• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
1
காதல் நீலாம்பரி.....!!!

பெருமாள் கோவில் முன் செருப்பைக் கழட்டி.....
கண்மூடி கையக் கூப்பி பவள உதடுகள் முணு முணுக்க...
இறையை வணங்கும் மான்யாவை ...
சக்தி சிகரெட் பத்திக்கிட்டே ஓரக் கண்ணால் பாத்தான்...
அழகி.. பேரழகி.. ஒடம்பால மட்டுமில்ல மனசாலயும் !!! எப்படி நின்னு எந்தக் கோணத்துல பாத்தாலும் அழகைப் பிரதி பலிக்கற அழகி !! பேச்சு,பார்வை,நடைன்னு எல்லாத்துலயும் அழகு மிளிரும் அழகி !!!

அந்தப் புன்னகை...
அவளோட அந்த அலாதிப்புன்னகையே அவள அலங்கரிக்கற மிகப் பெரிய அணிகலன்..
‘இன்னும் என்னத்த வேண்டறா? தன் காதல் ஜெயிக்கணும்னா? ஸாரி மான்யா..நான் உன்னோட காதல ஜெயிக்க விட மாட்டேன’ உக்கிரமாய் மனதுக்குள் தோன்றும் எண்ணங்களுக்கு சலிப்படைந்தவனாய்த் தலையுதறி மீண்டும் அவளைப் பார்த்தான்

தேவதை.. எல்லா விசயத்துலயும் தேவதை..! இவளா என்னக் காதலிக்கறா? என்ன விட பத்து வயசு கம்மி.. Bsc கிராஜுவேட்.. தமிழ்,மலையாளம், இத்தி, ஆங்கிலம்னு நாலு மொழி சரளமா பேச,எழுதத் தெரிஞ்சவ.. இந்தில 'பண்டிட்'பட்டம் வாங்கினவ..
கம்ப்யூட்டர் சென்டர்ல ஒரு ட்ரெய்னரா இருக்கறதோட தன் வீட்ல காலைல இருவது பேருக்கு இந்தியும், சாயந்திரம் அம்பது கொழந்தைங்களுக்கு டியூசனும் நடத்தறவ....


மலையாளிங்களுக்கே ஆன அந்த நிறம்.. ஏணி என்ன?ஜேசிபியே வச்சுத் தூக்கினாலும் தன்னால அவ காலு கிட்டக் கூட போக முடியாதே?
தன்னப் பத்தி யோசிக்கும் போது சக்தி மனசுல வெறுப்பும், கசப்புமே கடைசீல மிச்சமாச்சு..
தனியார் பள்ளியின் 'படி,படி'ங்கற தாரக மந்திரம்.. விளையாட்ல ஆர்வமுள்ள இவன அதுல ஊக்கப் படுத்தாம மணிப் பிரகாரம் ஒவ்வொரு பாடத்தையும் நெட்டுருவாய் மண்டைல ஏத்தற அதோட ஜெயில் தனம்....


பத்தாவது படிக்கறப்ப பாதியிலயே அடமாய் வெளியே வந்தவன் அவன்.. அஞ்சு வயசுக் கொழந்தை கூட சரளமா இங்கிலீஷ் பேசற இந்தக் காலத்துல நாலு வார்த்தை சேர்ந்த மாதிரி அந்த பாஷையக் பேசவோ,கேட்கவோ நேரும் தருணங்களில் தடுமாறுபவன்...
ஏழு வயசலயே பெத்தவங்கள எடுத்து முழுங்கி தாத்தா,பாட்டி செல்லத்துல வளர்ந்தவனுக்கு இயல்பாவே முரட்டுத் தனம் அமைய படிப்பு ஏறலை...
சிப்காட்டுக்கு எடுத்த நெலத்துக்கு வந்த பணத்துல அவன் அப்பா இருந்த காலத்துலயே பெருந்துறை சென்டர் டவுன்ல இடம் வாங்கி முப்பது கடைகளக் கட்டி விட...


இன்னிக்கது ரெண்டு லகரம் வாடகையாக் கொட்ட இவன் ஏகாந்தமாச் சுத்திட்டு திரியறவன்.. அது போக காடு,தோட்டம்னு அடிப் படைச் சொத்துக்களுக்கும் பஞ்சமில்ல.. வசதி ஒண்ணுல மட்டும் அவள விட சில படி மேல இருக்கானே தவிர மத்த விசங்யங்கள்ல அதள பாதாளத்துல...


காதல் கருமாந்தரத்துக்குக் கண்ணில்ல தான்.. எதையும் அலசிப் பாக்காதுன்னே வெச்சுக்கிட்டாலும்.....
ஆணோ,பெண்ணோ குணம் முக்கியமில்லையா?அப்படித் தன் கிட்ட மெச்சத் தகுந்த குணம் என்ன இருக்குன்னு யோசிச்சுப் பாத்தவனுக்கு ஏளனம் கலந்த புன்னகை தான் வந்ததே தவிர சுட்டிக் காட்டற அளவுக்கு எதுவுமே ஞாபகத்துக்கு வரலை..
இவன் யோசனையக் கலைக்கற மனம் வருடும் அவள் மெல்லிய குரல்..


"போலாமா சக்தி? ஏதோ பலத்த யோசனை போலிருக்கு..மூணு தடவ கூப்பிட வெச்சுட்டே. அப்படி என்ன யோசனை?"

சிகரெட்டக் கீழ போட்டு மிதிச்சுக்கிட்டே 'கேட்டுடலாமா?'ன்னு யோசிச்சவன் ...
'நடு ரோட்லயா?'ங்கற கேள்வி வரவும் உடனே முந்தின கேள்விய அழிச்சுட்டு வெறுப்பா சொன்னான்

"நத்திங் பேபி"

சொல்லிக்கிட்டே தன் ராயல் என்பீல்டு பைக்க நோக்கிப் போனவன அவளோட இந்த பதில் தேக்கி நிறுத்தி திரும்பிப் பாக்க வச்சது..

"ஹேய்.. நத்திங் ஈஸ் சம்திங்க்"

அவளோட அந்த அலாதியான அந்தப் புன்னகை.. கண்ணுல தொடங்கி முகம் பூரா பரவி கடைசியா உதட்டுக்கு வர்ற புன்னகைய அவன் பல தடவ கவனிச்சிருந்தாலும் இன்னிக்குத் தான் உன்னிப்பா யோசிக்க வெக்குது..
துளியும் கபடில்லாத அந்தக் கண்களப் பாக்கவும் ரெண்டு நாளா கேட்ட வாட்ஸ் அப் கால் ரெக்கார்டர் கூட பொய்யோன்னு நெனச்சுத் திணறினான்.. எப்படிப் பொய்யாகும்..அது இவ குரல் தான்.. அத இவனுக்கு அனுப்பினது இவளோட உயிர்த் தோழியாச்சே? இப்பவும் அவள் குயில் குரல் தான் அவன் சிந்தனைய அறுத்துச்சு..

"ஏய்.. சக்தி.. இன்னிக்கென்னவோ நீ சரியில்ல.. அடிக்கடி உள்ளுக்குள்ள போயி மோனத்துல ஆழ்ந்துடறே.. என்ன விசயம் பேபி?"

"அதான் சொன்னனே?..நத்திங்"

"அதுக்கான பதிலையும் 'நத்திங் ஈஸ் சம்திங்'னு ஒரு கேள்வி மாதிரியே சொல்லிட்டேன்"

'எத வச்சு அப்படிச் சொல்றே ?"

"ஒரு பொண்ணு சொல்ற நத்திங்கற வார்த்தைக்குள்ள ஆயிரம் விசயங்கள் அடங்கி இருக்கும்.. அவ்வளவு இல்லேன்னாலும் உன் நத்திங்ல ஒண்ணு,ரெண்டாவது இருக்காதா?"

“ஒண்ணுமே இல்லாமலும் போகலாமில்லையா?”

“சான்ஸே இல்லை.. எண்ணங்களே இல்லாத நிர்ச் சலனம்ங்கறது ஞானிகளுக்கே சாத்தியமான ஒண்ணு.. என்ன பாக்கக்கறே?இது கொஞ்ச நாளைக்கு முன்ன பேச்சு வாக்குல நீ எங் கிட்டச் சொன்னது தான்... கமான் சக்தி ் அவுத்துக் கொட்டிரு.. நான் உன்னோட பெஸ்ட் பிரண்டில்லையா?”

சொல்லி முடித்தவளின் முகத்தில் மீண்டும் அந்தப் புன்னகை.. அன்பாய்,ஆதரவாய் தோள் தடவி மனம் வருடி 'சொல்லு.. என்ன உன் பிரச்னை?ன்னு தோள்ல கை போட்டு கேக்கற மாதிரியான வெல்கம் புன்னகை..நிச்சயம் இவளக் கட்டிக்கறவன் குடுத்து வெச்சவன் தான்..ஆனா,அந்தக் குடுத்து வெச்சவனா தன்னக் கற்பனை பண்ணிப் பாக்க சக்தியால துளி கூட முடியல. ‘நீ பெஸ்ட் பிரண்டா இல்லாததால தாண்டி இத்தன மனக் கஷ்டமும்,பிரச்னையும்'னு கத்தத் தோணுச்சு அவனுக்கு.. .
ஏனோ இனம் தெரியாத கோவம் வர சுள்ளுனு அவ கிட்ட எரிஞ்சு விழுந்தான்

"ரோட்ல வச்சுத் தான் எல்லா பஞ்சாயத்தும் நடக்கணுமா?வா போலாம்"

ஆனா,அவ அவன் எரிச்சல துளியும் சட்டை செய்யலன்னாலும் அவனோட ‘வா’ங்கற ஒத்தச் சொல்ல உத்தரவா பாவிச்சு பைக்குல அவன் பின்னால.ஏறி உக்காந்தா.. ஏன்னா,சக்தி கோவமா இருக்கும் போது வார்த்தைல அவங் கிட்ட வெளையாடறது ரொம்பவே ஆபத்து.. நெஞ்சையே அறுக்கற மாதிரி அங்க இருந்து பதில் வரும்..
ரெண்டே நிமிசத்துல அவ வீடு வந்ததும் எறங்குனவ கிட்டச் சொன்னான்

“உங்கிட்ட தனியா ஒரு விசயம் பேசணுமே பேபி?”

“எப்ப வேணும்னாலும்.. நான் காத்திருக்கேன் சக்தி”

அடுத்த நொடியே அந்த புல்லட் சீறிப் பாய கண்ணிலிருந்து மறையும் விரிந்த அவன் முதுகையே புன்னகையுடன் பார்த்தாள்..
++++++++++++++++++++
 




Last edited:

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
ஊருக்கு ஒதுக்குப் பறத்துல இருக்கற டாஸ்மாக் பார்.. அதிகம் வெளிச்சமில்லாத அந்த இருட்டு மூலை டேபிள்ல சக்தி ! குடியகம்னு அவன் கிண்டலாச் சொல்ற டாஸ்மாக் பார்ல கூட புத்தகமும் கையுமா உக்காநதிருப்பவன் இன்னிக்கு வெறுங் கையா எங்கியோ வெறிச்சுப் பாத்துக்கிட்டு இருந்தான்..


சாதாரண நாள்லயே யாரு கூடவும் பேசாதவன் இன்னிக்கு மனசு பூரா அவ இருந்ததால புத்தகத்தையும் மறந்து யோசனைல இருந்தான்....
மதியமானா இங்க வந்துடுவான்.. அப்புறம் மிச்ச நாளு பூராவுமே போதை காட்டும் பாதை தான்..

மான்யா.. மனு.. தங்கம்.. காஞ்னா.ன்னு தன் வாயாலயே எத்தன பேரு வச்சுக் கூப்பிட்டான்?
ஒரு மாதிரி கோவமும் வெறுப்பும் கலந்த உணர்வு.. டம்ளர்ல இருந்தத வேகமா எடுத்து குடிச்சுட்டு சிகரெட்டப் பத்த வச்சு யோசிச்சான்..
ஏன் மனு.. உனக்கு இப்படியொரு எண்ணம் உண்டாகற மாதிரி எப்பவாவது உங்கிட்ட நடந்திருக்கனா? எத வச்சு என்ன லவ் பண்றே?என்னால உன் வாழ்க்கை பாழாகுமே தவிர என்னிக்குமே மேல வராதே?


டேபிள் மேல இருந்த செல் போன வெறுப்பா பாத்தான்.. அதுல தான் அந்த வாய்ஸ் கால் ரெக்கார்டர் இருக்கு.. அவ பிரண்ட் நிர்மலா அவனுக்கு அனுப்புனது.. அவள இவனுக்கு நல்லாத் தெரியும்.. பல தடவ இவன் இருக்கும் போது மான்யா வீட்டுக்கு வந்திருக்கா.. போன வாரம் வந்திருந்த போது வலிய வந்து வாட்ஸ் அப்,செல் நம்பரக் கேட்டு வாங்கிட்டுப் போனா.. அதுக்குப் பின்னால இவ்வளவு பெரிய பூகம்பம் இருக்கும்னு அப்ப சக்தி ஆயிரத்துல ஒரு பங்கு கூட கற்பனை பண்ணிப் பாக்கலை..


ரெண்டு நாளைக்கு முன்ன இவன் வீட்ல இருந்த போது அந்த அலை பேசி அழைப்பு.. எடுத்து பாத்தான்.. புது நம்பர்.. யாரிதுன்னு யோசிச்சுக்கிட்டே அட்டெண்ட் பண்ணினான்..


“ஹலோ….”


“நான் நிர்மலா தேவி பேசறேன்”

‘’நிர்மலா…?? ஸாரி.. நீங்க தப்பான நெம்பருக்கு கால் பண்ணி இருக்கீங்க.. அந்தப் பேர்ல யாரையும் எனக்குத் தெரியாது……”


அவசரமாய் இடை வெட்டியது எதிர் குரல்..


“மிஸ்டர் சக்தி.. தயவு செஞ்சு கட் பண்ணிடாதீங்க.. நான் மான்யோவோட பிரண்ட் நிர்மலா.. சென்னை ! போன வாரம் கூட அங்க வந்திருந்திப்ப உங்க கிட்ட நம்பர் வாங்கினனே? அந்த நிர்மலா.. வாங்கிட்டு உங்களுக்கு மிஸ்டு கால் விட்டு ஷேவ் பண்ணிககச் சொன்னேன்”


“ஓ.. ஸாரி.. நான் அதப் பண்ணல.. தேவை இல்லைங்கறதால…”


படாரென்று கன்னத்தில் அறை வாங்கியது போல் சில நொடிகள் எதிர் பக்கம் மௌனம்.. பின் தொடர்ந்து பேசினாள்..


‘’கரெக்ட்.. சென்ட் பர்சன்ட் கரெக்ட்..நான் தேவையில்ல தான்.. அப்ப என் வேலை உங்க கிட்ட ஈஸியா முடிஞ்சுடும்னு நெனைக்கறேன்… நான் இப்ப என் வாட்ஸ் அப்புக்கு வந்த வாய்ஸ் கால் ரெக்கார்டர் ஒண்ண உங்களுக்கு அனுப்பி வெக்கறேன்.. தயவு செஞ்சு பொறுமையா கேட்டு நல்ல முடிவா எடுங்க..அதாவது அவளுக்குச் சாதகமான நல்ல முடிவா… நியாயமா அவ இத உங்களுக்கு அனுப்பி இருக்கணும்.. அட்ரஸ் மாத்தி எனக்கு அனுப்பிச்சுட்டான்னு நெனைக்கறேன்..
என்னக் கேட்டா உங்களுதுமே ராங்க் அட்ரஸ் தான்னு சொல்லுவேன்.. நான் ஓப்பனாச் சொல்றத நீங்க தப்பா எடுத்துக்கிட்டாலும் சரி.. மிஸ்டர் சக்தி! இப்பவும் சொல்றேன்.. பொறுமையா யோசிச்சு நல்ல முடிவா எடுங்க.. ஆனா, அவளோட எதிர் காலத்துக்கு டேமேஜ் வராத அவளுக்கு.சாதகமான முடிவ எடுப்பீங்கன்னு நம்பறேன்.. ரெண்டு நாளு கழிச்சுக் கூப்பிடறேன்.. உங்களோட அந்த சாதகமான முடிவுக்காக.. கவனிங்க.. அவளோட பியூச்சருக்கு ஷேப்டியான முடிவுக்காக.. வச்சுடறேன்.. தேங்க்யு மிஸ்டர் சக்தி..”


அடுத்த நொடி கட் பண்ணிட்டா.. இவனுக்கா கோவம்னா கோவம்.. என்ன எழவுடா இது தலையும் புரியாம வாலும் புரியாம.. அவ !..அவ…!! அவ !!! அடக் கருமாந்திரமே.. எவ அவ? எவளுக்குச் சாதகமா நான் முடிவெடுக்கணும்..என்ன ‘ம’னாவுக்கு எடுக்கணும்? அப்படி அவங்க வாழ்க்கையப் பாதிக்கற அளவுக்கு தெருக்கமா பழகற பொண்ணுங்க எதுவும் நம்ம லிஸ்ட்லயே இல்லையே?


அவன் யோசனையக் கலைக்கற மாதிரி வாட்ஸ் அப் மெசெஜ் டோன்.. அவசரமா ஓப்பன் பண்ணிப் பாத்தான்.. அவளே தான்.. நிர்மலா ! ஒரு வாய்ஸ் கால் ரெக்கார்டர அனுப்பயிருக்க இவன் உடனே இயர் போன மாட்டி அத ஆன் பண்ணிக் கேட்டான்…


“ஹாய் நிரு.. காலைல நீ ’என்னடி .. எப்பப் பாத்தாலும் சக்தி புராணமே பாடிக்கிட்டிருக்கே.. விட்டா டெண்டுல்கர் மாதிரி ‘சக்தி ஈஸ் சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி’ன்னு சொல்லுவியோ என்னவோ? பீ பிராங்க் மான்யா.. அந்தாள லவ் பண்ற ஐடியா இருந்தா அதும் மேல அஞ்சு லிட்டர் ஆசிட்ட ஊத்தி அழிச்சுடு.. அவன் உனக்கானவனில்லை.. குடி காரன்.. அத விடு.. பொம்பள விசயத்துல சுத்த மோசம்.. சரி! அதையும் விடு.. சொல்லிக்கற மாதிரி ஒரு நல்ல குணமாவது அவங் கிட்ட இருக்கா?'ன்னு கேட்டதும் டக்குனு கட் பண்ணிட்டேன்..
ஏன்னா,பக்கத்துல அம்மா இருந்தாங்க.. அவங்க முன்னால பேச முடியாதுங்கறதால மட்டுமில்லடி.. அது அஞ்சு நிமிசத்துல சொல்லி முடிக்கற விசயமில்லேன்னு தான் கட் பண்ணினேன்.


இபபச் சொல்றேன் கேளு...யெஸ்! சக்திய நான் லவ் பண்றேன்.. இந்த உலகத்துல உள்ள எந்த ஒரு உறவையும் விட அவன் மேல காதலா இருக்கேன.. எங் காதல நீ..என் குடும்பம்.. இந்த சமூகம் ஏத்துக்காதது மட்டுமில்ல.. என் சக்தியே ஏத்துக்க மாட்டான்..


எல்லாக் காதலனும் லவ்வச் சொன்னா கட்டிப் புடிச்சு முத்தங் குடுத்தா என் சக்தி ஒரே அறைல கொன்னுடுவான்.. முரடன்... முன் கோபி..குடி காரன்.. கல்யாணமே வேண்டாம்னு இருக்கறவனும் கூட!
ஆனால்,இதெல்லாம் பாத்து வர்றதா காதல்?எத்தன தடுத்தும் வருதேடி?

அவன மனசுல வச்சுட்டு இன்னொருத்தனக் கல்யாணம் பண்ணி அவங் கூட படுக்க என்னால முடியாது.. ஏன்னா...எம் மனசு பூரா என் சக்தி..அப்ப அவனுக்குத் துரோகம் பண்றேன்.. கட்டிக்கிட்டவனுக்குத் துரோகம் பண்றேன்...கடைசியா எனக்கே துரோகம் பண்ணிக்கறேன்..
ஒரு துரோகத்தையே வெறுக்கற நான் ஒரே டைம்ல என்னால மூணு பேருக்குத் துரோகம் பண்ண முடியாது..அவன் எப்பேர்ப் பட்ட ஆளு தெரியுமா?............................................. . ………… ……… ……......”

அதுக்கு மேல மனு சொன்னது எதுவுமே அவன் காதுல ஏறலை… மொத தடவை கேட்ட போது இந்த வரிக்கப்புறம் அப்படியே ஐம்புலன்களும் ஒடுங்கி உறைஞ்சுட்டான்.. ஒன்றரை மணி நேரம் ஓடினதுல கடைசியா இந்த சில வரிகள் அவனையுமறியாமல் அவன் மனசத் தொடட்டது..


“பிருந்தாவனத்துல இருந்து கண்ணன் துவாரகைக்கு புறப்பட்டுப் போறான். எல்லாக் கோபியரும் அழுது புலம்பி விழுந்து கண்ணனை 'போகாதே கண்ணா.. எங்கள தவிக்க விட்டுப் போகாதேன்னு தடுக்கிறாங்க.. ஆனால்,ராதை மட்டும் ஒரு சொன்றை மரத்தின் மேல் சாய்ந்த படி சொல்கிறாள்..
ஓ கோபியரே... கண்ணனைத் தடுக்காதீர்கள்..அவன் போகட்டும்.. நமக்கு கண்ணனே உலகம்.. ஆனால், அவனுக்கோ உலகமே அவனுடையது.... உலகை உய்விக்க கண்ணண் போகட்டும் ! ஒரு நாள், இந்தப் பிருந்தாவனம் அழியலாம்.. துவாரகை அழியலாம்... நானும் அழியலாம்..ஏன்? கண்ணனே அழியலாம்.. ஆனால் , நாம் அவன் மேல் கொண்ட பிரேமை மட்டும் அழியாது.. அது அகிலமனைத்தும் அவனின் குழலின் நாதமாய் காலமெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கும்... ஏனெனில், நமக்குச் சாவுண்டு.. நம் பிரேமைக்கு என்றுமே மரணமில்லை
இங்கு அவன் கண்ணன்... நான் ராதை..என் பிரேமை ஒலித்து உலகையே சாந்தப் படுத்துமே தவிர அவன் காதை அடையாது.. எல்லா பிரேமைகளும் சம்பந்தப் பட்டவனின் காதை அடைவதில்லை.."
(தொடரும்..
 




Last edited:

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
நான் தான் first welcome பண்ணேன் டாடி
எப்படி இருக்கு சௌதாரிணி மேடம்....

உடனடியாக கருத்து கூறவும்....ரொம்ப அவசரம்....!!!
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
எப்படி இருக்கு சௌதாரிணி மேடம்....

உடனடியாக கருத்து கூறவும்....ரொம்ப அவசரம்....!!!
மகளே சௌ சௌ...சொல்லும்மா
 




Arivukodi

நாட்டாமை
Joined
Feb 14, 2018
Messages
23
Reaction score
78
Location
Bangalore
தேவண்ணா..செம பதிவு. ..சக்தி, மான்யா அள்ளுது...கண்ணன் மேல் கொண்ட பிரேமை. சான்ஸே இல்லை... மான்யாவின் காதல் எந்த வித எதிர்பார்பும் இல்லாதது..கண்டிபாக நிறைவேறும்
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
தேவண்ணா..செம பதிவு. ..சக்தி, மான்யா அள்ளுது...கண்ணன் மேல் கொண்ட பிரேமை. சான்ஸே இல்லை... மான்யாவின் காதல் எந்த வித எதிர்பார்பும் இல்லாதது..கண்டிபாக நிறைவேறும்
இதுல கொஞ்சம் கற்பனையோட உண்மை பெரும் பகுதி தங்கம்.. முடிவத் தான் உண்மையா முடிக்கறதா இல்ல கற்பனையக் கலக்கறதான்னு தெரியல..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
மகளே சௌ சௌ...சொல்லும்மா
உனக்கு தமிழ் வருசப் பிறப்பிற்கு பொடவை எடுத்துடலாம் தங்கம்
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
நான் தான் first welcome பண்ணேன் டாடி
வாடா தங்கம்... நீ மொத ஆளா வந்தாத் தான் என் வீடே பளிச்னு வெளிச்சமாகுது.. நீ அம்மாவோட அம்சமாச்சே !!!
 




Last edited:

Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
டாடி ரொம்ப ரொம்ப சூப்பர் யா இருக்கு..... அதுவும் different யா இருக்கு..... பொறுக்கி தான் good girl லை லவ் பண்ணி torture பண்ணுவான்....ஆனா இங்க good girl பொறுக்கி யை லவ் பண்ணுற அதுவும் சொல்லமே..... சூப்பர் ஓ ஸுபேர்.....

டாடி அப்புறம் ஒரு சின்ன request spelling mistake கொஞ்சம் இருக்கு.....

சரியான குரு கிட்ட குடுத்து correction பண்ணுங்க......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top