• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அதிர்ச்சி அவனுக்குத் தான்.. ஆனா,எதிர் பாராத விதமா திடீர்னு உள்ள வந்த அவனக் கண்டு சித்ரா அதிர்ச்சியோ,ஆச்சரியமோ கொஞ்சமும் படல.. அவன் மிச்சம் வச்சிட்டுப் போயிருந்த இலைல சாப்பிடறதப் பாத்துட்டானேங்கற குற்ற உணர்ச்சியும் காணோம்.. இவன் வார்த்தை வராம தடுமாறிட்டிருக்கைல ரொம்ப இயல்பா பேசவும் செஞ்சா..

"ஏனுங்க மாமா..தண்ணி வேணுமா?"

சொல்ல வந்ததச் சொல்ல முடியாம தடுமாறினான் சக்தி.. காரியம் பண்ணின அவ காஷுவலா இருக்க வேடிக்கை பார்த்த நாம திருதிருன்னு முழிக்கறதா இருக்கேன்னு நொந்தவனாச் சொன்னான்..

"லைட்டர் மக்கர் பண்ணுது"

"மாட்ச் பாக்ஸ் வேணுமா?அதோ..அந்த செல்ப்ல இருக்கும்.. இங்கயே உக்காந்து ஸ்மோக் பண்ணுங்க.. எனக்கும் கம்பனி குடுத்த மாதிரி இருக்கும்.."

சக்தி உள்ள போயி தீப்பெட்டி எடுத்துப் பத்திக்கிட்டுக் கேட்டான்..

"இதெல்லாம் உனக்குப் பிடிக்காதே சித்ர மாலா?"

சாப்பிடறத நிறுத்தி சில நொடி அவன உத்துப் பாத்துட்டு அப்புறமாச் சொன்னா..

"மொதல்ல நீங்க உக்காருங்க.. உங்கள நிக்க வச்சு நான் உக்காந்துட்டுப் பேசக் கஷ்டமா இருக்கு.. ப்ளீஸ்.."

அவன் உக்காந்ததும் தொடர்ந்தா...

"சிகரெட்,குடி ரெண்டுமே நான் நேத்து வரைக்கும் வெசமா வெறுத்த விசயங்கள் தான்.. ஆனா, உங்களுக்கு அது பிடிக்கும்ங்கறதால அந்த நெனைப்ப மாத்திக்கிட்டேன்.."

"ஆச்சரியா இருக்கு.. நேத்தைய விசம் இன்னிக்கு அமிர்தமாகி இருக்கு"

"லேடீஸ் எப்பவும் இஷ்டப் பட்டு கஷ்டப் படற ஜென்மங்க.. அது அவங்களோட நலையெழுத்து.."

பேச்ச நிறுத்தி புன்னகையோட அவனப் பாக்க தன் மன நிலைய அவன் வெளிப் படையாச் சொன்னான்..

"புரியல சித்ர மாலா.."

"விளக்கைத் தேடும் விட்டில் பூச்சிகள்னு படிச்சோ, கேள்வியோ பட்டிருப்பீங்களே?அதான் நாங்க.. ஆம்பளைங்களுக்குச் சுலபமான எல்லாமே எங்களுக்குக் கஷ்டம் தான்..லவ்,மேரேஜ்,செக்ஸ், குழந்தை..இப்படி எல்லாமே எங்களுக்கு சிரமமான விசயங்கள் ..ஆண்டாண்டு காலமா இது நடந்துட்டிருக்கற விசயம் தான்..ஆனா,எந்தப் பொண்ணாவது இதெல்லாம் வேணாடாம்னு சொல்லி இருக்காளா?அதுல இருக்கற கஷ்டங்கள் அவ அறியாததா..ஏன் திரும்பத் திரும்ப அத நோக்கிப் போறா?"

"அது இயற்கை விதி சித்ர மாலா"

"பிறப்பு,இறப்பு,உதயம்,அஸ்தமனம்,அமாவாசை,பௌர்ணமி, பஞ்ச பூதங்கள்,பூகம்பம், மழை,எரிமலை.. இதெல்லாம் வேண்ணா இயற்கையோட விதின்னு ஏத்துக்கலாம்..காதலும் காமமும் கூட ஒடம்புக்கும் மனசுக்குமான தேடலா இருக்கலாம்..ஆனா,கல்யாணம் எதுக்குங்க மாமா?டோட்டலா ஓரு பொண்ண குடும்பத்துக்கு அடிமையாக்கற விசயம் தான் கல்யாணம்..அதை ஏன் வேண்டாம்னு அவளால விலக்க முடியல?அதுக்குப் பேரு தான் இஷ்டப் பட்டு கஷ்டப் படறது..அப்ப அது இயற்கையோட சதின்னு வேண்ணா வச்சுக்கலாம்"

"இதுக்கும் என் விசயத்துக்கும் என்ன சம்பந்தம்?"

"ஒருத்தர நமக்குப் பிடிக்குதுன்னு எதக் கொண்டு சொல்றோம்?நல்லதோ,கெட்டதோ நமக்குப் புடிச்ச குணங்கள் ஒருத்தர் கிட்ட அதிகமா இருந்தா அவங்கள நமக்குப் பிடிச்சுப் போவுது..எத்தன தான் பிடிச்சுப் போனாலும் பிடிக்காததும் ஏதோ சிலதாவது இருக்குமில்லையா? அத என்ன பண்றது.. அத விட்டாத் தான் நான் உங் கூட பிரண்ட் ஷிப் வெச்சுக்குவேன்னு கண்டிசன் போட முடியுமா?போட்டா பிரண்ட் ஷிப் வருமா..வந்தாலும் நிலைக்குமா?உங்கள எனக்குப் பிடிக்குதுன்னா நிறைகளோட உங்க குறைகளையும் ஏத்துக்கறது தான் நல்ல உறவுக்கு அடையாளம்..ஏத்துக்கறதுன்னா அங்கீகரிக்கறதில்ல.. அனுமதிக்கறது மட்டும்! சமயம் பாத்து வண்டி வண்டியா அட்வைஸ் வரும்னு மெமரில வச்சுக்கங்க மாமா.."

சக்தி உடனே ஒண்ணும் சொல்வாம சிகரெட்ட ஒரு தம் இழுத்து ஊதிட்டு ரெண்டு முழங் கையவும் டைனிங் டேபிள் மேல ஊணி அவ கண்கள உத்துப் பாத்துச் சொன்னான்..

"பீ பிராங்க் ..என்ன உனக்குப் பிடிக்குதுன்னா.. அது எந்த அளவுக்கு? ஒரு பையனும் பொண்ணும் அண்ணந் தங்கச்சியா இல்லாம நல்ல பிரண்ட்ஸாவும் பழகலாம்.. தப்பில்ல..ஆனா,நான் மிச்சம் வச்சுட்டுப் போன எச்சிலைல சாப்பிடறது.... கமான் சித்ர மாலா..என்ன உறவிது?நிச்சயமா வெறும் பிரண்ட் ஷிப் இல்ல .. கொஞ்சங் கொஞ்சமா அதிர்ச்சியக் குடுத்து விடியறதுக்குள்ளயே என் மூளைய மரத்துத் ஸ்தம்பிக்க வச்சுடாதே..மேற்க் கொண்டு நாம இயல்பா பழகணும்னா சரியோ,தப்போ உம் மனசச் சொல்லியே ஆகணும்"
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
இப்பவும் துளியும் தயங்காம பதில் சொன்னா..

"எத்தன தமிழ் சினிமா பாத்திருப்பீங்க?, ஒரு ஆம்பளையோட எச்சிலைல யார் சாப்பிடுவா? அம்மா, அக்கா,தங்கச்சி சாப்பிடலாம்..சம்பந்தமே இல்லாத ஒருத்தி சாப்பிட்டா அதுக்கு ஒரே ஒரு அர்த்தம்.. ஒரே ஒரு உறவு தான்..அவ ஒருத்தரோட பொண்டாட்டியா இருந்தாத் தான் சாப்பிட முடியும்.."

சக்தி கண் சிமிட்டக் கூட மறந்து அவளையே பாத்துக்கிட்டிருந்தான்..கண்டதும் காதல்னு கேள்விப் பட்டிருக்கான்...ஆனா,அறிமுகமான மூணு மணி நேரத்துல ஒருத்தன புருசனாப் பாவிச்சு அவன் சாப்பிட்ட இலைல சாப்பிடறதுங்கறது சினிமாவுல கூட சாத்தியமில்லாதது..கற்பனைல சாத்தியமில்லாதது கண்ணெதிரே நடந்துக்கிட்டிருக்கு.. மேல மேல அபத்தம் பண்ற அவ தெளிவா அதப் பண்றதோட அதே தெளிவோட உடனுக்குடன் பதில் தர தனக்குத் தான் பேசவே வார்த்தைகள் கிடைக்க மாட்டேங்குதுன்னு வெறுப்பா கேட்டான்..

"கொஞ்சமாவது புரிஞ்சு தான் பேசறியா? "

"புரிஞ்சதனால தான் வெறும் பேச்சோட நின்னுடாம காரியத்துலயும் காட்டிக்கிட்டு இருக்கேன்"

சொல்லிக்கிட்டே அந்த இலைய கண்ல ஜாடையாக் காமிச்சு ஒரு வாய் அள்ளி சாப்பிட்டும் அவன வெறுப்பேத்துனா..

"சொல்றேன்னு தப்பா நெனைச்சுக்கிட்டாலும் சரி.. உடனடியா உன்ன ஒரு சைக்யாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டுப் போறது உனக்கு மட்டுமில்ல..எல்லாருக்குமே நல்லது.. உன் காரியங்கள் ஒவ்வொண்ணும்.. அத என்ன சொல்றது?ம்...அதீதமா,மிகைப் படுத்தப் பட்ட ஒண்ணா இருக்கு..அவ்வளவு சுலபத்துல ஜீரணிக்கவோ, ஏத்துக்கவோ முடியாததா இருக்கு"

"அப்பவே சொன்னேன்..உங்க கிட்ட எதையும் மறைக்க மாட்டேன்னு..தடார்னு வெளிப் படையாகற எல்லாமே அதிர்ச்சிகுரியது தான்..லட்ச ரூவா குடுத்து எடுக்கற கூரைப் புடவைனாலும் ராத்திரி கசங்கிப் போயி அவுத்தெறியறது தான் கல்யாணத்தோட பேஸிக்கே.. இதச் சொன்னா அதிர்ச்சியாத் தான் இருக்கும்"

சக்தி வாய் விட்டுச் சிரிச்சுட்டுச் சொன்னான்..அதுல லேசான கோபம் பளிச்சிட்டது..

"உன் காரியங்கள் அதையும் தாண்டினது சித்ர மாலா..
அவுத்தெறியறத ஏன் கட்டணும்னு அம்மணமா பர்ஸ்ட் நைட் ரூமூக்குள்ள வந்த மாதிரி..இதை யாருமே நார்மலாப் பாக்க மாட்டாங்க"

"பர்ஸ்ட் நைட்னா..அதாவது அந்த ராத்திரியோட அடுத்ததா வர்ற ராத்திரிகளும் அவளோடதுன்னு நம்பிக்கை அவளுக்கிருந்தா..புடவை,நாசூக்கு,அச்சம், மடம்,நாணம்,பயிர்ப்பு...இன்ன பிற பொருள்களையும் உணர்ச்சிகளையும் காமிக்கலாம்...ஆனா, அதுவே அவளுக்கு முதலும்,கடைசியுமான இரவா இருந்தா..?"

ஏறக்குறைய சக்தி வெறுப்பின் உச்சிக்கே போயி டப்னு ஓசை வர கையெடுத்துக் கும்பிட்டுச் சொன்னேன்..

"அம்மா தாயே சித்ர மாலா..ஒண்ணு உள்ள குழப்பங்கள் தெளிவாகற மாதிரி பேசறதுன்னாச் சொல்லு.. இங்க உக்காந்திருக்கேன்.. இல்லேன்னா நான் போயிப் படுக்கறேன்.. மேல மேல குட்டையக் குழப்பறதுன்னா இந்த மண்ட தாங்காது தாயே.."

சொல்லிக்கிட்டே எந்திரிச்சவன வேகமா எந்திரிச்சு இடது கையால அவன் வலது கையப் புடிச்சுச் சொன்னா..

"ஸாரி மாமா.. ரொம்பவும் தான் சோதிச்சுட்டேன்.. அஞ்சே நிமிசம்.. சாப்பாட்ட முடிச்சுட்டு சுத்தம் பண்ணிட்டு வந்துடறேன்..உக்காருங்க ப்ளீஸ்..எனக்கு இன்னிக்குத் தூக்கம் வர்ற மாதிரி தெரியல..அதனால இது வரைக்கும் யாரு கிட்டயும் பேசாத என் விசயம் எல்லாத்தையும் சொல்றேன்..ப்ளீஸ்.."

சக்தி மறுபடியும் உட்கார அவசரமா சோத்த அள்ளித் திணிச்சாலும் அவ இலையப் பாத்துச் சாப்பிடல.. அவன் முகத்தப் பாத்துக்கிட்டே தான் சாப்பிட்டா..என்ன காரணத்துனாலயோ தொடர்ந்து அவ பார்வையோட வீரியத்தைத் தாங்க முடியாம தன் பார்வைய அவ கைகளுக்குக் கொண்டு போனான்..விரல்களால் மட்டுமே சாப்பிடும் பெண்களுக்கே உரிய நளின அழகு அவ கிட்ட அதிகமாவே இருந்தது.. சோத்தைப் பிசையறதும்,கிள்ளி வாய்ல போடறதையும் ஒரு கலையாப் பாவிச்சுச் செஞ்சுக்கிட்டு இருந்தது அந்த விரல்கள்.. அதுலயும் சுண்டு விரல் மட்டும் தனியே பிரிஞ்சு நிக்க மிச்ச நாலு விரலால சாதம்,சும்பார் கலக்குனது ஒரு அழகுன்னா,கலக்குனதுல கொஞ்சத்தக் கிள்ளி வாய்ல போடும் போது ஆள் காட்டி விரல் அவனப் பாத்து சுட்டின மாதிரி தனிச்சு நின்னது இன்னொரு அழகு..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அவன் இன்னொண்ணையும் கவனிச்சான்.. ரவியும், அவனும் தோட்டத்துல இருந்து திரும்பி வந்த பின்னால அவ முகத்துல மலர்ச்சியப் பாத்தான்..ரவி கிளம்பிப் போன பின்னால எல்லா நேரமும் தன் முகத்தையே பார்த்த அவள் கண்கள் பேச்சு வாக்குல அவ சிரிசச போதும், புன்னகைச்ச போதும் ஆட்டோமேடிக்கா தாழ்ந்து நெலத்தப் பாத்தது அவனுக்கு ஆச்சரியமா இருந்தது..வெக்கப் படறாளா என்ன?ம்கூம்.. வெட்கப் படற அளவுக்கு எந்த விசயமும் பேசலையே..? வேற ஒரு காரணம் இருக்கும்.. அது என்னங்கறது தான் அவனோட இப்பத்த ஆராய்ச்சி யோசனை..
அவனையே பாத்துக்கிட்டிருந்தவ மனசுல என்ன ஓடுச்சோ..அந்த மின்னும் மென்னிதழ்கள்ல புன்னகையொண்ணு மின்னலா மலர உடனே இலை நோக்கி அவள் பார்வை தாழவும் அவனுக்கு அப்பப் பரிஞ்சுப் போச்சு..சிரிக்கற போது மட்டும் ஏன் பார்வைய விலக்கறான்னு !

அவ கண்ணடிக்கறா..யெஸ் ! சிரிப்ப உதட்டுல மலரும் போது இயல்பா அவ வலது கண்ண மட்டும் சிமிட்டறா..பாக்கறவங்களுக்கு அது கண்ணடிக்கறதாத் தான் தோணும்..அதனாலயே சிரிக்கறப்ப ஒற்றைக் கண் சிமிட்டல எதிராளி கவனிக்காத படி தலையக் குனிஞ்சுக்கறா.. இது எதுவுமே அவ திட்டமிட்டுச் செய்யாம அவளோட இயல்பான விசயங்கள்னு புரிஞ்சதும்.. அடுத்த தடவ அவ புன்னகைக் கண் சிமிட்டல மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு நெனைச்சான்..அத்தன அழகா இருந்தது.. எந்தக் கவிஞனும் வார்த்தையில் வடிக்க முடியாத காவியக் கண் சிமிட்டல் புன்னகை !

சாப்பிட்டு முடிச்சவ அந்த இலையோட ரவி சாப்பிட்டிருந்த எலையவும் வெளிய எடுத்துட்டுப் போனா.. இனியும் தான் அங்க உக்காந்திருந்தா சுத்தம் பண்றவளுக்கு இடைஞ்சலா இருப்போம்னு யூகிச்ச சக்தி எந்திரிச்சுப் போறத விட அவளுக்கு ஒத்தாசையா இருக்கலாமேன்னு நெனச்சு டேபிள் மேல பாத்திரங்கள எடுத்து கழுவற சிங்க்ல போட்டான்..உள்ள வந்தவ அவன் பண்ணிட்டிருந்த காரியத்துக்குத் திகைச்சுச் சில நொடிங்க நின்னுட்டு வேகமா கிட்ட வந்து அவன் கைல இருந்த தட்டையும்,டம்ளரையும் பிடுங்கிக்கிட்டே சொன்னா..

"ஆம்பள செய்யற வேலையா இது?கெஸ்டா லட்சணமா ஒரு ஓரமா உக்காந்து வேடிக்கை பாருங்க.. போதும்.."

சேர் மேல கெடந்த டவல எடுத்துக் கையத் தொடச்சுக்கிட்டே சக்தி சொன்னான்..

"ஆம்பள இதெல்லாம் செய்யக் கூடாதுன்னு எவன் சொன்னது?ஒரு வீடுன்னா அவனும் எல்வா வேலையும் செய்யத் தெரிஞ்சிருக்கணும்"

"அதெல்லாம் உங்க வீட்ல..இங்க ஒரு துரும்பத் தூக்கக் கூட நான் விட மாட்டேன்.. அப்புறம் எனக்கு என்ன தான் வேலையாம்?"

சக்தி கிண்டலாச் சிரிச்சுக்கிட்டே அவ மாதிரியே கேட்டான்..

"அப்புறம் எனக்கு மட்டும் தான் என்ன வேலையாம்?"

சொல்லி முடிச்சு அவன் வாய் விட்டுச் சிரிக்க.. அவ முத்துல இருந்த சிரிப்பு மறைஞ்சு தீவிரம் பரவச் சொன்னா..

"இருக்கு..ஆனா இந்தச் சமையல் கட்டுல இல்ல.. வெளிய..அப்ப உங்க வீர தீர சாகசத்தக் காட்டினாப் போதும்..இப்பப் பேசாம அந்தச் சேர்ல உக்காருங்க"

சக்தி அதுக்குக் கட்டுப் பட்டவனா உக்காந்து கேட்டான்..

"வீர தீர சாகசம் பண்ற அளவுக்கு அப்படியென்ன வேலை சித்ர மாலா?"

"அட ஆண்டவா..அத அப்புறம் சொல்றேன்.. இப்பக் கொஞ்சம் முன்ன நாம ஆரம்பிச்ச கதையச் சொல்றதா, வேண்டாமா?"

"அடக் கடவுளே..சொல்றேன் சொல்றேன்னு ஓவரா பில்டப் கொடுக்கறியே தவிர ஒண்ணையும் சொல்லித் தொலைச்ச பாட்டக் காணோம்"

சித்ரா எதுக்க உக்காந்து வலது முழங் கைய டேபிள்ள ஊணி உள்ளக் கைல கன்னம் தாங்கி அந்தச் சின்னக் கண்கள்ல் குறும்பு மின்னச் சொன்னா..

".அங்க இருந்து தான் ஆரம்பிக்கணும்.. அதுக்கு முன்ன என் வாழ்க்கைல சொல்ற அளவுக்கு ஒண்ணுமே இல்ல.. ..........ம்......ஓப்பனிங் சீனையே என் பர்ஸ்ட் நைட் சீனை எடுத்துக்குவோம்..கிளுகிளுப்பா,ரொமான்ஸ் பொங்க வேண்டிய இந்த சீன்ல ஏகத்துக்கும் கலாட்டா,கலவரம், ரணகளம்...கடைசியா அவனோட சாவு வேற.. அன்னிக்கு நான் முன்னையே அவனுக்காக அந்த ரூம்ல பயத்தோட வெயிட் பண்ணிக்கிட்டிருந்தேன ்... அதோட எருமை வாகனத்துல எமனும் ! அவன் உள்ள வரும் போதே வாய்ல சிகரெட்டும் கைல பாட்டிலுமா தள்ளாடிக்கிட்டே வந்து தான் கதவச் சாத்தினான்..

(தொடரும்...
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
Sema Dev annna...
Waiting for Sakthi's Reactions.....
 




kavitha28

மண்டலாதிபதி
Joined
Jan 24, 2018
Messages
415
Reaction score
683
Location
chennai
hi bro...
glad that u came after 4 days...!!!
what to say about this episode..!!!? .simply nice...!! ..
shakthi's dialogues alluthu...!
the eccentricities of chitra's character n ur pshycological n philosophical dealing of that character is an amazement for me.....!!!!! ..
am amazed bro...!!!
semmmaiya avala konduvanthirukeenga...!!!
dunno,if a chr behaves like that,but to think,create n imagine like chitra,is where u stand....!!!...superb work there.....!!
all that she tells about her feelings do surprises me ,like that of shakthi.....and u will have definitely have an answer for her behaviour,in the episode to come...
am waiting dr bro ...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top