• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் தேர்தல்???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
காதல் தேர்தல்
View attachment 7438
"என்னடி உன்னோட முகம் நகைகடை விளம்பரம் மாதிரி, ஜொலிக்குது... ஏதாவது சம்பவமா என்ன???" என்று சிரித்துகொண்டே கேட்டாள் மாதவி.
"அடியே மாவு உனக்கு விசயமே தெரியாதா?? நேத்து என்ன நடந்தது இவள் வீட்டில்னு.." என்று பதில் கேள்வி கேட்டாள் வித்யா.
"என்கிட்ட எதுவுமே சொல்லாமல் எப்படி தெரியும். சரிடி விதி நீயே சொல்லு..."
"மித்து இப்போதைக்கு கனவுல இருந்து மீண்டு வரமாட்டாள் போல.." என்று தோழியை சீண்டினாள் ராதா.
இப்படி கலகலப்பாக இருந்தது அந்த நான்குபேர் கொண்ட தலைவலிகள் சாரி தலைவிகள் கூட்டம்..
இவ்வளவுக்கு பின்னும் பேச்சில் பங்குகொண்டாள் இல்லை நம் தலைமை தலை(வலி)வி மித்ரா. அவள் இருப்பதோ காதல் கனவில்... அப்படி இருக்கையில் இந்த சில்லட்டைகளின் சீண்டல்களுக்கெல்லாம் செவிசாய்ப்பாளா???
கடுப்பான மூவரும் மித்து என்று கத்தி கொண்டே அவளை உலுக்கினர்... சிந்தனைவலை அருபட்ட ஆத்திரத்தில் "என்னங்கடி??" என்று கத்தினாள்.. கல்லூரியே ஜெர்க்கானது.. அவ்வளவு சத்தம்(எழுதுற எனக்கே காதுகூட சேர்ந்து கண்ணும் வழிக்குது).
பின்னர் தோழிகள் நால்வரும் சமாதான புறாவை பறக்கவிட்டனர். மித்ரா தன் காதல் கைகூடி திருமணம் நிச்சயிக்கப்பட்ட செய்தியை சொன்னவுடன்.. தோழிகள் மூவரும் ட்ரீட் கேட்டு கொண்டாட்டத்துக்கு வித்திட்டனர்.
"சாயுங்காலம் அண்ணாதான் கூப்பிட வரேன்னு சொல்லிருக்கான்... அவன்கிட்ட காசு வாங்கிட்டு ஹோட்டல் போலாம்" என்றாள் மித்ரா.
"ஓ உங்கண்ணா வருவாங்களா... அப்போ அவுங்களையும் பார்த்துட்டே போகலாம்..." என்று தோழிகள் மூவரும் கோரஸ் பாடினர்.
இதைக் கேட்டு அம்மூவரையும் சந்தேகமாக பார்த்த மித்ரா, "சரியில்லயே..." என்றாள்.
மறுபடியும் கோரஸ், "இல்லடி உங்கண்ணன பார்த்தேயில்லையில அதான்".
"அப்போ எங்கண்ணன சைட் அடிக்க போறீங்க அதான... வேறயாரோ எனக்கு அண்ணியா வருவதற்கு நீங்கயாராவது வந்தா எனக்கு சந்தோஷம் தான்... பட் உங்களுக்குள்ள போட்டி வருமே என்ன பண்ணலாம்..." மித்ரா யோசனையுடன் கூறினாள்.
"உங்க அண்ணாக்கு யாரை பிடிக்குதுனு பார்ப்போம்.. அவுங்களையே உனக்கு அண்ணியாக்கிருவோம்... எப்புடி.." என்றாள் ராதா.
"சூப்பர்டீ...அசத்தலா பண்ணிடுவோம்.. டீல்..."
மற்ற மூவரும் கோரஸா, "டீ..ல்.." போட்டனர்.
சாயங்காலம் ராதாவும் மித்துவும் வகுப்பை விட்டு வெளியே வந்தனர். அவர்கள்முன் பாய்ந்து வந்து நின்றனர்..மற்ற இருவரும்.
"ஏய் மித்து சூப்பர்டீ மா..மா.." என்றாள் மாவு என்ற மாதவி.
அவளை முறைத்துவிட்டு "என்னோட மாமா போடீ" என்றாள் விதியாகிய வித்யா.
இருவரும் ரெஸ்ட் ரூமிற்கு ஓடினர் டச் அப் செய்ய.. மித்ரா சிரித்துக்கொண்டே ராதாகிட்ட பேச திரும்பியவள் திகைத்தாள்.. அவா தான் முன்னாடியே ரெஸ்ட் ரூம் ஓடிட்டாளே.
நால்வரும் வாசலுக்கு வந்தனர்... தோழியர் மூவரும் பண்ணிக்கொண்டுவரும் அலப்பறையை ரசித்தபடி.. அண்ணனை தேடியவள்... அங்கு நின்றவனைக் கண்டு மயங்கி விழாதகுறையாக நின்றாள். அவள் முகம்சிவக்க விழுந்து விழுந்து சிரித்தாள்... பின்னர் தோழிகளை கண்டாள்... அவர்கள் விட்ட ஜொள்ளில்... காலேஜ் ஆனது காவிரியாக.... தோழிகளிடம் சிரித்துக்கொண்டே கூறினாள், "நீங்கள் போட்டியிடுவது அண்ணி பதவிக்கு இல்லை.."
தோழிகள் குழப்பத்துடன் அவளை நோக்கினர்.... அவளோ வண்டியில் சென்று ஏறிவிட்டு, "ட்ரீட் நாளைக்கு வைக்கிறேன். பாய் சி..த்..தீ்..ஸ்ஸ்ஸ்..." என்றுவிட்டு… "போகலாம் பா..." என்றாள் தன்னை அழைக்க வந்த தந்தையிடம்....
தோழிகள் மூவரும் அசடு வழிய சிரித்தனர் ஒருவரையொருவர் பார்த்து..????
Just for fun frnds... Dont take it serious..??
இப்போ எல்லாம் பையன விட அவனை பெத்த அப்பங்கத்தான் ஸ்மார்ட் டா இருக்காங்க மா விடு kavalaiya??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top