• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
ரெண்டு நிமிசம்..அவன் அசையாம கிடந்த ரெண்டே நிமிசம்...ரெண்டு பேருக்குமே ரெண்டு யுகங்களாக் கடக்க..சக்திக்கு யோசிக்க அவகாசம் கெடைச்சுது தான் மிகப் பெரிய விசயம்..இந்த நேரத்துல அவன் சொல்லப் போகும் எந்தவொரு வார்த்தையவும் ரொம்ப யோசிச்சுப் பேச வேண்டிய நெருக்கடியில் அவனிருந்தான்.. நொடிக்கு நொடி தடாலடியாய் மாறும் அவள் சுபாவத்தைப் புரிஞ்சு வச்சிருந்த சக்திக்கு அவளோட இந்தச் செயல் பெரிய அதிர்ச்சியத் தரலேன்னே சொல்லலாம்..கொஞ்ச நேரம் தியானத்துல உக்காந்துட்டு வர்றேன்னு திடுதிப்புனு அவ எந்திரிச்சுப் போனப்பவே அவ திரும்பி வரும் போது நிச்சயமா ஒரு அதிர்ச்சியக் கையோட கொண்டு வருவான்னு அவன் யூகிச்சிருந்ததே அதன் காரணம் !

ஆனா,இப்படிப்பட்ட தடாலடிய அவன் எதிர் பாக்கல தான்..இருந்தாலும் அவனால இந்த சூழ் நிலைலயும் சித்ராவ தப்பா யோசிக்க முடியல..எல்லாத்துக்கும் காரணம் அந்த நாசமாப் போன குரல் பிரமை.. அது காட்டற விபரீத வழில எல்லாம் இவ கண்மூடித் தனமா யோசிக்காம இறங்கறதே இவ தடாலடிக்கு மெயின் காரணம்..மொதல்ல அதுல இருந்து இவள மீட்டெடுக்கற வழியத் தேடணும்..அப்புறம் தான் மத்த எதுவா இருந்தாலும் ! எல்லாத்துக்கும் ரவி திரும்ப வரணும்.. அவன் வந்த பின்னால அவன் அனுமதியோட தான் எதையும் செய்யணும்..அதே சமயம் இதத் தள்ளிப் போடாம உடனே செய்ய வேண்டிய காரியம்னும் முடிவெடுத்தவனா அவ தலைல அன்பா வருடிச் சொன்னான்..

"எழுந்திரு சித்ர மாலா.. நான் ஸ்மோக் பண்ணனும்மா.."

சித்ரா துள்ளிக் குதிச்சு எந்திரிச்சா.. எட்டி கைய நீட்டி பக்கத்துல இருந்த டேபிள் மேல இருந்த சிகரெட் பாக்கெட்டையும் லைட்டரையும் எடுத்தா..பாக்கெட்ல இருந்து ஒரு சிகரெட்ட எடுத்து அவன் உதட்டுல வச்சு லைட்டர பிரயத்தனப் பட்டுக் கிளிக்கி அதுக்கு அவளே கொள்ளி வச்சு உயிரூட்டவும் செஞ்சா..புகைப் பழக்கமே தனக்குத் தானே கொள்ளி வச்சுக்கற ஒண்ணு தானே? சக்தி நகர்ந்து கட்டில்ல இருந்து காலத் தொங்க விட்டு பொகைக்கறதுல பிஸியாக சித்ரா பலவந்தமா அவன் முகம் திருப்பி கண்ணோட கண் கலந்து தவிப்போட கேட்டா..

"வலிய வந்ததால இந்தச் சித்ர மாலா உங்களுக்கு கேவலமானவளாத் தெரியறாளா மாமா?"

சக்தி அவளோட ரெண்டுங் கெட்டான் மன நிலைக்கு வேதனைப் பட்டு கன்னத்துல இருந்த அவ கையிரண்டையும் தன் கைகளால ஆறுதலா இறுகச் சிறை படுத்தி கனிந்த குரலில் சொன்னான்..

"சரியோ,தப்போ அந்தக் குரல நீ உன் வழி காட்டியா, கடவுளா நம்பறே..அது சொல்றத என்ன,ஏதுன்னு யோசிக்காம கண்ண மூடிட்டு ஏத்துக்கறே.. அது நான் தான் உனக்கானவன்னு சொன்னதால நீ தடாலடியா இந்த உரிமைய எடுத்துக்கிட்டதுல துளி கூடத் தப்பில்ல சித்ர மாலா..ஆனா,இங்க என் நிலைமையவும் நீ கொஞ்சமென்ன?டீப்பாவே யோசிச்சுப் பாக்கணும்... நானொண்ணும் உத்தமனில்ல..அதும் உன்ன மாதிரி அற்புதமான பொண்ணு விருந்தா வலிய வந்தா வேண்டாம்னு சொல்ற அளவுக்கு உறுதியுள்ளவனோ, இப்ப வேண்டாம்னு சொல்லிட்டு அப்புறம் அடடா..நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டமேன்னு வருத்தப் படற பொய்யான முட்டாள் ஜென்டில் மேனுமில்ல..

இங்க நம்ம ரெண்டு பேரையும் மறந்துட்டு இன்னொரு பக்கா ஜென்டில்மேன நாம நெனைச்சுப் பாக்கணும் சித்ர மாலா..உன் அண்ணனும்,என் நண்பனுமான ரவி ! நம்ம ரெண்டு பேரு மேல எத்தனை நம்பிக்கையும், பெருந் தன்மையுமிருந்திருந்தா தனியா நம்மள விட்டுட்டுப் போயிருப்பான்?இத்தனைக்கும் பரஸ்பரம் நீங்க ரெண்டு பேரும் ஈர்க்கப் பட்டா அதுல என்ன விடச் சந்தோசப் படறவன் எவனுமில்லேன்னு ஓப்பனாச் சொல்லிட்டுப் போயிருக்கான்..எவ்வளவு பெரிய பெருந் தன்மை அவனுக்கு..!!

மனசாட்சியக் கொன்னவனுக்கு எல்லாமே ரொம்பச் சுலபம் சித்ர மாலா..அவன் வர்ற வரைக்கும் உங்கூட ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிட்டு வந்ததும் உத்தமன் வேசம் போட என்னால முடியாது..கூட்ஸ் இன்ஜின் கணக்கா விடாம புகை விடறவனா,காலங் காத்தாலயே ஆப் பாட்டில அண்ணாந்து குடிக்கற குடிகாரனா,யார் சொல்லும் காதுல வாங்காத திமிரெடுத்தவனா, தப்பானவனா, பக்கா அயோக்கியனா நான் இருக்கலாம்......ஆனா, நம்பி விட்டவனுக்குத் துரோகியா எந்த நொடியும் என்னால இருக்க முடியாது.. மனசாட்சிய வஞ்சிக்கவே முடியாத எனக்கு அதக் கொல்றதுங்கறது உயிரே போறதுன்னாலும் முடியாது..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
சரி..அவன் வந்த பின்னாலயோ,நாளைக்குக் காலைல கூடவோ நடந்ததச் சொல்லி அவன் கிட்ட மன்னிப்பும் கேட்டு உன்னக் கல்யாணம் பண்ணக் கேக்கறேன்னு வை..அப்ப நடந்ததெல்லாம் சரின்னு ஆயிடுமா சித்ர மாலா?எந்த நொடில அவன் என்ன நம்பி உன்ன இங்க விட்டுட்டுப் போனானோ அந்த நொடில இருந்து அவன் எடத்துல அண்ணனா,அப்பனா நின்னு உன்ன பத்திமாக் காப்பாத்தி ஒப்படைக்கறதுக்குத் தான் எனக்கு உரிமை இருக்கே தவிர..தப்பா சின்னதா ஒரு ஸ்டெப் வெச்சாலும் அந்த டெய்லருக்கும் எனக்கும் துளி கூட வித்தியாசமில்லாம போயிடும்..

இது என் என் நிலை..இனி உன் பொசிசனப் பாப்போம்.. அம்மாவ வெறுத்து உறவுகள விலக்கி நீ தாலியக் கழட்டி வீசிட்டு காரை எடுன்னதும் எடுத்த ரவி அப்ப உனக்கு அடிமையானான் சித்ர மாலா..இன்னும் அதுல இருந்து அவன் மீளவோ,மீள முயற்சிக்கவோ கூட இல்ல.. என் வயசு அவனுக்கு..உன்ன விட ரெண்டு வயசு மூத்தவன்.. இருபத்தேழாகுது..எந்த பிக்கல்,பிடுங்கலுமில்லாத படிச்சு நல்ல வசதியோட பெரிய வக்கீல் கிட்ட ஜுனியரா இருக்கறவன் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலேன்னு ஒரு நாளாவது யோசிச்சிருப்பியா?

டீப்பா யோசிச்சா அதுக்குக் காரணம் நீங்கறது உனக்குப் புரியும்..உன்ன வீட்ல வச்சுக்கிட்டு கல்யாணம் பண்ணி பொண்டாட்டியோட கொஞ்சிக் குலாவறதப் பாவமா நெனைக்கறான் அவன் ! உனக்கொரு நல்ல வாழ்க்கைய அமைச்சுக் குடுத்த பின்னால தான் தனக்கு எந்த நல்ல காரியமும் நடக்கணும்னு தவமாக் காத்திருக்கான்..அப்படிப் பட்டவனுக்கு மனசளவுல துளி துரோகம் நெனைச்சாலும் மகா பாவம் சித்ர மாலா.. அது உன்னாலயும் முடியாதுன்னே நான் நம்பறேன்.. ஏன்னா, நீ அந்தக் குரலால மகா குழப்பத்துல இருக்கியே தவிர நிச்சயமா குறுக்குப் புத்தி உள்ளவ இல்ல..

..இப்படித் தான் வாழணும்னு எந்த வரையறையும் என் வாழ்க்கைல இல்ல தான்..உன்ன மாதிரியே என் வாழ்க்கை.. என்னிஷ்டம்னு வாழறவன் தான்..ஆனா, வாழ்க்கைங்கறது நாம ஒருத்தர் மட்டுமே அடங்கின ஒண்ணில்ல சித்ர மாலா..பலரும்,பலதும் கலந்ததே நம்ம வாழ்க்கை..இந்தப் பலர் கலந்த வாழ்க்கைல எனக்கும் துரோகம் பண்ணினவங்க இருக்கலாம்.. அவங்களத் தேடிப் பிடிச்சுப் பழி வாங்கறனோ, இல்லையோ.. எனக்கு உதவுனவங்க..எனக்காக உருகினவங்க.. என்ன முழுசா நம்பினவங்களுக்கு என்ன செஞ்சேன்ங்கறது முக்கியமில்லையா?பிரதி பலன் பாக்காத அன்புக்குக் கூட கட்டுப் படலேன்னா நான் வாழறத விட செத்துடறதே ரொம்ப நல்லது ..
இதுக்கு மேலயும் உன் கோரிக்கை உயிரோட இருந்தா நிச்சயம் நிறைவேத்துவேன்..ஆனா,நாளைக்குக் காலைல நான் உயிரோட இருக்க மாட்டேன் .. இதுக்கு மேல உன்னிஷ்டம் சித்ர மாலா"

எல்லாப் பாரத்தையும் கொட்டிட்ட நிம்மதில பெரு மூச்சோட எந்திரிச்சு டேபிள் மேல செல் எடுத்து அழுத்தி மணி பார்த்தான்..2.10..இனித் தூங்கின மாதிரி தான்னு நெனைச்சவனா புகைய இழுத்துக்கிட்டே செல் தந்த கொஞ்ச வெளிச்சத்துல சித்ராவத் திரும்பி பாத்தவனுக்கு ஆச்சரியம் தான் மிஞ்சியது.. அவன் உணர்ச்சிப் பூர்வமா அத்தனை பேசியதக் கேட்டும் அந்த முகத்துல பெருசா எந்த மாறுதலுமில்ல..ஆர்வம் பொங்கும் கண்களால அவனோட ஒவ்வொரு அசைவையும் உள் வாங்கிட்டிருந்தா..சக்தி அலுப்பா செல் டார்ச்ச ஆன் பண்ணி டேபிள் மேல சுவத்துல சாய்ச்ச மாதிரி வச்சுட்டு டேபிள்ல சாய்ஞ்சு புகைக்கவும் சித்ரா ஒரு புன்னகையோட பேச ஆரம்பிச்சா..

"எல்லாத்தையும் சொல்லி முடிச்சுட்டீங்களா .. இல்ல..இன்னும் பாக்கி இருக்கா?அந்தக் குரல் எனக்கானவரா உங்களத் தேர்ந்தெடுத்ததுல எந்தத் தப்புமில்லேன்னு இப்பப் புரியுது எனக்கு..ஏன்னா, உண்மையான ஆண்மைங்கறது இது தான்..ஓவர் சென்டிமென்ட் மாமா உங்களுக்கு..இப்ப என்ன கேட்டுட்டேன்னு இவ்வளவு நீள லெக்சர் குடுத்தீங்க.. ஒரு பச்சக்... தட்ஸ் ஆல் !அதுக்கு மேல எனக்கு ஒரு ஆனியனும் வேணாம்.. செத்துப் போன புருஷனால எனக்கு அதுன்னாலே வெறுப்பு தான் வருது..இப்ப நாங் கேட்டத குடுக்கப் போறீங்களா,இல்லையா"
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
சித்ராவின் மனத் திண்மை சக்திக்கு மலைப்பையே தந்தது...தானும் குழம்பி தன்னையும் எவ்வளவு சுலபமா குழப்பத்துல தள்றா..காமமே அலர்ஜியானவளுக்கு தன் மீது காதலெதற்கு?காமமற்ற காதலுக்கு கல்யாணம் தான் எதுக்கு?பரஸ்பரம் பார்வைலயே எடுத்து முழுங்கிட்டு இருக்கறதா?சக்தியோட குழப்பம் கலந்த கோபமான பார்வையப் புரிஞ்சவளா சித்ரா சொன்னா..

"செக்ஸ வெறுக்கறவளுக்கு கல்யாணம் என்ன எழவுக்குன்னு யோசிக்கறீங்களா மாமா?அது நடந்தா அப்புறம் பாத்துக்கலாம்..இப்பவும் புரியலியா? புரியாட்டிப் போகட்டும்.. நான் ஒண்ணு கேட்டனே..அதுக்கு ரிப்ளையக் காணமே?என் நல்ல மூடு அப்செட் ஆகறதுக்குள்ள நல்ல புள்ளையா குடுத்துடுங்க"

முதன் முதலாய் சக்திக்குக் கோபம் எல்லை கடக்க அக்னியா அவன் வார்த்தைகளக் கொட்டத் தயாரான போது நல்ல வேளையா சித்ராவோட செல் போன் அழைக்க பெருசா சங்கடம் தரும் சம்பவங்கள் நடக்க வாய்ப்பில்லாம போச்சு..சக்தி கொதிச்சு வந்த வார்த்தைகள போன் ஒலியால வலிய அடக்க சித்ரா அவசரமா போன எடுத்துப் பாத்தவ 'ஐயையோ'ன்னு கூவி எழுந்துக்கிட்டே சொன்னா...

"மறந்தே போயிட்டேன் போங்க..எல்லாம் உங்களால.. இருங்க...அஞ்சு நிமிசத்துல திரும்பி வந்து உங்க கிட்ட உம்மா வாங்கிக்கறேன்"

பேசிட்டே திரும்பியவள சக்தியோட உறுதிக் குரல் அசைய விடாம நிறுத்தி வச்சது..

"நில்லு சித்ர மாலா..இந்த இருட்டுல அத்தன அவசரமா எங்க போறேன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"

"ஸாரி மாமா..காலைல ஆயில் இன்ஜின ஸ்டார்ட் பண்றது எப்படின்னு சொல்லிக் குடுத்தீங்க இல்லையா? அதனால இனிமே பவர் கட்டானா அத ஸ்டார்ட் பண்ண நாந் தான் வருவேன்னு தறிக் குடோன்ல ஆர்டர் போட்டிருந்தேன்..அதனால தான் இவ்வளவு நேரமாயும் நான் வரலியேன்னு கால் பண்ணி இருக்காங்க..ப்ளீஸ் மாமா..இப்ப உங்க பர்மிசன் வேணும்.. அத்தன பேரு முன்னாலயும் நான் அத ஸ்டார்ட் பண்ணி வீராங்கனையா திரும்பி வர நீங்க அனுமதிக்கணும்"

"நானும் கூட வர்றேன்"

"ம்கூம்..நான் தனியாப் போயிச் சாதிக்கணும்.. ப்ளீஸ்.. இந்த ஒரு தடவ மட்டும் பர்மிசன் குடுங்க மாமா"

சக்தி குழந்தையாய் கெஞ்சும் அவளை உற்று ரசித்துச் சொன்னான்..

"சரி..டார்ச்ச எடுத்துட்டுப் போ..பாத்து..கவனம்"

அதக் கேட்டதும் உற்சாகமா திரும்பினவள சக்தியோட குரல் மறுபடியும் தடுத்து நிறுத்தியது..

"ஒரு நிமிசம் சித்ர மாலா.."

சொல்லிக்கிட்டே நெருங்கியவன் அவ முகத்தக் கைகள்ல தாங்கி கண்கள உத்துப் பாத்து மென்மையாச் சொன்னான்..

"வரும் போது கிஸ் கனவோட வராதே..அது இப்ப நடக்காது..ரவி வரட்டும்.. அவனோட சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டு எல்லாம் நடக்கும்..இந்த ஜென்மத்துல நீ தான் எம் பொண்டாட்டி.. ஐ லவ் யூ பேபி..போதுமா? போயிட்டு வா"

அதக் கேட்டதும் அவ ஒண்ணும் பூரிச்சுப் போயிடல.. ஆனா,அவன் கண்ணுலயும் முகத்துலயும் நிம்மதி பரவச் சொன்னா..

"எனக்கு இது போதும்...மத்தது எதுவுமே . ."

ஏனோ எதுவுமே சொல்லாம வேகமாத் திரும்பி நடந்தவ கதவத் திறந்து தறிக் குடோன் பக்கமா போறத ஒலிகள் உணரத்த சக்தி பெரும் நிம்மதியோட சிகரெட் ஒண்ணப் பத்த வச்சான்..பாதி சிகரெட் கூட முடிஞ்சிருக்காது.. அவ போயி அஞ்சே நிமிசத்துல ஆயில் இன்ஜின் ஸ்டார்ட் ஆச்சு.. உடனே அது திணறலா இழுத்து ஆப் ஆகவும் அப்பவே போன கரண்டும் திரும்பி வர எல்லா லைட்டும் பளிச்சிட கரண்ட் வந்ததால ஆட்டோமேடிக்கா ஆயில் இன்ஜின் ஆப் ஆயிட்டதா சக்தி நெனைச்சான்.. ஆனா,அடுத்த ரெண்டே நிமிசத்துல கேட்ட வீல்னு ஒரு பொண்ணோட அலறல் அது தப்புன்னு புரிய வைக்க ஸ்பிரிங்கா குதிச்சு தறிக் குடோன நோக்கி ஓட இன்னொரு பதற்றக் குரல்..

"ஐயோ சித்ராக்கா..யாராவது இங்க வாங்களேன்.. என்னால தூக்க முடியல"

மறுபடியும் கேட்ட இந்தப் பெண் குரல் அவனப் புயலா தறிக் குடோனத் தாண்டி வெளிய இருந்த ஆயில் இன்ஜின் செட்டுக்குள்ள போக வச்சது..

(தொடரும்..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
கொஞ்சம் லேட்டாயிடுச்சு..ஸாரி..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
கடவுள் உங்களக் காப்பாத்தட்டும்..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
தேவா தம்பி
 




Gomathianand

அமைச்சர்
Joined
Nov 5, 2018
Messages
1,889
Reaction score
4,678
Location
Dindigul,Tamilnadu
Nice update Deva Anna(y)
Sakthi etharku romance ah thavirkanamnu kettingale atharku karanam sakthiyoda kunamnu ninaichen neengalum appadithane ippo kathaiya kondu vareenga.....
chitra sakthi ya propose panna vachitale.:love:
Chitra ku ennachu? Ippadi suspense laye mudikarathu unga special ah Anna.....:unsure:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top