• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
கிளம்பும் போதே எங்கிருந்தோ தூரத்துல இருந்து 'டம டம'ன்னு உருண்டு இவங்களத் தாண்டி எட்ட 'டொம'னு இறங்குச்சு ஒரு இடி..கூடவே கண்ணக் குருடாக்கற மின்னல்..கொஞ்ச நேரத்துல சில்லுனு ஈரப்பதம் கலந்த காத்து உடம்பத் தழுவ கார்க் கதவப் பிடிச்சுக்கிட்டு சக்தி சித்ராவப் பாத்தான்..அவன் பார்வையப் புரிஞ்சவளா வானத்த ஒரு தடவை அண்ணாந்து பாத்துட்டு அலட்சியமா தோளக் குலுக்கி வலது கை கட்டை விரல உயர்த்திக் காட்டிட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ணிச் சீறலாக் கிளம்பினா...10.50 pm..

சரியா பதினொரு மணிக்கு அந்தக் கடை முன்னால வண்டிய நிறுத்தினா சித்ரா..சக்தி அவளத் தாண்டி வேகமா லெப்ட்ல திரும்பி ஓரங் கட்டினவன் உடனே லைட்டையும்,இஞ்சினையும் அணைச்சிட்டு துள்ளி வெளிய வந்தவன் கதவச் சாத்திட்டு இருட்டுல பூனையா நகர்ந்தான்..எதுக்க எந்தச் சலனமும் இல்லாததால சி.கே தான் வந்ததப் பாத்ததும் கிளம்பிட்டான்னு முடிவுக்கு வந்தவன் அந்தக் கடை ஷட்டரை ஒட்டி குனிஞ்சு உக்காரவும் சித்ரா அந்தச் ஷட்டரத் தட்டவும் சரியா இருக்க சில வினாடிகள்ல அது பாதி வரைக்கும் மேல உயர்ந்தது..

அந்த டெய்லர் கட்டிங் டேபிளை ரெண்டு பக்கமும் ஒரு ஆளு போற அளவுக்கு இடைவெளி விட்டுப் போட்டிருந்தான்..அதுல அந்த டேபிள ஒட்டின மாதிரி இடது பக்கம் ஒரு ஓவர்லாக் மெஷினப் போட்டிருக்க ஆள் நுழைஞ்சு நிக்கற அளவுக்கு இடமிருந்தாலும் மேற்க் கொண்டு உள்ள போகணும்னா அந்த மெஷினத் தாண்டணும்..சக்தி இந்த இடை வெளியத் தான் தன் அனுமதி இல்லாத உள் நுழைவுக்குத் தேர்ந்தெடுத்தான்.. ஷட்டர் பாதி உயர்ந்து சித்ரா குனிஞ்சு வலது பக்கம் உள்ள போன அதே சமயம் சக்தியும் தாழக் குனிஞ்சு கட்டிங் டேபிள் மறைப்புல இடது பக்கம் உள்ள வந்து ஓவர்லாக் மிஷின் கிட்ட எந்த நொடியும் பாயத் தயாரா உக்காந்தான்..

சித்ரா உள்ள வந்ததும் டெய்லர் உள் லைட்டப் போட்டு அவ ஒரு கையப் பிடிச்சு வேகமா மேலும் உள்ள இழுத்துத் தள்ளினவன் அத விட வேகமா ஷட்டரக் கீழ எறக்கி காலால தாளிட்டு உடனே பூட்டி சாவிய தன் பேண்ட் பாக்கெட்ல போட்டுக்கவும் செஞ்சான்..சித்ரா சக்தி உள்ள வந்ததக் கவனிக்காததால தனியா உள்ள மாட்டிக்கிட்ட பயத்த மறைச்சுக்கிட்டு அதட்டலா அவனப் பாத்துச் சொன்னா..

"டேய்..எதுக்கு ஷட்டரச் சாத்தறே?அதத் திற மொதல்ல"

அவ பதட்டத்த ரசிச்சுக்கிட்டே ஒரு சிகரெட்டப் பத்திக்கிட்டு பக்கத்துல இருந்த சேர்ல உக்காந்தவன் அண்ணாந்து புகைய ஊதிட்டுச் சொன்னான்..

"வெட்டியா பேச்செதுக்கு மாலா?ராத்திரி பதினொரு மணிக்கு ஒரு அழகான பொண்ண ஒருத்தன் பேசறதுக்கு மட்டும் வரச் சொல்றான்னா விரல் சூப்பற குழந்தை கூட அத நம்பாது..இது எப்பவோ நடந்திருக்க வேண்டிய மேட்டர்..எங்கப்பனால தள்ளிப் போயிருச்சு.. உங் கல்யாணம் கந்தலானதா கேள்விப் பட்டதும் இன்னும் சான்ஸ் இருக்குன்னு நம்பினதால இங்க கடை போட்டேன்..ஆனா,நீ வீட்ட விட்டு வெளியவே வராதவ இன்னிக்குத் தான் வந்தே..கடைல இருந்து பாத்துக்கிட்டு இருந்தவன் நீ திரும்பிப் போறதுக்காக ரோடு கிளியராக நிக்கறதக் கவனிச்சதும் அவசரமா பைக்க எடுத்துட்டு வந்து குறுக்க போட்டேன்..வர மாட்டேன்னு நெனைச்சேன்..ஆனா,சுலபமா வந்துட்டே..
வெல்..இப்ப என்ன பண்றேன்னா உன் டிரஸ்ஸ ஒன் பை ஒன்னா ரிமூவ் பண்றே..நான் அத அங்குல அங்குலமா ரசிக்கணும்"

சித்ராவுக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை.. தன்ன நெருங்கற ஆம்பள ஒவ்வொருத்தனும் உடனே கதவத் சாத்தி கழட்டச் சொன்னா கேக்கணுமா?ஆனா, சக்தி என்ன பண்றான்னு தெரியாம உடனே எதச் செய்யவும் தயங்கி தன் உணர்ச்சிகள கட்டுக்குள்ள கொண்டு வந்து நிதானமா நெஞ்சுல கையக் கட்டி நிமிர்ந்து கம்பீரமாச் சொன்னா..

"மடையா..ஷட்டரத் திற..இல்லாட்டிக் கத்தி ஊரக் கூட்டுவேன்"

"தாராளமாச் செய்யேன்..மணியோ பதினொண்ணுக்கு மேல..நடு ராத்திரியாகப் போவுது..இந்த நேரத்துல இங்க உனக்கு என்ன வேலைன்னு கேப்பாங்களே..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
... அவங்கள வாயடைக்க வைக்க என்ன பதில் வச்சிருக்கே..தனியாப் பேச வந்தேன்னா..?காறித் துப்புவாங்க மாலா..உனக்கு ஏற்கெனவே ரொம்ப நல்ல பேரு..அதோட இதும் சேர்ந்து நீ உலகப் புகழ் பெறலாம்..தேவிடியாங்கற பேரோட ! என்ன செய்யப் போறே மை டியர்?சத்தமில்லாம ஒத்துழைச்சு பத்தினியாப் போறியா? இல்ல..ஊரக் கூட்டி அவுசாரியாகறியா?"

நிதானமாகப் பேசும் அவன் பாவனை அவளுக்குள்ள இன்னும் கலவரத்த உண்டாக்கினாலும் சக்தி எங்கியோ பக்கத்துல இருக்கற தைரியத்துல வீறாப்பா பதில் தந்தா..

"வெடிஞ்சாலும் நீ நெனைக்கறது நடக்காதுடா"

"யோசி சித்ரா..ஒரே அறைல உன்னச் செயலிழக்க வச்சு என் ஆசையத் தீத்துக்கறது ரொம்ப சுலபம்..அதுல உனக்குக் காயமாகும்..டிரஸ் கிழியும்.. தேவையா இதெல்லாம்?அதுல எனக்கு மட்டும் சுகம்..உனக்கு வலியும்,வேதனையும் மிச்சம்..அதே ஜாலியா ஒத்துழைச்சேன்னு வை..உனக்கும் சுகம்"

"உயிரே போனாலும் அது மட்டும் நடக்காதுடா எச்சக்கலை நாயே"

"பாத்தியா?உள்ள வந்து அஞ்சு நிமிசமாயும் நான் எவ்வளவு டீஸண்டா நடந்துக்கறேன்?வீணா என் கோபத்தக் கிளறினா சேதாரம்,செய்கூலி எல்லாமே இரண்டு மடங்காகும் மாலா"

"விரல் சூப்பற குழந்தை கூட நம்பாத உன் பேச்ச நம்பி தனியா வந்திருப்பேன்னா நெனைக்கறே?"

"புத்திசாலியான்னு தெரியாது..ஆனா,நான் முட்டாளில்ல மாலாக் கண்ணு..நீ ஒரு படையவே திரட்டி வெளிய நிறுத்தி இருக்கேன்னே வை..இப்ப உம் மேல கை வச்சா என்ன நடக்கும்?நீ கத்துவே..உடனே உன் ஆளுங்க ஷட்டர தட்டி உடைப்பாங்க..ஊரு கூடும்..நீயாத் தான் என்னத் தேடி வந்தேன்னு துண்டத் தாண்டி சத்தியம் பண்ணுவேன்..இந்த நேரத்துல நீ என் எடத்துக்கு வந்திருக்கறதால என் பேச்சு தான் எடு படும் டியர்.. ஓ.கே..கமான் மாலா..ரிமூவ் யுவர் டிரஸ்"

உடம்பு தீயா எரிய சித்ர மாலா எரிச்சலோட சொன்னா..

"படையே தான்..ஒத்தை ஆளு படைக்கே சமம்.. அப்படிப் பட்டவர் தான் வந்திருக்கார்"

டெய்லருக்கு அது அதிர்ச்சி தரும் தகவல்னாலும் ஒருத்தன் தானேங்கற அலட்சியத்துல சொன்னான்..

"அடடே..பாடிகார்ட் வந்திருக்கானா?வெல்.. எங்க அந்த சூப்பர் ஹீரோ?எனக்கு அறிமுகப் படுத்தி வெக்க மாட்டியா?"

அப்பத் தான் சக்தி அந்த இடுக்குல இருந்து எழுந்துக்கிட்டே சொன்னான்..

"அந்தச் சிரமம் அவளுக்கு வேண்டாம்..எம் பேரு சக்தி.. சக்தி வேல்..ஆட்டத்த ஆரம்பிக்கலாமா?"ன்னு கேட்டுக்கிட்டே மடில இருந்த கோட்டர் பாட்டில எடுத்துத் தலை திருகி அண்ணாந்து சாவகாசமா குடிச்சான்.. டெய்லர் அவன உள்ளயே எதிர் பாக்காததால சடனா அதிர்ந்தாலும் உடனே சுதாரிச்சு துணி வெட்டற கத்திரிக் கோல எடுத்துக்கிட்டு சக்தி பக்கமா பாய்ஞ்சான்..அது தான் அவன் செஞ்ச மகா தப்பு..ஏன்னா,அது வரைக்கும் டெய்லருக்கு முன்னால சித்ரா நின்னதாலயே சக்தி எந்த நடவடிக்கைலயும் இறங்காம அமைதி காத்தான்..

டெய்லருக்கும் அவளுக்கும் வாக்குவாதம் சூடாக சித்ராவுக்கு எந்த ஆபத்தும் வந்துடக் கூடாதுன்னு தன்ன வெளிப் படுத்தினான்..ஆனா,சிதராவ இடைல நிறுத்திக்கிட்டு காரியமா எதையும் செய்யத் தயங்கியே பாட்டில ஓப்பன் பண்ணிக் குடிக்க ஆரம்பிச்சான்.. டெய்லரோட கெட்ட நேரம் சித்ராவ விலக்கித் தள்ளிட்டு சக்தி பக்கம் பாய வச்சுது..அதத் தான் சக்தியும் எதிர் பாத்திருக்க குடிச்ச முடிச்ச காலி பாட்டில டெய்லர் முன்னால ஓங்கியடிச்சு உடைக்க வெறுங்கால்ல இருந்த டெய்லர் கால பதம் பாத்து ஒரு கணம் அவன முன்னேற விடாம தடுத்தது..

அந்த ஒரு கணம் சக்திக்குப் போதுமானதா இருந்தது.. இடது கைய கட்டிங் டேபிள்ல அழுத்தி ஊணி ஓவர்லாக் மிஷின தாண்டிக் குதிச்சவன் காலு ரெண்டும் இறங்கினது டெய்லர் நெஞ்சு மேல.. சக்தி உடைச்ச பாட்டில் ஏற்படுத்தின காயத்ததால கால அழுத்தி ஊண முடியாத நிலைல நின்ன டெய்லர் நெஞ்சுல சக்தியோட மொத்த வெயிட்டும் கால்கள் மூலமா இறங்க மல்லாக்க விழ..அடுத்த நொடி சக்தி தன் முழங்கால்களால டெய்லர் கைகள அழுத்திச் சிறைப் படுத்தி அவன் நெஞ்சு மேல உக்கார..உடனே அவன் கை மடிப்புல இருந்து உருவப் பட்ட பெயிண்டர்ங்க மார்க்கர் பென்சில ஷார்ப் பண்ண யூஸ் பண்ற கத்தி மின்ன ஆரம்பிச்சுது..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
நிலைமை தன் கை வசமானதும் சாவகாசமா நிதானிச்சுப் புன்னகையோட சொன்னான் சக்தி..

"எக்ஸ்ட்ராவா துளி அசைஞ்சாலும் கண்ணு பொட்டையாயிடும் டெய்லரே..அறிமுகம் போதுமா.. இன்னும் தகவல் வேணுமா?"

டெய்லர் தகராறு,கை கலப்புகளுக்கு புதுசில்லேங்கறதால தைரியமாச் சொன்னான்..

"இதுக்காக பின்னால ரொம்பவும் வருத்தப் படுவே சக்தி"

அவன் நிதானம் சக்திக்கு ஆச்சரியம்..ஆனா,அதப் புறந் தள்ளி வெறுப்பாச் சொன்னான்..

"உன் தைரியம் பாராட்டப் பட வேண்டிய ஒண்ணுன்னாலும் அந்த தைரியத்தப் பொண்ணுங்க கிட்டே காட்டறே பாரு..அதுக்கான எம் பரிசு.."

சொல்லி முடிச்சதும் சக்தி வலது கைல வச்சிருந்த ஷார்ப்னர் கத்தி டெய்லர் நெஞ்சுல காத்தக் கீறி பெருக்கல் குறி ஒண்ணப் போட அந்த இடத்துல குருதிப் பூக்கள் பூத்தன..கூடவே இடது கையால டெய்லரோட வலது கைப் பெரு விரல பின் பக்கமா வளைச்சு ஒடைக்கவும் செஞ்சான்..வலி தாங்காம கத்தத் திறந்த டெய்லரின் வாயில் அவனே வெட்டிப் போட்டிருந்த துண்டுத் துணிகள கொத்தா அள்ளித் திணிச்சுச் சொன்னான்..

"துளி அசையக் கூடாது நண்பா..அப்புறம் சேதாரம், செய் கூலி நாலு மடங்காகும்...இப்ப என்ன பண்றேன்னா நான் எந்திரிச்சதும் நல்ல பையனா எந்திரிச்சு அந்தச் சேர்ல சத்தமில்லாம நீ உக்காரணும்.. எனக்கு எதிர்ப்பா உன் இமை அசைஞ்சாலும்..அப்புறம் என் வாய் பேசாது.. கை தான் பேசும்..உடம்பு முழுக்க வரிக் குதிரை ரத்தக் கோடு தான்"

சக்தி கவனமா எந்திரிக்க டெய்லர் கைய ஊணித் தடுமாறி எழுந்திரிச்சு சக்தி காட்டின அந்தச் சேர்ல முனகிக் கிட்டே உக்காந்தான்..சக்தி பிரமை பிடிச்சு நின்ன சித்ராவப் பாத்துச் சொன்னான்..

"நீ உன் ஆசையத் தீத்துக்கலாம் சித்ர மாலா"

சக்தி அப்படிச் சொன்னதும் உயிர் வந்தவளா அசைஞ்ச சித்ரா வேகமா ரெண்டே எட்டுல டெய்லர் முன்னால நின்னு ரெண்டு செருப்பையும் ரெண்டு கைக்குக் கழட்டிக்கிட்டே ஆத்திரமாக் கேட்டா..

"ஏன்டா நாயே..இப்ப உனக்கு வாயடைச்சுப் போச்சா? காயமாகும்..துணி கிழியும்னு பீத்துனியே?யாருக்கு அதெல்லாம் ஆச்சுன்னு பாத்தியா?இது நீ செஞ்ச துரோகத்துக்கு என் பரிசு..வாங்கிக்க"

அவன் ரெண்டு கன்னத்துலயும் மாறி மாறி விழுந்தது செருப்படி..எத்தன அடின்னு கணக்கே இல்ல.. கடைசில செருப்பு வாரு அறுத்து கைய விட்டு நழுவி விழவும் தான் சித்ரா ஓய்ஞ்சா..டெய்லர் குனிஞ்ச தலைய நிமிரவே இல்ல..சித்ரா வெறுப்பாப் பாத்துட்டு காறித் துப்பினா அவன் உச்சந் தலைல..உடனே திரும்பி சக்தி கிட்ட சாந்தமாச் சொன்னா..

"இந்த நாயோட மூஞ்சில இனியும் முழிக்க விரும்பல மாமா..போதும்..வாங்க...போகலாம்"

சக்தி நகர்ந்து டெய்லரிடம் கை நீட்ட அவன் புரிஞ்சவனா வலில அனத்திக்கிட்டே பாக்கெட்ல இடது கைய விட்டு சாவிய எடுத்து அதுல போட்டான்..சக்தி உஷாரா சித்ரா கைல அதக் குடுத்து திறக்கச் சொல்லிட்டு டெய்லர் மேல கண்ணா இருக்க சித்ரா குனிஞ்சு பூட்டத் திறந்து தாள விலக்கவும் ஷட்டர் தானா சர சரன்னு மேலெழும்ப அவ பயந்து பின் வாங்கினா..ஷட்டர நீக்கினதால கடை வெளிச்சம் வெளிய பாய அங்க கையக் கட்டின படி குண்டோதரனா சி.கே நிக்க அவனுக்குப் பின்னால தடித் தடியா பத்து பேர் நின்னாங்க..இருந்தாப் போல படீர்னு ஒரு மின்னலோட வானம் வெடிக்க கொட்ட ஆரம்பிச்சது மழை.. பயந்து நின்ன சித்ராவத் தாண்டி சக்தி வெளிய வர மத்தவங்க அசையாம வெறப்பா நிக்க சி.கே பீப்பாய் உருள்ற மாதிரி நகர்ந்து வந்து சக்தி கையப் பிடிச்சுக் கேட்டான்..

"ஒண்ணும் பிரச்னை இல்லையே சக்தி?"

சக்தி அவன் கேள்விக்கு நேரடியா பதில் சொல்லாம தன் மனசிலிருந்ததக் கேட்டான்..

"எதுக்குடா இத்தன பேரு இங்க?"

"நீ போன்னாலும் மனசு கேக்கல..அதான்.."

"நீ வந்ததும் நல்லதாப் போச்சு.. சித்ரா ! ஸ்கூட்டர் சாவிய இவங் கிட்டக் குடு.. டேய் !காலைல எனக்கு போன் பண்ணு..ஸ்கூட்டர எங்க கொண்டுவரணும்னு சொல்றேன்..மிச்சத்த நாளைக்கு நேர்ல பேசிக்கலாம்.. வரட்டுமா?"

கொட்டும் மழையில் அவனும் அவளும் கார் நோக்கி நடக்க இயல்பாய் இருவர் கைகளும் இணைந்து விரல்கள் பின்னிக் கோர்த்தன..

(தொடரும்..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஓயாம என்கிட்டே உறண்டை
இழுக்கிறதே என்ற கூடப்
பொறந்தவருக்கு வேலைங்கோ,
தேவா தம்பி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சூப்பர், சூப்பருங்கோ
நல்ல சரத்குமார் படம் சண்டைக்
காட்சி ஒண்ணு பார்த்த பீலிங்கு,
தேவா தம்பி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top