• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் 32

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chithu.h

இணை அமைச்சர்
Joined
Feb 5, 2020
Messages
519
Reaction score
1,398
Location
Madurai
நிலவாய் வந்து இருள்சூழ்ந்த வானில் ஒளி பரப்பி நட்சத்திரங்களோடு வந்து அழகு படுத்தியது அவ்விரவை....

மருந்து வீரியத்தில் உறங்கிகொண்டிருந்தாள் ரது..அவளின் கைகதை பற்றி அருகில் அமர்த்திருந்தான் தீரா,...

அவன் எதனை பற்றியும் சிந்திக்கவில்லை....சிந்தனை முழுவதும் ரதுவே...அவள் எழுந்து தீரா என அழைத்தாளே போதும் என்ற எண்ணம் மட்டுமே...சம்மூவை வேலம்மாள் பார்த்துக்கொள்ள சொன்னவன்..சிவா எவ்வளவு அழைத்தும் உண்ண மறுத்துவிட்டான்...அவளயே கண்கொட்டாமல் பார்த்திருந்தவன்..அவளின் அருகே சென்று அவளது நெஞ்சில் தலைவைத்து சேயாய் நெருங்கி அணைத்து படுத்துக்கொண்டு...

சிறிது நேரம் கழித்தே மெதுவாக கண்விழித்தாள்....கண்ணை சூழலவிட்டவளுக்கு நெஞ்சில் ஓர் நிம்மதி தீரா அறையில் இருப்பதை நினைத்து... அவள் எழமுயல அவளால் முடியவில்லை....தன்மேல் நெஞ்சில் தலை வைத்திருக்கும் தீராவை பார்த்தாள்...அவனருகில் தாலி அவள் நெஞ்சில் இருக்க...உயிர்பிழைத்தது இன்றி,இத்தனை நாள் வேண்டியது கிடைத்த சந்தோசத்தில் இருந்தாள்...

தல வலக்கரத்தால்,அவனது கண்ணங்களை மெல்ல வருடியவள் அவள் நெற்றியில் இதழ்பதித்தாள்...அவன் தீண்டலில் கண்விழித்தவன்...அவள் கண்விழித்ததை கண்டு இழந்ததை மீண்டும் பெற்றதும் இறுக்கப்பற்றிக்கொள்ளும் குழந்தையாய் அவளை இறுக்க கட்டி அணைத்தான்.....நெற்றி,கண்ணம் கண் மூக்கென இதழ்பதித்தான்...நூலளவு கூட இடைவெளி இன்றி இருவரும் முக்கும் உரசும் அளவில் நெருங்கி இருந்தனர்...

"ஏன் ரதுமா உனக்கு இந்த தீரா மேல நம்பிக்கை இல்லையா நான் உன்னை அவனோட மனைவியாக விட்டுவேனா ? எதுக்கு டி இப்படி பண்ண,தீராவோட உயிரே நீ தான்டி..நீ போயிட்டா இது வெறும் பிணம் டி....இனி நீ இந்த தீராவோட பொண்டாட்டி, இனி யாரு நினைச்சாலும் உன்னை என் கிட்ட இருந்து பிரிக்கவே முடியாது ரதுமா...உனக்கு எந்த சூழ்நிலை வந்தாலும் இது போல ஒரு முடிவு எடுக்கமாட்டேன் என் மேல சத்தியம் பண்ணு டி ...." என அவள் கையை தன் தலையில் வைத்தான்...

" இந்த உடல் இருக்கிற வரைக்கும் என் உயிர் இருக்கும் தீரா,இது போல எந்த முடிவையும் எடுக்க மாட்டேன்.." என்றாள்...,அவளின் மென்மையான இதழை வன்மையாக சிறையெடுத்தான்...

இதுனால் வரையில் பட்ட துன்பம்,வேதனை,வலி, பிரிவு அணைத்தையும் மறக்கவே செய்தான் அம்முத்தததில்..,அவளும் அதை காதலாய் ஏற்றாள்...மெல்ல அவளை விடுவித்தான்...

சிறு நாணம் கொள்ள அவன் விழிகளை நோக்கிடாத பெண்ணவள் சிரம் தாழ்த்தவே அவளது நாடியை உயர்த்தி விழிகளை நோக்கச்செய்தான்.அவனது விழிகளை ஏதேதோ கூறவே அவனை காணத்தவித்தாள் மங்கயவள்...

" தீரா,சாப்பிட்டியா ? " என அவள் கேட்க..." நீ கண்விழிக்கிற வரைக்கும் எதுவும் தோனல டி....நீ இப்படி பண்ணதும் நின்ன இதயம் இப்பதான்துடிக்கிது...இவ்வளவு நேரம் நான் என்னவா இருந்தேன் எனக்கே தெரியலடி...." என்றவனை நெற்றியில் மீண்டும் முத்தத்தை பதித்தவள்...

" வா,சாப்பிடலாம் " என எழுந்தாள்..அவனை அழைத்து டைனிங் டெபிளில் அமரவைத்தவள் பரிமாறினாள்.....

அவன் முதலில் அவளுக்கு ஊட்டினான்...பின் அவள் ஊட்ட இருவரும் உண்டனர்...அவளை தூக்கிகொண்டே தன் அறைக்குள் சென்றான்......

" ரதுமா...நாளைக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா ?..." என்றவனை பார்த்தவள்...

" தீரா,நான் உன் பொண்டாட்டிடா...நீ கூப்பிட்டா வர போறேன்......நீ தாலி கட்டினத்த என்னால பார்க்க முடியல தீரா....இன்னோரு முறை கட்டுறீயா..."

" அடியே ! எத்தனை முறை தான்டி தாலியை கட்ட..."

" எத்தனை முறை நீ கட்டுன ? "
" எத்தனை முறையா ! இந்த ஜெயின்,இப்ப இருக்க,தாலி...போதாதா இன்னும் கட்டனுமா ? "

" நீ தாலியே இல்லமா வாழ கூப்பிட்டாலும் ரது உன்கூடவே வந்திடுவா, தீரா " என்றவனை வாயை பொத்தியவன்,,." என்ன பேச்சு டி....அப்படியெல்லாம் தீரா உன்னை பார்க்க மாட்டான் டி....இந்த வீட்டோட ராணி நீ....நான் உன்னோட சேகவன்....உன்னை நம்பி தான் இங்க இரண்டு ஜிவன் இருக்கு பத்திரமா பார்த்துக்கோ...."

" ஆமா தீரா,சம்மு எங்கே ? எங்க தூங்குறா ? "

" அவள் வேலம்மாள் கிட்ட தூங்கிறா ரதுமா !....நான் அவள அவங்க பொறுப்புலதான் விட்டு வந்தேன்... "

" தீரா,சம்மு என்னைய அம்மாவ ஏத்துப்பாளா...என்னைய அம்மான்னு கூப்பிடுவாளா ! "

" ஏன் ரது உனக்கு அதுல சந்தேகம் கண்டிப்பா அவ உன்னை அம்மான்னே கூப்பிடுவா....அவளுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் ரதுமா...நீ போனதும் மிஸ் இங்க இருக்க மாட்டாங்களான்னு கேட்டா...அவ,மட்டும் இல்ல,சிவா,ஆன்வர்,காளி,கணேஷ்...
எல்லாரும் நீ இருக்கன்னும் ஆசை படுறாங்க ரதுமா...உன்னை இங்க எல்லாருக்கும் பிடிக்கும் டி.."

" அப்படியா ? நான் செஞ்ச சமையலை சாப்பிட்டதுக்கு அப்புறமும் என்ன பிடிக்குமா...." என தாடையில் கைவைத்து யோசிப்பது போலே செய்தவளை கண்டு சிரித்துவிட்டான்....

" எதுக்கு சிரிக்கிற தீரா ? "

" இல்ல ரதுமா.இனி பசங்களோட நிலமையை நினைச்சாத்தான் கவலைக்கிடாமா இருக்கு...கொஞ்சநாள் நீ வேலம்மாள் கிட்ட சமையல் கத்து சமையேன்....ப்ளிஸ் " என்றான்...

" அவ்வளவு மோசமாவ சமைக்கிறேன் தீரா..." முகம்,வாடி கேட்டவளை அணைத்தவன்...இல்லாடா முதல்முறையா கிச்சன் போயிருக்கேள அதான் இனி எல்லாம் சரியாகிடும்...அப்புறம் ரதுமா நீ கொஞ்ச நாள் கழிச்சே வேலைக்கு போயேன்.... இப்பதைக்கு நீ வேலைக்கு போகவேணாம் ...கொஞ்ச நாள் ஆகட்டும்...ஒரு சேப்டிக்கு தான் சொல்லுறேன்..." சரியென தலையாட்டியவள்.அவன் நெஞ்சில் தஞ்சமென புகுந்தான்....இருவரும் அணைத்தவாறே வெகு நாட்களுக்கு பின் நிம்மதியாக உறங்கினர்.....
 




Chithu.h

இணை அமைச்சர்
Joined
Feb 5, 2020
Messages
519
Reaction score
1,398
Location
Madurai
தன் முன்னே இருந்த மதுவை சுவைத்தவாறே இன்றைய நிகழ்வை அசை போட...அந்த மூவரும் தன்னை அவமானம்,படுத்தியதே,நினைவிற்கு வர...

' மறுபடியும் என்ன அவமானம் படுத்துடீங்கள..உங்க மூனு பேரையும் சும்மாவிடமாட்டேன்..தீரா நீ எப்படி அந்த ரதுகூட வாழுறேன் பார்க்கிறேன்...உன்னை கலங்க வைத்தான் இங்க வந்த நோக்கமே ஆன நீங்க என்னை மேலும் மேலும் ஆசிங்கபடுத்தீடிங்கடா....இனி உங்களை கொன்னா தான்டா ஆத்திரம் அடங்கும்.....தீரா உன் சாவு என் கையிலடா...." என்றவன் கையில் வைத்த கிளாஸை உடைத்தான் வித்தேஸ்....

ஆதவனின் அருளெங்கும் வெளிச்சமாய் பரவி விடியலை கொடுத்தது...

பிங்கிநிற பட்டு புடவையில்...சிறிய சிறிய அணிகலன்களை அணிந்து அழகாய் நின்றாள்...

" ரது ரெடியா ! " என வந்த தீராவை வாய்பிளக்க வைத்தாள் ரது..." தீரா,நான் எப்படி இருக்கேன்....ஆமா இது தீரா இது எனக்காக எடுத்ததா எல்லாமே சரியா இருக்கே எப்படி " என கேட்டு அவன் அருகினில் வர...அவனோ சிலையென நின்றான்..

" தீரா...! " என அவள் உலுக்கிடவே...." உன்கிட்ட தான் கேட்கிறேன்....இது எப்ப எடுத்தது....எனக்கு அழகா இருக்கா....எல்லாமே சரியா இருக்கே எப்படின்னு கேட்டேன்..ஏன் இப்ப நீ அதிசயத்தை பார்க்கிற மாதிரி நிக்கிற..."

" அதிசயத்தை தான்டி பார்த்தேன்.." அவள் இடை பற்றி தன்னருகே இழுத்தவன்....இவ்வளவு அழகை நீ சுமந்து என்னை கஷ்டபடுத்துறீயே டி உன்னை பார்க்க ஏதோ தோனுதடி உள்ளுக்குள்ளே...நாளைக்கு ரிஜஸ்டர் மேரெஜ் பண்ணிப்போமா ? "

" அப்ப இன்னைக்கு ? " என கேட்டு நின்றவளை மேலும் நெருங்கியவன் இன்னைக்கு இதழை நோக்கி குனியா.... " தீராப்பா....." என சம்மு வர விலகி நின்று அசட்டு தனமாய் வழிந்தான்....ரது சிரித்தாள்..

" சம்முகுட்டி கிளம்பீடிங்களா ! " எனஅவளை தூக்கினான் தலையாட்டியவள்....." ரது மிஸ் நீங்க அழகா இருக்கீங்க " என்றவள் கண்ணத்தில்,முத்தமிட்டாள்...

" பார்ரா....சம்மூவால முடிந்தது என்னால முடியலையே...." என வருத்தப்பட...அவனுக்கு பழிப்பொன்றை காட்டி சம்முவை தூக்கிகொண்டவள்...

" சம்மூ குட்டி,இனி நான் உனக்கு மிஸ் இல்லை.உனக்கு அம்மா நான் இனி அப்படி கூப்பிடனும் சரியா..." என கேட்க..." அம்மா....." எனஅவளை அழைத்து கண்ணத்தில் முத்தமிட்டாள் சம்மு...ரதுவும் அவள் கண்ணத்தில் இதழைபதிக்க..."

" எனக்கேதும் இல்லையா ? " என கைகளை விரித்து தீரா கேட்க.,..இருவரும் இல்லை என ஆட்டினர்..." அம்மாவும் பொண்ணும் கூட்டு சேர்ந்தாச்சு இனி நம்ம பாடு கஷ்டம்தான்..." என்றான்..

ரிஜிஸ்டர் ஆபீஸ்ல் அனைவரும் கூடினர்....பிரணவ்,ஷாரு பிரஜன்...கேத்ரீன்,நிசான், மலர், சிவா,அந்த நால்வர் வேலம்மாள் என பட்டாளமே இருக்க,....ரிஜிஸ்டரில் இருவரும் கையெழுத்திட்டு பின் சாட்சியாய் நிசானும் பிரணவும் கையெழுத்திட்டனர்..பின் மாலை மாற்றி மீண்டும் தாலி கட்டினான் அவளுக்காக.....அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்....திருமணம் முடிந்து அனைவரும் தீராவீட்டிற்கு வந்தனர்...

ரதுவை அழைத்து சாமியறைக்கு சென்று விளக்கை ஏற்றி தன் முன்னே சிவபெருமானை வணங்கினான்...பின் அங்கே தடபுடலாக விருந்து தயார் செய்ப்பட்டது அனைவரும் சிரித்து மகிழ்ந்திருந்தனர்...சம்மூவோடு பிரஜன் விளையாடினான்.... இரவானது அனைவரும் சொல்லிக்கொண்டு கிளம்ப...பிரஜன் ரதுவின் புடவையின் முந்தானை பிடித்து இழுத்தான்..

அவளோ அவனுக்கு நிகர அமர்ந்தாள்...." என்ன டா பிரஜன் "

" இனிமே வீட்டுக்கு வரமாட்டியா ரது...என் கூட நீ சண்டை போட்டு ரொம்ப நாளாச்சு....நீ என்னை மறந்துடேல " என சோகமாக கூறியவனை அணைத்தவள்.

" சாரி,பிரஜன் குட்டி...உன்னை அத்தை மறப்பேனாடா..இனி தினமும் சம்முவோட இங்க வரலாம் அப்பறம் நீ நைட் ஆனதும் வீட்டுக்கு போலாம் சனி ஞாயிறு இங்க வந்திடு நாம மூனு பேரும் விளையாடலாம் சரியா " என அவனை தூக்கி முத்தம் கொடுத்தாள் அவனும் தான்...

" பரவாயில்லை அத்தையும் மருமகனும் சமாதானம் ஆயாச்சு....எங்களுக்கு சீக்கிரமா இன்னோரு மருமக புள்ளையா பெத்து கொடுக்கிற வழி பாரு ரது...இன்னும் குழந்தைகளோட விளையாட்டு தனமா இருக்காத " அன்னை போல அறிவுறுத்தினாள்.

" தீரா,அவ வீட்டுலசெல்லம்....நீதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும் அவளை...." என்றான்

" எனக்கு தெரியும் பிரணவ் நான் பார்த்துக்கிறேன். " என்றான்...அனைவரும் கிளம்பினர்..

சம்மூவை தூங்க வைத்து கொண்டிருந்தாள் ரது....சம்மு உறங்கவே அறைக்கு வந்த தீரா ரதுவின் அருகில் நெருங்கி படுத்துக்கொண்டான்...

" இன்னைக்கு நமக்கு முதலிரவு டி..." என காதுக்குள் கூறிக்கொண்டே அவளை நெளியச்செய்தான்..

" தீரா,சம்மூ தூங்குறா,அமைதியா இருடா...." என்றாள்.

" அவ தூங்க தானே செய்றா..." என்றவன் பக்கம் திரும்பியவள்....அவ முழிச்சிக்க போறா.கொஞ்சம் நேரம் அமைதியிரு தீரா..." அவள் கூறினாலும் அவளின் கண்கள் காதலாய் பார்த்து அவனது கழுத்துவலைவில் மாலையானது அவளது கைகள்....அவளது இடையை சேர்த்து தன்னோடு அவளை இறுக்கிகொண்டான்....

" தீரா.....ஐ லவ் யூ டா...." என கண்ணத்தில் முத்தமிட்டாள்...அவனோ அவளது இதழை சிறையெடுத்து கைகளால் விளையாட்டை தொடங்க நெளிந்தவளின் உடல் அசைவால் சம்மூ அசைந்தாள்....

அவனை அடக்கியும் தன் விளையாட்டை காட்டிவனை கீழே தள்ளிவிட்டாள்.மெத்தியிலிருந்து கீழே விழுந்தான்..மெத்தையிலிருந்தவாறே அவனுக்கு தன் நாக்கை நீட்டி பழிப்பு காடினாள்....அவளை பிடித்து இழுத்து தன்மேல் போட்டுகொண்டான்...

" மேல சம்மு தூங்கட்டும்,நாம இங்கையே தூங்கலாம்....." என்றவளை அணைத்துகொண்டான்..சில சில சினுங்களோட அங்கே இரவு நீண்டது...

" தன் போனை பார்த்தவாறே பெட்டில் அமர்ந்திருந்தான் நிசான்..வேலை முடித்துக்கொண்டு கதவை தாழிட்டு அவனருகில் அமர்ந்தாள் கேத்ரீன்...
இன்று அவர்கள் எடுத்த போட்டோவை பார்த்துகொண்டிருந்தான்...

" தனு...என்ன பார்க்கிற ? " என கேட்டவளிடம் போட்டோ வை காட்டினான்....
" ரது தீரா சரியான ஜோடியில.அன்னைக்கு நான் ரதுவ கல்யாணம் பண்ணிருந்தாகூட..என்னால இவ்வளவு சந்தோசமா அவளை வச்சுக்க முடியுமா தெரியல...அவ முகத்தில் எவ்வளவு சந்தோசம். யார்யார் யாருக்கு கடவுள் சரியா தான் தீர்மானிக்கிறார்...நான் ரதுவ கல்யாணம் பண்ணிருந்த இவ்வளவு சந்தோசமா நான் இருந்திருப்பேனா தெரியல....என்ன புருஞ்சிக்கிற பொண்டாட்டியா உன்ன போல இருந்திருப்பாளுன்னு சொன்னா கஷ்டம் தான்.....கடவுளுக்கு தான் நன்றி சொல்லனும்...என் ரீனு நீ எனக்கு கிடைச்சது " என அவள்கைகள் முத்தமிட்டான்.....

" ஆன பாருங்க ரது,தீராவோட காதல் தான் ரொம்ப ஸ்டாரிங்....அவங்க காதலை பார்க்க பொறாமையா இருக்கு...."

" ஏன் அப்படி சொல்லுற ?"

" தன்னோட காதலியோட அப்பாதான் தன் குடும்பத்தை அழிச்சதும் தெரிஞ்சு ரதுவ வெறுக்காம,அதே சமயம் குடும்பத்துமேல மரியாதையா அவங்க பேச்சை கேட்டு விலகியே யாருமில்லா இருந்தும்.தன் காதலிக்கு ஒரு ஆபத்து வந்தது எல்லாத்தையும் மீறி ரதுவ கல்யாணம் பண்ணாரு பாருங்க..அவரை போல யாரைலையும் காதலிக்க முடியாது தனு "

" ஏன் நாங்கெல்லாம் அந்தளவு காதலிக்களைன்னு சொல்லவறீயா ? "

" நான் எப்ப அப்படி சொன்னேன்.."

" இப்பதானடி அவர போல யாரைலையும் காதலிக்க முடியாதுன்னு...." என்றவனை பார்த்து சிரித்தவள்..." அவர போலத்தான் சொன்னேன்..அதுக்காக அவரால மட்டும் தான் காதலிக்க முடியும் சொல்லல....என் புருசனோட காதல் வேற...தன் விரும்பின பொண்ண தியாகம் பண்ணிட்டு தன்னைநம்பி வந்த பொண்ணை காப்பாத்தி.அவள சந்தோசமா பார்த்துட்டு முழுக்காதலையும் கொடுக்கிற அந்த மனசு யாருக்கு வரும் என்ன பொறுத்தவரைக்கும் தீராவிட நீங்க தான் கிரேட் " என்றாள்...

" என்ன ரீனு சமாளிகிறீயா ? " என அவன் கேட்க...திருட்டு முழி முழித்தாள் அவளை இழுத்து அணைத்தவன்..அவள் கூறியதற்கு தண்டகளை தந்தான்...

மறுநாள் வழமைபோலவே விடிந்தது...அவரவர் தம் தம் வேலையில் செய்ய...சிவாவின் மூலம் தீராவிற்கு அந்த விசயம் வந்தது. மாணிக்கப்பெருமாளுக்கு ஆயுள் தண்டனை கிடைத்ததாகவும் சிறையில் சென்றதாகவும் கோர்ட் தீர்ப்பளித்ததை கூறினான்....இருந்தும் தீராவின் மனது அடங்கவில்லை கொதித்துகொண்டு தான்இருந்தது...

தீரா(து)காதல்..
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Radhu un Amma varalaya kalyanathuku, sikirama thookula podumga pa illana thappichita poran, nice update chithu dear thanks.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top