• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
காதல் நீலாம்பரி 5
__________________________

சக்தி அவளின் அந்தக் கேள்விக்கு அதிர்ந்தே தான் போய் விட்டான்.. விசயத்தை முழுக்கவும் அலசி தெளிவாய் உள்ள ஒருத்தியால் மட்டுமே இப்படிப் பட்ட கேள்வியை எதிர் கொண்டு பதில் சொல்ல முடியும் என்பதை அவன் உணர்ந்தே இருந்தான்.. ஆனால்,தன்னையே வாயடைத்து மலைத்துப் போக வைக்குமளவுக்கு மனு இப்படியொரு பதிலை கேள்வியாய் வீசுவாள் என அவன் துளியும் எதிர் பார்க்கவில்லை..

மனு மாதிரி ஒரு பொண்ணோட காதல் கிடைக்கறது ரொம்பவே பெரிய விசயம்.. வரம், குடுப்பினைன்னு எத்தனையோ சொல்லலாம்.. ஆனா,அந்த வரத்துக்குத் தகுதியுடையவனா ஒருத்தன் இருக்கணுமில்லையா? அந்தத் தகுதி தனக்கு இருக்காங்கறதே அவன் கேள்வி..

இந்தக் காதல் இருக்கே? அது அப் நார்மல் மேட்டர்.. நார்மலா யதார்த்தம் யோசிக்கறவன் உருகி உருகி காதலிக்க முடியாது.. நீ இல்லேன்னா வாழ்க்கையே இல்லேன்னு உளற முடியாது.. லெட்டர் எழுதி வச்சுட்டுச் சாக முடியாது.. சாவுக்கு கொஞ்சம் முன்ன ஆக்ரோசமா காமம் வச்சுக்க முடியாது..

காதலும் காமமும் இன்னொரு முறை வாழும் துடிப்பு.. தனக்கான, தன் சாயல் உள்ள வாரிசை உருவாக்கும் முனைப்பு.. அந்தத் துடிப்பும், முனைப்பும் இருக்கைல சாவு ஏன்? சாவப் பத்தி யோசிக்கறவனுக்கு மொதல்ல சிந்தனை செத்துப் போயிடுது.. அல்லது சாவுங்கற புள்ளிலயே சிந்தனை மரத்து நின்னுடுது..

காதலிக்கற எல்லாருமே.. அது ஆணோ,பெண்ணோ.. குறைகளப் பத்தி யோசிக்கறதே இல்ல.. கண்ணுல படற குறைகளையும் இவங்களா நிறைகளாக்கிடறாங்க..
காதலிக்கற போது போட்டுக்கறது பெரும் பாலும் ஜெண்டில் வேசங்களே.. கல்யாணத்துக்குப் பின்னால அந்த வேசங்கள் பல்லிளிக்கும் போது விவாக ரத்தில் முடிகிறது..

மனு அற்புதமான பொண்ணு.. அறிவோட அழகும் சேர்ந்த அபூர்வ சிருஷ்டி.. அந்த அற்புதம் தன்னால சிதையணுமா? இருக்கற தீவிரத்துக்கு இவ அவ்வளவு சுலபத்துல இதுல இருந்து பின் வாங்கப் போறதில்லேன்னு அவனுக்குத் தெளிவாப் புரியுது.. ஆனா,எப்படிக் கையாண்டா இந்த விசயம் தனக்குச் சாதகமா முடியும்ங்கறது தான் அவனுக்குத் தெரியல..

சில்லி மூக்கு ஒடைஞ்சு ரத்தம் கொட்ட நிக்கைலயும் 'ஐ லவ் யூ' சொல்றவள அதுக்கு மேல என்ன பண்ணிட முடியும்?சரி.. புத்தியால அடிக்கலாம்னு 'உன்னோடது காதல் இல்ல.. உடம்பு வெறி'ன்னு பச்சையா தாக்குனா 'அப்ப எப்ப வெச்சுக்கலாம்?'னு கேக்கறவ கிட்ட தங் கிட்ட பதில் இல்லையேன்னு சக்தி அசந்தது உண்மை தான் ! அதுக்காக இதச் சரின்னு ஏத்துக்கற மன நிலையும் அவனுக்கில்லாததால அவளப் பாத்து சிரிச்சுக்கிட்டே கேட்டான்..

"அர்த்தம் புரிஞ்சு தான் இந்தக் கேள்வியக் கேக்கறியா மனு?"

மனு அசர வில்லை.. அவன் இன்னும் பெரிதாய் ஏதோ திட்டமிட்டு தன்னை உரையாடலுக்குள் இழுக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தே இருந்தாலும் எதிர் கொண்டேயாக வேண்டிய கட்டாயத்தில் சளைக்காமல் பதில் சொன்னாள்..

"ஆனானப் பட்ட அற்புதமான மனசையே உனக்கு அர்ப்பணிச்சுட்டேன் சக்தி.. ஆனா, நீ கேவலம் மண்ணோ,தீயோ திங்கற ஒடம்போட வெறிங்கறே.. சரி! அதையும் பாத்துடலாமே? ஒரு சில தடவைங்க உங் கூட படுத்து எந்திரிச்சா அந்த வெறி அடங்கிடுமில்லையா?"

"இப்படிப் பேச உனக்கு வெக்கமா இல்லையா?"

"ஊர்ல,சபைல பேசறதுன்னா நிச்சயமா வெக்கமென்ன?கேவலமா நெனைப்பேன்.. உங் கிட்டப் பேசறதுல என்னடா வெக்கம்? உனக்கொண்ணு தெரியுமா? என்னோட கனவுக் கற்பனைல உங் கூட பல தடவ படுத்து நமக்கு நாலு வயசுல ஒரு கொழந்தை கூட இருக்கு.. ஆண் கொழந்தை.. இப்ப அதுக்குப் பேரு வச்சு ஸ்கூல்ல சேத்தணும்.. என்ன பேரு வெக்கலாம்... சொல்லு?'

சக்திக்கு இன்னூமொரு அதிர்ச்சி ! பட படப்பா கேட்டான்...

"உனக்குப் பைத்தியமா மனு? நாலு வயசுல கொழந்தைன்னா... எத்தன வருசமா என்னக் காதலிக்கறே?"

'தெரியல சக்தி.. ஐ திங்க்.. உம் முன்னால நான் பெரியவளா மலர்ந்தனே.. அந்த நொடியாக் கூட இருக்கலாம்.. அப்பா,அம்மா சண்ட பத்தி உங் கிட்ட பேச வந்தனே.. அந்த நொடியாவும் இருக்கலாம்.. இன்னும் டீப்பாச் சொல்லணும்னா உன் கூடப் பழகுன பத்து வருசத்துல ஒவ்வொரு நொடியும் உனக்கானதா இருக்கலாம்.. ஆனா,அதக் காதல் தான்னு தெளிவா புரிஞ்சு வேண்ணா அஞ்சு வருசமாச்சு.. உன் பாட்டி செத்த விசயம் தெரிஞ்சு துக்கம் விசாரிக்க உன் வீட்டுக்கு வந்த போது சொன்னியே? 'அம்மா,அப்பாங்கற பிம்பங்களே எனக்கு ஞாபகமில்ல மனு.. ஆனா, ஒரு நாளும் என்ன அனாதையா நெனச்சு ஏங்கினதில்ல.. அந்த அளவுக்கு என் பாட்டி எனக்கு எல்லாமா இருந்தாங்க.. இப்ப வேண்ணா நான் அனாதையா ஃபீல் பண்றேன்'னு சொன்ன போது பதில் சொல்லாம மரமா நின்னேன்.. ஆனா, மனசு எப்படித் துடிச்சுது தெரியுமா? அப்படியே உன்ன இழுத்து நெஞ்சுல சாச்சு தல தடவி 'அப்படிச் சொல்லாத சக்தி.. நான் ஒருத்தி இருக்கற வரைக்கும் என்னிக்கும் நீ அனாதையில்ல'ன்னு சொல்லத் துடி துடிக்குது.. அந்த நொடி தெரிஞ்சுக்கிட்டேன் சக்தி.. இது வெறும் பிரெண்ட் ஷிப் மட்டுமில்ல.. அதுக்கும் மேலேங்கறத..."

அவளோடுப் பேச பேச சக்திக்கு ஒவ்வொரு வார்த்தையும் அணு குண்டாகவே தெரிந்தது .. அடுத்ததா என்ன குண்டப் போடுவாளோங்கற பயம் கூட வந்தது.. பொண்ணுங்கள அவ்வளவு சீக்கிரம் புரிஞ்சுக்க முடியாதுன்னு சொல்றது உண்மை தானோன்னு.அவனுக்குத் தோணுச்சு..

ஏன்னா... பத்து வருசமா எல்லாத்தையும் மனம் திறந்து பேசும் மனு தன் மேல அஞ்சு வருசமா காதல வளர்த்துக்கிட்டு வர்றாங்கறத தன்னால துளி கூட யூகிக்க முடியலியே?இல்ல.. காரணம் அது இல்ல.. இந்த அஞ்சு வருசமா மத்தவங்களக் கூர்ந்து கவனிக்காம தன் வேதனையே பெருசுன்னு இருந்ததே இதுக்குக் காரணம்னு நெனச்சுக்கிட்டவன் அவள மடக்க அடுத்த கேள்விய வீசினான்

"ஆனா மனு.. இந்தக் காதல் ஈடேறாதுங்கறத உம் மனசு உனக்கு சுட்டிக் காட்டவே இல்லையா?"

'நல்லாவே... பல தடவ.. ஆனா,காதல் மனசு அதக் காதுல வாங்குனாத் தான?உண்மையும்,உறுதியுமிருந்தா இந்தக் காதல் ஜெயிக்கும்னு ஜபம் பண்ணிக்கிட்டிருந்துச்சு.. என் ஒரு கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்ல சக்தி"

சக்திக்கு லேசாய் எரிச்சல் வந்தது.. பின்ன என்ன? பதிலே சொல்ல முடியாத கேள்விகளா கேட்டு மடக்கி அவள மூச்சுத் திணற வெக்கணுங்கற சங்கல்பத்தோட அவன் உக்காந்ததென்ன?இப்ப அவன் பதில் சொல்ல முடியாம திணறுமளவுக்கு அவன் வார்த்தைகளையே அவனுக்கு எதிரா திருப்பின அவள் மாயமென்ன? சரி.. இறங்கின ஆட்டத்த கடைசி வரைக்கும் தனக்கு சாதகமா ஆடற முடிவோட கேட்டான்..

"சீரியஸாத் தான் கேக்கறியா மனு?"
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
கல கலன்னு சிரிச்சுட்டுச் சொன்னா..

"இந்த விசயத்துல யாராச்சும் காமெடி பண்ணுவாங்களா என்ன? அதுவுமில்லாம நீ 'பச்சையாச் சொன்னா இது ஒடம்பு வெறி'ன்னு சொன்னது சீரியஸ்னா நாங் கேட்டதும் படு சீரியஸ் தான்"

சக்தி சில நொடிகள் யோசிச்சுட்டு அப்புறமாச் சொன்னான்..

"அப்ப எந்திரிச்சு கொஞ்சம் தள்ளி எதுக்க நில்லு தங்கம்"

மனு குழம்பிப் போனாள்.. 'இது என்ன மாதிரியான அட்டாக்?' அதை வாய் விட்டுக் கேக்கவும் செஞ்சா..

"எதுக்கு...?"

"நீ சொன்னியே?மத்தவங்க மாதிரி சராசரி ஆம்பளையா நடந்துக்கலேன்னு.. ஸோ,கொஞ்ச நேரம் நானும் சராசரியா இருக்க முயற்சி பண்றேன்.. அதுக்குத் தான் எந்திரிச்சு எதுக்க என்னப் பாத்து நிக்கச் சொன்னேன்"

"எனக்கு சுத்தமா புரியல.. ஆனாலும் நின்னு தொலையறேன்"னு சொல்லிக்கிட்டே டேபிள விட்டு கீழ எறங்கி தள்ளிப் போயி திரும்பி அவனப் பாத்து நின்னா..

'ம்.. குட்.. உன்னோட அந்த அலாதி சிரிப்பக் காணமே பேபி? எப்ப வெச்சுக்கலாம்னு கேட்டியே? அதுக்கு முன்ன அந்தக் கண்ணோட்டத்துல .. அதாவது காமக் கண்ணோட்டத்துல உன்னப் பாக்கற ஐடியாவுல தான் உன்ன எதுக்க நிக்கச் சொன்னேன்.. அப்படிப் பாக்கறதுல உனக்கொண்ணும் அப்ஜெக்சன் இருக்காதுன்னு நெனைக்கறேன் .."

வினு அவன் மடத் தனத்தை முதலில் வியந்து பிறகு இதிலும் ஏதாவது சூதிருக்குமோ என சந்தேகப் பட்டாள்.. அந்தக் கண்ணோட்டப் பார்வைகளை பதினொரு வருடங்களாய் எதிர் கொள்பவள் தான்.. ஆனால்,யாருமே 'உன்ன இந்தக் கண்ணோட்டத்துல பாக்கறேன்'னு அறிக்கை விட்டுட்டுப் பாக்கலை.. சொல்லப் போனா அவன் அப்படிப் பாக்கறதுல சந்தோசமே.. ஆனா,சொல்லிட்டுப் பாக்கறதுங்கறது? தறி கெட்டு ஓடற சிந்தனையக் கலைச்சுட்டு அவன் என்ன பண்றான்னு கவனிச்சா..

சக்தி பாக்கெட்ல இருந்து ஒரு பேனாவும்,பேப்பரும் எடுத்து வச்சுக்கிட்டு அவள அப்பப்ப பாத்துக்கிட்டே எதையோ தீவிரமா எழுதிக்கிட்டிருந்தான்.. இவ ஆச்சரியத்த அடக்க முடியாம கேட்டா..

"ஏய்... என்ன பண்றே?என்னப் படமா வரையறியா?"

"கிழிஞ்சுது போ.. நீ எவ்வளவு தான் அழகியா இருந்தாலும் நான் உன்ன ஓவியமா வரைஞ்சு அதப் பாத்தேன்னா இந்த ஜென்மத்துல அந்த மூடே வராது பேபி.. நம்ம ஓவிய அறிவு அப்படி"

"அப்புறம்.. என்னத்த அவ்வளவு தீவிரமா எழுதிக்கிட்டிருக்கே?"

"உனக்கு மார்க் போடறேன் பேபி.. உன் கண்ணழகு,முன்னழகு, பின்னழகு எல்லாத்துக்கும் மார்க் போடப் போறேன்.. இதுல நீ பார்டர்ல பாஸாயிட்டாலும் அது எங்க, எப்பன்னு இன்னிக்கே முடிவு பண்ணிடலாம்"

மனுவுக்கு இப்ப ஏகமா சங்கடம் தான்.. ஆனா,என்ன பண்ண? பைத்தியத்துக்கு வாழ்க்கைப் பட்ட பின்னால பாயப் பிராண்டுதேன்னு கவலப் பட்டுட்டிருக்க முடியுமா? சரி! எது வரைக்கும் போகுதோ போகட்டும்ங்கற மன நிலைல நின்னவளை அவன் அதட்டினான் சலிப்பாய்..

"இப்படி பள்ளிக் கூடத்து புள்ளையாட்டம் கையக் கட்டி மறைச்சு நின்னா நான் எதப் பாத்து மார்க் போடறது பேபி? கையக் கீழ விடு.. ரிலாக்ஸா... அதே சமயம் என்ன மயக்கற மாதிரியும் பாரேன்.. ப்ளீஸ்"

முதல் முறையாக அவளுக்கு எரிச்சல் வந்தது.. இப்படியும் என் சக்தியால் பேச முடியுமா என்ன? தன் எரிச்சலை அடக்க முடியாமல் வார்த்தைகளிலும் காட்டினாள் நெஞ்சோடு கட்டியிருந்த கையை இறக்கிய படி..

''இது போதுமா சக்தி.. இல்ல.. பார்டர் மார்க் வரலைன்னா... ஒரு வேளை.. அவுக்கவும் சொல்லுவியா?"

எழுதறத நிறுத்தி தலைய ஒசத்தி அவ கண்ணப் பாத்து புன்னகையோட சொன்னான்..

"ஷ்யூர் பேபி.. எப்ப வெச்சுக்கலாம்னு கேள்வி கேட்டவ அதுக்கும் தயாரா இருந்துக்கணும்ங்கறத மறந்துடாத.. சரி! திரும்பி நில்.. பின்னழகு மார்க்லயாவது பார்டரத் தாண்டறியான்னு பாப்போம்"

அவனை முறைத்துப் பார்த்து விட்டு மனு திரும்பி நின்றாள்.. அவளுக்கு வெட்கமாயும், கொஞ்சம் வேதனையாகவும் இருந்தது.. ஆனால்,இதை ஆரம்பித்து வைத்தது அவளே என்பதால் எல்லாத்தையும் சகிக்க வேண்டியதாவும் இருந்தது.. பல நிமிசங்கள் ஆன பின்னாலும் அவன் கிட்ட இருந்து எந்தப் பேச்சும் வராம இருக்கவே லேசா தலையத் திருப்பிப் பாத்தா.. அவன் அவளைத் துளியும் லட்சியம் பண்ணாமல் மும்மூரமா எழுதிக்கிட்டிருக்க அவள் அலுப்பாய்ச் சொன்னாள்..

"இன்னுமா முடியல? எவ்வளவு நேரம் நான் இப்படியே நிக்கறது.. ?"

"அவ்வளவு சீக்கிரத்துல முடியற விசயமா இது?இன்னும் ரெண்டே நிமிசம் தான்... புருவ முடிக்குக் கூட மார்க் குடுத்திருக்கேன்.. அப்பவும் பார்டருக்கு டாலி ஆகலை .. அப்படியே நில்லு.. இதோ.. முடிச்சுடறேன்...'

ஆனால்,அந்த இதோ மேற்க் கொண்டு அஞ்சு நிமிசமாயும் முடிஞ்ச பாடில்லை.. இவளா அலுத்து வெறுத்துத் திரும்பின போது அந்தப் பேப்பர மடிச்சு டேபிள் மேல வச்சு பேனாவ சட்டைப் பாக்கெட்ல குத்திட்டுச் சொன்னான்..

"வெல் பேபி.. ஒத்துழைச்சு போஸ் குடுத்ததுக்கு தேங்க்ஸ்.. நீ திரும்ப உன் அரியாசனத்துல அமரலாம்''

அவள் மறுபடியும் டேபிளின் மேல் ஏறி உட்கார்ந்த பின் அவனே தொடர்ந்தான்

"அடிச்சுப் பிடிச்சு பாஸ் மார்க் வாங்கிட்டே பேபி.. இப்பச் சொல்லு.. எங்க,எப்ப வெச்சுக்கலாம்?"

'இது நான் உன்னக் கேட்ட கேள்வி.. எடம்,நாள் முடிவு பண்ற அளவுக்கு இதுல நான் அனுபவ சாலியா என்ன?"

விசயம் விபரீதமாய் போய்க் கொண்டிருக்கும் கவலையில் அவள் எரிந்து விழ அவன் துளியும் அலட்டலின்றி புன்னகையோடு பதில் சொன்னான்...

"நான் மட்டும் இதுல ஆராய்ச்சி பண்ணி டாக்டர் பட்டம் வாங்கினவனா மனு?.. சரி.. அத விடு.. இப்பவும் கேக்கறேன்.. அப்படி இடமும்,நாளும் முடிவு பண்ணினா நிச்சயம் நீ வருவியா மனு?"

விசயம் கண்டிப்பாய் விபரீதத்தில் முடிகிறது என்பது மனுவுக்குத் தெளிவாய்ப் புரிந்து விட்டாலும் இனி வருவதை எதிர் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவோடு பதில் சொன்னாள்..

''அதான் சொன்னனே?அற்புதமான மனசையே அர்ப்பணிச்ச பின்னால இந்த ஒடம்பு ஒரு விசயமே இல்லேன்னு.. ஆனா,இதுல ஒரு சிக்கல் இருக்கு சக்தி.. ஒரு தடவை, ரெண்டு தடவைல நான் திருப்தி அடையாம நான் மறு படியும் கேக்கலாம்...அப்புறம் காலம் பூரா வேணும்னு கேக்கவும் வாய்ப்பிருக்கறதையும் நீ கவனத்துல வெச்சுக்க.."

சொல்லிட்டு அவன் முகத்தைப் பார்க்க அதில் துளியும் மாறுதல் இல்லை.. லேசாய் தோள் குலுக்கி அதே புன்னகையோடு சொன்னான்..

"எனக்கு அப்படித் தோணல மனு.. ஒண்ணு இல்ல ரெண்டு தடவைல நான் அலுத்துப் போயி என்னை மறந்துடுவேன்னு நான் நெனைக்கறேன்"

அவளுக்கு இந்தப் பேச்சால் உடம்பெங்கும் எரிந்தது.. சுதாரித்துக் கொண்டு கேட்டாள்..

"ஆனா சக்தி... என்னக் காதலிக்கறதே நம்பின என் அப்பா, அம்மாவுக்கு செய்யற துரோகம்னு சொன்ன நீ... இந்தக் காரியத்த மட்டும் எப்படி துணிஞ்சு செய்வே? இது அவங்களுக்குத் தெரிஞ்சா என்ன பதில் சொல்லுவே? லாஜிக் இடிக்குதே பேபி?"

இந்தக் கேள்விக்கு அவன் முகம் அடியோடு மாறியது.. ஆனால், அவள் எதிர் பார்த்த திகைப்போ, தடுமாற்றமோ அதில் இல்லை.. மாறாக ஒரு வித திருப்தியும் மகிழ்ச்சியும் அந்த முகம் முழுவதும் பரவ அழுத்தமாயச் சொன்னான்..

"கரெக்ட் மனு.. அவங்கள மறந்துட்டமே?சரி.. இப்போதைக்கு இதத் தள்ளி வெப்போம்.. லாஜிக் இடிக்காத அளவுக்கு ஒரு காரணத்தத் தேடின பின்னால இந்தப் பசியப் பத்தி யோசிப்போம்.. இப்ப சடுதிக்கு வயித்துப் பசிய கவனிக்கணும்"

மனு பர பரப்பாய் எழுந்த படி சொன்னாள்..

'இரு.. இங்கியே சாப்பிடலாம்"

அவன் எழுந்து நகர முயன்றவள் கை பிடித்து நிறுத்தி,"ஸாரி பேபி.. உனக்கே தெரியும்.. நான் போகலைன்னா பெருசுங்க ரெண்டும் சாப்பிடாது.. நாளைக்கு லஞ்ச் உன்னோட தான்.. காலைலயே பெருசுங்க கிட்டச் சொல்லிட்டு வந்துடறேன்.. ஓ.கே வா? பை பேபி.." என்ற படி கையை விட்டு ஒரு அடி வைத்தவன் ஏதோ நினைத்தவனாய் நின்று திரும்பி அவள் முகத்தைப் பார்த்தான்..

அவன் கண்கள் அவள் கன்னத்தின் மீது படிந்து உடனே மிகுந்த வேதனையக் காட்டின.. அவன் கைகள் தானாய் உயர்ந்து இரண்டு கன்னங்களிலும் படிந்து இதமாய் வருடிக் கொடுக்க உதடுகள் மெதுவாய் சன்னமாய் முணு முணுத்தது "ஸாரி மனு".. சொல்லி முடித்ததும் அவன் கண்கள் கலங்கியதா என்ன?சரேலென்று திரும்பியவன் வேகமாய் வெளியில் சென்ற சில நொடிகளில் புல்லட் புறப்படும் சத்தத்தையும் உணராமல் மனு வெகு நேரம் பிரமையுடன் நின்றாள்...

அவள் சுய நினைவுக்கு வந்ததே சுழன்றடித்த ஜன்னல் காற்றால் அவள் காலடியில் பட படத்து விழுந்த அந்தப் பேப்பரால் தான்.. அவளை எதிரே நிற்க வைத்து அவன் மார்க் குறித்த பேப்பர்! ஆவலாய் அதை எடுத்துப் பிரித்தவள் ஆச்சரியமானாள்.. அதில் மார்க்கைக் குறிக்கும் எண்கள் எதையும் காணோம்.. மாறாய் அது ஒரு சிறு கடிதமாய் இருந்தது...

"டியர் மனு...

'எப்ப வச்சுக்கலாம்?'

இத துணிச்சலா கேட்டுட்டியே தவிர உன்னால அது முடியாதுன்னு எனக்குத் தெரியும்..

அதனால இனி மேலும் நீ பார்டர் மார்க்ல பாஸ் பண்ணிட்டேன்னு எம் பேச்ச அத வச்சே தொடரப் போறேன்

ஆனா,நீ மட்டும் அதுக்குத் தடையா ஆயிரம் காரணங்கள.. ஏன்?இது மட்டும் எங்க பேரண்ட்ஸ்க்கு செய்யற துரோகமில்லையான்னு என்ன மடக்குவேன்னு எதிர் பாக்கறேன்..

வாதப் பிரதி வாதங்கள்ல ரெண்டு பேருமே அவங்கவங்க எடத்துல ஸ்ட்ராங்கா நின்னு ஜெயிப்போம் மனு.. ஆனா,வாழ்க்கைல...?

இத்தன யோசிச்ச நீ இத மட்டும் ஏன் யோசிக்கல..?

32 வயசாகியும் நான் ஏன் கல்யாணமே பண்ணிக்கல?

எத்தனை குறைகளிருந்தாலும் பணம் அத சமன் செஞ்சுடும் மனு..

அப்ப ஏன் கல்யாணம் பண்ணிக்கலேன்னு ஒரு தடவையாவது யோசிச்சியா மனு?

ஏன்னா.. எம் மனசுக்குள்ள ஒருத்தி உக்காந்துக்கிட்டிருக்கா..."

அவ்வளவு தான்.. கடிதம்..! மனுவின் கைகளிலிருந்து அந்தக் கடிதம் நழுவ அவள் இதற்கு மேல் தாங்க முடியாமல் டேபிளில் குப்புறச் சாய்ந்து குமுறிக் குமுறி அழுதாள்.. இது தான் அவன் தந்த தாங்க முடியாத வலி...

(தொடரும்....
 




Last edited:

Bharu

மண்டலாதிபதி
Joined
Feb 8, 2018
Messages
103
Reaction score
272
Location
US
Manu oru varthai vitathuku varathayalaye varuthrduthutaan shakthi.... bayangarama poguthu... yaar antha devadai????? Guess panna mudiyala.... adutha pathivil bathiluku waiting thatha
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
அடேய் சக்தி நீ லவ் failure யா..... பாவம் அதை 10வருஷம் யாரு கிட்டையும் சொல்லாம மறைச்சு இருந்து இருக்க....

ஆனா மனு சக்தி நீங்க ரெண்டு பேர் செய்த வார்த்தை போர் செம செம
 




Joined
Feb 7, 2018
Messages
94
Reaction score
228
Location
Chennai
Hi டாடிப்பா, செம்ம.

இப்படி பண்ணிட்டியே சக்தி. உன் மனசுல வேற ஒரு பொண்ணா.
இது நீ அவள உன்னை விட்டு ஒதுங்கி போகணும்னு சொல்ற கட்டு கதையா இல்ல உண்மையா.

மானு எப்படி இப்படி. ரெண்டு பேரோட எண்ணங்கள் ஒரே மாதிரி யோசிக்கிற வரை அவ்ளோ ஒத்து போகுது உங்களுக்கு. ஆனா ஏன் இந்த போராட்டம்.

Awesome writing.இந்த epi லயும் அதே கத்தி வீச்சு உரையாடல்.
ரெண்டு பேருமே செம்மயா score பண்றாங்க.
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
காதலிக்கற எல்லாருமே.. அது ஆணோ,பெண்ணோ.. குறைகளப் பத்தி யோசிக்கறதே இல்ல.. கண்ணுல படற குறைகளையும் இவங்களா நிறைகளாக்கிடறாங்க..
காதலிக்கற போது போட்டுக்கறது பெரும் பாலும் ஜெண்டில் வேசங்களே.. கல்யாணத்துக்குப் பின்னால அந்த வேசங்கள் பல்லிளிக்கும் போது விவாக ரத்தில் முடிகிறது..
well said sagoView attachment 519rendu perin vathangal arumai(y)(y)(y)(y)
ஏன்னா.. எம் மனசுக்குள்ள ஒருத்தி உக்காந்துக்கிட்டிருக்கா..."
sakthi aval thanai marakavendum enbatharkaga koorukirana:unsure::unsure::unsure:arumaiyana pathivu sago:):):):)
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
ஏதோ பிரச்னை.. உங்க கமெண்டுக்கு லைக் போட முடியல.. ஸாரி.

ரிப்ளையாவது ஏடாகுதான்னு பாப்போம்

அன்பும் நன்றியும்.சகோ....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top