• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதோடுதான் நான் பாடுவேன்-2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore

அத்தியாயம்-2

ரவேற்பறையை ஒட்டியிருந்த விருந்தினர்கள் வந்தால் தங்குவதற்காக ஒதுக்கபட்டிருந்த அறைக்கு தன் மருமகளை சென்று ஓய்வெடுத்து கொள்ள சொல்லி அனுப்பி வைத்திருந்தார் சிவகாமி...

மதுவும் விட்டால் போதும் என்று அந்த அறைக்குள் நுழைந்தவள் அங்கு இருந்த கட்டிலில் அமர்ந்து காலையில் நடந்த கூத்தையெல்லாம் மனதில் ஓட்டி பார்த்து வெந்து கொண்டிருந்தாள்...

அந்த நேரம் அந்த அறையின் கதவை திறந்து கொண்டு ஒரு பெண் எட்டி பார்த்தாள்...

அழகான வேலைப்பாடு மிக்க லகங்கா அணிந்து, அதற்கு மேச்சாக காதணிகளும் கையில் வளையல்களையும் அணிந்து, இடைக்கும் கொஞ்சம் மேலாக தொங்கிய சடையில் மல்லிகை பூவை மடித்து தொங்க விட்டு நெற்றியில் சிறிய நெற்றி சுட்டியும் கழுத்தில் மின்னிய நெக்லஸ் ம் அவள் மாப்பிள்ளை வீட்டிற்கு மிக நெருங்கிய சொந்தம் போல காட்டியது....

முகத்தில் குழந்தைதனமும் கண்ணில் மின்னும் குறும்புமாக தன்னை நோக்கி வந்தவளை உற்று பார்த்தாள் மதுவந்தினி..

அவளை கண்டதும் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்தாள் மது... அதற்குள் அந்த பெண் அருகில் வந்தவள்,

“ரெஸ்ட் எடுக்கறீங்களா அண்ணி?? சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?? “ என்று சிரித்தவாறு மதுவின் அருகில் அமர்ந்தாள்..

மது இல்லை என்று தலை ஆட்டவும்

“நான்தான் உங்க நாத்தனார்.. பேரு அகிலா.. நான்தான் உங்களுக்கு நாத்தனார் முடிச்சு போட்டேன்” என்று பெருமையாக சிரித்தாள்...

அப்பொழுது தான் நினைவு வந்தது மதுவுக்கு காலையில் மணமேடையில் தன் அருகில் நின்று கொண்டிருந்தவள் இவள் தான் என்று... அவளை பார்த்து மதுவும் சிநேகமாக புன்னகைத்து,

“என் பெயர் மதுவந்தினி... “ என்று தன்னை அறிமுக படுத்தி கொண்டாள் மது ....

அதற்குள் அகிலா முந்தி கொண்டு,

“ஆங்... அதான் தெரியுமே.. திருமண பத்திரிக்கையில் மதுவந்தினி வெட்ஸ் மகிழன் என்று போட்டிருந்தமோ.. “ என்றவள் நாக்கை கடித்து கொண்டாள்...பின் மதுவை பார்த்து

“சாரி அண்ணி...’ என்றாள் வருத்தத்துடன்

“எதுக்கு சாரி??.. “ என்று புரியாமல் அகிலாவை பார்த்தாள் மது ..

“அது வந்து... உங்களுக்கு மகிழன் அண்ணாவை ஞாபக படுத்திட்டேன்.. அதான் “ என்று முழுங்கினாள்...

“போச்சுடா... இவளுமா??? ஆமா... நான் அந்த ஓடிப்போனவன் நினைப்புல உருகறனாக்கும்.. இவள் வந்து ஞாபக படுத்த... ”என்று மனதிற்குள் திட்டியவள்,

“அதெல்லாம் ஒன்னுமில்லை “ என்று மீண்டும் இலேசாக புன்னகைத்தாள் மது ..

அவளின் புன்னகையை கண்ட அகிலா

“வாவ்... சூப்பரா சிரிக்கறீங்க அண்ணி... நீங்க சிரிக்கிறப்போ ரொம்ப அழகா இருக்கீங்க.... எங்க மகிழன் அண்ணா கூட இப்படிதான்.. நல்லா சிரிப்பான்... நீங்க பேசாம சின்ன அண்ணியாவே வந்திருக்கலாம்.. மகிழன் ஷோ ஸ்வீட்... நீங்க அவனுக்குதான் பொருத்தமா இருந்திருப்பீங்க...” என்றவள் மெதுவாக மதுவின் காதருகில் வந்து ,

“இந்த நிகிலன் அண்ணா இருக்கானே... சரியான சிடுமூஞ்சி... எப்ப பாரு திட்டிகிட்டே இருப்பான்...எனக்கு அவனை கண்டாலே கை கால் உதறும்... பாவம் நீங்க வந்து அவன் கிட்ட மாட்டிகிட்டீங்களே!!! “ என்று ரகசியம் போல மெதுவாக முனுமுனுத்தாள் அகிலா..!

“ஹ்ம்ம்ம் ஆனாலும் கெட்டதுலயும் ஒரு நல்லது என்னன்னா?? .. எனக்கு ஒரு கம்பெனி கிடைச்சாச்சு....” என்று சிரித்தாள் அகிலா..

“கம்பெனியா??.. “ என்று மீண்டும் புரியாமல் அகிலாவை பார்த்தாள் மது....

“ஆமா அண்ணி… எப்பவும் அந்த சிடுமூஞ்சி என்னை மட்டுமே திட்டுவானா... இனிமேல் கூட திட்டு வாங்க நீங்க வந்திட்டீங்க இல்லை.. எப்படியும் உங்களையும் திட்டத்தான் போறான்...

அவன் உங்க கழுத்துல தாலி கட்டினதில் இருந்தே பார்த்து கிட்டேதான் இருக்கேன்... அவன் எல்லாரையும் முறைச்சுகிட்டே இருக்கான்..

எங்க அம்மாவே அவன் கண்ணுல படாம எஸ் ஆகிகிட்டிருக்காங்க... நீங்களும் அவன் கண்ணுல தனியா மாட்டிறாதிங்க... உண்டு இல்லைனு பண்ணிடுவான்.. “ என்று தன் அண்ணனின் அருமை பெருமைகளை விளக்கி சொல்லி மதுவின் வயிற்றில் புளியை கரைத்தாள் அகிலா...

“ஐயோ!!! இது வேறயா... “ என்று இன்னுமாய் நொந்து கொண்டாள் மது..

பின் அகிலா தொடர்ந்து கதை அடித்து கொண்டிருக்க,

“அகிலா.... “ என்று சிவகாமி அழைத்தார் தன் மகளை..

“இருங்க அண்ணி.. அம்மா கூப்பிடறாங்க.. என்னனு கேட்டுட்டு வந்திடறேன்... நாம அப்புறம் பேசலாம்... ” என்று துள்ளி குதித்து ஓடினாள் அகிலா..

தன் அன்னையிடம் சென்றவளை

“போய் நிகிலனை கீழ வர சொல்லு அகிலா... அண்ணியோட பேரன்ட்ஸ் கிளம்பறாங்களாம்.. ” என்றார் சிவகாமி...

“ நான் எப்படி??.... “ என்று இழுத்தவள் தன் அன்னை முறைக்கவும் வேகமாக சென்று மாடி ஏறினாள்..

“ஐயோ!! இவன் ரூமுக்கு போறது அந்த சிங்கத்தோட கூண்டுக்கு போற மாதிரி இருக்கு.. அந்த சிங்கம் கூட போன போகுதுனு கடிக்காம விட்டுடும்.. இவன் கடிச்சு குதறிதான அனுப்புவான்...

இன்னைக்கு வேற புல் கடுப்புல இருப்பான்.. இந்த அம்மா கடைசியில என்னை பலி ஆடாக்கிட்டாங்களே... “ என்று புலம்பியவாறே நிகிலன் அறையை அடைந்தவள் மெதுவாக கதவை தட்டினாள்...

அதை கேட்டு படுக்கையில் விழுந்து கிடந்த நிகிலன் எழுந்து வந்து கதவை திறந்தவன், அகிலா வெளியில் நின்று கொண்டிருப்பதை கண்டு

“என்ன??? “என்று எரிந்து விழுந்தான்..

அதை கேட்டதும் அவள் எதுக்கு வந்தாள் என்பது மறந்து முழித்து கொண்டு நின்றாள் அகிலா....

‘ஏய்.. அகிலா... எதுக்கு கதவை தட்டின.. ” என்று கத்தினான் கீழ கேட்காதவாறு.. அவன் கத்தலில் விழித்து கொண்டவள்

“அது வந்து...” என்று தலையை சொரிந்து அவசரமாக யோசித்தவள் நல்ல வேளையாக நினைவு வர

“ஆங் ஞாபகம் வந்திடுச்சு... அம்மா உன்னை கீழ வர சொன்னாங்க.. ” எண்று சொல்லி விட்டு வேகமாக கீழ ஓடி மறைந்தாள்..

இல்லைனா அவள் மறந்து நின்றதுக்கும் அவன் கிட்ட அர்ச்சனை வாங்கி கட்ட வேண்டி இருக்கும் என்று உடனே எஸ் ஆகினாள்..

“இந்த அம்மாக்கு வேற வேலை இல்லை...மனுசனை நிம்மதியாகவே விட மாட்டாங்க போல... “என்று திட்டிகொண்டே கீழ இறங்கி வந்தான் நிகிலன்...

வரவேற்பறையில் மதுவின் உறவினர்கள் கிளம்ப ரெடியாக இருந்தார்கள்..

மதுவின் அறைக்கு சென்ற அவளின் அம்மா சாரதா,

“மது .. நாங்க கிளம்பறோம்.. ..நீ காலையில நடந்தது எதயும் நினைத்து வருத்தப் படாத கண்ணு.. எப்படியோ நிக்க இருந்த கல்யாணம், மாப்பிள்ளை தயவால் நல்ல படியா முடிஞ்சிடுச்சி...

உனக்கு பெண் கேட்டு வர்றப்பயே பெரிய மாப்பிள்ளை பற்றியும் விசாரிச்சோம்... இவரும் தங்கமானவர் தான் மது.. அதனால் நீ எதுவும் பயப்பட வேண்டாம்.. சம்பந்தி அம்மா உன்னை நல்லா பார்த்துக்குவாங்க ...

நீ தான் இந்த வீட்டு சூழ்நிலையை அனுசரித்து போகனும்... " என்று மூச்சு விடாமல் தன் அறிவுரைகள வழங்கினார் சாரதா..மதுவும் உள்ளுக்குள் பல்லை கடித்தபடி சரி என்று தலை ஆட்டினாள்...

தன் பெற்றோர் தன்னை தனியாக விட்டுட்டு போறாங்க என்றதுமே அவள் கண்கள் கலங்கியது...அதே கலங்கிய கண்களுடன் வரவேற்பறைக்கு வந்ததும் அங்கு தன் தந்தையை காணவும் தன்னை மறந்து ஓடி சென்று அவரை இறுக்கி கட்டி கொண்டாள்...

அவரின் தோளில் முகம் புதைத்து குழுங்கினாள்..

அவளின் தந்தையுமே தழுதழுத்தார்... அனைவரின் கண்களுமே கலங்கியது அந்த நொடியில்....

மாடியில் இருந்து கீழ இறங்கி வந்து கொண்டிருந்த நிகிலன் மட்டும் அங்கு நடப்பதை கண்டு இன்னும் கடுப்பானான்..

"என்னமா நடிக்கிறா... இப்படி நடிச்சு தான் என் தம்பியை மயக்கி இருப்பா இந்த வீட்டிற்குள் வருவதற்கு .. இப்ப என்னடான்னா அவள் பெற்றோரை விட்டு பிரிய மனம் இல்லாதவ மாதிரி நல்லாவே நடிக்கிறா... " என்று முகம் இறுகியது நிகிலனுக்கு..

ஆனாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அங்கு நடப்பவைகளை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.. ஒரு வழியாக மதுவை தேற்றிய அவள் பெற்றோர்கள் நிகிலனிடம் வந்து

"மாப்பிள்ளை.... மது சின்ன பொண்ணூ...ஒரே பொண்ணுங்கறதால செல்லமா வளர்த்துட்டோம்... அவள் எதுவும் தப்பு செய்தால் அவளுக்கு எடுத்து சொல்லி புரிய வைங்க.. அவளை கண் கலங்காமல் பார்த்துக்கங்க.." என்று தழுதழுத்தார் மதுவின் அப்பா சண்முகம்....

அவரின் கைகளை பிடித்து கொண்ட நிகிலன்,

"நீங்க கவலை படாதிங்க சார்.. உங்க பொண்ணை நாங்க பார்த்துக்கறோம்.. நீங்களும் நடந்ததை எல்லாம் மறந்திடுங்க... " என்று சமாதானம் செய்தான்...

“சார் இல்ல மாப்பிள்ளை.. என்னை மாமானு கூப்பிடுங்க.... எப்படியோ சரியான நேரத்துல நீங்க மனசு வச்சதால தான் என் பெண்ணோட வாழ்க்கை திரும்ப கிடைத்தது.. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனே தெரியலை.. “ என்று மீண்டும் தழுதழுத்தார் சண்முகம்..

அதை கண்டு கொஞ்சம் இலகியவன்,

“இருக்கட்டும் மாமா... நானும் என் தம்பி சார்பா உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்... “ என்கவும் அவரின் முகத்தில் நிம்மதி பரவியது.. எப்படியோ தன் பொண்ணு நல்ல இடத்துலதான் சேர்ந்திருக்கா....” என்று மனதுக்குள் சந்தோஷபட்டார்..

*****

ஒரு வழியாக பெண் வீட்டார் அனைவரும் கிளம்பி செல்லவும் மற்ற உறவினர்களும் களைந்து சென்றனர்...அந்த இன்ஸ்ட்ரக்டர் பெண்மணியும் இன்னும் இரண்டு நெருங்கிய சொந்தக்கார பெண்கள் மட்டும் ஹாலில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்...

அதற்குள் மேலெ சென்ற நிகிலன் வேகமாக வேறு உடைக்கு மாறி கீழ வந்தான்.. அதை கண்ட சிவகாமி எழுந்து

“நிகிலா... “என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தார்..

“அம்மா.. மண்டபத்துல இன்னும் செட்டில் மென்ட் முடியலை... நான் போய் பார்த்து முடிச்சிட்டு அப்படியே ஸ்டேஷனுக்கு போறேன்..” என்றான்..

“நைட் கொஞ்சம் சீக்கிரம் வந்திருடா.. இன்னைக்கு நாள் நல்லா இருக்காம். இன்னைக்கே முதலிரவு வச்சுக்கலாம் னு... “ என்று அவர் முடிக்கு முன்னே

அவன் முகம் எரிமலையாக மாறி இருந்தது..

“அம்மா... நீ சொல்ற மாதிரி எல்லாம் என்னால ஆட முடியாது... அதுக்காகத் தான் நான் இந்த கலயாணம் கருமாதி இதெல்லாம் எனக்கு வேண்டாம் னு இருந்தேன்.. என்னை கொண்டு வந்து இப்படி மாட்டி விட்டுட்டு அதை செய் இத செய் னு ஏதாவது சொன்னீங்க அப்புறம் உங்க செல்ல மகன் ஓடிப்போன மாதிரி நானும் எங்காவது போய்டுவேன்....

இந்த வீட்டு பக்கமே வர மாட்டேன்... அதனால என்னை எதுவும் தொந்தரவு பண்ணாதிங்க... " என்று குமுறிவிட்டு வேகமாக வெளியேறினான்...

மற்றவர்கள் முன் பெத்த தாய் என்று கூட பார்க்காமல் தன் மகன் கத்தியதை நினைத்து சிவகாமியின் கண்கள் கலங்கின..

அதற்குள் அருகில் இருந்த அந்த பெண்

“விடு சிவகாமி.... அவனுக்கும் இது எதிர்பாராதது தான.. தம்பிய கட்டிக்க போறதாயிருந்தவ தனக்கு தாரமாகி வந்தா அவனாலயும் எப்படி உடனே ஏத்துக்க முடியும்..?? கொஞ்சம் விட்டு பிடி.. “ என்று சிவகாமிக்கு அட்வைஸ் பண்ணினார்...

இந்த கலவரத்தில் இந்த வீட்டிற்கு புதுசா வந்திருக்கிற மருமகளையும் பார்க்க வேண்டுமே என்று எண்ணி தன் கண்களை துடைத்து கொண்டு மது இருந்த அறைக்கு சென்றார் சிவகாமி..

அங்கு மது இன்னும் திருமண புடவையை கூட மாற்றாமல் அப்படியே அமர்ந்து இருக்க, அவள் அருகில் சென்றவர்,

“மது மா... நீ வேற புடவை மாத்திக்க...” என்றவர் அருகில் இருந்த ஒரு கப்போர்டை திறந்து அதில் இருந்த புடவைகளை காட்டி,

“இதெல்லாம் நான் என் மருமகளுக்காக அப்பப்ப வாங்கி வச்சது....உனக்கு திருமண புடவைக்கு பிளவுஸ் தைக்கிறப்பயே இதுக்கும் பிளவுஸ் தச்சி வச்சுட்டேன்... இதுல உனக்கு எது பிடிக்குதோ எடுத்துக்கோ... “ என்று தன் கவலையை மறைத்து கொண்டு சிரித்தார்...

“பரவாயில்லை..... “ என்று இழுத்தவள் அவரை எப்படி அழைப்பது என்று புரியாமல் குழம்பி நின்றாள் மது ..

இப்பதான் நிறைய பேர் மாமியாரை அம்மானு கூப்பிடறாங்க.. சில பேர் அத்தைனு கூப்பிடறாங்க.. அதனால அவளுக்கு எப்படி அழைப்பது என்று குழம்ப, அவளின் தடுமாற்றத்தை கண்டு கொண்ட சிவகமி,

“நீ என்னை அத்தைனு கூப்பிடு மது... தயவு செய்து அம்மானு மட்டும் கூப்பிடாதா... எங்க வீட்ல ஏற்கனவே மூனு வாலுங்க அம்மா அம்மா னு,, கூப்பிட்டு என் காதே புளிச்சு போச்சு...இப்ப யாராவது அம்மானு கூப்பிட்டாலே அலர்ஜியா இருக்கு...

என் மருமக வாயால அத்தை னு கூப்பிட்டு கேட்கதான் இத்தனை நாளா காத்துகிட்டிருந்தேன்.... ஒரு வழியா என் ஆசை இப்பதான் நிறைவேறுச்சு.. அதனால அத்தைனு கூப்பிடு... “ என்று சிரித்தார்...

அவரின் வெளிப்படையான பேச்சு மதுவிற்கு கொஞ்சமாக பிடித்து போக, அவளும் புன்னகைத்து

“சரிங்க அத்தை.. “ என்று மெல்ல சிரித்தாள்..

“ஹ்ம்ம்ம் இப்படி சிரிச்சா என் மருமக இன்னும் அழகா இருக்கா.. நீ எத பத்தியும் கவலைப்படாமல் சிரிச்சுகிட்டே இருடா.. எல்லாம் சீக்கிரம் சரியாயிடும்.... “ என்று சொல்லியவாறு அவளின் சடையில் இருந்த அலங்காரங்களை எடுத்து விட்டார்..

அகிலாவும் வந்து உதவி செய்ய ஒரு வழியாக அவள் நீண்ட சடையில் தைத்திருந்த அந்த அலங்காரங்களை எல்லாம் கழற்றி மதுவின் கையில் ஒரு புடவையை கொடுத்து

“நீ போய் குளிச்சிட்டு இத மாத்திகிட்டு இங்கயே படுத்து கொஞ்ச நேரம் தூங்கு டா ... நாங்க வெளில இருக்கோம்.. எதுவும் வேணும்னா அகிலாவ கூப்பிடு... அவ வந்து உனக்கு உதவி செய்வா... “ என்று அவள் கன்னத்தை வருடி அகிலாவையும் கூட்டிகிட்டு அந்த அறை கதவை மூடிவிட்டு சென்றார் சிவகாமி...

மதுவுக்கு கொஞ்சம் நிம்மதியா இருந்தது.. ஏதோ இவங்க பார்க்க கொஞ்சம் நல்லவங்களா இருக்காங்க.. என் பக்கத்து வீட்டு அக்கா மாமியார் மாதிரி தொட்டதுக்கு எல்லாம் குறை சொல்ல மாட்டாங்களா இருக்கும்... பார்க்கலாம்.. “

என்று மனதுக்குள் சொல்லியவள் பின் குளித்து முடித்து சிவகாமி கொடுத்திருந்த புடவையை கட்டி கொண்டு வந்தவள் மீண்டும் அந்த கட்டிலில் அமர்ந்தாள்...

“நல்ல வேளை.. இந்த அம்மா திட்டி திட்டியாவது இந்த புடவையை சுத்த கத்து கொடுத்தாங்களே.. இல்லைனா இப்ப நல்லா முழிச்சுகிட்டு நின்னுகிட்டிருந்திருக்கணும்... தேங்க்ஸ் மம்மி....”

என்று மனதுக்குள் தன் அம்மாவிற்கு நன்றி சொன்னவள் அப்பொழுது தான் தன் பெற்றோர்களின் நினைவு வந்தது....

“சே... நேற்று வரை எவ்வளவு ஜாலியா இருந்தேன்.. இப்படி ஒரு மஞ்ச கயித்த கட்டி காலையில வரைக்கும் யாருனே தெரியாத இந்த காட்டுல கொண்டு வந்து தள்ளிவிட்டுட்டு போய்ட்டாங்களே... I hate them.. “என்று மனதுக்குள் தன் பெற்றோர்களை திட்டியவள் கால்களை கட்டிலில் மடித்து குத்துக்கால் வைத்து உடகார்ந்து கொண்டு முகத்தை முழங்காலில் புதைத்து கொண்டாள்..

அவள் கண்களில் இருந்து நீர் எட்டி பார்த்தது.. சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்து இருந்தவள் பின் தலையை நிமிர்த்தி பார்வையை சுழல விட்டாள்..

அது ஒரு விசாலமான அறை .. அதன் நடுவில் அந்த கட்டிலும் அதன் மேல அவள் தனியாக உட்கார்ந்து இருப்பதையும் உணர்ந்து,

இராமயணத்துல சீதை அசோக வனத்தில் சோகமாக அமர்ந்திருக்கும் காட்சி நினைவு வந்தது...

ராவணன் சீதையை சிறை பிடித்து இலங்கைக்கு கொண்டு சென்று, அவனின் ராஜ்ஜியத்தின் சிறப்புகளையும் ,வளங்களையும் சீதைக்கு காட்டி அவளை தன் வசம் கவர முயல, சீதையோ அதை எல்லாம் ஏறெடுத்தும் பார்க்காமல் அதோடு அவன் அழித்த அந்த வசதி மிகுந்த அரண்மனையை மறுத்து அசோக வனத்தில் அந்த அசோக மரத்தடியில் தான் இருப்பேன் என்று அடம்பிடித்து சீதை அந்த காட்டில் வசிப்பாள்...

அவளை சுற்றிலும் அரக்கிகள் சுழ்ந்து இருப்பர்... தன் நிலையும் அதை போல இருப்பதாக தோன்றியது மதுவுக்கு...

“இப்படி நேற்றுவரை யாருனே தெரியாத இந்த காட்டில் கொண்டு வந்து விட்டுட்டு போய்ட்டாங்களே...” என்று புலுங்கியவள் சுற்றிலும் கண்களை சுழல விட்டு

“இந்த இடமும் அந்த காடு மாதிரிதான் இருக்கு... என்ன இங்கு அந்த அரக்கிகள் மிஸ்ஸிங்.. மற்றபடி பீலிங்ஸ் ஒன்னுதான்..” என்று அந்த நிலையிலும் தனக்குள் சிரித்து கொண்டாள்...

பின் சீதாவிற்கு உதவி செய்த அவள் தோழி திரிசடை நினைவு வர,

“அங்கு திரிசடை மாதிரி இங்கு எனக்கு உதவ யார் இருக்கிறார்கள்?? “ என்று நினைக்கையிலயே அறைக்கதவை திறந்து கொண்டு

“தூங்கறீங்களா அண்ணி ?? .. “என்று அகிலா உள்ளே வந்தாள்

“இவதான் திரிசடையோ??? “என்று மனதுக்குள் அகிலாவை அந்த திரிசடை அரக்கி மாதிரி கற்பனை பண்ணி சிரித்து கொண்டாள் மதுவந்தினி...

(ஹீ ஹீ ஹீ... இது மட்டும் அகிலா குட்டிக்கு தெரிஞ்சது மது நீ காலி.... )

மதுவின் அருகில் வந்த அகிலா,

“மஹாராணியாரே.. இந்த சேவகன் இல்ல சேவகி கொண்டு வந்துள்ள செய்தி என்னவென்றால்,

தாங்கள் துயில் கழைந்து எழுந்து முகம் கழுவி அலங்கரித்து கொண்டு இந்த மல்லிகையை சூடிக்கொண்டு நமது அரசபைக்கு வர வேண்டுமாம்... இது இந்த மகிழ்மதி கோட்டை ராஜமாதா சிவகாமி தேவியின் உத்தரவு... “

“நான் விடை பெறுகிறேன்... இன்னும் அந்த ராஜகுமாரன் பாகுபலி நிகிலன் அவர்களுக்கு வேற செய்தி வைத்திருப்பார்கள்... நான் போய் அந்த பணியை நிறைவேற்றனும்.. அப்ப உத்தரவு வாங்கிக்கறேன்.. மஹாராணி... “ என்று இடைவரை குனிந்து தன் கையை முன்னால் நீட்டி பணிவுடன் கூறவும், அவளின் செய்கையால் சிரிப்பு வந்தாலும் அவள் என்ன சொன்னாள் என்று ஒன்றும் புரியாமல் முழித்தாள் மது ....

அவள் முழிப்பதை கண்ட அகிலா சிரித்துகொண்டே,

“அண்ணி உங்களை ரெடியாகி ஹாலுக்கு வர சொன்னாங்க உங்க மாமியார்.....

அப்புறம் எப்படி இருந்தது என் வசனம்?? “ என்று தன் புருவங்களை உயர்த்தினாள்...

அதை கண்டு மெதுவாக புன்னகைத்தாள் மது....

பின் அவளின் அருகில் வந்த அகிலா

“அண்ணி.... உங்களுக்கு ஒரு சீக்ரெட் சொல்லட்டுமா ?? ... நீங்க பாகுபலி பார்ட் 2 பார்த்தீங்களா?? அதுல நம்ம பிரபாஸ் அந்த யானையை எப்படி சண்டை போட்டு அடக்குவார்...!!! அதெல்லாம் தேவையே இல்ல அண்ணி... நம்ம வீட்டு பாகுபலி நிகிலன் கிட்ட விட்டிருந்தா முறச்சே அந்த யானையை தன் காலடியில் விழ வைத்திருப்பான்..

ஹா ஹா ஹா “ என்று வாய்விட்டு சிரித்தாள் அகிலா...

அதை கண்டு மதுவின் புன்னகை இன்னும் கொஞ்சம் பெரிதானது....

“அப்பாடா... மஹாராணியார் சிரிச்சுட்டாங்க... அகிலா... இவங்கள சிரிக்க வச்ச பெருமை உன்னையே சேரும்.. “ என்று தன்னை பார்த்து விரலை நீட்டி சிரித்து கொண்டாள்....

“ஹ்ம்ம்ம்ம் அப்புறம் அண்ணி... இன்னொன்னு சொல்ல மறந்திட்டேன்...

உங்களை பார்க்க நம்ம பக்கத்து வீட்ல இருந்து பார்வதி ஆன்ட்டி வந்திருக்காக,,, எதிர்த்த வீட்ல இருந்து ஈஸ்வரி ஆன்ட்டி வந்திருக்காக.. வாமா மதுவந்தினி .... “ என்று இழுத்தவள்

“அண்ணி... அந்த மின்னல் மாதிரி இப்படி போய்ட்டு அப்படி ஓடி வந்திராதிங்க... இப்ப வந்திருக்கிறவங்க எல்லாம் இந்த தெருவின் டெரர் ஆன்ட்டி ஸ்... ஒருத்தங்கள விட்டு வைக்க மாட்டாங்க வம்பு பேச...

உங்களை எப்படி படுத்த போறாங்களோ?? என் ஆழ்ந்த அனுதாபங்கள்.. அப்புறம் அவங்க ஏதாவது சொன்னால் நீங்க கண்டுக்காதிங்க... “ என்று தன் அண்ணியை முன்பே தயார் படுத்தினாள் அகிலா...

அதை கேட்டு கொஞ்சம் மிரண்டாள் மது...

“ஐயோ... அண்ணி.. இதுக்கெல்லாம் எதுக்கு பயந்துக்கறீங்க... சும்மா ஒரு பில்டப் க்கு தான் சொன்னேன்.. நீங்க சும்மா போய் பாருங்க.. நீங்க ரெடியாகி இருங்க... நானே வந்து கூட்டி கிட்டு போறேன்.. “ என்று குதித்து கொண்டே வெளியில் ஓடினாள் அகிலா....

மதுவும் எழுந்து முகம் கழுவி தன் நீண்ட கூந்தலை பின்னி அகிலா வைத்து விட்டு சென்றிருந்த மல்லிகையை எடுத்து மடித்து தலையில் வைத்து கொண்டு முகத்திற்கு இலேசாக பவுடர் போட்டு, கண்ணாடியில் பார்க்க எல்லாம் சரியாக இருந்தது...

ஆனால் முகத்திலும் கண்ணிலும் ஏதோ ஒன்று குறைவதை போல இருக்க அப்பொழுது தான் இந்த திருமண கலாட்டாவில் தன் முகத்தில் ஒரு வித கவலை அப்பி கொண்டிருப்பதை போல இருந்தது...

“இப்படியே போனால் இப்ப வந்திருக்கிறவங்க மறுபடியும் அந்த ஓடி போனவனை நினைத்து தான் நான் கவலை படுவதாக மறுபடியும் அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க.. இனிமேல் எக்காரணத்தை கொண்டும் முகத்தில் எதையும் காட்ட கூடாது...

இந்த திருமணத்தில் நடந்த கூத்தால் எனக்கு ஒன்னும் பாதிப்பு இல்லைனு காட்டிக்கணும்.. “ என்று முடிவு செய்தவள் முகத்தில் முயன்று புன்னகையை வர வழைத்தாள்...

இப்பொழுது கொஞ்சம் பெட்டராக இருக்க,

“இப்படியே மெய்ன்டெய்ன் பண்ண வேண்டியதுதான்.. “ என்று எண்ணி மேலும் சிரித்து பார்த்து கொண்டாள் மது..!

அப்பொழுது அகிலா உள்ளே வரவும், அவளுடன் வரவேற்பறைக்கு சென்றாள் உள்ளுக்குள் கொஞ்சம் பயந்தவாறு....!
 




Attachments

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
ஏற்கனவே மது பயந்து போய் இருக்காங்க....😕
இதுல அகிலா வேற....😅
நிகில் ரொம்ப தான் கோபக்காரர் போலயே....🙄
சிவகாமி அம்மா அவங்ககிட்ட நல்லா பேசறாங்க....😊
நைஸ் எபி சிஸ்....❤
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top