• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் 29

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chithu.h

இணை அமைச்சர்
Joined
Feb 5, 2020
Messages
519
Reaction score
1,398
Location
Madurai
மாணிக்கம் கைதான விசயம் ஊரேங்கும்தெரிய வந்தது...நீயூஸ் சேனல் முழுதும் இதே பேச்சாக தான் இருந்தது...அந்த நீயூஸில் ரதுவும் தீராவும் இருப்பதை பார்த்த மகாவின் தலை தட்டாமாலையாக சுற்றியது..

எது நடக்கூடாது என்று நினைத்தாரோ அதுவே நடந்தது...தீராவை அணைத்தவாறே நின்ற ரதுவை பார்க்க கோபம் தலைக்கேறியது.....

" அத்தை,ஏன் நீங்க இவ்வளவு கோபமா இருக்கீங்க என்னாச்சு ? " ஷாரு அருகினில் வர.." நான் எது நடக்க கூடாதுன்னு நினைச்சேனோ அதுவே நடந்திருக்கு ஷாருமா,ரதுக்கு எதுவுமே தெரிய கூடாது நினைச்சேன்,..ஆன இப்படி அவன காதலிச்சு என் முகத்துல கறியை பூசிட்டா.."

" அத்தை,அவன் வந்ததும் கேட்போம் நீங்களா முடிவு பண்ணாதீங்க அத்தை..."

" இதுக்கு மேல என்ன கேட்க இருக்கு,அதான் ஊர் முழுக்க தெரிஞ்சு என் மானத்தை வாங்கிட்டாளே ! இதுக்குமேல அவகிட்ட கேட்க என்ன இருக்கு...." என்று அழுதார்...

அதே நேரம் பிரணவும் ரதுவும் உள்ளே வந்தனர்..." அம்மா....! " அழைத்துக்கொண்டே வர டீ.வியில் நீயூஸூம் ஓடியதை பார்த்து அப்படியே நின்றனர்.. அவளை கோபமாக அடித்தார் மகா சோபாவில் பொத்தென்றுவிழுந்தாள்...,

" அம்மா.....!" என பிரணவும் " அத்தை....! " ஷாருவும் கத்தினர்.

" இரண்டு நாளா எங்க இருத்துட்டு வர சொல்லு ரது ? "

" அம்மா,நான் தான் சொன்னேள எங்க கஷ்டடில தான் இருந்தான்னு..எங்க இருந்துட்டு வரன்னு கேட்கிற அவள..."

" டேய்,உங்க ட்ராமாலாம் தெரிஞ்சு போச்சு,அமைதியா இருடா...நீ சொல்லு எங்க இருந்துட்டு வர "

" தீரா வீட்டில இருந்துட்டு வரேன்.தெரிஞ்சும் ஏன் கேட்கிற நீ ? "

மீண்டும் அவளை அடிக்க செல்ல இருவரும் தடுத்தனர்..." பார்த்தீயா டா இவளுக்கு திமிர...அங்க இருந்துட்டு வரேன் சொல்லுற உனக்கு வெட்கமா இல்லை...யாருடி அவன்,அவன் வீட்டுல நீ ஏன் இருந்துட்டு வர அவனுக்கும் உனக்கும் என்ன சம்மத்தம்.."

" ஏன் உனக்கு தெரியாதா, சரி நானே சொல்லுறேன் அவன் என் புருசன்,..." என்றதும் பாராங்கள் ஒன்றை இறக்கி வைத்தாற் போன்று இருந்தது..

" என்னடி சொல்லுற புருசனா,..." மேலும் அவளைஅடித்தாள்..." என்ன அடிச்சாலும் தீரா தான் என் புருசன்....நான் அவன தான் காதலிக்கிறேன்...அவனை தவிர்த்து எவனையும் கட்டிக்க மாட்டேன் " என்றாள்

" நான் உன்னை அவனுக்கு கட்டி வைக்கமாட்டேன்....அவன் உங்க அப்பாவ கொல்ல போறேன் நிக்கிறான்....அவன் கொன்னுட்டானா,..அப்புறம் நீ என்னை போல தான் இருக்கன்னும் ரது புருஞ்சுகோடி.தீரா உனக்கு வேணாம்,..அம்மா பார்க்குறா மாப்பிள்ளை கட்டி சந்தோசமா வாழுடி...."

" எப்படி மா....இன்னொருத்தனோட
பொண்டாட்டியா இன்னொருத்தனுக்கு கல்யாணம் பண்ணிவைப்ப வெட்கமா இல்ல....சந்தோசமா நான் வாழனும்ன்னா,அது தீராகூட இருந்து தான் மட்டும் தான்...வேற எவனாலும் என்னைய சந்தோசம வச்சுக்க முடியாது...." என்றாள்..

" அவன கட்டிக்கிட்டா உன் வாழ்க்கை பாழாகிடும் ரதுமா..ஏன்டி புருஞ்சுக்கவே மாட்டிகிற,கத்தி எடுத்தவனுக்கு கத்தியால தான் சாவு...அவனோட வாழ்க்கை முன்ன போல இல்லை டி..கத்தி,அறுவான்னு கொல்லுற எண்ணத்தோட இருக்கான்,வேணா ரதமா நான்சொல்லுறத கேளுமா....,அவன் வேணா உனக்கு....அம்மா சொல்லுற கேளுமா..." என கெஞ்ச..

" அம்மா,அவ தீராவ காதலிக்கிற,அவன் கூட வாழ்ந்தா தான் சந்தோசமா இருப்பா..தேவையில்லாம எதையும் யோசிக்காம...அவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிவைமா.." என்றான் பிரணவ்.

" முடியாதுடா...நான் சொல்லுறது இப்ப வேணாம் உங்களுக்கு தப்பாதெரியலாம் ஆன நான் சொல்லுறது தான் நடக்கும்...உனக்கு தீரா வேணாம்...நான் சொல்லுற மாப்பிள்ளை கட்டிட்டு வாழ பாரு,.." என்றார்,

" பரவாயில்லை,ஒருநாள் வாழ்ந்தாலும் அவன் கூடத்தான் வாழ்வேன்,அவன் கூடையே சாகுறேன்...ஆன வேற யாரையும் கட்டிக்க மாட்டேன்...நீ கல்யாணம் பண்ணணும் நினைச்சா...அவன் தாலி என் கழுத்துல ஏறத்துக்கு முன்னாடி நான் செத்துகிடப்பேன்..."

" சரி நீ செத்துபோ.ஆன தீராவ கட்டிவைச்சு உன் வாழ்க்கைய அழிக்க மாட்டேன்..."

" தீராதான் என் சந்தோசம் உனக்கு ஏன்,புரியல...நீ தானே அவன வார்த்தைக்கு வார்த்தை மாப்பிள்ளை மாப்பிள்ளை கூப்பிட்ட....எனக்கு கட்டிவைக்க முடிவு பண்ணி அவன் மனசுல ஆசைய விதைச்ச....இப்ப மட்டும் என்ன வந்துச்சு......"

" அவன் உன் அப்பன கொல்லை போறான் டி அது ஏன் உனக்கு புரியல "

" புருசன் பாசம் தடுக்குதா..
உன் புருசன் பண்ணதுக்கு தீரா தண்டனை கொடுக்க நினைக்கிறான் அது தப்பா ? "

" ஐயோ ! அவர நான் எப்பையோ என் புருசன் இல்லைன்னு தூக்கி ஏறிஞ்சுடேன்...அவர கொன்னா தீரா காலம் முழுக்க ஜெயில் தான்டி இருப்பான்....அவனுக்காக காத்துட்டு இருப்பியா நீ வாழ்க்கை தொலைச்சுட்டு...."

" இருப்பேன்....அவன் பொண்டாட்டியா அவனுக்காக காத்துட்டு இருப்பேன்...ஆன நான் வேற ஒருத்தன கட்டிக்கவே மாட்டேன்..." என்றாள்,மேலும் அடிக்க அவளது செயின் முன்னே வந்து விழுக...அதை எடுத்து பார்த்தவருக்கு அன்று அவனுக்காக வாங்கிய ஜெயின் என்று அவன் கூறியது நியாபகத்திற்கு வந்தது....

" இந்த செயினை தான் நீ தாலி நினைச்சுட்டு இருக்கீயா....இத முதல் கழட்டி டி " அவர் இழுக்க இவள் பிடித்துகொள்ள கழுத்தில் காயம் ஏற்பட்டது...

" மா...உன் பொண்ணோட தாலிய நீயே அறுக்க நினைக்கிறீயே இது நியாயமா...." என்றவள் கேட்க.." நானாடி நானா தாலிய அறுக்க நினைப்பேன்...தாலியோடு சுமங்கலியா வாழனும் தானேடி இவ்வளவு சொல்லுறேன்....தீராவ கட்டிகிட்ட உன் தாலி நிலைக்காது..." என்றார்..

" அம்மா ! அப்படி பேசாத...தீரா இல்லன்னா இந்த உலகத்துல நானும் இருக்கவே மாட்டேன்..."

" என்ன விட அவன் உனக்கு பெருசா போயிட்டான்ல.....இத்தனை வருசமா வளர்த்த தாயை விட உனக்கு அவன்முக்கியமா தெரியுறான்ல..."

" இத்தனை வருசமா நீங்க என்னை வளர்த்தாலும்.,கணவன் வீடுதான் முக்கியம்,கணவன் தானே உனக்கு எல்லாம்,அப்புறம் தாங்கன்னு சொல்லித்தானே கணவன் வீட்டுக்கு அனுப்புறீங்க....அவன் தான் எனக்கு முக்கியம்....தீராவ நினைச்சுட்டு இன்னொருதன் கூடா வாழமுடியாது..."

" முடியாது,நீ தீராவ கல்யாணம் பண்ணிக்க சம்பதிக்க மாட்டேன்..இனி நீ வீட்டைவிட்டு வெளிய போக கூடாது...ரூம்ல தான் இருக்கன்னும்...நான் மாப்பிள்ளை பார்த்து கட்டிவைக்கிற வரைக்கும் நீ இங்க தான் இருக்க...." என அவளை ரூமில் அடைத்தார்.... இரண்டு பேருல யாரவது திறந்தீங்க என்ன உயிரோட பார்க்கவே முடியாது,...." என்று கூறி சென்றுவிட இருவரும் எதுவும் செய்ய முடியாமல் நின்றனர்....

" அம்மா...அம்மா...." என்ற கதவை தட்டிக்கொண்டே இருந்தாள்...
வீடு திரும்பிய தீராவிற்கு வீடு வெறுமையாகத்தான் உணர்த்தான்...

" தீராப்பா.....ரது மிஸ் எங்கப்பா ? அவங்கள காணோம்,எங்க போனாங்க என்னை விட்டு....," அவனை கேட்க..

" ரது மிஸ் அவங்க வீட்டுக்கு போயிட்டுங்க சம்மு குட்டி...அவங்க அம்மா தேடுவாங்கள...." என்றவளை சமாதானம் செய்தான்...

" அப்ப ஏன் இங்க இருந்தாங்க...,அவங்க நம்ம கூடையே இருக்க மாட்டாங்களா தீரா.."

அவன் அமைதியாக...இருக்க..." அண்ணா,அண்ணி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வாங்கண்ணா,அவங்க இங்க இருந்தா தான் அண்ணா பாப்பா,நாங்க ஏன் நீங்களும் சந்தோசமா இருப்பீங்க....,அவங்க அம்மாகிட்ட பேசி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கு அண்ணா.....பீளிஸ் அண்ணா.." என சிவா கெஞ்ச....எல்லாரும் அதையே தான் கூறினார்.....

"அவங்க அம்மாகிட்ட என்ன சொல்லி சம்மதம் கேட்க சொல்லுற சிவா....என்கிட்ட எல்லாம் இதுக்கு தான் ஆன நான் ஒரு கொலைக்காரனா ஒரு ரௌடியா நிக்கிறேன்,...எப்படியும் நான் மாணிக்கப்பெருமாள் கொல்ல தான் போறேன்...அவர கொன்னா நான் ஒரு கொலைக்காரன்...கொலைக்காரனுக்கு பொண்ணுதர எப்படி சம்மதிப்பங்க,சிவா..அவங்கள போல அவங்க பொண்ணு வாழ்க்கை ஆகிடும் பயப்பிடுறாங்க டா...அவங்கிட்ட போய் உங்க பொண்ண கேட்டா,ஒரு கொலைகாரனுக்கு பொண்ண தரமாட்டேன் தான் சொல்லுவாங்க,.."

" ஆன அண்ணா,அண்ணி உங்களை தான்காதலிக்கிறாங்க.அவங்களுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க அண்ணா...."

" தெரியலடா,அவ இங்க இருந்த இரண்டு நாள் நான் சந்தோசமா இருந்தது உண்மைதான்....அவ இப்படியே இங்கையே இருக்க கூடாது மனசு ஏங்குச்சு...ஆன நிதர்சனம் நான் கொலைசெய்ய காத்திருக்கும் கொலைக்காரன்...பெருமாள கொன்னதுக்கு அப்புறமா நான் ஜெயிலுக்கு போயிடுவேன்....அப்ப அவ வாழ்க்கை கேள்விக்குறீயாக தான் இருக்கும்....காதலிச்சோம்ன்றனால அவ வாழ்க்கையை நானே அழிக்க முடியாது சிவா...."

" அண்ணா....."

" வேணாம் சிவா....இதுக்கு மேல எதுவும் பேசாத....போதும் ...இந்த வீடு சம்மு..நீங்க போதும் வேற யாரை பத்தியும் நினைக்க வேண்டாம்..." என்று சம்முவை தூக்கிகொண்டு தன்னறைக்கு வந்தான்...

" அங்கே சாய்வு நாற்காலியில் அமர்ந்தவன்....பிரணவ் கூறியதை நினைத்து அழுதான்...ரதுவை உள்ளே அடைத்து போட்டதும்...பிரணவ் தீராவிடம் அனைத்தையும் கூற...அங்கிருந்த சந்தோசமாக வந்தவனுக்கு முற்றிலும் வற்றி போனது...அவனிடம் எதுவும் பேசாமல் போனை வைத்து விட்டான்....

அவள் உடை அவனது அறையில் இருக்க...அதை கையில் வைத்து அழுத்தான்....

" அன்பு பாசத்தை மட்டும் தான் இழந்து நிக்கிறேன் நினைச்சேன்,இப்ப என் காதலை இழந்துட்டு நிக்கிறேன்...உன்னை பார்க்காம இருந்திருந்தா.எங்க குடும்பத்தை இழந்த வலியோடு மட்டும் தான்டி இருந்திருப்பேன்...ஆன உன்னை பார்த்து எனக்குள்ள இருந்த காதலை தூண்டிவிட்டு,இப்ப தவிக்கவிட்டு போயிட்டியே ...என்னால நீ இல்லாம வாழ முடியாது நிலைக்கு வந்துடேன் டி....என்கூடவே வந்திடு டி...." என அழுத்து புலம்பினான்...." அம்மா..அப்பா...." என்னால முடியலம்மா என்ன உங்க கூடையே அழைச்சுட்டு போயிருக்களாமேமா....என்னால இந்த நரகவேதனையில் வாழ முடியலம்மா...." என கதறி அழுதான்...

இங்கோ தீராவை நினைத்து உண்ணாமல் உறங்காமல் அழுது தீர்த்தால்.....அவள் நிலையை காணமுடியாமல் தவித்தாலும் தன் கொண்ட முடிவில் உறுதியாக இருந்தார்...இரண்டு நாட்கள் கடக்க...

ரதியின் அருகில் வந்தாள் ஷாரு..." ரதுமா,நீ இப்படி இருக்கிறது சரியில்ல.உன் உடம்புக்கு எதாவது ஆச்சுன்னா,என்ன பண்றது...ஒருவாய் வந்து சாப்பிடுமா..."

" எனக்கு எதுவும் வேணா....என்ன பத்தி யாரும் அக்கறை பட வேணாம்....நான் எப்படி இருந்தா உங்களுக்கு என்ன பீளிஸ் வெளிய போங்க..." என கத்தினாள்..

" எதுக்குடி இப்ப கத்துற அவ உன் நல்லதுக்கு தானே வந்து பேசுறா...இப்படி தான் கத்துவீயா ? "

" போதும்,என் நல்லது பத்தியோசித்தது போதும்...என்னை தனியா இருக்க விடுங்க...."

" ஒழுங்க சாப்பிட்டு, முகத்த கழுவி தயராக இரு....இன்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டுல இருந்து வராங்க....அவங்க பார்க்க நீ நல்ல இருக்கன்னும்....போய் ஒழுங்க முகத்தை அலும்பிட்டு சாப்பிடு,.."

" யாரை கேட்டு பொண்ணு பார்க்க வர சொன்னீங்க.....நான் ஏற்கனவே கல்யாணம் ஆன வ..,எனக்கு இன்னொரு மாப்பிள்ளை பார்க்கிறீங்க...."

" தேவையில்லாம பேசாத நான் சொன்னது போல தயாராக இரு...மாப்பிள்ளை குடும்பத்துக்கு முன்னாடி நீ நல்லா இருக்கன்னும் அவ்வளவு தான்,."

" முடியாது....முடியாதுமா...நீங்க சொல்லுறது போல நான் தயாராக மாட்டேன்..."

" அப்ப,என் பிணத்தை தான் நீ பார்ப்ப ரதுமா....நான் சொன்னத செய்வேன் " என்றார்...எதுவும் பேசமுடியாமல் நின்றாள்...

மாலையில் மாப்பிள்ளை வீட்டுகாரர்கள் வந்தனர்,,.எல்லோரையும் வரவேற்று அமரவைத்தார் மகா...ஆனால் ரது,ஷாரு,.பிரணவ் பிடிக்கவில்லை..."

" டேய்,பிரணவ் போய் வந்தவங்களை கவனிடா,.இங்க நின்னுட்டு இருக்க...." என்றார்...

" அம்மா...." என்றவன் வெளியே சென்று மாப்பிள்ளை யாரென்று பார்க்கச்சென்றான்....

அங்கே அமர்ந்தவனை கண்ட பிரணவிற்கோ அதிர்ச்சி...
" வித்தேஸ் " என தனக்குள் சொல்லிக்கொல்ல...

அவனை கண்ட அந்த வித்தேஸோ அசட்டு சிரிப்பை உதிர்த்தான்...

தீரா(து)காதல்....
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Amma kum ponnun kum nadakura sandai la yaar ninaichadu nadakumo, idu yaat da pudusa, nice update chithu dear thanks.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top