காதல் சொன்ன கணமே பகுதி 9

kavi nila

Author
Author
#1
காதல் 9


சென்னை விமான நிலையம் பரபரப்பாக இருக்க இதற்கு மாறாக அமைதியாக இருந்தது சித்தார்த்தின் மனது. பெங்களுரில் உள்ள தனது நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாட்டால் வேலை நிறுத்தத்தில் உள்ளனர் என தகவல் வர அவன் அவசரமாக செல்ல வேண்டிய கட்டாயம்.

விமனாத்தில் ஏறிய பிறகும் மனம் முழுவதும் சத்யா சொன்ன விசயங்களில் தான் சுற்றிக் கொண்டுயிருந்தது. பெங்களுர் விமான நிலையத்தில் இருந்து தனது நிறுவனத்திற்கு காலை நேரம் என்பதால் விரைவாக வர முடிந்தது. வேலை மற்றும் பிரச்சனைகள் அவனை இழத்துக் கொள்ள சென்னையில்,

மதியும் லக்கியும் ஸ்கூட்டியில் செல்ல, தங்களை பின் தொடர்ந்து வரும் காரையை லக்கி பார்த்துவிட ஸ்கூட்டியை சந்து பொந்துயெல்லாம் வேகமாக ஓட்டி செல்ல,

இதை அறியாமல், “லக்கி ஏன் டி இந்த பக்கம் போற. ப்ளீஸ் டி கொஞ்சம் மெதுவா போ டி”, என கெஞ்சிக் கொண்டு வர

‘மதிமா எல்லா நேரமும் ஒரு வழியில் போக முடியாது. காலை நேரம் கொஞ்ச டிராப்பிக்கா இருக்கும். அதான் இந்த பக்கம். நீ பயப்படாக வா’, என தங்களை பின் தொடந்த காருக்கு தண்ணிக் காட்டி விட்டு தங்கள் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்தனர்.

லக்கியின் மனதில் யாராக இருக்கும் என யோசித்துக் கொண்டே இதை கதிரிடம் செல்ல நினைக்க, வேண்டாம் ஒரு வேலை நான் தான் தப்பா நினைச்சிட்டேன் போல, என அவளே முடிவு செய்து கொண்டாள்.

வீட்டிற்கு செல்லும் போது கதிர் அவளை தன்னுடன் காரில் அழைத்து சென்றான்.

சித்தார்த் கதிருக்கு ஃபோன் செய்ய,

சொல்லுங்க பாஸ்.

கதிர் எனக்கு எதோ தப்பா நடக்கிறா மாதிரியே இருக்கு. கொஞ்சம் கேர்புல்லா இருங்க. வீட்டை சுற்றி இன்னும் கொஞ்ச காட்ஸ் போட சொல்லு. மதியை தனியா வெளிய அனுப்பாத. பெட்டர் யாரையும் தனியா வெளியே அனுப்பாத. காட்ஸ் கூட அனுப்பு. நான் வர வரைக்கும் பத்திரமா இருங்க, என

பாஸ் நீங்க கவலைப்படாதிங்க. நான் கேர்பூல்லா இருக்கேன் என பேசிக் கொண்டுயிருக்க பின்னால் அபியின் சிரிப்பு சத்தம் இருவரையும் அமைதியாக்கியது.

இன்னும் அபி தூங்கலையா கதிர்.

அதையேன் பாஸ் கேட்கறீங்க. வர வர உங்க அம்மா அவங்களும் குழந்தை மாதிரி அவன் கூட ஒடி பிடிச்சி விளையாட்டுயெல்லாம் விளையாடுறாங்க. இதுல மதியும் வேற இந்த முண்ணு பேரை நாங்க முண்ணு பேரும் சமாளிக்கவே நேரம் சரியா இருக்கு.

அவன் சிரித்துக் கொண்டே யார் அந்த முண்ணு பேரு, என

வேற யார் நானு என் பொண்ணாட்டி, என் மாமியார் தான்,

ஓஓ.... அனுபவி ராஜா, என சத்தமாக சிரித்தான். பின், “அபியை பார்த்த எனக்கு வேற ஒருத்தரோட குழந்தையாயெல்லாம் பார்க்க முடியலைடா. என் குழந்தையா தான் பார்க்கிறேன். அம்மா கிட்ட இவ்வளவு சீக்கிரம் ஜெல் ஆவானு நானே எதிர்பார்க்கலை”,

ஆமாம் பாஸ். அபி நம்ம எல்லார்கூடவும் நல்ல பழகறான். அவனை பொறுத்தவரைக்கும் நீங்க தான் அவன் அப்பாவா இருக்கனும் பாஸ். சீக்கிரம் மதி கிட்ட லவ்வை சொல்லி கலியானம் பன்னுங்க,

அட நீ வேற.. நானே சொல்லலாம் தான் நினைச்சேன். பட் முடியாலை டா. பயமா இருக்கு. எங்க அவ என்னை பிடிக்கலைனு சொல்லிடுவாளோ. நானும் ட்ரை பன்றேன். கூடிய சீக்கிரம் இந்த பிரச்சனை முடிச்ச பிறகு அவ கிட்ட என் லவ்வை சொல்றேன் டா. இது உன் மேல சத்தியம், என
அவன் பாஸ்! என அலறினான்.


பயப்படாத டா. கண்டிப்பா சொல்றேன். நீ கொஞ்சம் பத்திரமா இரு. மதி ருமிற்கு போய் ஜன்னல் எல்லாம் நல்ல தாப்பா பொட்டியிருக்க பார்த்து சேக் பன்னுடா,

ஓகே பாஸ். நீங்களும் உங்களை பத்திரமா பார்த்துங்கோங்க, என பேசிவிட்டு திரும்ப அங்கே லக்கி நின்றுக் கொண்டுயிருந்தாள்.

இவளா அவ அப்ப வந்தாள் என யோசித்துக் கொண்டு, ‘என்னமா அப்படி பார்க்கிறா’ என,

யாருடா ஃபோனுலை, என கேட்க

பாஸ் தான். சரி நம்ம மேட்டரை உங்க அப்பா கிட்ட எப்படி சொல்ல போற,

அதை சித் பாத்துக்கிறேனு சொல்லியிருக்கான். நம்ம நாளைக்கு எங்கனா வெளிய போகலாமா,

இப்ப வேண்டாம் மா. சிச்சிவேஷன் சரியில்லை. அப்புறம் போகலாமே, என

சரிடா, என காலை நடந்ததை சொல்லலாம் என நினைக்க அந்த நேரம் அபி வந்துவிட பேச்சு இடையிலே தடைப்பட்டது.


தூங்கி கொண்டுயிருக்கும் அபியையும் கடிகாரத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டுயிருந்தாள் இளமதி. பன்னிரெண்டை நெருங்கி இருந்தும் தூக்கம் துளியும் இல்லாமல் இருந்தாள்.


இப்ப தூக்கமும் வரலை என்ன பன்னலாம், என யோசித்துக் கொண்டே கைப்பேசியை எடுத்தால்,
சித்து கிட்ட பேசலாமா இல்ல ஒரு வேலை தூங்கிட்ட. நான் எதுக்கு பேசனும் இந்த நேரத்திற்கு பேய் கூட தூங்க போகுமே எனக்கு மட்டும் வரலையே. சித்து கிட்ட பேசலாமா வேண்டாமா, என பல யோசனைக்கு பிறகு,


சரி பண்ணலாம். ஒரே ரிங்லை கட் பண்ணிடலாம், என முதல் ரிங்கில் கட் செய்து விட்டு ஃபோனையே பார்த்தாள்.

அடுத்த நிமிடம் சித்திடம் இருந்து கால் வந்தது.

ஹாலே மதி எதனா பிரச்சனையா, என குரலில் பதட்டம் தெரிந்தது.

பிரச்சனையா அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. தூங்கம் வரலை அதான் ஃபோன் நொண்டிட்டு இருந்தேன். தெரியாம உங்களுக்கு கால் போய்டுச்சு, என

அவனும் சரி ஏன் தூக்கம் வரலை, என

தெரியலையே நீங்க என்ன பன்றீங்க,

எம்மா உனக்கே இது அநியாயமா தெரியலை. தூங்கிட்டு இருந்த என்னை எழுப்பி கேட்கிற கேள்வியா இது? என

ம்ம் ஆமாலா சரி என்ன சாப்பிட்ட,

ஏய் உனக்கு உன்மையாலுமே என்ன தான்டி வேண்டும், என சுற்று குரலை உயர்த்தி கேட்க

எனக்கே தெரியலையே என முனுமுனுத்து விட்டு, சும்மா தான் சர்.. ஆமா நீங்க தானே எனக்கு கால் பண்ணிங்க.. என் கிட்ட எதுக்கு கேட்கறீங்க, என சமாளிக்க

ஐய்யோ பக்கத்துல இருந்தா கண்டுக்கவே மாட்டா இப்ப ஃபோன் பண்ணி சாவடிக்கிறாலே என “மதி எனக்கு தூக்கமா வருது. நாளைக்கு பேசறேன்”, அவளிடம் சொல்ல

சரி. எப்ப வருவீங்க,

ஒன் வீக் ஆகும். இங்க கொஞ்சம் ப்ராபிளம். அதை சாட் ஆவுட் பன்ன கொஞ்சம் டைம் ஆகும். நான் வர வரைக்கும் கொஞ்ச பாத்திரமா இரு. தனியா எங்கவும் போகாதை, என பல அறிவுரைகளை வழங்கிவிட்டு ஃபோனை வைத்தான்.

இப்ப எதுக்கு நான் சித்து கால் பண்ணேன். எனக்கு இப்ப தான் கொஞ்ச நிம்மதியா இருக்கு. வர வர நான் சித்துவை ரொம்ப டிப்பன்ட் பன்றா மாதிரியே இருக்கு. அவங்களை பார்க்கும் போது எதோ தோனுது ஆனா என்னனு தான் தெரியலை. லக்கி கிட்ட கேட்கலாம். ம்ம்.... வேண்டாம். மாலதி கிட்ட கேட்கலாம், என முடிவேடுத்து தூங்க சென்றாள். இந்த முறை நித்திரா தேவி அவளை அணைத்துக் கொண்டது.
 
kavi nila

Author
Author
#2
யாருக்கும் நிற்காமல் ஒரு வாரம் வேகமாக போனது.

அன்று விடுமுறை தினம் என்பதால் அனைத்தும் மெதுவாக நடந்தது.

சமையல்யறையில் இருந்த பவாணியிடம் கோமதி, அண்ணி நான் அடுத்த வாரம் மும்பை போகலாம் இருக்கேன், என

என்னமா இப்ப சொல்லுற. எதாவது பிரச்சனையா, என

அதுயெல்லாம் இல்லை அண்ணி ரொம்ப நாள் ஆச்சு லக்கி அப்பா தனியா எவ்வளவு நாள் இருப்பாரு அதான். லக்கியும் கூட்டி போறேன், எனவும்

சரி. பத்திரமா போய்ட்டு வாங்க. அடுத்த வாரம் தானே. அதுக்குள்ள சித்தார்த் வந்துடுவான், என

சரிங்க அண்ணி, என இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது, அண்ணா££.... என்ற கத்தும் சத்தம் வீட்டையே ஆட்டியது.

இருவரும் குரல் வந்த திசைக்கு போக, அங்க மதி ஃபோனில் யாரிடமோ சண்டையிட்டு கொண்டுயிருந்தாள்.

அதுயேல்லாம் முடியாது ண்ணா.. நீங்க பண்றது ரொம்ப தப்பு,

......................

ண்ணா.. இந்த மாதிரி டைம்லில் ஹஸ்பான்ட் கூட இருக்கனும் ரொம்ப தோனும். நீ என்னனா ஒரு மாசம் வெளிய மாற ப்ளான் பன்னி வைச்சியிருக்க,

.......................

அதுக்கு.. சரி நீங்க போங்க.. நான் தன் ப்ரொண்டை பாத்துக்கிறேன். அவளை இங்க வர சொல்லுங்க. வர பஸ் அன்ட் டைம் மட்டும் மெஸேச் பன்ன சொல்லுங்க. பட் நான் உங்க மேலை ரொம்ப கோவமா இருக்கேன். வரும் போது நிறைய சாக்லேட் வாங்கிட்டு வந்த தான் என் கோபம் போகும். சொல்லிட்டேன், என
அவளது கோபத்திற்கு அவளே ஒரு தீர்வை சொல்லி வைத்தாள்.


என்ன மதி ஏன் இவ்வளவு கோபம், என பவாணி கேட்க,

ஓன்னுமில்லை ஆன்ட்டி, அன்னிக்கு என் ப்ரெண்டை பாத்திங்களே.. நியாபகம் இருக்கா, என ஆம் என தலையை ஆட்ட

அண்ணா யுகே போகனுமா. வர ஒன் மந்த் ஆகுமா.. மாலதியை யாரு பாத்துப்பா.. அதான் அவளை இங்க வர சொல்லிட்டேன். சாரி ஆன்ட்டி உங்க கிட்ட கேட்காமலே சொல்லிட்டேன், என

பரவாலை மா. வர சொல்லு எப்ப வராங்களாம்,

தெரியலை ஆன்ட்டி. பத்து நாள் ஆகும் நினைக்கிறேன்,

கோமதி, உன்னை அந்த நேரத்தில் யாருமா பாத்துக்கிட்ட, என

நான் மட்டும் தான், என சொல்ல வரும் போது சித்தார்த் வர
ஒரு வாரம் கழித்து பார்க்க போவதால் மதியில் இதயம் தாறுமாறாக துடிக்க, சித்தார்த்தோ அவளை தான் பார்த்துக் கொண்டுயிருந்தான்.


அவன் கண்களை பார்த்த மதிக்கு பார்வையின் அர்த்தம் புரியவில்லை.

அப்போழுது தான் எழுந்து வந்த அபி சித்தார்த்தை பார்த்ததும், ப்பா... என அவனை ஓட்டிக் கொண்டது.

அபி சித்துவை அப்பா என அழைத்ததை கேட்டு சிலையாகி விட்டாள். பல முறை கவனிக்காமல் இருந்துவிட்டால்.

சித்தார்த்தும் அவனை கொஞ்சிக் கொண்டுயிருந்தான். தாய்மார்கள் இருவரும் நலம் விசாரித்து அவனுக்கான உணவை தயார் செய்ய சென்றனர்.

சிலையாய் நிற்கும் மதியின் அருகே சென்று, என்னடா என கேட்க அவளிடம் பதில் இல்லாததால் அவளை உலுக்கினான்.

ஆங்.. என திருத்திரு என முழித்தாள். அவளை ரசித்துக் கொண்டே எதும் பேசாமல் தனது அறைக்கு சென்றான்.

ருமிற்கு வந்த சித்தார்த் போன் வர அதை காதில் வைத்தவன் அதில் சொன்ன செய்தியை கேட்டவனின் முகம் கோபத்தில் இறுகியது. கோபத்தில் போனை சுவற்றில் தூக்கி எறிந்தான்.

அங்கு வந்த கதிர் அவனின் முகத்தை பார்த்து அதிர்ந்தான்.

என்ன ஆச்சு பாஸ்,

யவன் டா அவன்.. அன்னைக்கு அப்படி தான் போன் பன்னி உன்னை அழிக்க போறேன் சொன்னான். இப்ப என்னனா,

என்ன சித்தார்த் புதுசா உன் வாழ்க்கைக்குள்ள யாரோ வந்துருக்கா போல.. நீயும் ரோம்ப சந்தோஷமா இருக்கியாமே.. தப்பாயிருக்கே... பார்த்து பத்திரமா இருந்துக்கோ. புதுசா வந்தவங்க வந்தா மாதிரியே போய்ட போறாங்க, என பேசிவிட்டு வைத்துவிட்டான்.

அவனை சும்மா விடக்கூடாது பாஸ். நீங்க கவலைப்படாமல் இருங்க. நான் யார் பேசுனது கண்டுபிடிக்கிறேன்.

அன்று முழுவதும் அதை பற்றியே நினைத்துக் கொண்டுயிருந்தான். கேட்ட அனைவரிடமும் வர்க் டென்சன் என்றான். அவன் தனியாக இருக்கும் போது மதி அவனிடம்,

என்ன பிரச்சனை சித்து. மார்னிங் நல்லாதானே இருந்த இப்ப என்ன? என
ஒன்னுமில்லை, எங்கோ பார்த்து சொன்னான்.


நான் உன் கிட்ட பிரச்சனை இருக்கா இல்லையானு கேட்கலை, என்ன பிரச்சனைனு தான் கேட்டேன்,

அவன் பேசியது நினைவுக்கு வர அருகில் இருந்த மதியை அணைத்துக் கொண்டான். முதலில் திகைத்தாலும் அவனின் பதற்றத்தை போக அவனை ஆறுதலாக அவனின் முதுகை தட்டிக் கொடுத்தால்.

நீ எப்பவும் என் கூடவே இரு மதி. நீ இல்லைனா நான் என்ன பன்றது. தொலைச்ச பொருள் திரும்பவும் கிடைக்குமானா கண்டிப்பா தெரியாது. ஆனா எனக்கு கிடைச்சிருக்கு. திரும்பவும் தொலைச்சிடுவேனோ பயமா இருக்கு, என

முதல பயப்படாத. அது உனக்கு தான் கிடைக்கனும் இருந்தா யாராலும் தடுக்க முடியாது. கடவுளாலை கூட தடுக்க முடியாது. பட் அது உனக்கு அது இல்லைனா இல்லை தான். நீயே நினைச்சாலும் மாத்த முடியாது, என அவளை பாவமாக பார்த்தான்.

அந்த பார்வையில் ஈர்க்கப்பட்ட மதியோ அவனை ரசித்து கன்னத்தை கிள்ளி, நீ தானே சொன்ன உனக்கு திரும்ப கிடைச்சிருச்சுனு. அப்புறம் ஏன் பயப்படற. அது உனக்கு தான். இல்லைனா ஏன் உனக்கு திரும்ப கிடைச்சிருக்கும். ஸோ, இதை நினைச்சு கவலைப்படாமல் உன் வேலை பாரு அதுக்கு முன்னாடி என்னை கொஞ்சம் விடு, என அப்போ தான் கவனித்தான் பதட்டத்தில் அவனை அணைத்தது சமாளிக்கும் விதமாக ஈஈஈஈஈ..... என இளித்தான்.

மாடு.. எருமை மாடு மாதிரி வளந்துயிருக்கியே முளையில்லை, என அவளை முறைத்தான்.அதையெல்லாம் கண்டுக்காமல், ஒரு பச்ச மண்ணை வாயில்லா பூச்சியை கட்டிப்பிடிக்கிறேனு இப்படி தான் இறுக்கமா பிடிப்பாங்களா.. உடம்பு எல்லாம் வலிக்குதே, என புலம்ப

நான் எதுமே பன்னக் கூட ஆரம்பிக்கலையே டி, என அப்பாவியாக சொல்ல அவனை முறைத்தாள்.

எப்படி டி நான் கோபமா இருந்தா டென்சனா இருக்கும் போதுயெல்லாம் கரெட்டா வந்து என்னை நார்மல் ஆக்கிடுற. பக்கத்தில் நீ இருந்த மனசு அமைதியா இருக்கு, என

ஐஸ் வைச்சது போதும் வாங்க ஆன்ட்டி உங்களை சாப்பிட வர சொன்னாங்க, என அவள் முன்னே செல்ல, அவளை சொன்னதை நினைத்து கொண்டே சென்றான்.

அனைவரும் தூங்க செல்ல அபியை தன்னோட அறைக்கு அழைத்து வந்தான் சித். சிறிது நேரத்தில் தூங்கியும் விட, தூக்கம் வராமல் முழித்துக் கொண்டு இருந்தது ஒரு ஜீவன். வேற யாரு மதி தான்.

அபியில்லாமல் தூங்க பிடிக்காமல் மெதுவாக எழுந்து சித்தார்த்தின் அறைக்கு சென்றாள். அபியின் ஒரு பக்கத்தில் சித் இருக்க மறுப்பக்கம் முழுவதும் தலையணை இருந்தது. சித்தார்த்தை எட்டிப் பார்த்தால் அவன் தூங்குவது தெரிய தலையணையை ஒதுக்கிவிட்டு அபியின் பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.

அவளின் செயல் சித்தார்த்துக்கு சிரிப்பு வந்தாலும் அவன் நினைத்தது இதை தானே.. நினைத்தது நடந்ததால் நிம்மதியாக தூங்கினான்.

அடுத்த வந்த நாட்கள் அனைத்தும் மதியை தன்னோடே வைத்துப் கொண்டான். அலுவலகத்தில் அனைவரும் அவனை வித்தியாசமாக பார்த்தனர். அவர்கள் அனைவருக்கு இது புதிதாக இருந்தது. பெண்களிடம் அதிகம் பேசாத தங்களது முதலாளி எப்போழுதும் மதியை தன்னோடே வைத்துக் கொள்ளும் காரணம் தான் தெரியவில்லை.

எதை பற்றியும் கவலை கொள்ளாமல் மதி தன்னோடு இருப்பது தான் பாதுகாப்பு என நினைத்தான். அவனோடே இருப்பது ஒருவித சந்தோஷத்தை கொடுக்க அவனோடே இருந்தாள்.

அவளை இவ்வளவு பாதுகாத்தும் அவன் கண் முன்னே இரத்த வௌ¢ளதில் உயிருக்கு போராடிக் கொண்டுயிருக்கிறாள். மதிக்கு என்ன நடந்தது? முன் விரோதத்திற்காக மதியை கொல்ல துடிக்கிறார்களா? அல்ல சித்தார்த்தை பழி வாங்க நினைக்கிறார்களா?
 
Advt

Advertisements

Top