காதோடுதான் நான் பாடுவேன்-39

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
176
Reaction score
657
Location
Bangalore
அத்தியாயம்-39


ன்று காலை நிகிலன் கண் விழித்ததும் தன் மீதும் படுக்கையின் மீதும் இருந்த மலர்கள் நேற்று இரவு சம்பவத்தை நினைவு படுத்த, அவன் இதழில் தானாக புன்னகை அரும்பியது....

அவளின் மென்மை இப்பொழுதும் அவனை சிலிர்க்க வைக்க, திரும்பி தன் மனைவியை பார்க்க அவள் இல்லை அங்கு...

ஏனோ அவளை, தன் மனைவியை பார்க்க வேண்டும். தன்னை பார்க்கும் பொழுது அவள் முகத்தில் மலரும் வெட்கத்தை ரசிக்க எண்ணி எழுந்து குளியலறைக்கு சென்றவன் ரெப்ரெஸ் ஆகி கீழ வந்தான்...

குளித்து முடித்து தலையில் ஈரம் சொட்ட சமையல் அறையில் நின்று கொண்டிருந்தவளை, மாடியில் இருந்து இறங்கும் பொழுதே கண்டதும், மீண்டும் அவன் உள்ளே சிலிர்த்து போனான்...

அப்படியே பின்னால் இருந்து அவளை அள்ளி அணைக்க எண்ணி சமையல் அறைக்கு சென்றான்...

அப்பொழுதுதான் மது யாரிடமோ அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க, வாயிலிலயே நின்று கொண்டான்...

மது பேசியதில் இருந்து அவள் திட்டம் புரிய எரிமலையானான்

நல்லவள் என்று நம்பி இருந்தவள் பொய்த்து போகவும் கோபத்தில் அவளை கழுத்தை நெறித்தவன் பின் விட்டு விட்டு சென்று விட்டான்...

தன்னை ஒருத்தி ஏமாற்றி விட்டாள்… அதுவும் தன் மனைவியாக உள்ளே வந்தவள்.. வெகுளி என்று எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்கியவள்... இப்படி விஷமாக இருப்பாள் என்று நினைக்காததால் அவனின் ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியவில்லை..

அதே ஆத்திரத்தில் கண்டவர்களை எல்லாம் கடித்து குதறினான்... ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் ரவுண்ட்ஸ் போக, அங்கு ட்யூட்டியை சரியாக பண்ணாதவர்களை எல்லாம் காய்ச்சி எடுத்தான்....

*****

அப்பொழுது தான் மாலை நேரம் ரவுண்ட்ஸ் வரும்பொழுது அந்த இன்ஸ்பெக்டர் மாலினி வேலை செய்யும் ஸ்டேசனுக்கு சென்றான்....

மாலினி இரண்டு வாரம் முன்பு கோவிலுக்கு சென்றிருக்க, அங்கு சிவகாமி, ஜானகியிடம் நிகிலனை பற்றி புலம்பி கொண்டிருந்தார்.

இந்த பய இன்னும் மாறவேயில்லை... பொண்டாட்டியை ஏற்று கொள்ளவேயில்லை என்று ஜானகியிடம் புலம்ப அதை கேட்டு மாலினி துள்ளி குதித்தாள்..

அவள் ஆசைபட்டு அவளாகவே சென்று புரபோஸ் பண்ணியும், தன்னை நிராகரித்தவன் வாழ்க்கையில் எப்பொழுதும் சந்தோசமாகவே இருக்க கூடாது என்று சூளுரைத்தாள்...

அவள் கேட்டதை வைத்து இன்னும் நிகிலனை வெறுப்பேத்த திட்டமிட்டு சரியாக அவன் வரும் நேரத்தில் தனக்கு கீழ் வேலை செய்யும் கான்ஸ்டபிள் ஒருத்தியிடம்

“நம்ம ACP நிகிலன் சார், திருமணம் ஆகியும் இன்னும் வாழ்க்கையை ஆரம்பிக்கவில்லையாம்....சும்மா பேருக்காகத் தான் கணவன் மனைவியா வாழறாங்களாம்...

அவர் இத்தன வருசம் கல்யாணம் வேண்டாம்னு இருந்தப்பவே ஏதாவது குறை இருக்கும் னு சந்தேகமா இருந்துச்சு..

அது இப்பதான் கன்பார்ம் ஆகிடுச்சு... அவர் ஒரு ஆண்மை இல்லாதவர்....“ என்று இன்னும் ஏதேதோ சொல்லி ஏளனமாக பேச, அதைக் கேட்டு பல்லை கடித்தான் நிகிலன்...அவளை அறைய கைகள் துடித்தன...

ஆனால் அந்த மாலினியை… ஒரு இன்ஸ்பெக்டரை தனிபட்ட விரோதத்திற்காக காரணம் இல்லாமல் தண்டிக்க முடியாது என்று தன் கரங்களை கஷ்டபட்டு கட்டுபடுத்தி கொண்டான்....

அதனால் அவள் பணியில் இருக்கும் குறைகளை சுட்டி காட்டி ஒரு வாரத்துக்கு அவளை சஸ்பென்ட் பண்ணினான்...

அதே வெறியோடு கிளம்பி வர, வரும் வழியில்

“ஒரு பாரில் சில ரௌடிகள் குடித்து விட்டு தகராறு பண்ணுவதாகவும் அந்த பகுதி போலிஸ் ஸ்டேஷன்ல கம்ப்லெய்ன் கொடுத்தாலும் ஏற்று கொள்ள மாட்டேங்குறாங்க.. அவனுங்க பெரிய இடம் சார்.. அதான் யோசிக்கறாங்க போல..

நீங்கதான் எப்படியாவது வந்து தட்டி கேட்கணும்.. “ என்று அந்த பாரின் உரிமையாளர் நிகிலனை அழைத்து முறையிட, நிகிலன் காரை நேராக அந்த பாரை நோக்கி திருப்பினான்...

அந்த உரிமையாளர் சொன்னமாதிரியே சில ரௌடிகள் கலாட்ட பண்ணி கொண்டிருக்க, நிகிலன் தன் கோபத்தை எல்லாம் திரட்டி அவர்களை பந்தாடினான்.. அப்பொழுது நடந்த சண்டையில் ஒரு மதுப்பாட்டில் விழுந்து அவன் மேல் கொட்டிவிட்டது...

அந்த ஏரியா இன்ஸ்பெக்டரை அழைத்து, அந்த ரௌடிகளை ஒப்படைத்து விட்டு, வேற ட்ரெஸ் அணிவதற்காக வீட்டிற்கு வந்தான்...!

வந்ததும் அவன் அறையில் மதுவை பார்க்க, அவள் காலையில் பேசியதும், அதோடு அந்த மாலினி பேசியதும் நினைவு வர தன்னை மறந்தான்....தன் நிலையை, தன் மனைவியின் மென்மையை என்று அனைத்தையும் மறந்து வேட்டையாடும் புலியாக அந்த புள்ளிமானை துவைத்து எடுத்தான்...

*****

மறுநாள் கண் விழித்த நிகிலன், தலை பாரமாக இருக்க, தலையை இரு பக்கமும் அழுத்தி பிடித்து கொண்டே திரும்பி அருகில் பார்க்க, அங்கே மது துவண்டு கிடந்தாள்...

அப்பொழுதுதான் நேற்று அவன் தன் மனைவியிடம் நடந்து கொண்டது நினைவு வர, அது கொஞ்சம் அதிகம் தானோ என்று உறுத்தியது...

ஆனால் அடுத்த நொடியே அவள் அலைபேசியில் பேசியது நினைவு வர

“என்கிட்டயே அவ வேலையை காட்டினாள் இல்லை... இப்ப தெரிஞ்சிருக்கும் இந்த நிகிலன் யாரு னு? இந்த தண்டனை அவளுக்கு தேவைதான்.. “ என்று சொல்லி கொண்டே குளியல் அறைக்கு சென்று ரெப்ரெஸ் ஆகி, தன் காலை ஓட்டத்தை தொடங்கினான்...

அதை முடித்து வந்தவன், தன் அறைக்கு திரும்பி வர, மது இன்னும் சுருண்டு படுக்கையில் அப்படியேதான் படுத்திருந்தாள்...அதை கண்டவன்

“எல்லாம் நடிப்பு.. இவளுக்கா நடிக்க தெரியாது? இப்ப எதுக்கு இந்த ட்ராமா பண்றாளோ? “ என்று ஏளனமாக உதட்டை சுழித்தவன், பின் குளித்து கிளம்பி வர, மது லேசாக முனகுவது கேட்டது....

“என்னாச்சு? இவ்வளவு நேரம் படுக்கையில் இருக்க மாட்டாளே? “ என்றவாறு அவள் அருகில் சென்றவன், அவளை உற்று பார்க்க அவள் உடல் நடுங்குவது தெரிந்தது...

அவள் முகத்தை பார்க்க, ஆங்காங்கே நகக் கீரலால் அவள் முகம் வீங்கி இருந்தது... அவனின் முரட்டுதனமான முத்தத்தால் அவள் உதடுகள் சிவந்து வீங்கி இருந்தன...

அதை கண்டதும் ஒரு நொடி அவன் தவறு புரிந்தது....

“ஒரு வேளை அவசரபட்டுட்டமோ? இவளை வேற மாதிரி தண்டித்து இருக்கணுமோ? இப்ப என்ன செய்வது? “ என்று எண்ணியவாறே அவள் அருகில் குனிந்தவன்

“ஏய்.. நடிச்சது போதும்.. எழுந்திரு..” என்க, அவளோ அவன் குரல் கேட்டதும் இன்னும் நடுங்கினாள் கண்ணை திறக்காமல்...

அதை கண்டவன் அவள் நெற்றியில் கை வைக்க, அது அனலாக கொதித்தது...

“அச்சோ இப்படி கொதிக்குதே...” என்று திடுக்கிட்டவன், உடனே மைதிலிக்கு போன் பண்ணி அழைக்க, அதற்குள் படுக்கையை நேராக்கி அவளுக்கு வேற ஒரு நைட்டியை மாற்றிவிட்டு மொத்தமான போர்வையை கொண்டு போர்த்தி விட்டான் அவள் நடுக்கம் குறைய...

டாக்டர் மைதிலி வந்ததும் வழக்கம் போல நீ கொஞ்சம் வெளில இருப்பா என்றவர் அவன் வெளியில் சென்றதும் அவளை பரிசோதித்தவர் அதிர்ந்து போனார்....

அவள் உடல் எங்கும் ஆங்காங்கே கீரல் பட்டிருக்க, காய்ச்சலில் உடல் அனலாக கொதித்தது...

அவளை எழுப்ப, அவளோ எழ முடியாமல் கிடந்தாள்... பின் அவளுக்கு ஒரு இன்ஜெக்சனை போட்டவர், கீழ இறங்கி வர, நிகிலன் குற்ற உணர்ச்சியால் தலையை குனிந்து கொண்டான்...

“என்னப்பா இதெல்லாம்? “ என்றார் அவனை எரிக்கும் பார்வையில்...

“சாரி டாக்டர்... நேற்று கொஞ்சம் வேற மூட் ல இருந்தேன்.. அதான் கொஞ்சம்.. என் கன்ட்ரோலை இழந்திட்டேன்...” என்றான் வேதனையுடன்...

“அதுக்காக இப்படியா? This is equivalent to rape… கட்டின பொண்டாட்டியா இருந்தாலும் அவள் சம்மதம் இல்லாமல் அவளை கட்டாய படுத்த கூடாதுனு சட்டமே இருக்கு தெரியுமா?

ஓ.. உனக்கே தெரிஞ்சிருக்குமே? அப்படி இருந்தும் ஏன் இப்படி?.. உன்னை போய் நல்லவன் னு பாராட்டினேனே.. நீயா இப்படி? “ என்று கோபம் பொங்க ஏளனமாக பார்த்தார்....

நிகிலனுக்குமே தன் தவறு புரிந்தது... அவளுக்கு ஆடை மாற்றும்பொழுது அவனே கவனித்தான்...அதை கண்டதும்தான் அவன் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டான் என்பது புரிந்தது...

“எக்ஸ்ட்ரீம்லி சாரி டாக்டர்.. எனக்கு அப்ப எப்படி நடந்துக்கறது னு தெரியலை... இதுதான் நான் முதலும் கடைசியுமாக பண்ணின தவறா இருக்கும்.. இனிமேல் இது மாதிரி எதுவும் நடக்காது.. நீங்க என்னை நம்புங்க...” என்றான் குற்ற உணர்ச்சியுடன் ...

“ஹ்ம்ம்ம் நான் நம்பறதும் நம்பாததும் ஒன்னும் இல்லப்பா... உன் மனைவியே ஆனாலும் அவளும் ஒரு மனுசி .. அவளுக்கும் ஒரு மனசு இருக்கும்... அதை காயபடுத்தாம பார்த்துக்கோ...

இன்ஜெக்சன் போட்டிருக்கேன்.. கொஞ்ச நேரத்துல காய்ச்சல் குறைஞ்சிடும்.... கண் முழித்தால் ஏதாவது கஞ்சி மாதிரி வச்சு கொடு.. இதில் இருக்கிற மாத்திரை எல்லாம் வாங்கி வந்து கொடு.. டேக் கேர் ஹெர்.. “ என்றார்..

“ஸ்யூர் டாக்டர்... அப்புறம் அம்மாவுக்கு இந்த விசயம்.....” என்று இழுத்தான்...

“ஹ்ம்ம் நான் முன்ன சொன்னது தான் இப்பவும்... நாங்கள் பார்க்கிற பேசன்ட்ஸை பத்தின எந்த தகவலும் வெளில சொல்ல மாட்டோம்...

உன் பொண்டாட்டி ரொம்ப சாஃப்ட்... இனிமேலாவது அவளை நல்லா பார்த்துக்கோ...God bless you both… “ என்றவாறு வெளியேறி சென்றார்....

நிகிலனும் அந்த மாத்திரைகளை வாங்கி வந்து வைத்து விட்டு அவள் எழுந்திருக்க காத்திருந்தான்...

மதியம் அவள் கண் விழித்ததும், அவளை கட்டாயபடுத்தி, ஏதோ கொஞ்சம் சாப்பிட வைத்து, பின் டாக்டர் சொன்ன மாத்திரைகளை கொடுத்து விட்டு மீண்டும் இரவு ஒரு தரம் சாப்பிட சொல்லிவிட்டு கிளம்பி சென்றான்...!
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top