• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
puyalai thangam nanalai aval nice epi sago:):):):):)ella narkunangalai konda motha uruvam than sakthiya..:rolleyes::rolleyes::rolleyes::rolleyes:....... avalukku naama venamnu ninikiran parunga anga nikiran sakthi.....namma manasilayum
நன்றிங்க சகோ..
 




Bharu

மண்டலாதிபதி
Joined
Feb 8, 2018
Messages
103
Reaction score
272
Location
US
தெளிஞ்சா பக்கத்துல நின்னு பேச முடியுமா ன்னு யோசிச்சுக்கோ செல்லம்.... மப்புலையாவது காது கொடுத்து கேட்பான்... தெளிஞ்சா உதை உறுதி.... ஹா...ஹா...ஹா
Appo thaniya oothi vittu vachu seivom?????
 




Akila saravanan

இணை அமைச்சர்
Joined
Oct 12, 2018
Messages
586
Reaction score
662
Location
Sattur
Super epi
அவன்.. மனுவின் அவன் வந்த போது டேபிள் மேல உக்காந்துக்கிட்டு ஒரு திரைச் சீலைக்கு எம்பிராய்டரி போட்டுக்கிட்டிருந்தா... அது தன்ன இயல்பா இருக்கற மாதிரி காட்டிக்கத் தான் ! அவங் கிட்ட சண்டக் கட்டறதும், கண்ணீர் விடறதும் சுத்த மடத் தனம்.. அது அவளுக்குமே பிடிக்காது.. அதனால வெறப்பா, வீம்பா இருக்கறதுங்கற முடிவுல இருந்தா... சக்தி கிட்ட நாசூக்கு,டீஸண்ட் எல்லாம் செல்லுபடி ஆகாத ஒண்ணு..

வேகமா வந்து செருப்பைக் கழட்டியவன் உள்ள போகாம நெலைப் படியில் சாஞ்சு நின்னு மனுவ.உத்துக் கவனிச்சான்.. நிமிந்து பாத்ததும் தனக்குள்ள சுரீர்னு ஒரு பயப் பந்து அடி வயித்துல இருந்து உருண்டு வந்து தன் தொண்டைக் குழிய அடைச்சத உணர்ந்தா.. கண்ணப் பாத்தாலே தெரியுது நல்ல போதைல இருக்கறது.. சின்னதா சிரிச்சுக்கிட்டே சொல்றா..

"வா வா.. தனியா போரடிக்குதேன்னு பாத்தேன்.. உனக்கொண்ணு தெரியுமா? நீ நூறடிக்கு அந்தப் பக்கம் புல்லட்ல வந்தாலும்,நடந்து வந்தாலும் எம் மனசு பரபரத்துச் சொல்லும் 'ஹேய்... சக்தி பக்கத்துல எங்கியோ இருக்கான்டி'ன்னு.. ஜன்னல் வழியாப் பாப்பேன்.. ரெண்டு நிமிஷத்துல பைனான்சுக்கு போவே.. அப்படி இல்லன்னா டீக் கடைல அப்பா கூட அரட்டை அடிச்சிட்டிருப்பே.. நேரா பைனான்சுக்குப் போகாம எஞ் ஜன்னல் கிட்ட வண்டி ஸ்லோவானா இங்க தான் வர்றேன்னு புரிஞ்சுக்குவேன்.."

பல தடவ தன்னைப் பத்தி இப்படி வேற சில விசயங்களும் பேசி இருக்கறத சக்தி கேட்டிருக்கான்... ஆனா,அதப் பத்தி அப்பெல்லாம் வேற மாதிரி யோசிச்சதே இல்ல... பாட்டில எடுத்து டேபிள் மேல வச்சுட்டு "அதெல்லாம் ஒண்ணுமில்ல.. பத்துல ரெண்டு தடவ இந்த மாதிரி எதிர் பார்ப்புகள் பலிக்க சான்ஸ் இருக்கு.. நாம பலிக்காத எட்டு சான்ஸையும் விட்டுட்டு பலிச்ச ரெண்ட மட்டும் கெட்டியாப் புடிச்சுட்டுத் தொங்கறோம்"னு சொல்லிட்டு உக்காந்து தன் யோசனைல ஆழ்ந்துடுவான்...ஆனா இப்ப? பியூட்டி பார்லரைக் காணாமையே பிறை நிலா புருவத்துக்குக் கீழ தெரிஞ்ச அந்த ரெண்டு கண்ணுலயும் அவ லெட்டர்ல சொன்ன அந்த மகத்தான பிரேமை பிரவாகமா பொங்கறத அன்னிக்குப் பாத்து மூச்சு தெணறிப் போனான்..

அதுல துளியும் கள்ளங் கபடம்,காமமற்ற அப்பட்டமான பிரேமை..இத எப்படி இத்தன நாளா கவனிக்காம விட்டோம்?னு அலுத்துக்கற போதே அந்தப் பார்வை அவன் மனச நெகிழ வச்சுது..தலைய உலுக்கிக்கிட்டே மடில இருந்து பிராந்திப் பாட்டிலை எடுத்தவன் மூடிய வேகமாகத் திருகி பாதிய அண்ணாந்து அடிச்சுட்டு மீதிக்கு மறுபடியும் மூடி போட்டு மடில வச்சுக்கிட்டு பாக்கெட்ல இருந்து சிகரெட் எடுத்துப் பத்த வச்சான்..

மனு மனசுல ஆயிரம் கலவரம் இருந்தாலும் துளியும் அத முகத்துல காட்டாம அவனப் பாத்தா.. அவங் கண்ணு ரெண்டும் தீப் பிழம்பா ஜொலிக்கறது போதைனால மட்டுமில்லைன்னு அவளுக்குப் புரிஞ்சு போச்சு.. எது நடந்தாலும் பெருசா நடக்கும்.. அதுக்கு நாம தயாரா இருந்துக்கணும்னு தன்னத் தயார் படுத்திக்கிட்டா..

சக்தி நாலு தம் இழுத்து ஊதினதுமே முந்தின போதையோட இதுவும் ஏற மனசு இன்னும் வெறியாச்சு .... அடுத்த தம்ம இழுத்து ஊதிக்கிட்டே சொன்னான்..

"உன்ன ரொம்ப புத்திசாலின்னு எப்பவுமே எனக்கொரு நெனப்புண்டு மனு.. ஆனா,நீ கூட மடத் தனமான காரியம் பண்ணுவேங்கறது தெரிஞ்சு வந்த ஆச்சரியத்த விட அதிர்ச்சி இருக்கே... நான்சென்ஸ்... "

மனுவுக்கு ஏழரை ஆரம்பமாகறது புரிய அத வெளிக் காட்டிக்காம புன்னகை மாறாமையே பதில் சொன்னா..

"என்ன ஒளர்றே.. ஓவரா அடிச்சிடிருக்கியோ?"

"நான் குடிகாரன் தான் மனு.. ஆனா,உன்ன மாதிரி முட்டாள் இல்ல.. ஒளர்றது நானா,நீயா?"

"சொல்றதப் புரியற மாதிரி சொன்னீன்னா யார் முட்டாள்ங்கறத அப்புறம் முடிவு பண்ணிடலாம்"

"இதுக்கு என்னடி அர்த்தம் வடி கட்டின முட்டாளே?"

கோவமா தம் பாக்கெட்ல இருந்து செல் போன எடுத்து நிர்மலா கிட்ட அவ பேசுன கால் ரெக்கார்டர ஆன் பண்ணி விட்டான்.. அவ உருகி உருகிப் பேசினது தான்.. ஆனா, அத ரசிக்கற சந்தர்ப்பம் இது இல்லையே ? உள்ள இருக்கறத துளியும் முகத்துல காட்டிக்காம இயல்பா சொன்னா..

"சாகற வரைக்கும் இத யாரு கிட்டயும்.. ஏன்?உங்கிட்ட கூட சொல்லக் கூடாதுன்னு இருந்தவள,'சக்திய லவ் பண்றியாடி?'ன்னு அவ கேட்ட கேள்வி மனச உசுப்புனதால செஞ்ச பைத்திய காரத் தனமிது! லெட்டர்,போன்,நேர்லன்னு அவ கிட்ட,'இதப் பத்தி யாரு கிட்டயும் சொல்லாதே'ன்னு ஐநூறு தடவ கெஞ்சி இருப்பேன்.. ஆனா,அந்தப் பைத்தியகாரி முக்கியமா யாரு கிட்டச் சொல்லக் கூடாதோ..அங்கியே..உங் கிட்டவே சொல்லிட்டா......."

மேற்க் கொண்டும் அதக் கேக்கச் சகிக்காதவனா சக்தி குறுக்க புகுந்து உறுமலாக் கேட்டான்..

"இந்த ஈர வெங்காய விளக்கம் எல்லாம் எனக்கு வேண்டாம்.. இதுக்கு என்ன அர்த்தம்?"

அவன் போன ஆப் பண்ணி கைல வச்சு ஆட்டிக்கிட்டே கேக்க மனு ஆச்சரியமா அவனப் பாத்துக்கிட்டே சொன்னா..

"என் சக்தியால இதக் கூடப் புரிசுக்க முடியலைங்கறது ஆச்சரியமா இருக்கு"

'என் சக்தி'ங்கற ரெண்டு வார்த்தை அவன ஆத்திரத்தோட உச்சிக்கே கொண்டு போக ரெண்டே எட்டுல உள்ள போயி அவ எதுக்க நின்னு அவ கண்ண உத்துப் பாத்துக் கேட்டான்..

"இந்த முட்டாளுக்கு பரியாம தான் உன்ன விளக்கம் கேக்கறேன் வடி கட்டின முட்டாளே..சொல்லுடி... இதுக்கு என்ன அரத்தம்?"

அவளோ டேபிள விட்டு எறங்கி அதே பிரவாகமா பொங்கற பிரேமையோட அவன்.கண்ணப் பாத்துக்கிட்டே லேசா தோளக் குலுக்கிச் சொன்னா..

"வெரி சிம்பிள் மை டியர் சக்தி... ஐ...ல......வ்வ்வ்வ் யூ..ஊஊஊஊ"

அடுத்த நொடி இடியா அவ வலது கன்னத்துல எறங்குச்சு அவன் அறை.. இதத் துளியும் எதிர் பாக்காத அவ வேகமா செவுத்துல மோதி குப்புற உளுந்தா... ஆனா,துள்ளி எழுந்து அடி வாங்கின கன்னத்துல கைய வச்சுக்கிட்டு அவனையே பாக்கறா... அதுல கோவமோ,வெறுப்போ துளியும் இல்ல..கண்ணீர் பொங்கலை.. அதே பிரவாகப் பிரேமை..

அவன் ஆத்திரம் குரூரமாவே மாற ஆவேசமா மடில இருந்த மிச்ச சரக்கையும் எடுத்து வேகமா அடிச்சு பாட்டில எட்ட இருந்த செவுத்துல ஓங்கி அடிக்க அது வெடிச்சுச் செதறி அந்த ரூம் பூரா கண்ணாடிச் சில்லுகளாப் பரவுச்சு..சிகரெட்ட கடைசியா ரெண்டு தம் அவசரமா இழுத்துட்டு ஆத்திரமா கால்ல போட்டுத் தேய்க்க ஒரு சுரீர் வலி... அலட்சியம் பண்ணிட்டு நிதானமா கைய நெஞ்சுல கட்டிட்டு அவளப் பாத்து அழுத்தமா கேட்டான்

"கமான் பேபி...இப்பச் சொல்லு.. இதுக்கு என்ன அர்த்தம்?"

அவ லேசா சிரிச்சுக்கிட்டே சொன்னா...

"அறை சாதரணமானதில்ல சக்தி.. இன்னும் கண்ணுல பொறிக் கட்டுது.. பட்,மை டியர் சக்தி.. இதெல்லாம் கடை வீதில உன் வீரத்தக் காட்டவும், உன் எதிரி கிட்டவும் வேண்ணா யூஸ் ஆகலாமே தவிர என் உசுருக்கு மேலா உன்னக் காதலிக்கற எங்கிட்ட கிரிமினல் வேஸ்ட்.. இப்பவும் முன்ன சொன்னத விட அழுத்தமாச் சொல்லுவேன்.... ஐஐஐ........."

முடிக்க விடல அவன்.. "கொன்னே போடுவேன்"ன்னு சொல்லிக்கிட்டே அடுத்த கன்னத்தில் இறக்கினான் அனல் பொறி பறக்கும் அறையை.. இந்தத் தடவ அவ இத எதிர் பார்த்திருந்ததால அறை விழுந்த வேகத்துக்கு தல திரும்பி லேசா ஒடம்பு தடுமாறுச்சே தவிர அடுத்த நொடியே சுதாரிக்கிட்டு ஸ்டெடியா நின்னு கம்பீரமா கையக் கட்டிக்கிட்டு அவனப் பாத்து அழுத்தமாச் சொன்னா...

"அடிச்சுக் கொல்ல லேட்டாவும் சக்தி.. அதோ தாவாரத்துல அப்பா நெய்த் தேங்காய் ஒடைக்க சபரி மலைக்குக் கொண்டு போற அருவா இருக்கு... அத எடுத்துக் கண்டந் துண்டமா வெட்டியே போடு.. ஆனா,அந்த ஒவ்வொரு சதைத் துண்டும் உங்கிட்டச் சொல்லும்.. "ஐ லவ் யூ மை டியர் சக்தி..டன்ஸ் ஆப் ஐ லவ் யூ'ன்னு"

அவள அறைஞ்சுட்டு அதே வேகத்துல சிகரெட் எடுத்துப் பத்த வெச்சவன் அவ சொன்னதக் கேட்டு அதிர்ச்சியாயி அவளப் பாத்தவன் இன்னும் அதிர்ச்சியானான்...

ஏன்னா,அவ சில்லி மூக்கு ஒடைஞ்சு ரத்தம் வழிஞ்சிக்கிட்டிருக்க அவ மாம்பழக் கன்னம் ரெண்டுலயும் கறுப்பாய் அவன் கை விரல் தடங்கள்..

(தொடரும்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top