• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதோடுதான் நான் பாடுவேன்-4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore
11. KNP Cover Image Latest.png
அத்தியாயம்-4

சஷ்டியை நோக்க சரவணா பவனார்

சிஷ்டருக் குதவும்செங்கதிர் வேலோன்...


என கந்த சஷ்டி கவசம் தன் அலைபேசியில் ஒலித்து கொண்டிருக்க, அதிகாலையில் அயர்ந்து உறங்கி கொண்டிருந்த மதுவந்தினி படுக்கையில் இருந்தே கையை நீட்டி தன் அலைபேசியை எடுத்தாள்...

அந்த ரிங்க்டோனில் இருந்தே அழைப்பது தன் அன்னை என புரிய

“இந்த அம்மா எப்பவும் நேர்ல வந்து தானே எழுப்புவங்க.. இப்ப என்ன புதுசா போன் பண்ணி எழுப்பறது?? “ என்று புன்னகைத்து கொண்டவள் தூக்க கலக்கத்திலயே அந்த அழைப்பை ஏற்றாள்...

“மது கண்ணா... எழுந்திருச்சிட்டியா ?? “ என்றார் சாரதா மறுமுனையில்...

“இப்பயே எதுக்குமா எழுப்பற?? .. “ என்று கேட்க வந்தவள் தன் இடையை சுற்றி இருந்த கையை அப்பொழுதுதான் கவனித்தாள்...

அதை கண்டதும் திக் என்றது அவளுக்கு.. இது யார் என் கட்டிலில் என்று அதிர்ந்தவள் மீதி ஒட்டியிருந்த தூக்கம் பறந்து விட தன் கண்ணை கசக்கி கொண்டு திரும்பி அவள் அருகில் பார்த்தாள்...

அங்கு அகிலா மதுவை அணைத்த படி நெருங்கி படுத்து உறங்கி கொண்டிருந்தாள்...

“யார் இந்த புது பொண்ணு?? “ என்று முதலில் முழித்தவள் பின் அவசரமாக தன் மூளையை எழுப்பி அவசரமாக தன் நினைவுகளில் தேட அப்பொழுதுதான் நினைவு வந்தது நேற்றைய சம்பவங்கள்..

தனக்கு திருமணம் ஆனதும் தான் இப்பொழுது அவள் புகுந்த விட்டில் இருப்பதும் நினைவு வர கூடவே அகிலாவும் யாரென்று புரிந்தது...

அதை தொடர்ந்து நேற்று இரவு நிக்ழ்ச்சியும் நினைவு வந்தது...

நீண்ட நேரம் நிகிலனுக்கு முயன்றும் அவனை பிடிக்க முடியாததால் வருத்தபட்ட சிவகாமி மதுவை அகிலாவின் அறையிலயே உறங்க சொன்னார்... அதை கேட்டதும் மதுவுக்கு நிம்மதியாக இருந்தது.. அப்படியே தன் பிரெண்ட் வேல்ஸ்க்கு நன்றி சொன்னாள்..

அகிலாவோ அதை விட துள்ளி குதித்தாள்... பின் இருவரும் அகிலாவின் அறைக்கு வர, அகிலா தனக்கு பேச ஒரு ஆள் கிடைத்த குஷியில் தான் முன்பு விட்ட கதையை மேலும் தொடர்ந்தாள்...

முதலில் ஆர்வமாக கேட்க ஆரம்பித்த மது அகிலா விடாமல் பேசவும் சிறிது நேரத்தில் அப்படியே சாய்ந்து உறங்கி இருந்தாள்... அது எல்லாம் இப்பொழுது நினைவு வந்தது...

தன் அழைப்பை ஏற்ற தன் மகள் ஒன்றும் பேசாமல் இருப்பதை கண்ட சாரதா

“ஏய்.. மது .. லைன்ல இருக்கியா ?? இல்ல மறுபடியும் படுத்து தூங்கிட்டியா?? “ என்று மறுமுனையில் கத்தினார்.. அவர் கத்தலில் தன் நினைவுகளில் இருந்து வெளியில் வந்தவள்

“ஆங்க் சொல்லு மா.... “ என்றாள் தன் முழு தூக்கமும் கலைந்து....அதற்குள் தன் குரலை மாற்றி கொண்டவர்

”மது கண்ணா... எப்படி இருக்க?? உனக்கு அங்க பிடிச்சிருக்கா?? உனக்கு எல்லாம் செட் ஆகியிருச்சா?? உன்னை நல்லா பார்த்துக்கறாங்களா?? “ என்று தன் கேள்விகளை அடுக்கினார்... அதை கேட்டு கடுப்பான மது

“ஏன்... எனக்கு பிடிக்கலைனா உடனே வந்து கூட்டிட்டு போய்டுவாங்களாக்கும்?? பிடிக்கலைனு சொன்னாலும் அப்படியே கொஞ்ச நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்க...அப்புறம் எல்லாம் பழகிடும்.. அப்படீனு தான் சொல்ல போறாங்க.. இதுக்கு எதுக்கு இப்படி ஒரு பில்டப் குவெஸ்டின்ஸ்.. “ என்று வழக்கம் போல மனதுக்குள் புலம்பியவள் தன் எரிச்சலை மறைத்து கொண்டு

“ஹ்ம்ம்ம்ம் ஒன்னும் பிரச்சனை இல்ல மா... அத்தை அப்புறம் அகிலா எல்லாரும் நல்லா பேசறாங்க... பழகறாங்க.. என்னை பத்தி கவலை படாதிங்க... ஆமாம் அப்பா எப்படி இருக்கார்.??. “ என்று தழுதழுத்தாள் கேட்கையிலயே..

பின்ன நொடிக்கொருதரம் அவள் அப்பா பின்னாடியே சுற்றி கொண்டிருப்பவள்.. ஒரு நாள் முழுவதும் இப்ப பிரிந்து இருந்து விட்டாளே...என்று ஆச்சர்யமாக இருந்தது

சாரதாவுக்கும் மதுவின் மனநிலை புரிந்தது.. செல்லமாக வளர்த்த பொண்ணை இப்படி உடனே பிரிய வேண்டி ஆயிருச்சே.. “ என்று வருந்தியவர் தன்னை சுதாரித்து கொண்டு

“ஹ்ம்ம்ம் அப்பாவும் உன் நினைவாகவே இருக்கார் போல மது.. நேற்று வீட்டிற்கு வந்ததும் அறைக்குள் போய்ட்டு கதவை மூடி கிட்டார்.. நேற்று இரவும் சரியா சாப்பிடலை.. நீ அவர் கிட்ட பேசறீயா?? “ என்றார் ஆர்வமுடன்..

மதுவுக்கு இருந்த கோபத்தில் அவள் பெற்றோர் இருவர் கூடவும் பேசக்கூடாது என்றுதான் இருந்தாள்... ஆனால் அவள் அப்பாவும் தன்னை போலவே அவளை பிரிந்து கஷ்டபடறார் என்று புரியவும் அவள் கோபம் எல்லாம் பறந்து போக

“சரி.. போனை அவர்கிட்ட கொடும்மா... “என்றாள்..

சாரதா தன் அலைபேசியை சண்முகம் இருந்த அறைக்கு சென்று அவரிடம் கொடுத்தார்..

சண்முகமும் முதல் முதலாக மகளை பிரிந்த கஷ்டத்தில் இருந்தவர் தன் மகளின் குரலை கேட்கவும் மகிழ்ச்சியாகி தழுதழுத்தார்.. அவரின் குரலை கேட்டதும் இதுவரை தன் பெற்றோர் மீது இருந்த கொஞ்சமேயான கோபம், எரிச்சல் எல்லாம் ஓடிவிட்டது மதுவிற்கு...

கடைசியில் அவள் தான் அவள் அப்பாவை தேற்றும் படி ஆனது.. ஒருவழியாக மது அவரை சமாதான படுத்த, அடுத்து சாரதா மீண்டும் அலைபேசியை வாங்கி,

“மது கண்ணா... மணி 6.30 ஆச்சு பார்... நீ எழுந்துக்கடா.... “ என்றார்...அதை கேட்டு அதிர்ந்த மது

“மா... 6.30 தான் ஆகுது...நான் எப்பவும் 7.30 க்கு தான எழுந்திருப்பேன்.. இப்ப எதுக்கு இப்பயே எழுந்திருக்க சொல்ற?? “ என்று சிணுங்கினாள்...

“மது ... இவ்வளவு நாளா நீ கல்யாணம் ஆகாம இருந்த...எப்ப வேணும்னாலும் எழுந்திருக்கலாம்.. ஆனால் இப்ப உனக்கு கல்யாணம் ஆகியிருச்சு... அதுவும் அந்த குடும்பத்துக்கு மூத்த மருமக வேற... நீதான அங்க எல்லாம் பொறுப்பா பார்த்துக்கணும்.... அதனால கொஞ்சம் சிரமம் பார்க்காம எழுந்து குளிச்சிட்டு உன் மாமியார்க்கு உதவி செய்டா..

அவர் வேண்டாம்னு சொன்னாலும் நீ அவர் பக்கத்துலயே இருந்து அவர்க்கு சின்ன சின்ன உதவி செய்.. அப்பதான் உன் மேல நல்ல அபிப்ராயம் வரும்... ப்ளீஸ் டா... “ என்று கொஞ்சி கெஞ்சி மதுவை எழ வைத்தார்...

மதுவும் அழைபேசியை வைத்து விட்டு தன் அன்னையை திட்டி கொண்டே குளியல் அறைக்குள் சென்று தன் அன்னை சொன்ன மாதிரி தலைக்கு குளித்து ஒரு புடவையை எடுத்து அணிந்து கொண்டு வெளியில் வர, அங்கு அகிலா இன்னும் கவிழ்ந்து தூங்கி கொண்டிருந்தாள்..

அதை கண்டதும் மதுவுக்கு பொறாமையாக இருந்தது...

“என்னை விட ஒரு 4 இல்ல 5 வயது சின்னவளா இருப்பா... இவல்லாம் எப்படி நிம்மதியா தூங்கறா.. என்னை மட்டும் இப்படி கொண்டு வந்தி தள்ளி விட்டுட்டாங்களே...” என்று புலம்பியவாறு கீழ இறங்கி சென்றாள்...

அங்கு சிவகாமியும் சீக்கிரம் எழுந்து சமையல் அறையில் எதையோ உருட்டி கொண்டிருக்க, அவர் அருகில் சென்றவள்

“குட்மார்னிங் அத்தை.. “ என்று புன்னகைத்தாள்...

காலையிலயே குளித்து முடித்து பளிரென்ற புன்னகையுடன் நிக்கும் தன் மருமகளை கண்டதும் அவருக்கு கண் நிறைந்து நின்றது...

“குட்மார்னிங் மருமகளே... என்ன அதுக்குள்ள எழிந்திருச்சிட்ட.?? எப்படியும் அந்த அகிலா வாலு தன் கதை எல்லாம் சொல்லி உன் காதுல இரத்தம் வரவச்சு லேட்டா தான் தூங்க விட்டிருப்பா.. நீ எப்படியும் எழுந்திருக்க மணி 10 ஆகும் னு நினைச்சேன்.. இவ்வளவு சீக்கிரம் எழுந்திரிச்சுட்ட...” என்றவர் அவள் காது அருகில் வந்து

“என்ன??.. உனக்கு கல்யாணம் ஆகியிருச்சு.. அதுவும் மூத்த மருமக வேற.. இவ்வளவு நேரம் தூங்க கூடாது.. எழுந்து போய் உன் மாமியார்க்கு ஹெல்ப் பண்ணுனு உங்க அம்மா காலைலயே எழுப்பி விட்டுட்டாளா?? “என்று கண் சிமிட்டி சிரித்தார்....

நடந்ததை அப்படியே அவர் சொல்ல,

“ஆமானு உண்மைய சொல்லவா இல்லைனு பொய் சொல்வதா?? “ என்று புரியாமல் குழம்பி முழித்து கொண்டு நின்றாள் மது... அவளின் முழியை கண்டவர்

“என்ன மருமகளே.. இந்த அத்தை எப்படி கரெக்டா கண்டு பிடிச்சுட்டாளே னு யோசிச்சு கிட்டிருக்கியா?? ஹா ஹா ஹா நானும் இதை எல்லாம் தாண்டி வந்தவ தான...

நீயாவது 21 முடியற வயசுல வாழ்க்க பட்டு வந்திருக்க.. என்னை எல்லாம் 17 வயசுலயே மூத்த மருமகளாக்கி இந்த சம்சார கடல்ல தள்ளி விட்டுட்டாங்க தெரியுமா??..” என்றார் பாவமாக...

உடனே சமாளித்தவர்

“நீ உங்க அம்மா சொல்றதையெல்லாம் கண்டுக்காத... இது உன் வீடு.. நீ வைக்கிறது தான் சட்டம்.. அதனால உனக்கு எவ்வளவு நேரம் தூங்கணும்னு தோணுதோ அவ்வளவு நேரம் ப்ரியா தூங்கு.. “ என்று கண்ணடித்தார்..

அவரின் ஜாலியான கலகலப்பான பேச்சை கேட்க மதுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.. “இப்படி கூட மாமியார் இருப்பாங்களா?? என்று.. ஏன் அவள் அம்மா சாரதாவே இவ்வளவு ஜாலியா பேச மாட்டார்... “ என்று மது யோசித்து கொண்டிருக்க சிவகாமியே தொடர்ந்தார்...

“காலையில அதுவும் ஞாயிற்றுக் கிழமை காலையில 9 மணி வரை தூங்கற சுகம் இருக்கே... கோடி கொடுத்தாலும் கிடைக்காது அந்த சுகம்...

ஹ்ம்ம்ம்ம்ம்ம் எனக்கு தான் அந்த சுகத்தை அனுபவிக்க கொடுத்து வைக்கலை.. “ என்று பெருமூச்சு விட்டார்.... அதை கேட்ட மது குழம்பியவாறு

“ஏன் அத்தை.. நீங்களும் தூங்கலாம் இல்ல... “ என்றாள்...

“ஹ்ம்ம்ம் எனக்கும் தூங்க ஆசைதான்.. ஆனால் இந்த பெரியவன் இருக்கானே ... அதான் உன் புருஷன்... அவனுக்கு ஞாயிற்று கிழமை, திங்கள் கிழமை னு தனியா லாம் இல்லை.. எல்லா நாளும் ஒரே நாள் தான்.. எப்பவும் போல 5.30 க்கே எழுந்திருச்சு லொங்கு லொங்குனு ஒலிம்பிக்ல போய் மெடல் வாங்கறவன் மாதிரி ஓடுவான்...ஜாக்கிங் ஆம்...

6.30 இல்ல 7 மணிக்கு திரும்பி வந்தானா அவனுக்கு இந்த பாடாவதி சத்துமாவு கஞ்சி ரெடியா இருக்கணும்...இதை எப்படித்தான் தினமும் குடிக்கிறானோ??...

இந்த வீணாப்போன கஞ்சிய ரெடி பண்றதுக்காகவே நான் அலாரம் வச்சு சீக்கிரம் எழுந்திருக்கணும்... அப்புறம் இதை ரெடி பண்ணி அந்த ஹால் ல இருக்கிற டேபில்ல வச்சுட்டா அவ்வளவு தான் காலையில் வேலை..

மத்த இரண்டு வாலுங்களும் எழுந்து வர எப்படியும் 10 மணி ஆகும்.. ஆனா எனக்கு மறுபடியும் தூக்கம் வராது.. எதயாவது உருட்டிகிட்டு இருப்பேன்..

இதுக்குனே இந்த பெரியவனுக்கு கல்யாணத்தை பண்ணி அடுத்த நாளே தனிக்குடித்தனம் அனுப்பி வச்சுட்டு நிம்மதியா சன்டே தூங்கலாம் னு நினைச்சிருந்தேன்...

என் திட்டம் தெரிந்தோ எனனவோ இந்த பய கல்யாணமே வேண்டாம்னு முறுக்கிகிட்டு இருந்தான்....

எப்படியோ அவனை உன்கிட்ட கொண்டு வந்து மாட்ட வச்சாச்சு... இனிமேல் நீயாச்சு அவனாச்சு.. எப்படியோ அவன்கிட்ட போராடு... “என்று சிவகாமி சிரிக்க, அதை கேட்ட மதுவின் முகமோ வெளிறியது...

“இவர் சொல்ற மாதிரி தங்களை தனியா அனுப்பி விடுவாங்களோ? “ என்று அரண்டுபோனாள்...

“இங்கயாவது தன் மாமியார் அகிலா னு கலகலப்பா இருக்கு... ஐயோ...அந்த சிடுமூஞ்சி கூட போய் எப்படி தனியா இருப்பது?? “ என்று பயந்தாள்.. அவளின் வெளிறிய முகத்தை கண்ட சிவகாமிக்கு அவளின் மனம் புரிந்துவிட,

“அடடா.. அதுக்கு எதுக்கு நீ பயந்துக்கற மது மா.. அப்படி ஒன்னும் இந்த அத்தை உன்னை உடனே தனியா அனுப்பிட மாட்டேன்... அதுவும் இப்படி பால் வடியும் முகத்தோட மஹாலட்சுமி மாதிரி சிரிச்சுகிட்டிருக்கிற உன் முகத்தை பார்க்காமல் நான் எப்படி உன்னை தனியா அனுப்பறதாம்??

என் செல்ல மருமகளுக்காக, என் சன்டே தூங்கற ஆசைய விட்டு கொடுத்திடறேன்.. “ என்று அவளின் கன்னம் வருடி சிரித்தார் சிவகாமி...

மதுவுக்கும் அப்பதான் நிம்மதியாக இருந்தது...

“தேங்க்ஸ் அத்தை..” என்றவாறு அவரை பார்த்து புன்னகைத்தாள்.. அதற்குள் ஏதோ நினைவு வந்தவராக

“அடடா... நான் பாட்டுக்கு உன்கிட்ட கதை அடிச்சுகிட்டே அந்த அத்தை சொன்னதை மறந்துட்டேனே... நீ எழுந்ததும் உன்னை விளக்கேற்றி வைத்து பூஜை பண்ண சொன்னார்... சரி வா... நாம போய் அந்த வேலனை பார்த்துட்டு வந்திடலாம்.. “என்று சிரித்தபடி மதுவை பூஜை அறைக்கு அழைத்து சென்று விளக்கேற்றி வைத்து அந்த வடிவேலனை வணங்கினர் பெண்கள் இருவரும்...

நேற்று இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்பிய நிகிலன் வழக்கம் போல தன்னிடம் இருக்கும் மற்றொரு சாவியை வைத்து கதவை திறந்து கொண்டு தன் அறைக்கு சென்று பொத்தென்று விழுந்து உடனே உறங்கி போனான்...

மறுநாள் காலையில் கண் விழித்தவன் வழக்கம் போல ஜாகிங் சென்றான்.. திரும்பி வந்தவன் ஹாலில் அமர்ந்து அன்றைய செய்திதாள்களை புரட்டி கொண்டிருந்தான்...

“இந்நேரம் அம்மா நான் அருந்தும் கஞ்சியை கொண்டு வந்திருப்பாங்களே.. என்ன ஆச்சு இன்னும் காணோம்..?? ” என்று யோசித்தவன்

“அம்மா.. “ என்று குரல் கொடுத்தான் சமையல் அறையை பார்த்து..

எந்த பதிலும் வராததால் எழுந்து சமையல் அறைக்கு சென்றான்....

அங்கு மது நின்று கொண்டு காய்களை நறுக்கி கொண்டிருந்தாள்...

குளித்து முடித்து தன் நீண்ட கூந்தலை விரித்து விட்டு நடுவில் முடிந்திருந்தாள்.. அவள் நிறத்துக்கு எடுப்பான புடவையை அணிந்தும் கலுத்தில் மின்னிய மஞ்சள் வாசம் மறையாத தாலிச்சரடும் அவனை ஈர்த்திருக்க வேண்டியது..

அறையின் வாசலில் நின்றவனின் பார்வை அவள் முகத்தில் படிந்தது...

மழையில் நனைந்த புத்தம் புது ரோஜாவை போல, ப்ரெஸ்ஸாக இருந்தாள் மது.

அழகிய மருண்ட விழிகளும், குண்டு கன்னங்களும், எடுப்பான கூரான நாசியும் என அவன் பார்வை அவள் முகத்தில் படிந்து பின் அதற்கு கீழ தாவிய அவனின் பார்வை அவளின் உதட்டில் படிந்தது...

திரண்டிருந்த அவளின் செவ்விதழ்கள் என்று அவன் பார்வை, சில விநாடிகள் தன்னவளை ரசித்து விட்டு, அடுத்த விநாடி தன் புதுமனைவியை அள்ளி அணைத்திருப்பான் வேறு ஒரு சாதாரண கணவனாக இருந்திருந்தால்...

நிகிலனோ ஒரு நொடி அவள் முகத்தை பார்த்தவன், பின் முகம் கடுக்க, அவளை பார்த்து

‘ஏய்.. இங்க என்ன பண்ற ?? “ என்று கர்ஜித்தான்...

திடீரென்று அருகில் கேட்ட குரலால் பயந்து நடுங்கியவள் அதிர்ச்சியில் தன் கையில் வைத்திருந்த கத்தியை கீழ தவற விட்டாள்...

அது நேராக அவள் பாதத்தை நோக்கி பயணிக்கவும் இதை கவனித்தவன் பாய்ந்து அந்த கத்தியை பிடித்தான்

“அறிவிருக்கா உனக்கு??... உன்னை எல்லாம் யார் இந்த வேலையை செய்ய சொன்னது.??.

ஓ... வீட்டு மருமகள் ன உடனே இந்த வீட்டையே உன் கைக்குள்ள போட்டுக்கலாம்னு நினைக்கிறியா... அதான் உன் திட்டத்தை அடுப்படியில் இருந்தே ஆரம்பிக்கறியா?? .. முதலில் சமையலறையை பிடிக்கிறது…அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா இந்த வீடு மொத்தத்தயும் உன் கன்ட்ரோல் ல வச்சுகலாம்னு திட்டமா??...

அது ஒரு நாளும் நடக்காது... இந்த நிகிலன் நடக்க விடமாட்டான்..

கொஞ்சம் கூட புது இடம் னு நினைப்பு இல்லாம நீ பாட்டுக்கு இந்த வீட்டுக்கு சொந்தக்காரி மாதிரி சட்டமா வந்து கிச்சனில் நிக்கற...

ஒரு கத்தியை கூட சரியா பிடிக்க தெரியலை.. நீ எல்லாம் சமையல் பண்ண வந்திட்ட??..” என்று படபடவென்று பொரிந்து தள்ளினான் நிகிலன்...!

மதுவோ பேயறைந்த மாதிரி அதிர்ச்சியில் உறைந்து முழித்து கொண்டு நின்றாள்...

நேற்று தனக்கு தாலி கட்டி கணவனாகியவனின் முகத்தை இதுவரை நிமிர்ந்து பார்த்ததில்லை பெண்ணவள்...!

தாலி கட்டும்பொழுதும் சரி...அதன் பிறகு காரில் ஒன்றாக அவன் அருகில் அமர்ந்து பயணித்த பிறகும் சரி. புகுந்த வீட்டிற்கு வந்ததும், சடங்கு சம்பிரதாயம் என பெரியவர்கள் எதை எதையோ செய்ய சொல்ல, அவளும் சாவி கொடுத்த பொம்மை மாதிரி செய்து வைத்தால் தான்.

ஆனால் மறந்தும் தன் கணவன் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவள் தலை எப்பொழுதும் தரையை பார்த்தபடிதான் இருந்தது.

இப்பொழுது முதல் முதலாக தன் கணவன் முகத்தை நேரில் காண , அவனோ முகத்தில் கோபம் கொப்புளிக்க, உடல் விரைத்து அவளை பார்த்து முறைத்து கொண்டிருந்தான்...

மதுவுக்கு அவனை பார்க்கையில் தன் எதிரியிடம் பாய தயாராக இருக்கும் சீறும் புலியை போலத்தான் இருந்தது...

அந்த புலியிடம் மாட்டிக்கொண்ட புள்ளிமானாய் ஒரு நொடி அவள் நெஞ்சம் பதறியது.

அவனின் இடுங்கிய பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையை குனிந்து கொண்டவள்

“அத்தைக்கு உதவி செய்யலாம் னு இந்த காயை நறுக்கியதுக்கு இவன் ஏன் என்னென்னவோ பேசறான்... இதில் அவன் சொன்னது பாதி புரியலயே “ என்று எண்ணியவாறு மீண்டும் முழித்து கொண்டிருந்தாள்..

அதுக்கும் திட்டினான்..

“என்ன ஒன்னும் தெரியாத மாதிரி முழிக்கிற??.. ஓ.. உன் திட்டம் தெரிஞ்சிடுச்சுனு முழிக்கிறயா??? இங்க பார்... இந்த வீட்ல நீ எதயும் தொடக்கூடாது... என் கண் முன்னாடியே வரக்கூடாது.. புரிஞ்சுதா?? “ என்று மீண்டும் திட்டி கொண்டிருந்தான்..

அதற்குள் அகிலாவை எழுப்ப சென்ற சிவகாமி கீழ தன் மகனின் சத்தம் கேட்டு

“ஐயோ!! மது மட்டும் தனியா இருக்காளே... இந்த பய அவளைத்தான் வறுத்து எடுக்கிறான் போல “ என்று வேகமாக கீழ இறங்கி வந்தார்...

அவர் வரவும் அவன் கிச்சனை விட்டு வெளியில் வரவும் சரியாக இருந்தது..தன் மகனிடம் எதுவும் பேசாமல் அவனை முறைத்தவாறு உள்ளே சென்றார் சிவகாமி...

அங்கு மது லேசான நடுக்கத்துடன் இன்னுமாய் முழித்து கொண்டு நிற்கவும் அவர் யூகித்தது சரிதான் என தோன்றவும் அவள் அருகில் சென்றவர்

“நீ ஒன்னும் கண்டுக்காத மது மா.. நீ உன் வேலைய பார்.. அவன் அப்படிதான்... அப்பப்ப யாரையாவது கடிச்சுகிட்டே இருப்பான்.. ”என்று தன் மருமகளை சமாதானபடுத்தி தன் வேலையை தொடர்ந்தார் சிவகாமி...

கோபமாக வெளியில் வந்த நிகிலன் ஷோபாவிற்கு சென்று அமர்ந்ததும்

“அம்மா.. .எனக்கு கஞ்சி கொடு... “ என்று கத்தினான்....

சிவகாமிக்கு அப்பொழுதுதான் நினைவு வந்தது இன்று அவனுக்கு தேவையானதை எடுத்து வைக்கவில்லை என்று..

பின் அவர் தயாரித்திருந்த அந்த சத்துமாவு கஞ்சியை ஒரு கப்பில் ஊற்றி அதை ஒரு ட்ரேயில் வைத்து, மதுவை பார்த்து,

“மது.. இதை கொண்டு போய் அவன் கிட்ட கொடு... ” என்றார்..

அதை கேட்டதும் ஜெர்க்காகி இரண்டு அடி பின்னால் தள்ளி நின்றாள் மது...

“ஐயோ!! அத்தை.. நானா??? நான் எப்படி?? ... எனக்கு பயமா இருக்கு.. நீங்களே கொடுத்திடுங்களேன்.. “ என்றாள் பயந்தவாறு

“பயப்படாத மது மா.. ஒன்னும் சொல்ல மாட்டான்.. அதில்லாமல் இனிமேல் நீதான் அவனுக்கு எல்லாம் செய்யனும்.. கொண்டு போய் கொடு.. “ என்று அவளை முன்னால் தள்ளினார்..

வேறு வழி இல்லாமல் அந்த ட்ரேயை வாங்கிகொண்டு பயந்த படி அவன் அருகில் சென்றாள் மது...

பேப்பரை படித்து கொண்டிருந்தவன் அருகில் சென்றவள் எப்படி அழைப்பது என்று தெரியாமல் அவன் முன்னே ட்ரேயை நீட்டினாள்..

அவன் கவனிக்காததால் நீட்டி கொண்டே இருந்தாள் தலையை குனிந்தவாறு அவனை நிமிர்ந்தும் பார்க்காமல்..

எதேச்சையாக நிமிர்ந்தவன் தன் அருகில் நின்று கொண்டிருந்தவளை காண, அதே நேரம் மதுவும் இவன் ஏன் இன்னும் எடுக்கலை என்று அவளும் தலையை நிமிர்த்தி அவனை பார்த்தாள்.. இருவரின் கண்களும் ஒன்றோடு ஒன்று கலந்தன சில நொடிகள்..

அவளின் மருண்ட விழியின் ஆழத்தில் தொலைய ஆரம்பித்து இருந்திருப்பர் மற்றவராக இருந்திருந்தால்... நிகிலனோ அவளை நேருக்கு நேராக பார்த்து முறைத்தான்.. அவன் பார்வையில் இருந்த கடுமையை கண்டு அவள் கைகள் நடுங்க ஆரம்பித்தன...

“ஏய்... உன்னை யார் இத கொண்டு வரச்சொன்னது?? ... நான் தான் சொன்னேன் இல்லை.. இந்த வீட்ல நீ எதையும் தொடக்கூடாது.. எதையும் செய்ய கூடாது என்று.. இப்படி எல்லாம் கொடுத்து என்னை மயக்கலாம் என்று திட்டமா??... அது மாதிரி மயங்கிற ஆள் நான் இல்லை.. இதை எடுத்துகிட்டு போ.. போய் அம்மாவை வரச்சொல்...”
என்று உருமினான்...

அவளும் விட்டால் போதும் என்று ஓடி விட்டாள் சமையல் அறைக்கு...உள்ளே சென்றவள் சிவகாமியிடம் சென்று

“அத்தை... நான் தான் சொன்னேன் இல்லை.. என்னை திட்டுவார்னு... இப்ப சந்தோஷமா உங்களுக்கு?? ... இந்தாங்க நீங்களே கொண்டு போய் கொடுங்க உங்க அரும புத்திரனுக்கு... “ என்று அவர் கையில் கப்பை வைத்தாள்...

சிவகாமியும் “எப்பதான் இவன் திருந்துவானோ??? “என்று முனகியவாறு கப்பை எடுத்து சென்று அவன் முன்னே இருந்த டீ பாயில் டங் என்று வைத்தார்.. பின் அவனிடம் எதுவும் பேசாமல் திரும்பி நடந்தார் அவனை முறைத்தவாறு..

“என்ன ஆச்சு இந்த அம்மாக்கு??.. காலையில் இருந்தே முறைச்சு கிட்டே இருக்காங்களே..

ஒ நான் நேற்று இரவு வீட்டுக்கு வராததுதான் இவ்வளவு கோபமா ?? இப்படியே இருக்கட்டும்... “ என்று எண்ணிக்கொண்டவன், பின் அந்த கஞ்சியை குடித்து விட்டு தன் அறைக்கு சென்றான்..

பின் மீதி இருந்த உடற்பயிற்சிகளையும் முடித்து வெளியில் செல்ல கிளம்பி கீழ வந்தான்..

மூன்று பெண்களும் டைனிங் டேபிலில் இருந்தனர்...

அகிலா எதையோ சொல்ல, மற்றவர்கள் சிரித்து கொண்டிருந்தனர்.. மதுவும் தன்னை மறந்து வாய் விட்டு சிரித்து வைத்தாள்.

அவளின் அந்த மலர்ந்த சிரிப்பை கண்டதும் அவன் உள்ளே கோபம் பொங்கியது...வேகமாக அங்கு சென்றவன்

“காலையிலயே என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு?? ஏய் அகிலா.. சீக்கிரம் கொட்டிகிட்டு போய் படிக்கிற வேலையை பார் .. “என்று தங்கையை மிரட்டினான்..

இவன் வருவதை கண்ட உடன் மது தலையை கீழ குனிந்து கொண்டாள்... அகிலாவை திட்டியவன் டைனிங் டேபிலில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தான்..

சிவகாமி அவனுக்கு வேண்டியதை எடுத்து வைத்தார் அவன் முகத்தை கூட பாராமல்..

மற்ற இரண்டு பெண்களும் சத்தம் இல்லாமல் குனிந்து தங்கள் தட்டை மற்றும் பார்த்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்..

தன் அன்னை இன்னும் தன்னிடம் பாராமுகமாக இருப்பதை கண்டு

“என்ன மா??.. மௌன விரதமா என்னிடம் மட்டும் ?? ” என்றான் அவரை பார்த்து முறைத்தவாறு..

சிவகாமியோ இவன் பக்கம் திரும்ப வில்லை...

முன்பெல்லாம் எவ்வளவுதான் சண்டைபோட்டாலும் அடுத்த நிமிடம் அவனிடம் பேசி விடுவார்... இதுதான் முதல் முறை தன் அன்னை தன்னிடம் முகத்தை திருப்பி வைத்திருப்பது... என்று நினைத்தவன் அப்பொழுதுதான் நேற்று வேறு அத்தனை பேர் முன்னாடியும் அவரிடம் கத்தியதும் நினைவு வந்தது..

இப்பொழுது அவனுக்கே அது கஷ்டமாக இருக்க,

“சாரி மா.. நேற்று ஏதோ டென்சன்ல அப்படி கத்திட்டேன்... அதோடு நேற்று இரவு வேலை இருந்தது.. அதான் போன் ஆப் பண்ணி வச்சுட்டேன்... “ என்று விளக்கம் கொடுத்தான்....

தன் மகன் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுவதே ஆச்சர்யம் என நினைத்தவர் அதற்கு மேல் தன் கோபத்தை இழுத்து பிடித்து வைக்க முடியாமல்

“சரிடா.. இன்னைக்காவது நேரத்தோட வீட்டுக்கு வருவியா?? “ என்றார் அதுவரை அமைதியாக இருந்தவர்...

“ஹ்ம்ம்ம் இன்றும் வேலை இருக்கு மா.. முடிஞ்சா சீக்கிரம் வர்ரேன்.. ” என்றான் தன்மையாக

“டேய் பெரியவா... உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. உனக்காக வீட்ல ஒருத்தி காத்துகிட்டிருக்கா.. நீ இன்னும் வேலை வேலை னு சுத்திகிட்டிருந்தா எப்படி?? .. அதுவும் இன்று ஞாயிற்றுகிழமை.. இன்னைக்கு கூடவா உனக்கு லீவ் இல்லை?? ” என்று பொரிந்து தள்ளினார் சிவகாமி...

இப்படி அவன் இறங்கி வந்து, தன்மையாக பேசும் இந்த சந்தர்ப்பத்தை விட்டுவிடக்கூடாது என்று அவரின் மனத்தாங்கலை கொட்டிவிட,

அதுவரை அவரின் பாராமுகத்தை கண்டு கொஞ்சம் இறங்கி வந்தவன், சிவகாமி அவன் திருமணம், மனைவி என்று நியாபகாடுத்திவிட, மீண்டும் கிடுகிடுவென்று மலை ஏற ஆரம்பித்தான் கோபத்தில்

“மா.... இதுக்கு தான் எனக்கு கல்யாணம் வேண்டாம்னு தலையால அடிச்சுகிட்டேன்.. என்னால நேரத்துக்கு எல்லாம் வீட்டிற்கு வர முடியாது.. மத்தவங்க மாதிரி பொண்டாட்டி முந்தானையை பிடிச்சுகிட்டி அவ பின்னாடி எல்லாம் சுத்த முடியாது....

இந்த மாதிரி கமிட்மென்ட் எதுவும் இருக்க கூடாது னு தான் நான் இதுவரை கல்யாணம் வேண்டாம்னு மறுத்துக்கிட்டிருந்தேன் ...

எல்லாம் அந்த மகிழன் நாயால வந்தது... கடைசி நேரத்துல அவன் என்னை இப்படி மாட்டி விட்டுட்டு ஓடிட்டானே... அவன் மட்டும் என் கையில கிடைச்சான்...?? “ என்று பல்லை கடித்தான் நிகிலன்..

பின் தன் அன்னையை பார்த்து

“பாரு மா .. இந்த கல்யாணமே நீ கெஞ்சி கேட்டதற்காக தான்.. அப்போதைக்கு வேற வழி இல்லாமல் இந்த பிசாசு கழுத்துல தாலி கட்டினேன்.. அதுக்காக எல்லாம் என்னால மாற முடியாது.. நான் எப்பவும் போலதான் இருப்பேன்..

எப்ப வேணும்னாலும் வருவேன்... எப்ப வேணும்னாலும் போவேன்.. என்னை கட்டுபடுத்த நினைச்சீங்க.. நேற்று சொன்னது தான் இன்றும் அந்த ஓடிப்போனவன் மாதிரி நானும் எங்கயாவது போய்டுவேன்.. நினைவு இருக்கட்டும்... ” என்று கத்தியவன் சாப்பாட்டில் பாதியில் எழுந்து கை கழுவிவிட்டு வேகமாக வெளியேறி சென்றான்...

அவன் கத்தியதை கேட்டதும் சிவகாமியின் கண்கள் கலங்கியது..

மதுவோ உறைந்து போய் அமர்ந்து இருந்தாள்..

ஒரே பிள்ளையாக பிறந்ததால் அவள் வீட்டில் அவளை எதற்கும் கடிந்து கொண்டதில்லை...அதிர்ந்து திட்டியதில்லை... அவர்கள் பெற்றோரும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து அன்போடு இருப்பர்.. அவள் வீட்டில் இந்த மாதிரி சத்தம் எல்லாம் வந்ததே இல்லை....

சண்முகமும் சாரதாவும் யாரிடமும் அதிர்ந்து கூட பேச மாட்டார்கள்.. அதுவும் மதுவிடம் எப்பவும் கொஞ்சல் தான்...இந்த மாதிரி யாரும் கத்தி அவள் பார்த்ததில்லை

முதல் முறையாக தன் அம்மாவிடமே தன் கணவனாகியவன் கத்துவதை கண்டு பயந்து நடுங்கினாள் மதுப்பொண்ணு...!

அகிலாவுக்கு இதெல்லாம் பழகியது என்பதால் அவள் பாட்டுக்கு அவள் வேலையான சாப்பிடறதில் மும்முரமாக இருந்தாள்... .

பத்தாதற்கு

“அம்மா.. இந்த சட்னி சூப்பர்.. இன்னும் கொஞ்சம் வையேன்... ” என்றாள் சிவகாமியை பார்த்து..

அதற்குள் தன்னை சமாளித்து கொண்ட சிவகாமி,

“ஏய்.. சாப்பாட்டு ராமி. உனக்கு மட்டும் எப்படி டி சட்னி சீக்கிரம் சீக்கிரம் காலியாகும்?? இட்லிக்கு சட்னியா ?? இல்லை சட்னிக்கு இட்லியை சாப்பிடறியா?? ” என்று சிரித்து கொண்டே சட்னியை எடுத்து அவள் தட்டில் வைத்தார்...

பிறகு தான் மதுவை பார்த்தார்.. அவள் இன்னும் முகம் வெளிறி முழித்து கொண்டு இருப்பதை கண்டு,

“என்ன மருமகளே!! சரியான காட்டு மிராண்டி கூட்டமா இருக்கே னு பார்க்கறியா...?? போக போக உனக்கும் பழகிடும்....நீ சாப்பிடு டா... “ என்று சிரித்தார்..

“ஆங்... இதெல்லாம் அரசியல் ல சாதாரணம் இல்ல மம்மி “ என்று அகிலாவும் சிவகாமியை பார்த்து கண்ணடித்தாள்....

“அது மட்டும் இல்ல அண்ணி... இப்ப பார்த்திங்களே.. இது வெறும் ட்ரெய்லர் மட்டும் தான்.. இன்னும் மெயின் பிச்சர் பாத்தீங்க... அவ்வளவுதான் ஆடி போய்டுவீங்க...

இப்பவே உங்களுக்கு கண்ணை கட்டுதுனு நினைக்கிறேன்..

அம்மா அண்ணிக்கு இன்னொரு இட்லி சேர்த்து வை மா... இத எல்லாம் தாங்க அவங்க தயாராகனும் இல்லை “என்று மீண்டும் கண்ணடித்தாள் அகிலா..

“ஏய் வாலு.. சும்மா இரு.. மருமகளை பய முறுத்தாத.. அவளே ஏற்கனவே பயந்து நடுங்கிகிட்டு இருக்கா...காலைலயே இன்னொரு குட்டி ட்ரெய்லர் பார்த்துட்டா... இது இரண்டாவது முறை... “ என்று சிரித்தார்....

“என்னது?? .. ஏற்கனவே அண்ணி என்ன விட்டுட்டு ட்ரெய்லர் பார்த்துட்டாங்களா?? இது எப்ப நடந்தது ?? “ என்றாள் ஆச்சர்யமாக

“ஹ்ம்ம்ம்ம் நீ குப்புற கவிழ்ந்து அடிச்சு தூங்கின இல்ல.. அப்பதான்... உன்னை எழுப்ப நான் வந்தப்ப தான் பாவம் உன் அண்ணி மாட்டிகிட்டா அவன்கிட்ட….

நீ கவலைபடாத மது மா ... அத்தை நான் இருக்கேன் இல்லை.. நாம ரெண்டு பேரும் சேர்ந்து அவனை கவனிச்சுக்கலாம்.. “ என்று சிரித்தார் சிவகாமி..

“அம்மா... என்னையும் சேர்த்துக்கம்மா... நாம இப்ப மூனுபேர்.. அண்ணா ஒருத்தன் மட்டும் தான்.. சமாளிச்சிடலாம் இல்லை?? “ என்று சிரித்தாள் அகிலா....

அவர்களின் கலகலப்பான பேச்சால் ஓரளவுக்கு நார்மலானாள் மது... பின் அவளும் அவர்கள் பேசுவதில் ஒன்றி சிரிக்க ஆரம்பித்தாள்...

அன்று இரவும் நிகிலன் வீட்டிற்கு வந்திருக்கவில்லை..

அவன் எப்பொழுதும் மதியம் வீட்டிற்கு சாப்பிட வருவதில்லை என்பதால், காலையில் கத்திவிட்டு சென்றவனை சிவகாமியும் கண்டு கொள்ளவில்லை...காலை சாப்பிட்டு முடித்ததும் சிறிது நேரம் அரட்டை அடித்த அகிலா தான் படிக்க வேண்டியது நினைவு வர, மனமே இல்லாமல் தன் அறைக்கு சென்றாள்...

மது சிவாகாமியுடன் இணைந்து மதிய சமையலுக்கு தனக்கு தெரிந்த உதவியை செய்தாள்..

சிவகாமிக்கும் தன் மருமகளின் மென்மையான குணமும், புது இடம் என்று ஒதுங்கி இருக்காமல் தன்னுடன் கூடவே இருக்க நினைக்கும் தன் மருமகளை ரொம்ப பிடித்து விட ,அவளிடம் கலகலப்பாக கதை அடித்து கொண்டே தன் வேலையை தொடர்ந்தார்....

மதுவுக்கும் அவரின் அந்த இயல்பான , கலகலப்பான பேச்சு பிடித்து விட, அகிலா மாதிரியே சிவகாமியிடமும் நன்றாக ஒட்டி கொண்டாள்...

இரவு மூன்று பெண்களும் அமர்ந்து கதை அடித்து கொண்டே இரவு உணவையும் உண்டு முடித்து அகிலா தன் அறைக்கு சென்று விட, சிவகாமி தன் மகனை இன்னும் காணாமல் அவன் எண்ணிற்கு அழைத்தார்... அதுவோ அணைக்கப்பட்டிருந்தது...

“சே... இந்த பய வேணும்னே தான் ஸ்விட்ச் ஆப் பண்ணி வச்சிருப்பான்...ஒரு அவசரம்னா கூட எப்படி அவனை தொடர்பு கொள்றதாம்?? “ என்று திட்டிகொண்டே அவன் ஆபிஸ் பிரெண்ட் கௌதம் க்கு போன் பண்ணினார்...

அவரின் அழைப்பை அட்டென்ட் பண்ணியவன்..

“சொல்லுங்க ஆன்ட்டி... எப்படி இருக்கீங்க??... சாரி ஆன்ட்டி நேற்று வைப் சைடு ஒரு முக்கியமான மேரேஜ் இருந்ததால மகிழன் கல்யாணத்துக்கு வர முடியலை... “என்று மூச்சு விடாமல் பேசி முடித்தான் கௌதம்...

“டேய்... அவசரத்துல பொறந்தவனே...கொஞ்சம் மூச்சு வாங்கிக்க... ஹ்ம்ம் மேரேஜ் எல்லாம் நல்லாதான் நடந்தது...ஆமா .. உன் பிரெண்ட் உன்கிட்ட எதுவும் சொல்லலையா?? “ என்றார் சந்தேகமாக

“இல்லையே ஆன்ட்டி.. என்னாச்சு?? “ என்றான் கௌதம் யோசனையாக

“ஹ்ம்ம்ம்ம் அத விடு டா .. சரி... உங்க ஆபிஸ்ல ரொம்ப வேலை அதிகமோ?? “

“அதெல்லாம் ஒன்னும் இல்லை ஆன்ட்டி.. நானே சும்மா தான் உட்கார்ந்துட்டு ஈ ஓட்டிகிட்டு இருந்தேன்.. அப்புறம் வசந்தி தனியா இருப்பானு வீட்டுக்கு வந்திட்டேன்.. எதுக்கு கேட்கறீங்க??...”என்றான் சந்தேகமாக

“ஹ்ம்ம்ம் நீ பொழைக்க தெரிஞ்சவன்... கலயாணம் ஆன உடனே பொண்டாட்டி பின்னாடியே சுத்தற... உன் கூட ஒருத்தன் இருக்கானே.. அவனுக்கும் ஏதாவது டிப்ஸ் தர வேண்டியது தானா..?? “

“என் கூட இருக்கானா?? .... யாரை சொல்றீங்க ஆன்ட்டி?? “ என்று மீண்டும் யோசித்தவன்

“ஓ... நம்ம மச்சானையா சொல்றீங்க ஆன்ட்டி... வேற வினையே வேண்டாம்...நான் ஏதாவது சொன்னா அவன் எனக்கு திருப்பி அடிக்கற லக்சர்ல நான் என் பொண்டாட்டிய அப்பயே டைவர்ஸ் பண்ணிட்டு அவன மாதிரியே சாமியாரா சுத்த வேண்டியதுதான்.. “ என்று சிரித்தான் கௌதம்..

“ஹ்ம்ம்ம் நீ விவரமா தான் இருக்க... சரி.. வேலையே இல்லாத ஆபிஸ்ல உட்கார்ந்து கிட்டு அப்படி அவன் என்ன தான்டா பண்றான்..?? “ என்றார் சிவகாமி

“அவனை பத்தி தெரியாதா ஆன்ட்டி... வேலையே இல்லைனாலும் ஏதாவது ஒரு பழைய பைலை தூசு தட்டி எடுத்து வேலையை உருவாக்குவான்.. அதோட என்னையும் அதில இழுத்து விட்டுடுவான்...

அப்படித்தான் இன்னைக்கும் ஏதோ ஒரு பழைய பைலை எடுத்து தூசி தட்டிக்கிட்டிருந்தான்.. நான் எஸ் ஆகி அவனுக்கு தெரியாமல் ஓடி வந்திட்டேன்...அவன் கிட்ட சொல்லிடாதிங்க ஆன்ட்டி.. “ என்று சிரித்தான் கௌதம்...

“ஹ்ம்ம்ம் முன்னாடி தான் கல்யாணம் ஆகலை.. வீட்டுக்கு எப்ப வேணா வரலாம்.. போகலாம்.. இப்ப தான் கல்யாணம் ஆகிடுச்சு இல்ல.. நேரத்தோட வீட்டுக்கு வரவேண்டாம்..இன்னும் வேலை வேலைனு கட்டிகிட்டு அழுதா இவன என்ன செய்யறது?? “ என்று புலம்பினார் சிவகாமி...

அதை கேட்டு கௌதம் குழம்பினான்...அதையே வாய்விட்டு கேட்டான்

“ஆன்ட்டி... அவன் தம்பிக்கு கல்யாணம் ஆனதுக்கு மச்சான் எதுக்கு நேரத்தோட வீட்டுக்கு வரணும்... புரியலையே... கொஞ்சம் குழப்பாமல் தெளிவா சொல்லுங்க... “ என்றான் கௌதம் மீண்டும் குழப்பத்துடன்.

“டேய்.. உன்னை எல்லாம் யாருடா இந்த போலிஸ் வேலைக்கு சேர்த்தது...சரியான மக்குடா...நீ எல்லாம் எப்படி தான் குற்றவாளிய பிடிப்பியோ.. ” என்று நக்கல் அடித்து சிரித்தவர்

“நேற்று கல்யாணம் ஆனது மகிழனுக்கு இல்ல.. உன் மச்சான் நிகிலனுக்கு.. போதுமா விளக்கம்...” என்று முறைத்தார்.. அதை கேட்டு அதிர்ந்தவன்

“வாட்??? என்ன ஆன்ட்டி சொல்றீங்க..??. இந்த ட்விஸ்ட் எப்ப நடந்துச்சு... “

“டேய்... அடி வாங்குவ.. அவன் கூடவே தான இருந்த... அவன் உன்கிட்ட சொல்லலை..?? “

“யாரு??.. உங்க உத்தம புத்திரன் அப்படியே சொல்லிட்டாலும்... பேரு தான் பிரெண்ட் னு... அங்க உள்ள போய்ட்டா பர்சனல் எதுவும் பேசக் கூடாது னுடுவான்.. வெளில எங்கயாவது வேலை விசயமா போனா அங்கயும் வந்த வேலையை மட்டும் பாருடா னு என் வாயை அடச்சுடுவான்...

அதனால அவன் எதுவும் என்கிட்ட சொல்லலை ஆன்ட்டி.. ஆனாலும் ஏதோ வித்தியாசமாதான் இருந்தான்.. நான் அப்பவே கேட்டேன்..

ஏன் டா ?? கல்யாணம் உனக்கா ?? இல்ல உன் தம்பிக்கா?? நீ மாப்பிள்ளை மாதிரி இருக்கியே டானு... அவன் என்னை முறைச்சுட்டு இல்ல போனான்.. பார் அப்ப கூட வாயை திறந்து எதுவும் சொல்லலை.. ஆமா என்னாச்சு ஆன்ட்டி?? “ என்றான் ஆர்வமாக

“வாடா... நீ ஒருத்தன் தான் பாக்கி.. எங்க கதையை கேட்க.. நீயும் கேள்..” என்று சலித்துகொண்டவர் நேற்று நடந்த கூத்தை கூறினார்...

“அடப்பாவமே... இவ்வளவு நடந்திருக்கு... இந்த மச்சான் மூச்சு விடலையே.. இருக்கட்டும் வச்சுக்கறேன் அவன....” என்று வாய்விட்டு திட்டினான் கௌதம்.

“டேய்... உங்க பஞ்சாயத்தை அப்புறம் வச்சுக்க... இப்ப அவனை எப்படியாவது வீட்டுக்கு அனுப்பி வை...பாவம் அவனுக்காக இங்க ஒருத்தி காத்துகிட்டு இருக்கானு நல்லா உறைக்கிற மாதிரி சொல்லு “

“கண்டிப்பா ஆன்ட்டி.. நான் ஆபிஸ் நம்பர் ல இருந்து கால் பண்றேன்.. அப்படியும் எடுக்கலை னா நான் நேர்ல போயாவது அவனை வீட்டுக்கு பேக் பண்ணி அனுப்பிடறேன்.. நீங்க கவலைய விடுங்க.. மருமகளை நல்லா கவனிங்க.. “என்று சிரித்து கொண்டே அலைபேசிய துண்டித்தவன் உடனே நிகிலனுக்கு அலுவலக எண்ணில் இருந்து போன் பண்ணினான்..

நிகிலன் போனை எடுக்கவும்,

“கங்கிராட்ஸ் மச்சான்.... “ என்றான் கௌதம் சிரித்தவாறு

“எதுக்குடா?? “ என்றான் நிகிலன் எரிச்சலுடன்

“அடப்பாவி.. முழு பூசணிக்காய சோத்துல மறைக்கிறது எப்படி னு உன்கிட்ட தான்டா கத்துக்கனும்ம்... இவ்வளவு நடந்திருக்கு... நீ மூச்சு கூட விடலையே.. எனி வே வெல்கம் டு அவர் குடும்பஸ்தன் க்ளப்... “ என்று சிரித்தான் கௌதம்..

“டேய்.. உனக்கு யார் சொன்னா?? “ என்றான் நிகிலன் இடுங்கிய கண்களுடன்

“ஹா ஹா ஹா அதுவா முக்கியம்.. சீக்கிரம் வீட்டுக்கு போடா.. அங்க பாவம் சிஸ்டர் உனக்காக பால் சொம்பை கையில வச்சுகிட்டு ஃபர்ஸ்ட் நைட்டுக்காக காத்துகிட்டிருக்காங்களாம்...

அந்த பாடாவதி பழைய பைலை கட்டிகிட்டு அழுவாம நேரத்தோட போய் புதுபொண்டாட்டிய கட்டிகிட்டு கொஞ்சுடா... Enjoy your marriage life…“ என்று சிரித்தான் கௌதம்…

“டேய்.. அடி வாங்குவ நீ ... “ என்று முறைத்தான் நிகிலன்...

“ஹீ ஹீ ஹீ அதெல்லாம் கல்யாணத்துக்கப்புறம் பழகிடுச்சுடா.. நீ தான் இனிமேல் பொண்டாட்டி கையால அடி வாங்க பழக்கிக்கனும்....ஏதாவது சந்தேகம் இருந்தால் கூச்சபடாமல் என்கிட்ட கேளு மச்சான்...

இதுல நான் உன்னோட சீனியர்... எனிவே ரொம்ப சந்தோசம் மச்சான்.. இந்த சாமியாரும் கடைசியில் சம்சார கடல் ல குதிச்சதுக்கு.. “ என்று மீண்டும் சிரித்தான் கௌதம்....

அவன் சிரிப்பில் கடுப்பான நிகிலன் அவன் போனை உடனே கட் பண்ணி, அவன் அனைத்து வைத்திருந்த அவனுடைய பெர்சனல் போனை ஆன் பண்ணி தன் அன்னையை அழைத்தான்...
 




Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore
தன் மகனின் அழைப்பை கண்ட சிவகாமி உடனே அகமகிழ்ந்து அந்த போனை அட்டென்ட் பண்ணி,

“சொல்லு கண்ணா...” என்று அவர் முடிக்கு முன்னே

“என்ன மா நினைச்சுக்கிட்டிருக்கீங்க ?? நான் தான் காலைல அவ்வளவு தூரம் சொன்னேன் இல்ல... நடந்தது ஒரு கல்யாணமே கிடையாது... அப்ப எனக்கு வேற வழி இல்லைனு தான் நீங்க சொன்னதுக்காக தாலி கட்டினேன்.. என்னை அதுக்கு மேல தொந்தரவு பண்ணாதிங்க னு..

இப்ப எதுக்கு எனக்கு கல்யாணம் ஆகியிருச்சுனு ஊர் பூரா தண்டோரா அடிச்சுகிட்டிருக்கீங்க??... இதுதான் லாஸ்ட் வார்னிங்.. இனிமேல் எனக்கு கல்யாணம் ஆகியிருச்சுனு சொல்லி ஏதாவது கம்பெல் பண்ணீங்க, அடுத்த நாளே டைவர்ஸ் பேப்பரோட நிப்பேன்....குறிச்சுக்கோங்க... “ என்று கோபமாக கத்தியவன் அவரின் பதிலை கூட கேட்காமல் அலைபேசியை அனைத்தான்...

அவன் கத்தியதை கேட்டு அப்படியே அயர்ந்து ஷோபாவில் தொப்பென்று விழுந்தார் சிவகாமி...

“ஒரு பக்கம் கல்யாணமே வேண்டாம் என்று இருந்தவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சே என்று சந்தோஷப்பட்டால், இன்னொரு பக்கம் இவன் இப்படி முறுக்கிக்கிட்டு போறானே.. அந்த பொண்ணுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்??.. அவளுக்கும் தன் திருமண வாழ்க்கையை பற்றி நிறைய கனவுகள், ஆசைகள் இருக்குமே...

இவன் இப்படி போனால் நான் என்ன செய்யறது?? இதுக்கு பேசாம அந்த பொண்ண கல்யாணம் பண்ணாமலயே இருந்திருக்கலாம் ..

பத்தாதற்கு இந்த மகிழன் வேற எங்க போனானோ ??? எல்லாம் அவனால வந்தது.. அவன் ஏன் அப்படி செய்தான்??? எங்க தப்பு நடந்தது?? அவன் விருப்பபட்டு தானே இந்த திருமண ஏற்பாடுகள் செய்தோம்.

அவனே முன்னின்று எல்லாத்தையும் செய்தானே.. இப்படி கடைசி நேரத்துல கழுத்த அறுப்பானு நினைக்கலியே..என்ன காரணம்னு சொல்லாமலயே ஓடிட்டானே... நான் பெத்த ரெண்டு பிள்ளைங்களுமே இரண்டு விதமா இருக்கு..

நான் எப்படி இதை சமாளிப்பது...?? முருகா... நீதான் இந்த பிரச்சனையையும் தீர்த்து வைக்கணும்.. ” என்று மனதுக்குள் புலம்பியவாறு சோபாவின் பின்னால் சாய்ந்து கொண்டார் சிவகாமி...

அவர் போனில் கௌதமிடம் பேசியதை மது தூரத்தில் இருந்து கேட்டு கொண்டிருந்தாள்...அதன் பின் அவருக்கு வந்த அழைப்பை ஏற்றதும் அதன் பின் அவர் முகம் வாடி இருப்பதை கண்டவள் அழைத்தது யாரென்று புரிய, மெதுவாக அவர் அருகில் சென்று,

“அத்தை... உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா...?? “ என்றாள் தயங்கியவாறு...

அவரும் தன் கவலையை மறைத்துக் கொண்டு

“சொல்லு டா...” என்று சிரித்தார்.. மதுவோ அவர் வருத்தபட்டு இருப்பதை கண்டு ஒரு வேகத்துல அவரிடம் வந்துவிட்டாள்... ஆனால் தான் நினைத்ததை எப்படி சொல்லுவது ?? என்று கொஞ்சம் பயந்து மீண்டும் தயங்கி நின்றாள்...

அவளின் முகத்தில் இருந்த லேசான பயத்தையும் தயக்கத்தையும் கண்டவர்

“எதுனாலும் தயங்காமல் சொல்லு மருமகளே.. என்ன?? என் தோற்றத்தையும் குரலயும் வைத்து நான் கொடுமைக்கார மாமியாரா தெரியறனா?? என் குரல்தான் அப்படி... சீரியல் மாமியார் மாதிரி கொடுமை எல்லாம் பண்ண மாட்டேன்.. நீ தயங்காமல் உன் மனசுல இருக்கறதை சொல்லு மது மா “என்று சிரித்தார்....

அவரின் பேச்சில் கொஞ்சம் தெளிந்தவள்,

“அத்தை... வந்து... நீங்க நான் கஷ்டபடுவேனு தான உங்க பையனுக்கு போன் பண்ணிகிட்டிருக்கீங்க... அவர் நைட் வரலைனு நான் எதுவும் நினைச்சுக்குவேனு தான நீங்க கஷ்ட பட்டுகிட்டிருக்கீங்க..? “ என்று நிறுத்தினாள்

அவர் மனதில் நினைத்ததை அப்படியே தன் மருமகள் சொல்லவும் வாய் அடைத்து நின்றார் சிவகாமி..

“ஹ்ம்ம்ம் சொல்லுங்க அத்தை.. நீங்க எனக்காத்தான பார்க்கறீங்க...?? “ என்றாள் விடாமல்

“ஆமாம் டா... உனக்கும் நிறைய ஆசை ,கனவுகள் எல்லாம் இருக்கும் இல்லையா...உன் கலயாணத்துலயே நிறைய குழப்பமாகியிருச்சு...இப்படி கல்யாணம் ஆகியும் புருஷன் உன் கூட அனுசரனையா இல்லைனா உனக்கு கஷ்டமா இருக்கும் தான??? இந்த பையன் அதை புரிஞ்சுக்கவே மாட்டேங்கறானே... “ என்று மீண்டும் புலம்பினார்...

“அத்தை.. உண்மைய சொல்லனும்னா...அவர் வீட்டுக்கு வராததால எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை....ஏனா ?? எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை.... “ என்றாள் தரையை பார்த்தவாறு...

இதுவரை பேசாமல் இருந்த தன் மருமகள் தானே தேடி வந்து பேசறாளே.. என்று மகிழ்ந்து இருந்த சிவகாமி, தன் மருமகள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்தார்....
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
நிகில் ஓவர் ஆ கோபப் படறாரு....
பாவம் மது....
நைஸ் எபிசோட் சிஸ்....❤
 




Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore
நிகில் ஓவர் ஆ கோபப் படறாரு....
பாவம் மது....
நைஸ் எபிசோட் சிஸ்....❤
Thanks pa!
 




Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore

lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
நிகலனுக்கு என்ன தான் வேண்டுமாம்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top