• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chithu.h

இணை அமைச்சர்
Joined
Feb 5, 2020
Messages
519
Reaction score
1,398
Location
Madurai
மருத்துவமனையில் ரதுவை பார்த்துவிட்டு மகாலக்ஷ்மியின் கண்ணீல்,படாதவாறு சென்றாலும் அவன் ரதுவிற்காக வைத்துச்சென்ற பூச்செண்டை பார்த்தவர் தீராவின் கையெழுத்தை வைத்தே வந்தது தீரா என்று உறுதிபடுத்தினார்....

' தீரா ' என்று தனக்குள் சொல்லிக்கொண்டவர்.அதை ரதுவிடம் மறைத்தார்...." தெரியல ரதுமா,மாத்தி கூட வைச்சுட்டு போயிருப்பாங்க " என்று அதை குப்பை தொட்டியில் போட சென்றார்...

" மா,.மா...என்ன பண்ண போற " என்றவள் விழிகளை பெரியதாய் விரித்து கேட்டாள்.
" குப்பை தொட்டியில போட போறேன் டி..." என்றவரை மறித்தவள் " மா,.அழகான மஞ்சகலர் பூமா,எனக்கு ரொம்ப பிடிச்ச பூ,கலரும் கூட அத போட எப்படிமா உனக்கு மனசு வருது பீளிஸ் மா,அத என்கிட்ட கொடுமா.." என்றாள்

" இது வாடி போயிரும் டி இத வச்சு என்ன பண்ண போற..." என்றவர் கேட்க..." நான் என்னமோ பண்றேன் பீளிஸ் அத கொடு..." என்றாள்

வேறு வழியின்றி அதனை அவளிடம் கொடுத்தார்,...வாங்கியவள் தன்நெஞ்சோடு வைத்துக்கொண்டாள்...இதை பார்த்தவருக்கு உள்குள்ளே உதறல் ஆனது....

" ஐயா,ரதும்மா
கண்விழிச்சடாங்கய்யா பாப்பாக்கு இனி ஒன்னுல்லை சொல்லிடாங்க வலதுகையில குண்டு பட்டதால குண்ட எடுத்து கட்டு போட்டுருங்க மத்தப்படி பாப்பா நல்லாருக்குங்கய்யா " என்றார் மருது மாணிக்கத்தின் விசுவாசி வருஷக்கணக்காக அவருடன் இருப்பவர் நம்பிக்கையானவர்...மாணிக்கத்தின் அனைத்து வேலையும் இவருக்கு தெரியும் இவரின் கீழ்தான் அத்தனையும் கவனிக்க பட்டு வருகிறது...கல்யாணம் ஆகாதவர் இருந்தும் பிரணவையும் ரதுவை தன் பிள்ளையாக பார்த்து வளர்த்தவர்..மாணிக்கத்தை விட ' மாமா ' என்று இவர் மேல் பாசமாக இருந்தனர்...

" நிஜமாவா,மருது என் பாப்பாக்கு ஒன்னுமாகலைல அவ பிழைச்சுடாள.." என்று மாணிக்கபெருமாள் கண்ணில் பாசநிறைத்து கேட்டதை அறியாமல் போவாரா மருது..." ஆமாங்கய்யா பாப்பா பிழைச்சுருச்சு...." என்று மாணிக்கத்தின் கைப்பற்றினார்...
அப்பொழுது அவரின் காலுக்கீழே ஒருவன் வந்து விழுந்தான்....

" ஐயா,நான் தீராவ சுடத்தான் நினைத்தேன்.பாப்பா நடுவுல வந்திருச்சுயா நான் வேணும்முன்னு சுடலையா ..." என்றவன் இருநாட்களாய் அடிவாங்கி கெஞ்சினான்.

" என் பாப்பா பிழைச்சிட்டா,அதுனால நீ தப்பிச்ச என் கண்முன்னாடி நிற்காம ஓடு இங்கிருந்து என்று கத்தினார்.உயிர் பிழைத்ததை நினைத்து உயிரை கையில்பிடித்துகொண்டு ஓடினான்....

தன் கையாளாகினும் தன் மகளை சுட்ட காரணத்திற்காக இருநாட்களாய் அடித்து கொண்டிருந்தார்கள் அவனை..

" ஐயா,உங்களை பார்க்க ஒரு வெளிநாட்காரர்கள் வந்திருக்காரு ஐயா.. " ஒருவன் வந்து கூற

" ம்..,அவர அந்த ஹேஸ்ட் ரூம்ல உட்கார சொல்லு ஐயா வருவாருன்னு சொல்லு " என்றார் மருது.

அவன் சென்றிட..." நீதானமா இருங்கய்யா எல்லாம் சரியாகிடும் " என்றார் மருது.இருவருமாக அந்த வெளிநாட்டவர்களை பார்க்கச்சென்றனர் பெரிய டீல் பேசிக்கொண்டிருந்தனர்..

" யாருயா இவரு எதுக்கு நம்ம ஐயாவ பார்க்க வந்திருக்காரு..." என்றவன் கேட்க." டேய் ஐயா பெரிய டீல் பேசி முடிக்க போறாருடா...இது டீல்,மட்டும் முடிஞ்சு நாம எங்கையோ போக போறோம் டா..." என்றார் மருது.தன்னைதானே அழித்துக்கொள்ளும் டீல் என்று அறியாமல் கையெழுத்திட்டார் மாணிக்க பெருமாள்...

மிளிரும் நட்சத்திரங்களோடு நிலாஅவளின் வருகை நம்மை ரசிக்கவைந்தாலும்.சில நினைவுகள் நம்ம உணர்வுகளை ருசிக்கவே செய்கின்றன....

தனது சிம்மாசனமாய் என்றுமிருக்கும் அந்த சாய்வு நாற்காலியில் கண்மூடி பின் சாய்ந்தவன்.தனது ஒற்றை காலை அழுதிக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தான் தீரா...

அவன் காலடியில் வந்து அமர்ந்த சிவாவை,கூட கவனிக்காது வேற சிந்தனையில் மூழ்கிருந்தான் தீரா...

" அண்ணா, அண்ணிய பார்த்தீங்களா நல்லாருக்காங்களா..." என்றவன் கேட்ட நொடி விழித்தவன்." சிவா, உனக்கு எத்தனை வாட்டி சொல்லிருக்கேன் அவள அண்ணி சொல்லாதேன்னு,..." என்றான் பொய் கோபதோடு.

" இரண்டு வருசத்துக்கு முன்னாடி இதே வாயால தான் நீங்க அவங்கள, அண்ணி கூப்பிடு டா சொன்னிங்க.இரண்டு வருசமா அவங்கள அப்படி தான் நினைச்சுட்டு இருக்கேன் இப்ப இல்லைன்னு சொன்னா என்னால இத ஏதுக்க முடியாதுண்ணா.எப்பையும் அவங்க தான் அண்ணி நீங்க இல்லைன்னு சொன்னாலும் சொல்லலைனாலும் என்று கண்ணீர் வடித்தவன் எழுந்து சென்றான்.." டேய் சிவா ..சிவா.. " தீராவின் அழைப்பையும் விடுத்து அழுதுக்கொண்டே சென்றான்...கண்ணில் வேதனையோடு அவன் சென்றதை பார்த்தவன் தன் மகள் வருவதை கண்ட அடுத்த நொடியே முகத்தை மாற்றினான்.

" தீராப்பா...." என்று சம்மு ஓடிவர அவளை தூக்கி தன்மடியில் அமர்த்தியவன் " சம்மு குட்டி சாப்பிட்டிங்களா ? "
" ம்ம் ...சாப்பிடேன் தீராப்பா நீ சாப்பிட்டியா " என்றவள் கேட்க.. " இனி தான்டா அப்பா சாப்பிடுவேன். நீசொல்லு இன்னகி ஸ்கூல் எப்படி போச்சு.."

" தீரா,நல்லவே இல்ல பேட் டாபோச்சு.." என்றாள்." ஏன்டா குட்டி பேட்டா போச்சு " என்றவன் கேட்டிட.." எங்க ரதுமிஸ் வரல இன்னகி அவங்களுக்கு அடிபட்டிருச்சாம் அதுனால இனி வரமாட்டாங்களாம் தீரா..." என்றவள் சோகமாக கூற." உனக்கு ரதுமிஸ்ன்னா ரொம்ப பிடிக்குமா சம்முகுட்டி..."

" ஆமா தீரா, எனக்கு அவங்கள இவ்வளவு பிடிக்கும் ." என்று தன் கைகளை எவ்வளவு விரிக்க முடியுமோ அவ்வளவு விரித்து காட்ட ஆச்சரியப்பட்டான் தீரா.." சரி சம்மு குட்டி நாம அவங்களுக்கு சரியாக பிரேயர் பண்ணுவோமா ? " என்றான். " ம் " என்று தலையாட்ட அவளை தூக்கியவாறை பூஜையறைக்கு இருவரும் சென்றனர்..

அவள் இருகையை சேர்த்து அந்த சிவனிடம் வேண்டினாள், " சாமி,என்னோட ரதுமிஸ்க்கு சீக்கிரமா குணமாகி எங்க ஸ்கூலுக்கு வரனும் சாமி,.." என்றே வேண்டினாள்.

தீராவோ, " அப்பா, அவளை நான் மறக்க முயற்சி பண்ணாலும் நீங்க நினைவு வழியாவோ இல்லை நேராக அவளை காட்டியோ மறக்கவிடாம பண்றீங்க..அவன் என்கூட இருந்தா சந்தோசமா இருக்கமாட்டா.என்கூட இருந்தா அவளுக்கு எதாவது ஆகிடும் அவளுக்கு பிடிச்சவங்களோடே வாழட்டுமே இதுவரைக்கும் அவளுக்கு நான் யாருனு தெரியாது இனி அப்படியே இருக்கட்டும் அவ நல்லா வாழட்டும் அப்பா..." என்றவன் வேண்டிக்கொண்டான்.
 




Chithu.h

இணை அமைச்சர்
Joined
Feb 5, 2020
Messages
519
Reaction score
1,398
Location
Madurai
அவனாடும் ஆட்டம் நாமெல்லாம் காய்களே,அவனின் லீலைகள் என்னும் விதியை நம்மால் அறிந்திட கூடுமோ ...

நாட்கள் அழகாக கடந்திட ரதுவை வீட்டிற்கு அழைத்து வந்தனர்..பள்ளியிலிருந்து கூட அவளை பார்த்து நலம் விசாரித்து சென்றனர்...வீட்டில் அதீத கவனிப்பு வெறும் நாளிலே ஏக போக கவனிப்பாக இருக்கும்..இப்போது சொல்லவாவேண்டும் ராணியாய் இருக்கிறாள்...பிரஜன் தான் ஒருவித கடுப்போடே சுத்திக்கொண்டிருந்தான்.

" அம்மா அம்மா! " என்றே வெளியில் பூட்டிய கதவை ஆட்டிக்கொண்டிருந்தாள் மலர்..அவளின் கல்லூரி தோழி,பள்ளியிலும் உடன்வேலை பார்க்கிறாள்..

" அம்மா,பழைய சோறு எதவும் இருக்க வெளிய பிச்சைகாரங்க வந்திருங்காங்க. " என்றவள் ஹாலில் இருந்தவாறே ரது கத்த.." அடியே,பிச்சைகாரங்களா நான் மலர் டி கதவ திறங்களேன் டி...." என்று கத்தினாள்.

" அப்ப நான் சரியாதான் சொல்லிருக்கேன் " என்றே கையில் சாவியை சுத்தியவாரே வந்தவளை கொலைவெறியாக பார்த்தாள் மலர்...

கதவை திறக்க அவளின் கழுத்தை மெதுவாம நெறிதாள்..." நான் பிச்சைகாரியா உன்ன என்றவள் " விடுவிக்க..

" ஒருநோயாளி என்று கூட பாராமல் கழுத்தை நெறிக்கிறாயே நீயெல்லாம் தோழியா? அரக்கி டி நீ... " என்றாள்..

" ஆமா,ஆமா " என்றவள் அவளை நலம் விசாரித்தாள்..." வாங்க ஆருயிர் தோழியே இப்பதான் இந்த தோழி நியாபகம் வருதா...." என்றவளை தயங்கி பார்த்தவள் மலர்.என் அப்பா ஊருல தாத்தா இறந்துடாருனு கூட்டிட்டு போயிட்டாரு சாரிடி செல்லம் " என்று தாடைபிடித்து கெஞ்சவே விட்டாள்.

" வா மலர் " என்று ஷாரு அழைத்தவாறே ஜூஸ் கொண்டுவர என்ன ஒரு பாசம் ஷாரு அக்காக்கு என்மேல நான் வந்தும் ஜூஸ்ஸோடே வரியே " என்று ஜூஸை எடுக்க செல்ல அதை தடுத்தாள் ரது. " ஆமா மகாராணி,வந்ததும் ஜூஸ் கொடுக்கிறாங்க அது எனக்கு டி என்றவள் கையில் எடுக்க...அவளையும் ஷாருவையும் முறைத்தாள்..

" சாரி மலர் குட்டி,நீ வந்தது அக்காக்கு தெரியல இரு உனக்கு ஜுஸ் எடுத்துட்டு வரேன் " என்றவளை மறித்தாள் ரது. வேணா டார்லு இதையே அவ குடிக்கட்டும் நான் அப்பறமா குடிச்சிக்கிறேன் நீ அழையாதே என்றாள் நல்லபிள்ளையாட்டம் அவளும் சிரித்துக்கொண்டே உள்ளே சென்றாள்,..

" உனக்கு கிடைச்ச அண்ணி மாதிரி தான்டி எனக்கும் கிடைக்கனும்..." என்றவள் அவள் கையிலிருந்த ஜூஸைவாங்கி பருக..." அதெல்லாம் கஷ்டம் அதுக்கெல்லாம் வரம் வாங்கனும்..." என்றாள் ரது...

" அந்த வரத்தை எங்க வாங்கனும் சொல்லு வாங்கி வச்சிக்கிடுவோம் " என்றவளை அடிக்க தவறவே இல்லை...

ரதுவிற்கு காலை ஷாருவோடும் மாலை மலரோடும் நாட்கள் கழிய...கை சரியானதும் வேலை போவதாக அடம்பிடித்தாள் முதலில் மறுத்தார் மகா பின் கெஞ்சி குத்தாட ஒத்துக்கொண்டனர்..ஆனால் நீயாக தனியாக செல்லவேண்டாம் என்று மறுத்தனர்..முதல் நாள் வேறு கிளம்பி வர அவளை அழைத்து போவதாக நிசான் வந்தான்...

தன் நண்பனின்காதலுக்காக வேலை இருப்பதாக பொய் சொல்லி பிரணவ் சீக்கிரமாக கிளம்பி சென்றுவிட்டான்..நிசானை வர சொல்லிகிறேன் என்று கூறி சென்ற பத்தாவது நிமிடம் அங்கு வந்தான் நிசான்.அவனை உபசரிக்க தவறவில்லை மகா...

" அண்ணணுக்கு வேலையாம் ரதுமா நீ நிசானோட போயேன்.." என்றார் மகா..." ஏன் நிசானுக்கு வேலையில்லை யா இரண்டும் தானே சுத்துங்க இவனுக்கு மட்டும் வேலைஇல்லாம போச்சு " என்றவள்யோசிக்க..

"தேவையில்லாத நினைக்காம போடி அவன், கூட " என்றவரை பார்த்து முறைத்தவள், என் பிரண்ட் மலர் இருக்கா அவகூடபோய்கிறேன் என்றவள் அவளுக்கு போன் போட்டு கேட்க அவளோ நானே அப்பாகூட தொத்திக்கொண்டு போகிறதாக கூறினாள்.நிசான் கேலியாக சிரித்தான்.அவனை முறைத்தவள் வேறு வழியின்றி அவனோடு சென்றாள்....

பள்ளியில் வண்டியை நிறுத்தினான்.அவளும் அவனிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப.." ரது..." என்று அழைத்தான்." என்ன நிசான்.."

" உனக்கு ஏன் போலிஸ்னா புடிக்கமாட்டிங்கிது..." என்று தன் சந்தேகத்தை கேட்க." ம்ம், குற்றம்ன்னு தெரிஞ்சும் அத தட்டிக்கேட்காம இருக்கீங்க ; குற்றவாளின்னு தெரிஞ்சும் அவங்க வெளிய சுதந்திரமா தப்பு செய்ய விடுறீங்க....மக்களோட காவலாளி தான் பெயர் ஆனால்,பெரிய பெரிய வி.ஐ. பிக்கு மட்டும் தான் நீங்க காவலாக இருக்கீங்க அதான் எனக்கு புடிக்கல..." என்று செல்ல எத்தனித்தவளின் கைப்பிடித்தான் நிசான்...சரியாக அங்கே தீராவின் கார் பள்ளியிலிருந்து வெளியே வர காருக்குள் இருந்த தீரா ரதுவின்கைகளை பற்றி இருக்கும் நிசானையும் ரதுவையும் பார்க்க கோபம் தான் வந்தது முகத்தை திருப்பிக்கொண்டான்..ஆனால் தன் கைப்பற்றிய நிசானை தான் ரது பார்க்க நிசானோ தீராவை பார்த்தான்...

" என்ன நிசான் பண்ற கைய விடு " என்று அவனிடம் கையை எடுக்க முயல அப்பொழுது நினைவுக்கு வந்தனாய் விட்டவன்.." சாரி,ரது தெரியாம கைப்பிடித்துடேன்...பதவியிருந்தும் முள்வேளியில் சிக்கி இருப்பது தான் போலிஸ்வேலை தப்புனு தெரிஞ்சும் அத தட்டிக்கேட்கும் போது அதன் விழைவாக பாதிக்கபடுறதென்னவோ நாங்க எந்த பக்கம் நகர்ந்தாலும் பாதிப்பு எங்களுக்குதான்..வரேன் " என்று சென்றுவிட்டான்,சென்றதை பார்த்தவள் உள்ளே சென்றாள்..

அங்கேயும் நலம் விசாரிப்பகளோடு செல்ல...மாணவர்கள் அனைவரும் அவளை பார்த்து மிஸ் யூ மிஸ் என்றனர்,...எல்லாரும் அவளை சுற்றியிருக்க பிரஜன் மற்றும் அவனது இடத்தில் அமர்ந்திருந்தான்,.பின் அன்றைய நாளை போலே ஒருவாரம் நன்றாக சென்றது...

அன்று சனிகிழமை பள்ளி விடுமுறையா இருக்க தூங்கலாம் என்றுஎண்ணியவளுக்கு பெரும் சோதனையாய்...பக்கத்துவிட்டு மாமி மகாவிடம்.அடிப்பட்டது அவளுடைய தோசத்தினால கூட இருக்கலாம் அதனால குளக்கறை விநாயகர் (கற்பனை) நூற்றியெட்டு குடம் தண்ணீர் எடுத்து அவர அபீஷேகம் செய்துட்டு வழிபட்டு வர சொல்லுங்க அவதோசம் கழிந்து நன்னா இருப்பா என்றார்...அதை நம்பிய மகா நேரமாக அவளை எழுப்பி குளிக்க வைத்து கோயிலுக்கு பானையோடு அனுப்பிவைத்தார்...அவள் மட்டும்செல்வாளா உடன் தன் தோழியை அடித்து இழுத்து சென்றாள்....

அவ்வூரின்பெயரிய குளம் அது,அங்கு சென்று,நீராடிய பின்னரே கடவுளை தரிசிக்க செல்வர்...உள்ளே பெரிய விநாயகர் சிலை இருந்தும் அந்த குளத்தின் அருகே குட்டி விநாயகர் இருப்பார் அவரை தான் வணங்க வேண்டும்.குளத்திற்கும் விநாயகர் சுமார் ஐம்பது படிகள் இருந்தது குளத்தின் அருகே அமர்ந்து எண்ணிக்கொண்டிருந்தாள் மலர்..விடியற் காலை ஐந்தரைக்கு ஆரம்பித்தது காலை ஒன்பது ஆன நூற்றை தாண்டி நூற்றைந்து வந்தது.

' இந்த பாகுபலில வர மாதிரி யாராவது இந்த விநாயகர தூக்கி குளத்துல போடமாட்டாங்களா,எப்ப பிள்ளையாரப்பா இப்படியாப்பா பண்ணுவ ஒரு சின்ன பொண்ண இப்ப கஷ்டபடுத்திறீயே நீ நல்லாருப்பிய ' புலம்பிகொண்டே ஊற்றினாள் தண்ணிரை அதை பார்த்த குருக்கள் அவளிடம் வந்தார்...

" ரதுமா, உன் தோசம் கழிந்து உன் மனசுக்கு பிடிச்ச மணவாளன கண்ணுல காமிச்சு உனக்கு கல்யாண போகத்தை தந்திடுவார் நீயும் ஸ்சேமமாம இருப்படி மா ..." என்றார்...

" என்ன சாமி சொல்றேள் புரியல.." என்றவளிடம் இந்த மாதிரி நூத்தியெட்டு தடவ அந்த விநாயகர ஜல அபிஷேகம் பண்ணா அன்னைகே அவங்களோட மணவாளனையோ மணவாட்டியையோ அந்த கடவுள் கண்ணுல காட்டுவார் " என்று சொல்லி நகர்ந்தார்.

" பிள்ளையாரப்பா,நான் நூற்றியெட்டு குடம் அபிஷேகம் பண்ணி முடிஞ்சதும் என் மணவாளன கண்ணுல காட்டுற இல்ல உனக்கு பவர் இல்லைனு ஊரேல்லாம் சொல்லிடுவேன் என்றவள் நூற்றியெழு குடம் தண்ணீரை ஊற்றினாள். நூற்றியெட்டாவது குடம் தூக்கி வந்தவளை ஒருவன் தெரியாமல் தட்டிவிட்டு செல்ல குடம் படியில் உருண்டது,இவளும் படியில்,இறங்கி வந்தாள் கத்திக்கொண்டே...

சரியாக அங்கே வந்த தீரா குளத்தில் காலை நனைத்து தலையில் நீரையும் தெளித்து படி வழியே ஏறினான்..அவன் காலடியில் குடம் வந்துவிழுக அதை தன் காலால்,நிறுத்தி வைத்தான்.அவனுடன் வந்த சிவா அதை கையிலெடுக்க இருவரும் மேலே பார்த்தனர்.வேகமாக வந்துகொண்டிருந்த ரதுவை பார்த்து அப்படியே நின்றான் தீரா வந்தவள் படியில் சிந்திய தண்ணீரில் கால் வைத்தவள் வழுக்கி அவன் மேலேயே விழுக அவனுக்கும் பிடிமானம் இல்லாம இருவருமாக கட்டி உருண்டு குளத்தினுள் விழுந்தனர்.....
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Dheera ku erienave kalyanam agidicha avanoda kuzhandai ya idu, radhu ma pullaiyar sakthi vaindavar Dan ma un varumgala kanavanai un munnadi niruthitar, nice update chithu dear thanks.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top