• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 40\

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அந்த நேரம்..தோட்டத்துல.. எல்லாருக்கும் சாப்பாடு போட்டு நாய்களையும் கவனிச்சுட்டு ஒரு பெரிய கேரியர்லயும் எடுத்து வச்சுட்டு அருக்காணி அம்மா ரூமுக்குள்ள போனா செல்வி ! மாலை போட்டிருந்த அவங்க போட்டோ முன்னால நின்னு கையக் கூப்பி கண்ண மூடி முணு முணுப்பாச் சொன்னா..

"பெறாத மகனுக்காக உயிர் குடுத்த தாயே..நீயே இந்தத் தோட்டத்துக்கு காவல் தெய்வம்..வந்தவங்க எல்லாருக்கும் மனங் கோணாம குடுப்பியாமே?உன் மகளா நின்னு மடிப் பிச்சை ஏந்தறேன்..எந்த உயிருக்கும் சேதாரமில்லாம காப்பாத்த வேண்டியது உம் பொறுப்பு..
அப்படிச் சேதாரமானா உன் உயிர் தியாகத்துக்கு அர்த்தமில்லாம போயிடும்..என்னடா அவங்க முன்னால வீறாப்பா பேசிட்டு இப்ப மடிப் பிச்சை கேக்கறாளேன்னு பாக்கறியா?பொலம்பறது எனக்குப் புடிக்காது தான்.. ஆனா,கவலை இல்லாம இருக்குமா?அப்படி ஏதாவது ஒரு உயிர் பலி குடுத்தே ஆகணும்னா தயவு செஞ்சு என் உசுர எடுத்துக்கோ தாயே..இனி வந்தா அவங்க மூணு பேரும் வந்தாத் தான் இந்த தோட்டத்துக்குள்ள காலெடுத்து வெப்பேன்..இல்லாடாடி பொணமாத் தான் வருவேன்..இது சத்தியம்''

விடு விடுன்னு ரூம விட்டு ஹாலுக்கு வந்தவ காரோட்டத் தெரிஞ்சவன காரெடுக்கச் சொல்லிட்டு கேரியரத் தூக்கிட்டு வெளிய வந்து அங்க நின்னுக்கிட்டிருந்தவன் கிட்டச் சொன்னா..

"அண்ணா,கதவ உள்ள சாத்திட்டு அவங்க வர்ற வரைக்கும் நீங்களும் மாடில இருங்க..ரவுண்ட்ஸ் வேண்டாம்னு சொல்லிட்டாங்க"

வந்து நின்ன கார்ல ஏறி முன்னையே பேசி வச்சிருந்த படி ஆஸ்பத்திரிக்குப் போனா...

××××××××××××××××××××××××××××××

அதே நேரம்..சக்தி தலைல அடி வாங்கி எகிறிப் பறந்த அதே நொடி..கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி மனுவோட ஒடம்பு ஒரு தடவ தூக்கிப் போட சகல அணுக்களும் வேகமா இயங்க 'ஐயோ சக்தி"ன்னு எந்திரிக்க முயற்சி பண்ணினவள நர்ஸ் திடுக்கிட்டு ஓடியாந்து அழுத்திப் பிடிச்சாங்க..ஒரு ஒதறல்ல நர்ஸ எம்பிப் போய் விழ வெச்சு வெறியா மனு எந்திரிக்க பல டியூப் இணைப்புகள் தெறிச்சுப் பறந்தன..கண்ணாடிக் கதவு வழியா இதப் பாத்த சேச்சியும்,விஜிம்மாவும் அவசரமா உள்ள வந்து விஜிம்மா நர்ஸ கவனிக்க சேச்சி மனுவக் கட்டிப் பிடிச்சு சாந்தப் படுத்தினாங்க..

"என்ட மோளே..மனும்மா..இங்க பாரு"

,தலையுதறி கண் விழித்த மனு சேச்சியக் கண்டதும் உடனே கேட்டா..

"எங்கம்மா இருக்கோம்...என் சக்தி எங்க?"

"ஆஸ்பத்திரில இருக்கோம்..சக்தி தம்பி வெளிய ஒரு வேலையாப் போயிருக்கு..காலைல வந்துடும்"

"இல்லம்மா..சக்திக்கு என்னமோ ஆபத்து..என் போன் எங்க?"

விஜிம்மா உதவியால எந்திரிச்ச நர்ஸ் டாக்டருக்கு உள் போன் மூலமா தகவல் தர வேகமா வந்தார் அவர்.. வந்ததும் மனுவ பரிசோதிச்சுப் பாத்துட்டு மனு தூங்கறதுக்கான இன்ஞ்செக்சன போட்டு அமைதியாச் சொன்னார்..

"அமைதியா இருங்க மான்யா..."

"டாக்டர்...என் சக்தி..."

டாக்டர் அவளுக்கு சமாதானமா ஏதோ சொல்லிட்டிருக்க.. மனு இருந்த கோலம் சேச்சிய பத்து வருசம் பின்னுக்குத் தள்ளுச்சு..சக்தி மொத மொதலா மாலை போட்டு கட்டுக் கட்ட வராம இருக்க மயங்கி கிடந்த மனுவ அவங்க இப்பப் பாத்தாங்க..அதே உதடு துடிப்பு..அதே கண் கலங்கல்..மனு மாறல..அதே அன்பு..!காதல் எந்நாளும் காதலே..அது கூடுவதுமில்லை..குறைவதுமில்லை !

மருந்து குடுத்த மயக்கத்துல கொஞ்சங் கொஞ்சமா கண் சொருக அதையும் தாண்டி மனு மனசு எந்திரிச்சு மண்டியிட்டுக் கதறியது...

",தாயே சித்ர மாலா..என் சக்திய..இல்ல..உன் மாமனக் காப்பாத்து"

உதடுகள் முணுமுணுக்க தூக்கத்தில் ஆழ்ந்த மனுவை ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்த டாக்டரின் உதடுகளும் முணுமுணுத்தன..'இம்பாஸிபிள்.. திஸ் ஈஸ் மிர்ரகிள்'

++++++++++++++++++++++++××××××××

மனு மருந்து தந்த தூக்கத்துல ஆழப் போயி சித்ர மாலான்னு உதடுகள் முணுமுணுத்த அதே சமயம் குப்புறக் கிடந்த சக்தி மெல்லப் புரண்டான்.. தலைல ஒரு டன் பாறைய வச்சு அழுத்தின பாரமிருக்க ரெண்டு கையவும் ஊணி எந்திரிச்சு உக்கார வலது நெத்திலிருந்து வேகமா வழிஞ்ச ரத்தம் அவன் காலரை நனைச்சுக் கீழே எறங்கியது..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
"குட் ஈவினிங் மிஸ்டர் சக்தி வேல் ! நாம நேருக்கு நேர் சந்திச்சு பதினாறு வருசமாச்சில்லையா? நீ தான் என்னப் பாக்கல சக்தி வேல்..நான் அப்பப்ப உன்னப் பாத்துக்கிட்டுத் தான் இருக்கேன்..."

சக்திக்கு அந்தக் குரல எங்கியோ கேட்ட மாதிரி இருக்க நாலடி தள்ளி கொஞ்சம் முன்ன அவன் உக்காந்திருந்த மரத்தடிக் கல்லு மேல மடில ஒரு குண்டாந் தடிய குறுக்க வச்சுக்கிட்டு சிகரெட் பத்த வச்சுக்கிட்டு உக்காந்திருந்தவன மரம் தந்த இருட்டுல இன்னார்னு அடையாளம் கண்டு பிடிக்க முடியல அவனால..அவன் மேல இருந்த பார்வைய விலக்கி சுத்தியும் பாத்தான்..அப்ப எதுக்க உக்காந்திருந்தவன் சிரிச்சுக்கிட்டே சொன்னான்..

"பிரயோசனமில்ல சக்திவேல்..எடுத்து வீச ஒரு கோலிக் குண்டு சைசுக்குக் கூட உம் பக்கத்துல ஒரு கல்லு கெடையாது..உன் கை மடிப்புல இருந்த ஷார்ப்னரையும் நான் எடுத்து வச்சுக்கிட்டேன்.. மேல இருந்த டார்ச்சையும் எடுத்தாச்சு..இப்ப நீ டம்மிப் பீஸ..ஆச்சரியம் மிஸ்டர் சக்திவேல் ! ,வேற ஒருத்தனா இருந்தா என்னோட அடிக்கு மண்டைப் புரடை எகிறிப் பரலோகம் போயிருப்பான்..ஆனா,நீ இன்னும் உயிரோட இருக்கே...உனக்கும் கொஞ்சம் லக்கிருக்கு"

சக்தியும் யோசிக்கவே செஞ்சான்..மூக்கன மரத்தடிக்கு வர பக்காவா திட்டம் போட்டவன் அவன் அந்த மரத்து மேல இருந்து குதிப்பான்னு துளி கூட யூகிக்கல..ஒரே அடில உயிர் போகாததுக்குக் காரணம் அவனுக்கு வந்த வாட்ஸ் அப் !அத விஜிம்மா அனுப்பிச்சிருந்தாங்க..
'அன்பு சக்தி..உனக்கு ஞாபகமிருக்கா?பத்து வருசத்துக்கு முன்ன'நீங்க என்ன கேட்டாலும் தர்றே'ன்னு வாக்குக் குடுத்தே..இத இப்ப வரமா கேக்கறேன்..எல்லாம் நல்ல படியா முடிஞ்சா மனுவ நீ கல்யாணம் பண்ணிக்கணும்.. பத்து வருசத்துக்கு முந்தியே அவ மனச நான் படிச்சுட்டேன்..உயிரே போறதானாலும் அவ மனசு மாறாது..அதனால,நீ உன் மனச மாத்தி அவள ஏத்துக்கோ..இதான் நான் கேட்கும் வரம்'தலையுதறி லேசா சிரிச்சு போன பாக்கெட்ல போடப் போன போது தான் அந்த இடியும்,மின்னலும் இறங்க..அதுக்கு லேசா தலையத் திருப்பிய போது தான் அந்த அடி தலைல இறங்க அவன் எகிறி விழுந்தான்..

மூக்கன் நெனைச்ச மாதிரி அவன் குதிச்ச வேகத்துல மின்னலா இறக்கின அடி முழுசா அவன் தலைல எறங்கல..குதிச்ச வேகத்தோட தடிய வீச சக்தி திடீர்னு இறங்கின இடி,மின்னலுக்குத் தலையத் திருப்ப அந்த அடி முழுக்கவும் அவன் தலைல இறங்காம மரம் பாதிய அடிய வாங்கிக்க சக்தி முன் ஜாக்கிரதையா வேணும்னே எகிறி விழுந்தான்..ஆனா,அடியென்னவோ சாதாரண அடியல்ல ! தடியோட நடுப் பகுதி அடிய மரம் வாங்கித் தாங்கிட்டாலும் அதோட முனைப் பகுதி சக்தியோட வலது நெத்தியோரம் பயங்கரமாத் தாக்கி பெரும் காயத்த உண்டாக்கி மயங்க வச்சதென்னவோ உண்மை...

புத்திசாலிங்களும் முட்டாளாகும் காலமுண்டு !நம்பிக்கை வேறு,கர்வம் வேறு !என்னாலும் முடியும்.. என்னால் மட்டுமே முடியும்..இந்த ரெண்டுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கில்லையா?மூக்கனுக்குக் கிடைச்ச தொடர் வெற்றிகள் அவனுக்கு கர்வத்தக் குடுக்கறதுல வியப்பென்ன?சக்தியோ பலத்த அடில அரை மயக்க நிலைல எந்த ஆயுதமுமில்லாம எந்திரிக்க முடியாம கெடக்கறான்..அவங் கூட வந்தவங்களோ தன்ன எதிர் பார்த்து ஆளுக்கொரு மூலைல கெடக்கறாங்க.. அவனப் பொறுத்த வரைக்கும் இப்போதைக்கு எந்த ஆபத்தும் அவனுக்கில்ல...கர்வம்,கஞ்சா,குடி தந்த போதை இல்லேன்னா மூக்கன் மயக்கத்துலயே சக்தியக் கொன்னிருப்பான்..

+++++++++++++++++++++++++++++++

சரியா அதே நேரம்...வடக்குத் தடத்துல மறைஞ்சிருந்த சி.கே செல்லெடுத்து மணி பார்த்தான்..8.20.. ஒரு நாயக் கூட காணமே?ஆபத்துகளிலே வாழ்ந்து பழகிய சி.கே எங்கியோ தப்பா உணர்ந்தான்..அதிர்வு மட்டும் வச்சுக்கிட்டு அமைதில வச்சிருந்த போன இயக்கி '??!!'ன்னு ஒரு செய்தி ஒயிட்டுக்கு அனுப்ப அடுத்த நிமிசம் அவங் கிட்ட இருந்து பதில் வந்தது இப்படி... '!!??' பாத்துச் சிரிச்சுட்டு 'இங்க ஒரு நாயும் வரல..பக்கத்து மின் மயானத்துல கூட செக்யூரிட்டிங்க பேச்சுச் சத்தம் கேக்க, நானிருக்கற எடத்துல மயான அமைதி.. பேச முடியுமா? ஒண்ணும் பிரச்னை இல்லையே?'ன்னு அனுப்ப கொஞ்ச நேரத்துல ஒயிட் கூப்பிட்டான்..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
"உங்க பாடு தேவலை தலைவரே.. மனுசச் சத்தம் கேக்குது..எனக்குப் பக்கத்துல ஒரு நாலடி ஒசர பனங் கருக்கு ஒண்ணு இருக்கு..அதுல ஊது சுருட்டைப் பாம்பு குடும்பத்தோட குடித்தனமிருக்கு போல..அதுலயும் புருசன்,பொண்டாட்டிக்குள்ள சரியான சண்டைங்க..
'உஷ்ஷ்' 'உஷ்ஷ்'னு மாத்தி மாத்தி ஊதி பயங்கரமான சண்டை ..நாக பாம்பு மாதிரியே ஊதுதா?அது ஊதற ஒவ்வொரு தடவையும் என் உச்சி மண்ட மசுரு மானம் பாத்து நட்டுக்கிட்டு நிக்குதுங்க..அத விடுங்க.. தலைவரே !-ஏதோ தீசல் வாசனை அடிக்கற மாதிரி எனக்குப் படுது..உங்களுக்கு எப்படி?"

"எனக்கும் தான்டா..வர்றதா இருந்நா அவன் இன்னேரத்துக்கு வந்திருக்கணுமே?உள்ள போக வேற வழியுமில்ல..எனக்கு என்ன தோணுதுன்னா...."

"சொல்லாதீங்க தலைவரே..எனக்கு வயித்தக் கலக்குது...நாம நெனைக்கறது உண்மையா இருந்தா நம்ம பெரிய தலைவர் இப்ப ஆபத்திலிருக்கார்"

"மூணு பேருல யாருமே அத யோசிக்கல பாரேன்.."

"அவனுக்கு நம்ம திட்டம் தெரிஞ்சாத் தான முந்தியே மரத்து மேல இருக்க முடியும்?"

""மடையா...யோசி..சக்தியே குறியா இருக்கறவன் ஏதோ ஒரு வழில தோட்டத்தக் கண்காணிப்பான்..நேத்து உள்ள போன சக்தி இன்னிக்குச் சாயந்திரம் தான் வெளிய வந்தான்..நம்மள பாலோ பண்ணி அவன் கொளத்துக்குள்ள வந்திருந்தா நம்ம திட்டம் துளிப் பிசகாம அவனுக்குத் தெரிய வாய்ப்பிருக்கு"

"அதக் கண்டு பிடிக்கணுமே?"

"என்னச் சுத்தி முள்ளுங்க தான்..டேய்...ஒண்ணு பண்ணு..உடனே அந்தப் பன மரத்துல ஏறி சக்தி போன இடத்தப் பாத்துச் சொல்லு"

செல்ல ஆப் பண்ணாம பாக்கெட்ல போட்டுக்கிட்டு சாரைப் பாம்பா சரசரன்னு பனை மரத்துல பாதிக்கு ஏறின ஒயிட் அந்தப் பள்ளத்தப் பாக்க அவன் முகம் கலவரத்தால் வெளுக்க சர்ருனு இறங்கி போன எடுத்துப் பேசிக்கிட்டே சுத்தியும் உன்னிப்பா கவனிச்சுக்கிட்டே பள்ளத்தப் பாத்து நடையக் கட்டினான்..

"தலைவரே..ஏதோ தப்பு நடக்குது..தடத்தோட ஆரம்பத்துல வேப்பங் கொம்பு லைட் சிக்னல் தான் தெரியுது..பள்ளத்துக்குள்ள தலைவர் காத்திருக்கற வேப்ப மர லைட் எரியல..அப்படியே அவன் வரலைன்னாலும் லைட்ட அணைக்க வேண்டிய அவசியமில்ல..வந்திருந்தாலும் தலைவர் விசில் சிக்னல் குடுத்திருக்கணுமே?"

"குடுக்க மாட்டான்..தன் உசுரக் குடுத்தாவது நம்ம உசுரக் காப்பாத்தப் பாப்பான்..பக்கா சுயநலவாதிடா அவன்"

"இருக்கட்டும் தலைவரே ! எல்லாம் நல்ல படியா முடிஞ்ச பின்னால மொத வேலையா அவர மொதலாளி,பெரிய தலைவர்..எல்வாப் பதவில இருந்தும் டிஸ்மிஸ் பண்ணிட்டுத் தான் மறு வேலை'

ஒயிட்டும், சி.கேவும் மெல்லிய குரலில் பேசிக் கொண்டு சுற்றிலும் உன்னிப்பாய் கவனித்த படி பள்ளம் நோக்கி மெதுவாய் நகர்ந்த அதே நேரம்..

××××××××××××××××××××××××××××××××××××

சக்தி சிரமப் பட்டு கைய ஊணி வலி பொறுத்து பல் கடித்து ஒரு அடி பின்னுக்கு நகர்ந்தான்..நிற்காமல் வழிந்த ரத்தத்தால் ஏறக்குறைய அவன் சட்டை முழுக்கவே நனைந்து விட்டது..இதே நிலை நீடிச்சா இன்னும் பத்து நிமிசத்துல தனக்கு மறுபடியும் மயக்கம் நிச்சயம்னு சக்தி நினைக்க மூக்கன் கிண்டலா சிரிச்சுச் சொன்னான்..

"ஓடினாலே தப்பிக்க முடியாது..ஊர்ந்து போயா தப்பிக்கப் போறே சக்திவேல் ?ஐயோ பாவம்..எல்லாமே நீயா தேடிக்கிட்டது..எஸ்.பி ரெய்டுன்னா ஈரோடு மாவட்டத்துல தான் கஞ்சா கெடைக்காது மை டியர் டார்லிங்.. ஆனா,இருவது கிலோ மீட்டர் தள்ளி இருக்கற நாமக்கல் மாவட்ட பள்ளி பாளையத்துலயோ,பத்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கற திருப்பூர் மாவட்ட ஊத்துக் குளிலயோ கெடைக்காதுன்னு நெனைச்சியா?காசிருந்தா இந்த இந்தியத் திரு நாட்டில் எல்லாமே சாத்தியம் மிஸ்டர் சக்திவேல்"

சக்தி சிரமப்பட்டு இன்னொரு அடி நகர இன்னொரு இடியும்,மின்னலும் பின்னிப் பிணைந்து இறங்க அந்த வெளிச்சத்தில் அவனை அடையாளம் கண்ட சக்தி அதிர்ச்சியில் உறைந்தான்...'இவன எப்படி மறந்தோம்?'

"வெல் மிஸ்டர் சக்தி வேல்..இப்ப எல்லாமே ஞாபகத்துக்கு வருதா?உன்னால பத்து வருசம் உள்ள இருந்தேன்..வெளிய வந்ததும் உன்னத் தான் தேடினேன்..ஒரு வருசம் அலைஞ்சு பழனில அந்த ஹோட்டல்ல உன் அட்ரஸ் கெடைச்சுது..உடனே இங்க வந்தப்ப தான் தாத்தா,பாட்டி சாக நீ தேசாந்திரம் கெளம்பினே...விடாம பின் தொடர்ந்தேன்.. உனக்கொண்ணு தெரியுமா?சித்ர மாலாவக் கொன்னது நாந் தான்...."

(தொடரும்...
 




emily

மண்டலாதிபதி
Joined
Jul 3, 2018
Messages
255
Reaction score
594
Location
Walayar
Nice and thirlling ud. Aanal comments ippa illa. Banumma thoongittaya? Athuthan nerathila thoonganumnu sollarathu, antha pottiya lottu lottunu thattikittu iruntha ippadithan aagum. seekkarama ezhunthu padichuttu Mookkan yarunu sollu.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top