• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 39

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
சக்தி சுதாரிச்சுக்கிட்டுக் கேட்டான்..

"வேற ஆஸ்பிடலுக்கு...."

"பிரயோசனமில்ல...அதுக்கு மே உங்க விருப்பம்.. ரெண்டாவதா பயணங்களத் தாங்கற கண்டிசன்லயும் அவங்க ஹெல்த் இல்ல"

சக்தி ஒரு முடிவுக்கு வந்தவனாச் சொன்னான்..

"ஓ.கே டாக்டர்.. எதுவா இருந்தாலும் காலைல பாத்துக்கலாம்..நான் இப்ப அவள ஒரு தடவ பாத்துட்டு வர எமர்ஜென்சி வார்டுக்குள்ள போக உங்க அனுமதி வேணும்"

டாக்டர் டியூட்டி நர்ஸ்க்கு 'உள்ள விடு'ன்னு கண் ஜாடைலயே கட்டளை போட்டுட்டு சக்தி தோள்ல தட்டிட்டுப் போயிட்டார்.. நர்ஸ் அவன எமர்ஜென்சி வார்டுக்குள்ள அனுமதிக்கறதுக்கு முன்ன வாயவும் ் மூக்கவும் ஆபரேசன் பண்ற டாக்டர் மாதிரி துணி மாஸ்க்ல மூடிக் கட்டி அவங்க தந்த ரப்பர் செருப்பு போட்டுக்கச் சொல்லி 'பேசண்ட தொடாம எட்ட நின்னு பாக்கணும்'னு கண்டிப்பா எச்சரிச்சுக் கூட்டிட்டுப் போனாங்க..எமர்ஜென்சி வார்டுக்கு வேளிய விஜிம்மா, சேச்சி உக்காந்திருக்க சக்தி எந்ந உணர்ச்சியுமில்லாம அவங்களப் பாத்துட்டு உள்ள போனான்...

உள்ள போனதும் அவங்க கெடந்த நெலையப் பாத்து
சில நொடி அசையாம நின்னான்..ஆஸ்பிடலுக்கே உண்டான அந்த மருந்து வாடைல அவனுக்கு இடது பக்கமா கந்தசாமியும்,வலது பக்கமா மனுவும் படுத்திருக்க.. படுத்திருந்த எடங்கள்ல வித்தியாசம் இருந்ததே ஒழிய படுத்திருந்த நிலைமை என்னவோ ஒண்ணே தான்..துளி அசையாம கெடந்தவங்களச் சுத்தி ஏகப்பட்ட உபகரணங்கள்..ரெண்டு பேரையுமே பல டியூப்ங்க சுத்தி மூழ்கடிச்சிருந்தது..வாய்ல,மூக்குல டியூப் செருகி இருக்க,நெத்தி நெஞ்சுக்கு மேலன்னு டியூப்ங்க ஒட்டி இணைக்கப் பட்டிருந்தது..மானிட்டருங்களும் ஓடிக் கொண்டிருக்க ரெண்டு பேருக்குமே சுவாசத்துக்காக பிராண வாயு இணைக்கப் பட்டிருந்தது..

சக்தி ஒத்துழைக்க மறுத்த தன் கால்கள சிரமப் பட்டு நகர்த்தி கந்தசாமி படுத்திருந்த இடத்த நெருங்கினான்..
எந்த உணர்ச்சியுமில்லாம அவர் முகத்தையே பாத்துக்கிட்டிருந்த சக்தி சுய நினைவே இல்லாதவன் மாதிரி நர்ஸ் சொன்னதையும் மறந்து தன் வலது கைய அவர் நெஞ்சுல வச்சு வருடினான்..நர்ஸ் பதறி 'சார்'னு கிட்ட வர சடார்னு திரும்பி மாஸ்க்கால மூடியிருந்த உதட்டு மேல இடது கை ஆட்காட்டி விரல வச்சு சீறலா 'உஷ்ஷ்ஷ்ஷ்'னானே பாக்கலாம்..சாதாரணச் சீறலா அது?அடி பட்ட ராஜ நாகத்தோட சீறல் ! கூடவே எரிக்கும் பார்வை..நர்ஸ் வெலவெலத்துப் பின் வாங்க ஒரு நிமிசம் கந்தசாமி நெஞ்ச ஆறுதலா வருடி குனிஞ்சு அவர் நெத்தில முத்தமிட்டான்..பேச்சற்றுக் கெடந்தவரோட தொடு உணர்ச்சி மூலமா ஓராயிரம் செய்திகள அவன் கடத்த கந்நசாமியின் சுவாசம் சற்று சீராகத் தொடங்கி மருந்து ஆதிக்க மயக்கத்துல இருந்து விடுபட்டு இயல்பான தூக்கத்துல ஆழ்ந்தார்..சில சமயங்களில் பார்வையும்,பேச்சும் செய்ய முடியாத விந்தையை ஒற்றைத் நக நுனித் தொடுதல் சாதித்து விடும் !

சக்தி நிமிர்ந்து நகர்ந்து மனு படுக்கைய நெருங்கினான்..படுக்கைய ஒட்டி நின்னு தடுமாறும் தன் கால்களத் திடமா ஊணி அவ முகத்த சலனமற்றவனாப் பாத்தான்'இதுக்கா என்ன நெருங்கினே மனு...இதுக்கா சில்லி மூக்கு உடைய அறை வாங்கியும் 'கண்ட துண்டமா வெட்டிப் போட்டாலும் என் ஒவ்வொரு சதைத் துண்டும் சொல்லும் ஐ லவ் யூன்னு கம்பீரமா தலை நிமிர்ந்து சொன்னே தங்கம்..இதுக்கா என்னோடயும், வாழ்வோடயும் போராடினே பேபி?.. ஏன் உன்னால சாவோடயும்,ஆழப் போயிட்டிருக்கற உன் நினைவோடயும் போராட முடியல?அடப் போடா.. உன்னோட இனி மல்லுக் கட்ட முடியாதுன்னு அலுத்து வெறுத்து காலம் பூரா அனாதையாவே இருந்து தொலைன்னு சபிச்சுட்டுப் போறியா மனு?ஆழப் போயிட்டிருக்கற உன் நினைவுகள என் உயிர் நிலை உணர்ச்சிகள் அத்தனையும் ஒரு சேர எழுப்பி இப்பச் சொல்றேன்..ஐ லவ் யூ கண்ணம்மா..திரும்பி நான் உயிரோட வரைல நீயும் உயிரோட நினைவோட இருக்கணும்..ஒரு வேள பொணமா வந்தா நீயும் இங்க பொணமாத் தான் இருக்கணும்..நிச்சயமா கோமாவுல ஆழ்ந்த சதைப் பிண்டமா அல்ல..இது உன் அற்புதமான காதல் மீது சத்தியம்'..உள்ள அவ கூடப் பேசிக்கிட்டே துளியும் யோசிக்காம அவளோட ஆக்ஸிஜன் மாக்ஸக் கழட்டி வேகமாக் குனிஞ்சு அவள் மென்னிதழ்கோடு தன் உறுதி இதழ்களை அழுத்தமாய் இணைக்க.. தன் நெஞ்சுல கை வச்சு 'ஹெக்'னு அதிர்ந்தது அந்த நர்ஸ் மட்டுமல்ல !ஆழ்ந்து உள்ள போயிட்டிருந்த மனுவும் தான் !!
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அவ்வளவு தான் ! சடனா நிமிர்ந்தவன் கால்ல இருந்த செப்பல அங்கியே கழட்டி விட்டு மூஞ்சில இருந்த துணியவும் அவுத்துக் கீழ வீசி விடுபட்ட அம்பா வெளிய வந்தான்..அந்த நர்ஸ் ஏறக்குறைய அந்த வார்டுலயே அடுத்த பெட்டுல அனுமதிக்கற கண்டிசன்ல அவங்க இதயத் துடிப்பும்,ரத்த ஓட்டமும் சீராகாம இருக்க ஆச்சரியப் படுத்தும் அளவுக்கு அதுக்கு நேர்மாறா இருந்தது மனுவோட நிலைமை..மென்மைத் தீண்டலுக்குள்ள பவர் ஆயிரம் பார்வைக்கும், வார்த்தைக்கும் சில சமயம் கிடையாது..பார்வைகளும், பேச்சுகளும் சுத்தியுள்ளவங்களாலயும் களவாடப் பட்டு உயிர் சக்தி இழக்க..பேச்சும்,பார்வையும் பயனற்ற கட்டத்தில் ஸ்பரிசம் மட்டுமே பரஸ்பரம் உயிர் எழுப்பும் கவி மொழியாகிறது..அதன் தேவை உள்ளிருந்து மௌன நாதமாய் எழும்பும் மெய்யான அன்பு மட்டுமே !

வெளிய வந்த சக்தி உக்காந்திருந்த விஜிம்மா, சேச்சி கிட்டப் போனான்..சேச்சியப் பாத்து அழுத்தமாச் சொன்னான்...

"கவலப் படாதீங்க அக்கா..அத்தன பேருமே கைய விரிச்சாலும் ஐயப்பன் அவளக் கை விட மாட்டார்"

சொன்னதும் விஜிம்மா கிட்ட கண்களாலயே விடை பெறலச் சொல்லிட்டு திரும்பி உறுதியா அடியெடுத்து வச்சவன் கூடவே வந்த விஜிம்மா கொஞ்ச தூரம் வந்ததும் அவன் கை பிடிச்சு நிறுத்தி துளியும் உறுதி குலையாத பார்வைய அவன் மேல படர விட்டு நிதானமாக் கேட்டாங்க...

"எதாச்சும் செய்தி உண்டா சக்தி?"

அவங்க அதிகமாக் கேக்காததுக்குக் காரணம் ஒரு மணிக்கொருக்கா சக்தி உள்ள நிலவரத்த அவங்களுக்கு வாட்ஸ் அப்ல சொன்னது தான் ! சக்தி அந்தக் கேள்விக்கு அவங்க கைய இறுக்கிச் சொன்னான்..

"மாற்றமில்ல விஜிம்மா..அதே தான்..டூ ஆர் டை"

விஜிம்மா முகத்துல எந்த மாறுதலுமில்ல..நெஞ்சுல வலது கைய வெச்சு கண்ண இறுக்க மூடி மூச்சையும் இழுத்து விட்டவங்க அந்தக் கைய உயர்த்தி சக்தியோட உச்சந் தலைல அழுத்தி வச்சு தன் அடி மனசுல இருந்து மந்திரமா குரலெழுப்பிச் சொன்னாங்க...

"எந்த ஐயப்பன் உன்னையும்,மனுவையும் எனக்கு அறிமுகப் படுத்தினானோ அந்த ஐயப்பனுக்கு மாலை போட்டு உண்மையா விரதமிருந்து இத்தன வருசமா அவன் மலையேறின பக்திக்கு எதாச்சும் புண்ணியம் இருந்தா..என் வாழ் நாள்ல நான் ஏதாவது நல்லது செஞ்சு அதுக்கும் புண்ணியம் உண்டுன்னா..என் அத்தனை புண்ணியங்களும் உன்னையும், மனுவையுமே அவன் சாட்சியாய் சேரட்டும்.. நல்லது சக்தி !நீ சொன்னியே..? டூ ஆர் டை..அப்படியே நடக்கட்டும்..நல்லதும் அவனருளும் என் புண்ணியமும் உன் பக்கமிருந்தா மொதல்ல சொன்ன டூ உனக்கும், கெட்டதும் பாவமுமிருந்தா ரெண்டாவது சொன்ன டை உன் எதிரிக்கும் அமையட்டும்..போயிட்டு வா சக்தி ! வீ ஆர் வெயிட்டிங் ஃபார் யூ"

சொன்னதும் தன் கைப் பைல இருந்து மஞ்ச மாதா கோயில் மஞ்சளும்,ஐயப்பன் பாதத் திறுநீரும் கலந்த பிரசாதத்த எடுத்து சக்தியின் நெத்தி நிறைய இட்டு விட சக்தி அவங்க கைய இன்னொரு முறை இறுக்கிட்டு புயலா வெளிய போனான்...அதுக்கப்புறம் அவன் யார் கூடவும் பேசவே இல்ல..தோட்டத்துக்கு வந்தும் அமைதியாவே உக்காந்திருந்தான்..நடந்தது அத்தனையும் சி.கே சொல்லலைன்னாலும் ஓட்டை வாய் ஒயிட் மூலமா எல்லாம் தெரிஞ்சுக்கிட்ட செல்வி துளியும் அலட்டிக்காம தடபுடலா சமைச்சிருந்தா..அவனையே அனுப்பி மட்டன்,சிக்கன,மீன் எடுத்துட்டு வரச் சொல்லி மட்டன் பிரியாணி,சிக்கன் நாட்டு வறுவல்,மீன் வாலும் தலையும் போட்ட குழம்பு,மீதிய பொரிச்சு வச்சிருக்க எல்லா வாசனையும் கலந்து தோட்டத்துக்கே பசியெடுக்க வச்சுது..ஆறரைக்கே சமையல முடிச்சு ஹாலுக்கு வந்து சக்தியப் பாத்து அமைதியாக் கேட்டா..

"சக்திண்ணா..எல்லாம் ரெடி..இப்பச் சாப்பிடறீங்களா.. வந்து சாப்பிட்டுக்கறீங்களா?"

அது வரைக்கும் கப்பல் கவிழ்ந்தவனா கன்னத்துல கைய வெச்சு உக்காந்திருந்த ஒயிட் துள்ளி எழுந்தான்..
அவனச் சொல்லிக் குத்தமில்ல ! வந்ததுல இருந்து சக்தி எதுவும் பேசாம உக்காந்துட,இயல்புல அதிகம் பேசாத சி.கேவும் டோட்டலா மௌன சாமியாக ஒளறு வாயான ஒயிட்டுக்குத் தான் பெரும் பாடா அது இருந்தது.. சாவைல கூட பேசிக்கிட்டே சாகணும்னு ஆசைப் படறவன் அவன் !அப்படிப் பட்டவன மணிக் கணக்குல பேசாம உக்கார வச்சா...!!அதனால தான் செல்வி சொன்ன அஞ்சாறு வார்த்தைகளும் அவங் காதுல தேனாப் பாய உற்சாகமா துள்ளிக் குதிச்சுக் கேட்டான்..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
"அறிவிருக்கா உனக்கு?கேக்கறியே ஒரு கேள்வி.. வர்றதே நிச்சயமில்லேங்கற போது வந்து சாப்பிட்டுக்கறதாம்...அவ்வளவு நம்பிக்கையா உனக்கு?"

செல்வி அவன் பக்கம் திரும்பி அமைதியாக் கேட்டா..

"அவன் இதெல்லாம் உங்க திட்டம்னு தெரிஞ்சும் வருவான்னு நம்பிக்கை இன்னமும் உங்களுக்கிருக்கா?"

ஒயிட் உறுதியாச் சொன்னான்..

"வருவான் செல்வி ! எதுக்காக இல்லைன்னாலும் உன் சக்தி அண்ணன போட்டுத் தள்ளவாவது நிச்சயம் வருவான்"

செல்வி தன் திடப் புன்னகைய முகம் முழுக்க பரப்பிச் சொன்னா..

"சிந்தனை,பேச்சு,செயல்னு எல்லா விதத்துலயும் தப்பாவே செயல் படற அந்த அயோக்கியனுக்கு அண்ணனப் போட்டு எறிஞ்சுடலாம்னு அளவற்ற நம்பிக்கை இருக்கும் போது மனசளவுல கூட எந்த ஈ, எறும்புக்கும் இது வரைக்கும் கெடுதல் நினைக்காத எனக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கும்?எந்திரிங்க மூணு பேரும்..அவனொரு ஆளுன்னு அவனுக்காக இத்தன யோசிச்சுக்கிட்டு..?நல்லா வயிறு நிறையச் சாப்பிட்டு தெம்பா போயி அந்த நாயக் கண்ட துண்டமா வெட்டி எறிஞ்சுட்டு வந்து மிச்சமிருக்கறதையும் சாப்பிட்டு நிம்மதியா தூங்குங்க..நாம் போயி எல்லாத்தையும் எடுத்து வைக்கறேன்..மறந்துடாதீங்க சக்தி அண்ணா.. விடிஞ்சதும் பொண்ணு கேட்டு அப்பா கிட்டப் போறதா வாக்குத் தந்திருக்கீங்க"

வார்த்தைகள்..வெற்று வார்த்தைகள் தான்! ஆனால், அது ஒரு பெண்ணின் அடி ஆழ மனசுல இருந்து நம்பிக்கையா வெளிப் படும் போது யாரையும் அசைக்குமே?சக்தி மொத ஆளா சிங்க்ல கை கழுவ மத்தவங்களும் தொடர்ந்தாங்க..சாப்பாட்டுப் பந்திய முடிச்சு எந்திரிச்ச போது மணி ஏழு.. சக்தி ரெண்டு பேரையும் கட்டி அணைச்சு செல்வி தலையத் தடவி கட்டை விரல ஒசத்தி எல்லாருக்கும் காட்டிட்டு புல்லட் சாவிய எடுத்துக்கிட்டு புயலா வெளிய போக சி.கே ஆட்டோவுக்குப் போன் பண்ண செல்வி ரெண்டு பேருக்கும் கண்லயே விடை குடுக்க ரெண்டு பேரும் வெளிய வரவும் ரெண்டு நாய்ங்களும் வாலாட்டிக்கிட்ட கிட்ட வர ஒயிட் தெம்பு கலந்த கிண்டலோட சொன்னான்..

"அவன் மட்டும் என் தடத்துல வரட்டும் கண்ணுகளா... மூக்கனோட மூக்கையும்,நாக்கையும் உங்களுக்கு பார்சல் பண்ணி எடுத்துட்டு வந்துடறேன்"

×××××××××××××××××××××××××××××××

குளத்த விட்டு வெளிய வந்த மூக்கன் பைக் கிட்ட வந்ததும் ஞாபகம் வந்தவனா போனெடுத்து ஒரு நம்பருக்கு அழைப்பு அனுப்ப மறுபுறம் முதல் ரிங்கிலேயே எடுக்கப் பட்டு ஏதோ சொல்ல மூக்கன் கேட்டான்..

"எங்க இருக்க டார்லிங்?"

"..….............''

"நல்லதாப் போச்சு..உடனே காரெடுத்துக்கிட்டு பெருந்துறை புது பஸ் ஸ்டாண்ட் வா..உள்ள வராத.. முனியப்பன் கோயிலுக்கிட்ட நிறுத்திக் கூப்பிடு.."

கட் பண்ணிட்டு பைக் எடுத்துக்கிட்டு வேகமா பஸ் ஸ்டாண்ட் வந்தவன் தன் சூட்கேஸ வாங்கி் லேசாத் திறந்து கைய விட்டு ஒரு டைரியவும்,பேனாவும் உருவிவன் பபரபரன்னு ஏதோ எழுதினான்..அரை மணி எழுதி மறுபடியும் அதில் வைத்து இறுகச் சாத்திப் பூட்டியதும் மிஸ்டு கால் வர எடுத்துப் பாத்துட்டு சந்தோசமா எந்திரிச்சு சூட்கேஸ பைக் டேங்க்ல வெச்சு ஸ்டார்ட் பண்ணி அந்தக் கார் கிட்டப் போக..அதுல இருந்து ஒரு உருவம் இறங்க..அது ஆண் !மூக்கன் அவன் கிட்ட கட்டளையாச் சொன்னான்..

"கார அனுப்பிட்டு பைக்க எடுத்துக்க டியர்..இந்தா சூட்கேஸ் சாவி..உள்ள இருக்கற டைரில பதினாறு வருசக் கதை இந்த நிமிசம் வரைக்கும் இருக்கு..நைட் படிச்சுக்கோ..சரியா பத்து மணிக்கு நம்ம எடத்துல உன்னச் சந்திக்கறேன் டார்லிங்"

சொல்லி முடிச்சதும் அந்த நபர விட்டு விலகி பாக்கெட்டுல இருந்து சிகரெட் பாக்கெட்ட எடுத்தான்.. அதுக்குள்ள இருந்து சிகரெட்டோட ஒரு பொட்டலத்தையும் உருவினான்...அது கஞ்சாப் பொட்டலம்..,! அப்ப மணி ஆறு !!

+++++++++++++++++++++++++++++++

திட்டப்படி சக்தி எல்லா ஏற்பாட்டையும் பண்ணி உக்காரைல சரியா மணி 7.55..வாட்ஸ் அப் ரிங் டோனுக்கு எடுத்துப் பாத்து ஆச்சரியப் பட்டு சுத்தியும் ஒரு தடவ பாத்துட்டு அத நிதானமா படிக்கவும் மரத்து மேல இருந்து துளியும் சத்தமில்லாம இறங்கினான் மூக்கன்...அவன் ஒரு கைல பெருசா ஒரு தடி ! இருந்தாப் போல ஒரு இடி உருண்டு தொம்னு பள்ளத்துக்கு அந்தப் பக்கம் விழ பளீர்னு மின்னல் ஒண்ணு இறங்க.. சடார்னு குதிச்சவன் அதே மின்னலா சக்தியோட தலைல தன் சக்தியத்தனையும் திரட்டி அடிக்க மூணு அடி தூரத்துக்கு எகிறி விழுந்தான் சக்தி...

(தொடரும்..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
தேவா தம்பி
 




Last edited:

banupriya

இணை அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
591
Reaction score
831
Omg ena mookan sathi ah adichutana...bro ena bro....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top