• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி. 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
காதல் நீலாம்பரி 8
____________________________

சக்தி மனுவையே மொறச்சுப் பாத்திட்டிருக்க கார்த்தி சேச்சி கேட்டாங்க...

"தம்பி தான எங்க டீக் கடைக்கு எதுக்க பைனான்ஸ் வெச்சிருக்கீங்க?
சொல்லுங்க... என்ன விசயம்?"

பேசிக்கிட்டே கேஸ் அடுப்ப பத்த வச்சு முன்ன வச்ச டீய சூடு பண்ணினாங்க..

"எனக்குப் பக்கம் தான் சேச்சி.. எம் பேரு சக்தி வேல்.. அம்மா,அப்பா என் சின்ன வயசுலயே போயிட்டாங்க.. அப்பா வழி தாத்தனும் பாட்டியும் என்ன வளர்த்து ஆளாக்கினாங்க.. ஜீவனத்துக்கு விவசாயம், பைனான்ஸ்.. இந்த வருசம் ஐயப்பனுக்கு மாலை போடலாம்னு யோசனை.. எனக்கு என்னென்ன வாங்கணும்,எங்க வாங்கணும்கறதெல்லாம் தெரியாது.. அதனால எல்லாத்தையும் நீங்களே வாங்கி வச்சுடுங்க.. நான் விடி காலைல வந்து மாலை போட்டுக்கறேன்"

சொல்லிக்கிட்டே பர்ஸ் எடுத்து 1000 ரூவா தாள் ஒண்ண உருவிக் கொடுத்தான்.. சேச்சி அத வாங்காம தயக்கமா சொன்னாங்க..

"இவ்வளவு ஆகாதுங்களே?"

"இருக்கட்டும் சேச்சி... ஆனது போக மீதிய நாளைக்குக் குடுங்க"

அரை மனதோடு பணத்தை வாங்கிக் கொண்டே சொன்னார்..

"உக்காருங்க.. டீ சாப்பிட்டுப் போலாம்.. மனு.. தம்பிக்கு ஒரு சேர எடுத்துப் போடு"

மனு வேண்டா வெறுப்பா உள்ள போயி ஒரு சேரக் கொண்டு வந்து போட்டதும் கம்பீரமா அதுல அவன் உக்காந்து மொறைக்கவும் பார்மாலிட்டிக்குக் கூட தேங்க்ஸ் சொல்ல மாட்டேங்கறானேங்கற எரிச்சல்ல சொன்னா...

"அம்மா... இவரு மத்தியானத்துலயே குடிப்பாரும்மா.. நான் பல தடவ நம்ம டீக் கடைல பாத்திருக்கேன்.. இந்த மாதிரி ஆளுங்கெல்லாம் மாலை போட்டு என்ன புண்ணியம்?"

சேச்சி சில நொடி அசந்து போயி நின்னுட்டாங்க.. ஏன்னா,மனு சுபாவத்துல அடுத்தவங்கள காயப் படுத்தற மாதிரி பேசறவ இல்ல.. பிடிக்கலீன்னா அவங்கள விட்டு விலகிப் போயிடுவாளே தவிர மறிச்சு சண்ட போடறவ இல்ல.. அப்படிப் பட்ட மனு இந்தத் தம்பி கிட்ட எதுக்கு வரிஞ்சு கட்டிட்டு நிக்கறான்னு புரியாம சேச்சி அதட்டலா சொன்னாங்க..

"என்ன மனு... ரொம்ப ஓவரா போவுது?அடக்கி வாசிடி.. இங்க வா.. இந்த டீயக் கொண்டு போயி அவருக்குக் குடு"

வேண்டா வெறுப்பா ஒரு காலை நெலத்துல ஒதைச்சு சிணுங்கிக்கிட்டே போற மனு கூட மனசுக்குள்ள பேசினான் சக்தி.. 'என்னச் சீண்டறது எவ்வளவு பெரிய தப்புங்கறத இன்னும் கொஞ்ச நேரத்துல புரிஞ்சுப்பே மனு'

அம்மா வடிச்சுக் குடுத்த டீய கொண்டு வந்து அவனுக்குக் கொடுத்துட்டு திரும்பும் போது சக்தி அவ வலது கைய இழுத்துப் புடிச்சுக்கிட்டே சொன்னான்...

"போகாத பாப்பா.. உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.. அந்தத் திண்ணை மேல உட்கார்"

அவன் கையப் புடிச்சதுமே எரிச்சலான மனு 'பாப்பா'ன்னு கூப்பிட்டதும் கோவத்தோட உச்சிக்கே போயிட்டா...

"மொதல்ல கைய விடுங்க.."

வேகமா உதறிப் பாத்தும் அது இரும்புப் பிடியாய் இருக்க தவிப்புடன் அவனப் பாத்தா.. "பேசாம உக்கார்"னு அவன் கைய விட்டதும் எதிர் திண்ணையில் அமரவும் சக்தி கேட்டான்..

"ஐயப்பனுக்கு மாலை யாரு போடணும் பாப்பா?"

"எம் பேரு பாப்பா இல்ல .. மான்யா.. மனு"

"ஓ... சரி மனு... எங் கேள்விக்கு யோசிச்சு பதில் சொல்லு"

"நல்லவங்க தான் மாலை போடணும்"

"நல்லவங்கன்னா... ?"

"பீடி,சிகரெட்,டிரிங்க்ஸ்... இந்த மாதிரி பழக்கம் இல்லாதவங்க..."

"ஓஹோ... உன்னப் பொறுத்த வரைக்கும் இந்தப் பழக்கம் உள்ளவங்க எல்லாம் கெட்டவங்க.. இல்லைன்னா நல்லவங்க.. இல்லையா மனு? அப்ப சரி.. சாமியத் தேடி நல்லவங்க போகணுமா?கெட்டவனா?"

"நல்லவன் தான்"

"நல்லவனுக்கு சாமி கிட்ட என்ன வேலை..? இவனோ எந்தத் தப்புமே பண்ணாத நல்லவன்.. அதனால பாவ மன்னிப்புக் கேக்க வேண்டியதில்ல.. நல்லவனுக்குப் பேராசை இருக்காதுங்கறதால பொன்,பொருளும் கேக்க மாட்டான்.. ஸோ,முழுக்க நல்லவனா இருக்கற ஒருத்தனுக்கு ஆண்டவனே அவசியமில்லையே?.. ஆனா,என்ன மாதிரி கெட்டவங்களுக்குத் தான் ஆண்டவன் அவசியம்.. எங்க கிட்ட இருக்கற கெட்ட குணங்களப் போக்கறதுக்காவது ஆண்டவன் வேணும்.. கையங் காலும் நல்லா இருக்கறவன் வீசி நடந்து போலாம்.. ஓடவும் செய்யலாம்.. ஆனா,ஒரு காலோ கையோ முடமான மொண்டிக்கு நிச்சயமா ஒரு ஊன்று கோல் வேணும்.. அந்த ஊன்று கோல் தான் கடவுள்.. எல்லாம்.சரியா இருக்கறவனுக்கு எதுவுமே தேவை இல்ல.. சரி! உங்கப்பா டிரிங்க்ஸ் அடிப்பாரா?"

'அடிப்பார்... ஆனா,மாலை போட்டுட்டா நெனைச்சுக் கூட பாக்க மாட்டார்.. ஐயப்பனோட சக்தி அப்படி"

சக்தி வாய் விட்டுச் சிரிச்சுட்டுக் கேட்டான்..

"மாலை போட்டா அந்த நெனைப்பே வராம பண்ற ஐயப்பன் மாலையக் கழட்டினதும் கை விட்டுடறானே.. அது ஏன்? அந்தக் கடவுள் சக்தி உள்ளவனா இருந்தா மாலைய கழட்டின பின்னாலையும் உங்கப்பாவ குடிக்காம இருக்க வெக்க முடியாதா? "

"ம்.. அது வந்து.. ''

"அவசரமில்ல.. நல்லா யோசிச்சு பத்து நாள் கழிச்சு பதில் சொன்னா போதும்..ஆனா,ஒண்ணு மனு.. மிஷின் தனமா ஓடற வாழ்க்கைல ஒரு சேஞ்ச் வேணும்னு தான் மாலை போட்டேன்..ஐயப்பன் கிட்ட எதையும் கேக்கவே கூடாதுன்னு தான் இருந்தேன்.. ஆனா,இப்ப ஒண்ண கண்டிப்பா வேண்டுதலாக் கேக்கணும்ங்கற முடிவுக்கு வந்திருக்கேன்... அது என்ன தெரியுமா?"

இப்படிக் கேட்டுட்டு சக்தி டம்ளர்ல மிச்சமிருந்த டீயைக் குடிச்சு திண்ணை மேல வச்சுட்டு உடனே ஒரு சிகரெட்டப் பத்த வச்சுக்கிட்டுச் சொன்னான்..

"பத்து நிமிசத்துக்கு முன்ன தான் கோட்டர் அடிச்சேன்.. வேற ஒரு குடி காரனா இருந்தா சரக்கடிச்சுட்டு டீ குடிக்க மாட்டான்.. ஆனா, நான் வேற விதம்! உன் அம்மா என்ன அறிமுகப் படுத்திக்கட்டதும் டீ சாப்டறீங்களான்னு கூட கேக்காம டக்னு அடுப்புப் பத்த வச்சு டீய சூடு பண்ணினாங்களே?அத வெறும் பால்,தூள்,சர்க்கரை கலந்த திரவமா பாக்கலை.. அம்மாவோட அன்பா பாக்கறேன்.. அன்ப மறுக்க முடியுமா? அப்படி மறுத்தா அவங்க மனசு கஷ்டப் படாதா?இப்படி யோசிக்கறவன் நான்.. கொஞ்சம் முன்ன நான் உள்ள வரைல நீ பேசிட்டிருந்தநக் கேட்டேன்.. நீ வயசுக்கு மீறின புத்திசாலி தான் மனு.. ஆனா,அந்த புத்தி சாலித் தனத்த அடுத்தவங்க மனச நோகடிக்க யூஸ் பண்ணக் கூடாது.. ஏன்னா,காயப் படறவனும் புத்தி சாலியா இருந்தா அவன் திருப்பிக் குடுக்கற அடிய உன்னால தாங்க முடியாது.. ஐயப்பன் கிட்ட என் வேண்டுதல் என்ன தெரியுமா? உனக்கு அமையற புருசன் எந்த நேரமும் ஒரு கைல சிகரெட்டும், இன்னொரு கைல சரக்குமா அலைறவனா அமையணும்னு தான்..
வரட்டுமா சண்டக் கோழி?"

எந்திரிச்சு அவள் தலையில் செல்லமாய் தட்டி திரும்பி பிரமையோடு நின்றிருந்த சேச்சியிடம் சொன்னான்..

"காலைல அஞ்சு மணிக்கு டாண்ணு வந்துடுவேன்"

சொல்லிட்டு ஒவ்வொரு அடியையும் அழுத்தமா வச்சு நடந்து போறவன வெறிச்சுப் பாத்தா மனு.. அவளுக்கேனோ அப்பா பேப்பர்ல வெச்சுக் குடுக்கற பஜ்ஜிய உள்ள கொண்டு போகும் போது ஒரு கைல சிகரெட்டும்,இன்னொரு கைல சரக்கு டம்ளருமா அவன் உக்காந்திருந்த காட்சி ஞாபகத்துக்கு வந்து மூஞ்சி ரத்தம் சுண்டி வெளுத்தது...
 




Last edited:

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
சொன்ன மாதிரியே காலைல.அஞ்சு மணிக்கு வந்து மாலை போட்டுக்கிட்டான்.. பூஜையப்ப மனு.தான் சரணம் சொன்னா.. தங்கு தடையில்லாம 108சரணம் சொல்றவள ஆச்சரியமாப் பாத்தான் சக்தி.. மாலை போட்ட பின்னால நடந்துக்கற முறை பத்தி நாயர் குருசாமி கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டான்.. மத்ததெல்லாம் அவனுக்குப் பெரிய பிரச்னையில்ல.. சிகரெட் இல்லாம இருக்கறது தான் கஷ்டமா இருக்கும்னு நெனைச்சான்..

மனுவுக்கு அவனப் பாக்கற போதெல்லாம் வயித்துக்குள்ள கலவர பந்து சுருண்டு மேல வந்து தொண்டைய அடைச்சுது.. ஒரு கைல சிகரெட்டும் இன்னொரு கைல சரக்கு டம்ளருமா அவன் உக்காந்திருந்த போஸ் ஞாபகத்துக்கு வர அப்படிக் கூட அவன் வேண்டிக்குவானோங்கற கவலை நிம்மதியக் கொன்னுது..

வீட்டுக்குள்ள அவ அப்பா சிகரெட் பத்தினாலே மொறைக்கிறவ மனு.. அவர் குடிச்சுட்டு வந்து ஓவரா பாசத்தப் பொங்கறப்ப எல்லாம் முகஞ் சுழிச்சு விலகிப் போயிருக்கா.. குடிச்சிருக்கற அப்பா கிட்ட இவளாப் போயி பேசவே மாட்டா.. அப்படிப் பட்ட மனுவுக்கு எந்த நேரமும் ஒரு கைல சிகரெட்டும்,இன்னொரு கைல சரக்குக் கிளாசும் வச்சிருக்கறவன் புருசனா வந்தா..?மனு ஒரு நொடி தன் யோசனையோட முடிவுக்கு ஷாக் ஆனாலும் அடுத்த நொடியே சமாதானமா சொல்லிக்குவா.. 'அவனுக்கு நானே விசம் வச்சுக் கொன்னுடுவேன்'

அந்த வாரம் புதன் பூஜைல சக்தியும் வந்து கலந்துக்கிட்டான்.. பூஜையும், பஜனையும் முடிஞ்சு அன்ன தானம் நடந்த போது மத்தவங்களோட உக்காந்து சாப்பிடாம துண்டத் தலைல கட்டிக்கிட்டு பந்தி வழங்கறதுல எறங்கிட்டான்... கடைசியாத் தான் சாப்பிட உக்காந்தான்.. மனு தான் அவனுக்குப் பரிமாறினா..

பந்தில உக்காரும் போதே கார்த்தி சேச்சி குறும்புச் சிரிப்போட சொன்னாங்க..

"போதும்னா வாயத் தெறந்து சொல்லிடுங்க சக்தி சாமி.. இல்லாட்டி மாட்டிக்கிட்டு முழிப்பீங்க"

அவனுக்கு இருந்த பசி அவசரத்துல அவங்க சொன்னத காதுல வாங்காம உக்காந்து இலைக்குத் தண்ணி தெளிச்சு உதறிப் போட மனு அதுல ஆறு இட்லிய அடுக்கி அது மேல சட்னி,சாம்பார அபிஷேகம் செய்ய நிதானமா ரசிச்சுச் சாப்பிட்டான்.. கார்த்தி சேச்சி சமையலும் பிரமாதமா இருக்க ஆறு இட்லியையும் சாப்பிட்டு அடுத்நு வந்த ரெண்டு தோசையையும் உள்ள தள்ளிட்டான்..

சாபீபிட்டு முடிச்சு தண்ணி டம்ளர எடுத்து அண்ணாந்து குடிக்கும் போது தான் அந்த விபரீதம் நடந்துச்சு.. மனு ஒரு தட்டு நிறைய இட்லிய கொண்டு வந்து சரேல்னு இவன் இலைல சாய்ச்சுட்டுப் போக எல்லாரும் சத்தமா சிரிச்சாங்க..
இவன் டம்ளர கீழ வெச்சுட்டுப் பாக்க இலைல மறு படியும் ஏழு இட்வி அவனப் பாத்துச் சிரிச்சுது...

இனி தன்னால ஒரு விள்ளல் கூட உள்ள இறக்க முடியாதுங்கறது புரிய சலிச்சுக்கிட்டே இலைய மடக்கப் போனான்.. அப்ப குருசாமி சொன்னார்

"இல்ல சாமி... மாலை போட்டிருக்கைல சாமி இலைல மிச்சம் வெக்கக் கூடாதுங்கறது ஐதீகம்.. நீங்க சாப்பிட்டுத் தான் ஆகணும்"

சக்திக்கு இப்பத் தான் விசயம் புரிஞ்சுது.. காலேஜ்ல புதுசா சேர்ந்த பையன ராகிங் பண்ணுவாங்களே? அந்த மாதிரி இது.. கஷ்டப் பட்டு சாப்பிடலாம் தான்.. ஆனா,தலையக் குனிஞ்சு சாப்பிடைல மறுபடியும் ஒரு தட்டு இட்லியக் கொட்டிட்டா?தன் சந்தேகத்த வாய் விட்டு குரு சாமியக் கேக்கவும் செய்ய அவர் சிரிச்சுக்கிட்டே சொன்னார்..

"நீங்க எனக்கு இதோட போதும்னு ஒரு தடவ வாய் விட்டுச் சொல்லிட்டா யாரும் உங்க இலைக்குப் பரிமாற மாட்டாங்க.."

அவன் உடனே "எனக்கு இதோட போதும்"னு வாய் விட்டு சத்தமா சொல்லிட்டுச் சாப்பிட ஆரம்பிச்சது மட்டுமில்ல... ஒவ்வொரு வாய் சாப்பிடறதுக்கு முன்னையும் "எனக்கு இதோட போதும்"னு ராகம் போட்டு வித விதமாச் சொல்ல எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க..

கடைசியா அவன் ஏழாவது இட்லியத் தின்னு முடிக்கும் போது அவனுக்கு கண்ணீரே வந்துட.. :இரு மனு.. இதுக்கெல்லாம் வட்டியும்,முதலுமா திருப்பிக் குடுக்கல.. எம் பேர் சக்தி வேல் இல்ல'ன்னு மனசுக்குள்ளயே சபதம் போட்டுக்கிட்டான்..அதுக்கு வாகான சந்தர்ப்பமும் அடுத்த நாளே அமைஞ்சுது..

அன்னிக்கு பைனான்ஸ திறந்து வச்சுட்டு நாயர் டீக் கடைக்குப் போன போது நாயர் அந்தத் தகவலச் சொன்னார்..

"மாலை போடறதுக்கு செலவுக்கு ஆயிரம் ரூவா குடுத்ததுல மிச்சம் இருக்காம்.. கார்த்தி வந்து வாங்கிக்கச் சொல்லுச்சு.."

இவன் ஒரு டீயக் குடிச்சுட்டு வீட்டுப் பக்கம் போன போது கார்த்தி சேச்சி ஒயர் கூடையோட எதுக்க வந்தவர் புன்னகையாச் சொன்னார்..

"செலவு கணக்கும் மீதிப் பணமும் மனு கிட்ட இருக்கு.. குளிக்கப் போனா.. அஞ்சு நிமிசத்துல வந்துடுவா.. இருந்து வாங்கிட்டுப் போங்க.. நான் மளிகைச் சாமான் வாங்கிட்டு வந்துடறேன்

இவன் பதில எதிர் பாக்காம சேச்சி அவசரமா போக இவன் உள்ள போன போது குளியலறைல மனுவோட பாட்டுச் சத்தம் கேக்க கதவு மேல அவள் நைட்டிங்க.ரெண்டு கிடந்தது... சக்தி ஒரு நொடி தான் யோசிச்சான்.. அடுத்த நொடி பாத்ரூம் கதவு மேல கிடந்த மனுவோட ரெண்டு நைட்டியையும் உருவி எதுக்க இருந்த திண்ணை மேல போட்டுட்டு சாதுவாட்டம் உள்ள போயி உக்காந்துட்டான்..

பாட்டுச் சத்தம் இடை விடாம தொடர்ந்ததுல மனு நைட்டி மாயமானதக் கவனிக்கலைன்னு புரிஞ்சுக்கிட்டவனா வேணும்னே சத்தமா குரல் குடுத்தான்.. அதுக்குக் காரணமும் இருந்தது.. நைட்டி காத்துக்கு கீழ விழுந்திருக்கும்னு நெனச்சு தான் இருக்கறது தெரியாம அவ உள்ளாடையோட பாத் ரூமை விட்டு வெளிய வந்துடக் கூடாதுங்கறதுக்காகவே அப்படி சத்தங் குடுத்து தான் அங்க இருக்கறத அவளுக்கு உணர்த்த நெனைச்சான்

"வீட்ல யாருமில்லையா?"

மனுவோட பாட்டு நின்னது.. கேள்வியும் கேட்டா...

"யாரு....?"

"நான் தான் சக்தி..."

"நீங்களா? உங்க கணக்கும் பணமும் எங்கிட்டத் தான் இருக்கு.. உள்ள உக்காருங்க சாமி.. ரெண்டு நிமிசத்துல துணிய மாத்.... ஐயையோ.. துணி எங்க?"

அவள் பதட்டத்தை சக்தி ரசிச்சுக்கிட்டே காதுல விழாதவனாட்டம் உக்காந்திருந்தான்.. மனுவோ அங்கு தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள்..

"எல்லாத்தையும் இங்க தான போட்டேன்..ம்.. இப்ப கழட்டிப் போட்ட நைட்டியையும் காணோம்.. அம்மா.. அம்மா...."

சக்தி சிரிப்பை அடக்கிக் கொண்டு சொன்னான்..

"சேச்சி மளிகைச் சாமான் வாங்க கடைக்குப் போயிருக்காங்க.. வர்றதுக்கு அரை மணியாவும்னு சொல்லிட்டுத் தான் போனாங்க.."

"அரை மணி நேரமா? அது வரைக்கும் நான் இங்கியே இப்படியே நிக்கணுமா?ம்ம்... சக்தி சாமி... ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?''

சக்தி இன்னும் உற்சாகமானான்..

"சொல்லு மனு.. என்ன செய்யணும்?"

தயங்கித் தயங்கி அவள் சொன்னாள்..

"மாத்துத் துணி கதவு மேல போட்டிருந்தேன்.. காத்துக்கு கீழ விழுந்திருக்கும்.. அத எடுத்து கதவு மேல போடுங்களேன்"

இவன்.பதறியவனாய்ச் சொன்னான்..

"அதெப்படி மனு?ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கும் போது லேடீஸ் டிரஸ்ஸ கைல தொடலாமா? என்னால முடியாது"

"நீங்க கைல எடுத்துப் போட வேண்டாம்.. ஒரு குச்சியால தூக்கிப் போட்டாக் கூட போதும்"

"ம்.. செய்யலாம் தான்.. ஆனா, அதைச் செய்யறதால எனக்கென்ன லாபம்?"

"லாபமா?"

"ஆமா.. நீயோ என்ன எதிரியாப் பாவிச்சு சங்கடங்கள் குடுக்கறவ.. உனக்கு எதுக்கு நான் துணிய எடுத்துப் போடணும்..'?"

அந்தப் பக்கம் சில வினாடி மௌனத்துக்கு அப்புறம் பதில் வந்தது..

"இனிமே அப்படிப் பண்ண மாட்டேன் சாமி"

"இப்படி சாதாரணமாச் சொன்னா எப்படி? ஐயப்பன் மேல சத்தியம் பண்ணிச் சொன்னாத் தான் நம்புவேன்"

"சரி.. நீங்க கோவிலுக்கு இருமுடி கட்டிட்டுப் போற வரைக்கும் உங்கள சங்கடப் படுத்தற மாதிரி ஐயப்பன் மேல சத்தியமா எதும் பண்ண மாட்டேன்...போதுமா?"

இவன் தன் வெற்றியைக் கொண்டாடும் விதமா சிரிச்சுக்கிட்டே நைட்டியைத் தூக்கிப் போட அதுல ஒண்ண மனு அவசரமா உருவவும் உள்ள வந்து உக்காந்தான்..

ரெண்டு நிமிசத்துல மனு தலையத் டவல்ல துவட்டிக்கிட்டே உள்ள வந்தவ டேபிளைத் திறந்து கொஞ்சம் பணத்தையும் செலவு கணக்குச் சீட்டையும் நீட்ட அவன் பணத்தை மட்டும் வாங்கி பாக்கெட்ல போட்டுக்கிட்டு எந்திரிச்சுச் சொன்னான்..

"சத்தியம் ஞாபகமிருக்கட்டும் மனு.. எங்கிட்ட விளையாடாத.."

இதச் சொல்லிக்கிட்டே.ஒரு எட்டு வச்சவனை மனுவோட குரல் நிக்க வச்சது..

"ஞாபகம் இருக்குது சாமி... ஆனா, அது கோயிலுக்கு இருமுடி கட்டி கிளம்பற வரைக்கும் தான்ங்கறத நீங்களும் ஞாபகத்துல.வச்சுக்கங்க.. அதுக்கப்புறம் இருக்குடி கச்சேரி"

சக்திக்கு அவள் சொன்ன விதம் சிரிப்பைத் தர வாய் விட்டுச் சிரிச்சுக்கிட்டே திரும்பி அவளப் பாத்துக்கிட்டே கேட்டான்..

"கச்சேரி எப்படியாம் மனு?"

''இரு முடி கட்டி கோயிலுக்குப் போயிட்டு திரும்பற வரைக்கும் கட்ட தலைக்கு ஏத்தவும்,இறக்கவும் நானோ அப்பாவோ தான் வரணும்.. அப்ப இருக்கு சாமி உங்களுக்கு...."

அவள் பேச்சைத் துண்டித்தது அவன் அட்டகாசச் சிரிப்பு... சிரிப்புக்கிடையே சொன்னான்..

"இந்த பழி வாங்கும் படலத்தை நிறைவேத்த நீ மாலை போட்டு கோயிலுக்கு வரணுமே மனு.. அது தான் இல்லைன்னு ஆயிப் போச்சே? இத்தன வாய் பேசி என்ன புண்ணியம்?எங்கே.. முடிஞ்சா இந்த வருசம் மாலை போட்டு என்னோட வா.. பாக்கலாம்"

சிரிச்சுக்கிட்டே அவன் போக திகைச்சு நின்னுக்கிட்டிருந்த மனு மனசுக்குள்ள அவசரமா ஒரு திட்டம் உருவாச்சு... அந்தத் திட்டத்தால எத்தனையோ சங்கடங்களும் வரிசை கட்டி வந்தது..

(தொடரும்...
 




Last edited:

Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
டாடி சூப்பர் எபி ..... சக்தி மனு யோட உரையாடல் அருமை ஓ அருமை
ஆனா எனக்கு ஒரு சந்தேகம் 11 வயசு பொண்ணு இவ்வுளவு பேசுமா ..... அது தான் கொஞ்சம் இடிக்கிது .....அதுவும் இல்லமா சின்ன பிள்ளை கிட்ட சக்தி போட்டிக்கு போட்டி வம்பு பேசுறது ரொம்ப ஓவர்


சின்ன புள்ள கிட்ட போய் உனக்கு வர புருஷன் தண்ணி அடிச்சிக்கிட்டு தம்மு அடிக்கிறவரான் இருப்பான் அப்படினு சொல்லுறது ரொம்ப தப்பு ..... குழந்தை பிள்ளக்கு என்ன தெரியும் .....

கிராம புறத்திலே இந்த மாதிரி கேலி கிண்டல் உண்டு தான் பட் இது கொஞ்சம் அதிகமோ அப்படினு பீல் .....

இது என்னோட விஎவ் தான் டாடி...... தப்பா இருந்தா சாரி
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
டாடி சூப்பர் எபி ..... சக்தி மனு யோட உரையாடல் அருமை ஓ அருமை
ஆனா எனக்கு ஒரு சந்தேகம் 11 வயசு பொண்ணு இவ்வுளவு பேசுமா ..... அது தான் கொஞ்சம் இடிக்கிது .....அதுவும் இல்லமா சின்ன பிள்ளை கிட்ட சக்தி போட்டிக்கு போட்டி வம்பு பேசுறது ரொம்ப ஓவர்


சின்ன புள்ள கிட்ட போய் உனக்கு வர புருஷன் தண்ணி அடிச்சிக்கிட்டு தம்மு அடிக்கிறவரான் இருப்பான் அப்படினு சொல்லுறது ரொம்ப தப்பு ..... குழந்தை பிள்ளக்கு என்ன தெரியும் .....

கிராம புறத்திலே இந்த மாதிரி கேலி கிண்டல் உண்டு தான் பட் இது கொஞ்சம் அதிகமோ அப்படினு பீல் .....

இது என்னோட விஎவ் தான் டாடி...... தப்பா இருந்தா சாரி
அடிக்கடி சொல்லி இருக்கேன் தங்கம்.. இது நிஜத்துல.நடந்தது.. இத விட மோசமான சண்டையெல்லாம் வந்திருக்கு.. ஒண்ண மட்டும் கவனத்துல வச்சுக்கோ.. உன் அப்பன் கவனத்துக்கு ஒரு பொண்ணு வரணும்னா அவ புத்தி சாலியாவும் சண்டக் கோழியாவும் நிச்சயம் இருக்கணும்.. வினு இத விட நாலு மடங்கு இருந்தாங்கறதே உண்மை...
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
12 years baby kitta sakthi samyku ethuku vambu......... interesting epi sago:):):):)enna manuvum malai pota porala:unsure::unsure::unsure::unsure:
சக்தி அனாதையா வளர்ந்தவன் சகோ.. அவன் இந்த மாதிரி உறவுகளை உணராததோடு எப்படி நடந்துக்கணும்னும் தெரியாதவன்
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
அடிக்கடி சொல்லி இருக்கேன் தங்கம்.. இது நிஜத்துல.நடந்தது.. இத விட மோசமான சண்டையெல்லாம் வந்திருக்கு.. ஒண்ண மட்டும் கவனத்துல வச்சுக்கோ.. உன் அப்பன் கவனத்துக்கு ஒரு பொண்ணு வரணும்னா அவ புத்தி சாலியாவும் சண்டக் கோழியாவும் நிச்சயம் இருக்கணும்.. வினு இத விட நாலு மடங்கு இருந்தாங்கறதே உண்மை...
ok surrender daddy....
 




Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
"உன் புத்திசாலி தனத்தைத்த அடுத்தவங்க மனச நோகடிக்க யூஸ் பண்ணக் கூடாது.. ஏன்னா,காயப் படறவனும் புத்தி சாலியா இருந்தா அவன் திருப்பிக் குடுக்கற அடிய உன்னால தாங்க முடியாது.." அருமை ?? ரொம்ப நல்லா போகுது கதை, வாழ்த்துகள்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top