• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் 35

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chithu.h

இணை அமைச்சர்
Joined
Feb 5, 2020
Messages
519
Reaction score
1,398
Location
Madurai
மும்பையில் வித்தேஸ் ஆசிஸ்டென்ட் கமிஷ்னராக இருந்த போது....அங்கே ஒரு பெண்ணை கற்பழித்து எறித்திருந்தனர்...அந்த கேஸ் இவனிடம் வந்தது...அந்த கேஸை விசாரித்த இவனோ குற்றவாளிகள் யாரென கண்டிப்பித்தான்..அந்த குற்றவாளிகளோ அந்த ஊரின் பெரிய பிஸ்னஸ் மேக்னேட்டின் மகன்களாக இருக்க அவர்களிடம் காசை வாங்கி கொண்டு சம்பந்தமில்லாத நபர்கைகளை கைது செய்து அவர்களுக்கு பதில் இவர்களை சிறைக்கு அனுப்பிவிட்டான்.....இதை பணத்தை வைத்து அனைத்தையும் மறைத்துவிட்டான்....அதன் பின் தீராவை பற்றி தெரியவரே தமிழ்நாட்டிற்கு டிரான்ஸ்பர் வாங்கிவந்தான்....

தீரா அவனை பத்தி விசாரிக்க சொல்லவே அவன் இங்க இருக்க....வித்தேஸ்ஸே பத்தின முழுவிவரங்களும் ஆதரத்தோடு கிடைத்தது....அந்த ஆதரத்தை வைத்து தமிழ்நாடு மட்டும் மும்பைக்கு போலீஸ் ஹேட் ஆபீஸ் அனுப்பவே...உயர் அதிகாரி அவனை வேலை விட்டு தூக்கிவிட மும்பை போலீஸ் அவனை கைது செய்து மும்பைக்கு அழைத்து சென்றது.....

காளி அனைத்தையும் ரதுவிடம் கூறினான்,..." பயங்கரம் பாஸ்...உன்னை எதிர்கிறவனை எப்படி அழிக்கனுமோ அப்படியே அழிச்சிடுற தீரா....இந்த மாதிரி ஸ்மார்ட் ரௌடிய நான் பார்த்ததே இல்லை போ....எப்படியோ உன் வழியில அந்த மாணிக்க பெருமாளோ அந்த வித்தேஸோ இல்லை...டென்சன் இல்லாம இருப்ப நீ....." என்றாள்.

" அண்ணனை எதிர்கிறவங்களை அவங்களுக்கு தெரியாமலே அழிக்கிறது தான் அண்ணணோட ஸ்பேஷலே...பாவம் அவனுக்கு தெரிஞ்சே இருக்காது...மும்பை போலீஸ் நம்மலை ஆரெஸ்ட் பண்ணுவாங்கன்னு...இந்நேரம் மும்பைக்கு கைதியா போயிக்கிட்டு இருப்பான்...." என்றான் காளி..

" சரி விடு காளி போய் வேலைய பாரு...." என்றான்." அவனும் சென்றுவிட.தன்னறைக்கு சென்றவன் பேக்டரிக்கு செல்ல தயாரானான்.....அவனை பின்னின்று அணைத்தாள் ரது...

" என்ன மேடம் காலைலே லவ் மூட்ல இருக்கீங்க போல.என்ன விசயம் ? ....," தன்னை கண்ணாடியில் ஆராய்ந்துகொண்டே கேட்டான் தீரா...

" தீரா....நிசான், கேத்ரீன் அம்மா அப்பாவாகிடாங்களாம்...இப்ப தான் அண்ணா சொன்னான்...

" ஓ..,வாழ்த்துக்கள் சொல்லிடுவோம் ரதுமா..,அவங்களை ஈவினிங் போய் பார்க்கலாம் ஓகே வா,..." என்றான்...

" ம்ம்...சரி தீரா " என்றவள் மேலும் அவனை அணைக்க...." காலை இப்படி பண்ணி கொல்லாதடி....இப்ப உனக்கு என்ன வேணும்..,"

" எனக்கு குட்டி தீரா வேணும்..." என்றவள் கூற வேகமாக அவன் திரும்ப அவன் மேல் சாய்ந்தாள்...அவனை அணைத்துகொண்டாள்...

" குட்டி தீரா வேணுமா ?....அடியே தெரிஞ்சு தான் கேட்கிறீயா.,..."

" தெரிஞ்சு தான் கேட்கிறேன்...எனக்கு குட்டிதீரா வேணும் ..,.." என்றாள் சிறு குழந்தையாய்..,கண்ணத்தை அழுத்தி முத்தமிட்டவன்....இந்த டீலை நாம நைட் பேசுவோம் ரதுமா...இப்ப என்னைய விட " என அவளை மெத்தையில் தள்ளிவிட்டவன்..வேலைக்கு சென்றான்...

" போடா ! ரொம்ப தான் பண்றான்..நான் வழியவறேன்னு உனக்கு கொழுப்புடா...உன்னை நைட் பார்த்துகிறேன் என்கிட்ட தானே வரனும் ...." என்றாள் மெத்தையில் அமர்ந்தவாறே கத்தினாள்..

அன்று முழுக்க பேக்டரியில் இருந்தவன்...மாலை வீட்டிற்கு வர.,ரது தீரா சம்மூ மூவரும் சென்று நிசான் வீட்டிற்கு சென்றனர்...

அங்கே தேவரிசி,நாதன்,பிரணவ்,ஷாரு,பிரஜன்.இருக்க மேலும் இவர்கள் வந்து சேர குடும்பமாக அங்கே மகிழ்ச்சியாக இருந்தனர்..

" அண்ணா ! அம்மா வரலையா ?...நீங்க மட்டும் வந்திருக்கீங்க..." ரது கேட்க..

" அம்மாவ கூப்பிட்டேன் டா ஆன வரலைன்னு சொல்லிடாங்க ரதுமா....அவங்க நீ வருவேன்னு வரலைடா." என்றான்..

" நான் வேணா வந்து பேசட்டுமா அண்ணா....அம்மா என் கிட்ட பேசாம கஷ்டமா இருக்கு அண்ணா...."

" ரதுமா...கொஞ்சம் பொறுமையா இருடா.அத்தை உன்னை புருஞ்சுப்பாங்க...இப்ப நீ வந்த அவங்க இருக்க நிலையில எதாவது பேசிடுவாங்க கொஞ்ச நாள் பொறுமையா இரும்மா....காலம் எல்லாத்தையும் மாத்தும்மா..." ஷாரு கூற....அவள் கண்கள் கலங்கி இருந்தது...

" என்ன ரதுமா சின்ன பிள்ளை தனமா அழுத்திட்டு...என்ன சொல்லு பிள்ளைங்க நம்ம பேச்சை கேட்காம இப்படி பண்ணிடாங்களே கோபம் இருக்கத்தான் செய்யும்..என் நான் கூட கோபடத்தான் செய்தேன்...ஆனா அவங்க சந்தோசமா இருக்கிற பார்த்து அந்த கோபமும் மாயமா போச்சு...இப்ப பாரு இந்த சந்தோசமான விசயத்தை கேட்டதும் தோணுச்சு பிள்ளைங்க முடிவு தப்பே இல்லை அவங்க சரியா முடிவெடுத்து தான் இருக்காங்கன்னு...நான் பார்த்திருந்தா கூட இப்படி ஒரு பொண்ணை பார்த்திருக்க மாட்டேன்..நீ இதுக்கெல்லாம் கவலைப்படாத தீரா பத்தி உன் அம்மாவுக்கு நல்லாவே தெரியும் அவனை தானே உன் அம்மா மாப்பிள்ளை முடிவு பண்ணாங்க...நடுவுல ஏதோ நடந்து போச்சு இப்பதான் எந்த பிரச்சனை இல்லாம இருக்கானே...போக போக எல்லாம் சரியாகிடும்....என் காதுல கேட்க நல்ல விசயம் மாதிரி உங்க அம்மா காதுலையும் ஒரு நல்ல செய்தி போடுங்க கண்டிப்பா அண்ணி ஏத்துபாங்க,..." என்றார் தேவரிசி.

ரது வெட்கப்பட...." பாருங்க தேவ்மா அழுத ரது வெட்கப்படுறா...சீக்கிரமா நீங்களும் ஒருகுட்டி தீராவையோ ரதுவையோபெத்து கொடுங்க மகாம்மா தானா வந்திடுவாங்க " என்றாள் கேத்ரீன்...

" என் புள்ளைக்கு மச்சான் வேணுமா ஒரே அடம்பிடிக்கிறான் பெத்து கொடு ரதுமா..." என்றான் பிரணவ்..

" அப்படியா அண்ணா..அந்த மச்சான்னு பொண்ணை பெத்துகொடு நீ...." ரது கேட்க..

" எனக்கு எந்த பிரச்சினை இல்ல..உங்க அண்ணி தான் ஒத்துக்க மாட்டிகிறா..." என்றவன் ஷாருவை மாட்டிவிட..,

" ஆத்தி....இந்த பெரிய தொல்லை அந்த சின்ன தொல்லையை சமாளிக்கவே முடியல இதுல இன்னொரு தொல்லை என்னால முடியாது ரதுமா....நான் பாவம் இல்லையா ? " என ஷாரு கேட்க..

" பார்த்தீங்களா மச்சான்ஸ் குழந்தை பிறக்கிற வரைக்கும் தான் அத்தான்,மாமா,அன்பே,உயிரே...அப்புறம் நாம தொல்லையாகிடுவோம்....என்னோட அனுபவம் பார்த்துக்கோங்க...." என்றான் பிரணவ்....

" டேய் தங்கச்சி உன்னைய அன்புதொல்லைன்னு சொல்லறது பதில தொல்லைன்னு சொல்லிருக்கும் இதை கூட அனுபவம் சொல்லுவீயாடா...போடா..." என்றான் நிசான்..

" அதானே ! நீ என்னைக்கு எனக்கு சாதகமா பேசிருக்க....போடா " என்றவன் கூற அங்கே சிரிப்பும் சந்தோசமாகவே அந்த பொழுது கழிந்தது..இரவு உணவை அங்கே முடித்துவிட்டு வீடு திரும்பினர் ரதுவும் தீராவும்....சம்மு ரதுகைகளிலே உறங்கிட அவளை மெத்தையில் போட்டு வேறு உடை மாற்றியவள் பால்கனிக்கு சென்றவள் தன் அன்னையின் நினைப்பில் இருந்தாள்...

கீழே அனைவரும் விசாரித்துவிட்டு மேலே வந்தவன் தனது உடையை மாற்றிவிட்டு ரதுவை காணச்சென்றான்....

அவள் பக்கத்தில் அமர்ந்தவன் அவள் கைகளை பற்றினான்...." என்ன யோசனை என் ரதுக்கு ...." என்றவன் அவள் கைகளை மெதுவாக வருடினான்...

" தீரா,அம்மா கிட்ட பேசனும்போல இருக்கு..." என்றவள் அவனை காண முடியாமல் " என்னை மன்னிச்சிரு தீரா...என்னால முடியல.தந்தை பாசத்தை நானே முழுமையா வெறுத்தாலும்...தாயா அவங்க தந்தையோட பாசத்தை சேர்த்து எனக்கு கொடுத்தவங்க...அவங்களை எதிர்த்து கல்யாணம் பண்ணிட்டேன் ஒரு குற்றவுணர்வு உள்ள இருக்கு தீரா....என் வாழ்க்கைக்காக தான் அவங்க அப்பாவையே வெறுத்தாங்க...என் வாழ்க்கை நல்லாருக்கன்னும் நினைச்சுதான் அவங்க அப்படி ஒரு கல்யாணத்தை முடிவு பண்ணாங்க....என்ன தான் அவங்க செஞ்சது தப்பா இருந்தாலும் அவங்க எனக்காக தானே பண்ணாங்க....அவங்கள வெறுத்து என்னால ஒதுக்க முடியாது தீரா." அவன் தோளில் சாய்ந்து அழுதாள்...

" அத்தை மேல தப்பு சொல்ல முடியாது ரதுமா....நான் உங்க அப்பா கொல்லுன்னும் இருக்கிற அந்த முடிவை மாத்தாததுனால தான் அத்தை இந்த ஒரு முடிவுக்கு வந்தாங்க.... நான் வேணா போய் அத்தைகிட்ட மன்னிப்பு கேட்கவா..."

" வேணா தீரா ! எந்த தப்பும் செய்யாத நீ ஏன் மன்னிப்பு கேட்கனும்....நீ யாருக்கிட்டையும் யாருகாக்காவும் மன்னிப்பு கேட்க கூடாது...அது எனக்கு சுத்தமா பிடிக்காது....விடு தீரா,அண்ணி சொன்ன மாதிரி கொஞ்சநாள் கழிச்சி அவங்களே வந்து பேசுவாங்க..." என கண்ணை துடைத்தாள்...

" ஆமா தேவ் அம்மா சொன்னது போல ஒரு குட்டி தீராவோ இல்ல குட்டி ரதுவோ அத்தை கையில கொடுத்தா பேசிட போறாங்க.....அந்த வேலையில் இறங்குவோமா...." கண்ணடித்து தன் குறும்புதனத்தை காணபித்தான்...

" ச்சீ,..போடா..." என அவனை விட்டு விலக...." யாரோ இன்னைக்கு காலையில குட்டி தீரா வேணும் கேட்டாங்க...யாருன்னு தெரியுமா ரதுமா..."

" ம்ம்...நான் தான் கேட்டேன்...இப்ப என்ன அதுக்கு ? " என தன் ஒற்றை புருவதை உயரத்தியவள் கேட்க..

" இல்ல அந்த டீலை பத்தி பேசலாம் தான் கேட்டேன் ரதுமா...."

" போடா ! நான் கேட்கும் போது ஆபீஸ் போனேல....இப்ப நான் தூங்க போறேன்...டீல் ஒன்னும் பேச வேணாம் " என அவள் எழுந்திருக்க...

அவளை தனது கைகளை ஏந்தியவன் எந்த டீலை எப்போ பேசனோமோ அப்பதான் டி பேசனும் என் செல்ல பொண்டாட்டி...நீ வேணானும் சொன்னாலும் நான் டீல் பேசதான் போறேன்.. கேட்டு அமைதியா இருடி.." என்றவன் அவளை தூக்கி சென்றான்..

" நீ ரௌடில இருந்து பொறுக்கியா மாறிட்ட தீரா....பேட் பாய் நீ,.." என்றவள் அவன் கைகளிலிருந்து திமிர...அவளை விடாது இறுக்கி அணைத்தவன்.." ஆமா பொறுக்கியா மாறிடேன்..இந்த பொறுக்கியோட வேலைய காட்டுறேன்,...அதையும் பாரென தன் வேலைகாட்டினான்.....

இருவரது வாழ்க்கை காதலே நிறைந்திருக்க சந்தோசமாக நாட்களை கடந்தனர்...எந்த வித பிரச்சினையின்றி அவர்களது வாழ்க்கை சீராய் சென்றது.....
 




Chithu.h

இணை அமைச்சர்
Joined
Feb 5, 2020
Messages
519
Reaction score
1,398
Location
Madurai
காலைவேளையில் தீரா பேப்பர் படுத்திக்கொண்டிருந்தான்.....அருகினில் இவள் அமர்ந்து போனில் எதையோ பார்க்க....அங்கே மலர் வந்தாள்....

" வாங்க மலர்..." தீரா அழைக்கவே ரது அவளை கண்டாள்...." வாங்க மேடம் இப்ப தான் உங்களுக்கு இங்க வர வழி தெரியுதோ...." என அவள் கேட்க....சற்று தயங்கியவள்..." அப்படி இல்ல ரது....நீ எப்படி இருக்க,அண்ணா நீங்க எப்படி இருக்கீங்க,சம்மு எப்படி இருக்கா ? " என விசாரித்தாள் அவளை பார்க்க வித்தியாசமாகவே இருந்தது...தன் அருகினில் அமர்த்திக்கொண்டாள் ரது..." எல்லாரும் நல்லாருக்கோம் டி நீ சொல்லு அம்மா,அப்பா,எல்லோரும் எப்படி இருக்காங்க...."

" எல்லாரும் நல்லாருகாங்க ரது....வீட்டுல மாப்பிள்ளை பார்த்திருக்காங்க டி..."

" வாவ்,..சூப்பர் டி எப்போ கல்யாணம்...." என அவள் குதுகலமாக கேட்க மலரின் முகமோ வாடி இருந்தது...

" என்னாச்சு மலர்...ஏன் உங்க முகம் வாடி இருக்கு....உங்களுக்கு இந்த கல்யாணத்தில விருப்பம் இல்லையா ? " என தீரா கேட்க..

" ஆமா,அண்ணா...எனக்கு இந்த கல்யாணத்துல துளி கூட விரும்பம் இல்லை....." என்றாள்..

" அப்ப வீட்டுல சொல்ல வேண்டியது தானே...ஆமா ஏன் உனக்கு விருப்பம் இல்லை யாரையாவது,காதலிக்கிறீயா ? " என ரது கேட்க..அவள் அமைதியாக இருந்தாள்...

" சொல்லுடி யாருன்னு...நான் மாமாகிட்ட பேசுறேன்..." என்றாள் ரது..

" அது...அது....."

" அடியே சொன்னாதானே தெரியும்..அது அது...யாருடி அவன்...அவனுக்கு உங்க வீட்டுல மாப்பிள்ளை பார்த்தது தெரியுமா நீ சொன்னீயா..." ரது கேட்க..

" சொன்னேன்டி..ஆனா அவரு உன் வீட்டுல பார்க்கிற மாப்பிள்ளை கட்டிக்கோன்னு சொல்லிட்டாரு டி..."

" சரியான லூசா இருப்பான் போலையே...அவன் உன்னைய உண்மை தான் லவ் பண்ணான ...."

" அவர் என்னைய லவ் பண்றாரு டி...ஆனா அவர் வெளிய சொல்ல மாட்டிகிறாரு நான் தான் போய் காதலை சொன்னேன்...ஆன அவர் நான் உன்னை காதலிக்கலைன்னு மறுத்திட்டாரு டி....எங்க வீட்டுல மாப்பிள்ளை பார்த்துடாங்க சொன்னேன்...அதுக்கு அவர் காதலை ஒத்துக்காம உங்க வீட்டுல பார்த்த மாப்பிள்ளை கட்டிக்க சொல்லிட்டாருடி என அழுத்தாள்...

"அழாத மலர் அந்த பையன் யாருன்னு சொல்லு நம்ம தீராவிட்டு தூக்க சொல்லுவோம் மலர் நீ அந்த பையன் யாருன்னு சொல்லு டி " என்றாள்....

" அதுக்கு அவசியம் இல்லை ரதுமா....காளி....அன்வர்..." தீரா கத்த அவர்கள் இருவரும் மலர் காதலிக்கும் அவனை தூக்கி கொண்டு வந்தவனர்..

" இவன் தானே அந்த தியாகி மலர் " என்றவன் கேட்க..ரது ஆச்சரியமாய் பார்க்க...மலர் ஆமாமென்று தலையாட்டினான்...

தீரா,எழுந்தவன் அவனை ஓங்கி ஒரு அறை விட" அண்ணா " என்றே காலில் விழுந்தான் சிவா..

" உன்னைய ஏன் தம்பியா நினைச்சேன் எங்கிட்ட இருந்து மறைச்சுட்டேள என்னைய நீ அண்ணன பார்க்கலைல சிவா " என கேட்க...

" அண்ணா....என்னை மன்னிச்சிருங்க அண்ணா....என்னால ஒரு பொண்ணு வாழ்க்கை அழியக்கூடாதுன்னு தான் அண்ணா மலர் கிட்ட நான் அப்படி சொன்னேன்....உங்க கிட்டையும் மறைச்சேன்...உண்மை தெரிஞ்சா நீங்க நான் மறைச்சதை சொல்லிருவீங்கன்னு பயம் அண்ணா....என்னை மன்னிச்சிருங்க அண்ணா..," என தீராவின் காலை கட்டி அழுத்தான்....

" உன்னை என்னால மன்னிக்க முடியாது சிவா..." என்றான் தீரா...மலரும் ரதுவும் தீராவின் கோபத்தை அதிர்ச்சியாக பார்க்க,,சிவாவோ அவனது கால்களை பற்றி அழுதான்...

" தீரா(து)காதல்....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top