• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதோடுதான் நான் பாடுவேன்-50

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore
அத்தியாயம்-50


மூன்று மாதத்திற்கு பிறகு:

அதிகாலையில் அந்த வீட்டில் கந்த சஷ்டி கவசம் இனிமையாக ஒலித்து கொண்டிருந்தது....

அந்த புத்தம் புது காலையில் அனைவரும் உறங்கி கொண்டிருக்க, அவள் மட்டும் சீக்கிரம் எழுந்து, தலைக்கு குளித்து தலையில் துண்டை சுற்றி கொண்டு பூஜை அறையில் அந்த வேலன் முன்னே கண் மூடி நின்றிருந்தாள் அந்த வீட்டின் மூத்த மருமகள்....

தனக்கு நல்ல வாழ்க்கையை கொடுத்த அந்த சிங்கார வேலனுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லி, அந்த வீட்டில் இருப்பவர்கள் மற்றும் எல்லாருமே நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டி கொண்டவள் இறுதியாக தீபாராதனை காமித்து தன் பூஜையை முடித்தாள் அந்த வீட்டின் மூத்த மருமகள் மதுவந்தினி...

அப்பொழுது வாயில் அழைப்பு மணி ஒலிக்க, பூஜை அறையில் இருந்து வெளியில் வந்து வாயில் கதவை திறக்க, வெளியில் பெரிய பெட்டி மற்றும் ஏர் பேக்குடன் ஒரு நெடியவன் நின்று கொண்டிருந்தான்...

தன் கணவனின் உயரமும் ஆனால் அவனின் இடுங்கிய கண்களுக்கு மாறாக சிரிக்கும் கண்களும், குண்டு கன்னமும் உற்று பார்க்க தன் கணவன் சாயலும் அதை விட சிவகாமிக்கு ஆண் வேடம் போட்ட மாதிரி அவரை உரித்து வைத்து ஸ்டைலாக நின்று கொண்டிருந்தவனை கண்டு திகைத்து நின்றாள் மது....

பூஜை முடித்து திருநீற்றை நெற்றியில் வைத்து கொண்டும் வகிட்டில் குங்குமத்தை அழகாக வைத்து கொண்டு அந்த அதிகாலையிலயே புத்தம் புது மலராக, மங்களகரமாக நின்று கொண்டிருந்தவளை கண்டு கொண்டவன்

“ஹாய் மது.. எப்படி இருக்க? “ என்று புன்னகைத்தவாறு பாதி திறந்திருந்த கதவின் வழியே உள்ளே வந்தான் அந்த நெடியவன்.....

அதற்குள் அவனை அடையாளம் கண்டு கொண்டவள், அவனை பார்த்து முறைத்தவாறு எதுவும் பேசாமல் விடுவிடுவென்று நடந்து வேகமாக சமையல் அறைக்குள் சென்று விட்டாள்...

“ஹப்பா... என்னா கோபம்...? இன்னும் என் மேல இருக்கிற கோபம் குறையலையா...? இந்த விசயத்துல மட்டும் புருசனும் பொண்டாட்டியும் ஜாடிக் கேத்த மூடிதான்...

அப்படியே ஒருத்தரை மாதிரி இன்னொருத்தர் இரண்டும் உரிச்சு வச்சிருக்காங்க ப்பா.. “ என்று அவளுக்கு கேட்குமாறு சத்தமாக சொல்லி கொண்டே உள்ளே வந்தான்....

அழைப்பு மணி ஒலி கேட்டு சிவகாமியும் விழித்து கொண்டவர் தன் முகத்தை கழுவி கொண்டு வெளியில் வந்தவர் உள்ளே வந்து கொண்டிருந்தவனை கண்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றார்....

அதற்குள் அவனும் அவரை கண்டு கொண்டு, தன் பேக் ஐ அப்படியே கீழ போட்டு விட்டு

“ஹாய் மா...” என்றவாறு வேகமாக வந்து அவரை இறுக்கி கட்டி கொண்டான்...

கிட்டதட்ட ஒன்றரை வருடங்கள் கழித்து பார்க்கும் தன் இளைய மகன் மகிழனை கண்டதும், சந்தோசத்தில் திணறி அவனை இறுக்க கட்டி கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தார் சிவகாமி....

தன் அன்னையின் அன்புக்காக, பாசத்துக்காக, இப்படி கட்டி அணைத்து கொள்ளும் இந்த அன்பிற்காக இத்தனை நாட்களாக ஏங்கி கொண்டிருந்த மகிழனுமே நெகிழ்ந்து போய், கழுத்து வரை இருந்த தன் அன்னையை இறுக்கி அணைத்து தன் மார்பின் மீது சாய்த்து கொண்டான்....

சிறிது நேரம் இருவருமே அந்த பாச பிணைப்பில் கரைந்துதான் போயினர்...

சமையல் அறையில் இருந்து இந்த காட்சியை கண்டு கொண்டிருந்த மதுவுக்கும் கண்கள் கலங்கியது.....

என்னதான் தன் மாமியார் வெளியில் சிரித்தாலும் உள்ளுக்குள் தன் சின்ன மகனுக்காக ஏங்குவது அவள் அறிந்ததே....

இன்று தன் மகனை கண்டு கொண்ட சந்தோசத்தில் மிளிர்ந்த அவர் முகத்தை பார்க்க அவளுக்கும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது....

இத்தனை நாட்களாக அவரை தவிக்க விட்ட தன் கொழுந்தன் மீது இன்னும் கோபம் கூடியது.....

சிறிது நேரம் தன் அன்னையை கட்டி அணைத்து தன் ஏக்கத்தை எல்லாம் தீர்த்து கொண்ட மகிழன் பின் தன் அன்னையின் நெற்றியில் முத்தமிட்டு

“ஐ மிஸ்ட் யூ சோ மச் மா..... “ என்றான் கண்கள் கலங்க...

அதை கண்டு சிவகாமிக்கும் தொண்டை அடைத்து கொள்ள

“நானும் தான் சின்னவா....... “ என்றார் மூக்கை உறிஞ்சிய படி தன் புடவை முந்தானையால் கண்களை துடைத்து கொண்டே.....

அதற்குள் தன்னை சமாளித்து கொண்ட மகிழன் அவரை சாதாரணமாக்க எண்ணி,

“என்ன மா.... ராஜ மாதா சிவகாமி தேவி.. இப்படி கண் கலங்கலாமா? அப்படியே ராஜ மாதா மாதிரி கெத்தா இருக்க வேண்டாம்?

அதுவும் இல்லாம இப்ப பேத்தி வேற வந்திட்டா.... இனிமேல் நோ க்ரை.. ஒன்லி ஹேப்பி... டீல்? என்றவாறு அவரின் கன்னத்தை இரண்டு பக்கமும் பிடித்து செல்லமாக இழுத்து இரண்டு பக்கமும் ஆட்டி சிரித்தான் மகிழன் ...

“ஹ்ம்ம்ம் போடா .. இத்தனை நாளாச்சா இந்த அம்மாவை தேடி வர ? “ என்று மூக்கை உறிஞ்சினார் சிவகாமி...

“ஹ்ம்ம்ம் சாரி மா.... என் கதையெல்லாம் அப்புறம் சொல்றேன்.. இப்ப எங்க என் ப்ரின்ஸஸ் ..? அவளை பார்க்கத்தான் ஓடோடி வந்திருக்கேன்.. இந்நேரம் என்னை கண்டதும் சித்தப்பானு ஓடி வந்து என் காலை கட்டி பிடிச்சிருக்கணுமே? எங்க மா என் ப்ரின்ஸஸ்? “ என்று கண்களால் தேடினான் ஆர்வமாக.......

“ஆமாண் டா. இது என்ன நீ எழுதற கம்யூட்டர் புரோகிராமா..? பிறந்த மூனே மாசத்துல உன் மவ வளர்ந்து உன்னை ஓடி வந்து கட்டி பிடிக்க.. இன்னும் ஒரு வருசம் ஆகும் டா. அவ நடக்க.. “ என்று சிரித்தார்.....

“ஓ... ஐ சீ.. அப்ப என்கூட விளையாட இன்னும் நாளாகுமா..? . வெரி பேட்... “ என்று சிரித்தான்....

அதற்குள் அவன் குரல் கேட்டு எழுந்து வந்த அகிலாவும் ஓடி வந்து அவனை கட்டி கொள்ள ஆனந்த கண்ணீர் அவள் முகத்தில்...

“போடா மங்கி.... என்னை விட்டு போக உனக்கு எப்படி மனசு வந்தது ? ... என் கூட பேசாத... “என்று தேம்பினாள் தன் அண்ணனை இறுக்கி கட்டி கொண்டு....

தன் தங்கையின் பாசத்தில் நெகிழ்ந்தவன்

“அகி குட்டி... உன்னை விட்டு பிரிந்து நான் மட்டும் எப்படிடா சந்தோசமா இருப்பேன்.... எப்பவும் உன் நினைப்புத்தான் குட்டி மா...என் உடல் அங்க இருந்தாலும் என் நினைப்பெல்லாம் உன்னை சுத்தியேதான் இருக்கும்....

உன்னுடைய ஒவ்வொரு அசைவும் எனக்கு தெரியுமாக்கும்... “ என்று அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டினான்....

பின் சிவகாமி அவனை தன் அறைக்கு உள்ளே அழைத்து சென்று அங்கு தொட்டிலில் கிடந்த தன் பேத்தியை காண்பித்தார் பெருமையாக...

நமது இல்லத்தில் இருந்து வந்திருந்த ஒரு பெண்மணி அந்த குட்டி தேவதையை தொட்டிலில் இருந்து எடுத்து மகிழன் கையில் கொடுத்து அவளை எப்படி பிடிக்க வேண்டும் என்று விளக்க, மகிழனும் அந்த குட்டி ரோஜாவை இலாவகமாக தன் கைகளில் அள்ளிகொண்டான் எந்த தயக்கமும் இல்லாமல்....

அகிலா குழந்தையாக இருக்கும் பொழுது இவனே அடிக்கடி தூக்கி வைத்து கொண்ட பழக்கத்தில் இப்பொழுது அந்த குட்டியையும் அழகாக அள்ளி கொண்டான் பூரிப்புடன்....

அவள் முகத்தை ஆசையுடன் பார்த்து ரசித்தவன்

“ஹாய் ப்ரின்ஸஸ்.... இந்த சித்தப்பாவை பார்....” என்று அவள் குட்டி விரல் பிடித்து ஆட்ட, அவளும் அழகாக சிரித்தாள் அவன் முகம் பார்த்து...

அதை கண்டவன் அப்படியே திகைத்து போனான்....

“அப்பா... அப்படியே நிகிலனை உரிச்சு வச்சிருக்கா மா... “என்றான் பெருமையாக...

அனைவருமே சிரித்து கொண்டிருக்க, மகிழனின் பேச்சு குரல் கேட்டு அருகில் இருந்த அறையில் இருந்த ரமணியும் அங்கு வந்தார்.... மகிழனை கண்டதும் அவர் முகமும் மகிழ்ச்சியில் விரிந்தது....

அவன் தன் அண்ணன் மகளை கொஞ்சுவதை ரசித்தவர்

“அது சரி.. இத்தனை பாசம் வச்சிருக்கிறவன் இவ்வளவு நாளா எங்கடா போன? ஏன் இத்தனை நாளா எங்களை எல்லாம் பார்க்க வரலை...? “ என்றார் ரமணி அவனை செல்லமாக கண்டித்தவாறு.....

அப்பொழுது மது ட்ரேயில் வைத்து காபியை கொண்டு வந்து அனைவருக்கும் கொடுக்க மகிழனுக்கும் கொடுத்தாள் அவனை முறைத்தவாறு...

அவனும் அவளுக்கு நன்றி சொல்லி காபியை எடுத்து கொண்டவன் ரமணி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக

“நான் கனடா ல இருந்தேன் ஆன்ட்டி... எனக்கும் இங்க வர, உங்களை எல்லாம் பார்க்க ஆசை தான்..

ஆனால் நான் வந்தால் இந்த மிஸ்டர் என்கவுன்டர் இருக்கானே... அதான் உங்க அருமை உத்தம புத்திரன்.. அவனுக்கு இருந்த கோபத்தில என்னை என்கவுன்டர்லயே போட்டிருப்பான்... அதான் அவனுக்கு பயந்து கிட்டு கொஞ்ச நாள் தலைமறைவா இருந்தேன்... “ என்று சிரித்தான்...

“ஹ்ம்ம் இப்ப வந்திருக்கியே... இப்ப மட்டும் போடமாட்டானாக்கும்..” என்றார் சிரித்தவாறு...

“ஹா ஹா ஹா இப்பதான் என் ப்ரின்ஸஸ் வந்திட்டா இல்ல... அவன் கன் எடுத்தா நான் போய் என் ப்ரின்ஸஸ் பின்னாடி ஒளிஞ்சுக்குவேன்.. இந்த சித்தப்பாவை பார்த்தா பாவமா இருக்குனு உடனே அவ அப்பன் கிட்ட என்னை விட்டுட சொல்லி ரெகமண்ட் பண்ணுவா....

மிச்டர் என்கவுண்டர் ம் அவன் பொண்ணுக்காக என்னை மன்னிச்சு விட்டுவான்... எப்படி நம்ம ப்ளான்.. ? ” என்று சிரித்தவாறு தன் காலரை தூக்கிவிட்டு கொண்டான் மகிழன்....

“நம்பிக்கை துரோகி.. சீட்டர்.. எல்லாரையும் ஏமாத்திட்டு தலை குனிய வச்சுட்டு யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் ஒடிப் போனவன் யாருக்கும் என் பொண்ணு சப்போர்ட் பண்ண மாட்டானு அந்த மடையனுக்கு சொல்லு மா... “என்று தன் தம்பியை முறைத்தவாறு உள்ளே வந்தான் நிகிலன்... .

தன் அண்ணனை கண்டதும் சில நொடிகள் அப்படியே உறைந்து நெகிழ்ந்து நின்றான் மகிழன்....பின்

“ஹாய் நிகிலா.... எப்படி டா இருக்க? “ என்றவாறு தன் அண்ணனை நோக்கி வேகமாக சென்று அவனை இறுக்க கட்டி அணைத்து கொண்டான் மகிழன்...

அண்ணன் தம்பி இருவர் கண்ணிலும் நீர் துளிகள்...முன்பு கூட என்னதான் இருவரும் சிறித்து பேசிக் கொள்ளவில்லை என்றாலும் இருவருமே உள்ளுக்குள் பாசம் வைத்திருப்பது இருவருக்குமே தெரிந்தது தான்...

ஒருவரை ஒருவர் பிரிந்து இத்தனை நாட்கள் பார்க்காமல் இருந்த ஏக்கம் இருவர் கண்ணிலுமே தெரிய, இருவருமே நெகிழ்ந்து போய் கட்டி தழுவி கொண்டனர்.....

அதை கண்ட சிவகாமிக்கு மனம் நிறைந்து இருந்தது.... மற்றவர்களும் அவர்கள் பாசத்தை கண்டு நெகிழ்ந்து கண் கலங்கினர்.....

சிறிது நேரம் கழித்து தங்கள் நிலைக்கு வர, மகிழன் தன் அண்ணனிடம்

“சாரி டா.... ஐம் எக்ஸ்ட்ரீம்லி சாரி...என்னால எல்லாருக்கும் கஷ்டம்.... “ என்றான் அதுவரை சிரித்து கொண்டிருந்த மகிழன் கண் கலங்கி...

நிகிலனும் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு கொண்டவன்

“இட்ஸ் ஓகே... பாஸ்ட் இஸ் பாஸ்ட்... நீ காபியை குடி...” என்று தன் தம்பியை அருகில் இருந்த கட்டிலில் அமர வைத்தான்.......

மது நிகிலனுக்கும் காபியை கொடுக்க அவனும் அதை எடுத்து கொண்டு தன் தம்பியின் அருகில் அமர்ந்து கொண்டு அந்த காபியை குடிக்க ஆரம்பித்தான்....

அனைவரும் அமைதியாக இருக்க, ரமணிதான் மெல்ல ஆரம்பித்தார்

“மகி கண்ணா... கேட்கறேனு தப்பா எடுத்துக்காதா? கல்யாண மண்டபத்துல இருந்து ஏன் ஓடிப் போன? பாவம் இல்ல மது.. அவளுக்குத் தான் கெட்ட பெயர்... “ என்றார் வருத்தமாக

அதை கேட்டு வருந்தியவன் மதுவின் பக்கம் திரும்பியவன்

“சாரி மது... என்னை மன்னிச்சிடு.... உன்னை ஹர்ட் பண்ணனும் னு நான் ஓடிப் போகலை... எல்லாம் இதோ இந்த சிடுமூஞ்சி விருமாண்டிக்காகத்தான்... “ என்று தன் அண்ணனை காட்டி சிரித்தான்...

மதுவோ தான் அவள் கணவனுக்கு வைத்த பெயர் எப்படி இவனுக்கு தெரிந்தது ? என்று ஆச்சர்யமாக விழி விழிக்க

“ஹா ஹா ஹா நீ உன் புருசனுக்கு வச்ச பெயர் எப்படி எனக்கு தெரியும் னு முழிக்கறியா ? .. எல்லாம் எனக்கு தெரியும்...என்னோட spy எனக்கு தினமும் இங்க நடக்கறது எல்லாம் சொல்லிடுவாங்க...

என் உடல் தான் கனடா வில் இருந்ததே தவிர என் உயிர் எப்பவும் இங்கயேதான் சுத்திகிட்டு இருந்தது...” என்றான் சிரித்தவாறு

அதை கேட்டு மது இன்னும் புரியாமல் முழிக்க,

“சரி.... விளக்கமாகவே சொல்லிடறேன்.... “ என்று தன் கதையை ஆரம்பித்தான் மகிழன்....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top