• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 43

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
சக்தி அவன் அலர்றதத் துளியும் லட்சியம் பண்ணாம அந்தக் கடப்பாரைய அசைச்சுப் பிடுங்கி எடுத்து பேசிக்கிட்டே அவனோட இடது பக்கமாப் போனான்..

"மூக்கன்..கொம்பேறி மூக்கன்! தன்ன அடிச்சவங்கள விடாம தொரத்தி,கொத்திக் கொன்னு,அவங்க சுடுகாட்டுல பொணமா எரியறத ஒரு கொம்புல ஏறி நின்னு பாத்து பழி வாங்கின திருப்தி அடையுமாம்..
அதுக்குத் தான் அப்படிப் பேரு ! இங்க நாங்க அத வில்லரணைன்னு சொல்லுவோம்..அரணை மாதிரி .. ஆனா நீளமா மரத்துக்கு மரம் வில்லுல இருந்து விடுபட்ட கணை மாதிரி அது போறதப் பாத்து எவனோ ரசனைக் காரன் அதுக்கு அந்தப் பேர வச்சிருக்கணும்..
ஆனா,அது ஒரு அப்பிராணி..பச்சப் பாம்பு மாதிரி ! கண்ணக் கொத்தும்னு அது மேல இருக்கற கட்டுக் கதை மாதிரி இது மேலயும் இருக்கறது முழுக்க கட்டுக் கதைங்க தான் ! ஏன்னா,பச்சப் பாம்புக்கும், வில்லரணைக்கும் விசமே கிடையாது"

பேசிக்கிட்டே வந்தவன் மறுபடியும் அந்தக் கடப்பாரைய உயர்த்திக் கீழிறக்க மூக்கனின் இடது உள்ளங் கையப் பொத்துக்கிட்டு மண்ணுல எறங்குச்சுது அது ! அவன் கத்துனத மட்டுமில்ல..தன்னோட காலுங்க பலவீனத்தால தள்ளாடறதக் கூட அவன் அலட்சியப் படுத்திச் சொன்னான்..

"இது மான்யாவுக்காக...ஒரே அடில உன்னக் கொன்னிருக்கலாம்..அரை உசுருல கெடக்கறவங்களோட கூடறதையும், வயசானவங்க மண்டைல உச்சி மண்டைல நச்சுனு போடறதையும் அவ்வளவு ஆனந்தமாச் சொன்னியே?அதுக்குத் தான் சன்னஞ் சன்னமா சாவு உன்னத் தேடி வருது..ஒயிட்.. ஏறு இந்த மரத்து மேல.. கெட்டியா இருக்கற காட்டுக் கொடிகளை எல்லாம் நீளமா அறுத்துக் கீழ போடு"

ஒயிட் துளியும் தாமதிக்காம கத்தியப் பல்லுல கடிச்சுக்கிட்டு குரங்கு மாதிரி லாவகமா மரத்துல ஏறினவன் நீளக் கொடிகளா அறுத்துப் போட சக்தி திருப்தியாப் பாத்துச் சொன்னான்..

"சி.கே ! இவன இழுத்து இந்த மரத்துல உக்காந்த வாக்குல காட்டுக் கொடிகளால கட்டு..முக்கியமா அவன் தலையத் துளி கூட அசைக்க முடியாத அளவுக்கு வாயோட சேத்து இறுக்கிக் கட்டு"

அதுக்குள்ள கொடிகள அறுத்து வீசிட்டு ஒயிட்டும் கீழ எறங்கிட சக்தி கடப்பாரைய அசைச்சுப் பிடுங்கின பின்னால அவன இழுத்துட்டுப் போயி வேப்ப மரத்துல சாய்ச்சு உக்கார வச்சு துளியும் அசையறதுக்கில்லாம சுத்தியும் கட்டினாங்க..சக்தி கடப்பாரையோட மூக்கன் முன்னால நின்னு சொன்னான்..

"அவரவர் வாழ்க்கை..அவரவர் இஷ்டம்னு நானும் வாழ்ந்தவன்...அதுல தப்புமில்ல தான்..ஆனா,துளியும் அரத்தமில்லைங்கறத நான் இப்ப ஓத்துக்கறேன்.. என் முப்பாட்டன், பாட்டியான பொன்னைய கவுண்டனையும், செல்லம்மாளையும் ஏன் இன்னிக்கும் இந்த ஊரும், நானும் நெனைச்சுப் பாத்து நெஞ்சுருகணும்?அருக்காணி அம்மாவ எதுக்காக சாமியா நெனச்சுக் கும்பிடணும்..?அவங்க யாருமே தனக்காக மட்டுமே வாழலைங்கற ஒரே காரணத்துக்காகத் தான்..இன்னதத் திங்கணும், இது விஷம் அது நல்லதுன்னு உயிரக் குடுத்துக் கண்டு பிடிச்சவங்க கூட மத்தவங்களுக்கும் சேர்த்து வாழ்ந்தவங்க தான் !

நம்ம ஆசைப் படியே வாழ்ந்நாலும் அடுத்தவன் வாழ்கையக் கெடுக்கக் கூடாது.. முடிஞ்சா உபகாரம் பண்ணனும..முடியாட்டி மூடிக்கிட்டு ஒதுங்கிப் போயிடணும்..ஓரினச் சேர்க்கை தான் உனக்கிஷ்டம்னா அதப் பிடிச்சவனோட வாழ்ந்துட்டுப் போ..அத விட்டுட்டு உன்னிஷ்டத்துக்கு ஒத்து வரலேன்னா கொல்லுவேன்னு கிளம்பறதுக்கு உனக்கு உரிமையில்ல.. அதுவும் என்னிஷ்டம்னு நீ சொன்னா இந்த உலகத்துல உலவக் கூட தகுதியில்லாத ஜென்மம் ...இனி ஒரு நிமிசம் கூட நீ உயிரோட இருக்கக் கூடாது..

நான் அவ்வளவு சீக்கிரத்துல எவனையும் கொல்ல நெனைச்சதில்ல..புடிக்கலைன்னா ஒதுங்கிப் போயிடுவேன்..ஊரும் உன்ன மாதிரி ஆளுங்களுகள ஒதுக்கி வைக்கலாம்..ஆனா,நீயெல்லாம் திருந்தாத ஜென்மமாச்சே?இந்த ஊர்ல இருந்து அந்த ஊருக்குப் போயி இஷ்டம் போல ஆடறவனாச்சே?உன்ன உயிரோட விட்டா பல அப்பாவிங்க உயிர்க்கு ஆபத்துங்கறதால.. நீ உச்சி மண்டைல அடிச்சு அரை உசுராக்கி அனுபவிச்ச அந்தத் தாய் மார்களுக்காகவும்..என்னால முழுசா ஒரு நாள் கூட அம்மான்னு கூப்பிட முடியாத என் அம்மா அருக்காணிக்காகவும்..உச்சி மண்ட வழியாவே உன் உயிர் போகட்டும்"

சொல்லி முடிச்சதும் கடப்பாரைய ரெண்டு கையாலயும் உயரத்துக்கு ஒசத்தி தன் சக்தியத்தனையும் கைகளுக்குக் கொண்டு வந்து மிருக பலத்துடன் அவன் உச்சி மண்டையில் இறக்கினான்..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
... முதலில் கூர் முனை காபாலத்தை துளைத்து மூளையைச் சிதைத்திறங்கி, தொண்டை வழியாக நுரையீரல் ஒன்றை பிய்தெடுத்துப் பயணித்து,பெரு சிறுங்குடல்களோடு கல்லீரல் கணையத்தைச் சிதிலமாக்கி,ஆசன வாய் வழியாக மண்ணுக்குள் மலத்துடன் ஓரடி இறங்கிப் புதைந்தது அந்தக் கடப்பாரை..அது வலிமையுடன் உள்ளிறங்கியதால் ஏற்ப்பட்ட உடனடி இட நெருக்கடியால் விழியிரண்டும் பிதுங்கி வெளித் தொங்க கால்களை சில முறை உதைத்து கடைசியில் அடங்கினான் மூக்கன்...!

××××××××××××××××××××××××××××××××××××

ஒயிட் கொண்டு வந்த தன் புல்லட்ல உக்காந்து தடுமாட்டத்தச் சமாளிச்சுச் சொன்னான் சக்தி...

"அப்படியே கெடக்கட்டும்...மேல நீட்டிருக்கற கடப்பாரைய மட்டும் துணியால தொடச்சுடுங்க..நீங்க ரெண்டு பேரும் பஸ் ஸ்டேண்ட் போயி ஆட்டோ புடிச்சு நால் ரோட்டுல எறங்கி அங்க இருந்து நடந்து போயி குன்னத்தூர் ரோட்ல ஆட்டோ புடிச்சு திரும்ப பஸ் ஸ்டேண்ட் வந்து பஸ்ஸேறி ஈரோடு போயிச் சுத்திட்டு காலைல ஆஸ்பத்திரிக்கு வாங்க..காலைல இந்த மரத்த வெட்டணும்னு ஆசையோட வர்றவன் இதப் பாத்து காலோட கழியணும்..இந்த ஜென்மத்துல கொளம்னாவே பயத்துல ஒடம்பு தூக்கி வாரிப் போடணும்..நிதானமா கொட்டற மழை இப்போதைக்கு நிக்கப் போறதில்ல..நம்ம வந்து போன தடயங்கள அது அழிச்சுடும்..நான் கெளம்பறேன்"

அவன் தோள்ல கை வெச்சு கவலையாக் கேட்டான் சி.கே..

"தனியாவா போறே?"

”பயப் படாத சி.கே...இந்த உசுரு போறதா இருந்தாலும் மனுவப் பாத்துக்கிட்டே தான் போகும்"

சொல்லிட்டு ஒரு அடி நகர்ந்தவன் சடன் பிரேக்கடிச்சு நின்னு திரும்பிச் சொன்னான்..

"நீங்க ரெண்டு பேரும் இல்லேன்னா இந்த வேலைய இவ்வளவு சுலபமா நான் முடிஞ்சிருக்க முடியாது.. தேங்க்ஸ்டா சி.கே..ஒயிட்டண்ணா..ரொம்பத் தேங்க்ஸ்"

அடுத்த நொடி அந்த புல்லட் சீறலுடன் மேடேறி மறைந்தது..

சி.கே சிந்தனையாய்க் கேட்டான்..

"ஏன்டா ஒயிட்டு..இதுல அப்படியென்ன நாம பெருசாப் பண்ணிக் கிழிச்சோம்?இவனென்ன இப்படி பில்டப் குடுத்துட்டுப் போறான்?'

"நல்லாக் கேட்டீங்களே கேள்வி..நீங்க என்ன பண்ணுனீங்கன்னு எனக்குத் தெரியாது..ஆனா, நாம் பண்ணுனத வேற எவனாலும் பண்ண முடியாது"

நமக்குத் தெரியாம இவனென்ன பண்ணினான்னு சி.கே யோசிச்சுப் பாத்தும் விடை கெடைக்காம அலுப்புடன் கேட்டான்..

"அப்படி என்னடாப்பா பண்ணிக் கிழிச்சே?"

"மொதல்ல உங்க வருங்காலப் பொண்டாட்டி செல்விக்குச் சிக்கனம்னா என்னன்னு சொல்லிக் குடுக்கணும் தலைவரே..பத்துப் பேருக்குச் சமைக்கச் சொன்னா பதினஞ்சு பேருக்கு சமைக்குது..மட்டன் பிரியாணி, நாட்டுக் கோழி வறுவல்,மீன்னு சாயந்திரம் அத்தனையப் பண்ணி வெச்சுடுச்சு..அத்தன காசப் போட்டுப் பண்ணினது வீணாகலாமா?அதனால நாந் தான் சிரமப் பட்டு மூணாளுச் சோத்த ஒருத்தனே தின்னேன்..எங்க..?உங்க கிட்ட இருக்கற பத்தாளுங்கள்ல வேற எவனையாவது இந்தக் காரியத்தப் பண்ணச் சொல்லுங்க..பாப்போம்"

சொல்லிச் சிரிச்ச ஒயிட்டோட சேர்ந்து சிரிச்சுக்கிட்டே சி.கே பதில் சொன்னான்..

"அப்படிப் பாத்தா..இந்த விசயத்துல உன்னளவுக்கு இல்லேன்னாலும் என்னால முடிஞ்சத நானும் செஞ்சிருக்கேங்கற மறந்துடாத"

"அப்ப வாங்க..காலம் பூரா இந்த மகத்தான உதவிய பெரிய தலைவருக்கு இன்னும் சிறப்பாச் செய்வோம்''

××××××/××/××××××××××××××××××××××××

பஸ் ஸ்டாண்டத் தாண்டும் போதே சக்திக்கு கண்ணு மங்கத் தொடங்கிடுச்சு..கண்ணு முன்னால புகை மறைச்ச மாதிரி தெரிய தலையுதறிச் சமாளிச்சு தடுமாறின பைக்க சரியா ஓட்ட முயற்சி பண்ணினான்..
எல்லாமே மங்கலாத் தெரிஞ்சாலும்,பொறந்து உளுந்ததுல இருந்து உருண்டு புரண்ட தன் ஊர்ங்கற தைரியமும்,பலகின ரோடுங்கறதால இயல்பா அவனுக்குள்ள இருந்த உள்ளுணர்ச்சியும், போற உயிர் மனு காலடில தான் போகணும்னு இருந்த வைராக்கியமும்..மறுபடியும் காயம் படாம அவன அந்த ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்து சேர்க்க.. பிரேக்கடிச்சுத் தடுமாறினவன காவலுக்கிருந்த சி.கேவோட ஆளுங்க வந்து புடிச்சுக்கிட்டாங்க.. பைக்ல இருந்து எறங்கியவன் ஆதரவாப் புடிச்சிருந்த அவங்க கைகள விலக்கிச் சொன்னான்..

"தேங்க்ஸ்..இனி நான் சமாளிச்சுக்குவேன்"
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
கொட்டும் மழையில் தொப்பரையா நனைஞ்ச கிழிஞ்ச உடையோடும்,அளவற்ற ரத்தமிழப்பால் தளர்ந்த உடலோடும் மெல்ல ஏமர்ஜென்ஸி வார்டு நோக்கி ஊர்ந்து நடந்தான்..அவன் மனம் திருபத் திரும்ப இதையே சொல்லியது சிரமப் பட்டு எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்கும்..

"உன் சக்தி வந்துட்டேன் மனு"

எமர்ஜென்சி வார்டு ஏன் இன்னும் வரலே?நாம கால முன்னால வெக்கறமா,பின்னாலயா?இல்லாட்டி.. நாம அத நோக்கி சிரமப் பட்டு வெக்கற ஒவ்வொரு அடிக்கும் அது ரெண்டடி நம்ம விட்டு விலகிப் போவுதா?திடீர்னு அவனுக்குச் சித்ர மாலா ஞாபகம் வர ' ,ஸாரி சித்ர மாலா..என்னால நீ சாக வேண்டியதாப் போச்சு'ன்னு முணுமுணுத்துக்கிட்டே தலையுதறிக் கண் திறக்க..எதிரே எமர்ஜென்ஸி வார்டு !

அந்தக் கண்ணாடிக் கதவத் திறக்க வலுவில்லாம அது மேல சாஞ்சு உள்ள பாத்தான்..மனு படுத்திருக்கறது கண்ணுல பட 'மனு'ன்னு மனசுக்குள்ள கூப்பிட்டான்..
ஆச்சரியப் படும் படியா அவ உடம்புல ஒரு அசைவு..
அவன் சொருகின இமையைச் சிரமப் பட்டுப் பிரிச்சு மந்திரமாய்ச் சொன்னான்..

'என்னால உள்ள வர முடியல மனு..யாரோ புடிச்சுப் பின்னால இழுக்கற மாதிரி..ஐ..லவ்..யூ"

அவளப் பாத்த கண்ணு பாத்த படியே இருக்க கால்கள் துவள கண்ணாடிக் கதவு மேலேயே முழுக்கச் சாய்ஞ்சு மெல்லச் சரிய..சரியா அந்த நேரத்துல கண்ண முழிச்சு அவன் சரியறதப் பாத்ததும் 'ஐயோ சக்தி'ன்னு அவ வாய்ல இருந்து வெளிப் பட்ட அலறலுக்கு மொத்த ஆஸ்பத்திரியும் ஷாக்கடிச்ச மாதிரி எந்திரிச்சு உக்காந்தது..

××××××××××××××××××××××××××××××

காலம் ஒண்ணு மட்டுமே எதுக்காகவும்,யாருக்காகவும் நிக்கறதில்லீங்க..ஆறு வருசம் வேகமா ஓடிடுச்சு..
இதோ நம்ம மனு !அந்த வீட்டுத் தோட்டத்து மொட்டை மாடில ஆறு வருசம் கழிச்சுப் பாக்கறோம்.. வருசம் ஆறு ஓடியிருந்தாலும் மனு கிட்டப் பெருசா வித்தியாசமில்ல.. அதே மனு தான் ! ஆனா,பொண்ணுங்களையே அலட்சியப் படுத்தின மூக்கனையே அசைச்ச அந்த முகத்துலயும்,அதுல இருந்த அவளோட அலாதிப் புன்னகையிலும் முன்ன விடத் தெளிவும்,அன்பும் கூடியிருக்க மொட்டைமாடிக் கைப்பிடிச் செவுத்துல சாய்ஞ்சு தோட்டத்தச் சுத்தியும் பாத்துக்கிட்டிருந்தா..

வீட்டப் பொறுத்த வரைக்கும் அதே தொட்டிக் கட்டு வீடா எந்த மாறுதலும் இல்லாம இருந்தாலும் தோட்டத்துல நிறைய மாற்றங்கள் தெரிஞ்சுது..முன்ன விட பல மடங்கு விரிவாகி இருக்க உள்ள அந்த வீட்டத் தவிர அங்கங்க சில குடியிருப்பு வீடுகளும் தெரிஞ்சுது.. தோட்டத்துக்கு நடுவுல அரை ஏக்கர் பரப்புல தனியா பூங்கா மாதிரி ஒண்ணிருக்க..அதுலயும் சில கட்டிடங்களும்,குழந்தைங்க ஆடிப் பாடி விளையாடறதுக்கான உபகரணங்களும் இருக்க அதுக்குள்ள முப்பது குழந்தைங்க விளையாடிக்கிட்டும் இருந்தாங்க..அந்தக் குழந்தைங்களோட சிரிப்புச் சத்தம் தோட்டத்தின் அழகுக்கு இனிமையைச் சேர்த்தது..

மெயின் கேட் கிட்ட இப்ப புதுசா ஒரு வீடிருந்தது.. அங்க இருந்து தோட்டத்தோட எல்லா முக்கியப் பகுதிகளுக்கும் தெளிவான மண் பாதையிருக்க ஓரங்கள்ல தென்னை மரங்களும்,ஊடு பயிரா வித விதமான காய்கறிச் செடிகளுமிருந்தன..கேட் கிட்ட புதுசா ஒரு செட் போடப் பட்டு அதுல கார்,பைக்,டிராக்டர்,புல் வெட்டும் கருவி, மருந்தடிக்கும் கருவிகள் இருந்தன..எக் காரணத்தக் கொண்டும் தோட்டத்துக்குள்ள ரசாயன மருந்துகளுக்கு அனுமதி இல்லாததால இயற்கை மருந்துகள் தெளிக்கவே அந்த இயந்திரங்கள் உபயோகப் படுத்தப் படாடன..

அந்த ஷெட்ட ஒட்டி பெரிய மாட்டுக் கொட்டில்.. அங்க பத்து நாட்டு மாடுகளும்,பதினோரு டில்லி எருமைகளுமிருந்தன..அதுகளோட வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும் நூத்துக் கணக்குல இருந்தன.. நாட்டுக் கோழிகளுக்கு அளவே இல்ல.. மாடு,எருமை, ஆடு,கோழின்னு ஒவ்வொண்ணையும் கவனிச்சுக்க அததுக்கு ஆளுங்க இருந்தாங்க..நூறு பேருக்கு மேல அந்தத் தோட்டத்துக்குள்ள இருந்தாலும் ஒவ்வொருத்தருக்கும் வேலைங்க துல்லியமாப் பிரிச்சுக் குடுத்திருக்க,அவங்கவங்க வேலைய அவங்கவங்க பாக்க..உள்ள வர்ற எவனையும் உளுந்து கும்பிட்டா என்னன்னு யோசிக்க வைக்கற அளவுக்கு மொத்தத் தோட்டமும் அழகு,சுத்தம்,சுகாதாரத்தோட இருந்தது..

மொட்டை மாடில நின்னுக்கிட்டிருந்த மனு காலடிச் சத்தம் கேட்டுத் திரும்பினா..செல்வி !

"அணணன் ஞாபகம் வந்துட்டுதாக்கும்..இல்லேன்னா மொட்டை மாடில இவ்வளவு நேரமா நிக்க மாட்டீங்களே?"

(அடுத்த அத்தியாயத்தோடு...முற்றும் !
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த வருடத்தில் எனக்கு
கிடைத்த செல்லத் தம்பி,
தங்கக் கம்பி மனிதருள்
மாணிக்கமான தேவா
தம்பிக்கு என்னுடைய
மனமார்ந்த இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்,
தங்கவேலன் தம்பி
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top