• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 29

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
போனக் கட் பண்ணிட்டு தன் பக்கத்துல இருந்த ஒருத்தன் கிட்ட சி.கே சொன்னான்..

"டேய்..உனக்கு ஞாபகமிருக்கா?அஞ்சு வருசத்துக்கு முந்தி ஒரு டெய்லர நோட் பண்ண சென்னிமலை ரோட்டுல நொங்குக் கடை போட்டமே?அந்த சக்தி இப்ப இங்க வரப் போறான்..ஒரு கார வரச் சொல்லி அடி பட்டவங்கள அள்ளிப் போட்டு அனுப்பு..அவன் வந்து இதெல்லாம் பாத்தாக் கத்துவான்"

"ஏன் தலைவரே..அடி,தடின்னா அவருக்குப் பயம்ங்களா?"

சி.கே வாய் விட்டுச் சிரிச்சுட்டுச் சொன்னான்..

"ரசிச்சுச் செய்வான்டா..நீயும்,நானும் அடி,தடில எறங்கினா கண்மூடித் தனமா எறங்கி அடிச்சோம்னா, அவன் அதைத் திட்டம் போட்டு ரசனையோட செய்வான்"

சொன்ன சி.கே மனசுல சக்தி விரிஞ்சான்..அஞ்சு வருசத்துக்கு முன்ன டெய்லர ஒதைச்சு விரல ஒடைச்ச பின்னால ஸ்கூட்டர தன் கிட்ட ஒப்படைச்சு அடுத்த நாள் காலைல கூப்பிடறதாச் சொல்லிட்டுப் போன சக்தி சாயந்திரம் வரைக்கும் கூப்பிடாததால இவனே கூப்பிடவும் தான் அட்ரஸ் சொல்லி வரச் சொன்னான்.. சி.கே போன போது சித்ராவோட எல்லாக் காரியமும் முடிஞ்சு சக்தி ரவி தோட்டத்துல தனியா உக்காந்து குடிச்சுக்கிட்டிருந்தான்..சி.கேக்கு ஆறுதலா என்ன சொல்றதுன்னு தெரியல..ஏன்னா,சித்ராவுக்கும் சக்திக்கும் என்ன உறவுன்னே அவனுக்குத் தெரியாது.. அதனால, கிட்ட உக்காந்து ஆறுதலா அவன் தோள்ல தட்டிக் கேட்டான்..

"எப்படி சக்தி?"

"ஆயில் இன்ஜின ஸ்டார்ட் பண்றேன்னு போனா.. அஞ்சே நிமிசத்துல போயிச் சேந்துட்டா..பெல்ட்ல புடவை மாட்டி இழுத்து செவுத்துல அடிச்சுருக்கும்னு எங்க யூகம்..ஆனா,எனக்கு மட்டும் லேசா அந்த டெய்லர் மேல சந்தேகமிருக்கு..''

"சான்ஸே இல்லடா.. டெய்லரும் செத்துட்டான்.. வாழ்க்கைல ஒண்ணு சேராதவங்க சாவுல மட்டும் ஒண்ணு சேர்ந்திருக்காங்க"

"என்னடா இது புதுக் கதை..நீ சொல்றது நிஜம் தானா?"

"நீ என்னவோ எடத்தக் காவி பண்ணிட்டு அவங்கவங்க எடத்துக்குப் போங்கன்னு சொல்லிட்டாலும் எனக்கென்னவோ மனசு ஒத்துக்கல..டெய்லர் கண்காணிக்க வேண்டிய ஆளுன்னு உள்ளுணர்வு சொல்ல ஒருத்தன மட்டும் அவன ரெண்டு நாளைக்கு கண்காணிக்கச் சொல்லி விட்டுட்டு வந்தேன்.. நாம அந்த எடத்த விட்டு விலகி ஒரு மணி நேரத்துக்கப்புறம் அவன் யாருக்கோ போன் பண்ணி அரை மணி நேரம் பேசி இருக்கான்..என் ஆளு என்ன பேசறான்னு தெரிஞ்சுக்கக் கிட்டப் போகைல இவன் 'எல்லாத் தகவலும் வாட்ஸ் அப்ல அனுப்பறேன்..அரை மணி நேரத்துக்குள்ள நான் சொனனதச் செஞ்சுட்டு இங்க வா'ன்னு சொன்னது மட்டும் காதுல விழுந்திருக்கு..அதுக்கு மேல கேக்க முடியல..பேசி முடிச்சதும் டெய்லர் கடைச் ஷட்டரச் சாத்திட்டான்..

ஒரு மணி நேரத்துக்கப்புறம் அவன் கூட்டாளி ஒருத்தன் வந்திருக்கான்..டெய்லர் ஷட்டர தாள் போடாம சும்மா தான் கீழ இழுத்து விட்டிருக்கான்.. வந்தவன் தட்டிப் பாத்துட்டு பதில் இல்லாம போகவும் ஷட்டரத் தூக்கினா டெய்லர் ஃபேன்ல தொங்கிட்டு இருக்கான்..உயிர் போயி வெகு நேரமாச்சு..அதனால அவனச் சந்தேகப் படறதுல அர்த்தமில்ல..என்னடா விதி இது?நாட்டுல அத்தனை அயோக்கியத்தனம் பண்ணினவனெல்லாம் எம்பது வயசுக்கு இருக்க இந்தப் பொண்ணு என்ன பாவம் பண்ணுச்சுன்னு இந்த வயசுல எமன் கூட்டிட்டுப் போறான்?எனக்கு இது என்ன மாதிரி சிஸ்டம்னு புரிய மாட்டேங்குது.. "

"சாவுங்கற பயம் ஒண்ணு மட்டுமில்லேன்னா மனுசனக் கைலயே புடிக்க முடியாதுடா சி.கே..அதனால தான் நல்லவன் கெட்டவன் பாகு பாடில்லாம,ஜாதி மத பேதமில்லாம,சின்னது பெரிசுன்னு வயசு வித்தியாசமில்லாம சாவு நடந்துக்கிட்டே இருக்கு..சரிடா.. நாளைக்கு நீ தோட்டத்துக்கு வா..உன் ஆளுங்களுக்கு அரிசி எடுத்துட்டு வந்துடலாம்"

"இந்த சூழ் நிலைல அதான் முக்கியம் பாரு.. விடறா.. அவனுங்களுக்கு நான் குடுத்துடறேன்"

"நீ லட்சக் கணக்குல குடு..அது நாங் குடுத்த மாதிரி ஆகுமா?நாளைக்கு நீ தோட்டத்துக்கு வர்றே.. அவ்வளவு தான்! நான் பல தடவ சொல்லிட்டேன்..தோட்டத்துக்கே நிரந்தரமா வந்துடுறான்னு..காதுலயே போட்டுக்கல"

"என்ன நம்பி பத்து ஆளுங்களோட அவங்க குடும்பங்களும் இருக்கு சக்தி"
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
"ஏன்?அவங்கள வச்சு என்னால காப்பாத்த முடியாதா? சும்மா இல்லடா..அவங்க தோட்டத்துல தெரிஞ்ச வேலையச் செய்யட்டும்.. ஒண்ணாப் பாடு படுவோம் மண்ணுல..அதுல வர்றதையும் பங்கித் திம்போம்.. என்ன சொல்றே?"

"ஸாரி நண்பா..அது சரி வராது"

சக்திக்கு கோவம் வர வலிக்கற மாதிரி சொன்னான்..

""ஏன் சரி வராதுன்னு எனக்குப் புரியுது நண்பா.. நீயும்,உன் ஆளுங்களும் சும்மா உக்காந்து சோறு தின்னு பழகிட்டீங்க..இனி ஓடியாடி வேலை செய்யறது கஷ்டம் தான்"

சக்தியத் தவிர வேற யாராவது இதச் சொல்லியிருந்தா சி.கே கிட்ட மிச்சமாயிருக்க முடியுமா?ஆனா,அவனுக்கு சக்தியோட மனசு தெரியும்ங்கறதால துளியும் கோபப் படாம சொன்னான்..

"நான் ஏன் வர மாட்டேன்னு சொன்னேங்கறதுக்கு உண்மையான காரணத்தச் சொன்னா வருத்தப் படுவே சக்தி"

"பொய்யான காரணத்தக் கேட்டு நிம்மதியடையறத விட உண்மையக் கேட்டு வருத்தமடையறதே நல்லது.. ஏன்னா,பொய் எப்பவாவது ஒரு நாள் வேசம் கலைஞ்சு பல்லிளிச்சு மீள முடியாத அதிர்ச்சியக் குடுக்கும்.. உண்மையால அப்ப வர்ற வலியோட போயிடும்.. நீ சொல்லுடா..நாம் பாக்காத வலியா?"

"ஒரே காரணம்...உன் அசுர குடி ! எங்கப்பன் குடிச்சுட்டு மொபட் ஓட்டிட்டுப் போயித் தான் தானும் செத்து, எங்கம்மாவோட என் தம்பியவும் கொன்னு என்ன அனாதையாக்கினான்..எப்படி எப்படியோ இருந்திருக்க
வேண்டியவன் இப்ப எப்படி இருக்கேன்னனு பாருடா.. அதுக்கு ஒரே காரணம் குடி..அதும் நாங் குடிக்கல.. எங்கப்பன் குடிச்சதால நான் அனாதையாயி அய்யர் கொளத்துக்குள்ள அடியாளுங்கள வச்சு சீட்டாட்டக் கிளப் நடத்திக்கிட்டிருக்கேன்..கேடின்னு பேரெடுத்துட்டதால எவனும் வேலை குடுக்க மாட்டேங்கறான்..

அதும் கூட வேலைன்னு போயி நின்னா எவ்வளவு டெக்னிகலா பதில் சொல்றானுங்க தெரியுமா? 'வெளையாடாதீங்க மொதலாளி..இருவது ஆளுங்கள குடும்பத்தோட வச்சுச் சோறு போடற உங்களுக்கு நான் வேலை குடுக்கறதாவது?உங்களுக்கு தமாசு பண்ண இன்னிக்கு நாந் தான் கெடைச்சனா?'..இப்படி ஒருத்தன் நாசூக்காச் சொல்லுவான்..உனக்குத் தெரியுமே நம்ம குமார்.. பட்டறை மேட்டுல டிங்கரிங்,பெயிண்டிங் வொர்க் ஷாப் வெச்சிருக்கானே?முள்ளுக்குள்ளயும், நரகலுக்குள்ளயும் டெய்லியும் போலீசுக்குப் பயந்து ஓடிக்கிட்டு இது என்னடா பொழப்புன்னு திருந்தி வேலை தேடி நாலு வருசத்துக்கு முன்ன இவன் கிட்டப் போனதுக்கு என்ன சொன்னான் தெரியுமா?

'பல பேர அதட்டி வேலை வாங்குன உனக்கு நான் வேலை தர்றேன்ங்கறதும்,உன் பழசு எல்லாத்தையும் மறந்துட்டு இங்க ஹெல்பரா வேலை செய்யறதும் ரெண்டவது விசயம்..முதல் விசயம் ஒண்ணிருக்கு.. அது என்னன்னா..பட்டறைத் தொழில்ல மரியாதைய எதிர் பாக்கக் கூடாது..மோட்டார்க்காரன் வாயத் தெறந்தா பேச்சையே கெட்ட வார்த்தைல தான் ஆரம்பிப்பான்..அது திட்டறதில்ல..பாராட்டறதே அப்படித் தான்.. சுருக்னு பட்டா ஆளத் தூக்கி ஆகாசத்துல பறக்க விடற உனக்கு இது செட்டாகுமான்னு யோசி...நல்ல வார்த்தையோ, கெட்ட வார்த்தையோ எனக்கு எல்லாக் கஸ்டமரும் வேணும் .. நீ டெய்லியும் ஒருத்தனப் பறக்க விட்டா ஒரே மாசத்துல எனக்கு எந்த கஸ்டமரும் இருக்க மாட்டானே?

சரி..அத விடு..அதோ ! அங்க கேபின்ல பட்டி தேய்ச்சுக்கிட்டிருக்காரே ஒரு பெருசு?எங்க தாத்தன் கிட்ட வேலைக்குச் சேர்ந்தவர் நாப்பது வருசமா இங்க இருக்கார்..தாத்தா,எங்கப்பா,நான்னு மூணு தலை முறைய பாத்தவரு..எனக்கு யார் மேல கோவம் வந்தாலும் அந்தாளத் தான் கூப்பிட்டு கண்டபடி திட்டுவேன்..கஸ்டமர என்னால திட்ட முடியாது..அடுத்த எப்சிக்கு வர மாட்டான்..வேலை செய்யறவனத் திட்டினா அடுத்த நாளே வர மாட்டான்..பொண்டாட்டியத் திட்டினா ராத்திரி திண்ணைல படுக்க வச்சுடுவா..என் எல்லாக் கோபத்துக்கும் இந்தப் பெருசு தான் வடிகால்... எனக்கு டீ,சிகரெட் வாங்கிட்டு வர்றதே அவர் தான்!மோட்டார் தொழில்ல இது சகஜம்..

உன்னால இதையெல்லாம் ஜீரணிக்க முடியுமா? நடத்தறது கள்ளத் தனமா சீட்டாட்டக் கிளப்னாலும் நீ பக்கா ஜென்டில்மேன். ஆனா,கோவக்கார ஜென்டில்மேன்..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
...நான் அந்தப் பெருசத் திட்டறத உன்னால ஒரு நாள் கூட பொறுத்துக்க முடியாது..கஸ்டமருங்க பறக்கறாங்களோ இல்லையோ, மொத ஆளா நாம் பறக்கறது நிச்சயம்..அதனால சி.கே.. நானும் ஆளு வேணும்னா எனக்கு அடங்கின ஆளப் போட்டுக்கறேன்..நீயும் வேற முதலாளி தேடிக்கோ.. அதான் ரெண்டு பேருக்குமே நல்லது..கடைசிக்கு நம்ம நல்ல பிரண்ட் ஷிப்பாவது மிச்சமா இருக்கும்'னு ஓப்பனாச் சொல்லிட்டான்..மொத்தத்துல எங்களுக்கு வேலை குடுக்க எவனும் தயாரா இல்ல..

இப்பவும் சொல்றேன்..இந்த நிமிசம் நீ குடிய விடு.. அடுத்த நிமிசத்துல இருந்து நானும் என் ஆளுங்களும் உனக்கு அடிமையா இருக்கோம்..அது வரைக்கும் தயவு செஞ்சு என்னத் தோட்டத்துக்குக் கூப்பிடாத"

சக்தி பொறுமையா எல்லாம் கேட்டுட்டு சி.கே தோள இறுக்கியணைச்சு உடனே சொன்னான்..

"கண்டிசன் போடறது எனக்குத் துளியும் புடிக்காத விசயம்..ஸாரி நண்பா..இந்த ஜென்மத்துல நம்மால ஒண்ணு சேந்து வேலை செய்ய முடியாது..ஆனா, நண்பனா இருக்கறதுல தடையில்லையே?உன்ன மாதிரி ஒருத்தன் பிரண்டா இருக்க நான் குடுத்து வச்சிருக்கணும்"

சி.கே உணர்ச்சி வசப் பட்டவனா சக்திய இறுக்கி அணைச்சுச் சொன்னான்..

"குடி ஒண்ண விட்டா உன்ன அடிச்சுக்க இந்த ஜில்லாவுலயே உன்ன அடிச்சுக்க ஆள் கிடையாது சக்தி"

×××××+×××××××××××××××××××××××××××××××

அன்னிக்குப் பாத்தது தான் சக்திய..அதுக்கப்புறம் சந்திச்சுக்கவே இல்ல..எப்பவாவது போன்ல பேசினதோட சரி..இன்னிக்குத் தான் அஞ்சு வருசத்துக்கு அப்புறம் நேர்ல சந்திக்கப் போறோம்னு சி.கே நெனைச்ச போது நூறடிக்கு அந்தப் பக்கம் சக்தி ஒரு பாறையத் தாண்டிக் குதிச்சு வலில கெடந்த பாம்ப தூக்கி எட்ட வீசிட்டு வர்றதப் பாத்தான்..ஓடிப் போயி அணைச்சுக் கூட்டி வந்து தன் கூட்டாளிங்களுக்கு அறிமுகப் படுத்தி வச்சான்..எல்லாரையும் உக்காரச் சொல்லிட்டு சக்தி நின்னுக்கிட்டே பேச்ச ஆரம்பிச்சான்..

"சாவகாசமா உங்க ஒவ்வொருத்தரையும் அறிமுகப் படுத்திக்கறேன்..இப்ப நேரமில்ல..என்ன,ஏதுன்னு அதப் பத்தி விளக்கமாப் பேசறதுக்கு முன்ன எனக்கும், சி.கேவுக்கும் அஞ்சு வருசமா ஒரு பஞ்சாயத்திருக்கு.. மொதல்ல அத முடிச்சுடலாம்.."

சக்தி பேச்ச நிறுத்திட்டு கொஞ்ச நேரம் தன் நண்பன் முகத்தையே பாத்துட்டுத் தொடர்ந்தான்..

"நண்பனோட சேர்த்து உங்க எல்லாரையுமே அஞ்சு வருசத்துக்கு முந்தியே என் தோட்டத்துக்கு வேலைக்குக் கூப்பிட்டேன்..வர முடியாதுன்னுட்டான்.. சம்பளம் கட்டு படியாகலைங்கறதுக்காக அவன் வர மாட்டேன்னு சொல்லல..அவன் எத்தன கேட்டாலும் நான் குடுப்பேன்.. என்னால முடியவே முடியாதுன்னு அப்ப நான் நெனைச்ச ஒண்ணக் கேட்டான்..எங் குடிய விடச் சொன்னான்..நாம குடிக்கறதுல இவனுக்கென்ன நஷ்டம்னு நான் முடியாதுன்னுட்டேன்.. நான் மட்டும் இவஞ் சொன்னத அப்பவே கேட்டிருந்தா.. எம் மேல உசுரையே வச்சிருந்த மூணு பேர்ல ஒருத்தர் உசுரு போயிருக்காது..இன்னும் ரெண்டு பேரோட உசுரு ஊசலாடிட்டு இருக்காது..குடியால எல்லாரையும் இழந்து சி.கே மாதிரியே இப்ப அனாதையா நிக்கறேன்...."

மேல பேச முடியாம துக்கம் தொண்டைய அடைக்க பொங்கி வந்த கண்ணீரை மறைக்க யோசிக்கறனா பாவிச்சுத் தலை குனிஞ்சான் சக்தி !சில நொடிகள் தான்..உடனே சமாளிச்சு தல நிமிந்து கம்பீரமா சி.கேவப் பாத்துச் சொன்னான்..

"அவனுக்கு நஷ்டம் வந்துடும்னு பயந்து அவன் குடிய விடச் சொல்லல..எனக்கு நஷ்டம் வந்துடக் கூடாதுன்னு தான் அப்படிக் கேட்டான்னு இப்பப் புரியுது.. அதனால, தண்பனோட சேர்த்து ஆண்டவனுக்கும் இப்ப ஒரு சவால் விடறேன்..நேத்து நைட் குடிச்சது தான்..மத்த நாள்ல இன்னேரத்துக்கு ஒரு ஆப்ப உள்ள ஏத்தியிருப்பேன்.. இனியும் 48 மணி நேரத்துக்கு அதத் தொட மாட்டேன்..இந்த 48மணி நேரத்துக்குள்ள என் எதிரியக் கண்ட துண்டமா வெட்டிப் பொதச்சுட்டு நான் திரும்பைல உயிருக்குப் போராடிட்டிருக்கற அந்த அற்புதமான ஜீவனுங்க மீண்டு மறு ஜென்மம் எடுத்துட்டா...என் தாய் அருக்காணி அம்மா மேல சத்தியமா குடி,சிகரெட்ட இந்த ஜென்மத்துல நான் தொட மாட்டேன்.. இனிமே எங்கிட்ட வேலை செய்யறதுக்கு உனக்குச் சம்மதம் தான சி.கே?"

சி.கே தாவி நண்பனை அணைச்சுக்கிட்டான்.. சம்மதம்னு வாயால தான் சொல்லணுமா என்ன?
 




Satz

நாட்டாமை
Joined
Apr 11, 2018
Messages
31
Reaction score
75
Location
Bangalore
Super bro ..yaralayum mudiyatha vishayathulayum...CK saathichiruvaru pola.... interesting...epdi sakthi kandupidika poran.... waiting
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top