காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 14

Deva

Author
Author
#1
சித்ரா பத்தின அனுதாபம் சக்திக்கும் இருந்ததால துளியும் யோசிக்காம அவன் கையப் புடிச்சுச் சொன்னான்..

"என்னால எந்தப் பிரச்னையும் வராது.. நிம்மதியா போயிட்டு வா"

அத ஆமோதிக்கற மாதிரி ஒரு கார் செல்லமா ஹாரனடிச்ச படி அந்த வீட்டு முன்னால நிக்க ரவி சொன்னான்..

"கார் வந்தாச்சு.. நான் கெளம்பறேன்..உன்ன நம்பித் தான் நிம்மதியாப் போறேன்..பாத்துக்கோ"

சக்தி ஆதரவா அவன் தோள அணைச்சுக்கிட்டே அவனோடவே உள்ள போயி அந்தப் பெரிய சூட்ககேஸ எடுத்துக்க ரவி செல் போன்,பர்ஸ் எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிட்டான்..ரெண்டு பேரும் ரூம விட்டு வெளிய வந்த போது சித்ரா அவசரமா ஒரு சின்ன பூஜையப் போட்டு கைல தீபாராதனைத் தட்டோட எதுக்க வந்தா..

சக்தி சில நொடிகள் அசந்தே போனான்..அது ஏன்னா, அவன் இங்க வந்ததுல இருந்து அவள அழகு பத்தின ஆராய்ச்சிக் கண்ணோட பாக்கவே இல்ல..முதல் பார்வைல கோபமும்,வெறுப்பும் பொங்குன கண்களச் சந்திச்சு காறித் துப்பினதால இவனுக்கு வந்த கோபத்துல ஒரு எதிரியா பாவிச்சு அப்பப் பாத்தான்.. தோட்டத்துக்குப் போயிட்டுத் திரும்பி வந்ததும் பல வகையான உணர்ச்சிக் கலவையால திணறிக்கிட்டு இருந்ததால அழகை ஆராயற மனப்பான்மை வரல.. ஓரளவுக்கு மனசு இப்பத் தெளிவா இருந்ததால அழகு ஆராய்ச்சில அவனா இறங்காட்டியும் அவள் தோற்றம் இழுத்தது..இயல்பா இரும்ப காந்தம் இழுக்கற மாதிரி..

வாரின தலைல முல்லைப் பூச் சூடி.. தொவைச்சு அயர்ன் பண்ணின கஞ்சி மொட மொடப்பு காட்டன் புடவைல..நெத்தில திருநீற்றுத் தீற்றல் மேல கோபிச் சந்தனமும் மின்னும் குங்குமமும்..கைல வெள்ளித் தட்டுல மெல்லிசான கோடா கரும் புகை கிளம்பும் தீபாராதனைத் தட்டோட அவ எதுக்க வந்த போது வானத்து தேவதை இறங்கி வந்து வரவேற்புக் குடுத்த மாதிரி உணர்ந்தான்..ரவிக்கு எப்படியோ சக்தியப் பொறுத்த வரைக்கும் அவள் தோற்றம் அவனோட மனசுல ஆச்சரியப் படும் படியான அமைதியையும், சாந்தியையும் பரவச் செஞ்சுது..

மத்த பொண்ணுங்களப் போல அங்கம் அங்கமா பாத்தா அவளும் இன்னுமொரு பெண்ணே ! ஆனா,ஒட்டு மொத்தப் பார்வைல அவள் தரும் அற்புத உடல் மொழியே அவளை தேவதையாக்குது..எல்லாரையும் மாதிரி இவளையும் சராசரில சேர்க்கறது மிக மடத் தனம்னு சக்தி அப்ப உணர்ந்தான்..கல்யாண நாள்ல இருந்து தன்னையே தனக்குள்ள ஒடுக்கி சராசரி உணர்ச்சிகளக் கொன்னு விரத தவமா வாழ்ந்த அவளால சராசரி உணர்ச்சிகள கொட்டும் போதும்..அது கோபமோ,வெறுப்போ,காதலோ,காமமோ..
எதுவானாலும் அது காட்டாத்து வெள்ளமாத் தான் இருக்கும்..அத எதிர் கொள்றவன் ஒரு சராசரியா இருந்தா நிச்சயம் அடிச்சு அமுக்கி மூழ்கடிச்சுடும்ங்கறதையும் அவன் உணரவே செஞ்சான்..

பக்திங்கறது அவ போட்டுக்கிட்ட வேசமல்ல.. சராசரி உணர்ச்சிகள கட்டுக்குள்ள வச்சிருந்து அவசியம்னா அத அமிர்த பிரவாகமா பொழியவே அவள் பக்தி அவளுக்குக் உதவுதுன்னு நெனைச்சான்.. காத்திருத்தல்..தனக்கான ஒண்ணுக்காகக் காத்திருக்கறது..தவம் கூட இன்னொரு மிகப் பெரிய காத்திருத்தல் தானே?உணர்ச்சிகள ஒளிவு மறைவு இல்லாம கொட்டற அந்தச் சிறு கண்கள்ல இப்ப மிகப் பெரிய சாந்தியும்,சந்தோசமும் பொங்க எதுக்க வந்து நிக்க ரவி தீபராதனைய கண்ணுல ஒத்திக்க அவளே அவன் நெத்தில திருநீற சின்னதா இட்டுச் சொன்னா..

"உண்மையா இரு..அத விடப் பெரிய விசயம் இந்த உலகத்துல ஒண்ணுமே இல்ல..போயிட்டு வா.. "

ரவி பதிலா ஒண்ணுமே சொல்லலைன்னாலும் ரொம்ப உணர்ச்சி வசப் பட்டு இருக்கான்னு அவன் முகம் தெளிவா காட்டுச்சு..எதுவும் பேசாம முன்னால போயிக்கிட்ட சக்தி பின்னால போயிக்கிட்டிருந்தவன 'அண்ணா'ங்கற அவளோட உணர்ச்சி மிகுந்த குரல் சடனா நிறுத்தித் திரும்பவும் வச்சுது.. தீபாராதனைத் தட்ட பக்கத்துல வச்சுட்டு கிட்ட வந்து அவன் உச்சந் தலைல கைய வச்சு உணர்ச்சி பொங்கச் சொன்னா..

"நீ எனக்கு வெறும் அண்ணனா எப்பவுமே இருந்ததில்ல..முகமே ஞாபகத்துல இல்லாத அப்பாவா இருந்திருக்க..அம்மா செய்யத் தவறின கடமைய அம்மாவுக்கு மேலயே எனக்குச் செஞ்சிருக்கே.. இத்தனை காலமா தாயா,தகப்பனா இருந்து பாத்துக்கிட்டதுக்கு இது வரைக்கும் நானிருந்த தவ வாழ்க்கைக்கு பலன்னு எதாவது இருந்தா அது அத்தனையும் உனக்கே சேரட்டும்..கடைசியா,இத்தன வருசமா உங்கிட்டச் சொல்லாத ஒண்ணையும் சொல்லிடறேன்..தேங்க் யு...தேங்க் யு ஃபார் ஆல்.. போயிட்டு வா"
 

Deva

Author
Author
#2
அவ குரல்ல உணர்ச்சிப் பிரவாகமிருந்தாலும் முகத்துல அமைதியும்,நிதானமுமிருக்க..அவ சொன்னதக் கேட்டதும் ரவிக்கு கண்ணீர் பொங்கி வர தலைல இருந்த கைய எடுத்து கண்ணுல ஒத்திக்கிட்டுச் சொன்னான்..

"எப்பவும் போல நீ பேசாமையே இருந்திருக்கலோமோன்னு யோசிக்க வெக்குது இன்னிக்கு உன் பேச்சும்,செயலும்.. நீ இப்படிப் பேசுனா நான் எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டு இங்கயே இருந்துடுவேன்"

அதக் கேட்டதுமே பல வருசங்களுக்கு அப்புறம் சித்ரா கலகலன்னு வாய் விட்டு சிரிச்சுட்டுச் சொன்னா..

"நீ இருந்துட்டா மட்டும்..?மடையா.. நடக்க இருக்கறது இதான்னு நம்மையும் மீறின சக்தியால தீர்மானிக்கப் பட்ட பின்னால யாரு தான் இருந்து என்ன பண்ணிட முடியும்?உனக்கொரு விசயம் சொல்றேன்..கேட்டுட்டு சந்தோசமா போயிட்டு வா.. இப்ப பண்ணினே பூஜை..இதான் என் வாழ்க்கைல நான் பண்ணின கடைசி பூஜை..இந்த நிமிசம் முதல் பூஜை,நியமம், விரதம் எல்லாத்தையும் ஏறக் கட்டிட்டேன்..இனி இருக்கறது கொஞ்ச நாளா இருந்தாலும் அத முழுக்க முழுக்க காதலுக்காக மட்டும் தான்..எல்லாப் பொண்ணுங்களும் மாதிரி..ஆனா,என் காதல் எல்லா காதலும் மாதிரி நிச்சயமா சராசரியா இருக்காது..சரி..நீ கெளம்பு அண்ணா..சீனியர் உனக்காக காத்திட்டிருப்பார்"

சித்ராவோட இந்த திடீர் முடிவு அவனுக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தத் தந்தாலும் ஏனோ சந்தோசத்த துளி கூட குடுக்கலை..அதப் பத்தி யோசிக்கவோ,பேசவோ அவனுக்கு இப்ப நேரமில்லைங்கறத விட எப்பவும் அவ வார்த்தைய கட்டளையா மதிச்சுப் பழகியவனுக்கு இத விமர்சிக்கத் தோணல..அதோட இது நல்லதொரு மாறுதல் தானே..?பல வருசமா அவன் ஏங்கிக்கிட்டிருந்த ஒண்ணும் கூட ! அதனால,அவ கிட்ட மௌனமா விடை பெறலச் சொல்விட்டு கார் கிட்டப் போனப்ப சூட்கேஸ வச்சுட்டு சிகரெட் ஒண்ணப் பத்தின படி சக்தி டிரைவர் கிட்ட பேசிக்கிட்டிருந்தான்.. ரவி எட்டவே நின்னு அவனக் கிட்ட வரச் சொல்லி சைகை காட்டி..வந்தவன் தோள்ல கை போட்டு சின்னக் குரல்வ சொன்னான்..

"கவனமா இரு சக்தி..என்னென்னவோ பேசறா.. இது நான் ஏங்கின,வேண்டின மாறுதல்னாலும் நிச்சயமா இவ்வளவு சீக்கிரத்துல இல்ல..அதும் இப்படி விரல் சொடுக்கற நேரத்துல சத்தியமா எதிர் பாக்கல.. என்னமோ நடக்கப் போவுதுன்னு மனசு சொல்லிக்கிட்டே இருக்கு..நீ மட்டும் இப்ப இங்க இல்லேன்னா கண்டிப்பா நான் சென்னைக்குக் கெளம்பி இருக்கவே மாட்டேன்.. அதனால,கவனமா இரு.. டெய்லியும் ரெண்டு தடவையாவது கூப்பிட்டுப் பேசு..
வரட்டுமா?"

சக்தியோட பதிலுக்குக் கூட காத்திருக்காம அவன் கார்ல ஏற அது முக்கா வட்டமடிச்சுத் திரும்பி எடுத்த வேகத்துல தெருப் புழுதியோட ஊருப் புழுதியும் ஒண்ணு கூடிக் கெளம்புச்சு..சக்தி செல்லெடுத்து மணி பார்த்தான்.. 9.30.. இனி எதுவா இருந்தாலும் தூங்கி எந்திரிச்சுக் காலைல தான்னு யோசிச்சவனா திரும்ப.. வெளித் திண்ணைல உக்காந்திருந்த சித்ரா ஆர்வமா அவனப் பாக்கற பார்வையச் சந்திச்சான்.. இவன் திரும்பி அந்தப் பார்வைய சந்திச்ச பின்னாலும் அவ பார்வைய விலக்கவோ,அதுல இருந்த ஆர்வத்த மறைக்கவோ துளியும் முயற்சிக்கல..சில வினாடிகளுக்கு மேல அந்தப் பார்வையின் வீரியத்தை தாங்க முடியாம கைல இருந்த சிகரெட்ட கீழ போட்டு மிதிச்சுட்டு கிட்டப் போயி கூரைய ஆராய்ச்சி பண்றவனா அண்ணாந்து பாத்துக்கிட்டே சொன்னான்..

"தறிக் குடோன் ஆபீஸ் ரூம எனக்குக் காட்ட முடியுமா சித்ரா?"

அதக் கேட்டதும் அவ சின்னக் கண்கள் ஆச்சரியத்தால அகல விரியக் கேட்டா..

"எதுக்கு..?"

சக்திக்கு அவள விட ஆச்சரியம்.. அத மறைக்க முடியாம கேட்டான்..

"மணி பத்தாகப் போகுது சித்ரா..படுக்க வேண்டாமா?"

"அதுக்கு அங்க போவானேன்..கடல் மாதிரி வீடு இது இருக்கைல..?"

அவனுக்கு இதக் கேட்டதும் திகைப்பே வந்தது..புரிஞ்சு பேசறாளா இவ?ரவி இருந்து தான் எங்க படுத்துத் தூங்கினாலும் அது அனாவசிய கேள்விகளுக்கு அப்பாற்ப் பட்டதாயிடும்..அவனில்லாத சூழ் நிலைல அவனும்,அவளும் எப்படி ஒரே வீட்டுல தங்கியிருக்க முடியும்?அதனால அவளப் புரிஞ்சுக்க முடியாதவனா குழப்பத்த்தோட அந்தக் கேள்வியப் போட்டான்..
 

Deva

Author
Author
#3
"இங்க நான் படுத்துத் தூங்கறதால என்னென்ன விமர்சனங்கள் ஊருக்குள்ள கெளம்பும்னு உனக்குத் தெரியுமா சித்ரா?"

சித்ரா இந்தக் கேள்விக்கு வாயடைச்சுப் போகல.. பதிலுக்கு வாய் விட்டு ஜலதரங்கமா சிரிச்சுட்டே சொன்னா...

"ஊர்...விமர்சனங்கள்..ம்.. ஒரு ஆம்பள சந்திக்கற விமர்சனங்கள் மிகச் சொற்பம் மாமா.. விமர்சனங்கள் எதெதுக்கு வரும்னோ,அதன் வீரியம் எப்படிப் பட்டதுன்னோ உங்களுக்குத் தெரியாது... இங்க ஒவ்வொரு காரியத்துக்கும் ஆம்பள, பொம்பளைக்குன்னு தனித் தனியா ஊர் நியாயத் தராசு வச்சிருக்கறது தெரியுமா?உதாரணமா,நீங்க எத்தன மணிக்கு எங்க போனாலும் இந்த ஊர் கண்டுக்காது.. ஆனா,நான் ஒன்பது மணிக்கு மெழுகு வர்த்தி வாங்கப் போனா கூட இந்த ஊர் கடைக்காரனோட படுக்கப் போறதா கற்பிக்கும்..

ரெண்டுங் கெட்டான் வயசுல எங் கால் தூசிக்கும் ஈடாகாத ஒருத்தன லவ் தான் பண்ணினேன்.. வேற எந்தத் தப்பும் பண்ணல..ஆனா,இந்த ஊர் என்ன பண்ணுச்சு தெரியுமா மாமா?ராத்திரி,பகல்னுஇல்லாம இவங்களுக்கு எப்ப எல்லாம் நேரங் கெடைக்குதோ அப்பெல்லாம் அவனோட படுக்க வச்சு..இவங்க வக்கிர மனசுப் படி வித விதமா சம்போகம் பண்ண வெச்சு கர்ப்பத்தையும் உண்டாக்கி அவங்களே அபார்சனும் பண்ணினது உங்களுக்குத் தெரியுமா மாமா?காதலிச்சவன் கூட நான் படுக்கல..ஆனா,இந்த ஊர் கற்பனைலயே என்ன பல தடவ ரேப் பண்ணிடுச்சு..

பாண்டியன் செத்தும் கண்ணகி ஒத்த மாரை அறுத்து ஏன் மதுரைய எரிச்சான்னு முன்ன நான் பல தடவ யோசிச்சிருக்கேன்.. தப்பு பண்ணினது பாண்டியன்..அவனும் அரியணைலயே செத்துட்டான்.. அதுக்கப்புறமும் அவ ஏன் ஊர எரிக்கணும்? அதுவும் 'நில மகளும் அறியா பத மலராள்'னு சிலப்பதிகாரம் சொல்ற கண்ணகிக்கு ஏன் அத்தனை கோபம் வரணும்? எனக்கு இதெல்லாம் நடந்த பின்னால அந்தக் கேள்விக்கு விடை கிடைச்சுதுங்க மாமா.. கோவலன் மாதவியே கதின்னு கெடந்தப்ப மதுரை கண்ணகியப் பத்தி தாறுமாறா பேசி இருக்கணும்..நரம்பில்லாத நாக்கால விமர்சனம்ங்கற கத்திக் கொண்டு குத்திக் கிழிச்சு கூறு போட்டு வித்திருக்கும்..

புருஷன் பண்ற தப்புக்கும் பழி சுமக்கறது பொண்டாட்டி தான்ங்கறது இந்தக் காலத்துலயே எழுதப் படாத சட்டம்னா அந்தக் காலத்துல சொல்லணுமா?மதுரை கண்ணகிய பாடா படுத்தி இருக்கும்..பல பேரோட சம்பந்தப் படுத்தி பல நூறு தடவ படுக்கை விரிச்சிருக்கும்..அவ நடத்தை சரி இல்லாததாலயே கோவலன் மாதவி கிட்டச் சரண்டராயிட்டான்னு கை தட்டிச் சிரிச்சிருக்கும்.. கண்ணகி ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு நொடியும் விமர்சனங்களால எரிக்கப் பட்டிருக்கா..அதான் அத்தனை கோவம் அவளுக்கு..அதனால தான் எரிச்சுட்டா! என் உடம்புக்கும் எரிக்கற சக்தி இருந்தா அதத் துண்டு துண்டா வெட்டி ஒவ்வொரு ஊரா எரிச்சுக்கிட்டே போவேன் மாமா..

ஊரப் பத்தின காரணத்த இனிச் சொல்லாதீங்க.. உங்களுக்கு அப்படி நடந்திடும்னு பயமா இருக்கா?இல்ல..நான் உங்கள ரேப் பண்ணிட்டா கற்பு போயிடும்னு பயபடறீங்களா? நாம தப்பு தான் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டா அண்ணனோ,ஊரோ அறியாம எத்தனையோ தடவ பண்ணிக்கலாம்.. ஆண்டவனால கூட அதுக்குக் காவலிருக்க முடியாது.. ஒவ்வொருத்தருக்கும் அவங்கவங்க மனசாட்சி தான் காவலே தவிர ஊரோ,உறவோ,சட்டமோ இல்ல..

இந்த நிமிசத்துல இருந்து ரெண்டு பேரும் ஒரு கனவான் ஒப்பந்தத்துக்கு வருவோம்..மனசுல என்ன தோணுதோ அதப் பேசறதே என் சுபாவம். .நீங்க யாரு கிட்ட எப்படி இருந்தாலும் சரி..எங்கிட்ட மனசுல என்ன இருக்கோ அத ஓப்பனாச் சொல்லிடுங்க..அதிர்ச்சிகளையெல்லாம் தாண்டின நான்..சின்ன உணர்ச்சிகளுக்கெல்லாம் மதிப்புக் குடுக்காதவ..ஓ.கேவா மாமா !உங்களுக்கு ஆசாரத்துலயே படுத்துக்க கட்டில் ரெடி.. நான் கொஞ்சம் தள்ளி திண்ணைல படுத்துக்குவேன்..

இதுல இன்னொரு முக்கியமான காரணம் ஒண்ணு இருக்கறத நீங்க யோசிக்கல மாமா..என்னோட பாது காப்புக்காகவும் அண்ணன் உங்கள இருக்கச் சொல்லிட்டுப் போயிருக்கான்..நீங்க தறிக் குடோன்ல படுத்துட்டா..என் கற்புக்கு மத்தவங்களால ஆபத்து வருமே?நான் "காப்பாத்துங்க மாமா",ன்னு கத்திக் கதறினாக் கூட தறி போடற சத்தத்துல உங்க காதுல விழாதே?அதனால மாமா..என் ஆகச் சிறந்த அந்த கற்ப ஷேப்டி பண்றதுக்காவது நீங்க இந்த வீட்லயே படுத்து ஆகணும்..உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. எம் மேல உங்களுக்கு அதில்லைன்னா தராளமா நீங்க அங்க போயிப் படுத்துக்கலாம்"
 

Deva

Author
Author
#8
Nice update Deva Anna
Kannagiyoda kobathirkana vilakam arumai...
Entha kalathilum pengal Mel vilum vimarsanangal nirka povathillai...Chithramala vin pechukal romba vedanai kalai kadanthu vanthathai kattukir athu...
மாற்றம் வருமென நம்புவோம் தங்கம்...
வேற வழியில்ல..

கடைசிக்அகு நாமாவது மாறுவோம்..
தனி மனித முயற்சியே சமுதாயத்தின் முயற்சி..
 

Deva

Author
Author
#9
அப்பாடி என்னம்மா பேசுற
கண்ணகி கதை சூப்பர்
அருமையான பதிவு
வெற்றிகளும்,சந்தோசங்களும்
தருவது கர்வம் மட்டுமே..

அவமானங்களும் கேவலங்களும்
தருவது சிந்தனை,படிப்பினை..
 

Advertisements

Top