காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 12

Deva

Author
Author
#1
ரவி உணர்ச்சி வசப் பட்டவனா சக்தி் கையப் புடிச்சுக்கிட்டுச் சொன்னான்..

"தேங்க்ஸ் நண்பா.. நீ கெளம்பிடுவேன்னு நெனைச்சு ரொம்பவே வருத்தப் பட்டேன்..படிக்கறப்பவே உன்ன எனக்கு ரொம்பப் பிடிக்கும்..ஒரு பெரிய மனுசத் தோரணைல தான் எப்பவும் இருப்பே.. உண்மையச் சொல்லணும்னா இருந்தா சக்தி மாதிரி இருக்கணும்னு சில சமயம் பொறாமை கூட பட்டிருக்கிறேன்..அப்படிப் பட்ட உன்ன பன்னெண்டு வருசத்துக்கு அப்புறம் பாத்து வலிய வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து அவமானப் படுத்திட்டமோன்னு ரொம்ப வேதனைப் பட்டேன்.. உனக்கு வர்ற கோபத்துக்கு இவ்வளவு பொறுமையா இருந்ததே ஆச்சரியம் தான்..நீ கொஞ்ச நாள் இங்க இருந்தா நடந்த அவமானத்துக்கும்,நீ காட்டின பொறுமைக்கும் பிராயச் சித்தம் தேடிக்குவேன்"

இன்னொரு கையால் ரவியின் தோளைத் தட்டி சக்தி சொன்னான்..

"ஆனா,ஒரு கண்டிசன் நண்பா..நானோ நெனைச்ச நேரத்துல குடிக்கறவன்..உன் சிஸ்டருக்கோ குடின்னாலே அலர்ஜி..அது நியாயமும் கூட.. அவங்க காட்டின ரியாக்சன் கொஞ்சமும் தப்பில்ல.. நான் உன் வீட்ல இருந்தா மறுபடியும் முட்டல் மோதலும்,வீண் சங்கடங்களும் வரும்..போயிடலாம் தான்..ஆனா, அவங்க கதையக் கேட்ட பின்னாடி எனக்கொண்ணு தோணுச்சு..யாருமே அவங்கள சராசரி பொண்ணா நெனைச்சு மதிக்கலியோண்ணு..அவங்க கிட்ட யாராவது பிரெண்டலியா பழகி அன்பக் கொட்டியிருந்தா அவங்க வாழ்க்கையே வேற விதமா மாறி இருக்கும்..

காதலிச்சலன் இவங்களப் பொழுது போக்காப் பாத்திருக்கான்.. காதல் விசயத்துக்கு முன்னாடியே உங்க சித்தி பெருசா அன்பக் கொட்டின மாதிரி தெரியல..அதுக்கப்புறம் பெருஞ் சுமையாப் பாவிச்சு எங்கியாவது தள்ளி விடப் பாத்திருக்காங்களே தவிர ஒரு தாயா இவங்கள அரவணைச்சுக்கல..கடைசில நீயும் அவங்கள சக மனுசியாப் பாவிக்காம ஒரு பெரிய தேவதை ரேஞ்சுல தூக்கி வச்சுட்டே..உன்னச் சுத்தி உள்ளவங்க அதுக்கு மேல போயி மாரியாத்தாளாவே ஆக்கிட்டாங்க..

இது எல்லாமே மகா அபத்தம்..கடைசிக்கு நீயாவது நல்ல டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போயிக் காமிச்சு தொடர்ந்து ட்ரீட்மெண்ட் குடுத்திருக்கணும்.. சரி..அது உன் பர்சனல்.. என் முடிவ மாத்திக்கிட்டு நான் ஏன் இங்க இருக்கேன்னா.. கொஞ்ச காலமா உன் சிஸ்டரோட வார்த்தைய வேத வாக்கா,ஆர்டரா மதிச்சு நீங்க எல்லாருமே சாமியாடி ஏறக்குறைய அவங்கள சாமியாரிணி ஆக்கிட்டீங்க..மொத மொத அவங்க அப்படி இல்லேங்கறத சண்டை சச்ரவில்லாம வாக்கு வாதம் பண்ணாம என் நடத்தையால காட்டப் போறேன்.. அவங்களுக்கு இப்படியொரு ஷாக் இப்ப அவசியம் நண்பா..

நெலத்த விட்டு பத்தடி ஒசரத்துல பறக்கற அவங்க மனப் போக்க இயல்புக்குக் கொண்டு வர வேண்டியது ரொம்ப அவசியம்..நிச்சயமா கொண்டாடப் பட வேண்டிய அற்புதமானவங்க தான்..ஆனா,இப்படி அல்ல..டோட்டலா வேற மாதிரி..அத அப்புறமா பேசிக்கலாம்..நான் இங்க இருக்கணும்னா சில கண்டிசன்கள நீ ஏத்துக்கணும்.. உன் வீட்ல தங்கவோ, சாப்பிடவோ மாட்டேன்..எனக்கு உன் பைக் வேணும்.. நான் வெளிய போயி சாப்பிட்டு வந்துடறேன். இதுக்கு நீ சம்மதிக்கலேன்னா இப்பவே நீ மட்டும் போயி என் பேக்க எடுத்துட்டு வா..நான் இப்படியே கெளம்பிடறேன்"

ரவிக்கு அதுல வருத்தம் தான்..ஆனா,சக்தி வந்த வேகத்துல வேதனையோட போறதுக்கு இது எவ்வளவோ பெட்டர்னு பட்டதால உடனே சம்மதத்துக்கு அறிகுறியா அவன் கைய இறுக்கிப் பிடிச்சான்.. அதோட அவன் இங்கயே தங்கி இருந்தா கொஞ்சங் கொஞ்சமா அவன் மனச மாத்திடலாம்னு ஒரு நப்பாசையும் அவனுக்கு இருந்தது..அதனால உற்சாகச் சொன்னான்..

"நீ இந்த அளவுக்கு எறங்கி வந்து தங்கறதாச் சொன்னதே பெரிய விசயம்..என் வீட்டுக்குப் பின்னால இருக்கற தறிக் குடோன்ல எல்லா வசதியோடவும் ஒரு பெரிய ரூமிருக்கு..அதுல நீ தங்கிக்கலாம்..கதவச் சாத்திட்டா தறிச் சத்தம் பெருசாக் கேக்காது.. டிவி, லேப் டாப் எல்லாமிருக்கு.."

"டேய்..அது யாரோடது..?நீ பாட்டுக்கு மேல மேல பிளானா போட்டுட்டுப் போறியே?"
 

Deva

Author
Author
#2
..இன்னுஞ் சொல்லணும்னா என் சித்திய பாக்கறதுக்குக் கூட அவ விரும்பல..இங்க வந்த நாலாம் நாளே அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக சித்தி வந்தாங்க..அவங்க பேச்சுச் சத்தம் கேட்டதுமே பூஜை ரூம் கதவ அடிச்சுச் சாத்தி உள்ள தாள் போட்டுக்கிட்டா.. சித்தி கதவத் தட்டி அரை மணி நேரம் போராடிப் பாத்தாங்க..ம்கூம்..இவ துளி கூட எறங்கி வரல.. என் கிட்ட மட்டும் பேசினா..'அண்ணா..உனக்கு அவங்க வேணும்னா இனிமே நீ அங்க போயி பாத்துட்டு வந்துடு.. அவங்க இனியொரு நிமிசம் இங்க இருந்தாலோ, மறுபடியும் இங்க வந்தாலோ..இதோ.. உள்ள இருக்கற குத்து விளக்க எடுத்து தொண்டைல குத்திக்கிட்டுச் செத்துடுவேன்..இது என்னப் பெத்த அப்பன் மேல சத்தியம்'னு சொன்னதும் சித்தி பயந்து போயி ஊருக்குப் போயிட்டாங்க..

போனவங்க போனவங்க தான்..இதே கவலைலயும் இவ வாழ்க்கைக்கு தானே காரணம்ங்கற குற்ற உணர்ச்சிலயும் சரியாச் சாப்பிடாம,தூங்காம ஒரே வாரத்துல படுத்த படுக்கை ஆயிட்டாங்க..ஒரே ஒரு தடவ இவளப் பாக்கணும்னு பல தடவ என் மூலமா கேட்டுப் பாத்தாங்க..இவ அதக் காதுல கூட வாங்கிக்கல..என் சித்தி கடைசில ஏங்கி அழுதே செத்தாங்க.. செத்த பின்னாலயாவது வருவான்னு நான் வந்து 'அம்மா செத்துட்டாங்க சித்ரா'ன்னு சொன்னேன்.. சிரிக்கறா.. ரொம்ப நாளைக்கப்புறம் வாய் விட்டுச் சிரிச்சுக்கிட்டே சொல்றா..

'மடையா..எனக்கு அம்மா வனப் பத்ர காளி.. ஜகத் மாதாவான அவளுக்குச் சாவில்ல..உன் சித்தி சாவுக்கு நீ போ..கொள்ளி நீயே வச்சுடு.. வீடு,கடைகள மொத்தமா ஒருத்தருக்கு வாடகைக்கு விட்டுடு..தோட்டத்த வருசக் குத்தகைக்கு குடுத்துட்டு இருக்கற பண்டம் பாத்திரம் சாமானையெல்லாம் ஒரு ரூம்ல போட்டுப் பூட்டி வை.. உன் கல்யாணத்துக்கு நான் குடுக்கற சீரு அதான்.. அதுல ஒரு குண்டூசி கூட எனக்கு வேண்டாம்.. அதுல சிலது உன் சித்தி சீரா கொண்டு வந்தது.. வீடும், தோட்டமும் இந்தக் கண்றாவியெல்லாம் கண்ணுல பாக்கக் கூடாதுன்னு எப்பவோ செத்துப் போன என் அப்பனோட அப்பன் சம்பாரிச்சது.. பின்னால இருக்கற தறிக் குடோன விக்கறதாக் கேள்விப் பட்டேன்.. அத வாங்கிடு.. நல்ல வேலை தெரிஞ்சவன கூடுதல் சம்பளம் குடுத்து மேஸ்திரியாப் போடு. .மிச்சத்த நான் பாத்துக்கறேன்'னா..

அப்படியே செஞ்சேன்.. என் சித்தப்பா உயிரோட இருந்த போது தறியும் போட்டிருநததால அவளுக்கு அதுல அனுபவமும் ஆசையும் இருந்ததோட அது அவ நொந்த மனசுக்கு ஆறுதலா இருக்கும்னு அப்படியே செஞ்சேன்.. அவ எதையும் கேக்கறதில்லையே..? எல்லாமே கட்டளை,சாசனம் தான்..யாராலயும் அத மீறவோ,மறுக்கவோ முடியாது..அம்மா செத்ததுக்கு வராட்டியும் கருமாதியாவாது கழிக்கணுமே?இத எப்படி அவ கிட்டச் சொல்றதுன்னு தயங்கிட்டு இருந்த போது அவளே முந்தின நாளு கூப்பிட்டுச் சொன்னா..

'எரிஞ்சு சாம்பலாகற வரைக்கும் தான் லோகத்துல எல்லாம்..மிஞ்சற ஆன்மா மேல துவேசம் காட்டறது மகா பாவம்..காலைல பிரம்ம முகூர்த்தத்துல நெய்யும், அரப்பும் தேய்ச்சு என் கடமையச் செஞ்சுடுவேன்.. நீ கவலப் படாம போயி உன் சித்திக்கு கடைசிக் காரியங்களச் செஞ்சிட்டு வா'ன்னா.. எதுலயுமே கலந்துக்கலைன்னாலும் எல்லாமே அவ கட்டளைப் படி தான் நடந்தது..எழவு வீட்டுல 'எரிக்கறதா, பொதைக்கறதா?'ன்னு பங்காளிங்க கலந்து பேசிட்டிருக்கைல எனக்கு எஸ் எம் எஸ் பண்றா இப்படி..
'பொதைச்சா அது அவ்வளவு சீக்கிரத்துல அமைதியாயி மேல போகாது..இங்கியே அலைஞ்சுக்கிட்டிருக்கும்.. எரிச்சுடச் சொல்லு'ன்னு..பிரச்னைய நாம சொல்றதுக்கு முன்னாடியே தீர்வு சொல்றது தான் அவளோட ஸ்பெசலே...."

சக்திக்கு ஆச்சரியம்னாலும் இதெல்லாம் மிகைப் படுத்தப் பட்ட விசயங்களா நெனைச்சான்..அப்படி அவ கிட்ட சூப்பர் பவர் இருந்தா தனக்கும் அவளுக்குமே இப்ப பெரிய பிரச்னை ஓடிட்டிருக்கே..இதுக்கென்ன தீர்வு சொல்லப் போறான்னு யோசிச்சு புன்னகைச்சான்.. ஆனா,அதப் பத்தி ரவி கிட்ட அவன் பேசலை..ஏன்னா,அவனுக்கு இருந்த அந்த நம்பிக்கை அவனுக்கு நல்லது செய்யும்னா இருந்துட்டுப் போகட்டுமே? ரெண்டாவதா ஒண்ணப் பத்தி ஆராய்ஞ்சு தெளியாம எடுத்த உடனே இது முட்டாள் தனம்னு சொல்றத படு முட்டாள் தனமா அவன் நெனைச்சதாலயும் அதப் பத்தி விமர்சிக்க விரும்பாதவனா பேச்ச வேற திசைல கொண்டு போனான்...
 

Deva

Author
Author
#3
"அவங்களுக்கு ரீ மேரேஜ் பண்ணி இருக்கலாமே?"

ரவி அவன சில நொடி உத்துப் பாத்துட்டுச் சொன்னான்..

"அதப் பத்தி யோசிக்காம இருப்பனா?நம்ம ஜாதிலயும் இதெல்லாம் இப்ப சகஜமாயிட்டதால ஒரு வருசம் கழிச்சு அதப் பத்தின பேச்ச எடுக்கலாம்னு கிட்டப் போனதுமே சொன்னா..'என்ன அண்ணா..இன்னொரு கல்யாணமா? நான் ரெடி..ஆனா,நீ மாப்பிள்ளை தேட வேண்டாம்.. அவரா வருவார்..கொஞ்சம் டைமாவும்.. காத்திருப்போம்'னு கறாராச் சொல்ல மேற்க் கொண்டு பேசல.அவளோட சேர்ந்து வர்றவனுக்காக நானும் காத்திருக்கேன்"

"எனக்கு அவங்க ஆச்சரியமா.. அன்பும்,அனுதாபமும் காட்ட வேண்டியவங்களாப் படறாங்களே தவிர அற்புதங்கள் பண்றவங்களாப் படல.. மனவியல் ரீதியா.. பலரால வெறுக்கப் பட்ட எல்லாருமே இந்த மாதிரி எதையாவது வித்தியாசமா பண்ணி மத்தவங்கள்ல இருந்து தனிப் பட்டு உயர்ந்தவங்களா காட்டிக்க டிரை பண்ணுவாங்கன்னு படிச்சிருக்கேன்.. சராசரியா பழகி அன்பு காட்டினாலே அவங்களும் சராசரி லெவலுக்கு வந்துடுவாங்கன்னு என் அபிப்ராயம்"

"நீ ஒண்ண மறந்துட்டே..எம் எஸ் ஸி எம் எல் படிப்ப விட்டுத் தள்ளு..நானும் உன்ன மாதிரி கெடைச்ச புத்தகங்களை எல்லாம் படிச்சுக் கிழிச்சவன் தான்.. ஒண்ணுமே இல்லேன்னு வாதிக்க ஓராயிரம் புத்தகங்கள் இருந்தா ஏதோ ஒண்ணு இருக்கத் தான் செய்யுதுன்னு மண்டைல அடிச்சு சத்தியம் செய்ய எட்டாயிரம் புத்தகங்கள்..அதப் படிக்கைல அது சரின்னும் இதப் படிக்கைல இது சரின்னும் தோண மிச்சமாகறது மிகப் பெரிய குழப்பம் மட்டுமே..அப்ப என்ன தான் செய்யறது..எதத் தான் நம்பறது?ஆயிரம் படிச்சாலும், பத்தாயிரம் கேட்டாலும் நம்ம கண்ணு முன்னால நமக்கு நடக்கறது தான் நிஜம்..நான் பாத்து அனுபவிச்சது தான் சரின்னு ஏத்துக்கிட்டேன்"

"கண்ணால் காண்பதும் பொய்..தீர விசாரிப்பதே மெய் நண்பா.."

"நான் மனப் பூர்வமா நம்பறத ஏன் விசாரிக்கணும்ங்கறதே எங் கேள்வி.. எங்கப்பன் பொன்னுச் சாமிக் கவுண்டனுக்கும்,அம்மா சாரதாவுக்கும் தான் பொறந்தேன்னு உறுதியா நம்பற வரைக்கும் ஒண்ணும் பிரச்னையில்ல.. இவங்களுக்குத் தான் பொறந்தேனான்னு சந்தேகப் பட்டேன்னு வை.. என் நிம்மதியோட சுத்தி இருக்கறவங்க நிம்மதியும் அழிஞ்சுடும்..தீர விசாரி..சரி..நான் விசாரிக்கறவன் மட்டும் சரியான உண்மையத் தான் சொல்றானான்னு யாரு கிட்டப் போயி தீர விசாரிக்கறது?அவஞ் சொல்றதுக்கு அத்தாரிட்டி குடுக்கறது எவன்?

சரியோ, தப்போ எனக்கொண்ணு மேல நம்பிக்கை.. அது எனக்கு நல்லத மட்டுமே செய்யும்னு அசைக்க முடியாத நம்பிக்கை..இதுல அடுத்தவனுங்களுக்கு என்ன பிரச்னை?நான் நம்பறத நீயும் நம்புன்னு நான் சொல்லலையே?உனக்கும் அதையே சொல்றேன்.. என் அனுபவங்கள கொஞ்சம் குறைச்சே தகவலா உனக்குச் சொல்லி இருக்கேன்..கொஞ்ச நாள் இங்க இருக்கற நீ இதத் தெரிஞ்சுக்கறது நல்லதுங்கறதுக்காகச் சொன்னேன்..இதை ஏத்துக்கறதும்,மறுக்கறதும் உன்னிஷ்டம்..''

,,சக்தி வாய் விட்டு சிரிச்சுச் சொன்னான்..

"கூல் நண்பா..கூல்..எதுக்கு இப்படி டென்ஷனாகறே? தீர விசாரின்னு சொன்னது உனக்கில்ல..எனக்கு ! கொஞ்ச நாள் இருக்கத் தான போறேன்?நான் அலசி ஆராய்ஞ்சு போற அன்னிக்கு இதப் பத்தி அலசலாம்"

"சரி.. இப்பப் போலாம் வா"

ரெண்டு பேரும் கெளம்பினாலும் லேசா ஒரு தயக்கம் இருக்கவே செஞ்சுது..ரவிக்கு சக்தி இங்க தங்கறதாச் சொன்னது சந்தோசம்னாலும் மறுபடியும் சித்ராவும், சக்தியும் ஏழரைய இழுத்து மொறைச்சு நிக்கக் கூடாதேங்கற கவலை..அதோட அவன தறிக் குடோன்ல தங்க வெக்கறதப் பத்தி சித்ரா எதாவது தப்பான விமர்சனம் அவன் முன்னாடியே பண்ணிடக் கூடாதுங்கற கலவரம்..சக்தியோ சித்ராவுக்கும் தனக்கும் இருக்கற ஒரே ஒற்றுமை அந்தத் திமிரான பிடிவாதம் மட்டுமேன்னு உணர்ந்ததால இன்னும் பல தடவ அவளோட முட்டிக்க வேண்டி வரும்னு நம்பினான்..

ஆனா, ரெண்டு பேருமே எதிர் பாத்ததுக்கு நேர் மாறா தலைய வாரி பூ வெச்சு சிரிச்சுக் கிண்டலடிச்சு வரவேற்புக் குடுத்ததோட அவங்களுக்காக சமைச்சு இலைல பரிமாறி காத்திருக்கவும் செஞ்சு இவங்கள அதிர்ச்சிக்கு ஆளாக்கினதோட நிக்கல..அவ காட்டின சேர்ல சக்தி ஆராயற கண்களோட அவளப் பாத்துக்கிட்டே உக்காந்தவன் பார்வையத் திருப்பி இலையப் பாத்தவனுக்கு இன்னும் அதிர்ச்சி.. அந்த பச்சை மின்னும் இலைல மல்லிகைப் பூ சாதத்தால இப்படி எழுதி இருந்தது..

"Sry...'


(தொடரும்...
 
#6
Nice ud.
Avar avar nambhikkai, aduthangala baadhikalai, nambharavangalukkum nimmadhi tharudhu nna appdiye irukattume.
Arumaiyana, unmaiyana point
 

Deva

Author
Author
#8
நன்றிம்மா..
சார் வேண்டாமே சகோதரி..
அண்ணா,அப்பா...
கடைசிக்கு..அடேய் கூட ஓ.கே..!
 

Latest Episodes

Sponsored Links

Top