• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
கொஞ்ச நேரத்துல அதிர்ச்சிய உதறித் தள்ளிட்டு சக்தி சொன்னான்..

"இதென்ன மனு..அப்பா புதுசா ஒரு பூதத்தக் கெளப்பறார்?"

"என்னக் கேட்டா?எனக்கென்னவோ பயமா இருக்கு சக்தி.."

"போடி லூசு..அவரு தான் ஏதோ மப்புல பேசறார்னா நீயும் அதப் பெருசா எடுத்துக்கறியா?யோசி மனு.. இத ஒரு கொலைன்னு வச்சுக்கிட்டா மொதல்ல வர்ற கேள்வி 'ஏன்?'..அடுத்ததா வர்றது 'எப்படி?'..காரணம் இருந்தா தான் இந்தக் காரியமே..எங்கம்மாவ ஒருத்தன் ஏன் கொல்லணும்?அவங்க காதுல கம்மல்,மாங்கல்யம் தவிர எந்த நகையும் போட மாட்டாங்க..அதுவும் பத்திரமா இருக்கு..அடுத்ததா எப்படிங்கற கேள்வி.. பட்டப் பகல்ல ஒருத்தன் நம்ம தோட்டத்துக்குள்ள பூந்து கொலை பண்ணிட்டுப் போறது அவ்வளவு சுலபமில்ல மனு"

"தப்புப் பண்றே மகனே.."

இடைல வந்த கந்தசாமி குரலுக்கு ரெண்டு பேரும் திரும்ப செவுத்துல சாய்ஞ்சு உக்காந்திருந்தார் அவர்..

"எப்பவும் சாயந்திரமாத் தான் கெணத்து மேட்டுக்குக் குளிக்கப் போற உன் அம்மா இன்னிக்கு காலைலயே ஏன் போனான்னு யோசிச்சியா?இங்க வா..என்ன கைத் தாங்கலா உன் ரூமுக்குக் கூட்டிட்டுப்போ.. தூக்கம் வர மாட்டேங்குது..தனியா இருந்தா தொங்கிடலாம்ங்கற எண்ணம் வருது..உலகத்துலயே கொடுமையான நோய் தனிமை தான் மகனே"

சக்தி அவர் கிட்டப் போயி குழந்தை மாதிரி அவரத் தூக்கி நிறுத்த அவன் தோள்ல ஆதரவா கையப் போட்டுக்கிட்டே நடந்து ரூமுக்குப் போனாங்க.. ரூம் வாசல் கிட்டப் போனதும் கந்தசாமி தயங்கி நின்னார்..
அவனக் கெஞ்சலாக் கேட்டார்..

"இங்கியே உக்காந்துக்கறனே?"

"நீட்டியே படுக்கற அளவுக்கு சோபா இருக்கைல இங்க ஏன் உக்காரணும்?இது அம்மாவோட யதாஸ்தானம்பா"

தயக்கமின்றி வந்தது அவர் குரல்..

"அதனால தான்..."

சக்தி வாயடைச்சுப் போனான்..கைத் தாங்கலா அவர உக்கார வெக்க சுவத்துல சாஞ்சு அந்த இடத்த ஆசையோடு கண்கள்ல கண்ணீர் பொங்க தடவிக் கொடுத்துச் சொன்னார்..

"இங்க தான் நேத்து உக்காந்து பாட்டுக் கேட்டா.. இந்தப் பொம்பளைங்க இருக்காங்களே?ஒவ்வொரு வீட்லயும் தங்களோட அடையாளத்தப் பதிச்சுட்டுப் போயிடறாங்க.. ஏன்னா,வீடு தான் அவங்க உலகம்..சமையல் கட்டு தான் அவங்க ராஜ்ஜியம்..உங்கம்மா இல்லாத இந்த வீட்ட என்னால கற்பனை கூட பண்ண முடியலியே சக்தி?.. தங்கம்..எனக்கு இன்னும் கொஞ்சம் பிராந்தி ஊத்திக் குடு..."

சக்தி ஆறுதலா அவர் தோளத் தட்டிட்டுப் போய் அரை டம்ளர் ஊத்தி கலந்து குடுக்க குடிச்சுட்டுச் சொன்னார்..

"இங்க உக்காந்து தான் நேத்துச் சொன்னா.. இனிமே பேசல..செத்த பொணமாயிடறேன்னா.. நானும் விளையாட்டா அதச் செய் மொதல்ல..அப்பத் தான் எனக்கு நிம்மதின்னேன்..போயிட்டா..அந்த உத்தமி வாக்கு பொய்யாயிடுமா?சக்தி..நாங் கூட நேத்து உங்கிட்டச் சொன்னனே?இந்த ஆம்பளைங்கற திமிரு ஒழியற அன்னிக்கு நெடுஞ் சாண் கிடையா அவ கால்ல உளுந்து என்ன மன்னிச்சுடு தாயேன்னு கண்ணீர் விட்டுக் கதறிடுவேன்னு..?அத இன்னிக்குச் செஞ்சிட்டேம்பா.. ஆனா,அந்தக் காலக் கண்ணீரால கழுவியும் அத உணரத் தான் அவளுக்கு உயிரில்லை..அம்பது வருசம்.. எங்க அம்மா பெத்துப் போட்ட கையோட போயிச் சேந்துட்டாங்க..வெறும் மண்ணாக் கெடந்த என்ன மனுசனா உருக் கொடுத்து உயிர் குடுத்தது உங்கம்மா தான்..எனக்குத் தாயும் அவளே..இந்த ஆண்டவன் இருக்கானே?கருணையில்லாத வியாபாரி..உன்னக் குடுத்து அவள எடுத்துக்கிட்டான்..."

மனு அவர் முன்னால ஒரு தட்டு நிறைய ரஸ்தாளிப் பழங்கள கொண்டு வந்து வைக்க நிமிர்ந்து பாத்துச் சொன்னார்...

"பாத்தியா..நாந் தான் அப்பவே உங்கிட்டச் சொன்னனே தங்கம்?காலைல உங் கையால எதக் குடுத்தாலும் சாப்பிடறேன்னு..."

மனு ஒரு பழத்த எடுத்து உரிச்சு நீட்டிச் சொன்னா...

"மணியப் பாருங்க..பன்னெண்டரை...இது அடுத்த நாள் கணக்குல வரும்"

கந்தசாமி முதல் முறையா புன்னகைச்சுச் சொன்னார்..

"பலே மனு..ஆனா தங்கம்..என்ன மாதிரி பழங் கட்டைங்களுக்கு விடிஞ்சாத் தான் அடுத்த பொழுது ஆரம்பம்..இருந்தாலும் உன் அன்புக்காக அருக்காணியே இதக் குடுத்ததா நெனைச்சு எடுத்துக்கறேன்"

வாங்கி கொஞ்சம் கொஞ்சமாய் சாப்பிட்டவரின் கண்கள் ஏனோ குளமாக அதத் துண்டால துடைச்சுச் சொன்னார்...

"இனி பாத்துப் பாத்துச் செய்ய அவளில்ல..நீயும் ரெண்டொரு நாள்ல போயிடுவே..இந்தக் குடும்பம் என்ன கதியாகும்னு தெரியலியே மனு?"
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
இதுக்கு மனு என்ன பதில் சொல்றதுன்னு புரியாம அவரப் பாத்தா..ஏன்னா,அவ மனசையும் அறுத்திட்டிருக்கற கேள்வி இது..ஏதோ கொஞ்ச நாள் இருக்கலாம் தான்..ஆனா,மாசக் கணக்குல டேரா போட முடியுமா?அதும் தான் எத்தன மாசம் போட முடியும்? இதுக்கு நிரந்தரமான ஒரு தீர்வத் கண்டு பிடிக்கறது நல்லது..அந்தத் தீர்வு சக்தி கல்யாணம் பண்ணிக்கறது ஒண்ணு மட்டுமேன்னு உணர்ந்தாலும் இதுக்கும் தான் அவ என்ன பண்ணிட முடியும்?இதுல முடிவு எடுத்து நடைமுறைப் படுத்த வேண்டியது சக்தி தானே?அவ யோசனையப் புரிஞ்சுக்கிட்டவரா சொன்னார்..

"ஆமாம் மனு..இதுக்கு அவன் தான் வழி சொல்லணும்.. நான் அவன்னு சொன்னது ஆண்டவன இல்ல.."

இப்படிச் சொல்லிக்கிட்டே அவர் சக்தியப் பாக்க அவன் குறிப்ப உணர்ந்தவனாச் சொன்னான்..

"இன்னும் மூணு நாளைக்கு காரியத்துக்கு வந்த சமையல் காரங்க இருப்பாங்க.. அப்புறம் நிரந்தரமா ஒரு அம்மாவ வேலைக்கு வச்சுட வேண்டியது தான்"

கந்தசாமி அவன கெஞ்சலாவும் பரிதாபமாயும் பாத்துக் கூட்டார்..

"கூலிக்கு வர்றவங்களுக்கு ஏதுப்பா நிரந்தரம்?எங்க ரெண்டு காசு அதிகமாக் கெடைக்குதோ அங்க போகத் தான் செய்வாங்க.. அதுவுமில்லாம அவங்கள முழுக்க நம்ப முடியுமா?நாஞ் சொல்ற நம்பிக்கையான நிரந்தரமான ஆளு வேறப்பா"

சக்தி எரிச்சலானான்..தன் மனசத் தெரிஞ்சிருக்கற அவரே இப்படிப் பேச அலுப்பாச் சொன்னான்..

"ப்ச்..அது கூடப் புரியாதா எனக்கு?அம்மா செத்து முழுசா ஒரு நாள் கூட ஆகல. .."

பெரியவர் குறுக்க பூந்து சொன்னார்..

"என்னிக்கா இருந்தாலும் பேசியே ஆக வேண்டிய விசயம் மகனே..நம்ம ரெண்டு பேரோட சாப்பாட்டு விசயம்னா கடைல கூட வாங்கித் தின்னுக்கலாம்.. ரெண்டு வாயில்லா ஜீவனுங்க இருக்கு.. மஞ்சள் வெட்ட ஆளுங்க வந்தா பத்து நாளைக்கு முப்பது பேருக்கு ஆக்கிப் போடணும்..சரி,அவங்களுக்கும் வாங்கிக் குடுத்துடலாம்னு வை.. இங்க இத்தன இறைஞ்சு கெடக்கே..இதெல்லாம் யாரு பாத்துக்கறது?"

"எல்லாம் ஒரு ஆளுக்கு ரெண்டாளா போட்டா சரியா நடக்கும்"

"இதெல்லாம் கூலி ஆளுங்க செய்யற வேலை இல்லை சக்தி"

சக்தியின் எரிச்சல் எல்லை கடக்க அதைக் குரலிலும் காட்டினான்..

"அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்றீங்ங?"

அவன் குரல்ல இருந்த எரிச்சலை உணர்ந்த கந்தசாமி அலுப்பான குரலில் சொன்னார்..

"புரியுதுப்பா..அப்பான்னு கூப்பிடறதுக்காக அப்பனுக்குண்டான உரிமையும் அதிகாரமும் எடுத்துக்க வேண்டாம்னு சொல்லாம சொல்றே..சரி சக்தி.. தலை எழுத்துப் படி நடக்கட்டும்"

வேதனையா சொல்லிட்டு மேல் துண்ட சுருட்டி தலைக்கு வச்சு அவர் அங்கயே படுத்துட சக்தி கையாலாகதவனா அவரப் பாத்துட்டு வெறுப்பா உள்ள போனவன் டம்ளர எடுத்து ஊத்திக் குடிச்சு காலைல இருந்து பத்திக்காத சிகரெட்டையும் பத்த வச்ச போது மனு தயக்கமா உள்ள வந்தா...

"வா மனு..இப்படி உட்கார்..காலைல இருந்து நீயும் கொஞ்ச நேரம் கூட ரெஸ்ட் இல்லாம அங்கயும் இங்கயும் அலைஞ்சே..நீ இல்லேன்னா நான் ரொம்பவே கஷ்டப் பட்டிருப்பேன்"

"பணத்த எண்ணிக் குடுத்து எழுதி வெக்கறதெல்லாம் ஒரு வேலையா சக்தி?தயவு செஞ்சு இன்னொரு தடவ இதப் பத்தின பேச்ச எடுக்காத..எனக்கு இதச் சொல்ல உரிமை இருக்கான்னு தெரியல..ஆனா,சொல்லணும்னு தோணுது..தாத்தா சொன்னதப் பத்தி கொஞ்சம் யோசிச்சுத் தான் பாரேன்"

"யோசிச்சுட்டேன் மனு.. எப்பவும் சாயந்திரமா குளிக்கப் போற அம்மா ஏன் காலைல கெணத்து மேட்டுக்குப் போனாங்கன்னு கேட்டாரில்லையா?கடந்த மூணு நாளா ஒரு நாய் சாயந்திரமானா அம்மா கெணத்து மேட்டுக்கு போற டைமாப் பாத்து உள்ள பூந்து பாலையும், தயிரையும் காலி பண்ணியிருக்கு..அதனால அவங்க காலைல போயிருக்கலாம்..அளவு கடந்த துக்கம்.. வெறும் வயித்துல இத வேற குடிச்சிருக்கார்.. கேக்கணுமா?லாஜிக் இல்லாம கண்ட படி ஒளறிட்டிருக்கார்..."

மனு ஆச்சரியமா அவனப் பாத்தா..ஏன்னா,அவ யோசிக்கச் சொன்னது அம்மா மரணத்தப் பத்தி இல்லையே?ஒளறிக் கொட்டறது கந்தசாமியா இல்ல இவனாங்கறது புரியாம பாக்கும் அவ பார்வையப் புரிஞ்சவனா அவன் சொன்னான்..

"எதுவா இருந்தாலும் தயங்காம கேக்கலாம் மனு.. உனக்கு எல்லா உரிமையும் உண்டு"
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
மனுவால உடனே பேச்ச ஆரம்பிக்க முடியல.. இந்த நேரத்துல இதப் பேச வேண்டி இருக்கேன்னு ஒரு சங்கடம்..இன்னொண்ணு உயிருக்குயிரா காதலிக்கற தானே இதப் பேச வேண்டியதா போசச்சேங்கறது.. ஆனா, இதத் தன்னால தான் பேசித் தீர்க்க முடியும்னு அவ உறுதியா நம்பினதால சங்கடங்கள உதறிட்டுக் கேட்டா..

"தாத்தா இன்னொண்ணு..அதான் தோட்டம்,வீட்டப் பாத்துக்க ஆளு வேணும்னு சொன்னாரே?"

சக்தி அவள மொறைச்சுக்கிட்டே போயி இன்னொரு டம்ளர ஊத்திக் குடிச்சுட்டு வெறுப்பாச் சொன்னான்..

"அவர் தான் புரியாம பேசறார்னா நீயுமா மனு?ஒரு ஆளுக்கு ரெண்டாளா போட்டுக்கலாம்னா அதுலயும் நொட்டை சொல்றார்..அவருக்கு நான் கல்யாணம் பண்ணிக்கணும்..அவ்வளவு தான்..அதத் தான் சுத்தி வளைச்சு என்னென்னமோ சொல்றார்"

மனு தைரியத்த வரவழைச்சுக்கிட்டுக் கேட்டா..

"அவரோட எதிர்பார்ப்புல தப்பில்லையே?"

"நீயும் லூசு மாதிரி பேசாத மனு..அதெல்லாம் பேசற நேரமா இது?"

"நாளைக்கேவா கல்யாணத்த வச்சுக்கச் சொல்றோம்..
பேசறது,யோசிக்கறதுல என்ன தப்பிருக்கு..? அன்னிக்குச் சொன்னியே...யாரோ உம் மனசுல இருக்கறதா..?அவங்க போன் நம்பர் குடு.. இல்லேன்னா பேஸ் புக் லிங்க் குடு...மொதல்ல நாங்க பிரெண்ட்ஸ் ஆகறோம்..அப்புறமா பேசி குளோஸ் பிரண்ட்ஸ் ஆவோம்....."

மனுவ தொடர்ந்து பேச அனுமதிக்காம சக்தி எரிஞ்சு விழுந்தான்..

"லிங்க்..?கவனி மனு.. லேடீஸ் ரிலேசன் ஷிப் எதுவுமே எனக்கு நீடிச்சு நிக்கறதில்ல.. தயவு செஞ்சு என்ன கம்பல் பண்ணாம போயிப் படுத்துத் தூங்கு"

"இதுல உனக்கு என்ன பிரச்......"

அவள முடிக்க விடாம அமிலமா அவன் வாய்ல இருந்து கொட்டுச்சு அந்த வார்த்தைகள்...

"வாய மூடிட்டு போயித் தூங்குங்கறதத் தான் நாசூக்கா சொன்னேன்..அது கூடப் புரியாத முட்டாளா இருக்கியே மனு?"

,சுரீர்னு பட்ட அடில வேதனையும் வலியும் பிரதி பலிக்க மனு அவனப் பாக்க அவளப் பாக்கப் பிடிக்காதவனப் போல சக்தி திரும்பி அவளுக்கு முதுகு காட்டி நின்னான்..இப்படி அவன் சொன்னதுக்கு நியாயமா எனக்குக் கோவமில்ல வந்திருக்கணும்.. ஆனா,வேதனைப் படறேன்..ஏன் இப்படி?ன்னு யோசிச்சுக்கிட்டே மௌனமா அவ வெளிய வந்தா.. எங்க போறதுன்னு தெரியாம எந்த இலக்குமில்லாம நடந்தவ தன்னையறியாம வந்து நின்னது கந்தசாமி தம்பதி தங்கி இருந்த அறை வாசல்ல.. தயக்கமா உள்ள போனா.. காலைல இருந்து அலைஞ்சதோட சக்தி அலட்சியப் படுத்துனதும் சேர சோர்ந்து அங்க இருந்ந பெட்ல சாய்ஞ்சு தலையணைய அருக்காணியா நெனைச்சு வருடிச் சொன்னா..

"எனக்கு ஒண்ணுமே புரியலியே ..எனக்கு வழி காட்டுங்க அம்மா...ப்ளீஸ்"

அடக்கி வச்சிருந்த அத்தனை துக்கமும் ஒண்ணாச் சேர்ந்து வெடிக்க தலையணைய அருக்காணி அம்மா மடியா பாவிச்சு முகம் புதைச்சு தேம்பி அழுதா... எவ்வளவு நேரம் அப்படி அழுதாளோ அவளுக்கே தெரியாது..தன்னையும் சூழலையும் மறந்து அழுதிக்கிட்டிருந்தவ தோள்ல ஆதரவா ஒரு கை பட அவ தலை திருப்பிப் பார்க்க கந்தசாமி!அவ பதறி எந்திரிச்சு கண்ணத் தொடைச்சுக்கிட்டுச் சொன்னா..

"ஸாரி தாத்தா..நீங்க வந்ததக் கவனிக்கல"

அவர் அதக் காதுல வாங்காதவர் போல காமிச்சுக்கிட்டு அவ பக்கத்துல உக்காந்து ஆதரவா அவ தோள்ல ஒரு கையப் போட்டுக்கிட்டுச் சொன்னார்...

" மனு.. .இனி நீ என்ன பண்ணப் போறே ? நாளைக்கு உன் வீட்டுக்குக் கிளம்பற ஐடியா.. அதானே?"

மனு பதில் சொல்லாம தலை குனிய அவ தோள இறுக்கின படி கந்தசாமி பேச்சத் தொடர்ந்தார்..

"ஒரு அரை மணி நேரம் நான் சொல்றதக் காது குடுத்துக் கேட்டுட்டு நீ எநத முடிவுக்கும் வா... ஒரு மனுசனுக்கு நல்ல நேரம் வந்தா ஆண்டவன் கூரையப் பிச்சுக்கிட்டு கொட்டுவான்னு சொல்லுவாங்க..அதாவது வேண்டாம்னாலும் விடாதாம்..கெட்ட நேரம் வந்தாலும் அப்படித் தான்..சம்பந்தப் பட்டவன் எத்தன புத்திசாலியா இருந்தாலும் முட்டாளாக்கிடும்..அக்னி வார்த்தைகள கொட்ட வச்சு நண்பனையும் பகையாக்கும்.. சக்திக்கு அப்படிப் பட்ட கெட்ட நேரமிது.. கூட இருக்கறவங்களையும் காவு வாங்கற மிக மோசமான கெட்ட நேரம்..அதோட எந்த நேரத்துலயும் வெடிக்கற கட்டத்துல இருக்கற அவனத் தடுத்து நிறுத்த உன்னால மட்டுமே முடியும் மனு…..”


இந்த எடத்துல நிறுத்தி ஒரு பெருமூச்ச விட்டு பேச்சத் தொடர்ந்தார்…


“இன்னொருத்தியாலயும் முடியும்.. அவ பேரு சிதர மாலா…”


(தொடரும்….
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
என்ன சகோதரா நீங்களும் இப்படி முக்கிய கட்டத்தில் தொடரும் கொண்டு இருக்கறீங்க தொடர் கதையின் இலக்கணம் அதுதானோ
 




banupriya

இணை அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
591
Reaction score
831
Yar antha chithra mala...edaila edaila vanthukitu..atha manu irukala pothum..sakthi purinjukavea matana
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top