• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் யுத்தம் - மீதமுள்ள பகுதிகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
Part 18

மதில் மேல் பூனை போல என் நெஞ்சம்
உன்னை பார்க்காத வரை
உன்னுடன் சஞ்சரிக்கவே ஆசைப்படும்
உன்னைக் கண்ட பின்னால்
உன்னுடன் இருக்கும் ஆசையை விட
எந்த உறவும் பார்த்து விடுமோ
என்ற அச்சமே மேலோங்குகிறது
நான் என்ன செய்ய?
அவர்கள் வீட்டை நெருங்க இரவு ஆயிற்று. ஆகாஷ் நேரே சஜு அறைக்கு சென்று விட்டான். சஜு கீதா கொடுத்த பாலை எடுத்து கொண்டு தன் அறைக்கு மேலே செல்ல, அதற்குள் ஆகாஷ் கட்டிலில் படுத்து உறங்கியும் விட்டான்.
சஜு, “எப்படி தூங்குகிறான் பார், கீழே படு என்று சொல்லியும் உரிமையாய் அவன் வீட்டு கட்டில் போல் தூங்குகிறான்.” என்று நினைத்தாள். அவளுள் இருந்த இன்னொரு சஜு, “இன்று இவன் பண்ண அட்டகாசத்திற்கு இவனை உருட்டி விட்டுருவோமா?.” என ஆலோசனை வழங்கியது. “யோசிக்கலாம்.” என்று கட்டிலில் அவன் அருகில் அமர்ந்து மதியம் நடந்ததை அசைபோட்டாள்.
கண்ணயர்ந்த சஜு முழிக்கும் போது, அருணிடம் தங்கள் பெசன்நகர் பங்களாக்கு வழி சொல்லி கொண்டிருந்தான் ஆகாஷ். சஜு ஆகாஷை கேள்வியுடன் பார்க்க, அவன், “அது நம்ம பங்களா தான் அங்கு சென்று சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, அதன் பின் வீடு செல்லலாம்.” என்று சொன்னான். சஜுவும் ஆகாஷும் அதன் பின் அமைதியாக தான் இருந்தனர்.
எல்லோருக்கும் ஆகாஷ் தனது வீட்டில் ஒரு அறையை ஒதுக்கி கொடுத்து விட்டு, தனது அறைக்கு சஜுவுடன் சென்றான். அவளை படுத்து ரெஸ்ட் எடுக்க சொல்லி விட்டு, தாழ்வார ஊஞ்சலில் படுத்தபடி அமர்ந்து வானத்தை பார்த்து கொண்டிருந்தான்.
அதன் பின் ஐந்து மணி வாக்கில், எல்லோரும் டீயும், டிபனும் சாப்பிட்டு விட்டு, பெசன்நகர் பீச்சுக்கு சென்றனர். அங்கு கீதாவும், வெற்றிவேலும் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டனர், நான்கு இளைய தலைமுறையினரும் நீரில் நின்று கொண்டிருந்தனர். மஞ்சு சிறிது ஆட்டம் போட்டாள், சஜுவை கை பிடித்து இழுத்தாள், சஜு சேலை அணிந்ததால் வர மறுத்து, இன்று மஞ்சு செய்த சேட்டையையும் நினைத்து மஞ்சுவிடம் கோபித்து கொண்டு ஆகாஷிடம் நின்று கொண்டாள். அப்பொழுது, “சித்தப்பா... சித்தி ...” என்று கோரஸாகக் கத்திக்கொண்டு சஜு மீது ஒரே சமயம் நந்துவும் சிந்துவும் மோதினர்.
இதை எதிர்பாராத சஜு தடுமாற, ஆகாஷ் அவளை கீழே விழாமல் பற்றி கொண்டான். ஆகாஷ் சஜுவின் தோளை பற்றவும், சஜு ஆகாஷ் மீது சாய்ந்து விட்டாள், அவனுக்கு இடது புறம் அவள் முகம் இருக்க, அவள் அவன் முகம் பார்க்க, குழந்தைகளின் குரலில் இருவரும் சங்கடப்பட்டு, சட்டென்று விலகினர்.
அவர்களைத் தூக்கி கொண்டு நிமிர்ந்து பார்த்தால், இரண்டடி தூரத்தில் அவி, அனி, கவி வந்து கொண்டிருந்தனர். அவி ஆகாஷிடம், “என்னடா மறுவீட்டை இங்க கொண்டாடிட்டு இருக்கியா?.” என்று அருணைப் பார்த்தான். குழந்தைகள் சஜுவிடமும், மஞ்சுவிடமும் பேசிக்கொண்டிருந்தனர். ஆகாஷ் அருணை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான்.
சிந்து, “மஞ்சு அத்த அடு ஆரு?.” என்று அருணை காட்டி கேட்டாள்.
சஜு, “எங்க அண்ணன், உங்களுக்கு மாமா.” எனவும், நந்து, “ஏன் நாளிக்கு நம்ம வீட்ல பூ வச்சப்ப வர்ல?.”
மஞ்சு, “அவங்க ஆபீஸ்ல லீவ் தரல டா செல்லம் .”
யோசித்த சிந்து, “மஞ்சு அட்ட, அந்த லதா அட்ட மாமா மாதரி உன்னோட மாமாவா?.” என்று கல்யாணத்திற்கு வந்திருந்த ஒரு கணவன் மனைவியை அத்தை மாமா என்று அழைத்ததை நியாபக படுத்தி அவர்களை போலவா என்று வினவ,
இருவரும் அதிர்ந்து விழித்தனர், “ஆமாம்டா செல்லங்களா, அப்படி தான்.” என்று சிரித்து கொண்டே சொன்ன அருண், சஜுவிடம் இருந்து சிந்துவை வாங்கினான்.
மஞ்சு நந்துவை இறக்கி விட்டு, கோபமாக, “போடா குரங்கு.” என்று சொல்லி செல்ல, நந்துவும், சிந்துவும், “மாமா நீ கொரங்கா?.” என்று கேட்டனர்.
அதை கேட்ட அனைவரும் புன்னகைக்க, அருண், “அவளை...” என்று மனதில் கொதித்தான்.
குழந்தைகளின் கேள்வியை கேட்டு திரும்பி வந்த மஞ்சு, குழந்தைகளின் முன், தன் கோபத்தை காட்டி, குழந்தைகளும் அதையே அவனிடம் கேட்டு, அவனை சங்கடப்படுத்தியதை உணர்ந்து அவனிடம், “சாரி.” என்று சொல்லி தலை குனிந்தாள்.
இதற்கு தான் குழந்தைகளின் முன் பெரியவர்கள் எச்சரிக்கையாக வார்த்தை பிரயோகம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்.
அருணை சமாதானப்படுத்த, மஞ்சு அவனையும், இழுத்து கொண்டு குழந்தைகளுடன், “மாமாவை பிடி, சித்தப்பாவை பிடி.” என விளையாட, கவியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு ஆகாஷை அவர்களுடன் இழுத்தாள். அவியும் அனியும் கை கோர்த்து நின்று ரசித்தனர். மஞ்சு, கவியை கவனிக்கும் நிலையில் இல்லை, ஆனால் சஜு கவனித்தாள். சஜுக்கு முன்பே, ஆகாஷ் தனக்கு சொந்தம், இவள் தான் பிரித்து விட்டாள் என்பது போல அவளை ஒரு பார்வை பார்த்து கொண்டே கவி ஆகாஷுடன் நின்று கொண்டு குட்டீசுடன் விளையாடினாள்.
சஜு அவர்களுடன் செல்லாமல் கடலையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். இதுவே ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்த சஜு என்றால், அவனை ஒரு பிடி பிடித்திருப்பாள்.
ஆகாஷ் எவ்வளவு தான் கெஞ்சினாலும், சஜு ஆகாஷுடன் வெளியே எங்கும் செல்லமாட்டாள். சஜு கல்லூரி முதல் வருடம் சேர்ந்த புதிது, தோழிகளுடன் புத்தக கண்காட்சிக்கு சென்றாள். அதே சமயம் ஆகாஷும், தன் நண்பர்களுடன் சென்றிருந்தான், அவன் இன்ஜினியரிங் கடைசி வருடம் படித்து கொண்டிருந்தான். புத்தக கண்காட்சி வாயிலிலேயே இவளைப் பார்த்த ஆகாஷ், தன் நண்பர்களிடம் இருந்து கழன்று கொண்டு அவளின் பட்டாளத்துடன் கலந்து கொண்டான்.
சஜுவின் தோழி, “சஜு, நீ வேணா அண்ணா கூட போ, நாங்க தனியா போறோம்...” என்று சொல்ல, சஜு வேண்டாம் என்று தலையாட்ட, ஆகாஷ், “இல்ல சிஸ்டர், அவ பயப்படுவா யாரும் பார்த்திருவாங்களோனு, நா இப்படியே சஜு கூட வரேன், உங்களுக்கு ஏதும் objectionஆ.” என்று கேட்டான். “இல்லை.” என்று சிரித்து சொன்ன தோழி, அவர்களை விட்டு சிறிது முன்னே தன் தோழிகளுடன் சென்றாள். அன்று பானு அவர்களுடன் வரவில்லை.
ஆகாஷ், “மாட்டிக்கிட்டியா எத்தன வாட்டி வெளிய கூப்பிட்டிருக்கேன் வந்திருக்கியா? சரி என்ன புக் வாங்க வந்த?.”
சஜு தனக்கு தெரிந்தவர்கள் யாரும் பார்த்து விடுவார்களோ என்ற படபடப்பில், தன் தோழிகளுடன் செல்ல, ஆகாஷும் அவள் தோழிகளுடன் பேசிக்கொண்டே சஜுவுடன் சென்றான். அப்போதே சஜுக்கு கொஞ்சம் கடுப்பு தான்.
எல்லோருக்கும் காபி வாங்கி தந்தான். சஜுவிடம், “ஏய் ஏன் இப்படி பயப்படுற? இங்கேயும் தனியா வரமாட்டேங்கற, பேசாம நாம பீச்சுக்கு போவோமா ?.”
சஜு, “என்ன ஆகாஷ், இம்ஹ்ம் நான் வரமாட்டேன் .”
ஆகாஷ், “ஏய் நீ இப்படியே சொல்லிட்டு இரு, இப்ப நீ வர்ல, தூக்கிட்டு போய்டுவேன் .”
சஜு அதிர்ந்து, “பயமுறுத்தாதீங்க ஆகாஷ்.”
ஆகாஷ், “இல்ல நிஜமா தான் சொல்றேன் .”
இவர்கள் விவாதத்தை பார்த்து, என்னவென்று விசாரிக்க, ஆகாஷ் ஒப்பாரி வைக்காத குறையாய் சொல்ல, தோழிகள் அனைவரும் அவனுக்கு சப்போர்ட் செய்தனர். கடைசியில் சஜு பேச்சு எடுபடாமல் போக, தோழிகள் அவளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆகாஷ் தன் பைக்கில் பீச்சுக்கு அழைத்து சென்றான்.
அங்கு கடற்கரை வரை அவள் கையை பிடித்து கொண்டே சென்றான். அவளுக்குள் ஏதோ ஒரு மாற்றம், ஆனால் மகிழ்ச்சியாக உணர்ந்தாள். அவளுக்குள் ஒரு ரிதமிக் feel இருந்து கொண்டே இருந்தது, ஆனால் அதற்கு ஆயுள் குறைவு என்பதை அவள் எதிர்ப்பார்க்கவில்லை.
பீச் வரைக்கும் சென்றவன், அவளுடன் அமைதியாக உட்கார்ந்து, அவளுடன் பேசியிருக்கலாம் ஆனால் கடலை பார்த்தவன், உற்சாகமாகி, அங்கு கடலலையில் நிற்க வேண்டும் என்று அடம் பிடித்தான். சஜு டிரஸ் நனைந்து விடும் என்று மறுக்க, கடைசியில் சஜுவின் மறுப்பு வெற்றி பெற்று அவள் அங்கேயே நிற்பதாகவும், இவன் மட்டும் போய் சிறிது நேரம் நிற்பதகாவும் முடிவு செய்தனர்.
அதன் படி அவன் கடலலையில் நிற்க, அங்கு விளையாடி கொண்டிருந்த பெண்கள் கூட்டம் இவனை பார்த்து புன்னகைக்க (ஆகாஷ் தான் அழகனாச்சே), இவனும் இப்படியாவது பொறாமைப்பட்டு சஜு வரட்டும் என்று அவர்களிடம் புன்னகைத்தான். கடைசியில் சஜுவை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே அந்த கூட்டத்தில் கலந்தும், கலந்து கொள்ளாமல் இருக்க, சஜு கொதிக்க, ஒரு 5 நிமிடம் கழித்து பார்த்தான். அங்கு சஜுவை காணவில்லை, அவன் அங்கும் இங்கும் தேட, தூரத்தில் அவள் நடந்து செல்வது தெரிய, ஆகாஷ் அவளை நோக்கி ஓடினான்.
சஜுவை நெருங்கியவன், “சனா என்னாச்சு.” என்று அவள் கையை பிடித்தான்.
சஜு, “கையை விடுங்க ஆகாஷ், நான் வீட்டுக்கு போறேன் .”
ஆகாஷ், “ப்ளீஸ் சனா, சாரி , சாரி நீ அப்படியாவது, என்னிடம் வருவன்னு தான்...” அவன் முடிக்கும் முன்னே , சஜு முறைத்து அவனை எரித்து விடுபவள் போல் பார்க்க, அவன் வாய்க்குள்ளேயே பாதி பேச்சை முழுங்கி கொண்டான்.
அவன் கெஞ்ச கெஞ்ச, சஜு நிற்காமல் ரோடை நெருங்கி கொண்டிருந்த சமயம், அந்த வழியாக ஆகாஷ் அப்பா காரை நிறுத்தி யாருடனோ பேசிக்கொண்டிருக்க, அதை பார்த்த ஆகாஷ், “அச்சச்சோ அப்பா.” என்று திரும்பி கொண்டான்.
சிறிது நேரம் கழித்து பார்த்தால், சஜுவையும் காணவில்லை, அவனுடைய அப்பாவும் பேசிவிட்டு சென்று விட்டார்.
சஜுவுக்கு இவன் தன் பின்னே வராமல் நின்றதும், அதுவும் முகத்தை திருப்பி நிற்கவும், “எவ்வளவு அழுத்தம், இவன் செய்வதை செய்து விட்டு, நான் செல்லவும் இவனுக்கு கோவம் வருகிறதா ?.” என்று மனதில் பொருமிக் கொண்டு மேலும் கோபம் கொண்டு தன் வீட்டிற்கு சென்று விட்டாள்.
அதன் பின் ஒரு வாரம் அவன் அவளை பார்க்க வந்தாலும் பேசாமல், அவன் சஜு வீட்டிற்கு முன் நின்று தினம் தவம் செய்தும், அதன் பின் மூன்று நாள் கழித்து அவனுடன் பேசி சமாதானம் ஆனாள். சஜு தினம் அவள் வீட்டிற்கு அருகில் தவம் இருந்ததால், அவள் இளகவில்லை. அவள் கோபம் தானாக வற்றி இறங்கி வந்தாள். அதன் பின் அவன் சொல்ல வந்ததை புரிந்து கொண்டாள். ஆகாஷ்க்கும், அவள் தானாக தான் கோபம் குறைந்து வந்திருக்கிறாள், தன் சமாதானத்திற்கு எடுத்த முயற்சி எல்லாம் அவளிடம் எடுபடாது என்று தெரியும்.
அதனால் தான் தற்பொழுது அவளை சமாதானம் செய்யும் முயற்சியில் அவன் இறங்கவில்லை. அவள் கோபம் குறையட்டும் என்று பொறுத்துக் கொண்டிருந்தான்.
சஜு அப்படியே வளர்ந்து, அவள் குணமும் அவ்வாறே தொடர்ந்து விட்டது. எப்பொழுதும் சஜு, உடனே சமாதானம் செய்தால், இறங்க மாட்டாள். அவள் கோபம் தானாக வடிந்து, அதன் பின் தான் மற்றவர்கள் சொல்லும் கருத்தை காது கொடுத்து கேட்பாள். அதில் நியாயம் இருந்தால், ஏற்பாள் இல்லையேல் பழைய குருடி கதவை திறடி என்று கோவத்தில் மறுபடியும் முருங்கை மரம் ஏறுவாள்.
முன்பு சிறுவயதில் அவள் கோபம் வேறு மாதிரி இருந்தது, தற்போழுது அவள் கோபம் அமைதி வடிவம் எடுத்து கொண்டது ஏனோ சஜுவுக்கே இந்த மாற்றம் தெரியவில்லை.
பின் விளையாடி ஓய்ந்து, குட்டீஸ்களுடன் ஆகாஷ், அருண் அவர்களுக்கு snacks வாங்க செல்ல, மஞ்சு சஜுவை அழைத்து செல்ல, கவிதா அழைக்காமலே ஆகாஷ் பின்னே சென்றாள்.
அவர்கள் அங்கே அங்கே போடப்பட்ட கடைகளில் snacks வாங்க, சஜு இங்கும் தனித்து இருந்தாள். அதை பார்த்த கவிதா அவளிடம் வந்தாள்.
கவி, “ஏன் சஜு, ஆகாஷ் உண்மையிலேயே உன்னை காதலித்தாரா?.” என்று வினவவும்
சஜு, “இவள் ஏன் இதை கேட்கிறாள்.” என்று பார்த்து, “ஆமாம்.” என்று சுருக்கமாக பதில் சொன்னாள்.
கவி, “பார்த்தால் அப்படி தெரியவில்லையே ?.”
சஜு, “உன்னிடம் அதை proof செய்ய வேண்டும் என்று அவசியமில்லை.” என்று அவள் மீது உள்ள கடுப்பில் பட்டென்று பதில் அளித்தாள்.
கவி, “ஏன் இவ்ளோ துமிராக பேசுகிறாய்? உன்னை விட அந்தஸ்த்தில் உயர்ந்தவள், அதுவுமில்லாமல், எங்கள் குடும்பத்தோடும், எங்கள் அத்தை குடும்பத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், நீயெல்லாம் மண் போல.” என்று அவளும் பதிலுக்கு துமிராக பேசினாள்.
சஜு, “அந்த மண் தான், கட்டிடம் கட்ட உபயோக படுதுது, கீழே இருக்கும் மண் தான் மாட மாளிகையாய் மாறி அண்ணாந்து பார்க்க வைக்குதுங்கிறத மறந்திராத, என்ன பாக்குற சிமெண்ட், செங்கல் எல்லாமே ஒரு வகை மண் தான்.” என்று அவளை பார்த்து முறைத்து கூறிவிட்டு, கீதா அமர்ந்திருக்கும் இடம் நோக்கி சென்றாள்.
அதன் பின் அவரவர்கள் வீட்டுக்கு செல்ல, வீட்டிற்கு வந்ததும் களைப்பில் அனைவரும் உறங்கி விட்டனர். ஆனால் சஜு மட்டும் உறங்காமல், அவள் அறையில் உறங்கும் ஆகாஷை பார்த்து கொண்டிருந்தாள். ஆகாஷ் அசையவும், சஜு கட்டிலில் இருந்து எழுந்து கொண்டாள்.
அவன் அசைந்து படுக்கவும், அவன் கை முட்டியில், அவள் கல்லால் அடித்த காயம் அவளுக்கு கண்ணில் பட்டது. ஒரு நிமிடம் இப்படி ரத்தம் வருமாறு அடித்து விட்டோமே என்ற குற்ற உணர்வு வந்து அவள் மனதில் எட்டிப்பார்த்தது. உடனே மருந்து எடுத்து வந்து அவன் கைக்கு போட்டு விட்டாள். அசதியில் தூங்கிய ஆகாஷ் நல்ல வேளை எழவில்லை. அதன் பின் தூங்கும் அவன் முகத்தை பார்த்து கொண்டே அப்படியே அவன் அருகிலேயே உறங்கி விட்டாள்.
பொழுதும் புலர்ந்தது, காலையில் கண் விழித்த ஆகாஷ், தன் கழுத்தை கட்டிக்கொண்டும், தன் மீது காலை போட்டு கொண்டு உறங்கும் தன் மனைவியை பார்த்தான். புன்னகைத்து, “சனா டார்லிங், i லவ் யு டா, “என்றான். அவன் குரல் சஜுவை எட்டியதோ என்னவோ, சஜு பட்டென்று கண்களை திறந்தாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
Part 19
கனல் வீசும் கோபம்
கருத்துகளுக்காக காத்திராத கோபம்
பொருளை உடைக்கும் கோபம்
எதையும் தூக்கி எறியும்
என் கோபம் மாறியது,
அமைதியின் ஸ்வரூபமாக
என்னை உருமாற்றியது எதுவோ ?
உன் காதலா ? அல்லது
உன் பிரிவா ?
சஜு, அவன் முகத்தை அருகில், அந்த அதிகாலை வேலையில் காணவும், முதலில் கனவோ என்று நினைத்து திரும்பவும் கண்ணை மூடி நன்றாக திறந்தாள், அவன் முகம் அப்படியே இருக்கவும், கோபம் கொண்டு, “நீ எப்படி என் பக்கத்தில் படுத்த ? எந்திரி முதல.” என்று கத்தினாள்.
ஆகாஷ், “பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு, கோவத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, நீ எந்திரிச்சா தான் நான் எந்திரிக்க முடியும்.” எனவும், சஜு அவனை பார்த்தாள்.
அவள் கைகள் அவன் கழுத்தை சுற்றி கொண்டும், அவன் மேல் கால் போட்டிருப்பதும் உரைக்க, உடனே எழுந்தாள். ஆகாஷும் எழுந்தான்.
சஜு குளியலறை சென்று பல் துலக்கி, குளித்து விட்டு வெளியே வர, ஆகாஷ் அவர்கள் கொண்டு வந்த பாகை கொட்டி கவிழ்த்து கொண்டிருந்தான். சஜு அவனை பார்த்து, “தேடட்டும், தேடட்டும், நன்றாக தேடட்டும், “என்று மனதில் சொல்லி வாய்க்குள் சிரித்து கொண்ட, அவனை பார்க்காதவள் போல வெளியேற நினைத்தாள்.
ஆனால் ஆகாஷ், “சஜு, என் brusha பார்த்தியா? காணோம்.” என்று பேச்சால் அவளை தடுத்தாள்.
சஜு, “எனக்கு தெரியாது .”
ஆகாஷ், “நான் சரியா எல்லாத்தையும் எடுத்து வைத்தேனே.” என்று சந்தேக முகபாவனையோடு அவளை பார்த்தான்.
சஜு, “அப்போ நான் தான் எடுத்து ஒழிச்சு வச்சுட்டேன்னு நினைக்குறியா?.”
ஆகாஷ், “நினைக்குறதுலாம் இல்ல, நிஜமா நம்புறேன் .”
அவன் தன்னை கண்டுபிடித்து விட்டதை உணர்ந்த சஜு தைரியமாக, “ஆமா , நான் தான் எடுத்து வச்சேன், இப்போ என்ன பண்ணப்போற?.”
ஆகாஷ், “என்ன பண்ணப்போறேனா? உன் brush எடுத்து விளக்க போறேன்.” என்று சொல்லி கொண்டே, குளியலறைக்குள் சென்றான்.
சஜு, “ஏய் வேணாம் வேணாம்.” என்று சொல்லலி கொண்டே அவன் பின்னே சென்றாள்.
அவள் பயந்ததை ரசித்துக் கொண்டே, ஆகாஷ், “சரி, வேணாம், அப்போ நா எப்படி பல் விளக்குறது?.”
சஜு, “இம்ம், கடவுள் கொடுத்த brusha வச்சு விளக்கு.” என்று சொல்லவும், அவன், “என்ன சொல்ற?.” என்று முழித்தான்.
அவள் செய்கையால் கையால் பல் விளக்குவது போல செய்து காண்பித்தாள், அவனும் சிரித்து தலையை ஆட்டிக் கொண்டே, “வேற வழி.” என்று நகர்ந்தான்.
அவள், “இரு பேஸ்ட் விட பல் பொடி வச்சு கைல விளக்குனா தான் நல்லா இருக்கும். நான் போய் எடுத்துட்டு வரேன், இரு.” என்று சென்றாள்.
நேற்று தான் இவள் சிறிய பாகில் கொண்டு வந்ததால், எடுத்து வைக்க மறந்திருப்பாள் என்று நினைத்தால், இவள் வேண்டும் என்றே எடுத்து வைத்திருக்கிறாள்.
திரும்பி வரும் போது, சஜு கையில் பல் பொடி கொட்டி எடுத்து கொண்டு வந்தாள். அவன் இடது கையை நீட்ட சொல்லி தன் கையில் இருந்த பொடியை கொட்டினாள். அவன் சந்தேகத்தோடு அவளை பார்க்கவும், “இன்னிக்கு ஒரு நாள் தான, பல் பொடில விளக்க போற, டப்பா எடுத்துட்டு வந்தா, இங்கயே கிடந்து வேஸ்ட் ஆகிடும், அதான் நானே என் கைல கொஞ்சமா எடுத்திட்டு வந்தேன்.” என்று சஜு விளக்க உரை தந்து விட்டு சென்றாள்.
ஆகாஷ்க்கு நம் சஜுவை பற்றி தெரிந்ததால், சற்று முன்னெச்சரிக்கையுடன், ஒரு துளி பொடி எடுத்து வாயில் வைத்து பார்த்தான். “அப்பா.” காரம் சுர்ரென்று நாக்கை இழுத்தது. சஜு மிளகாய்ப்பொடியை பல் பொடியுடன் கலந்து கொண்டு வந்து கொடுத்திருந்தாள்.
ஆகாஷ், “அடி பாவி, எப்படி எல்லாம் கொடுமைப் படுத்துகிறாள், என்று தணியும் இவள் கோபம், என்று விடியும் என் வாழ்க்கை.” என்று மனதில் புலம்பிக் கொண்டு, பெருமூச்சு விட்டு, பொடியை கொட்டி விட்டு பேஸ்ட் எடுத்து பல் விளக்கி குளித்து வெளியே வந்தான்.
காலை உணவு உண்ண, அனைவரும் உணவறையில் கூடி இருந்தனர். கீதா சமைத்து வைத்ததை, சஜு அனைவருக்கும் பரிமாறினாள். உணவு உண்ட பின் இளையவர்கள் நால்வரும் ஹாலில் அமர்ந்து இவர்களின் சிறு வயது பற்றி பேசி கொண்டிருந்தனர்.
அருண் ஆகாஷிடம், “ஏன் ஆகாஷ் என் தங்கச்சி எப்படி ? நல்லவளா? கெட்டவளா ?.” என்று கேட்டான்.
ஆகாஷ், “இவன் ஏன் இப்படி கேட்கிறான்.” என்று யோசித்து கொண்டிருக்கும் போதே, “டேய் அண்ணா, அடி வாங்க போற நீ.” என்று பதிலளித்தாள்.
“இல்ல சஜு, நம்ம ஆகாஷும் உன்ன பத்தி தெரிஞ்சுகிட்டா, கொஞ்சம் முன்னெச்சரிக்கையோட இருப்பாருல , அந்த நல்ல எண்ணம் தான்.”
“ஆமா நீ ரொம்ப நல்லவன் பாரு, இரு உனக்கும் ஒருத்தி வருவாள, அவக்கிட்ட உன்ன பத்தி நானும் சொல்றேன் .”
“நா(ன்)லாம் உன்ன மாதிரி இல்ல, காதலிக்கும் போதே நானே சொல்லிடுவேன் அவகிட்ட.”
“அப்போ நீ காதலிக்கிறியா அருண் ?.” என்று அதிர்ந்து மஞ்சு வினவினாள்.
“ஏய், என்ன அமெரிக்கா பொண்ணா? இல்ல இந்தியா பொண்ணா ? அமெரிக்கா பொண்ணுனா ரொம்ப சந்தோசம், தண்ணி செலவு மிச்சம்.” என்று சஜு சிரித்தாள்.
“ஏன் அருண்? உன் கூட வேல பார்க்கிறவங்களா?.” என்று ஆகாஷும் ஆர்வத்தில் கேட்டான்.
“அப்படி சொல்ல முடியாது, ஆனா என் கூடவே இருக்கிறவ தான்.” அருண்
ஆகாஷ்க்கு அவன் யாரை குறிப்பிடுகிறான் என்று புரிந்து விட்டது. (ஒரு ஆணின் மனம் இன்னொரு ஆணுக்கு தெரியுமோ? ) இதை கேட்ட மஞ்சு கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் முகத்தை சுருக்கி வைத்து கொண்டு தன் அறைக்கு சென்றாள். சஜுவை கீதா அழைக்க அவளும் சென்று விட்டாள்.
அப்பொழுது அங்கு வந்த வெற்றிவேல் அருணை அழைத்து கொண்டு வெளியே சென்று விட்டார். ஆகாஷ் சற்று ஓய்வெடுத்தான் சஜு அறையில்.
பொழுதும் நகர்ந்தது, சஜுவிடம் ஆகாஷ்க்கு பிடித்த சமையலை கேட்டு செய்து கொண்டிருந்தார், அப்படியே தன் மகன் அருணுக்கும் பிடித்தமாய் சில பதார்த்தத்தையும் செய்தார். சஜு அப்படியே அம்மாக்கு உதவினாள்.
மதிய உணவு வேளை வந்தது.வெற்றிவேல் வெளியே சென்றவர் வர தாமதம் ஆக, அவரை தவிர அனைவரும் உணவறையில் கூடினர். மஞ்சு, அருண் தன்னை விடுத்து வேறொருத்தியை காதலிக்கிறான் என்ற கவலையில் உம்மென்று இருந்தாள். சஜு தன் குடும்பத்தை விட்டு பிரியும் சோகத்தில் இருந்தாள். சூழ்நிலையை கலகலப்பாக்க எண்ணி அருண், “ஆகாஷ், நான் காலையில சொல்ல வந்ததையே மறந்துட்டேன் பார்த்தீங்களா?.” என்று ஆரம்பித்தான்.
ஆகாஷ் என்ன சொல்லவந்தான் என்று யோசித்து, “சஜு பத்தியா ?.” என்று வினவினான் .
அருண், “இம் சஜு பத்தி தான். சஜு அமைதியா இருக்கறத பார்த்து நல்லவனு நம்பிராதீங்க, அப்போ அப்போ சஜு, சீதைக்கு பக்கத்துல இருக்கறவ வேஷத்த போடுவா.”
ஆகாஷ் அவன் சொல்வதை புரிந்து சிரித்தான். ஆகாஷ் சிரிப்பதை பார்த்து, அருணிடம் சஜு, “அப்படி எப்போ நான் வேஷம் போட்டேன், சொல்லு பார்க்கலாம்.”
அருண், “நாங்க ஸ்கூல் படிக்கும் போது, லீவ்ல மஞ்சு வீட்டுக்கு போயிருந்தோம், அன்னிக்கு தான், நாங்க அவங்க வீட்ல இருந்து கிளம்பும் நாள். அப்போ கொஞ்ச நேரம் மூனு பேரும் விளையாடினோம்,
அப்போ இந்த ரெண்டும் என்னோட பில்டிங் செட்ட கலைச்சு விட்டுடுச்சுங்க, நானும் இவங்க விளையாடுற பொருள எடுத்து கிட்டு தரமாட்டேன்னு சொல்ல, இதுங்க ரெண்டும் என்ன ரெண்டு பக்கம் பிடிக்க, அப்போவும் நான் விடாம போராட, இந்த சஜு டாய்ஸ் வச்சிருந்த என் கை கட்டை விரல கடிச்சிட்டா, பல் பதிஞ்சு போய் ரத்தம் வர நிலைமைக்கு ஆகிடுச்சு .”
ஆகாஷ் ஆர்வமாய், “அப்புறம்.” என
அருண், “அப்புறம் என்ன, ஊருக்கு போக முடியாம, ஹாஸ்பிட்டல் போய் ஊசி போட்டோம், டாக்டர் கூட கேட்டார், எந்த குரங்குப்பா உன்ன கடிச்சுச்சுன்னு? அது கூட இன்னும் மறக்காம ஞாபகம் இருக்கு.” என
சஜு கோவம் கொண்டு அருண் மேல் தண்ணீர் ஊத்த ஆயத்தமாக, அதே சமயம் ஆகாஷ்க்கு சிரிப்பினால் புரை ஏற, அருண் தன் மீது தண்ணீர் ஊத்த வரும் சஜுவின் கவனத்தை திருப்பினான். “ஏய் சஜு, பார் மாப்பிளைக்கு புரை ஏறுது, தலைல தட்டி விட்டு தண்ணீ கொடு.” எனவும்.
சஜு கடுப்பில், டம்ளரை வைத்து விட்டு, ஆகாஷ் தலையை, “ணங் ணங்.” என்று தட்டி விட, அங்கு வந்த கீதா, “சாப்பிடும் போது என்ன பேச்சு, நீ லா அமெரிக்கால வேல பார்க்கிறவன் மாதிரியா இருக்க ?.” என்று அருணை கடிந்தார்.
அருண், “நான், நம்ம சஜுவோட வீர தீர பராக்கிரமத்த நம்ம மாப்பிள்ள கிட்ட சொல்லிட்டு இருக்கேன் மா, பாவம் நம்ம சஜுவ நம்பி அவகிட்ட தன் வாழ்க்கையே ஒப்படைச்சிருக்கார். அவர முன்னெச்சரிக்கை செய்வது என் கடமையாக்கும்.” என்று வசனம் பேசினான்.
ஆகாஷ், “ஐயையோ கடிக்க வேற செய்வாளா ? ஏற்கனவே இவ பண்ற கொடுமைல கண்ணு கட்டுது அட ஆண்டவா !.” என்று மனதில் தான் நினைத்தான், வெளியே சொல்ல முடியுமா?
கீதா, “ஏன்டா அவள வம்பிளுக்குற.” என்று சஜுக்கு பரிந்து பேசினார்.
அருண் சும்மா இருக்காமல், “ஏன்மா இவள சப்போர்ட் பண்ற உன்னையே தாக்கி இருக்காளா இல்லையா? ஆகாஷ், அதுவும் கத்தியால.” எனவும் பொறுமை இழந்த சஜு, அருண் மீது தண்ணீர் ஊத்த போக, அருண் ஓட, சஜு அவனை துரத்த ஆரம்பித்து விட்டாள்.
ஆகாஷ் ஆர்வம் தாங்காமல், “அப்படி என்ன பண்ணா? மஞ்சு .”
மஞ்சு பதில் சொல்லும் முன், கீதாவே பதிலளிக்க ஆரம்பித்தார், “அது ஒன்னும் இல்ல மாப்பிள்ள, சஜுக்கு சின்ன வயசுல கோவம் வந்தா கைல இருக்குற பொருள தூக்கி எறிஞ்சிடுவா, அப்படி சின்ன பொண்ணா , u k g படிக்கும் போது ன்னு நினைக்கிறேன், அருணும் நானும் கிட்சேனில் இருந்தோம், இவ ஹால்ல இருந்தா அழுதுக்கிட்டு , அருண் அவள கிண்டல் பண்ணான், நானும் அவன் கின்டல ரசிச்சு சிரிச்சுட்டேன். அதுனால சஜுக்கு கோபம் வந்துருச்சு .”
மஞ்சு, “அவளுக்கு அப்போலாம் கோபம் பயங்கரமா வரும், கோவமா இருந்தவ ஹால்ல இருந்த சின்ன மடக்கு கத்தி கிடக்கவும், கைல எடுத்து அத்தைய பார்த்து வீசிட்டா .”
ஆகாஷ், “அச்சச்சோ அப்புறம் .”
மஞ்சு, “அது சரியா அத்தை நெத்தில, புருவத்துக்கு மேல பட்டுருச்சு, நல்ல வேள கண்ணுல படல, அது மொட்ட கத்தியா போனதால சின்னதா காயத்தோட போய்டுச்சு .”
ஆகாஷ், “நிஜமாவா அத்தை, சஜுக்கு இவ்ளோ கோபம் வருமா ?.”
கீதா, “அவளுக்கு கோபம் வரும் மாப்பிள்ள, ஆனா நியாயமா தான் இருக்கும், அன்னிக்கு கூட அருண் அவ வேணாம்னு சொல்ல சொல்ல, கேலி பண்ணவும் தான் அழுது கோபப்பட்டு அப்படி பண்ணினா, அப்புறம் அவங்க அப்பா வந்து செம டோஸ் விழுந்துச்சு .”
மஞ்சு, “ஆனா இப்போ என்னவோ அமைதியாகிட்டா, காலேஜ் 1ஸ்ட் இயர் முடிவுல இருந்தே அமைதியா மாறிட்டா .”
இதை கேட்ட ஆகாஷ் மனதில் குற்ற உணர்வு தலை தூக்கியது.
கீதா, “இப்போ தான் பழைய சஜுவ பார்க்கிறோம்.” என்று சிறிது உணர்ச்சி வசப்பட்டு கூறினார்.
அப்பொழுது, “கழுதைகளா உங்கள...” என வெற்றிவேலின் குரல் கேட்கவும், கீதா அவசரமாக முன்னறைக்கு விரைந்தார். அங்கு முகத்தில் வழியும் நீரோடு நின்று கொண்டு, “ஏன்டா அருண் உனக்கு அறிவே இல்லையா ? ஏன்மா சஜு கல்யாணமான பொண்ணு மாதிரியா இருக்க ?.” என்று தன் தலையில் அடித்து கொண்டு இருவர் மீதும் கோபப்பட்டார்.
சஜு அருணை துரத்தி ஒரு கட்டத்தில் அவன் மீது தண்ணீரை ஊற்ற, அவன் கடைசி நொடியில் விலக, அது குறி தவறி வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்த வெற்றிவேல் மீது விழுந்தது.
சஜுவும், அருணும் அமைதியாக நிற்க, கை கழுவி விட்டு வந்த ஆகாஷும், மஞ்சுவும் வாய்க்குள் சிரித்து கொண்டனர்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
Part 20

நாம் இருவரும் ஒன்றாக வளர்ந்தோம்
எனக்கு நீ தோழனானாய்
உனக்கு நான் தோழியானேன்
நம் நட்பு காதல் என்னும்
பரிணாமம் அடையவில்லை
ஆனால் திருமணம் என்னும்
பந்தம் உருவாக்கபட்டது
அதையும் நீ நிராகரித்து
நம் நட்பை உயிர் பெற
செய்துவிட்டாய் நன்றி நண்பனே
“இவ்ளோ தான் உங்கப்பா கொண்டு வந்து கொடுத்தாரா? எங்க அனிக்கு நாங்க எவ்ளோ பண்ணோம் தெரியுமா? இந்த வீடே நிரஞ்சிடுச்சு.” என்று சஜு கொண்டு வந்த சீர்வரிசைகளை மட்டம் தட்டி பேசிக் கொண்டிருந்தாள் கவிதா.
சஜு கோபத்தில் என்ன சொல்லி இருப்பாளோ, ஆனால் சஜுவை நோக்கி அனி வந்து நலம் விசாரித்தாள்.
வெற்றிவேல், ஆகாஷ் சஜு வீட்டில் இருந்து கிளம்பும் போதே, சில பொருட்களை அவர்களுடனும், மீதி பெரிய பொருட்களை நேரடியாக ஆகாஷ் வீட்டுக்கு அனுப்பும் படியும் செய்திருந்தார்.
ஆகாஷ், “எதற்கு மாமா இதுலாம் ? நாங்க எதுவுமே எதிர்பார்க்கல மாமா.”
வேல், “நீங்க எதிர்பர்க்கலேனாலும் செய்ய வேண்டியது என் கடமை மாப்பிள்ளை. ப்ளீஸ் என்னை தடுக்காதீங்க.” என்று சொல்லிவிட்டார்.
ஆகாஷ் அதற்கு மேல் பேசவில்லை. இதே பதிலை தான் ஆகாஷ் வீட்டினருக்கும் வெற்றிவேல் அளித்து சென்று விட்டார்.
சஜு தான் இன்னும் அங்கு இருந்தால் கவி ஏதாவது சொல்வாள், நாமும் கோவத்தில் எதுவும் சொல்லி விடுவோம், வந்த முதல் நாளே பிரச்சனை செய்ய வேண்டாம் என்று ஆகாஷ் அறைக்கு சென்று விட்டாள்.எல்லோரும் அவள் பிறந்த வீட்டை பிரிந்து வந்த சோகத்தில் இருக்கிறாள் என்று எவரும் அவளை தவறாக எண்ணவில்லை. பின் ஆகாஷ் வந்து அவளை சாப்பிட அழைத்தான். சாப்பிட்டு விட்டு குட்டீஸ்களுடன் சிறிது நேரம் பேசி விட்டு அவர்களுடனே மாடிக்கு சென்று விட்டாள்.
ஆகாஷ் மாடிக்கு செல்லும் போது அவள் போர்வையை தரையில் விரித்து கொண்டிருந்தாள். ஆகாஷ்க்கு அவளை வம்பிழுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவளை பற்றி தெரிந்தும் ஏனோ தோன்றியது, சில சமயம் நமக்கு தோன்றும் எண்ணங்களுக்கு காரண காரியம் இருக்காது. அது போல தான் ஆகாஷிற்கு இப்பொழுது தோன்றியது.
ஆகாஷ், “மேடம், ஏன் தரையில் படுக்கிறாங்கன்னு இப்ப தான தெரியுது, அவ்ளோ பயம் ?.” என்று சிரித்தான். அவள் பல்லை கடிக்கவும்,
ஆகாஷ், “நான் யாரையும், என் கட்டில படுக்க வேணாம்னு சொல்ல மாட்டேன்பா.” என்று தோளை குலுக்க,
சஜு பொறுமை பறந்தது, “ஏய், இப்போ என்ன வேணும் உனக்கு? நான் மேல கட்டில படுக்கணுமா? நான் ரெடி, நீ என் உதய வாங்க ரெடியா ? நாளைக்கு ஆபீஸ் போகணும்னு சொன்ன, அதுனால இங்கயே நிம்மதியா தூங்கறியா? இல்ல ஆபீஸ்ல போய் தூங்கறியானு நீயே முடிவு பண்ணிக்கோ. எனக்கு ஒன்னும் பயமில்ல.” என்று மற்றவர்களை கத்தி எழுப்பி விடுபவள் போல கத்தவும்,
ஆகாஷ், “சரி சரி நீ இவ்ளோ சொல்றதால, நான் இங்கயே நிம்மதியா தூங்கறேன் , நீ கீழேயே பட.” என்று சமாதானத்திற்கு இறங்கினான், இல்லை என்றால் மேலும் கத்தி மற்றவர்களை எழுப்பி இருப்பாள். ஆகாஷ் நல்லவேளை சமாதானம் செய்து தப்பித்தான்.
காலை விடிந்தது, ஆகாஷ் அலுவலகத்துக்கு கிளம்பி கொண்டிருந்தான். சஜுவும் எழுந்து குளித்து சாமி கும்பிட்டு தன் அத்தையை தேடி சென்றாள். செல்லும் போது நந்துவும், சிந்துவும் விளையாடிக் கொண்டிருந்தனர், இவளை பார்த்து, “குத் மொனிங் சிட்டி.” என்றனர்.
அவர்கள் இருவருக்கும் குனிந்து முத்தம் தந்து, அவர்களையும் அழைத்து கொண்டு உணவறைக்கு சென்றாள். அவர்களை இருக்கையில் அமர வைத்து, சமையலறை உள்ளே சென்றாள். அங்கு அனி பிள்ளைகளுக்கு பால் கலந்து கொண்டிருந்தாள், சஜு தன் அத்தைக்கு காலை சாப்பாடை உணவறையில் எடுத்து வைக்க உதவினாள். அனியிடம், “கொடுங்க கா நான் கொடுக்கிறேன் குட்டீஸ்களுக்கு.” என்று அவளிடம் இருந்து சிப்பர்களை வாங்கினாள்.
நந்துவுக்கும், சிந்துவுக்கும், ஆளுக்கு ஒன்று கொடுக்க, நந்து, “இது வேணாம், ரெத் டான் எனக்கு.”
சிந்துவும், “ஸித்தி மாடிட்டா, எனக்கு புளு.” என்று சொல்ல
சஜு, “ஓ சித்தி மாத்திட்டேனா, சரி இந்தாங்க செல்லங்களா.” என்று அவரவர்கள் சிப்பரை கொடுத்தாள். அவர்களும் சமர்த்தாய் குடித்தார்கள். சஜுவுடன் வந்தமர்ந்த அனியிடம், “பரவாயில்லையே கா, சமர்த்தா குடிக்கிறாங்களே.”
அனி, “இது எல்லாம் சமர்த்து தான், இன்னும் இவங்க சாப்பாடு சாப்பிடும் அழகை பார்க்கலையே அப்போ தெரியும் .”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, கவிதா குளித்து முடித்து, சிறிது தன்னை அலங்கரித்து கொண்டு வந்திருந்தாள்.
கவி, “அத்தை டிபன் செஞ்சாச்சா? நா சாப்பிட்டு கிளம்பறேன் அத்தை .”
அனி, “ஏன் கவி இன்னும் ஒரு நாள் இருக்க கூடாதா?.”
கவி, “இல்ல கா, நேற்றே ஆபீஸ் போக வேண்டியது, நீ சொன்னதால தான் இருந்தேன், ப்ளீஸ் கா இன்னிக்கு போகணும்.” எனவும் சரஸ் வந்து அவளுக்கு உணவு பரிமாறினார்.
அப்பொழுது ஆகாஷும் வந்து விட அவனுக்கும் சஜுவுக்கும் சேர்த்து உணவை வைத்தார். ஆகாஷ் சிந்துவையும், நந்துவையும் கொஞ்சி விட்டு, சாப்பிட ஆரம்பித்தான். அனி அத்தைக்கு உதவினாள்.
கவி, “ஆகாஷ் என்னையும் என் ஆபீஸ்ல ட்ராப் பண்றீங்களா?.”
ஆகாஷ், “ஹே கவி , இன்னிக்கு சீக்கிரம் போகணும் பா, நீயே ஏதாவது arrange பண்ணிக்கோயேன்.” எங்கே தன் மனைவி கோவம் கொள்வாளோ என்ற காரணத்தால், அவளை ஒதுக்க நினைத்தான்.
ஆனால் கவி.” அத்தை, நீங்க சொல்லுங்க அத்தை, ஆகாஷ் ஆபீஸ் பக்கத்துல இருக்க கார்மெண்ட்ஸ் க்கு என்ன ட்ராப் பண்ண இவ்ளோ யோசிக்கிறார்...”
சரஸ் வெள்ளந்தியாக மகனிடம் கவிக்கு பரிந்துரைத்தார்.” கவிய கூட்டிட்டு போ பா ஆகாஷ், அவளும் உன் கல்யாணத்துக்கு லீவ் லா போட்டு இருந்தாள, அவளுக்கும் வேல நிறைய இருக்கும், அதான் அவளும் சீக்கிரம் கிளம்பிட்டா .”
பாவம் சரசுக்கு, கவி ஆகாஷுடன் தனியாக பேச வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தனியே அவளும் சீக்கிரம் கிளம்பினாள் என்று தெரியாது.
ஆகாஷால் மறுக்க முடியவில்லை, “சரி மா.” என்றான்.
உடனே கவி தன் அத்தையை கட்டிக் கொண்டு, “அத்த னா அத்தை தான்.” என்று சஜுவை ஒரு பார்வை பார்த்து கொண்டே அவர் கன்னத்தில் முத்தமிட்டாள். இவர்கள் எல்லாம் உனக்கு முன்பே எனக்கு தான் அதிக சொந்தம், உரிமை என்ற பாவத்தோடு இருந்தது அவள் பார்வை.
சஜுவும் அவள் பார்வையை பார்க்க தவறவில்லை. பின் இருவரும் ஜோடியாக காரில் முன் இருக்கையில் சென்றதை ஒரு வித கையாலாகாத தனத்துடன் பார்த்து கொண்டிருந்தாள் சஜு.
பின் அனியுடன், சஜு, “ஏன் கா, கவியும், வேலை பார்க்கிறாளா.”
அனி, “ஆமா சஜு, பேஷன் டிசைனிங் படிச்சிட்டு இப்போ தான் 1 இயரா நம்ம கார்மென்ட்ல சேர்ந்திருக்கா.” என்றாள்.
சஜுக்கு நிறைய சந்தேகம், இவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள், ஆகாஷ் என்ன செய்கிறான், இது போன்ற பல கேள்வி, இதையெல்லாம் அனியிடம் கேட்டால், “ஆகாஷ் இதை கூட சொல்லவில்லையா?.” என்று, அவள் இவளை சந்தேகப்பட ஆரம்பித்து விடுவாள் என்று அமைதியாக இருந்தாள்.
காலை பொழுதை சஜு குழந்தைகளுடன் செலவு செய்தாள்.
காரில் போகும் போது கவி ஆகாஷிடம், “ஆகாஷ், நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணுமே.”
ஆகாஷ் கவி இருவரும் சிறு வயது முதலே நல்ல நண்பர்களாக பழகினர். பின் இவர்களுக்கு திருமணம் செய்ய பெரியவர்கள் முடிவு செய்த போது, கவிக்கு சிறு சந்தோசம் தான், தன் நண்பனே தனக்கு கணவனானால், எதிர்கால வாழ்க்கை நன்றாக செல்லும் என்று நினைத்தாள், இருந்தாலும் நட்பு என்ற நிலை வேறு, காதல் என்ற நிலை வேறு, அவளும் சற்று யோசித்தாள்.
ஆகாஷக்கு கவி ஒரு நல்ல தோழி தான், ஆனால் தன் வாழ்க்கை தன் மனதில் வாழும் சஜுவுடன் தான் என்று கற்பனை செய்து, கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆகாஷிற்கு தான் அதிர்ச்சி.
மேலும் அவன் ஒத்துக்கொள்ளவில்லை எனவும், வேறு பெண் என்றாலும் பரவாயில்லை அவன் திருமணம் செய்தால் போதும் என்று இருந்தார்கள். அதற்கும் அவன் பிடி கொடுக்க வில்லை என்றதும், ஆகாஷின் குடும்பத்தினர் தாத்தாவின் உடல் நிலை காரணமாக அவனை கல்யாணத்திற்கு துரிதப்படுத்தினர். அப்பொழுதும் அவன் அசையாமல் இருக்கவும், தாத்தாசொத்துகளை பிரித்து உயில் எழுதி விட்டதாகவும், அவன் திருமணம் செய்தால் தான் அவனுக்கு சேர வேண்டிய சொத்து வரும் என்று அவனை கார்னர் செய்யவும், ஆகாஷ் இதற்கு ஒரு தீர்வு கண்டான்.
தன் மனதில் இருக்கும் சஜுவை மறக்க முடியாது என்று உறுதியாக இந்த சில வருடங்களிலேயே உணர்ந்தவன். அவளை தேடவும் முயன்றான். ஆனால் பலன் தான் பூஜ்யமாயிற்று. இவர்களுக்கு தேவை தான் ஒரு கல்யாணம் செய்ய வேண்டும் அவ்வளவு தானே. அதனால் ஆகாஷ் ஒரு மாஸ்டர் பிளான் போட்டான். தன் நண்பர்கள் சுகன் மற்றும் புகழ் துணையுடன் ரமா எனும் பெண்ணை பிடித்து, தன் திருமண நாடகத்தில் தனக்கு மனைவியாக ஒரு வருடம் நடிக்கும் படி ஏற்பாடு செய்தான்.
பிள்ளையார் பிடிக்க குரங்கான கதை உண்டு, ஆனால் ஆகாஷ் விசயத்தில் குரங்கு பிடிக்க போய் பிள்ளையார் ஆகிற்று. இது அவன் காதலின் பலன் என்றே எண்ணினான் ஆகாஷ்.
கவிக்கோ தன் நண்பன், தன்னுடனான திருமணம் வேண்டாம் என்று சொல்வதாக கேள்விப்பட்டவள். அவனிடம் நேரிடையாக, “ஏன் என்னை திருமணம் செய்ய பிடிக்க வில்லை.” என்று கேட்டு, தன் நண்பனை தர்மசங்கடமான நிலையில் நிறுத்த பிடிக்கவில்லை. தன்னுடன் பகிர வேண்டிய முக்கியமான விஷயம் என்றால் அவனே தன்னிடம் தெரிவிப்பான் என்று பொறுமை காத்தாள். ஆனால் ஆகாஷிற்கு சஜுவுடன் திடீர் என்று திருமணம் நடந்ததும். தன் நண்பன் நன்றாக வாழ்ந்தால் போதும், நமக்கென்று ஒருவன் பிறந்திருப்பான் என்று நினைத்தாள். கவிக்கு தன் நண்பனின் மனைவி தன் நண்பனுக்கு ஏற்றவளா என்ற குறுகுறுப்பில் சஜுவையே கவனித்தாள்.
ஆகாஷ் சந்தோசமாக தான் இருக்கிறான், ஆனால் சஜு அப்படி தெரியவில்லையே என்று சந்தேகத்தோடு அவள் அவர்கள் திருமணத்தின் போது இருந்தே கண்காணித்தாள்.
ஆகாஷுடன் நெருங்கி கடலில் ஆட்டம் போட்ட போதும் சஜு பொறாமை படவில்லை, அவனுடன் தனித்து இருக்கும் போது, புது பெண்ணுக்கு உரிய நாணமும் அவளிடம் இல்லை. ஒரு வேளை காதலித்து திருமணம் செய்ததால், அவன் ஏற்கனவே அறிமுகமானவன் என்பதால் இப்படி இருக்கிறாளா? ஆனால் அனி, அவி அத்தானை பார்த்தால், இன்னும் அவர்கள் முகத்தில் காதல் மின்னும், பல சமயம் அனி நேற்று தான் திருமணானவள் போல் வெக்கப்படுவதை கவி பார்த்திருக்கிறாள்.
ஆனால் சஜு ??? அதனால் தான் சஜுவிடம், அவளை ஆகாஷ் காதலித்தானா? என்று வினவினாள். அவள் துமிராக பதில் அளிக்கவும், தன் மேல் பொறாமை கொள்கிறாள் என்று தெளிவானாலும், அவர்களுக்கிடையே ஏதோ ஒன்று சரியில்லை என்று புரிந்து கொண்டாள்.
அதை சரி செய்யும் முயற்சியாக தான் ஆகாஷிடம் தனியாக பேச வேண்டும் என்றாள்.
ஆகாஷ், “ஓ எஸ் கவி, தாரளமா பேசு .”
கவி, “இப்போ இல்ல ஆகாஷ், தனியா எங்காவது போய் பேசவேண்டும், இன்று மதியத்திற்கு மேல் நேரம் ஒதுக்க முடியுமா?.”
ஆகாஷ், “இன்னிக்கு ?.” நெற்றியை சுருக்கி யோசித்து, “possibility கம்மி மா, வொர்க் நிறைய இருக்குதே, ஏன் பா அவசரமா பேசணுமா ?.”
“அவசரம் இல்ல ஆகாஷ், ஆனால் அவசியம் இருக்கு, k உங்க வேலையெல்லாம் முடிச்சிட்டு, நீங்க ப்ரீயா இருக்கும் போது சொல்லுங்க பேசலாம்.”
“k டா, sure.”
வீட்டில் சஜு, ஆகஷ்க்காக மதிய உணவிற்கு காத்திருக்க, அப்பொழுது அனி தன் பிள்ளைகளுக்காக சாப்பாடு ஊட்ட தட்டுடன் வந்தாள். சஜுவும் பேசிக்கொண்டே அவளுடன் சென்றாள்.
குட்டீஸ் இரண்டும் இருந்த நிலையை பார்த்து அதிர்ந்தாள் சஜு.
அனி, “ஏய் என்ன இது, ஏன்டா இப்படி சண்ட போடறீங்க?.” என்று வினவி, கையிலே சாப்பாடு தட்டுடன் இருந்ததால், சஜுவிடம், “சஜு, அவங்கள பிரிச்சு விடு.” என்றாள்.
சிந்து முடியை நந்துவும், நந்துவின் முடியை சிந்துவும் பிடித்து கொண்டு மாறி மாறி ஆட்டி கொண்டிருந்தார்கள். சஜு அவர்களை பிரித்து விடும் முன் அவர்களே பிரிந்து, நந்து, “அம்மா, ன சண்ட இல்ல வெள்ளாடுறோம்.” என்றான்.
சிந்து, “சிட்டி, நீ வெல்லாண்டேல சித்தப்பா முடி பிடிச்சு அது டான்.” என்று அவள் அம்மாக்கு நல்ல பிள்ளையாக விளக்கம் கொடுத்து, சஜுவை மாட்டிவிட்டாள்.
அனி விசித்திரமாக சஜுவை பார்த்தாள். சஜுவின் பாடு ??????????
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
Part 21

என்ன ஆகிற்று நம் காதல்
ஏன் எப்பொழுதும் முறைத்து
என் காதலை கொல்ல
உன்னை நீயே வருத்துகிறாய்
ஒன்றை தெரிந்து கொள்
நம் காதல் கடலில்
நீயும் என்னுடன் பயணிக்கிறாய்
என்பதை மறந்து விடாதே ...
“எப்போவும் நீ தான் கவி மேடம கூப்பிட்டுட்டு போவியா? ஏன் மேடம் தனியா போ மாட்டாங்களா?.” என்று சஜு அவர்கள் தனியறையில் இரவு வீட்டுக்கு வந்து புத்தகம் படித்து கொண்டிருந்த ஆகாஷிடம் வினவினாள்.
ஆகாஷ், “இல்ல, வீட்ல இருந்து அவள ஆபீஸ்க்கு மாமா ட்ராப் பண்ணிடுவார், ஈவெனிங் மட்டும் தான் நானோ இல்ல அவியோ அவள அவ வீட்ல ட்ராப் பண்ணுவோம் .”
சஜு, “ஓ அப்போ, தினமும் 2 பேரும் ஈவெனிங் ஒன்னா தான் வருவீங்களா?.”
ஆகாஷ் அவள் என்ன நோக்கில் புரிந்து கொண்டாள் என்பதை புரிந்து, “சஜு கவிய சந்தேகப்படுறியா? ஷி இஸ் மை பெஸ்ட் பிரன்ட். அவள தப்பா நினைக்காத .”
சஜு, “நா ஒன்னும் அவள தப்பா நினைக்கல, உன்ன தான் நினைக்கிறன். ஆமா அவ என்ன வேல பண்றா ? நீ என்ன வேல பார்க்குற?.”
ஆகாஷ், “தேங்க்ஸ் சஜு எப்போவும் என்னை நினைக்கறதுக்கு.” என்று அவளை நோக்கி நகர்ந்தான்.
சஜு நெற்றி சுருக்கி, “நாம் ஒன்று கேட்க, இவன் என்ன சொல்கிறான்.” என்று யோசித்து தன் டயலாக்கை ரீவைண்ட் செய்து பார்த்தாள், “நான் உன்ன தான் நினைக்கிறேன்.” சொன்னத அய்யா யூஸ் பண்றாராக்கும் என்று தெளிவு பெற்று,
“போதும், முடியல கடி ஜோக், கேட்டதுக்கு பதில் சொல்லு.” என்று அவன் அருகே வருவதை பார்த்து சோபாவில் அமர்ந்தாள்.
அவனும் சோபாவில் அமர்ந்து பதிலளிக்க தொடங்கினான். “உனக்கு ஏற்கனவே தெரியுமே ச்ஜு, நாங்கள் ஜவுளி வியாபாரம் செய்கிறோம் என்று. அண்ணன் இங்கயே M B A முடித்து விட்டு, பிசினசை கையில் எடுத்தவன், அவன் பங்குக்கு சில்லறை வியாபாரமாக இருந்ததை மொத்த வியாபாரமாக மாற்றி விட்டான். அதன் பின் நானும் வெளிநாடு... சென்று... மேலாண்மை படித்து முடித்து விட்டு, நானும் வியாபாரத்தில் பங்கேற்று, என் பங்கிற்கு, நாமே ஆடை தயாரிக்கலாம் என்று கார்மென்ட்சை நிறுவினேன். இதில் பேஷன் டிசைனிங் ஹெட்டாக கவி இருக்கிறாள். கவியின் அப்பா, அதாவது எங்கள் மாமா கார்மென்ட்சில் அவர் பணத்தை இன்வெஸ்ட் செய்திருக்கிறார், அது மட்டும் அல்லாமல், நம் கம்பெனியில் நிறைய ஷேர்களை அவர் வாங்கியிருக்கிறார்.” என்று தன் மனைவிக்கு நீள விளக்கம் சொன்னான்.
சஜு, “ஓ அப்போ கவியும் ஒரு எஜமானியம்மவா? சரி அது எனக்கு தேவையில்லை, ஆனால் பானு எனக்கு போன் செய்தாள்.” என்றாள். அவன் நெற்றி சுருக்கவும், “என் பிரன்ட் நம்ம receptionக்கு கூட வந்திருந்தாள அவ அம்மா கூட.” என்று அவனுக்கு ஞாபகப்படுத்தினாள்.
ஆகாஷ், “இதை ஏன் தன்னிடம் சொல்கிறாள்.” என்ற பாவத்தோடு, “இம்ம் சரி .”
சஜு, “அவளுக்கு, நம்ம கம்பெனில ஒரு வேலை போட்டு கொடுக்க முடியுமா ? ப்ளீஸ்.”
ஆகாஷ், “அவங்கள, நாளைக்கு நம்ம கம்பெனிக்கு வர சொல்லு, நா ஜாப் arrange பண்றேன் .”
“தேங்க்ஸ்”, ஆகாஷ், “வெறும் தேங்க்ஸ் மட்டும் தானா ?.”
சஜு, “இப்ப சொன்ன தேங்க்சே அதிகம், முதல்ல அவளுக்கு வேலை கொடுக்கறீங்களான்னு பார்ப்போம்.” என்று கீழே படுத்து விட்டாள்.
ஆகாஷும் லைட்டை அனைத்து விட்டு படுத்தான். இருவரும் இன்று நிகழ்ந்ததை நினைத்து கொண்டு படுத்திருந்தனர் .
அனி விசித்திரமாக சஜுவை பார்க்கவும், சஜு கஷ்ட்டப்பட்டு சிரித்து, வெக்கப்படுவது போல் தயங்கி தயங்கி, “அக்கா, அது வந்து, அன்னிக்கு அவருக்கு தலைல எண்ணெய் தேச்சு விட்டேன், அத தான் குட்டீஸ் பார்த்துட்டாங்க கா.” என இழுத்து இழுத்து சொன்னாள்.
அனி சிரித்தாள், ஆனால் நம் சிந்து இருக்கே ஒன்னாம் நம்பர் புத்திசாலி, “உன் கைல என்னை இல்ல அம்மா பொய்ய்.” என்றது சஜுவை பார்த்து, நந்துவும், “ஆமா ஆமா அம்மா போய் என்ன பாத்திலே இல்ல.” என்று தன் உடன்பிறப்புக்கு சப்போர்ட் செய்தான்.
சஜு அனியை பார்த்து சங்கடப்பட்டு சிரித்து கொண்டே, “நிஜமா, எண்ணெய் தான் தேச்சு விட்டேன்.” என்று குழந்தைகள் அருகில் முட்டி போட்டு சொன்னாள்.
நந்து, “சிட்டபா வெள்ளாட்டு சொன்னாக”, சிந்துவும், “ஆமா எனக்கு சொல்லிடாறேன் சொன்னங்க.” எனவும்
சஜுக்கு பொறுமை போயிற்று. “இம் உங்க சித்தப்பா தான சொன்னாரு அவர்கிட்டயே கேளுங்க, என்ன விளையாட்டுன்னு.” என்று எழுந்து கொண்டாள்.
அங்கேயே மேலும் தன் மானம் போகுமோ என்று பயந்து, அனியிடம், “அக்க கொடுங்க நா ஊட்டுறேன்.”
“இல்ல சஜு, அவங்க அடம் பண்ணுவாங்க சாப்பிட, நானே ஊட்டுறேன்.” என்று அனி மறுத்தும், “இல்ல கா நா சமாளிச்சு வேடிக்கை காமிச்சு ஊட்டுறேன்.” என்று அனியை அங்கிருந்து கிளப்பினாள்.
மேலும், “சித்தி ஊட்டவா? செல்லங்களா.” என்று அவர்களிடம் கேட்டாள். அவர்களும் புதிதாய் வந்த தங்கள் சித்தியுடன் சேர்ந்து கொண்டார்கள். சிந்து அப்பொழுதும் டீல் பேசினாள், “நா தொட்டடுல ஊதுன டா சாபிட்வேன்.”
சஜு, “k k வாங்க போகலாம்.” என்றதும், நந்து, “அய்யா ஜாலி ஜாலி”என்று குஷியானான். மூவரும் வீட்டை சுற்றி இருக்கும் தோட்டத்திற்கு சென்றனர். இவர்கள் செல்வதையே மூவரும் பார்த்தனர், அந்த மூவர் அனி, சரஸ், அஞ்சும்மா.
அஞ்சுமா, “நல்ல பொண்ணா தான் என் பேராண்டி செலக்ட் பண்ணிருக்கான்.”
சரஸ், “ஆமா அத்தை, சஜு ரொம்ப நல்ல பொண்ணா இருக்கா .”
அனி, “அப்போ நானு.” என்றவளை, சரஸ், “அவள் காதை திருகி, “நீயா ? சேட்டை செய்யும் பொண்ணு.” எனவும், அஞ்சுமா, சரஸ், அனி என அனைவரும் சிரித்தனர்.
பாவம் இவர்களுக்கு தெரியவில்லை எது சேட்டை செய்யும் பெண் என்று.
ஆகாஷ் கம்பெனிக்கு சென்று, வேலையில் மூழ்கினவன் தான், சாப்பாட்டு நேரத்திற்கு கூட வீட்டிற்கு செல்ல முடியாத அளவு வேலை குவிந்திருந்தது. அதனால் சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வர முடியாது என்று தகவல் சொல்லி விட்டு வேலையில் மூழ்கினான்.
எப்பொழுதும் விடுமுறைக்கு பின் வேலைக்கு செல்லும் ஆகாஷிற்கு வேலை இருக்கும் தான் ஆனால் அதிக அளவில் இருக்காது. ஏனென்றால் அவன் விடுமுறை எடுக்கும் முன்பே எல்லா வேலையும் முடித்து, விடுமுறைக்கு பின் ஒரு சில வேலையும் வைத்து கொள்வான்.
அதனோடு அன்றைய வேலைகளும் சேர்ந்து இருக்கும் அவளவு தான். ஆனால் தற்பொழுது எதிர்பார்க்காமல் ஒரு வாரம் விடுமுறை எடுக்க நேர்ந்ததால், ஆபீஸில்இவன் கையெழுத்திற்கு, சரி பார்பதற்கு என வேலைகள் குவிந்திருந்தன. என்ன தான், தன் நண்பன் சுகன் இருந்தாலும், ஆகாஷ் எதையும் தன் நேரடி பார்வையில் தான் எல்லாவற்றையும் செய்து முடிப்பான்.
ஓரளவு முக்கிய வேலை முடிந்த பின், அவியை தேடி சென்றான். அவனை பார்த்த அவி, “வா டா புது மாப்பிள்ள, அப்புறம் மறு வீடுலாம் எப்படி போச்சு?.”
ஆகாஷ், “இம்ம், நல்ல தான் போச்சு .”
அவி, “அப்புறம் ஏன்டா சஜு உன்னையே முறைச்சிட்டே இருக்க மாதிரி இருக்கா?.”
ஆகாஷ் கவி வந்ததால் தான் அவள் தன்னை முறைக்கிறாள் என்பதை சொல்லாமல், “அது ஒன்னும் இல்ல அவி, எல்லோரும் இருக்கும் போது கொஞ்சம் ஓவர் ரொமான்ஸ் ஆகிடுச்சு, அதான் அவளுக்கு கோவம் எல்லோரும் இருக்கும் போது, மானம் போகுதேன்னு.” என்று பாதி உண்மையும் பாதி பொய்யும் உரைத்தான்.
அவி, “ஏன்டா மத்தவங்க இருக்கிறது கூட தெரியாம, இப்படியாடா ரொமான்ஸ் பண்ணுவ?.”
ஆகாஷ், “ஏய் அத பற்றி, நீ பேசக்கூடாது, வீட்ல நீ பண்ற லூட்டில, உன்ன தனி குடுத்தனம் வைக்கலாமானு, பேச்சு வார்த்தை நடந்துட்டு இருக்கு டா அண்ணா.”
அவி, “சரி விடு விடு, இப்ப என்னடா இந்த பக்கம் வந்திருக்க?.”
ஆகாஷ், “இல்ல உன்ன பார்க்கலாம்னு தான், ஆமா தாத்தாக்கு நிஜமாவே முடியாம தான் இருந்தாரா? அத பற்றி விசாரிச்சியா?.”
அவி, “விசாரிச்சேன்டா ஆகாஷ், நாம தான ஸ்கூல்ல, காலேஜ்ல தாத்தாவின் உடல் நிலைய பொய்யாகா காரணம் காட்டி லீவ் கேட்போம், ஆனால் நம் வீட்டு பெரியவர்கள், தத்தாவின் உடல் நிலை மோசம் என்று சொல்லி, உன்னை கல்யாணம் செய்ய நிர்பந்தபடுத்தி இருக்கிறார்கள். காணாததுக்கு நிஜமாவே உயில் வேறு எழுதி இருக்கிறார். நம் பெருசுக்கு குசும்ப பார்த்தியா? நல்ல வேளை அவர்கள் நினைத்தது போல உனக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு, என்ன ஒன்னு நீயா பண்ணிகிட்ட அவ்ளோ தான்...”
ஆகாஷ், “விடு அவி என் நல்லதுக்கு தான அப்படி செஞ்சார், அதுவும் நல்லதாவே முடிஞ்சிடுச்சு, நான் கூட பயந்துட்டேன், எதுவும் சீரியசோனு.”
அவன் தாத்தாவிற்கு சீரியஸ் என்றும், படுத்த படுக்கையாக இருக்கிறார், உன் கல்யாணத்தை பார்க்க தான் உயிரை கையில் பிடித்து வைத்திருக்கிறார் என்று பயமுறுத்தினார்கள். வேறு யாரு, அஞ்சும்மா தான் ஆகாஷை பயமுறுத்தினார்.
தான் சென்று பார்க்கிறேன் என்று சொன்னதற்கு கூட, நீ கல்யாணம் செய்து ஜோடியுடன் போனால் தான் அவருக்கு ஆறுதலாக இருக்கும் என்று சொல்லி அதற்கும் முட்டுக் கட்டை போட்டனர். சரி, நான் போகவில்லை, நீங்களாவது போங்கள் என்று அஞ்சும்மாவையும், சரசையும் கிளப்பினதற்கு கூட அஞ்சும்மா தன் கணவனை அந்த துயர நிலையில் பார்க்க விரும்பவில்லை என்று போக மறுத்து விட்டார். தந்தையிடம் முறையிட்டதற்கு, “am ஹெல்ப்லஸ் மை பாய்.” என்ற போக்கில் நடந்து கொண்டார்.
அதனால் தான் ஆகாஷ், ரமாவை பொய்யாக திருமணம் செய்யலாம் என்று திட்டம் தீட்டினான். ஒரு bond பேப்பரில் ரமாவை பொய்யாக திருமணம் செய்வதாகவும், ஒரு வருடத்திற்கு மட்டுமே இந்த பொய்யான பந்தம் எனவும், அதன் பின் தன் வீட்டில் அவள் இருக்க கூடாது என்றும், இதற்கு சம்பளமாக ரூபாய் பத்து லட்சம் தான் தருவதாகவும், ஒரு வருடத்திற்கு பின் mutual டிவோர்ஸ் செய்து விடுவதாகவும் எழுதப்பட்டு ரமாவிடம் கையெழுத்து வாங்கி இருந்தான். பொய்யான திருமணம் என்றாலும் மற்றவர்களுக்கு உண்மையான திருமணம் போல் இருக்க வேண்டும், என்பதற்காக தான் register ஆபீசில் பதிவும் செய்திருந்தான், டிவோர்ஸ் பேப்பர்ஸூம் வாங்கி வைத்திருந்தான்.
அவி, “anyway எல்லா problem solved. உன் marriageம் முடிஞ்சிடுச்சு, தாத்தாக்கும் ஒன்னும் சீரியஸ் இல்ல, இப்ப நம்ம குடும்பமும் நிம்மதியா இருக்கு .”
ஆகாஷ், “ஆமாம் டா அவி, சரி நா கிளம்புறேன், நீ வரியா?.”
அவி, “கிளம்பனும் டா, நீ போ, நா வரேன்.” என்றதும், ஆகாஷ் கிளம்பி வீட்டிற்கு வந்தான்.
வந்தவன் ரெப்ரெஷ் செய்ய தன் அறைக்கு சென்றான். சஜு டிபனும், டீயும் எடுத்து கொண்டு மாடிக்கு சென்றாள். அப்பொழுது சிந்துவும், நந்துவும் அவள் பின்னே மாடி ஏறி வந்து கொண்டிருந்தனர். “சிட்டி, சிட்டப்பா வந்தாகலா.” நந்து கேட்டான்.
சஜு, “இம் வந்துட்டார்.”
சஜுவை முந்தி கொண்டு இருவரும் மாடி ஏறினர் . அவளும் சிரித்து கொண்டு வழி விட்டாள்.
இவள் அறைக்கு செல்லும் போது, நந்து ஆகாஷ் காலில் ஊஞ்சல் ஆட, சிந்து ஆகாஷ் முதுகில் சொகுசாக சாய்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தாள்.
ஆகாஷ், “சரி சித்தப்பா, டீ குடிச்சிட்டு உங்கள உப்பு மூட்ட தூக்குறேன், அது வரைக்கும் உக்காருங்க.” என்றான்.
அவர்களும் சமத்தாய் அமர, சிந்து, “சிட்டபா, உப்பு மொட்ட வேணாம் அணிக்கு முடி பிடிச்ச வெள்ளாட்டு சொல்லி தாரியா?.” என்று வினவும், ஆகாஷிற்கு புரை ஏறியது.
சஜு, “மாட்டிக்கிட்டான், நல்ல ஏறட்டும்.” என்று நினைத்து புன்னகைத்து கொண்டிருக்கும் போது, நந்து, “அடு வில்லாட்டு இல்ல சொல்றாக சிட்டி, நீ சொல்லு சிட்டப்ப, சிட்டி போய் டான சொல்ற.”
ஆகாஷ் என்ன நடந்திருக்கும் என்று யூகித்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
Part 22

உன்னை கண்ட பின்பு தான்
ஒன்றை அறிந்து கொண்டேன்
எல்லா கவிதையிலும் சொல்வது போல
கண்கள் காதலை காட்டும்
அன்பை உணர்த்தும் என
நினைத்தேன்... ஆனால்...
கண்கள் கோபத்தை கூட காட்டும்
என்று இப்பொழுது தெரிந்து கொண்டேன்...
நந்து, “சிட்டி உனக்கு என்ன டேச்சு விட்டான்கலாம், நிஜமா?.” என நந்துவே விடையும் கொடுக்க
ஆகாஷ், “ஆமாம் டா சித்தி எண்ண தான் தேச்சு விட்டாங்க .”
சஜு சிறிது கடுப்பாக இருந்தாள், தன்னை மட்டும் அனி முன்பு மாட்டிவிட்டு விட்டு இவனை மட்டும் தனியாக விசாரிக்கிறார்கள் என்று கடுப்பானாள்.
அதற்குள் சிந்து, “பிரகேன் ஆத்துநாங்க.” என்று விவரமாக வினவ, சஜுவை ஓரக்கண்ணால் பார்த்து, சிரித்து கொண்டு, “அப்படி ஆட்டுனா தான் முடி வளருமாம், இல்லையா சஜு.” என்று அவளையும் இழுத்தான்.
சஜு, “சித்திக்கு வேல இருக்கு, நான் கீழே போறேன்.” என்று எஸ்கேப் ஆனாள்.
போகும் சஜுவையே பார்த்து கொண்டிருந்த ஆகாஷிடம் நந்து, “அப்பொ அடு விள்ளாட்டு இல்லியா, சேரி சிட்டப்பா வேற விள்ளாட்டு சொல்லி தா .”
ஆகாஷ் திருமணத்திற்கு முன் அதிக நேரம் இவர்களுடன் தான் செலவழிப்பான். இரவு தூங்கும் நேரத்தை தவிர குழந்தைகளும் இவனுடன் தான் இருப்பார்கள். குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம், சாக்லேட் வாங்கி தருவது, சில சமயம் பைக்கில் வெளியே அழைத்து செல்வது, அவர்களுக்கு சரியாக விளையாடுவது என நன்றாக வைத்து கொள்வான், அதனால் குழந்தைகளும் சித்தப்பா என்றால் உயிராக இருப்பார்கள்.
குழந்தைகளை தன்னுடன் வைத்து கொண்டு அடிக்கடி அவிக்கும் ப்ரீயாக ரொமான்ஸ் செய்ய ஹெல்ப் செய்வதால் அவியும் தன் தம்பிக்கு அவ்வப்போது சப்போர்ட் செய்வான். பொதுவாக அவிக்கு ஆகாஷ் மேல் தனி அன்பு பாசம் வைத்திருப்பான். அதனால் ஆகாஷும் தன் மேல் அன்பை பொழியும் அண்ணனை, அண்ணன் என்று தான் அழைக்க வில்லை என்றாலும் அவனும் பாசமுடன் இருப்பான்.
இருவரும் இவ்வாறு அன்று நிகழ்ந்ததை நினைத்து உறங்கினர். மறு நாள் விடிந்தது, வீட்டு வேலைகளை செய்ய பணியாளர்கள் இருப்பதால், வழக்கம் போல் சஜு குழந்தைகளுடன் நேரம் போக்கினாள். அவர்களுடன் விளையாட, அவர்களுக்கு கதை சொல்ல என்று நேரம் போக்கினாள்.
எப்பொழுதும் பெரிய தாத்தா வந்தால், அவருடன் விளையாடும் குட்டீஸ், இப்பொழுது புதிதாக சஜு வரவும், அவளிடம் ஒன்றினார்கள். அவளை பின்னேயே விளையாடி திரிந்தார்கள், சஜு நந்து சிந்துவை, நண்டு சிண்டு எனவும், அவர்களும் அவளை சண்டு என்று வாயில் வந்ததை அவள் அழைப்பது போலவே கோர்வையாக சொன்னார்கள். சஜு சித்தி என்பதால் எப்போழுதாவது இவள் அவர்களை வம்பிழுத்தால், அவளை சண்டு என்பார்கள் மற்ற நேரம் சித்தி என்பார்கள். பின்னே அவள் பாட்டுக்கு கோவித்து கொண்டு சென்று விடுவாள், பின் இவர்களுடன் யார் புது விளையாட்டு விளையாடுவார்கள்.
இதற்கிடையில் சஜு ஆகாஷை கொடுமை படுத்த மறக்கவில்லை. ஆகாஷ்க்கும் ஆபீஸ் வேலை சரியாக இருந்தது, அத்துடன் சஜுவின் கொடுமைகளையும் தான் செய்த தவறுக்கு தண்டனை என சகித்து கொண்டான்.
இப்படியே 3 நாட்கள் செல்ல, ஆகாஷ் அன்று மாலை கவியிடம் தனியாக பேச நேரம் ஒதுக்கினான். தன் வேலைகளை முடித்து விட்டு கவியை சந்திப்பதற்கு நேரே கார்மெண்ட்ஸ்க்கு சென்றான்.
அங்கு கவிதா அறையில் கவியும், பானுவும் பேசிக்கொண்டே இருந்தார்கள். வேலை கேட்டு வந்த, அதுவும் சஜு சிபாரிசோடு வந்த பானுவை, தற்காலிகமாக கார்மெண்ட்ஸில் எதாவது ஒரு வேலை போட்டு வைத்துக் கொள்ளும் படி கவியிடம் கூறி இருந்தான். கவி பானுவை தனக்கு உதவியாக வைத்து கொண்டாள், P.A மாதிரி ஆனால் P.A, அல்ல.
பானு தன் அம்மாவின் தொல்லையினால் தான், இங்கு வந்து, வேலைக்கு சேர்ந்தாள். பானுவும் வேலைக்கு விண்ணப்பிப்பாள், வேலைக்கும் செல்வாள் ஆனால் ஒரு சில நாட்களிலே மனதிற்கு பிடிக்கவில்லை என்று வந்து விடுவாள். பிறகு அவள் அப்ளை செய்வது ஸ்கூல் வேலைக்கு, பானு அம்மா பெண் பிள்ளைகளுக்கு டீச்சர் வேலை தான் safety என்று ஒரே பிடிவாதம், அவளுக்கு பொறுமை பத்தாது, அதனால் ஒரு சில மாதத்திலேயே வேலையுடன் ஒன்ற முடியாமல் வந்து விடுவாள். அவளுக்கு அலுவலக வேலை தான் பிடிக்கும்.
அவள் அம்மா தான் நச்சரித்தாள், பள்ளிக்கூட(ம்) வேலைக்கு தான் செல்ல பிடிக்கவில்லை, உன் தோழி சஜுவிடம் கூறி, அவர்கள் கம்பெனிக்கு செல் என்றார். சஜு கணவன் ஆபீஸ் என்றால் safetyயாக தான் இருக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு.
அவர் சஜு receptionக்கு சென்று வந்ததில் இருந்து, ஆகாஷ் குடும்பம் பற்றிய பெருமை தான். எவ்வளவு நல்ல மனிதர்கள், பணக்காரர்களாக இருந்தும் எவ்வளவு தன்மையாய் பேசுகிறார்கள் என்று சந்தோசப்பட்டனர்.
ஆகாஷ், “ஹலோ பானு , ஹாய் கவி .”
பானு, “வணக்கம் சார்.” என்று எழுந்து கொண்டாள்.
ஆகாஷ், “இருக்கட்டும், பானு உக்காருங்க, அப்புறம் ஜாப் எப்படி பிடிச்சிருக்கா?.”
பானு, “எஸ் சார், பிடிச்சிருக்கு.”
ஆகாஷ், “இது தற்காலிகம் தான், கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க, எதாவது vaccancy வரும், வந்தா அதுல மாறிக்கலாம்.”
பானு, “தேங்க் யு சோ மச் சார், சஜு சொன்னதுக்காக, இன்டர்வியூ கூட பண்ணாம வேலைக்கு எடுத்துட்டீங்களே, அதுக்காக நா எவ்ளோ தேங்க்ஸ் சொன்னாலும் பத்தாது சார் .”
ஆகாஷ், “இட்ஸ் ஓகே பானு, நீங்களும் திறமையான பெர்சன் தான், வந்த 2 டேஸ்லேயே ப்ரூப் பண்ணிட்டீங்களே, கவி கிளம்பலாமா ?.”
கவி, “இம் போலாம்பா, ஆமா ஆகாஷ் பானு talented தான். ஆமா பானு நீ எதுல வந்த?.”
பானு, “பஸ்ல தான் கவி.” அவள் கவி என்று விளித்ததிலே, இருவரும் நல்ல தோழிகளாகி விட்டனர் என்று ஆகாஷ்க்கு புரிந்து விட்டது.
கவி, “ஆகாஷ் நம்ம வீட்டுக்கு போற வழில தான் பானு வீடு, அவங்கள ட்ராப் பண்ணிட்டு போவோமா ?.” என்று வினவ,
ஆகாஷ், “யா, நோ problem.” என்று முன்னே கார் பார்கிங் நோக்கி நடந்தான். பின் இருக்கையில் கவியும், பானுவும் ஏறிக் கொண்டனர். பானுவை அவர்கள் வீட்டில் இறக்கி விட்டு, பானு அழைத்தாள் என்று மரியாதை நிமித்தம் அவள் வீட்டிற்கு சென்று டீ குடித்து விட்டு இருவரும் கிளம்பினர். பானு அம்மாக்கு ஆகாஷின் மீதுள்ள மதிப்பு இன்னும் கூடியது.
அதன் பின் ஆகாஷும், கவியும் ஒரு உணவகத்திற்கு சென்று டிபன் ஆர்டர் செய்து அமர்ந்தனர்.
கவி தான் ஆரம்பித்தாள், “ஆகாஷ், என்ன உன்னோட உண்மையான friendனு நினச்சா, நா கேள்வி கேட்கறதுக்கு உண்மையா பதில் சொல்லனும்.”
ஆகாஷ் இதை எதிர் பார்க்காததால், “ஏய் கவி, என்னாச்சு? ஏன் இப்படி கேட்குற?.”
கவி, “நீ முத பதில் சொல்லு பா.”
ஆகாஷ், “ஏன் உனக்கு தெரியாதா? நா உன்கிட்ட எப்போவும் உண்மை தான சொல்வேன் .”
கவி, “அப்படினா k. நீயும் சஜுவும் காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிட்டீங்களா?.”
ஆகாஷ் புன்னகைத்து, “இம்ம் நானும் சஜுவும் தான... காதலிச்சோம், இப்போவும் காதலிக்கிறோம்... கல்யாணமும் நடந்தது கடவுள் அருளால்.”
கவி இவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை போல பார்க்க,
ஆகாஷ், “வெயிட் புரியுற மாதிரி சொல்றேன். எங்க லவ் ஸ்டோரிய?.”
ஆகாஷ் மெல்ல தன் நினைவுகளை பின்னோக்கி நகர்த்த, அவன் மனதில், அவளை முதன் முதலில் சந்தித்த நாள், படமாக ஓடியது.
“சஜுவ, நான் எப்போ பார்த்தேன் தெரியுமா ? வென் ஐ வாஸ் டூயிங் மை பர்ஸ்ட் இயர் B.E .”
கவி, “ஏய் அந்த வயசுலேயே காதலிச்சிட்டியா? அப்பா எவ்ளோ வருஷமா லவ் பண்ண? .”
அவன் இல்லை என்பது போல் தலையாட்டினான். “முழுசா கேளு.” என்று விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தான்.
“1ஸ்ட் இயர் படிக்கும் போது ஒரு நாள் மாலை அப்பாக்கு தெரியாம கார் எடுத்துட்டு என் நண்பனோட ஓட்டிட்டு போனேன். அப்போ தான் கார் ஓட்ட பழகுன சமயம் .”
கொஞ்சம் தடுமாறி கொண்டே மெதுவாக ஒட்டி சென்றான் ஆகாஷ்.
அப்பொழுது அவர்கள் கார் செல்லும் திசையின், எதிர் திசையில் இரண்டு பெண்கள் இணையாக (parallel) அருகருகே சைக்கிள் ஒட்டி கொண்டு வந்தனர். அது சிறிது அகலாமான ரோடு தான் என்றாலும் ஆகாஷ் கார் ஓட்டும் புதிது என்பதால், சிறிது தடுமாறினான். பெண்கள் இருவரும் சரியாக இடது புறமாகவே தான் ஓட்டினார்கள். நம் ஆகாஷ் கத்து குட்டி என்பதால், பெண்களின் சைக்கிளை பார்த்து ஓரமாக ஒதுங்கி ஓட்டுகிறேன் பேர்வழி என்று சைக்கிளின் பக்கமாக ஒடித்து ஓட்ட, சைக்கிள் ஒட்டி வந்த பெண்கள் இருவரும் பயந்து சைக்கிளுடன் விழுந்தார்கள். நல்ல வேளை ஆகாஷ் இவர்கள் விழும் முன் சரியாக பிரேக்கை மிதித்து நிறுத்தி விட்டான். அதன் பின் தான் ஆளுக்கு ஒரு பக்கமாக விழுந்தார்கள்.
அப்பொழுது, “ஐயையோ அம்மா.” என்று அலறல் சத்தம் ஆகாஷை பயமுறுத்தியது.
இவன் ஒட்டி வந்த அழகை பார்த்து பயந்து காரின் ஓரத்தில் ஒருத்தியும், முன்புறம் ஒருத்தியும் விழுந்திருந்தனர். ஆகாஷும் அவன் நண்பனும் முன்புறம் விழுந்து கத்தியவளை நோக்கி சென்றனர்.
அவள் முகத்தை மூடி கொண்டு, “அம்மா.” என்று அழுது கொண்டிருந்தாள். அந்த பெண் பார்க்க சிறு பெண்ணாக, பள்ளி செல்லும் பெண்ணாக, ஒன்பதாவது அல்லது பத்தாவது படிப்பவள் போல இருந்தாள்.
ஆகாஷும், அவன் நண்பனும் அவள் அருகே அமர்ந்து, ஆகாஷின் நண்பன், “பாப்பா, இங்க பாரு, கைய எடு, உனக்கு ஒன்னும் அடிபடல நல்லா தான் இருக்க எந்திரி.” என்று சொல்லவும் தான். அவள் விழித்து பார்த்தாள்.
“நா நல்லா தான் இருக்கேனா?.” என்று அழுகையின் ஊடே கேட்க, “இம் நல்லா தான் இருக்க, எந்திரி.” என்று ஆகாஷ் கைகொடுத்து தூக்கி விட, அவன் நண்பன் அவள் சைக்கிளை நிறுத்தினான்.
“கார் ஓட்ட தெரிலனா, வீட்ல இருக்க வேண்டிய தான, இப்ப நீங்களாம் கார் ஓட்டலேன்னு யார் அழுதா ?.” என்று துடுக்கு தனமான குரல் காது அருகே கேட்கவும் ஆகாஷ் திரும்பினான்.
அங்கு, கீழே விழுந்த பெண்ணின் வயதை ஒத்த அவள் தோழி நின்று ஆகாஷை பார்த்து கத்தி கொண்டிருந்தாள். காது ஜிமிக்கி ஆட, கண்களும் கோபத்தில் பேசுமா? இங்கு பேசுகிறதே என்று ஆகாஷ் அவளை பார்த்து சிலையானான்.
“சாரி, சாரி, தெரியாம இடிச்சிட்டோம்.” ஆகாஷின் நண்பன்.
“என்ன சார் சாரி பூரி, இப்படியா ஓட்ட தெரியாம ஓட்றது?.” என்று மேலும் எரிந்து விழுந்தாள்.
அவள் தோழி, “சரி விடு பா, நமக்கு தான் ஒன்னும் ஆகலைல, வா.” என்றாள்
“முத இவங்களுக்கு எல்லாம் சைக்கிள் ஓட்ட தெரியுமான்னு தெரில இதுல கார் ஓட்ட வந்துட்டாங்க.” என்று மேலும் கோபப்பட்டாள்.
ஆகாஷின் நண்பனோ, “அதான் ஒன்னும் ஆகலேல, சாரி கேட்டாச்சுல, போங்க.” என்று சிறிது குரலை உயர்த்தவும்,
அவள் கார் ஓட்டி வந்த ஆகாஷை முறைத்து, “என் சைக்கிளை யார் தூக்கி தருவா?.” என்று கேட்க.
ஆகாஷ் கருமமே கண்ணாக அப்படியே அவளை பார்த்து கொண்டு நிற்க, ஆகாஷின் நண்பன், “டேய்.” என்று தட்டினான். அதன் பின் இயல்புக்கு வந்து அந்த பெண்ணின் சைக்கிளை எடுத்து கொடுத்தான்.
“இனிமேலவாது ஒழுங்கா ஓட்டிட்டு போங்க, ஊர்ல இருக்க ஜனத்தொகைய குறைச்சுடாதீங்க.” என்று ஆகாஷை பார்த்து சொன்னாள். அவள் தான் நம் ஹீரோயின் சஜு.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
Part 23

என் கண்ணே நீ எங்கே இருக்கிறாய்?
என் கண்கள் உன்னை தேடுகிறதே
தெரிகிறதா?
என் அன்பே நீ எங்கே இருக்கிறாய்?
என் இதயம் உன்னை நாடுகிறதே
புரிகிறதா?
என் தேவதையே நீ எங்கே இருக்கிறாய்?
என் கால்கள் உன்னை நோக்கி பயணிக்கிறதே
தெரிகிறதா?
உன்னை பிரிந்து நான் படும் துயரம்
உன் மனதில் நீ உணர்கிறாயா?
தெரியவில்லை...
ஆகாஷ் அந்த கோவிலின், ஒரு தூணின் அருகில் நின்று சஜுவை தேட, சஜு ஒவ்வொரு தூணின் பின்னும், அவனுக்கு தெரியாமல் ஓடி மறைந்து கொண்டே போனாள். ஆகாஷால் அவளை கண்டுக்கொள்ள முடியவில்லை, ஏமாற்றமே மிஞ்சியது. அவன் முகம் சோகத்தில் தலை கவிழ்ந்தது.
இதை பார்த்த சஜு அப்படியே நின்றாள்.இதுவரை அவனை தேடவிட்டு, அவன் தன்னை தொடரும் போது இருந்த குதுகலம் தற்போழுது அவன் சோகமான முகத்தை பார்க்கவும் அவள் மனது துடித்தது.
அந்த கோவிலின் அமைப்பு தரையில் இருந்து திண்ணை அமைந்திருந்தது. அந்த திண்ணையில் இருந்து தான் தூண்கள் இருந்தது, ஆகாஷ் தரையிலே நின்று தேட, சஜு திண்ணை மேல் உள்ள தூணின் பின்னே மறைந்திருந்தாள்.
வாடி போன ஆகாஷின் முகத்தை பார்த்து, அவன் நின்ற இடத்தில் இருந்த தூணின் புறம் இருந்து வெளிப்பட்டாள். அவளின் அரவத்தை கேட்டு ஆகாஷ் திரும்பினான், அவளை பார்த்த மகிழ்ச்சியில் அவன் முகம் பிரகாசிக்க, சஜு வெட்கத்தால் சிவந்து, நிரம்ப மகிழ்ச்சியில் வார்த்தையால் சொல்ல முடியாத நிம்மதியுடன் நின்றாள்.
அதன் பின் சட்டென்று முழிப்பு வர, சஜு எழுந்தாள். பக்கத்தில் அம்மா படுத்திருக்க, விடிவதற்கு இன்னும் சில மணிநேரமே இருக்க, எங்கிருந்தோ காற்றில் தவழ்ந்து வந்த பாட்டை கேட்டு அதிர்ச்சியானாள்.
“கனவில் வந்தவர் யாரென கேட்டேன் ...
கணவன் என்றார் தோழி ...”
சஜுவுக்கு இந்த வரிகள் மட்டுமே மனதில் நின்று மீண்டும், மீண்டும் ஒலித்தது. அதற்கு அடுத்த வரியை கேட்டிருக்கலாமோ?
சஜு மனது படபடக்க ஆரம்பித்தது. இப்படி ஒரு கனவு எதற்கு ? என்ன அர்த்தம்? என்று நினைக்கும் போதே, அதற்கு அசிரீரி போல இப்படி ஒரு பாடல் பதிலாக. ஏன் இப்படி நடக்கிறது தெரிந்து கொண்டால் நாம் எல்லோரும் கடவுள் ஆகிவிடுவோமோ?
கீதாவுக்கு முழிப்பு வந்து, சஜு எழுந்து அமர்ந்திருப்பதை பார்த்து, “என்னம்மா படிக்கனுமா? போய் படி, அம்மா கொஞ்ச நேரத்துல டீ போட்டு தரேன்.” என்று திரும்பவும் படுத்து கொண்டார்.
சஜு பத்தாவது படித்து கொண்டிருந்தாள். முழு ஆண்டு தேர்வு நெருங்குவதால், தினமும் அதிகாலை விழித்து படிப்பாள். சஜு எழுந்து முகத்தை கழுவி விட்டு, கையில் புத்தகம் எடுத்து கொண்டு மேல் மாடிக்கு சென்றாள். அதிகாலை காற்று அவளை தழுவி வரவேற்றது, அமர்ந்து யோசித்து பார்த்தாள். அவனை அன்று மாலை கீழே விழுந்து எழும் போது பார்த்தது.
2 நாட்கள் கடந்திருந்தது, இன்று மூன்றாம் நாள், சஜு விழுந்ததை கூட மறந்து விட்டாள், அவ்வளவு படிக்க வேண்டியது இருந்தது. அவனை மறந்து விட்ட இந்த நேரத்தில், எப்படி கனவில் வந்தான்? அதுவும் அவனுடன் கண்ணாமூச்சி ஆடும் அளவிற்கு? அவன் யார் என்றே தெரியாதே ? யார் என்ன, பேர் கூட தெரியாது. அப்பொழுது அருகில் இருந்த கோவில் மணி அடித்து அவள் சிந்தனையை கலைத்தது. மடியில் இருந்த புத்தகத்தை பார்க்கவும், அன்றைய தேர்வு ஞாபகம் வந்து, பயந்து படிக்க ஆரம்பித்தாள்.
ஆகாஷ் அவன் அறையில் அந்த அதிகாலை வேளையில் தலையணை மெத்தையுடன் மல்லுக்கட்டி கொண்டிருந்தான். நேரே படுக்க, உடனே ஒரு பக்கமாக படுக்க, திரும்பவும் குப்புற படுத்தான். இவ்வாறு வராத தூக்கத்துக்காக மெத்தை தலையணையுடன் போராடினான். பாவம் அந்த இரண்டும் வாய் இருந்தால், “ஏன்டா உனக்கு கனவு வந்து தூக்கம் வரலேனா, எங்கள ஏன்டா இந்த பாடு படுத்துற.” என கேட்டிருக்கும்.
பின்னே அவனுக்கும், சஜுவை பார்த்த தினத்தில் இருந்து, உறங்கினால் கனவில் சஜு மறைந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடினாள். அவளை பார்த்த தினத்தில் வந்தது திரும்பவும் அதே போல் அச்சு பிசகமால் இன்றும் வந்தது,
சஜு என்ன கனவு கண்டாலோ, அதே தான் இவனும் கண்டான். அவளை பார்த்த தினத்தில் இந்த கனவு தோன்றவும், ஆகாஷ், “சரி, அவ அழகா இருந்தா, அவளையே பார்த்துட்டு இருந்ததால, அவ முகம் மூளைல பதிவானதால, கனவுலயும் வந்துட்டா போல.” என அசால்ட்டாக புத்தி நினைத்தாலும், மனதில் ஏனோ ஒரு வித மகிழ்ச்சி, புத்துணர்வு ஆட்கொண்டது. ஆனால் திரும்ப இன்று வந்திருக்கிறதே ஏன் ? ஏன் ? ஏன் ?
விடை தெரியாத கேள்விக்காக அன்றைய பொழுதை வீணாக்க முடியாதே, அந்த கேள்வியை மனதின் ஓரம் வைத்து விட்டு எழுந்து குளிக்க சென்றான். பின் கல்லூரி செல்ல ஆயத்தமானான்.
சஜுவுக்கு யூனிட் டெஸ்ட், ரிவிஷன் டெஸ்ட், ஸ்டடி ஹௌர்ஸ் என அவள் கனவை பற்றி கூட நினைக்க நேரமில்லாமல் பொழுது நகர்ந்தது.ஆகாஷுக்கோ லேப், ரெக்கார்ட் கரெக்ஷன், லெக்சர்ஸ், நோட்ஸ் என படு பிஸியாக ஓடியது அந்த நாள்.
மாலை பொழுது வந்தது, ஆகாஷ் ரெக்கார்ட் வொர்க்கில் மூழ்க ஏதோ சந்தேகம் வர, தன் நோட்ஸை எடுத்து refer பண்ணலாம் என நோட்ஸை தேடினான். அப்பொழுது தான் அந்த நோட்ஸை தன் நண்பன் ரகுவுக்கு கொடுத்தது நினைவு வர, அதை வாங்க அவன் வீட்டிற்கு தன் பைக்கில் சென்றான். பைக்கை ரகு வீட்டில் நிறுத்தி விட்டு, ரகுவை அழைக்க, அவன் வெளியே வர, தான் வந்த விவரத்தை தெரிவிக்க, ரகு நோட்ஸை தேடி எடுத்து வந்து கொடுத்தான்.
நண்பர்கள் இருவரும் ஆகாஷ் பைக்கில் சாய்ந்த படியே பேசி கொண்டிருந்தனர். அன்று கல்லூரியில் நடந்த கலாட்டாக்கள் மற்றும் ப்ரோப்பெசர்ஸ் நோட்ஸ் தரும் போது நடந்த குறும்புகள் என்று நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டே இருக்க, “ஏய் நில்லு, சைக்கிள் எடுத்துட்டு வரேன்.” என்ற குரல் ஆகாஷ் காதில் விழ, ஆனால் அவன் மனதில், “முத இவங்களுக்கு எல்லாம் சைக்கிள் ஓட்ட தெரியுமான்னு தெரில.” என்று குரல் தான் படிந்தது.
சட்டென்று பேச்சை நிறுத்தி திரும்பி பார்த்தான். அங்கு ரகு வீட்டின் எதிர் திசையில், அன்று பார்த்த அதே பெண், தன்னிடம் கோபமாக கத்திய பெண், தன் தோழியுடன் பேசிக்கொண்டே தனது சைக்கிளை எடுத்தாள். ஆகாஷ் வைத்த கண்ணை வாங்காமல் சஜுவை பார்த்தான்.
சஜு தோழி, “ஏய் சஜு, சீக்கிரம் வா, நாளைக்கு எனக்கு ஏகப்பட்ட டெஸ்ட் இருக்கு.” என்று சொன்னாள்.
அதற்கு சஜு, “இன்னிக்கு தான் டியூஷன்ல லாஸ்ட் டே, கொஞ்ச நேரம் பிரிண்ட்ஸ் கிட்ட பேசக்கூட இல்லாம கிளம்பிட்ட.” என்று தோழிகள் இருவரும் அந்த டியூஷன் சென்டரை விட்டு தங்கள் வீட்டிற்கு கிளம்பினர்.
“சஜு உனக்கென்ன நாளைக்கு 2 டெஸ்ட் தான், ஆனா நாளைக்கு எங்க ஸ்கூல்ல 5 சப்ஜெக்ட் டெஸ்ட், இனிமே தான் வீட்டுக்கு போய் படிக்கனும்.”
இவ்வாறு பேசிக்கொண்டே சைக்கிளை உருட்டி கொண்டே சென்றனர். சஜு ஆகாஷ் நிற்பதை கவனிக்கவில்லை. ஆனால் ஆகாஷ் விழிகளின் இமை கூட சிமிட்டாமல் அப்படியே அவளையே பார்த்து கொண்டிருந்தான். அவன் மூளையில் ஒன்றை தவிர சுற்றுப்புறம், நண்பன் ரகு என்று எதுவும் பதியவில்லை. அந்த ஒன்று சஜுவின் பெயர் தான்.
ரகுவின் வீட்டை தாண்டி, 3 வீடுகள் அப்புறம் தெரு முனை தான். அந்த பெண்கள் அந்த தெருமுனையை அடைந்ததும் நின்றார்கள். இருவரும் திரும்பி தங்கள் தோழிகளுக்கு, “டாட்டா.” சொல்ல கை காட்டினர்.
கை உயர்த்திய சஜு அப்பொழுது தான் ஆகாஷை பார்த்தாள். அப்படியே கை அந்தரத்தில் டாட்டா சொல்லாமல் நிற்க, அவள் கை விரல் மட்டும் மடங்கியது. அவளுடன் வந்தவள் டாட்டா சொல்லிவிட்டு, “வா சஜு.” என்று சைக்கிளில் சென்று விட்டாள்.
சஜு அதிர்ந்து நிற்க, டியூஷன் சென்டரில் நின்ற தோழிகள், அவள் போகாமல் நிற்பதை பார்த்து கை விரல் வேறு மடங்கி கூப்பிடுவது போல் தெரியவும், அவர்களில் ஒருத்தி சஜுவை நெருங்கி, “என்ன சஜு ? எதுக்கு கூப்பிட்ட?.” என்று வினவவும் தான் சுயநினைவு அடைந்தவள் போல் முழித்தாள். அதே சமயம் சைக்கிளில் சென்ற தோழி, சஜு தன்னை பின் தொடராததால், சைக்கிளை நிறுத்தி அவளை கூபிட்டாள்.
அதன் பின், “ஒன்றும் இல்லை.” என்று வந்த தோழியிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டாள்.சைக்கிள் ஓட்டும் போது பின்னே திரும்பி பார்த்து கொண்டே சென்றாள்.
ரகு, “என்னடா அந்த பொண்ணையே பாக்குற.” என்று அவன் தோளை தட்டினான்.
ஆகாஷ், “அவ நல்லா இருக்கால டா ?.” அவள் அழகாய் இருப்பதை தான் ஆகாஷ் இப்படி வள்ளலாய் சொன்னான்.
ரகு, “அவ நல்லா தான் இருப்பா, நீ இப்படி இருந்தா தான் டா நல்லா இல்ல .”
ஆகாஷ், “டேய் என்னடா சொல்ற ?.” என்று அப்பொழுது தான் எதிர் சைடில் இருக்கும் டியூஷன் சென்டரை பார்த்து, “என்னடா டியூஷன் சென்டர் இருக்கு இங்க.” என்று வினவினான்.
ரகு, “ஆமாம் டா டியூஷன் சென்டர் தான். இது வரைக்கும் நீ பர்த்தடே இல்ல? ஏன்டா இப்படி ஒரு பொண்ண பார்த்தா உடனே எல்லாத்தையும் புதுசா பாக்குற மாதிரி பார்க்கறீங்க? k டா மச்சான் நீ முத வீட்டுக்கு கிளம்பு...”
சஜு வீட்டிற்கு சென்றும் கூட இதயத்தின் படபடப்பு அடங்கவில்லை. எவ்ளோ தைரியம் டியூஷன் சென்டர்க்கே வந்து விட்டானே என்று நினைத்தாள். பாவம் சஜுவுக்கு இது எல்லாம் எதார்த்தமாக நடந்தது என்று தெரியவில்லை. அவள், அவன் எப்படியோ தன்னை follow செய்து டியூஷன் சென்டர்க்கு வந்து விட்டான் என்று நம்பினாள்.
எங்கே மேலும் தன்னை தொடர்வானோ என்ற பயத்தில் தான் சென்டரில் இருந்து வரும் போது திரும்பி பார்த்துக் கொண்டே வந்தாள். ஓ இவனை பார்க்க போவதால் தான், தான் இன்று கனவில் அவன் வந்தானா என்று நினைத்து கொண்டாள் சஜு.
அங்கே நம் மக்கு ஆகாஷ் சந்தோசத்தில் மிதந்தான். அவளை திரும்ப பார்ப்போம் என்று நினைக்கவில்லை. ஆனால் இன்று பார்த்தது அவனை மிகவும் சந்தோசப்படுத்தியது. நாளை டியூஷன் சென்டர் போய் அவளிடம் பேச வேண்டும், நட்பு வளர்க்க வேண்டும், அவளை சிரிக்க வைத்து பார்க்க வேண்டும், இன்னும் பல வேண்டும் என்று முழித்து கொண்டே கனவு கண்டான். சஜு, இன்று தான் டியூஷனில் கடைசி நாள் என்று சொன்னது, ஏனோ அவன் மனதில் பதியவில்லையா ? இல்லை கேட்கவில்லையா ? என்று தெரியவில்லை.
ஆகாஷ் அவள் முகத்தை தன் மனதில் பதித்து, அவள் இன்னொசென்ட், படபடவென்று பேசும் விதம், கோபம் மற்றும் அவள் youngness எல்லாவற்றையும் புன்னகையுடன் ரசித்தான். ஏனோ தன் மனம் அவளை பார்க்கும் போது மட்டும் வித்தியாசமாக இதுவரை உணராத உணர்வுகளை, இதத்தை உணர்த்தியது.
மறுநாள் ஆகாஷ் மிக மகிழ்ச்சியுடன் குளித்து, சாப்பிட்டு, கல்லூரிக்கு சென்றான். ஆனால் அவன் மனம் மட்டும், மாலை பொழுதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தது. மாலை பொழுதும் வந்தது, ஆகாஷும் ரகு வீட்டின் அருகில் நேற்று நின்ற அதே இடத்தில், அதே நேரத்தில், சஜு வருவதற்காக, நின்று கொண்டிருந்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
Part 24

அழகான பெண்களை பார்த்தால்

உந்தன் முகம் தோன்றுகிறது

என் மனதில்

பிடித்த உடைகளை பார்த்தால்

உனக்கு பொருந்துமாவென்று பார்க்கிறது

என் மனது

பிடித்த பாடல்களை கேட்டால்

உனக்கும் பிடிக்குமாவென்று கேட்கிறது

என் மனது

இதெல்லாம் ஏன் என ஆராய்ந்தால்

உனக்குள் துடிக்குமொன்று கேட்கிறது

என் மனதுள்

சஜு மனது, “திக் திக்.” என அடித்து கொண்டது, திரும்பவும் அதே கனவு. அப்படியென்றால் இன்று அவனை சந்திப்பேனா என்று மூளை கேட்டது. அன்று மனதில் கலக்கமாக இருந்த உணர்வு இன்று ஏனோ ஒரு வித மகிழ்ச்சியாக மாறியது. மனது படபடக்க முகத்தில் புன்னகையுடன் குளித்து பள்ளி செல்ல ஆயத்தமானாள்.

இன்று பள்ளி சென்று வந்ததும், அம்மா சொன்னபடி டியூஷன் சேர வேண்டும். ஆம் சஜு பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். பத்தாவது முடிக்கும் தருவாயில் அவனை பார்த்தது. அதன் பின் அவள் அவனை அவ்வளவாக பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது, ஆனால் அவ்வளவு நிதானமாக பார்க்கவே இல்லை. ஒரு சில தடவை இவள் பஸ்சில் செல்லும் போது, சிக்னலில், அவனை பைக்கில் பார்த்தாள். அதன் பின் ஒரு முறை ஜவுளி எடுத்து விட்டு, ஒரு மாலில் குடும்பத்துடன் சென்ற போது, அவளுக்கு எதிர் திசையில் ஆகாஷும் தன் நண்பர்களோடு சுற்றி கொண்டிருந்தான்.

ஆகாஷ் அன்று ரகு வீட்டிற்கு எதிரே, சஜுவுக்காக காத்து நின்றான். அவள் வரவில்லை என்றதும் மெல்லிய ஏமாற்றம் தான் உருவாகியது. வீட்டிற்கு சென்ற ஆகாஷுக்கு, தான் ஏன் இப்படி ஆனோம் என்ற சுய அலசலில் இறங்கினான். மூன்று நாட்களுக்கு முன் பார்த்த பெண், அவள் ஏதோ அழகாக இருக்கிறாள், அவளுடைய இன்னொசென்ட் face அண்ட் பட பட கோபம் அவனை கவர்ந்தது தான், கனவில் வேறு அடிக்கடி வருவதால் கூட இப்படி நான் நினைக்கலாம்.

ஆனால் நேற்று அவளை பார்க்கும் போது, தான் ஏன் மெய்மறந்தோம் என்று புரியவில்லை. ரகு சொன்னது போல் அவளை பார்த்த பின் எல்லாம் புதிதாக தோன்றுகிறதா அல்லது ரகு சொன்னதால் அப்படி நினைக்கிறேனா? தன் மனதுக்கு ஒன்றும் தெளியவில்லை, ஆனால் ஒன்று, இது காதலா? அல்லது சிறிய மன நெகிழ்ச்சியா ? இம்ஹும் ஒன்றும் தெரியவில்லை. பார்ப்போம் அவளை பார்க்கும் சந்தர்ப்பம் வருகிறதா என்று.

அதன் பின் தன் தேர்வுகளில் கவனம் செலுத்தினான். தேர்வும் முடிவடைந்தது, அதன் பின் எப்பொழுதாவது நண்பர்களுடன் காரில் ஊர் சுற்றல், எப்பொழுதாவது தங்கள் கடைக்கு செல்வான். அதுவும் போர் அடித்தால், தங்கள் தாத்தாவின் ஊரான ஜெய்ப்பூருக்கு செல்வான். இப்படியே அவன் விடுமுறை கழிந்து, இரண்டாம் ஆண்டும் தொடங்கி, தொடங்கிய வேகத்தில் முடிந்தது. செமஸ்டர் விடுமுறையை முதல் வருடம் போல் செலவழிக்க முடியவில்லை, அப்பொழுது தான் அவினாஷ் அவர்கள் பிசினஸில் பங்கேற்று மாற்றங்களை உருவாக்கி கொண்டிருந்தான், அதனால் அவனுக்கு உதவவே நேரம் சரியாக இருந்தது.

ஆனால் அவளை நினைக்கவே இல்லை என்று சொல்ல முடியாது, அவ்வப்பொழுது அவளை நினைத்து கொள்வான். சில சமயம் தனிமை கிடைத்தால், ஒரு கருவுற்ற தாய் தன் குழந்தையுடன் மனதில் பேசிக்கொள்வது போல அவனும் அவளுடன் மனதிலேயே பேசிக் கொள்வான்.

“சஜு ன்னு உன் பெயர் எனக்கு தெரியும், ஆனா என் பெயர் உனக்கு தெரியுமா?.”

“சஜு எப்போவுமே நீ கோபமாக தான் பேசுவியா? சிரிக்க மாட்டியா?.”

இது போல பேசுவான், சில சமயம் அன்று நடந்ததை கூட அவளிடம் மனதிலே ஷேர் செய்வான்.

அவன் கனவுகளில் சில சமயம், அவள் வரும் போதெல்லாம், அன்று அவளை எந்த இடத்திலாவது பார்த்து விடுவான். ஆனால் இதுவரை அவள் முகவரியோ, அவள் பள்ளியையோ அறியும் ஆவல் அவனுக்கு ஏனோ வரவில்லை அல்லது தோன்றவில்லையோ?

ஆகாஷும் மூன்றாம் வருடம் B.E க்குள் அடி எடுத்து வைத்தான். ப்ரீ பிரியடில் கல்லூரி வளகாத்தில் இருக்கும் போது ஆகாஷ் நண்பர்கள் யாராவது, “டேய் இந்த பொண்ணு அழகா இருக்காள டா ?.”

“ஏய் அங்க பாருங்களேன் அம்சமான பொண்ணு.” என்று அழகான பெண்களை பார்க்க சொல்லும் போது எல்லாம், ஆகாஷிற்கு சஜு ஞாபகம் தான் வரும்.

நம் சஜுவுக்கும் அதே நிலை தான். தோழிகள் அழகான ஆண்களை, சினிமா ஹீரோக்களை பார்த்து கமெண்ட் செய்தால், சஜுவுக்கு ஆகாஷ் ஞாபகம் தான் மனதில் முட்டும். சஜுவின் அண்ணன் அருணும் 3 rd இயர் B.E தான் படித்தான். அவன் சஜுவிடம், “ஏய் சஜி இந்த காம்பினேஷன் நல்லா இருக்கா?”, “சஜி டக்கின் பண்ணா நல்லா இருக்கா?”, “full ஹன்ட் ஷர்ட்ட மடக்கி விட்டா நல்லா இருக்குமா சஜி.” என்று அவள் முன்னே டிரஸ் செய்து காட்டினால், அவள் அதே டிரஸ்ஸை ஆகாஷுக்கு நல்லா இருக்குமா என்று அவள் மனது அவனுக்கு போட்டு பார்க்கும்.

ஆகாஷும் அவர்கள் கடைக்கு செல்லும் போதெல்லாம், புதிதாகவோ அல்லது அவனுக்கு பிடித்த பெண்கள் உடைகளை பார்க்கும் போது, சஜுக்கு இது பொருத்தமாக இருக்குமா என்று அவன் மூளை யோசிக்கும்.

சஜு மனதில் ஐம்பது சதவிகிதம் எதிர்பார்போடு டியூஷன் சென்டர் சென்று சேர்ந்தாள். அன்றே டியூஷனும் நடந்தது. அவளும் பாடம் முடிந்து வெளியே வந்து சைக்கிளை எடுத்தாள். எதிர் வீட்டை பார்த்து கொண்டே சைக்கிளை எடுத்து ஓட்ட ஆரம்பித்தாள்.

வரும் போதும் ஆகாஷை காணவில்லை, “இப்பொழுதும் இல்லையே, பைக்கை காணவில்லை, ஒரு வேளை அது அவன் பைக் இல்லையோ.” என்று பல கேள்விகளை மனது கேட்டது. அவனை பாராமல் சிறு ஏமாற்றத்தோடு உதட்டை மடக்கி சைக்கிளை ஒட்டி சென்றாள்.

அந்த தெருமுனை தாண்டி திரும்பும் போது, சரியாக ஆகாஷ் தன் நண்பன் ரகுவுடன் பைக்கில் அந்த முனையில் திரும்பினான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டனர், இருவர் கண்களும் சந்தித்தன. ஆனால் பயத்தில் ஒரு விட படபடப்பில் சஜு தன் சைக்கிளை ஒட்டி கொண்டு, எப்படியோ வீடு வந்து சேர்ந்தாள்.

“ஏய் சஜி மாடு, எங்க போய் தொலைஞ்ச? என் ரெக்கார்ட் நோட் எங்க ?.” என்ற அருணின் குரலில் தான் இயல்புக்கு வந்தாள், வீடு வந்து சேர்ந்த சஜு.

அருணுக்கு கொழுப்பு தான், தன் தங்கை நன்றாக வரைவாள் என்று அவளிடம் ரெக்கார்ட் நோட் வரைய கொடுத்திருந்தான். அவள் டியூஷன் சென்றிருக்கிறாள் என்று தெரிந்தும், அதை தான் இவ்வளவு பாசமாக தங்கையிடம் கேட்டான்.

சஜுவும், “சோம்பேறி உனக்கு வரைஞ்சு தர்றதே பெருசு, இதுல கத்துறத பாரு எரும, இத தேடி எடுக்க முடில ?.” என்று அவனுக்கு எடுத்து கொடுத்தாள். அதன் பின் மறுநாள் பள்ளி சென்று வந்து விட்டு, டியூஷன்க்கு சைக்கிளில் சென்றாள். இவள் சென்டர்க்கு போகும் போதே, ஆகாஷ் அங்கு தன் நண்பன் ரகுவுடன் நின்று இருந்தான்.

சஜு அவனை பார்த்தும் பார்க்காதது போல் சென்று விட்டாள். டியூஷன் முடிந்து வெளியே வந்தாள், சைக்கிளை எடுத்து கொண்டு, ரோடில் நிறுத்தி, ஓட்டுவதற்கு தயாராக சைக்கிளில் உட்கார்ந்த சஜு அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

சஜு அவனை பார்க்கவும், ஆகாஷும் ஒரு புன்னகையை வீசினான். அதே சமயம் ரகுவின் அம்மா கலா சஜுவை நோக்கி, “இந்தா பாப்பா, நில்லு மா ...” என்று அழைத்து கொண்டே சென்றார்.

கலா, “ஆமாம் மா உன்ன தான், நில்லு .”

சைக்கிளை விட்டு கீழே இறங்கிய சஜு, “என்ன ஆன்ட்டி?.” என்று சிறிது கலவரத்தோடு வினவினாள்.

இதே கலவரத்தோடு தான் ஆகாஷும், ரகுவும் இருந்தனர்.

ஆகாஷ், “என்னடா உங்கம்மா சஜுட்ட போறாங்க ?.”

ரகு, “அதான் எனக்கும் புரில, உன்னால எனக்கு தீபாவளியா எங்க வீட்டுல?.” என்று இருவரும் காதை கடித்து கொண்டனர். மேற்கொண்டு என்ன நடக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தனர்.

சஜுவிடம் கலா, “எத்தனவாது மா படிக்கிற ?.”

“+2 ஆன்ட்டி.” சஜு

“இங்க டியூஷன் சென்டர்ல என்ன சப்ஜெக்ட் சொல்லி தராங்க? நீ என்னமா படிக்கிற ?.”

“maths, physics, chemistry சொல்லி தராங்க ஆன்ட்டி. நா maths படிக்கிறேன் ஆன்ட்டி.”

“நல்லா சொல்லி தராங்களாமா?.”

“இம்ம் நல்லா தான் சொல்லித்தருவாங்க ஆன்ட்டி .”

“என் கடைசி பொண்ணும் 12த் தான் படிக்கிறா, அவளுக்கும் maths தான் புரியலங்கறா. அதான் இங்க சேர்க்கலாம், இதுனா பக்கம், அதான் நல்லா சொல்லிதராங்கலான்னு கேக்கலாம்னு உன்ட்ட கேட்டேன் .”

“சேர்த்து விடுங்க ஆன்ட்டி, maths சார் நல்லா தான் சொல்லி தருவார்.”

“ஓ சார்ரா, சரிமா நா என் பொண்ண நாளைக்கு சேர்த்து விடுறேன், அவ கொஞ்சம் கூச்ச சுபாவம், நீ நாளைக்கு வந்தா ஒரு குரல் கொடுக்கிறியாம?.” என்று எதிர் திசையில் அவர்கள் வீட்டை காட்டி, “இதான் எங்க வீடு, நாளைக்கு வா மா என் பொண்ண அறிமுகப் படுத்துறேன், கொஞ்ச நாள் அவ பழகுற வரைக்கும், அவள பார்த்துக்கோ.”

“சரி ஆன்ட்டி.” என்று தலையாட்டினாள்.

“ஆமா உன் பேர் என்னமா ?.”

“சஜ்னா ஆன்ட்டி .”

“எங்க இருந்து மா வர ? வேற ஏரியாவா ? நா வேற நிக்க வச்சு பேசிட்டு இருக்கேன் .”

“இல்ல ஆன்ட்டி இங்க பக்கம் தான்.” என்று தான் இருக்கும் தெரு பெயரை சொன்னாள்.

“ஓ பக்கத்து தெருவுக்கு, அடுத்த தெருவா! , சரிமா போயிட்டு வா, நேரமாகுது, அம்மா தேடப்போறாங்க.”

“ஆமாம் ஆன்ட்டி, போயிட்டு வரேன் ஆன்ட்டி.” என்று நல்லா பிள்ளையாக கிளம்பினாள். கலாவும் வீட்டுக்குள்ளே சென்று விட்டார்.

ரகு, “பார்த்தியா டா உன் நேரத்த, ஒவ்வொருத்தனுக்கும் அவனவன் friend தான் காதலுக்கு ஹெல்ப் பண்ணுவான் கேள்விப்பட்டிருக்கேன், இங்க பாரு, உனக்கு friendடோட அம்மாவே அதான் டா, எங்கம்மா, உன் ஆளோட பேர் அட்ரஸ் எல்லாம் வாங்கி தந்துட்டாங்க, மாப்பிள்ள ஏதோன்னும் நாளைக்கு வா, எங்கம்மாவே அவ ஜாதகம், அம்மா, அப்பா, detailsலாம் வாங்கி வைப்பாங்க, உனக்கு futurela யூஸ் ஆகும்.”

ஆகாஷ், “டேய் ஏன்டா, நா சும்மா தான் அந்த பொண்ண பார்க்க வந்தேன், பார்த்து 2 வருஷம் ஆச்சேன்னு .”

ரகு, “தம்பி ஒரு வருஷம் தான் ஆச்சு, சும்மா தான் பாக்குறியா ? சரி மச்சி நானும் பாக்குறேன் அந்த புள்ளைய .”

ஆகாஷுக்கு சுர்ரென்று கோபம் ஏறியது, “டேய் வேண்டாம் டா .”

ரகு, “அப்போ ஒத்துக்கோ.”

“ஏய் அந்த பிள்ள இப்ப தான் டா ஸ்கூல் படிக்குது .”

“இப்ப படிக்கல டா, அது இந்த வருஷம் ஸ்கூல் படிச்சு முடிக்க போகுது .”

“அவ முத நல்லபடியா ஸ்கூல் படிச்சு முடிக்கட்டும், அப்புறம் அவளுடைய விருப்பத்த தெரிஞ்சுக்கணும் டா, அதுக்குள்ள நீ அவ முன்னாடி ஓட்டிராத டா .”

ரகு முழிக்கவும், “என்ன முழிக்குற, நாளைக்கு உங்க வீட்டுக்கு வரேன் சொல்லிருக்காள மச்சான், நானும் நாளைக்கு வரேன்டா.”

ரகு, “என்னடா உன் காதலுக்கு எங்க வீடு தான் கிடைச்சுச்சா?.” என்றான் பொய்யான கோபத்தோடு,

ஆகாஷ் கை எடுத்து கும்பிட்டு, “இப்ப தான்டா சொல்லி வாய மூடல அதுக்குள்ள ஏன் ?... டேய் ஸ்டார்ட் பண்றதுக்குள்ள ஆப் பண்ணிறாதா டா.” என்று மனதில் அவள் கோபத்தை நினைத்து பார்த்து பயத்துடன் நண்பனிடம் வேண்டினான்.

ரகு, “சரி சரி விடுடா, அழுகாத.” என்று சிரிக்க, ஆகாஷ் அவனை பொய்யாக அடிக்க வர, நண்பர்கள் இருவரும் சிரித்தனர்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
Part 25

மறு நாள் மாலை சஜு சரியாக 5.50க்கு ரகு வீட்டு வாசலில் நின்றாள். சைக்கிளை டியூஷன் சென்டரில் நிறுத்தி விட்டு, ரகு வீட்டை நோக்கி சென்றாள், நல்ல வேலை ஆகாஷ் வெளியே நிற்கவில்லை என்று நினைத்தாலும் மனதில் சிறு ஏமாற்றம் மின்னியது.

சஜு ரகு வீட்டின் வெளியே நின்று, “ஆன்ட்டி.” என்று குரல் கொடுத்து காலிங் பெல்லை அழுத்தி விட்டு, லைட்டாக உள்ளே எட்டி பார்த்தாள், அவள் வயதை ஓத்த பெண், “அம்மா.” என்று அழைத்து விட்டு கையில் நோட்டுடன் இங்கும் அங்கும் ஓடி கொண்டிருந்தாள்.

தன் மகள் அழைக்கவும் வெளியே வந்த கலா, சஜுவை பார்த்து, “வா மா , உள்ளே வா.” என்று அழைத்தார்.

“இருக்கட்டும் ஆன்ட்டி.” என்று வாசல் படி தாண்டி ஓரடி மட்டும் உள்ளே எடுத்து வைத்து நின்று கொண்டு, “லேட் ஆக போகுது ஆன்ட்டி.” என சொல்ல.

கலா, “மது, என்ன பண்ற சீக்கிரம் வா.” என்று அழைக்கவும் மது என்ற மதுவந்திகா வந்தாள்.

கலா, “அவளுக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் மா.” என்று சஜுவிடம் சொல்லிவிட்டு, தன் மகளிடம், “பீஸ் எவ்ளோ, என்ன விவரம் ன்னு கேட்டுட்டு வா, என்ன என்ன portions நடத்திற்காங்கன்னு சஜுட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ .”

அவள் அம்மா சொல்ல, மது தலையாட்டினாள். சஜு அவளை பார்த்து புன்னகைக்க, மது சிரித்தாள். ஆனால் சஜுவுக்கு அவள் சிரித்தாளா இல்லையா என்று சஜுவுக்கு குழப்பம் ஆயிற்று. இருவரும் வெளியே வர அங்கு ரகுவும், ஆகாஷும் பைக்கில் இருந்து கையில் சில கிட்டுடன் இறங்கினார்கள்.

ஆகாஷ் ரகு எவ்வளவு தான் அழைத்தாலும் வீட்டின் உள்ளே செல்லமாட்டான். ரகுவும் விட்டுவிடுவான், வற்புறத்த மாட்டான். இப்பொழுது தான் முதன் முறையாக, ஏதோ ஒரு கல்லூரியில் நடக்க இருக்கும் competitionஇல் செய்ய போகும் ப்ராஜெக்ட்டுக்காக இருவரும் சேர்ந்திருந்தனர். அதனால் அதற்கு தேவையான கிட் வாங்கிவிட்டு, ரகு வீட்டில் இருக்கும் சில devices எடுக்க வந்திருந்தான். காரணம் ரகுவின் அண்ணன் இன்ஜினியரிங் படித்து முடித்திருந்தான்,

அதனால் அவர்கள் வீட்டில் சில உதிரி எலக்ட்ரானிக் சாதனங்கள் இருந்தன, மேலும் அவன் அவனிடம் தங்கள் ஐடியாவை டிஸ்கஸ் செய்ய வந்திருந்தான் ஆகாஷ்.

சும்மா சஜுவுக்காக வரலாம் என்று நினைத்தவனுக்கு, நிஜமாகவே ரகு வீட்டிற்கு வரும் படி வேலை அமைந்து விட்டது. இருவரும் ரகு அண்ணனிடம் டிஸ்கஸ் செய்ய, நேரம் ஓடியது. ரகு தங்கை மது வர, ஆகாஷ்க்கு அதற்கு மேல் அங்கு நிலை கொள்ள முடியவில்லை. அவன் நெளிவதை பார்த்து ரகு புரிந்து, “சரி டா, நீ கிளம்பு, மீதிய நா கேட்டு வரேன்.” என்று தன் நண்பனை அனுப்பி வைத்தான்.

ஆகாஷ் வெளியே வர, சஜுவும் தன் தோழியுடன் கிளம்பினாள். ஆகாஷ் அவள் பின்னே செல்ல, சஜுவின் சைக்கிள் தோழியும் இவளுடன் இவளுடன் சேர்ந்து விழுந்தவள் தானே, அவள் ஆகாஷை கண்டு கொண்டாள்.

ஆகாஷ் அவளை பார்த்து புன்னகைத்து, “ஹாய்.” சொல்லி, “ஞாபகம் இருக்கா என்ன(னை).” என்று வினவ, அவளும் புன்னகைத்து, “இம் ஞாபகம் இருக்குண்ணா, நா உங்கள அடிக்கடி பார்த்திருக்கேன், நீங்க (அவன் படிக்கும் கல்லூரியின் பெயரை சொல்லி ) காலேஜ்ல தான படிக்கிறீங்க?.”

ஆகாஷ் ஆச்சரியம் அடைந்து, “ஆமாம், உனக்கு எப்படி தெரியும் ?.”

அவள், “உங்க கிளாஸ் மேட் சுபா தெரியுமா? அந்த அக்கா எங்க வீட்டுக்கு பக்கத்து வீடு தான் . அவங்கக்கிட்ட தான் சப்ஜெக்ட்ல டவுட் வந்தா கேட்பேன், அப்போ ஒரு நாள் அவங்க காலேஜ்ல எடுத்த குரூப் போட்டோஸ் காமிச்சாங்க, அதுல தான் உங்கள பார்த்தேன்.”

சுபாவுக்கு கூட பிறந்தவர்கள் யாரும் இல்லாததால், இவளை தங்கையை போல் நன்றாக பார்த்து கொள்வாள், டவுட் கிளியர் செய்வாள். காலேஜ் functionக்கு அழைத்து செல்வாள்.அப்பொழுதும் ஆகாஷை பார்த்திருக்கிறாள். அவன் மறந்திருப்பான் என்று நினைத்து இவள் பேசவில்லை, அதுவுமில்லாமல் என்ன இருந்தாலும் தானாக ஒரு ஆணிடம் போய் பேச தயக்கம். சுபாவிடம் அவன் காரில் விழுந்ததை சொல்லியிருந்தாள்.

சுபா தன்னுடன் படிக்கும் ஆகாஷை பெரிய பணக்காரன், அதுவும் பணக்காரனாக இருந்தாலும் நல்லவன் என்று புகழ்ந்து சொல்லியிருந்தாள்.

ஆகாஷ், “ஓ அப்படியா, சுபா neighbourhood நீ, சுபா நல்ல அறிவாளி ஆச்சே.”

அவளும் மகிழ்ந்து, “ஆமாண்ணா, எந்த சப்ஜெக்ட் டவுட்னாலும் நல்லா சொல்லி தருவாங்க, பாவம் அவங்களுக்கு டைம் இல்லாததாலா தான் டியூஷன் சேர்ந்தேன்.”

“இம்ம்.”

“ஆமாண்ணா உங்க கார் எங்க ?.”

“வீட்ல இருக்கு, அப்பாவோட கார்.”

“இப்போ நல்லா ஓட்றிங்களா?.” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள்.

“இம், first classa ஓட்றேன், ஆமா உன் பிரண்டுக்கு இன்னும் கோபம் போகல போல.” என்று இவர்கள் பேச்சை கேட்டு கொண்டே, முகத்தை சிடு சிடுவென்று வைத்திருந்த சஜுவை பார்த்து கேட்டான்.

சஜுவுக்கு ஏனோ தெரியவில்லை, ஆகாஷ் அவள் தோழியிடம் பேசியது, மனதில் கோபத்தை உண்டு பண்ணியது. அதை அப்படியே முகமும் வெளிக்காட்டியது.

“அப்படி எல்லாம் இல்லண்ணா, இல்லையா சஜு?.”

சஜு, “நா வீட்டுக்கு கிளம்பறேன் நீ வரியா இல்லையா?, இல்ல நீ பேசணும்னா பேசிட்டு வா, நா போறேன்.” என்று சொல்லிவிட்டு சைக்கிளை மிதித்து ஓட்டி சென்று விட்டாள்.

ஆகாஷ் சிறிது அவமானப்பட்டதை போல உணர்ந்தான். “ஐயோ சாரி அண்ணா, அவ கொஞ்சம் கோவப்படுவா, மித்தப்படி நல்ல பொண்ணு தான், சரி அண்ணா நா கிளம்பறேன்.” என்று அவனிடம் கூறி விட்டு சஜுவை பிடிக்க சைக்கிளை வேகமாய் ஓட்டினாள்.

ஆகாஷும், “சரி.” என்று பதிலளித்து விட்டு ரகு வீட்டுக்கு திரும்பினான், தன் பைக்கை எடுத்து செல்ல.

நாட்கள் நகர்ந்து மாதங்களாகின. மதுவும் சஜுவும் நல்ல தோழிகள் ஆகினர். சைக்கிள் தோழி சில மாதம் வந்தாள், பல மாதம் வராமல் போனாள்.

மது, அவள் வீடு அருகில் இருப்பதால், சஜுவை அடிக்கடி தன் வீட்டிற்க்கு அழைப்பாள். டியூஷனில் விடுமுறை நாட்களில் தேர்வு வைத்தால், சஜு ஒரு மணிநேரம் முன்னதாகவே மது வீட்டிற்க்கு வந்து, இருவரும் சேர்ந்து படிப்பார்கள். சில சமயம் சஜு வீட்டிற்கு மது செல்வாள்,மற்ற பாடங்களையும் சேர்ந்து படிக்க ஆரம்பித்தனர்.

கலாவும், சஜுவால் தன் மகள் கூச்ச சுபாவத்தை விடுத்து நன்றாக பழகவும், படிக்கவும் ஆரம்பித்து விட்டாள், என்று சஜுவை பற்றி நல்ல அபிப்ராயம் கொண்டார். அவளை நன்றாக தன் மகளை போலவே கவனிப்பார், டீ , ஜூஸ், ஸ்னாக்ஸ் என்று கொடுப்பார்.

இப்பொழுது எல்லாம் சஜு, சைக்கிளை மது வீட்டில் நிறுத்தி விட்டு மதுவுடன் தான் செல்வாள். அதனால் ஆகாஷை அடிக்கடி பார்க்க நேரிடும். ஒருத்தருக்கு ஒருத்தர் பேசவில்லை என்றாலும், அவன் தனக்கு தெரிந்தவன் என்ற பாவனையில், சஜு ஆகாஷை பார்த்து சிரிக்கவும் கற்றுக் கொண்டாள்.

அதன் பின், ஆகாஷ் மதுவிடம் எக்ஸாம்ஸ் பற்றி விசாரிக்க, அவர்கள் இருவரும் படிக்கும் போது, தேர்வுக்கு எப்படி prepare செய்ய வேண்டும், எப்படி படித்ததை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என்று டிப்ஸ் கொடுத்தான்.

இருவரும் அவன் கொடுத்த டிப்சை செயல் படுத்தி படிக்கவும் ஆரம்பித்தனர். சஜு இப்பொழுது எல்லாம் அடிக்கடி இல்லை என்றாலும், தேர்வு நடக்கும் சமயம் அவனை நினைக்க ஆரம்பித்தாள். ஏனென்றால் அவன் கொடுத்த ஊக்கம் + தேர்வு டிப்ஸ் அப்படி பயனுள்ளதாக இருந்தது.

சஜு, “பரவாயில்லை, ரோடு சைடு ரோமியோ இல்லை போல, கொஞ்சம் புத்திசாலித்தனமும் இருக்கிறதே.” என்று மனதில் அவனை மெச்சி கொண்டாள். ஆகாஷ் இதை கேட்டிருக்க வேண்டும், அழுதிருப்பான், ரோடு சைடு ரோமியோ இல்லை என்று சொன்னதற்கு சந்தோசப்படுவதா? இல்லை கொஞ்சம் புத்திசாலித்தனம் இருக்கிறதே என்று இப்படி ஒரு intelligent boyயை நினைத்து விட்டாளே என்று வருத்தப்படுவதா என்று நீலிக்கண்ணீர் விட்டிருப்பான்.

அப்படியே மெல்ல மெல்ல பேசியவர்கள் மது பிறந்தநாளுக்கு பின் சகஜமாக பேச ஆரம்பித்தனர். மது தன் பிறந்தநாளுக்கு சஜுவை அழைத்திருந்தாள், தன் தோழிகளுக்கு சஜுவை பெருமையாக அறிமுகப்படுத்தினாள். சஜுவும் formalityக்கு கலந்துக் கொள்ளாமல், கலா ஆன்ட்டிக்கு காலையிலேயே வந்து உதவி செய்தாள். விழா நடக்க கலா ஆன்ட்டிக்கு உதவி கொண்டே, இடை இடையே ரகுவுக்கு உதவிய ஆகாஷிடம் பேசிக் கொண்டே வேலை செய்தாள்.

ரகுவும் குறிப்பிட்ட தன் நண்பர்களை விழாவுக்கு அழைத்திருந்தான். அன்று விடுமுறை நாள் என்பதால், ஆகாஷை மட்டும் மதிய விருந்துக்ககே அழைத்தான். அவன் வர மறுக்க, ரகு சஜு வருவதை தெரிவிக்க, ரகுவிடம் அசடு வழிந்துகொண்டே அவன் வீட்டிற்கு கிளம்பினான். ரகுவுக்கு சஜுவை மிகவும் பிடித்து இருந்தது. ஆகாஷ் சொல்லி அவள் மிகவும் கோபப்படுவாள் என்று கேள்விப்படிருந்தான், ஆனால் கோபப்பட்டாலும் பொறுப்பாக நடந்து கொள்கிறாளே, ஆகாஷுக்கு ஏற்றவள் தான் என்று மனதில் நினைத்தான். தன் தங்கை போலவே அவளிடமும் பாசம் கொண்டான்.

விழா நடந்தது, மது கேக் வெட்ட, அனைவருக்கும் இனிப்பு பலகாரம் வழங்கப்பட்டது. சஜு மது தோழிகளுக்கு வழங்கி விட்டு, தனக்கு ஒன்று எடுத்து கொண்டு, கலா ஆன்ட்டியை தேடி மாடிக்கு சென்றாள். ஏனென்றால், அங்கு தான் டிபன் வழங்க ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது, கலா ஆன்ட்டியும் அங்கு தான் இருந்தார்.

சஜு, “ஆன்ட்டி நா கிளம்பறேன், லேட் ஆச்சு அம்மா தேடுவாங்க.”

கலா ஆன்ட்டியா விடுவார், “என்ன சஜு, இரு சாப்பிட்டு போவ,நா அம்மாக்கு டெலிபோன் பண்ணி சொல்கிறேன்.” என்று சொன்னார். சொன்னதோடு நில்லாமல் அவள் வீட்டிற்கு டெலிபோன் செய்தார் தங்கள் வீட்டு டெலிபோனில் இருந்து, அப்படியே பத்திரமாக சஜுவை கொண்டு வந்து விடுவதாக வாக்கு கொடுத்தார்.

சஜு அம்மா, கீதாக்கு சிறு தயக்கம் என்றாலும், ரகு அடிக்கடி தங்கள் வீட்டிற்கு வரும் மதுவை, சில சமயம் அழைத்து போக வரும் போது, தங்கள் பெண்ணை தன் தங்கையை போல தான் நினைக்கிறான் என்பது அவர்கள் இருவரின் சம்பாஷனையில் இருந்து தெளிவானது. அதனால், அப்படியே லேட் ஆனாலும் மது வீடு அருணுக்கு தெரியும், அவனை அழைத்து வர சொல்லிவிடலாம் என்று நிம்மதி அடைந்தார்.

இங்கு தான் ரகு தன் நண்பனுக்கு உதவினான். சஜுவை அவள் வீட்டில் விடுவதற்காக, அழைத்து செல்ல ரகு கிளம்பும் போது, ஆகாஷையும் கிளப்பி கூட்டி சென்றான். இருவரும்பேசாமலே ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே நடக்க,

ஆகாஷின் மனமோ

“மழை தருமோ என் மேகம்

மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்

தொகைக்கு தூதுவன் யாரோ ...

தோள் தொட்ட தென்றலடி ...

தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே...” என பாடிக் கொண்டிருக்க

சஜுவின் மனமோ

“நான் பேசவந்தேன்

சொல்ல தான் ஓர் வார்த்தை இல்லை

திருவாய்மொழி திருவாசகம்

நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்.” என பாடியது எப்பொழுதோ எங்கோ கேட்ட பாடல் மனதில் வந்து போனது.

ரகு தான் நடுவில் நடந்து கொண்டு இருவரிடமும் மாறி மாறி பேசினான். ஆகாஷின் குணநலன்களை சஜுவிடம் அளந்து கொண்டிருந்தான்.

இருவரும், அவரவர் மனதில், மற்றவரின் மேல் ஆழமான அன்பு கொள்ள ஆரம்பித்தனர். அது காதல் தான் என முதன் முதலில் உறுதியாக நம்பியது ஆகாஷின் மனது. ஆனால் சஜுவின் மனதோ, அவன் மீது இனம் கண்டுக் கொள்ள முடியாத அன்பை செலுத்துகிறது என்பதை உணர ஆரம்பித்தாள்.

ஆனால் இருவரும் நட்பு என்ற வெளிப்பூச்சை பூசிக் கொள்ளவும் முன் வரவில்லை. ஆகாஷ் அவள் மனம் திறக்கட்டும் என்று காத்திருந்தான். சஜு அவன் மீது ஆழமான அன்பு உருவாகிற்று என்பதை மறுக்கவில்லை ஆனால் அதற்கு மேல் முன்னேறவில்லை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
Part 26

நிலவு வானில்லாமல்

உலா வருமா?

மீன் நீரில்லாமல்

உயிர் வாழுமா?

ஊதுவத்தி நெருப்பிலாமல்

நறுமணம் தருமா?

உயிரினங்கள் நிலமில்லாமல்

வாழ முடியுமா?

நீயில்லாமல் நான்... நினைத்து பார்க்க முடியவில்லை

சஜுவுக்கு +2 தேர்வு நடந்தது கொண்டிருந்தது. கடைசி பரீட்சையான பயோலஜி மட்டும் சஜு எழுத காத்திருந்தது. 3 நாட்கள் பரீட்சைக்கு படிக்க விடுமுறை அளித்திருந்தனர். அவளுக்கு பயோ படிக்க அதுவும் தனியாக படிக்க மட்டும் சிறிது கஷ்டமாக இருக்கும்.ஏனென்றால் இதில் மட்டும் நிறைய சயின்டிபிக் நேம் இருக்கும், அதையெல்லாம் ஞாபகம் வைத்து படிக்க கஷ்டப்படுவாள். கூட யாரவது இருந்தால் டிஸ்கஸ் செய்து படிக்க நன்றாக இருக்கும் என நினைத்து மது வீட்டுக்கு செல்லலாமா என யோசனை செய்தாள்.

சஜுவை, மது பிறந்தநாள் அன்று ரகுவும், ஆகாஷும் அவளை விட வந்த போது, ஆகாஷ், சஜு வீட்டில் எதுவும் தப்பாக நினைத்து கொள்வார்களோ என்று சஜு வீடு வரை செல்வதை தவிர்த்து, தெருமுனையோடு நின்று கொண்டான். ரகுவை போய் அவளை விட்டு வருமாறு கூறினான். சரி என்று அவளை விட்டுவிட்டு வந்தான்.

அதன் பின் ஆகாஷ் தேர்வு நாட்களில், இவள் பள்ளிக்கு போகும் வழியில் எங்காவது நின்று, “ஆல் தி பெஸ்ட்.” கூறுவான். இவளும், “தேங்க்ஸ்.” என்று முடித்து சென்று விடுவாள். ஆகாஷ்க்கு, அவள் தன் காதலை உணர்கிறாள் என்று தெரிந்துவிட்டது.

சஜு, ஆகாஷ் தன்னை பார்க்கும் பார்வை, பேசும் போது அவன் முகத்தில் வரும் முக பாவனையில் எல்லாவற்றையும் அவள் மனதில் குறித்துக் கொள்ள தவறவில்லை. சஜுவுக்கு புரிந்தது அவன் தன்னை காதலிக்கிறான் என்று, ஆனால் அவளுக்கு குழப்பமாக இருந்தது, தான் இதை பற்றி எல்லாம் நினைக்கலாமா? நாம், நம் பெற்றோருக்கு சிறு பெண்ணல்லவா? என பலவாறாக குழம்பினாள்.

காதல் என்பது படத்தில் காட்டுவது போல் ஜாலியாக இருந்தாலும், கடைசியில் ஹீரோ சண்டை போட்டு, அடி வாங்கி மிதி வாங்கி, அதை திருப்பி கொடுத்து, அப்புறம் தானே காதலியை கை பிடிக்கிறான். அதே போல தான், ஆகாஷும், தன் அண்ணன் அருணும் சண்டை இடுவார்களோ? மனதில் அவர்கள் இருவரும் படத்தில் காட்டுவது போல் சண்டையிட்டு கட்டி புரள்வதை போல காட்சியை ஓட்டி பார்த்தாள், சஜுவுக்கு பயமாக இருந்தது.

இதை எல்லாம் விட அவர்கள் அம்மா அப்பா, என்னை ஏற்று கொள்ள வேண்டுமே? காணாததற்கு அவன் பணக்கரான் வேறு, “xxx.” ஜவுளி கடை, எவ்ளோ பெரிய கடை? ஹப்பா ! என்று பிரமித்தாள். அவர்கள் பையனுக்கு பொண்ணு தர க்யுவில் நிற்கமாட்டார்கள்? அதை எல்லாம் விட, இந்த பணக்கார பசங்கள் எல்லாம் பொழுதுபோக்கிற்காக காதலித்து விட்டு, கடைசியில் கல்யாணம் செய்கிறேன் என்று ஏமாற்றி விடுவார்களாமே! ஐயையோ வேணாம், அம்மா! ஆகாஷ் ஏமாற்றினால், என்னால் எல்லாம் தாங்க முடியாது என்று பலவாறு சிந்தித்தாள். ஆனால் இந்த சிந்தனையே அவள் ஆகாஷை விரும்ப ஆரம்பித்து விட்டாள் என்று அவளுக்கு உணர்த்தவில்லை.

இதை எல்லாம் விட நம் அம்மா அப்பா? நம் மேல் அவர்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பார்கள், அவர்கள் நம்பிக்கையை உடைக்க வேண்டுமா ? என்று மேலும் நியாயமாக குழம்பினாள்.

ஆனால் இதையெல்லாவற்றையும் அவளுடைய தேர்வு பயம் தூக்கி சாப்பிட்டு விடும். ஏனென்றால் அவள் வீட்டினர் மிக பெரிதாக ஆசையோடும், உறவுகள் சிறிது பொறாமை கலந்து அப்படி என்ன மார்க் வாங்கி விட போகிறாள், என்று இரு வேறு ஆவல்கள் அவள் மதிப்பெண்ணிற்கு காத்திருக்க தொடங்கியது. இவள் மதிப்பெண் மட்டும் ஆயிரத்துக்கு குறைந்து விட்டால், அவள் அண்ணன் அருண், அவன் ஒருத்தன் போதும் வாழ்நாள் எல்லாம் அவளை பழிப்புக் காட்டி கொல்ல, அதனாலே சஜு கவனம் சிதறாமல் படித்தாள்.

சஜுவின் இந்த அதிகவனம் கடவுளுக்கு கூட பொறுக்கவில்லை போல, அவரால் இந்த கடைசி பரீட்சை முடியும் வரை கூட காத்திருக்க முடியவில்லை போல, அந்த கவனத்தை சில்லு சில்லாக உடைக்க அன்றே முடிவு செய்து விட்டார். சஜு மது வீட்டிற்கு சென்று படிக்க, ஆயத்தமாகி கொண்டிருந்தாள். அப்பொழுது தொலைபேசி அழைக்க சென்று எடுத்தாள்.

“ஹலோ சஜுமா.” ரகுவின் குரல்.

“அண்ணா, இப்போ தான் மது வீட்டுக்கு போலாமேன்னு நினைச்சேன் போன் பண்ணிட்டீங்க.” என்று சந்தோசப்பட்டாள்.

“சஜுமா, நான் ... நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு.” அவன் குரலில் இருந்த தடுமாற்றம், சஜுவை பதற்றப்பட செய்ய, “என்னண்ணா, என்ன ஆச்சு ?.”

சசுமா ஆகாஷ்க்கு சின்ன accident ஆகிடுச்சு, ஹாஸ்பிடல்ல தான் இருக்கான், உன் பெயரே தான் சொல்லிட்டு இருக்கான், கொஞ்சம் வரியா...?.”

அவன் முடிக்க கூட இல்லை, கிளம்பிவிட்டாள்.

உடனே சமயலறையில் இருந்த அம்மாவிடம், “அம்மா நான் மது வீட்டுக்கு போறேன், ப்ளீஸ்.” என்று சொல்லிவிட்டு, அம்மாவின் சம்மதத்தை கூட வாங்காமல், வாசல் படி தாண்டி சென்று விட்டாள்.

வெளியே வந்த கீதா, “லூசு புக் கூட எடுக்காம ஓடுது பார்...” என்று விட்ட சமையலை தொடர, திறந்திருந்த கதவை பூட்டி விட்டு உள்ளே சென்றார்.

சஜு, “ஆகாஷுக்கு ஒன்றும் ஆகியிருக்ககூடாது, கடவுளே நான் அவனை காதலிக்கிறேன், எனக்கு அவன் அன்பு காலம் முழுக்க வேண்டும், ப்ளீஸ் அவனை என்னிடம் இருந்து பறித்து விடாதே.” என்று வேண்டி கொண்டும், “எப்படி எங்கு அடிப்பட்டிருக்கோ.” என்று ஆகாஷை பல கோணங்களில் கையில், காலில், மண்டையில், வயிற்றில் அடிப்பட்டு ரத்தம் சொட்டுவது போல மனக்கண்ணில் மாற்றி மாற்றி பார்த்து, பயந்து வியர்த்து விட்டிருந்தாள்.

அவள் வீட்டிற்கும் மது வீட்டிற்கும் உள்ள 5 நிமிட பயண இடைவெளியே பல யுகமாக நடப்பது போல் தோன்ற நடையை துரிதப் படுத்தினாள். அவர்கள் வீட்டு தெரு முனையில் வந்த தந்தையை கூட அவள் கவனிக்கவில்லை. எந்த ஹாஸ்பிடலில் இருக்கிறான் ?ரகு எங்கிருந்து போன் செய்தான்? எப்படி, எங்கு accident நேர்ந்தது? என்ற நியாயமாக யோசிக்க வேண்டிய எந்த கேள்வியும் அவள் மனதில் எழவில்லை, மாறாக ஆகாஷ்க்கு ஒன்றும் ஆகக்கூடாது என்ற வேண்டுதலே மூளையை ஆக்கிரமித்தது.

சஜு இதே வேண்டுதலோடு, மது வீட்டிற்கு சென்று சேர்ந்தாள். கதவை தட்டி விட்டு தவிப்போடு காத்திருந்தாள். காத்திருக்கும் அந்த நொடி கூட அவுளுக்கு யுகமாக தோன்றியது, கதவும் திறக்கப்பட்டது.

உள்ளே நுழைந்த சஜு, அப்படியே சிலையாகி நின்றாள். வாய் திறந்து பேச நினைத்தும், அவளால் வாயை திறக்கக் கூட முடியவில்லை, அழுகை அவள் சம்மதமின்றியே சுனை அருவி போல, கண்ணிலிருந்து தானாக வழிந்துகொண்டே இருந்தது. அப்படியே அந்த நிலைக் கதவிலேயே சாய்ந்து, அப்படியே மடிந்து உட்கார்ந்து விட்டாள்.

இத்தனையும் ஏனென்றால், வீட்டின் உள்ளே ஆகாஷ் முழுதாக நின்று கொண்டிருந்தான், தன் ஆறடி உயரத்தில், எந்த குறையுமில்லாமல்.சஜுவின் இந்த நிலையை பார்த்து, பதறி ஆகாஷ் அவள் அருகே சென்றான். முட்டியிட்டு அமர்ந்து, “சஜு.” என்று அவள் தலையை வருடினான்.

சஜ்னா சட்டென்று அவன் சட்டையை இரு கரங்களால் பற்றி, அவன் மீது தன் தலையை முட்டி, “i லவ் யு ஆகாஷ், i லவ் யு.” என்று சொன்னாள். அவளுடைய உணர்ச்சிக் கலவைகள் அடங்கும் வரை, ஆகாஷ் அவள் தலையை கோதினான்.

அவள் சற்று தெளிவானதும், ஆகாஷ் சட்டையிலிருந்த தன் கையை, தலையை குனிந்து கொண்டே எடுத்தாள், உதட்டில் வெக்க புன்னகை ஒட்டிக்கொண்டது. ஆகாஷ், அவள் தன் கையை எடுக்கும் முன், அவள் கரங்களை தன் இரு கைகாளால் பற்றவும், அவள் நிமிர்ந்தாள். ஆகாஷ் முகம் மலர்ந்து, “சனா மீ டூ.” எனவும், அவள் புரியாமல் பார்க்க, “ஹே என்னமா நடிக்கிற? மீ டூ i லவ் யு.” என்று ஆகாஷ் சொன்னான். கடைசியில் சொன்ன 1 4 3ஐ மட்டும் அவள் காதருகில் சொன்னான்.

அதன் பின் தான் சுற்றுபுறத்தை உணர ஆரம்பித்தாள். சட்டென்று விலகிய சஜு.” ஆகாஷ், நீங்க... இங்க... மது வீட்ல எப்படி ?.” என்று தடுமாறினாள்.

ஆகாஷ், “அப்பா! இப்பவாது கேக்கணும்னு தோனுச்சே .”

“உங்களுக்கு accident னு அப்போ... இதெல்லாம் பொய்யா...?.”

“அப்பாடி! இப்பவாது புரிஞ்சுச்சே.” என்று ஆகாஷ் கிண்டலடிக்க

“ஆகாஷ்...” என்று சஜு இழுக்க,

ஆகாஷ் கை எடுத்து கும்பிட்டு, “அம்மா தாயே காளியாத்தா, இதுக்கெல்லாம் காரணம் உன் ரகு அண்ணா தான்.” என்று சொல்லி விட்டு, மாடியை நோக்கி, “ரகு ... டேய் ரகு.” என்று குரல் கொடுத்தான்.

மாடியில் இருந்து ரகுவும், மதுவும் இறங்கி வந்தனர்.

சஜு, “அண்ணா என்ன இது?, ஏய் மது நீயுமா ?.”

ரகு, “ப்ளான் போட்டது என்னமோ, நான் தான் சஜுமா , ஆனா இன்னிக்கு போட சொன்னது உன் friend மது குரங்கு தான், நான் கூட சொன்னேன், சஜுக்கு இன்னும் பயோ எக்ஸாம் முடியலன்னு, இந்த மது தான் என்னமோ சொல்லி இன்னிக்கே போடணும்னு ஒத்த காலுல நின்னா.” என்று சஜுவுக்கு பேச சந்தர்ப்பம் தராமல் ஒப்பித்தான்.

மதுவும், சசுவுக்கு பேச இடம் தராமல், தன் அண்ணனை பின்பற்றி, “கழுதக்குட்டி, சஜுவ மட்டும் சஜுமா, நான் உனக்கு குரங்கா ? அப்போ நீயும் தான் குரங்கு.” என்று தன் அண்ணனிடம் சண்டையிடுவது தான் முக்கியம் என்பது போல சண்டையிட்டாள்.

சஜு மதுவின் மண்டையில் கொட்டி, “ஏய் மது நீயும் கூட்டா ? உன்ன ...” என்று சுற்றும் முற்றும் பார்த்தாள், அதை பார்த்து மது ஓட, சஜு துரத்தினாள்.

ஆகாஷ் அதை பார்த்து சிரிக்க, ரகு, “ஆபரேஷன் சக்சஸ், அப்புறம் தம்பி, அண்ணனுக்கு 5 ஸ்டார் ஹோட்டல ட்ரீட் கொடுக்க மறந்திராத.” என்றான்.

சஜுவின் கைகளை பற்றிய மது, “ஏன் மேடம்? நீங்க சொல்லலேனா நாங்க கண்டுபிடிக்க மாட்டோமா?.”

சஜு, “எப்படி கண்டுபிடிச்ச?.” என்று கேட்க, மது தன் கடந்த பிறந்தநாள் அன்று நினைத்து பார்த்தாள். மது பிறந்த நாள் விழா ஜோரில் இருந்தாலும், சஜுவிடம் தோன்றிய மாற்றத்தை குறிக்க தவறவில்லை. அதே போல் ஆகாஷ் சஜுவிடம் பேசும் போது மட்டும் அவன் முகத்தில் ஏதோ ஒளிவட்டம் விழுந்தது போல் பிரகாசிப்பதையும் கவனிக்க தவறவில்லை. இரண்டும் இரண்டும் நான்கு என கணக்கு போட்டாள். கணக்கு தவறவில்லை என்பதை ஆகாஷிடம் விசாரித்த போது கண்டு கொண்டாள்.

அதன் பின் ரகு, சஜு ஆகாஷ் மீதுள்ள காதலை ஒப்பு கொள்ள, ஐடியா பண்ணி பிளான் போட்ட போது, ஏதேச்சையாக கேட்க நேரிட்டு, சுவாரசியம் தாங்கமல் ஒட்டுக் கேட்டு, அவர்களுடைய பிளானை எப்போது அரங்கேற்றம் பண்ணலாம் என்று ரகுவும் ஆகாஷும் தங்களுக்குள் யோசனை செய்யும் போது, மது அவர்களுக்கு இடையில் புகுந்து, “ஏய் ரகு உனக்கு கூட இவ்வளவு மூளையா? இன்னிக்கு தான் என் அண்ணன்னு ப்ரூப் பண்ணிற்க்க .”

ரகு, “ஆமாம் நேற்று வரைக்கும் பக்கத்து வீட்டு பிள்ளைக்கு அண்ணனா இருந்தேன் பாரு, ஏய் முத இங்க யாரு வர சொன்னா உன்ன , ஓடு உள்ள .”

மது, “ஏய் ரொம்ப மிரட்டாத, பிறகு உன் பிளான்ன சஜு கிட்ட சொல்லிடுவேன்.” என்று சொன்ன பிறகு தான், ரகுவுக்கு தன் தங்கை எல்லாவற்றையும் கேட்டு விட்டாள் என்பதை புரிந்து ஆகாஷிடம், “அய்யயோ, சாரி டா ஆகாஷ், இந்த குட்டிசாத்தான் வேற கேட்ருச்சே.”

ஆகாஷ், “டேய், மதுக்கு தெரியும் டா எல்லாம், நான் சொல்லிட்டேன் .”

ரகு, “இது எப்போடா நடந்துச்சு.” என்று 'என்னத்த கண்ணையா' ஸ்டைலில் வினவ

“எப்பயோ நடந்துச்சு, விடுறா, இப்ப அதுவா முக்கியம், பிளான்ன எப்போ போடறதுன்னு அண்ணனும் தங்கையும் யோசிங்க .”

“அடப்பாவி, உன் காதலுக்காக, எங்க மொத்த குடும்பத்தையே யூஸ் பண்ணிட்ட டா, இன்னும் எங்க அப்பாவையும், அண்ணனையும் தான் டா மிச்சம் விட்டு வச்சிருக்க.” என்று புலம்பவும்

“டோன்ட் ஒர்ரி டா, அங்கிளுக்கும் அண்ணனுக்கும் ஹேவியானா சான்ஸா சஜு அப்பாகிட்ட எனக்காக சிபாரிசு பேச வச்சிடுவோம் .”

ரகு என்ன சொல்லியிருப்பானோ? அதற்குள் மது, “உங்க பஞ்சயாத்த பிறகு வச்சுக்கலாம், நான் என் முடிவ சொல்லிட்டு போறேன்.” என்று கடைசி பரீட்சைக்கு முன்பு சொல்லுங்கள், அப்போது தான் அவர்கள் வீட்டில் ஏதாவது படிப்பதாக பொய் சொல்லி, தன் வீட்டிற்கு வர சுலபமாக இருக்கும் என்று சொன்னாள். தன் வீட்டிற்கு தான் வருவாள் என்று ஏனோ ஒரு குருட்டு நம்பிக்கையை மது நம்பினாள், தங்கள் பெற்றோர் வெளியூர் சென்ற இந்த நாளில் நடத்துவும் முடிவு எடுத்து செயல் படுத்தினாள்.அதே போலவே நடந்தது.

ஆகாஷுக்கு இந்த ப்ளானில் இருந்த சிறு ஓட்டைகள் அவனை பயமுறுத்த தான் செய்தது. எனினும் மதில் மேல் பூனையாக இருக்கும் சஜு மனதை ஏதேனும் ஒரு பக்கம் சாய்க்க எண்ணினான்.

ஆகாஷுக்கு எங்கே சஜு தன்னை தேடி மருத்துவமனையாக அலைவாளோ என்ற பயம், மேலும் அவள் பாட்டுக்கு வீட்டிலேயே உணர்ச்சி வசப்பட்டு அழுது, அவள் பெற்றோருக்கு தெரிந்து பெரிய பிரச்சனை ஆகிவிடுமோ என்று மேலும் பயந்தான். இந்த ஓட்டைகளை நினைத்து வருத்தப்பட்டாலும், இதன் மூலம் தன் காதல் ஒரு தீர்மானத்திற்கு வரும். அதாவது நேர்மறையான அல்லது எதிர்மறையான பதிலா என்று அன்று தெரிந்து விடும் என்று நினைத்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
Part 27

காதல்

சில பேருக்கு அது ஒரு வார்த்தை

சில பேருக்கு அது தான் வாழ்க்கை

சில பேருக்கு அதுவே ஒரு போராட்டம்

சில பேருக்கு அது உயிரும்

உணர்வும் உள்ள கடவுள் போல

பார்க்க முடியாது

உணர தான் முடியும்...

ஆகாஷ்க்கு தன் காதலை அவளிடம் நேரிடையாக தெரிவிக்க ஆசை தான், ஆனால் அவள் சம்மதித்து விடுவாள் என்பதை விட மறுத்து விடுவாளோ என்ற சந்தேகத்திற்கே அதிக சதவிகிதத்தை மனதின் உணர்வு பதிவு செய்தது. அதனால் தான் இந்த திட்டதிற்கு ஒப்புக் கொண்டான். அவனுடைய நல்ல நேரம் எல்லாமே நல்லதாக நடந்தது.

அதன் பின் காதல் பறவைகள், காதல் வானில் பறந்து கொண்டே இருந்தனர். ஆகாஷ் சிறிது நேரத்திலே, அவளை பரீட்சை இருக்கிறது என்று அனுப்பி வைத்தான். பரீட்சை தினத்தன்று, “ஆல் தி பெஸ்ட்.” சொல்ல காத்திருந்தவன், அவள் வந்ததும் அவளுடனே நடந்தான், “அப்புறம் எப்படி படிச்சிருக்க சஜு ?.”

சஜு, “இம்ம் ... நல்லா ...” அவளுக்கு அதற்கு மேல் வார்த்தை வரவில்லை. இருவரும் சேர்ந்து நடப்பதே ஏதோ புது வித அனுபவத்தை இருவருக்கும் தருவதால், அமைதியாகவே சென்றனர். பள்ளி உள்ளே சஜு சென்று திரும்பி அவனை பார்க்கவும், அவன் கண்களை மூடி, “விடைப் பெற்று சென்று வா.” என்பது போல் தலையசைத்தான். அவளும் கண்களால் விடைப் பெற்று சென்றாள்.

அதன் பின் ஆகாஷ், தன் செமஸ்டர் பரீட்சைக்கு நேரில் வந்து வாழ்த்து சொல்ல வேண்டும் என்று அடம் பிடித்து அவள் பரீட்சையின் போது அவன் வந்து வாழ்த்து சொல்லியதை சுட்டிக்காட்டி பேரம் பேசவும், சஜுவால் மறுக்க முடியவில்லை. ஆனால் காலையில் வராமல், பரீட்ச்சைக்கு முதல் நாள் மாலையில், மது வீட்டிற்கு வருவது போல், வந்து வாழ்த்து சொல்வதாகவும் சொன்னாள். சஜுவுக்கு அவன் அடம்பிடிப்பதை பார்க்க சிறு குழந்தை போல அழகாக தெரிந்தான்.

மது வீட்டில், ஆண் பிள்ளைகள் இருவரும் இன்ஜினியரிங் படிப்பதால் கம்ப்யூட்டர் வாங்கி இருந்தனர். அதில் கேம்ஸ் விளையாட ஒரு மணிநேரம் செல்வதாக தன் அம்மாவிடம் கூறி பெர்மிஸன் வாங்கி விடுவாள். சஜுவின் அம்மா கீதா, மது வீடு பக்கத்தில் இருப்பதாலும், சஜு வீட்டில் இருந்தால், அருணை படிக்க விடாமல், இருவரும் சண்டையிடுவதால் சரி என்று அனுப்பி வைத்தார். அங்கு மதுவும், சஜுவும் சில நேரம் கம்ப்யூட்டரில் விளையாடுவதும், பல நேரம் மாடியில் நின்று பேசுவதும் வாடிக்கை.

ஆகாஷ் வீட்டில் ரகுவும், ஆகாஷும் குரூப் ஸ்டடி செய்வார்கள், பின் ஆகாஷ் ரகுவை ட்ராப் செய்ய வருபவன் போல் வந்து சஜுவை பார்த்து

“டிரஸ் அழகாக இருக்கிறது.”

“இன்னிக்கு சூப்பரா இருக்க.”

“நாளை மறுநாள் வந்து விடு.” என்று கண்களால் பேசி , சமயத்தில் மற்றவருக்கு தெரியாமல் ஜாடையிலும் பேசினார்கள்.

விடுமுறை நாட்களில் சஜுவின் வீட்டு சந்தில் மதியம் அல்லது காலை நேரம், அங்கு சஜு வீட்டின் நேரே கிரிக்கெட் விளையாடும் பள்ளி சிறுவர்களை கரெக்ட் செய்து, அவர்களுடன் இவனும் விளையாடுவான். அடிக்கும் முதல் பந்தே குறி பார்த்து சிக்ஸராக சஜுவின் வீட்டு வாசலிலோ, அல்லது வரண்டாவில் விழும். முதல் நாள் சண்டைக்கு தயாராக, பந்தை எடுத்து கொண்டு வெளியே வந்த சஜு, வெளியே ஆகாஷை பார்த்து திகைத்தாள்.

அவள் திகைப்பை ரசித்த ஆகாஷ், சஜுவை பார்த்து கண்ணடித்தான். அவள் உள்ளே ஓடி விட்டாள், திக் திககென்று அடித்தது மனது. அதன் பின் அவன் வரும் நாட்களில் மட்டும் பந்து வந்து விழும், அவள் வராந்தாவிலே நின்று வேடிக்கை பார்ப்பாள். சஜுவின் வீடு மாடியில் இருந்ததாலும், இவள் அங்கு நின்று வேடிக்கை பார்ப்பதையும், பெரும்பாலும் காலை நேரத்தில் குடும்ப தலைவிகள் சமைப்பதாலும், மதியம் தூங்குவதாலும், அங்கு உள்ள அக்கம் பக்கத்தினர் யாரும் இதை கண்டு கொள்ளவில்லை. ஆனால் ஆகாஷின் பாடு தான் திண்டாட்டம் ஆனது, அப்படி விளையாடும் சமயங்களில் எல்லாம், அந்த சிறுவர்கள் தங்களுக்கு லாலிபாப் வேண்டாம், 5 ஸ்டார் தான் வேண்டும் என்று அடம்பிடித்து அவன் பாக்கெட் மனிக்கு ஆப்பு வைத்தார்கள். வாங்கி தர முடியாது என்று சொன்னால், அவனை ஆட்டைக்கு சேர்க்க மாட்டோம் என்று பயமுறுத்தி வாங்கி கொண்டனர்.

சஜு கல்லூரி சேர்ந்து விட்டால், நமக்கு இந்த தொல்லை எல்லாம் இருக்காது, தினமும் அவளை கல்லூரியிலே சந்திக்கலாம் அல்லது தனியாக பார்க், பீச் செல்லலாம் என்று நிம்மதியுடன் இருந்தான். ஆனால் அதிலும் மண் விழுந்தது சஜுவால். ஆம் சஜு +2 வில் நல்ல முறையில் ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் வாங்கி, அவர்கள் ஏரியாவில் இருக்கும் சிறந்த கலைகல்லூரியில் B.SC maths சேர்ந்து படித்தாள். அவளுடன் அவள் சைக்கிள் தோழியும் சேர்ந்தாள். மது அடம் பிடித்து இன்ஜினியரிங் சேர்ந்தாள்.

ஒரு நாள் சஜு கல்லூரிக்கு, பைனல் இயர் படித்துக் கொண்டிருந்த ஆகாஷ் திடீர் விஜயம் செய்தான். அது இரு பாலர் படிக்கும் கல்லூரி என்பதால், சுலபமாக உள்ளே நுழைந்தான். சஜு அவனை பார்த்து அரண்டு விட்டாள், எங்கே தன் தோழிகளுக்கு, professorகளுக்கு தெரிந்து நமக்கு கெட்ட பெயர் வந்து விடுமோ என்று பயங்கொண்டு அவனிடம் இது போல் வரவேண்டாம் என்று சொன்னாள். அவனும் சரி என்று ஒத்துக் கொண்டு மறு தடவை கல்லூரி வாசலில் நின்றான். வெளியே பீச் என எங்காவது செல்லலாம் என்றதற்கு மறுத்து விட்டு, பஸ் ஸ்டாப்பிலேயே, அவஸ்தையுடன் நின்று அவனிடம் பேசி அனுப்பி வைத்தாள்.

அடுத்த வாரம், அவளை வெளியே அழைத்து செல்ல வேண்டும் என்று தீர்மானித்து வந்தவனை சஜுவால் சமாளிக்க முடியவில்லை. சஜுவுக்கு பயமாகவே இருந்தது, தெரிந்தவர்கள் யாரேனும் பார்த்து, வீட்டில் போட்டு கொடுத்து விடுவார்களோ என்ற பயம்.

சும்மாவே, அவர்கள் வீட்டில் UG முடித்தவுடனே கல்யாணம் செய்ய வேண்டும் என்று பேசிக் கொள்வார்கள், காணாததற்கு இது வேறு தெரிந்தால், மறு வாரமே அவளை அவசரமாக யாருக்காவது திருமணம் செய்து வைத்து விடுவார்கள். இதை அவனுக்கு புரியவைக்கலாம், என்று நினைத்து ஒரு நிபந்தனையுடன் வெளியே வர சம்மதித்தாள்.

ஆகாஷும் அந்த நிபந்தனைக்கு ஒப்பு கொண்டு, என்னவென்று கேக்க, அவர்கள் கல்லூரியின் அருகே இருக்கும், சிறு ஐஸ்கிரீம் பார்லர்க்கு தான் வருவேன் என்று சொன்னாள். ஆகாஷ் எப்படியோ அவளுடன் தனியே பேசினால் போதும் என்று சந்தோசமாக தலையாட்டியவன், சிறிது நேரத்திலே நொந்துக் கொள்ள போவது தெரியாமல் சந்தோசமாக அவளுடன் சென்றான்.

உள்ளே சென்றதும் பயந்து கொண்டே அமர்ந்தவள், தன் சூழ்நிலையை அவனுக்கு விளக்கி, நமக்கு இன்னும் காலம் இருக்கிறது, கல்யாணத்துக்குப் பிறகு நன்றாக ஊர் சுற்றலாம் etc etc என்று ஒரே அட்வைஸ் மழை பொழிந்தாள்.

ஆகாஷ்க்கு அவளுடன் இனிமையாக பேசலாம் என்றிருந்தவனுக்கு ஆற்றாமை நிரம்பி வழிந்து, பக்கத்தில் இருக்கும் சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் என்ற ஆவலை கஷ்டப்பட்டு அடக்கினான். ஆனால் சஜுவிடம், “சரி சஜு, ஆனா நாம இனிமே இங்கயே மீட் பண்ணலாம் சஜு, உன் relatives யாரும் இங்க வரமாட்டாங்க, காலேஜ் பசங்க தான் வருவாங்க.” என்று சொன்னான். அவளும் சம்மதித்தாள்.

இது தான் ஆகாஷ், என்ன தான் அடுத்தவர் விருப்பங்களுக்கு வளைந்து கொடுத்தாலும், தன் விருப்பத்தை ஆணித்தரமாக சொல்லி, அவர்கள் ஒப்பு கொள்ளும் படி செய்திடுவான். அதன் பின் வாரத்தில் இரண்டு நாட்கள் அங்கு தான் சந்தித்தனர்.

ஆகாஷின் பிறந்த நாள் வந்தது, அன்று சஜுவுடன் வெளியே ஹோட்டலுக்கு செல்லலாம் என்று பிளான் செய்தவனை, மீண்டும் அவனை ஏமாற்றம் கொள்ள செய்து, அதே ஐஸ்கிரீம் பார்லர்க்கு சென்றனர். எப்பொழுதும் எதிர் எதிரே பார்ப்பது போல் அமர்பவன், இன்று அவள் அருகில் நாற்காலியை ஒட்டி போட்டு அமர்ந்தான். அவளும் அவன் பிறந்த நாள் என்று ஒன்றும் சொல்லவில்லை.

ஆகாஷ், “என் பிறந்தநாளைக்கு கூடவா வெளியே வரமாட்டேங்கர, இரு உன்ன, இன்னிக்கு என்ன பண்றேன் பார்.” என்று மனதில் நினைத்து கொண்டு, அவள் இடுப்பை கிள்ளி விட்டு, முகத்தை சீரியஸாக வைத்து கொண்டு, மெனுவில் கண் பதித்து, ஐஸ் கிரீம் வாங்க எழுந்து சென்றான்.

சஜுவுக்கே சந்தேகம் வந்து விட்டது, அவன் தான் கிள்ளினானா அல்லது தன் பிரம்மையா என்று. பின் ஐஸ் கிரீமை சாப்பிட்டு கொண்டே சஜு, “அப்புறம் ஆகாஷ் உங்க காலேஜ்ல எப்படி கொண்டாடினீங்க?.” என்று அவனை கேட்டுக் கொண்டே ஸ்பூனில் ஐஸ் கிரீமை எடுத்து சாப்பிட, அவள் வாயருகே கொண்டு போக, படக்கென்று ஆகாஷ் அவள் கை பற்றி, அவள் ஸ்பூனில் இருந்த ஐஸ் கிரீமை சாப்பிட்டு, “இம்ம், ஐஸ் கிரீம் சூப்பரா இருக்குல.” என்று கண்ணடித்து சொன்னான். அவள் முறைப்பதை பொருட்படுத்தாமல், “என்ன கேட்ட? காலேஜ்லயா, இம்ம் நல்லா போச்சு, நா பிரண்ட்ஸ் எல்லோருக்கும் ட்ரீட் வச்சேன் .”

அவள் சாப்பிடாமல் இருப்பதை பார்த்து, “என்ன சஜு ? சாப்பிடு.” என்றான்.

அவளும் பல்லை கடித்து பொறுமையுடன் சாபிட்டாள். அதன் பின்னாவது ஆகாஷ் சும்மா இருந்திருக்கலாம், ஆனால் பாவம் அவனையும் குற்றம் சொல்ல முடியாது, காதல் மிகுதியால், சஜு அருகே வேறு இருக்கவும், அவள் கையை பற்றி, “சனா i லவ் u.” என்று பற்றிய கையில் முத்தமிட்டான்.

ஏற்கனவே சஜு, அவன் தன் கையை பற்றி ஸ்பூன் மாற்றி சாப்பிட்டதை எத்தனை பேர் பார்த்தார்களோ என்று சங்கோஜப்பட்டுக் கொண்டு இருந்தாள். அதோடு அவன் இவ்வாறு செய்யவும், படக்கென்று கோபப்பட்டு எழுந்து சென்று விட்டாள். ஆனால் இவர்களை யாரும் கவனிக்கவில்லை, எல்லோரும் அவரவர் வேலையில் மூழ்கி இருந்தனர். ஆகாஷ் இதற்க்கெல்லாம் அசருகிற ஆளா? பில் pay செய்து விட்டு, அவள் கொடுத்த கிப்டையும் (gift) எடுத்து கொண்டு, வெளியே பத்தடி கடந்திருந்தவளை நாலு எட்டில் பிடித்தான். ஆகாஷ்.” ஏய் சனா டார்லிங், நானா கேட்டா இந்த பர்த்டே பேபிக்கு இந்த கிப்ட கொடுத்திருப்பியா? அதான் நானே உனக்கு கொடுத்துட்டேன்.”

சஜு ஒன்றும் சொல்லாமல் மேலும் அவனை முறைத்து, பஸ் ஏறி சென்றுவிட்டாள். வீடு வந்த ஆகாஷ் முதன் முறையாக, இப்படி எதற்க்கெடுத்தாலும் கோவிக்கிறாளே, எங்கேயும் வெளியே வர மறுக்கிறாளே, ஆனால் அது கூட பரவாயில்லை, என் காதலையும் புரிந்து கொள்ள மறுக்கிறாளே, என்று சிறிது எரிச்சல் அடைந்தான்.

சஜுவும் ஒரு வாரம் கோவித்து கொண்டு, மறுவாரம் தான் மனமிறங்கி வந்து, சந்தோஷமாக அவனுடன் பேசினாள், “ஆகாஷ், இனிமே இப்படி பப்ளிக் பிளேஸ்ல பிஹேவ் பண்ணாதீங்க, எனக்கு பிடிக்காது ஆகாஷ் .”

ஆகாஷ், “அப்போ பிளேஸ் தான் தப்புங்கற, நா பண்ணது k வா ? பிடிச்சிருக்கா.”

சஜு, “அஷு ... அடி வாங்க போறீங்க.” என்று வெக்கப்பட்டாள்.

மேலும் மேலும், மாறி மாறி சுவாரசியமாக ஏதேதோ பேசி மகிழ்ந்தனர், ஆகாஷ் சந்தோசத்தில் மிதந்தான், சஜு வெட்கப்பட்டாள். மொத்தத்தில் இருவரும் மகிழ்ச்சியான மனநிலையில், அவரவர் வீடு வந்து சேர்ந்தனர்.

ஆகாஷின் அப்பா ரங்கா சார், ஆகாஷிடம், “ஆகாஷ் இந்தா இந்த பார்ம் எல்லாம் பில் பண்ணிடு.” என்று கொடுத்தார். ஆகாஷ் படித்து பார்த்தான், வெளிநாடு சென்று படிக்க வேண்டிய யுனிவர்சிட்டியின் பார்ம் இருந்தது. ஆகாஷ், “என்னப்பா ?.” என்று கேட்க, ரகு சார் அவனை வெளிநாடு அனுப்பி வைத்து, மேலாண்மை படிப்பையும், படிப்புடன் கூடிய apprentice ஷிப் பற்றியும் விளக்கி, அதில் சேர சொன்னார். குறைந்த பட்சம் எல்லாவற்றையும் முடித்து அவன் இந்தியா வர 3 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் கூட ஆகலாம். அவனுடைய அப்பா எதையும் வற்புறத்த மாட்டார், இவனும் அவர் எந்த விசயத்தையும் வறுபுறுத்தும் படி வைத்து கொள்ள மாட்டான், உடனே செய்து முடித்து விடுவான், அந்த நம்பிக்கையில் தான் ரங்கா சார் எல்லாம் ஏற்பாடையும் செய்தார்.

ஆகாஷ் லேசாக மறுத்து பார்த்தான், ஆனால் ஒரேடியாக அவரை மறுக்க அவனால் முடியவில்லை. சஜு தான் 3 வருடம் படித்து முடிப்பதற்குள், ஆகாஷ் வேலை சென்று விடுவான். அதன் பின் அவன் தாய் தந்தையுடன் வந்து, தன்னை பெண் கேட்டு திருமணம் செய்து கொள்வான். அம்மா புரிந்து கொண்டாலே போதும், அப்பாவை அம்மாவின் துணையுடன் ஆகாஷை பற்றி எடுத்து சொல்லி சமாளித்து விடலாம் என்று நம்பிக்கையுடன் இருந்தாள். அந்த நிம்மதியுடன் ஆகாஷை கனவுலகத்தில் காண ஆயத்தமானாள்.

ஆனால் ஆகாஷோ தூக்கம் வராமல், அவனுடைய இக்கட்டானா சூழ்நிலைக்கு தீர்வு என்ன ? என்று யோசித்தான். தான் திரும்பி வரும் வரை சஜு காத்திருந்தாலும், அவர்கள் வீட்டில் அவளை விட்டுவைத்திருப்பார்களா ? என்ற சந்தேகம் வலுத்தது. தன்னால் அவள் வாழ்வு பாழடைய வேண்டாம் என்று, அவளை வெறுப்பது போல் நடித்து நம் காதல் நிஜமானதல்ல என்று சொல்லிவிட்டால், அவளுக்குள் இருக்கும் கோப குணத்தால் தன்னை வெறுத்து விடுவாள் என்று நினைத்தான்.

வெளிநாடு சென்றால் என்ன ? அவளை தொடர்புக் கொண்டால் போதுமே என்று இன்னொரு மனம் நினைக்க, நம் வீட்டில் வசதி இருக்கிறது, தற்போழுது தான் அறிமுகமாகி வந்திருக்கும் செல் வைத்திருக்கிறேன், அவள் வீட்டில் ????????? நாம் வாங்கி கொடுத்தாலும், அவள் பயந்த சுபாவத்தினால் வைத்துக் கொள்ள மாட்டாள்.இ மெயில், சாட் ???????? எல்லாமே கேள்விகுறி தான். “ஆண் பிள்ளை என்றால் கேள்வி இல்லை, நான் பெண் பிள்ளையாயிற்றே, வெளியே வராண்டாவில் தொடர்ந்து ஒரே நேரத்தில் சில நாட்கள் நின்றாலே சந்தேகம் வரும்.” என்று முன்பே சொன்னவள். இப்பொழுது சாத்திய படாது.

அதனால் காதலை ட்ராப் செய்வது நல்லது என்று நினைத்தான். இரண்டு வாரங்கள் அவளை சந்திக்காமல் இருந்தான். தன் காதல் இப்படியா தொடங்கிய பத்து மாதத்திலே, குறை பிரசவ குழந்தை போல் இறக்க வேண்டும் என்று நினைத்தவன் கண்ணில் கண்ணீர் மல்கியது. தன்னை தானே கட்டுப்படுத்திக் கொண்டு மறு நாள் சஜுவை பார்க்க காத்திருந்தான்.

இரண்டு வாரங்கள் அவனை பார்க்காமல் சஜுவுக்கு பயம் அதிகமாயிற்று, அவனுக்கு என்ன ஆயிற்றோ என்று தினம் இரவு மனதின்னுள்ளே புலம்பினாள். அவன் செல்லில் தொடர்பு கொண்டால், அது சசுவிட்ச் ஆப் என்று சொன்னது. டெலிபோன் செய்யலாம் என்றால், அவர்கள் வீட்டில், வேறு யாராவது எடுத்து மாட்டிக் கொண்டால், என்ன செய்வது என்று அந்த யோசனையும் விடுத்தாள்.

ஆகாஷ் இரண்டு வாரங்களுக்கு பின் பின் காரில் வந்தான். “சஜு வண்டியில் ஏறு ப்ளீஸ்.” என்றான். இரண்டு வாரங்களாக அவனை பார்க்காததாலும், அவன் முகம் இறுகி இருந்ததாலும், எதுவும் பிரச்சனையோ என்று எதுவும் கேட்காமல், அவனுடன் சென்றாள். ஆகாஷும் ஒரு உணவகத்தில் நிறுத்தினான்.

ஆகாஷ், “சனா , am sorry to say this. ப்ளீஸ் என்னை மறந்திடுன்னு சொல்ல மாட்டேன். பட் நமக்குள்ள இருந்தது, நடந்தது எல்லாமே ஜஸ்ட் infactuation தான், உனக்கு, உன் வயசுக்கு puppy லவ் ன்னு சொல்வாங்களே அது மாதிரி, நீ புரிஞ்சுக்குவன்னு நினைக்கிறேன், 1ஸ்ட் நாம படிக்கணும், நான் டிகிரி முடிக்கணும், வேலைக்கு போகணும், நீ அட்லீஸ்ட் ஒரு டிகிரியாவது வாங்கணும். சோ நமக்குள்ள இருந்தது காதலா? என்றே தெரியல, “என்று சொன்னான்.

சஜு அசைவற்று அமைதியாக அமர்ந்து இருந்தாள். கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வழிந்தது, ஆகாஷ், “சனா, சனா.” என்று உலுக்கினான். அதன் பின் தான் அவள் நினைவுலகிற்கு வந்தவள் போல், அவனை முறைத்து, அவன் கைகளை உதறி எழுந்து நின்றாள்.

அவனும் எழ, அதே சமயம், சஜு அவன் கன்னத்தில் ஒரு அறை கொடுத்து விட்டு, கண்ணீர் விட்டப்படியே அந்த உணவகத்தை விட்டு வெளியே சென்று விட்டாள்.

ஆகாஷ் அவள் அறைந்ததும், ஷாக் ஆகி, குனிந்த தலையுடன் , பில் பே செய்து விட்டு அவனும் வெளியேறி விட்டான்.

அவளுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. எப்படியோ மூளை மட்டும் வேலை செய்து கி கொடுத்த பொம்மை போல வீடு வந்து சேர்ந்தாள். அதன் பின் இருவரும் வெளியே வெறுத்தார்களே ஒழிய மனதின் உள்ளே அவர்களால் வெறுக்க முடியவில்லை, மேலும் அதிகமாக காதலிக்க தான் முடிந்தது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top