• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் யுத்தம் 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sara yuvaraj

SM Exclusive
Joined
Sep 27, 2018
Messages
778
Reaction score
1,464
Location
chennai
PART 10

நீ எங்கே என் நினைவுகள் அங்கே

நீ ஒரு நாள் வரும் வரையில்

நான் இருப்பேன் நதிக்கரையில்

பிறப்பிடம் வேறாய் இருந்தாலும்

என் இருப்பிடம் உனது மனமல்லவா ...................




தூங்கி விட்டு மாலை 5 மணிக்கு எழுந்த சஜுவுக்கு நல்ல பசி, அவன் வாங்கி வைத்த சாப்பாட்டில் சிறிது உண்டு விட்டு, முகம் கழுவி, சிறிது ஒப்பனை செய்து விட்டு, கீழே சென்றாள்.

சஜு வீட்டிற்கு சென்று வந்த பெண்கள் ஓய்வு எடுக்க, ஆண்கள் அலுவலகம் சென்றனர்.

ஆனந்தியும் சரசும் டிவி பார்த்துக் கொண்டிருக்க, அவளும் அவர்களுடன் அமர்ந்தாள்.

"வா மா, சஜு, இப்ப உடம்புக்கு எப்படி இருக்குமா?” “செல்லம் " என அழைத்தவர், செல்லம் வரவும் "செல்லம், ஒரு டீ யும், டிபனும் எடுத்துட்டு வா"

சஜ், டீயை குடித்து விட்டு, அவர்கள் இருவரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே டிபனை கொறித்து கொண்டு இருந்தாள். சரசுவும் அனியும் மாமியார் மருமகள் போல் அல்லாமல், தாயும் மகளை போல அன்பாக, பிரன்ட்லியாக பேசிக்கொண்டு இருந்தனர். அதை பார்த்து ஆச்சர்யம் அடைந்தாள் சஜு.

அவளைப் பார்த்து, சிரித்து கொண்டே அனி "என்ன சஜு, அப்படி பார்க்குற, அத்தை மாமியார் போல இல்லாம இப்படி அம்மா போல பேசுறாங்கலேன்னா, அந்த பெருமை எல்லாம் எனக்கு தான் சேரும், இல்ல அத்த(தை )"

சரஸ் "ஏய் , நான் என்னமோ கொடுமைக்கார மாமியார இருந்தது போலவும், நீ வந்து திருத்துன மாதிரி பேசுற. வாலு, சஜு இவ என் அண்ணன் பொண்ணு தான் மா, அதான் அப்படி சொல்றா " என செல்லமாக அனியை கடிந்து கொண்டார்.

அனி "சஜு, எனக்கு அம்மா இல்லை, நான் சின்ன வயசா இருக்கும் போதே இறந்துட்டாங்க. அத்தை தான் என்னையும் , என் தங்கையையும் வளர்த்தாங்க, வருசத்துல பாதி நாள் நான் இங்கே தான் டேரா போடுவேன் நான்"

சரஸ் "ஆமாம் மா, நான் இவள என் பொன்னு மாதிரி பாசமா வளர்த்தேன், இவளும் என் மேல பாசமா இருக்கிறதால தான், என்ன விட்டு பிரிஞ்சு இருக்க முடியாம தான் , அடிக்கடி இங்க வராளோன்னு நினைச்சேன் ஆனா ......" என்று முகத்தை சோகமாக வைக்கவும்,

சஜ் "ஆனா, என்ன அத்தை " எனவும்

‘அப்பாடி சகஜமா பேசிட்டா’ என்று நினைத்து கொண்ட சரஸ் அனியின் தலையில் செல்லமாக கொட்டி "ஆனா, இவ என் பையன சைட் அடிக்க தான் வந்திருக்கான்னு பிறகு தான் தெரிஞ்சிச்சு"

அனி "ஐயோ அத்தை, சஜுக்கிட்ட என் மானத்தை வாங்காதிங்க" எனவும் அதே சமயம் , அவி வீட்டிற்கு வந்து இவர்கள் பக்கம் ஒரு சிரிப்பை தந்து விட்டு, தன் அறைக்கு சென்றான் .

அனி "போங்க அத்தை, நான் உங்க கூட கா " என்று தன் அறைக்கு செல்ல,

சரஸ் " போ மா, உன்ன யாரும் இங்க பிடிச்சு வைக்கல, போய் உன் புருஷன கவனி"

அனி "போங்க அத்தை" என்று சினுங்கி கொண்டே சென்று விட்டாள்.

சரசுவும் சமையல் மேற்பார்வையிட சென்று விட்டார். சஜுவும் சிறிது நேரம் உட்கார்ந்து டிவி பார்த்து விட்டு, சாப்பிட்டு விட்டு ஆகாஷ் அறைக்கு சென்று கீழே படுத்து விட்டாள்.

இரவு சாப்பாட்டிற்கு ஆகாஷும், ரங்கா சாரும் வராமல், தாமதமாக தான் வந்தார்கள். சரஸ் அவர்கள் இருவருக்கும் சாப்பாட்டை எடுத்து வைத்து விட்டு, ஆகாஷிடம் "ஒரு 2 நாட்கள் ஆகாஷ், நீ கீழே இருக்கும் கெஸ்ட் ரூமில் தங்கி கொள்ளப்பா, 2 நாட்கள் கழித்து உன் அறையில் தங்கலாம் " என்று மறைமுகமாக சொன்னார்.

ஆகாஷ் "சரி மா, நான் போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு, நைட் டிரஸ் மட்டும் என் ரூம்ல இருக்கு, போட்டுக்கிட்டு வந்துவிடுகிறேன் " என்று மாடிக்கு சென்றான்.

ஆகாஷ் தன்னறைக்கு சென்றவன், தூங்கும் சஜுவை பார்த்துக் கொண்டிருந்தான், அவன் கை அவன் கன்னத்தை தடவியது (ஆகாஷ் கன்னம் தாங்க, நோ ஸ்பெல்லிங் mistake, ஏன் தடவுறான்னு அவனே ரீசன் சொல்றான், கேளுங்க )

"இவளை பார்த்து எத்தனை வருடங்கள் ஆயிற்று? 5 வருடம் இருக்குமா? இருக்கும் "என்று நினைத்துக் கொண்டான். 5 வருடங்களுக்கு முன்பு சஜுவை கடைசியாக பார்த்தது இன்னும் அவன் நினைவில் இருந்தது, அதை மனதில் படமாக ஓட்டிப் பார்த்தான்.

ஒரு நாள் மாலைப்பொழுது, ஒரு உணவகத்தில் அமர்ந்து இருந்தனர் இருவரும். ஆகாஷ் " சனா , am sorry to say this. ப்ளீஸ் என்னை மறந்திடுன்னு சொல்ல மாட்டேன். பட் நமக்குள்ள இருந்தது, நடந்தது எல்லாமே ஜஸ்ட் infactuation தான், உனக்கு, உன் வயசுக்கு puppy லவ் ன்னு சொல்வாங்களே அது மாதிரி, நீ புரிஞ்சுக்குவன்னு நினைக்கிறேன், 1ஸ்ட் நாம படிக்கணும், நான் டிகிரி முடிக்கணும், வேலைக்கு போகணும், நீ அட்லீஸ்ட் ஒரு டிகிரியாவது வாங்கணும். சோ நமக்குள்ள இருந்தது காதலா? என்றே தெரியல" என்று சொன்னான்.

சஜு அசைவற்று அமைதியாக அமர்ந்து இருந்தாள். கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வழிந்தது, ஆகாஷ் "சனா, சனா " என்று உலுக்கினான். அதன் பின் தான் அவள் நினைவுலகிற்கு வந்தவள் போல், அவனை முறைத்து, அவன் கைகளை உதறி எழுந்து நின்றாள்.

அவனும் எழ, அதே சமயம், சஜு அவன் கன்னத்தில் ஒரு அறை கொடுத்து விட்டு, கண்ணீர் விட்ட ப்படியே அந்த உணவகத்தை விட்டு வெளியே சென்று விட்டாள்.

ஆகாஷ் அவள் அறைந்ததும், ஷாக் ஆகி, குனிந்த தலையுடன், பில் பே செய்து விட்டு அவனும் வெளியேறி விட்டான்.

இத்தனை வருடத்தில், சனா எவ்வளவோ அழகாகி விட்டாள், என்று அப்படியே நின்றான், அவள் அசைவது உறைக்கவும், அவன் வேகமாக குளியலறைக்கு சென்றான்.

சஜு ஆகாஷ் வரும் வரை, படுத்து இருப்பது போல் முழித்துக் கொண்டு இருந்தாள். தன்னிடம் நின்று அசையாமல் அவன் தன்னை பார்ப்பதையும் உணர்ந்தாள்.

சஜ்னா அவன் நின்று விட்டு சென்று விடுவான் என்று பார்த்தாள், 10 நிமிடத்திற்கு மேலே அவன் நிற்கவும், தான் உறக்கத்தில் அசைவது போல் அசைந்தாள். அதன் பின் உறங்க முயற்சி செய்து வெற்றியும் கண்டாள்.

கீழே கெஸ்ட் ரூமில் படுத்த ஆகாஷ், அன்று காலை நடந்தவற்றை அசைப் போட்டான். காலையில் வீட்டில் இருந்து கிளம்பியவன் தான் அலுவலகத்திற்கு சென்று, அவன் இருந்து செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளை தன் பிஎ விடம் எடுத்து வைக்க சொல்லிவிட்டு, தான் இல்லாத 2 நாட்களில் என்ன என்ன செய்ய வேண்டும் என்று தன் மேனேஜர்க்கு சொல்லிவிட்டு, வேலை பார்க்கும் அனைவரையும் அழைத்து ஒரு குட்டி மீட்டிங் போட்டு, தனக்கு திருமணம் ஆன விவரத்தையும், receptionக்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்தான்.

பின் பதிவாளர் அலுவலகம் சென்று சண்முகம் சார் க்கும் அழைப்பு விடுத்து, அத்தோடு சஜு இனி வேலைக்கு வர மாட்டாள் என்று சொல்லிவிட்டு, தன் நண்பன் சுகந்தனுடன் தனது பிரைவேட் ரூமில் அமர்ந்து, ரமா பற்றிய விவரங்களை கேட்டறிந்தான். சுகந்தனும் ஆகாஷின் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பை வகிக்கிறான்.

ஆகாஷ் " ரமாக்கு என்னடா ஆச்சு? ஒன்னும் பயப்படுற மாதிரி எதுவும் நடக்கலையே? நாம நினைச்ச மாதிரியே அந்த ஆளு தான, ஆளுங்கள வச்சு கடத்திற்கான். ப்ளடி சீட் " என்று கோவமாக பொங்கினான்.

சுகந்தன் "ஆமாம்டா ஆகாஷ், அவர் தான், தன்னை காட்டிக்காம ஆள வச்சு கடத்திருக்கார், நான் ஒரு டிடேக்டிவ் ஏஜென்சிக்கிட்ட விவரத்த சொல்லி, அவர follow பண்ண சொன்னேன், அவங்க சொன்ன தகவலால் தான் conform ஆச்சு. ரமாவ கடத்தி வச்சா உன் மேரெஞ் நின்னுடும் நினைத்திருக்கிறார் , உனக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சதும் ரமாவையும, நட்ராஜையும் விட்டுவிட்டார் "

ஆகாஷ் " ரமா இப்போ safeஆ தான இருக்காங்க ? "

"இம்ம் safe தான் " சுகந்தன் .

பின் அலுவலகத்தில் இருந்துகிளம்பி, வந்து சாப்பிட்டு, சஜு வீட்டுக்கு போய்விட்டு, ஆபீஸ்க்கு சென்று அங்கிருந்து ட்ரெயினில் வருபவர்களுக்கு ட்ரைன் டிக்கெட்டும், பஸ்சில் வருபவர்களுக்கு பஸ் டிக்கெட்டும், ப்ளைட் டிக்கெட் எல்லாம் புக் செய்து விட்டு, ஓய்ந்து போய் வீட்டிற்க்கு வந்தான். சஜுவை பார்த்ததும் உற்சாகம் திரும்பியது. சிறிது நிம்மதியுடன் உறங்க ஆரம்பித்தான். ஒன்றை மறந்து விட்டான், காலையில் தன் வீட்டில் பேசி முடிவு செய்த ஏற்பாட்டை சஜுக்கு சொல்ல வில்லை என்பதை மறந்து விட்டான்.

காலையில் எழுந்த சஜு, அறையில் ஆகாஷ் இல்லாததை பார்த்து, "எங்கே போனான் ? நைட் வரலையோ? அப்போ வந்து, என் பக்கத்துல நின்னது எல்லாம் கனவோ? அத்தைக் கிட்ட கேட்கலாம்" என்று நினைத்து குளித்து முடித்து வெளியே வந்தாள்.

சஜ் செல் அழைக்கவும், யார் இவ்வளவு காலையில் என்று நினைத்து தன் சேலையை அவசரமாக உடுத்தி வந்து எடுத்து பார்த்தால், தன் தோழி பானு.

பானு "ஏய் சஜு, என்னடி இது? உனக்கு நாளைக்கு marriage receptiona? நேற்று முதல் நாள் கூட உன்ன பார்த்தேனே, நீ ஒன்னுமே எனக்கு சொல்லல, ஏண்டி எனக்கு கூடவா சொல்லனும்னு உனக்கு தோணல?" என்று தன் ஆதங்கத்தை கொட்ட,

சஜு "நீ வேற, என் நிலைமை புரியாமல் பேசாத பானு. ஆமா உனக்கு எப்படி தெரியும் ?"

பானு, தான் தினசரிகளில் வந்த விளம்பரத்தின் மூலம் அறிந்ததை சொன்னாள். உடனே சஜு "பானு இப்ப என்னிடம் எதுவும் கேட்காத, நான் உன்னிடம் ஒரு நாள், கண்டிப்பா விவரம் சொல்கிறேன் என்ன நடந்துச்சுன்னு" என்று செல்லை கட் செய்தாள்.

இதை கேட்ட சஜ்னாவிற்கு கோபம் தலைக்கு ஏறியது "கல்யாணம் தான் தனக்கே தெரியாமல் நடந்தது என்றால், இப்பொழுது receptionனும் அதே போல் நடக்க போகிறதா? என்ன நினைத்து கொண்டு இருக்கிறான் இந்த ஆகாஷ், இவன் கை பாவை என்றா? அதுவும் இவன் வீட்டினர் மட்டும் போதுமா? என் அம்மா, அப்பா , அண்ணன் வேண்டாமா?" திரும்பவும் அம்மாவின் நினைவில் கோபம் அழுகையாக மாறியது.

கண்ணீர் விட்டப்படி, அங்கிருந்த சோபாவில் அமர்ந்து இருந்தாள்.ஆகாஷ், இவ்வளவு நேரமாகியும் அவள் எழுந்து வரவில்லையே சாப்பிட என தன் அறைக்கு அவளை பார்க்க சென்றான். (போ மாப்பு போ )

அங்கு கண்ணீருடன் சஜ்னாவை பார்க்கவும் அவனுக்கு சிறிது எரிச்சல் பரவியது. "இவளை கல்யாணம் செய்ததற்கு நான் எவ்வளவு சந்தோசப்படுகிறேன், ஆனால் இவள் எப்பொழுதும் அழுதுக் கொண்டு, cha..., அப்படி என்ன குறை இவளுக்கு?" என்று ஆழ்ந்து யோசியாமல், பட்டென்று அவளிடமே கேட்டு விட்டான்.

ஆகாஷ் "சஜு , இப்ப என்ன குறை என்று இப்படி அழுதுக்கொண்டே இருக்கிறாய் ?"

ஏற்கனவே கொதித்து கொண்டு இருந்தவள், இவன் இவ்வாறு கேட்கவும் எழுந்து கத்தினாள் "என்ன குறைன்னா? கேக்குற எல்லாமே குறை தான் இங்க" என்று தன் உள்ள குமறலை கொட்டினாள். அதாவது அவன் தன்னை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்ற அர்த்தத்தில் கூறினாள்.

அதை கேட்ட பணக்கார ஆகாஷ் "ஏன்? இங்க வசதி இல்லையா? உங்க வீட்டோட பார்க்கும் போது, இந்த ரூமே உங்க வீட்ட விட பெரிசு தான் " என்று அசட்டையாக கூறிக் கொண்டே சோபாவில் அமர்ந்தான்.

(சும்மாவே சஜு சாமியாடுற ரேஞ்சுல இருக்கா, இப்ப ஆகாஷ் வேற வேப்பில்ல அடிச்சு ஏத்தி விடுறான் வாங்க என்னாச்சுன்னு பார்ப்போம்)

ஏற்கனவே கோபத்தின் உச்சியில் இருந்தவள், இவன் தன் வீட்டை மட்டம் தட்டி பேசவும், கண் மண் தெரியாமல் கோபம் வர, அரை நிமிடத்தில், அமர்ந்த ஆகாஷை நெருங்கி, அவன் முடியை பற்றி கொண்டாள், "ஏண்டா, எவ்ளோ துமிர் உனக்கு? எங்க வீட்டையா மட்டம் தட்டுறா?" என நன்றாக ஆட்டினாள்.

சத்தியமாக இதை எதிர்பார்க்காத ஆகாஷ், சுதாரித்து அவள் கைகளை பற்றிய நேரம்,

"அச்சச்சோ ........" என்ற குட்டி தேவதையின் குரலும்,

"அய்யயோ அம்மா ..........." என்ற சுட்டியின் குரலும் ஒன்றாக கேட்டது, அறை வாயிலில் இருந்து.

சஜுவின் யுத்தம் தொடரும் .............
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
Intha story nallaa irukkuthe...ithoada author yaarunu thedittu irunthen.
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
Adapaavi

Eriyura fire la oil oothuriya unna kollaporaa

Ivan daan break up pannana seri daan

Thappa ellam ivan side daan pola yaaru andha kutty aanadhi papava
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top