• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
சக்தி பதில் சொல்றதுக்கு முந்தியே எதுவோ ஞாபகம் வந்தவளா 'ஐயையோ..ஸாரி மாமா'ன்னு துள்ளிக் குதிச்சு எந்திரிச்சா..சக்தி ஆச்சரியமா 'எதுக்கு சித்ரா?'ன்னு கேக்கவும் தன் மண்டைல அடிச்சுக்கிட்டுச் சொன்னா..

"நீங்க நின்னுக்கிட்டிருக்க நான் என்னவோ பெரிய மகாராணி மாதிரி உக்காந்து பேசிட்டு இருக்கேன் பாருங்க..மடச்சி..மடச்சி..வாங்க மாமா..இப்படி உக்காருங்க"

உண்மையிலேயே பதறிப் பேசி தன் முந்தானைல திண்ணையத் தட்டவும் செஞ்சா..பல சமயங்கள்ல ரொம்ப புத்தி சாலியா இருக்கற சித்ரா மிகச் சில சமயங்கள்ல அபத்தமாவும் நடந்துக்கறத நெனைச்சு ஆச்சரியப் பட்டவனா கேட்டான்..

"ஆம்பளைங்க முன்னால லேடீஸ் உக்காரக் கூடாதுங்கற அடிமைத்தனம் போன நூற்றாண்டுலயே வழக்கொழிஞ்சு போச்சு சித்ரா"

"ஓ..இருக்கட்டும்... சட்டமே போட்டாலும் எதையும் நான் ஏத்துக்கணுமில்லையா?எந்த மயிரானுக்கும் நான் பதறி எழுந்திருக்க மாட்டேன்..ஏன்னா,யாரையும் நான் ஆம்பளையா மதிக்கல..உங்களத் தவிர"

இவ என்ன தான் சொல்ல வர்றான்னு புரியாதவனா சக்தி கேட்டான்..

"நானென்ன ஸ்பெஷல் சித்ர மாலா?"

தொடர்ந்து திண்ணை முழுசும் முந்தானைல தூசி தட்டிக்கிட்டிருந்தவ சக்தி சொன்னதக் கேட்டதும் டக்னு அத நிறுத்தி நிமிர்ந்து சக்தியப் பாத்தா..அந்தக் கண்ணுலயும் முகத்துலயும் அப்படியொரு பூரிப்பு.. சின்னக் கண்ணு ரெண்டும் பள பளன்னு ஜொலிக்கக் கேட்டா..

"என்ன கேட்டீங்க?"

"நானென்ன ஸ்பெஷல்னு கேட்டேன்"

"எம் பேர விட்டுட்டீங்க"

"ஓ.. நானென்ன ஸ்பெஷல் சித்ர மாலா?"

அவன் சொல்லி முடிக்கவும் கண்கள் சொருகி மூடி நெஞ்சு தாழ்ந்தேற பெருமூச்சுடன் நெகிழ்ந்து சொன்னாள்..

"வா ஆஆஆஆஆஆ வ்...நல்லாருக்கு"

சக்தி குழபத்தின் உச்சிக்கே போனவனா கேட்டான்..

"எது சித்ர மாலா?"

"இது தான்..ஸ்கூல்ல அட்டண்டென்ஸ் எடுக்கைல என் முழுப் பேரச் சொல்லிக் கூப்பிடுவாங்க.. பெரும்பாலும் சித்ரா தான்..பிரண்ட்ஸ்க்கு மட்டும் 'சித்ரு'..'மாலு'.. நீங்க என் முழுப் பேரச் சொல்லிக் கூப்பிடைல நறு மணத்தோட ஒரு தென்றல் உடம்ப வருடிச் சிலிர்க்க வைக்கற மாதிரி...சூப்பர்ப்..ஐயோ..மறுபடியும் மறந்துட்டனே..இப்ப உக்காரப் போறீங்களா, இல்லையா மாமா?"

சக்திக்கு அவள் போக்கு சுத்தமாப் புரியலேன்னாலும் அவளையும் அவளின் விசித்திர குணாதியசத்தையும் ரொம்பவே ரசிச்சான்..அதனால திண்ணையின் ஒரு மூலைல போயி உக்காந்ததும் கேட்டான்..

"பேரு ரசனைய அப்புறம் வச்சுக்கலாம் சித்ர மாலா.. அதுக்கு முன்ன ஒரு கேள்வி கேட்டேன்..நீ இன்னும் அதுக்கு பதில் சொல்லல"

"என்ன கேள்விங்க மாமா? ஓ..நீங்க என்ன ஸ்பெஷல்.. அதானே?சொல்றேன்..ஆனா,இப்ப இல்ல..என் மாமன் கிட்டச் சொல்லாம யாரு கிட்டச் சொல்றது? இதுக்காகத் தான இத்தன வருசமா காத்திருந்தேன்.?"

சக்தி சட்டைய கிழிச்சுக்கற நெலைமைக்கே போயிட்டான்..'என் மாமன்'..இத என்ன அர்த்தத்துல சொல்றா இவ?கூடவே எங்கிட்டச் சொல்றதுக்காகவே இத்தன வருசமா காத்திருக்கறதா பில்டப் வேற.. இதுக்கு இவ மணியடிச்சு பூஜை பண்ணிக்கிட்டு மௌன சாமியாவே இருந்திருக்கலாம்னு அலுத்துக்கிட்டு அதச் சொல்லவும் செய்தான்..

"நீ பேசாம இருக்கறதக் கூட என்னால புரிஞ்சுக்க முடியுது..பேசறது தான் ஒரு மண்ணும் புரியல.. பொண்ணுங்க மூடு மந்திரமா பேசறதுன்னு எறங்கிட்டா பசங்கள சட்டையக் கிழிச்சுக்கற லெவலுக்கு கொண்டு வந்து நிறுத்திட்டுத் தான் மறு வேலை பாப்பீங்களா?"

"சேச்சே..என்ன மாமா இது?சொல்றேன்.. எல்லாத்தையும் உங்க கிட்டச் சொல்றேன்.. ஆனா, இப்ப இல்ல..நாளைக்குச் சாயந்திரம் கண்டிப்பா..ஓ.கே? சரி.. என்ன முடிவு பண்ணுனீங்க மாமா..படுக்கைய இங்க போட்டு என் கற்பக் காப்பாத்தறீங்களா?இல்ல.. தறிக் குடோன் ஆபீஸ்ல படுத்து உங்க கற்ப காப்பாத்திக்கப் போறீங்களா?"

குறும்பு மின்னும் அவ பார்வையச் சந்திச்சு புன்னகையோட சொன்னான்..

"கற்புக் கருமாந்தரத்த விடு சிதர் மாலா..நான் இங்க படுக்கறதுல வேற ஒரு சிக்கல் இருக்குதுங்கறத மறந்துட்டியே?ஒரு மணிக்கொரு சிகரெட் பத்தறவன் நான்..அதோட தோணும் போதெல்லாம் குடிக்கறவனும் கூட..இந்த ரெண்டுமே உனக்கு அலர்ஜியாச்சே?'
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
"ப்பூ..இவ்வளவு தானா?நீங்க தான் என்னோட மாமன்னு ஆயாச்சே?உங்களுக்கு சந்தோசம் குடுக்கற எதுவுமே எனக்கும் சந்தோசமே..உங்க இஷ்டம் போல இருக்கலாம்.. அவ்வளவு ஏன்?நீயும் ஒரு பெக் அடின்னோ..இல்ல..ஒரு தம் இழுன்னோ நீங்க சொன்னா துளியும் யோசிக்காம செய்வேன்.. போதுமா?"

சக்திக்கு ஏற்பட்ட அதிர்ச்சில வாயப் பொளந்துட்டான்னே சொல்லலாம்..கடவுளே..எப்படிப் பட்ட பெண்ணிவள்? கொஞ்ச நேரத்துக்கு முன்ன ஒரேயடியா வெறுப்பக் கொட்டினவளா இப்ப ஓவரா அன்பப் பொழியறா? அபரிமித அன்புக்கும் அதீத வெறுப்புக்கும் உள்ள இடைவெளி வெறும் நூலளவு தான்..அது நொடில இங்க இருந்து அங்க மாறும்னு அவனுக்கும் தெரியும் தான்.. ஆனா,அதுக்கொரு காரணம் கண்டிப்பா இருக்கணுமே? நிச்சயமாய் சித்ர மாலா உடல் அழகப் பாத்து மயங்கற ஜாதியில்லை..வேற ஒரு காரணம் இருக்கணும்.. அது என்ன?அவன் யோசனையக் கலைக்கற மாதிரி அவன் முகத்துக்கு முன்னால கைய அசைச்சுச் சொன்னா..

"ஹல்ல்லோவ்.. மாம்ஸ்..என்ன சிலை ஆயிட்டீங்க? நான் பேசுனா உங்களுக்குப் பைத்தியம் புடிக்கும்னா எனக்கு நீங்க பேசலைன்னா புடிச்சுடும்.."

அவ பேச்ச விட கண்ணுக்கு முன்னால ஆடின கை அவன் சிந்தனையத் துண்டிச்சுதுன்னே சொல்லலாம்.. பளிச்னு இருந்த அவள் உள்ளங் கை.. விரல் இடுக்குல கூட வெண்மை பளிச்சிட்ட அந்தக் கை..சீராக வெட்டப் பட்டு மருதாணியிட்ட நீண்ட விரல்கள் உள்ள கை.. அந்தக் கையசைப்பில் இருந்த மென்மை,நளினம்..
ஆடின கை தோளத் தட்டவும் தான் இந்த உலகத்துக்கு வந்தான்..

"சரி தான்.. நல்லாத் தான இருந்தீங்க.. தீடீர்னு என்னாச்சு உங்களுக்கு?"

என்ன சொல்வான் சக்தி?..அத்தனைக்குமே காரணம் நீ தான்னு சொல்லவோ உன் கைய ரசிச்சேன்னு ஓப்பனா பேசவோ முடியுமா?அவ கிட்ட இருக்கும் வெளிப்படைத் தன்மை..அது தனக்கு ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் தந்தாலும்..தன் கிட்ட அது இல்லையேன்னு வருத்தப் பட்டான்..

"போரடிக்கறனா மாமா..தூக்கம் வருதா?அப்பப் போயித் தூங்குங்க..எனக்காக உக்காந்துக்கிட்டே தூங்க வேண்டாம்..."

அதச் சொன்ன போது அந்தக் குரல்ல இருந்த வருத்தத்தை உணர்ந்ததும் சக்தி தன் மொத்த சிந்தனையவும் நிறுத்தி வச்சுட்டுச் சொன்னான்..

"இப்ப நீ ஏன் நின்னுட்டிருக்கே?இப்படி உட்கார்.. நமக்கான அறிமுகம் ஆரம்பத்துல சுமூகமா நடக்கல.. இப்பவாவது அதச் சரி பண்ணுவோம்..உன்னப் பத்தி நாளைக்குச் சாயந்திரம் சொல்றேன்னு சொல்லிட்டதால என்னப் பத்திச் சொல்லிடறேன்....... முழுப் பேரு சக்திவேல்..சின்ன வயசுலயே அப்பா,அம்மா ஒருத்தர் பின்னால இன்னொருத்தர் போயிட தாத்தா,பாட்டி தான் பெத்தவங்களுக்கு மேல இருந்து வளர்த்தாங்க.. அவங்களும் சமீபத்துல....ப்ச்..நல்ல உறவுகளுக்கும், அன்புகளுக்கும் நான் ராசியில்லாதவன் சித்ர மாலா..

தாத்தா,பாட்டி செல்லமா வளர்த்ததால இயல்பாவே எனக்குள்ள ஒரு முரட்டுத் தனமும்,பிடிவாதமும் ஊறிப் போச்சு..பள்ளிக் கூடத்து நேரப்படி பாடங்கள் அடக்கு முறைகளாப் பட பத்தாவதுல பாதில வீட்ட விட்டு ஓடிட்டேன்..ஒரு வருசம் கெடைச்ச வேலைய செஞ்சுக்கிட்டு நெழல் கண்ட எடத்துல படுத்து.. என்னப் பொறுத்தவரை ஒவ்வொரு மனுசனும் இப்படி கைல ஏதுவும் எடுத்துக்காம அட்ரஸ் இல்லாதவனா ஒரு வருசம் உழைப்பால சம்பாதிச்சு செலவு பண்ணிப் பாத்துட்டு வர்றது நல்லதுன்னு நெனைக்கறேன்..

ஏன்னா, பள்ளிக் கூடத்த விட உலகம் ரொம்பப் பெருசு.. வாழ்வியலுக்கான பாடத்த அனுபவங்கள் தான் கத்துத் தரும்..அந்த அனுபவங்கள் வெளி உலகத்துல தான் கிடைக்கும்.. இப்படி அங்கயும்,இங்கயும் சுத்திட்டு பழனில ஒரு ஹோட்டல்ல சப்ளை மாஸ்டரா இருக்கைல தாத்தாவுக்குத் தெரிஞ்சவர் பாத்துட்டுப் போயி சொல்லிட்டார்..காரெடுத்துக்கிட்டு தாத்தாவும் பாட்டியும் வந்து கூட்டிட்டு வந்துட்டாங்க.. வீடு வந்து ரெண்டு பேரும் ஒரே அழுகை..டன் கணக்குல அறிவுரை.. படிப்புல இஷ்டமில்லேன்னா விட்டுடு..ஆனா,எங்கள விட்டுப் போகாதேன்னு சொன்ன பின்னால இனிமே வீட்ட விட்டுப் போக மாட்டேன்னு சத்தியம் பண்ணினேன்..

எங்கிட்ட ஒரு பழக்கம்...அது நல்லதா,கெட்டதான்னு இன்னைக்கு வரைக்கும் எனக்குத் தெரியல.. ஒரு விசயத்துல எறங்கிட்டா அதோட என்ட் வரைக்கும் இறங்கிப் பாத்துடறது தான் அந்தப் பழக்கம்.. வீட்ல இருக்கறதுன்னா சும்மா இருக்கறதா?..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
..ஒவ்வொரு மனுசனும் முன்னோர்கள் எவ்வளவு சம்பாரிச்சு வச்சிருந்தாலும் தானா கொஞ்சமாவது சம்பாதிச்சு தனக்கான அடையாளத்தை அடுத்த தலை முறைக்கு விட்டுட்டுப் போகணும்னு என்னோட ஆசை.. அதனால மொதல்ல விவசாயத்துல தீவிரமா எறங்கினேன்..

செயற்கை உரங்களப் போட்டு மண்ண மலடாக்கி வச்சிருந்ததச் சரியாக்க அஞ்சு வருசம் மண்ணோட மண்ணா கெடந்தேன்..விவசாயத்துக்குரிய தண்ணீர் மட்டும் தான் இயற்கையின் கருணை..மத்தபடி மண்ணப் பொன்னாக்கறது கடின உழைப்பு மட்டுமே.. நல்ல மழையும் பேஞ்சு நாம கடின உழைப்பையும் கொட்டினா மண் மாதா நிச்சயம் ஏமாத்த மாட்டா.. வஞ்சனையில்லாம வாரிக் குடுப்பா.. எனக்கும் குடுத்தா..என் வீட்டுச் சமையலுக்கு உபயோகப் படுத்தற சமையல் சாமான்கள்ல தொண்ணூறு சதவிகிதம் என் தோட்டத்துல விளையறதே..

ஒவ்வொரு நாளும் அதள பாதாளத்த நோக்கிப் பயணிக்கற நிலத்தடி நீர் விவசாயத்த உத்தரவாதமில்லாததா ஆக்கினதால பைனான்ஸ் ஒண்ண ஆரம்பிச்சேன்..அதுவும் நல்லாவே போயிக்கிட்டு இருக்கு..தாத்தா,பாட்டி செத்ததால உண்டான வெறுமையப் போக்கவே கொல்லிமலை புறப்பட்டவன் வழில ரவியச் சந்திச்சேன்..இங்க வந்து இப்ப திண்ணைல உக்காந்து பேசிக்கிட்டிருக்கேன்..
இதான் என் உப்பு,சப்பில்லாத வரலாறு.."

"ஏன் அப்படிச் சொல்றீங்க?எங்கதை மாதிரி தாறுமாறான ட்விஸ்டோட வாழ்க்கை இருக்கணும்னு எதிர் பாக்கறீங்களா?அண்ணன் உங்களுக்கு எது வரைக்கும் சொன்னான்..என்னென்ன சொன்னான்னு எனக்குத் தெரியாது..ஆனா,இத மட்டும் என்னால உங்களுக்கு என் தகவலா சொல்ல முடியும்..எனக்கு நடந்தது சத்தியமா என் ஜென்ம எதிரிக்குக் கூட நடக்கணும்னு எதிர் பார்க்க மாட்டேன் மாமா..எல்லாரையும் வாழ்க்கையும் அது தர்ற அனுபங்களும் செதுக்கி அழகாக்கினா,என்ன மட்டும் கொத்திச் சிதைச்சு கோரமாக்கிருச்சு.."

"நடந்தத மறந்துடுன்னு நான் சொல்ல மாட்டேன்.. நீ மறந்தாலும் சுத்தி உள்ளவங்க சொல்ற ஆறுதல் வார்த்தைகளும்,காட்டற அனுதாபப் பார்வையும் கூட உன்ன பழசுலயே கொண்டு போயித் தள்ளும்..ஆனா, உன்னால ஒண்ணு செய்ய முடியும்..நடந்ததப் பாடங்களா எடுத்துக்கிட்டு அதப் பத்தி நெனச்சாலோ,பேசினாலோ பாதிக்கப் படாம மீண்டு வர முடியும்.."

"மணி பத்தாயிடுச்சுங்க மாமா.. எங் கதைய ஆரம்பிச்சா விடிஞ்சுடும்.. நாளைக்கு வெச்சுக்கலாம் கச்சேரிய.. நீங்க போயிப் படுங்க..எனக்குப் பசிக்குது. . சாப்பிட்டுட்டு பாத்திரங்கள கழுவி வச்சுட்டு வந்துடறேன்"

"அடக் கடவுளே.. நீ சாப்பிடலைங்கறதையே நான் யோசிக்காம இழுத்து வச்சுப் பேசிக்கிட்டிருக்கேன் பாரு.. இது தான் ஆம்பளப் புத்தி..நீ போயி சாப்பிடு.. நான் ஒரு தம் போட்டுட்டு வந்துடறேன்.."

"நீங்களா என்ன இழுத்தீங்க?நாந் தான உங்கள இழுத்து வச்சுப் பேசிட்டிருந்தேன்?இதுல உங்க தப்பு ஒண்ணுமில்ல மாமா"

"சாப்பாட்டப் பத்திச் சொன்னதும் தான் ஞாபகம் வருது.. இதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு நீ சாப்பிடப் போகலாம்.. தோட்டத்துல இருந்து நானும்,ரவியும் வந்தப்ப அவன் கிட்ட சீனியர் கிட்ட இருந்து போன் வந்ததச் சொல்லி அவன உடனே சமையல் ரூமுக்குள்ள லர விடாம திசை திருப்பி அனுப்பினே..ஒரு வேள போன்வராம இருந்திருந்தா என்ன பண்ணியிருப்பே?"

சித்ரா கலகலன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னா..

"இதென்ன பெரிய வித்தையா?..மாமா..ஒண்ண மட்டும் எப்பவும் கவனத்துல வச்சுக்கங்க.. ஒரு பொண்ணு அடுத்தவங்கள டைவர்ட் பண்ணனும்னு நெனைச்சா ரொம்ப சுலபமா அதச் செய்வா.. சீனியர் போன் வரரலேன்னா நீங்க ரெண்டு பேரும் சிங்க்ல கை கழுவிட்டிருக்கும் போதே கைல கத்தியோட அங்க வருவேன்..கத்திய அண்ணன் கிட்ட நீட்டி அவசரமாச் சொல்லுவேன்..'இருட்டுல தெரியாம கிழிஞ்ச இலைய அறுத்துட்டு வந்துட்டேன்..டார்ச் எடுத்துட்டுப் போயி நல்ல எலையா அறுத்துட்டு வா அண்ணா..அதுக்குள்ள நான் டைனிங் டேபிளச் சுத்தம் பண்ணி வெக்கறேன்னு சொல்லுவேன்...அவன் வாங்கிட்டுப் போயி தறிக் குடோனுக்குப் பின்னால இருக்கற வாழை மரத்துல இலை வெட்டிட்டு வர எப்படியும் அஞ்சு நிமிசமாகும்.. அதுக்குள்ள சொல்ல வேண்டியத நான் உங்களுக்குச் சொல்லிடுவேன்..கதம் கதம்.. தம்மடிச்சுட்டுப் போயிப் படுங்க.. நான் கொட்டிட்டு வர்றேன்"

சித்ரா உள்ள போக சக்தி சிகரெட்ட வாயில வச்சு லைட்டரக் கிளிக்க..ம்கூம்.. பத்திக்கல.. மறுபடியும் பல தடவ கிளிக்கி அலுத்து சமையல் ரூம்ல தீப்பெட்டி இருக்கும்னு எந்திரிச்சு உள்ள போனான்...அங்க அவன் கண்ட காட்சி...! சித்ரா அவன் மிச்சம் வச்சுட்டுப் போயிருந்த எலைல உக்காந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தா..

(தொடரும்..
 




kavitha28

மண்டலாதிபதி
Joined
Jan 24, 2018
Messages
415
Reaction score
683
Location
chennai
hi bro,
nice enlightening episode ,where shakthi n chitra's attitude towards each of them is imminent.....rendu perume velipadaiyanavargal,aathalaal avargalin pechum semma yathaarthamaga superaa velivanthullathu......the big change in chitra's activities in matter of time towards shakthi is still confusing as that of shakthi....and am also waiting for the ''tomoro evening'' for chitra's answer.....awaiting the nxt episode .....eagerly...
 




Gomathianand

அமைச்சர்
Joined
Nov 5, 2018
Messages
1,889
Reaction score
4,678
Location
Dindigul,Tamilnadu
Nice update Deva Anna(y)
Chitra ippadi thadaladiya manusu maaritale:eek:
Sakthi romba kulapathile irukan:rolleyes:
Sakthi kitta Chitra kathala solliruvala? :love:Eagerly waiting for next ud....:unsure:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top