பன்னிட்டியே சித்தார்த், என்ற குரலில் தன் சிட்டில் இருந்து எழுந்துவிட்டான் சித்.

வாட்.. என்ன சொன்ன,

ம்ம்ம்.. உன் ஆசை காதலி இன்னும் கொஞ்ச நேரத்தில் செத்து கிடப்பா. வந்து அள்ளிக்கிட்டு போ..,

டேய்.. ராஸ்கல்.. அவள் மேல கை வச்ச.. என்னோட இன்னோர் முகத்தை பாப்படா.., என கத்த

மீட்டிங் வந்த அனைவரும் அவனின் சத்தத்தில் மிரண்டு அவனை பார்க்க அதையேல்லாம் கவனிக்கமால் கோபமாக போனில் கத்திக் கொண்டுயிருந்தான்.

அச்சோ... இத்தன நாளா பக்கத்தில் இருந்து பார்த்துகிட்டே உன் காதல் பறவை இப்ப தனியா நடு ரொட்டில் நிக்கிறா.. சும்மா சொல்ல கூடாது பார்க்க ஆளு தங்க சிலை மாதிரி தான் இருக்கா. எனக்கே கொல்ல மனசே வரலை. என்ன பன்றது விதி வலியது. இன்னுமா கிளம்பாமல் இருக்க. சீக்கிரம் கிளம்பு. கடைசியா பேச வாய்ப்பு இல்லாமல் போய்ட போது, என

அவன் கோபமாக, டேய் என் மதிக்கு எதுவும் ஆகாது. நான் ஆகவும் விட மாட்டேன். கடவுள் நம்பிக்கை இருந்த வேண்டிக்கோ.. என் கிட்ட மாட்டிக்க கூடாதுனு. நான் உன்னை பார்க்கிற அந்த நொடி தான் உன்னோட கடைசி நாள்.., என்று விட்டு மதிக்கு கால் பன்னான். அது கனெக்ட் ஆகாததல் தன் தாய்க்கு அழைத்தான். மதி பேருந்து நிலையத்திற்கு சென்றது தெரிந்து அங்கு சென்றான்.

மாலதி தூரத்தில் இருக்கும் மதியை பார்த்து, மதி! என அழைக்க,

அவளை பார்த்த சந்தோஷத்தில் அவள் ரோட்டில் கவனமில்லாமல் வேகமாக வர, அவளை நெருங்கி ஒரு வண்டியில் இரு நபர் முகத்தை மறைத்துக் கொண்டு வந்தனர்.

அவளிள் அருகில் வந்து, அவளின் பார்ஸை பறிக்க அவனிடம் போராட, மற்றொருவன் அவளின் செயினை கழுத்தில் இருந்து பறித்தான். இதை பார்த்த மாலதி கத்திக் கொண்டே ஒட அவளால் முடியாததால் முடிந்த அளவு வேகமாக வந்தாள்.

சித்தார்த்தும் வேகமாக அங்கு வர, அவன் மதியையும் அவள் அருகில் இருக்கும் இரண்டு நபரை பார்த்துக் கொண்டே வரும் போதே ஒருவன் கத்தியை எடுத்து மதியின் வயிற்றில் குத்தினான்.

அதில் அதிர்ந்தவன் வேகமாக காரை நிறுத்திவிட்டு ஓடினான். மேலும் ஒரு முறை குத்தி விட்டு தாங்கள் வந்த வண்டியில் புயலாக கிளம்பி விட்டனர். மதி மயங்கி கீழே விழ மாலதியும் சித்தார்த்தும் ஒரே நேரத்தில் மதியிடம் வந்தனர்.

ஐய்யோ மதி! என மாலதி கதற

மாலதியை பார்த்த சித்திற்கு, சிஸ்டர் இப்ப அழ நேரம் இல்ல. ஹாஸ்பிடல் போகலாம் வாங்க, என தான் பதறினால் மதியை காப்பத்த முடியாது என மதியை தூக்கி பக்கத்தில் இருக்கும் டக்ஸியை வர சொன்னான்.

கை நடுங்குவதால் தன்னால் காரை ஓட்ட முடியாது என புரிந்து கொண்டான் சித். டாக்ஸியில் ஏறி பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிட்டல் செல்ல சென்னான். மதியை மடியில் வைத்துக் கொண்டு அவளின் கன்னத்தை தட்டி அவளை சுயநினைவிற்கு கொண்டு வர முயன்றான்.

மாலதியும் பதற்றமாக அனைத்து தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு வர, சித்தார்த்தின் முயற்சிக்கு பலனாக மதி கண்ணை திறந்தால். அவளுக்கு எதுவும் தெளிவாக தெரியவில்லை.

சித்தார்த்தின் கன்னத்தை மெதுவாக வருடி, “ஆதி.. எனக்கு ஒன்னுமில்லடா. பயப்படாத.. என் கிட்ட நீ நிறைய முறை லவ்யூ சொல்லியிருக்க. அப்பயெல்லாம் தோணலைடா. இப்ப தோணுது. லவ்யூ டா.. லவ்யூ.. என்கிட்ட சொல்லுவலா நூறு வருசம் என் கூட சந்தோஷமா வாழுனும்னு.. எனக்கு இப்ப தோணுதுடா உன் கூட நூறு வருசம் வாழுனும்னு, என சொல்லும் போதே அவளுடைய கண்கள் மயக்கத்தில் தந்தியடக்க, லவ்யூ டா.. என

சித்தார்த், மதி.. ப்ளீஸ்டி என்னை பயப்பட வைக்காதடி.. நீ எனக்கு வேணும்டி. நீ இல்லாம நான் எப்படி இருப்பேன். கண்ணை திறடி.. என மேலும் அவள் கன்னத்தை தட்ட,

மாலதி, அண்ணா பயப்படாதிங்க மதி நம்மலை விட்டு போக மாட்ட, எனக்கு நம்பிக்கை இருக்க. நீங்க அவளை காதலிக்கிறீங்கலா. உங்க காதல் மேல நம்பிக்கை வையுங்க.. என அவனுக்கு சொல்லுவது போல் அவளுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டாள்.

ஹாஸ்பிடல் வர, மதியை கையில் ஏந்திக் கொண்டு உள்ளே சென்றான். அவனுடைய நன்பனின் ஹாஸ்பிடல் என்பதால் நேராக ஓ.டி க்கு அழைத்து வந்தனர்.

நர்ஸ் ஃபார்மில் சைன் வாங்க மாலதியிடம் வந்து, மேடம் பேசன்டுக்கு நீங்க என்ன வேண்டும், என
அவளோட ப்ரெண்டு, என


அவங்களோட சொந்தகரங்களை வர சொல்லுங்க.. ஃபார்மில் கையெழுத்து வாங்கனும், என

அங்க வந்த சித் நடந்ததை அறிந்து, கொடுங்க நான் போடுறேன், என

நீங்க அவங்களுக்கு என்ன வேண்டும், என

அவளோட கணவர், என மாலதி அதிர்ந்து சித்தை பார்த்தால், அவன் அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்தான். தலை தொங்க போட்டு தன் உலகமே சுழல்வது நின்றது போல் இருந்தான். அவனின் நிலை மாலதியை கலங்கடித்தது.

அண்ணா.. பயப்படாதிங்க மதியை நான் சின்ன வயசில் இருந்து பார்க்கிறேன். அவ ரொம்ப ஸ்டாங். சீக்கிரம் உங்க கிட்ட வந்துடுவா, என

அவனும் வலிந்து ஒரு புன்னகையை வர வைத்தான். அந்த புன்னகை சொன்னது அவனின் வருத்தத்தை. அவனின் காதலை. அவனின் தேடலை...

கண்ணை முடிக் கொண்டுயிருந்தவனுக்கு காரில் மதி பேசியது நியாபகம் வந்தது. அப்போது இருந்த பதட்டத்தில் இதை சரியாக கவனிக்கவில்லை. இப்போ காதில் அது மட்டும் தான் கேட்டது.

அவள் கடைசியாக சொன்ன லவ்யூ வில் முகத்தில் சிறு புன்னகை வர, முதலில் சொன்ன ஆதி என்ற வார்த்தையில் ஸ்தம்பித்து நின்றான். ஆதி.... தன்னோட மதி, தனக்காக பிறந்த மதி வேறு ஒருவருக்கு சொன்ன லவ்யூவில் இதயம் சுக்கு நூறானது. யாரவன் என அறிய மாலதியிடம் வந்தனான்.

என்ன அண்ணா, என மாலதி வினவ

ஆதி யாரு.. மதிக்கும் ஆதிக்கும் என்ன சம்பந்தம்.. மதி வாழ்க்கையில் என்ன நடந்துச்சு, என அடுத்தடுத்து கேள்வியாக கேட்க,

அவனை பார்த்த மாலதி, “ஆதி மதியோட லவ்வர்”, என

லவ்வர் என அவளை தனியா விட்டு எங்க போனான். அவளை கஷ்டப்படுத்த தான் காதலிச்சானா. இப்ப எங்க இருக்கான். குழந்தையை கொடுத்துட்டு அவளை ஏமாத்த தான் காதலிச்சானா, என தன்னவளின் காதலையாவது மீட்டு அவளை சந்தோஷமா வைக்க வேண்டும் என் ஆதங்கத்திலும் கோபத்தில் சத்தமாக கேட்டான்.

அண்ணா, ஆதி அண்ணா பத்தி தெரியாமல் பேசாதிங்க. ஆதிண்ணாக்கு மதியை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா.. மதியை அவரு எவ்வளவு காதலிச்சாருனு தெரியுமா.. மதிக்காகவே ஒவ்வொரு நிமிசமும் வாழ்ந்தாரு.. அவளை அண்ணா ஏமாத்தலை, என அழ ஆரம்பித்துவிட்டாள்.

சாரிமா.. எதோ டென்ஷனில் உன்கிட்ட கத்திட்டேன். நீ அழுகாதமா, இப்ப ஆதி எங்க இருக்காரு, மதி வாழ்க்கையில் அப்படி என்ன தான் நடந்துச்சு, என

மதியை பத்தி உங்களுக்கு தெரியாது அண்ணா. அவளோட சந்தோஷமே அவள் குடும்பம் தான். ஒரே நாளில் அவ வாழ்க்கையே மாறிடுச்சு, என அவனை கவலையோடு பார்த்தாள்.

மதியின் வாழ்வில் நடந்த சோகம் என்ன? மதிக்கு ஆதி கிடைப்பானா? சித்தார்த்திற்கு மதி கிடைப்பாளா?
 
Advt

Advertisements

Top