• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் யுத்தம் 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sara yuvaraj

SM Exclusive
Joined
Sep 27, 2018
Messages
778
Reaction score
1,464
Location
chennai
பகுதி 11
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா

தொட்டுச் செல்லும் பட்டாம்பூச்சி கூட்டமா

கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா

சோகங்கள் இன்னும் இங்கு ஏன் அம்மா




காலையில் உணவறையில் உணவுகளை செல்லத்தின் உதவியுடன் எடுத்து வைத்து கொண்டிருந்த அனி, சஜ்னா இன்னும் இறங்கி வராமல் இருக்கவும், ஆகாஷிடம் சொன்னாள்.

அவனும் "நான் போய் பார்க்கிறேன் அண்ணி" என்று சொல்லி சென்றவனையும் காணோமே என்று, அப்பொழுது தான் தன் அப்பாவுடன் வந்திறங்கிய தன் ரெட்டைச் சுட்டிகளை விட்டு, மேலே சென்று ஆகாஷை அழைத்து வரும் படி சொன்னாள்.

அவர்களும் தன் அம்மா பேச்சு தட்டாமல், மேலே தங்களின் சித்தப்பாவின் அறைக்கு சென்றனர். சென்ற குழந்தைகள் சஜு மற்றும் ஆகாஷின் நிலையை பார்த்து, பயந்து போய் தங்கள் அம்மாவை அழைத்தனர்.

பின்னே! அவர்கள் நின்ற கோலம் அவ்வாறு இருந்தது. சஜு கோபத்தில் அவன் முடியை பற்றி ஆட்டிய வேகத்தில், அவள் அணிந்த சேலையின் ஒற்றை முந்தானை முன்னே சரிந்திருந்தது, அத்தோடு தலையை கூட வாராமல், ஒன்றிரண்டு முடி கற்றைகள் நெற்றியில் விழ, அத்தோடு ஆகாஷ் வேறு அவள் கையை பற்றி இருந்தான்.

அந்த ரெட்டை சுட்டீஸுக்கும், சஜு ‘சந்திரமுகி ஜோ’ போல் தெரிய, பத்தாததுக்கு தங்கள் சித்தப்பாவை வேறு அடிக்கிறாளே என்று பயந்து விட்டனர்.

குழந்தைகளின் சத்தத்தைக் கேட்டு, அப்படியே சிலை என அதே கோலத்தில் சஜு நிற்க, ஆகாஷ் சுதாரித்து, அவள் கைகளை தன் தலையில் இருந்து விடுவிக்க, அதற்குள் அனியின் குரல் கீழே இருந்து "என்னாச்சு நந்து, சிந்து" என ஒலித்தது.

தலைமுடியைக் கைகளால் சரி செய்து கொண்டே "ஒன்னும் இல்ல அண்ணி" என்று பதில் குரல் கொடுத்து விட்டு, அவர்கள் இருவரையும் தூக்கிக் கொண்டு தன் அறைக்கு திரும்பினான்.

ஆகாஷ் "என்னடா பயந்துட்டீங்களா?"

அவர்கள் இருவரும் ‘ஆமாம்’ என்பது போல் தலையாட்டினர், அவர்களுக்கு சஜு முன் பேச பயமாக இருந்தது.

சஜுவுக்கு என்ன செய்வது, என்ன சொல்வது என்று ஒன்றும் புரியவில்லை. அப்படியே அந்தச் சோபாவில் அமர்ந்தாள்.

ஆகாஷும் குழந்தைகளுடன் சோபாவின் மறுப்பக்கம் அமர்ந்தான். தொடர்ந்து அவனே "நீங்க, இரண்டு பேரும் பக்கத்து வீட்டு பிரன்ட்ஸ் கூட விளையாடுவீங்கள, அது மாதிரி தான் நாங்க இப்போ விளையாண்டோம்" என்று தங்கள் சண்டையை குழந்தைகளுக்கு விளக்கினான் .

அதிபுத்திசாலியான சிந்து என்ற சிந்துஜா "இது என்ன விளாட்டு சிட்டப்பா? அவ உன் முடிய பிடிசிருந்தாளே" எனவும் .

நம் சுட்டி நந்து என்ற நந்தகுமார் "அப்டினா இது உ(ன் ) பிரண்டா?" என்று கேட்டான்.

இருவருக்கும் "ஆமாம் கண்ணுகளா, இங்க நாங்க விளையாடியதை கீழே யார்கிட்டையும் சொல்லக் கூடாது. ஓகே?" என்று விடையளித்தான் .

சிந்துவா கொக்கா, அவள் "சரி, சரி, இந்த விளாத்த நீ சொல்லி தரியா எனக்கு?" என்று பேரம் பேசினாள் .

நந்து "ஆமா, ஆமா எனக்கும் "

"கஷ்ட காலம்டா" என்று நினைத்த ஆகாஷ், "சரி, சித்தப்பாக்கு வேலை இருக்கு, ஈவ்னிங் வந்து சொல்லி தரேன், இம்ம்" எனப் பொறுமையாய் கூறினான்.

இருவரும் அவன் ஒத்துக்கொண்ட சந்தோசத்திலும், தங்களுக்கு ஒரு புது விளையாட்டு கிடைக்கப் போகும் ஆர்வத்திலும், சந்தோசமாக "சரி சித்தப்பா" என்று கோரஸ் பாடினர்.

ஆகாஷ், சஜு பக்கம் கை காட்டி, "இவங்க தான் உங்க சித்தி, பேர் சஜ்னா, எங்க... சித்திக்கு ஹலோ சொல்லுங்க பார்ப்போம்" என்று அறிமுகம் செய்து வைத்தான்.

இரண்டரை வயதான இரண்டு சுட்டிகளும், "ஹலோ, ஐ அம் சிண்டுஷா", "ஹலோ, ஐ யாம் நன்த குமார்" என்று இரண்டும் கைகளை நீட்டி தங்கள் தாய்மொழியான மழலை மொழியில் பேசினர் .

சிறுபிள்ளைகள் முன், தான் செய்த செய்கையை நினைத்து அவஸ்தையுடன் அமர்ந்து இருந்த சஜுவிற்கு, குழந்தைகளின் மழலை மொழியால் சிறிது இறுக்கம் தளர்ந்தது.

அவர்களைப் பார்த்து புன்னகைத்து, "ஹலோ டியர்ஸ், ஐயாம் சஜ்னா" என்று இருவருக்கும் கை நீட்டினாள். ‘ம்ம்ம்... இதில் ஒன்றும் குறைச்சல் இல்லை’ என மனதில் நினைத்து கொண்டான் ஆகாஷ்.

"சரி, வாங்க எல்லோரும் கீழே போகலாம்" என்று ஆகாஷ் சொல்லவும், சஜு சிந்துவை நோக்கி கை நீட்ட, சிந்துவும் அவளிடம் யோசித்து கொண்டே சென்றாள்.

சஜு சிந்துவைத் தூக்கிக் கொள்ள, ஆகாஷ் நந்துவைத் தூக்கிக் கொண்டு மாடியிலிருந்து இறங்கினார்கள். ஆகாஷ் "ஆமாம், நீங்க எப்போடா வந்தீங்க?" என்று கேட்டுக் கொண்டே சென்றான்.

"நாங்க, தாத்தா கூட வந்தே" என்று நந்து சொல்லவும், ஆகாஷ் முகத்தைச் சுளித்தான்.

கீழே அவர்கள் உணவறைக்கு நெருங்கும் போது பேச்சு சத்தம் கேட்டது.

அவி "மாமா, நாங்களே உங்கள வந்து பார்த்துட்டு, ஆகாஷ் ரிசப்ஷனுக்கு சொல்லிட்டு, குழந்தைகள கூட்டிட்டு போலாம்னு இருந்தோம், நீங்களே வந்துட்டீங்க" என்று தன் மாமனார் சின்னசாமியிடம் கூறினான்.

உணவறைக்கு வந்த ஆகாஷ் அண்ட் கோ வை பார்த்துக் கொண்டே சின்னசாமி தன் மாப்பிளையிடம் "பார்த்தீங்களா மாப்பிளை... நீங்க நினைச்சீங்க, நானே வந்துட்டேன்" என்று பதிலளித்தார்.

ஆகாஷைப் பார்த்து "அப்புறம் ஆகாஷ், என் பொண்ணு என்ன சொல்றா? நம்ம வீடு பிடிச்சிருக்கா?"

ஆகாஷ் "இம், எங்க வீடு பிடிச்சிருக்காம் மாமா, என் வைஃப்க்கு" என்று சற்று அழுத்தமாகச் சொன்னான். சஜு இருவரையும் சிந்தனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அஞ்சும்மா பேரனின் அழுத்தத்தைக் கண்டு மேற்கொண்டு பேச்சை வளர்க்க விடாமல் "சரி, சரி, சாப்பிட்டுட்டுப் பேசலாம் எல்லோரும், ஆனந்தி, சரசு சாப்பாட்டை எடுத்து வைங்க மா" என்று சொல்ல, அங்கு அனைவரும் உண்ண ஆரம்பித்தனர்.

எல்லோரும் சாப்பிட்டு முடித்தவுடன், சின்னசாமி கிளம்பினார். சரசுவிடம் "சரிமா, நான் கிளம்பறேன், கவிதா அங்க வீட்டில் தனியா இருப்பா" என்று கூறி விட்டு, மற்றவர்களிடமும் விடைபெற்று கிளம்பினார்.

அஞ்சும்மா "ஏன் பா கவிதாவையும் கூப்பிட்டு வந்திருக்கலாம்ல... அவளும் வந்து ரொம்ப நாளாச்சு"

சின்னசாமி "இருக்கட்டும் அத்தை, இப்ப என்ன ஆகாஷ் கல்யாணத்துக்கு வரும் போது விட்டுட்டுப் போறேன் கவிதாவ, சரஸுக்கும் ஒத்தாசையா இருப்பா"

அஞ்சும்மா "சரிபா, அப்படியே செய், உனக்கு இன்னிக்கு அவசர வேலை எதுவும் இல்லையே? நாங்க கொஞ்ச நேரத்துல கிளம்பி, அங்க உங்க வீட்டுக்கு தான் வர்றோம், முறையா அழைக்க"

சின்னசாமி "சரி அத்தை வாங்க" என்று கிளம்பிவிட்டார்.

பின் அனைவரும் ஹாலில் கூடினர், அங்கு நாலா பக்கமும் இருக்கைகள் இருக்க, எல்லோரும் தங்கள் ஜோடியுடன் அமர, சஜு அஞ்சும்மா பக்கத்தில் அமரப் போவாள் என்பதை யூகித்து, அவனைக் கடக்கும் போதே, ஆகாஷ் மற்றவர் சந்தேகப்படாதப் படி, அவள் கையைப் பிடித்து தன்னருகே இருத்திக் கொண்டான்.

சஜு அவனை முறைக்கவும் வழியில்லாமல், விலக்கவும் தெரியாமல் அமைதியாக அமர்ந்தாள். குழந்தைகள் வேறு அப்பாவின் மடியிலும், சித்தப்பாவின் மடியிலும், இப்படியே ஒவ்வொருத்தர் மடியாக மாறி மாறி தங்கள் போக்கில் விளையாடினர்.

ரங்கா "நீ ஆபீஸுக்கு போயிட்டு, அப்படியே நம்ம கார்மெண்ட்ஸ் வரைக்கும் போய் எட்டிப் பார்த்துட்டுப் போ பா, அப்புறம் ஹோட்டல் ரூம், ரிசப்ஷன் ஹால்லாம் புக் பண்ணிட்டியா? கன்பார்ம் ஆகிடும்ல?" என்று வினவ

அவி "ஆகிடும் பா. ஓகே பா... நா பார்த்துக்கிறேன்"

ரங்கா "அப்போ நாங்க போய் உங்க மாமாவ இன்வைட் பண்ணிட்டு, டிரஸ் எடுக்கப் போறோம்பா, உனக்கு என்ன வேணும்னு ஆனந்தி கிட்ட சொல்லிட்டியா?"

அவி "சொல்லிட்டேன் பா, நாளைக்கு நம்ம வீட்டிலேயே கல்யாணம் பண்றதால, வீட்ட டெகரேஷன் பண்ணவும் ஆளுங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கேன், ஆகாஷ் இந்தா அவங்க கார்டு, ஈவ்னிங் சிக்ஸுக்கு வரேன் சொன்னாங்க, எப்படி என்ன மாதிரி டெக்கரெட் பண்ணனும்னு அவங்க கிட்ட நீயே சொல்லிடு"

ஆகாஷ் "சரிண்ணா"

ரங்கா அஞ்சும்மாவைப் பார்த்து "சரிம்மா, நாம் எல்லோரும் கிளம்பலாமா?" எனவும்

சஜ்னாவோ தனக்கு தெரியப்படுத்தாமல் இவனாகச் செய்கிறான், இவனுடன் செல்ல வேண்டுமா என்று நினைத்தாள். மேலும் அவளுக்கு எதிலும் ஆர்வமில்லை.

அதனால் தான் வரவில்லை என்பதை அஞ்சும்மாவிடம் "பாட்டி நான் வீட்டிலேயே இருக்கிறேன், நீங்க எல்லோரும் போயிட்டு வாங்க" என்றாள்.

அனி "என்ன சஜு மேரேஜ் உனக்கு தான், உனக்கு பிடிச்ச மாதிரி வாங்க வேண்டாமா?" எனவும்

தயங்கிக் கொண்டே, தலைக் குனிந்து கொண்டே சஜு "இல்ல கா, நீங்க போய்ட்டு வாங்க, உங்களுக்கு பிடிச்சதே எடுத்துட்டு வாங்க, எனக்கு பிடிக்கும்" எனச் சொல்ல, அவி "ஓ... ஆகாஷுக்கு பிடிச்சா சரின்னு சொல்றாங்க, ஆனந்தி பார்த்து கத்துக்கோ" என்று சொல்லவும், அனைவரும் புன்னகைப் புரிந்தனர்.

அஞ்சும்மா சஜு தன் தாயில்லாமல் வர சங்கடப்படுகிறாளோ என்னவோ? என்று அவராக நினைத்து "சரிமா, நீ வீட்டிலயே இரு, ஆனா நீ எங்க கூட வராததுக்கு தண்டனை உண்டு" எனவும் நிமிர்ந்து பார்த்தாள் சஜ்னா .

அவர் சிரித்துக் கொண்டே "இந்த இரண்டு சுட்டியையும் பார்த்துக்கோ, ஆனந்தி ப்ரீயா ஷாப்பிங் பண்ணட்டும் "

அனி "தேங்க்ஸ் பாட்டி, பாட்டினா பாட்டி தான்" என்று அவர் கழுத்தை கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்சினாள்.

அவி தான் "ஏன் பாட்டி? வந்த அன்னிக்கே சஜுவை கொடுமைப் படுத்துற "

சஜு "அப்படிலாம் இல்ல, நான் பார்த்துக்கிறேன்" என்று அவியை எப்படிக் கூப்பிடுவது என்று தெரியாமல் தடுமாறினாள்.

அஞ்சும்மா அதை உணர்ந்து "சஜு, ஆனந்திய அக்கானு கூப்பிடுற அப்போ அவிய மாமான்னு சொல்லணும் மா "

அவள் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் .

சரஸ் "சரி அத்தை, நாம கிளம்பலாம், இல்லாட்டி தாமதமாகிடும், ஆகாஷ் வீட்டில் இருக்கட்டும். அப்போ தான் பிள்ளைங்க அழாம இருக்கும், இல்லாட்டி சஜு பாடு அவ்ளோ தான்"

ரங்கா "ஆமாண்டா ஆகாஷ், கரெக்ட் தான், நீ வீட்டில் இரு, நம்ம ரிலேட்டிவ்ஸ் யாராவது வந்தாலும் ரிசீவ் பண்ணனும், அப்புறம் யாராவது போன் செய்தாலும் பதில் சொல்றதுக்கு ஆள் வேணும்"

அஞ்சும்மா ரங்காவிடம் "ரங்கா, உன் டிரைவர வர சொல், நாம் கிளம்பலாம்" என அனைவரும் கிளம்பினார்கள்.

அவர்கள் சென்றதும், குட்டிஸிடம் சஜ்னா பேசிக் கொண்டு இருந்தாள், "ஆமா, நீங்க ஏன் ஸ்கூலுக்கு போல"

"உன்கு தெரியாதா? சின்ன புள்ளிங்கோ ச்சூல் போகாது" என்றான் நந்து.

"பெரி பிள்ளிங்க தான் போணும், சின்ன பிள்ளிங்க விளாடனும்" சிந்து.

இப்படியே அவர்களுடன் பேசி நட்பானாள் சஜு, மூவரும் விளையாட தோட்டத்திற்கு செல்வதற்காக வெளியே போனார்கள்.

ஆகாஷ் போன் வரவும் தனியே சென்று பேசி விட்டு, சஜ்னாவுடன் தனியாக பேச சரியான சந்தர்ப்பம் என்றெண்ணி வெளியே செல்ல திரும்பியவன் காதில், "நீ தான் வீட்டுக்கு வந்த புது மருமகளா?" என்று சஜ்னாவிடம் வினவியது ஒரு குரல்.


யுத்தம் தொடரும்....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top