• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chithu.h

இணை அமைச்சர்
Joined
Feb 5, 2020
Messages
519
Reaction score
1,398
Location
Madurai
மலரும் ரதியும் தீராவை தேடி அவன் இல்லத்திற்கு வந்தனர்.முதல் முறையாக பெண்கள் தங்கள்வீட்டிற்கு வந்திருப்பதை ஆச்சரியமாக பார்த்தனர் அனைவரும்.

" வா,மா யாரு நீங்க இங்க எதற்கு வந்திருக்கீங்க " என்று வேலம்மாள் கேட்டு அவர்கள் அருகினில் வந்தார்..

" நாங்க தீரா சாரோட செயின் கொடுத்திட்டு போலாம்ன்னு வந்தோம் அவரோட செயின் எங்கிட்ட தான் இருக்கு அதான்..." என்று இழுத்தாள்.

" சரி மா , இருங்க உங்களுக்கு குடிக்க எதாவது எடுத்திட்டு வரேன், " என்று சமையலறைக்குள் புகுந்தார்...

இங்கு சிவா, தீராவை அழைக்கச்சென்றான்.தீரா, தன் இஷ்டதெய்வத்தை வணங்கிகொண்டிருந்தான்.அதனால் அமைதியாக நின்றான் சிவா.

ஹாலில்,அமர்ந்தவள் சுற்றி சுற்றி பார்க்கவே அழகாக இருந்தது அங்கிருந்த பொருட்களும் அலங்காரங்களும் அதெற்கெல்லாம் திருஷ்டியாய் ஆங்காங்கே ரௌடிகள் நின்றிருந்தனர்...

" ஏன்டி,நம்மல எல்லாரும் முறைக்கிறாங்க..." மலர் கேட்க.

" அவங்க பார்வையே அப்படிதான் போல டி...எவ்வளவு அழகான வீடு,ஆன இதுங்க நிக்கிறத பார்த்தா இந்த வீட்டோட அழக ரசிக்க முடியலடி அங்க அங்க நிறுத்தி வைச்சிருக்காங்க கரடி பொம்மை மாதிரி..." என்றாள் இருவரும் ஹைபை போட்டு சிரித்தனர்.

" எதுக்கு பாப்பா இரண்டு பேரும் சிரிக்கிறீங்க " என்று கேட்டுக்கொண்டே அவர்களுக்கு ஜூஸ் கொடுத்தார் வேலம்மாள்...

" ஒன்னில்லா பாட்டி சும்மா ஒரு காமெடி நினைச்சு சிரிச்சோம் " என்றவர்கள் சிரித்துக் கொண்டே அந்த ரௌடிகளை பார்க்க கரடி பொம்மை போலவே அப்படியே தான் இருந்தனர் முறைத்துக்கொண்டு.....

சாமி,கும்பிட்டு முடித்தவன் திரும்ப அங்கே சிவா நின்றிருந்தான். " அண்ணா " என்று சிவா இழுத்தான்.

" சொல்லு, சிவா " என்றவனை பார்த்தவன் " அண்ணியும் அவங்க பிரண்டும் வந்திருக்காங்க அண்ணா ஹால்ல இருக்காங்க . " என்று கூற

அவனுக்கு கோபமே வந்தது " அவங்க ஏன் இங்க வரனும் நீயே ஏன் அவங்க உள்ள விட்ட.உனக்கு அறிவு இருக்கா சிவா இத்தனை ஆம்பளைங்க இருங்காங்க இரண்டுபொண்ணுங்கள உள்ள வந்தா நம்மலையோ இல்லை அந்த பொண்ணுங்களை தப்பா பேசமாட்டாங்களா..நீயும் உள்ள உட்கார வச்சிருக்க...என்ன விசியம் கேட்டு அனுப்பாம உள்ள உட்கார வைச்சுட்டு வந்திருக்க..." என்று கத்தினான் தீரா.

" மத்த பொண்ணுங்கன்னா வெளியவே பேசி அனுப்பிருப்பேன் அண்ணா.ஆன, வந்தது அண்ணி அண்ணா அனுப்ப முடியல " என்றான்.

" என்ன சும்மா சும்மா அவள அண்ணி அண்ணி,சொல்லிட்டு இருக்க சிவா.அவ உன் அண்ணி கிடையாது. அவள அண்ணி சொன்னது,அவள காதலிச்ச அந்த பழைய தீரா செத்து போய்டான் இப்ப இங்க இருக்கிறது புதிய தீரா.....

இவனுக்கு அன்பு,பாசம்,கருனை,காதல் தெரியாது,...எல்லாம் மறுத்துபோன வெறும் உணர்ச்சியற்ற கட்டைதான் .என் லட்சியம் அந்த மாணிக்கப்பெருமாளோட சாம்ராஜ்யத்த அழிக்கனும் அவனோடு சேர்த்து அழிக்கனும் அவ்வளவு தான்.நீ தேவையில்லாம இனி அவள அண்ணி சொல்லாத சிவா. " என்றான்.

" பொய்,சொல்லாத அண்ணா.காதல் இல்லாமத்தான் ஹாஸ்பிட்டல் போய் பார்த்தியா,அவங்களுக்கு ஓன்னுன்னா நீ துடிக்கல , அவங்க பெயர் சொன்னாலே நீ சிரிக்கிற அண்ணா,அவங்களை நீ இன்னும் காதலிக்கிறதானே அண்ணா உன் மனசாட்சி தொட்டுசொல்லு உன்னோட ஒவ்வொரு அசைவும் எதுக்குனு,தெரியும் அண்ணா நீ பழைய தீராவ செத்துடான் சொல்லுற ஆன அது பொய் நீ பழைய தீராவ புதைத்து வச்சிருக்க அதுவும் அண்ணி பார்த்தா அந்த பழைய தீரா வெளிய வர தான் செய்றாங்க சும்மா பொய் பேசாத அண்ணா..." என்றான்.

அவனை முறைத்தவன்,விறுவிறுவென்று ஹாலிற்கு வர அங்கே ஜூஸை பருகியவாறே சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்..

ரதுவை பார்த்த ஒரு நிமிடமும் நின்றான்..அவனது பழைய உள்ளுக்குளே அறித்து வெளியே வருவது போன்ற உணர்வை கட்டு படுத்தியவன் கண்ணை மூடிக்கொண்டு தன்னை ஆஸ்வாசபடுத்திக்கொண்டு அங்கு வந்தான்...

அவன் வர அவர்கள் எழுந்த நின்றனர்...." எதுக்கு இங்க வந்தீங்க,படிச்ச பொண்ணுங்க தானே நீங்க இத்தனை ஆம்பளைங்க இருக்க வீட்டுக்கு இப்படி தனியா வரீங்க.ஊர் உலகம் என்ன பேசும் தெரியாத...இங்க இருந்து இப்பவே கிளம்புங்க,....தேவைல்லாம இங்க வர வேலை வச்சுக்காதீங்க...வெளிய போங்க என்று கத்தினான் தீரா...

அவர்கள் ஒரு நிமிடம் பயந்தனர்...." சார், இந்த ஊரு உலகத்துக்காக யாரும் வாழல யாரு என்ன சொல்லுவான்னு பயந்து பயந்து எவ்வளவு நாளைக்கு வாழ சொல்லுறீங்க நம்ம வாழ்க்கைய நாம நம்ம இஷ்டத்துக்கு தான் வாழனும்....

என் மனசுல எந்த ஒரு தவறான எண்ணம் கொண்டு நான் வரல இங்க. நீங்களும் இங்க இருக்கிறவங்களும் தப்பா பார்க்கல.இதுல இந்த உலகம் பார்த்தா என்ன பேசுது கேட்டுடே,இருந்தா நம்ம வாழ்க்கைய வாழ முடியாது....
இங்க நான் ஒட்டி உறவாட வரல...உங்க செயின் கொடுத்துட்டு போலாம் வந்தோம் அவ்வளவுதான்...அன்னகி அங்க...அப்ப இந்த செயின் என்கிட்ட வந்திருக்கும்.அத கொடுத்துட்டு போகத்தான் வந்தேன் " என்றவள்.வேறெதும் பேசாமல் அதை அருகே டேபிளில் வைத்துவிட்டு நகர்ந்தாள்.

அப்பொழுது சரியாக உள்ளே வந்த கணேஷ்ஷை கண்ட ரதுவிற்கு நியாபகம் வந்தது...." ஹேய் ! நீதானே என்னை கடத்துன..." என்று அவன் சட்டைய பிடித்து...

" அது..அது.." என்று பயந்தான்....அவனை ஓங்கி ஒரு அறைவிட்டவள்..." எதுக்குடா என்னை கடத்தின பொம்பலை பிள்ளை கடத்தி என்னடா சாதிச்ச நீ...சொல்லு எதுக்கு என்னை கடத்தின..." என்று அவனது சட்டை பிடித்து உலுக்கி கேட்க...

" அண்ணானோட எதிரியோட பொண்ணு நீங்க உங்கள கடுத்துன்னா அவரோட நிம்மதி போகும் தான் அவர பலிவாங்க " என்று கூற மேலும் ஒரு அறை கிடைத்தது....

" ஏன்டா,உங்க அண்ணனுக்காக அவர பழிவாங்க நேராடியா சண்ட போடுங்க அதுக்கு எதுக்குடா பொம்பலை பிள்ளைய கடத்திவைச்சு வெக்கமா இல்லை உங்களுக்கு....கொஞ்சம் கூட மனித தன்மை இருக்கா உங்களுக்கு கத்தி கடப்பாறைன்னு கையில வச்சுட்டு...ச்ச உன்னால என் உயிர் போக தெரிஞ்சது.அங்க நான் செத்திருந்தா திருப்பி நீ எனக்கு திரும்ப என் உயிரகொடுப்பீயா ? " என்றவள் கேட்டதை தாங்க முடியாத தீரா கத்தினான்.

" போதும் நிறுத்துங்க,..எனக்காக அவன் கடத்திட்டான் அதுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கிறேன்..."என்றான் தீரா.


" அண்ணா, நீ எனக்காக மன்னிப்பு கேட்காத நானே கேட்கிறேன்.நீ மன்னிப்பு கேட்பது,எனக்கு பிடிக்கல...
உனக்கு மன்னிப்பு கேட்கிறது தான் பிடிக்காதுல அண்ணா ஏன் நீ கேட்கிற.நானே கேட்கிறேன் அண்ணா என்றவன்.அவளின் காலில் விழுந்தவன் " என்னைய மன்னிச்சிருங்க உங்கள கடத்தினது தப்புதான் நான் இனி எந்த பொண்ணுங்களையும் கடத்த மாட்டேன் " என்றவன் கூறி வெளியே செல்ல அவளுக்கு சங்கடமாய் போனது விறுவிறு வெளியே சென்றாள்.

ரதுவை பார்த்த சம்மு ஆசையாக அவளை பார்த்த ஓடிவர அவளை காணதவளாய் சென்றுவிட்டாள்...தன் தந்தையால் தான் அழைத்தும் தன்னை பார்க்காது சென்ற ரது தன் மேலும் கோபம்கொண்டு செல்கிறார்கள் என்று எண்ணி தன் தந்தை மேலே கோபம் கொண்டாள் சம்மு..

தீரா,கணேஷ் இருக்கும் இடத்திற்கு செல்ல அவனோ அழுதுகொண்டிருந்தான்.அவன் தோளில் கைவைத்தது தான்தாமதம் சிறு குழந்தையாய் அவனை கட்டிக்கொண்டு அழுதான்...

" விடு கணேஷ்,அழதா எல்லாம் சரியாகிடும் அண்ணா நான் இருக்கேன்ல...அவன் தீராவின் அணைப்பிலே இருந்தான்...

தன் செயினைபார்த்தவாறே அமர்ந்திருந்தவன் இன்று முழுதும் ரதுவின் வருகையை யோசித்தவன் இரவானதையும் மறந்து அமர்ந்திருந்தான்...

" தம்பி " ,என்றழைப்பில் நினைவுக்கு வந்தான். " சொல்லுங்க மா சம்மு சாப்பிடாளா ? " என்றவன் கேட்க...

" பாப்பா,சாப்பிட மாட்டிக்கிது தம்பி ஏன் கேட்டா நான் கோபமா இருக்கேன் எனக்கு எதுவும் வேணாம் பெரிய மனுசி மாதிரி பேசு தம்பி நீங்க வாங்களேன்.." என்றார்..

வேகவேகமாக சம்மு அறைக்கு விரைந்தான்...அங்கே அவளது பெட்டில் தலையை மடியில்வைத்தவாரே அமர்ந்திருந்தாள் முகத்தை திருப்பிக்கொண்டு...

வந்தவன் அவளை பார்த்ததும் புன்முறுவலோடு அவளருகே வந்தவன் அவள் மடியில் தலைவைத்து படுத்தான். அவனை தள்ளிவிட்டு மீண்டும் முகத்தைதிருப்பிக்கொள்ள...

" ஏன் என் செல்லகுட்டி இவ்வளவு கோபமா இருக்காங்க. தீராப்பா,அப்படி என்ன பண்ணேன் " என்று தன்நாடியில் வைத்து யோசித்தான்..அவன் முகத்தை பார்த்து இதழை அங்கும் இங்கும் ஆட்டிவிட்டு மீண்டும் திருப்பிக்கொண்டாள் முகத்தை...
" அட ! செல்ல குட்டி திரும்பமாட்டிங்களா ? " என்றவன். அவளை அப்படியே தூக்கி தன் மடியில் வைத்தவன்...

அவள் திமிரினாலும் தன் கைக்குள் வைத்தவன்.." என் செல்ல குட்டிக்கு ஏன் மேல என்ன கோபம் சொன்னா தானே தீராப்பா சாரி கேட்க முடியும் . இந்த தீராப்பாக்கு சம்மு பேபி விட்டா வேற யாருக்கா " என்று கேட்டான்.

" அவனை பார்த்தவள். " இன்னகி ஏன் தீரா எங்க ரதுமிஸ் திட்டுன.அதுனால அவங்க என்கிட்ட கூட பேசாம கோபப்பட்டு போயிட்டாங்க....போ உன் கூட நான் பேசமாட்டேன்,.." என்றாள்..

' இந்த குழந்தை மேல் ஏன் கோபத்தை காட்டிட்டு போனா ' என்று தனக்குள்ளே நினைத்தவன்." சம்மு செல்லம், சாரி செல்லம் தெரியாம திட்டிடேன் இனி அப்படி நடந்துக்க மாட்டேன்,சாரி டா என்று தன் இருகாதை பிடித்து மன்னிப்பை கேட்டான். நான் மண்டே கண்டிப்பா ரதுமிஸ் கிட்ட சாரி சொல்லுறேன் சரியா இப்ப நீ தீராப்பா கிட்ட பேசுடா...அப்பா பாவம் இல்லையா பீளிஷ் டா " கெஞ்சினான்,

" அப்ப மண்டே ரதுமிஸ் என்கிட்ட பேசுவாங்களா ? தீரா " என்றவள் கேட்க.

" ம்ம்.." கண்டிப்பா பேசுவாங்க,இப்ப வா சாப்பிடலாம் " என்று அவளை சமாதானம் செய்து தூக்கிசென்றான்..

மறுநாள் விடிந்தது ஞாயிறாக இருக்க...இங்கோ ரது வீட்டில் அனைவரும் கூடி இருந்தனர். நிசானும் அவனது குடும்பத்தினரும் வந்திருந்தனர்...

ரது மட்டும் இன்னும் உறங்கி கொண்டிருந்தாள்...

" என்ன அண்ணி ரது எங்க ? " தேவரசி கேட்டுக் கொண்டே வந்தார்...." எங்க தேவ பதினொரு மணி ஆகுது இன்னும் தூங்குறா..." என்றார் மகா...

" சரி,தூங்கட்டும் விடுங்க அண்ணி சின்ன பொண்ணுதானே..." என்றார் தேவரசி...

" உன் மருமக தானே நீ அவளுக்காக பேசதான் செய்வ இரு அவளை எழுப்பிறேன் " என்றவர் ரதுவின் அறைக்குள் சென்று நாலு அடியை போட்டு எழுப்பி விட்டு வெளியே வந்தார்...


அவர் வந்த நொடியே
" அம்மாமாமா........! " என்ற ரதுவின் அலறல் சத்தமே கேட்க எல்லோரும் பதறி அடித்துக்கொண்டு ரதுவின் அறைக்கு விரைந்தனர்....


தீரா(து)காதல்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
மிகவும் அருமையான பதிவு,
சித்து டியர்
 




Chanmaa

இணை அமைச்சர்
Joined
Dec 26, 2019
Messages
740
Reaction score
684
அருமையான பதிவு
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,012
Location
Tamil Nadu
?ரதுவின் அலறலுக்கு காரணம் என்ன....?

?நிச்சயமா அது குறும்பா தான் இருக்கும். ...

?உங்கள் நாயகி ....
?ரௌடி இடத்துக்கே போய் கெத்து காமிக்கிறாங்க
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top