• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கானல் நீர் பார்வை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
32

ராகேஷ் அறைக்குள் வந்தபோது சவிதா முடியைப் பின்னலிட்டுக் கொண்டிருந்தாள். ராகேஷை கண்டதும் “மாமா இப்படியெல்லாம் திட்டுவாங்களா? பயந்துட்டேன்...” என்றாள்.

சிரிப்புடன் “ஒரு நாள் நீயும் வாங்குவப் பாரு...” என்று ராகேஷ் கூற “ஆச தான்... அதெல்லாம் ஒண்ணும் வாங்க மாட்டேன்... சீக்கிரம் கிளம்புங்க” என்றுக் கூறி பின்னலிட்ட முடியில் பாண்டை மாட்டி வெளியே வந்தாள்.

உடை மாற்றி வந்த ராகேஷ் “சவி... அங்க எது நடந்தாலும் நீ குறுக்கப் பேசாத...” என்றான். “ம்ம்... பேச மாட்டேன்” என்று சவிதா கூற “தேவியும் எதுவும் பேசாமப் பார்த்துக்கோ” என்றான்.

“சரி ராகேஷ்... நாங்க எதுவும் பேச மாட்டோம்... எதுவா இருந்தாலும் நீங்களேப் பேசிக்கோங்க... போதுமா... நாங்க அமைதியா நின்னு வேடிக்கைப் பார்க்குறோம்...”

“என்ன டி ரொம்ப சலிச்சுக்குற?” என்று ராகேஷ் கேட்க “அதெல்லாம் ஒண்ணும் இல்ல...” என்றுக் கூறி அவன் கன்னத்தில் முத்தமிட்டு “வாங்கப் போகலாம்” என்றாள் சவிதா.

அவள் கைப் பிடித்து “நெஜமா ஒண்ணும் இல்லையா?” என்று ராகேஷ் கேட்க அவன் மறுக் கன்னத்திலும் முத்தமிட்டு “நெஜமா ஒண்ணும் இல்ல” என்றாள் சவிதா.

“நெஜமாவே ஒண்ணுமே இல்லையா?” என்று ராகேஷ் மீண்டும் அழுத்திக் கேட்க அவன் இதழில் முத்தமிட்டு “இப்போப் போலாமா?” என்றுக் கேட்டாள் சவிதா.

சவிதா செய்ததுப் போலவே அவளை அணைத்து அவள் இதழில் முத்தமிட்ட ராகேஷ் “ஒண்ணும் இல்லையா? அப்போ சரி... வாப் போகலாம்” என்றுக் கூறிப் புன்னகைத்தான். சவிதா வெட்கப் புன்னகையுடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

இருவரும் வீட்டை விட்டுக் கிளம்பி தேவியின் வீடு இருக்கும் தெருவை அடைந்தனர். முத்துவும் பிரபுவும் அங்கு இருக்கவே அவர்களுக்குத் தலையசைத்து விட்டு முன்னேச் சென்றான் ராகேஷ்.

இவர்கள் வீட்டினுள் நுழையும் சத்தம் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்த தேவி வந்தவர்களைக் கண்டு ஹாலின் ஒரு மூலையில் சென்று நிற்க சவிதா அவள் அருகில் சென்று அவள் கைப் பிடித்து நின்றாள்.

தேவியின் கை லேசாக நடுங்கவும் “என்ன தேவி? டென்ஷன் ஆகாத... அவங்கப் பேசிக்குவாங்க...” என்று அவளுக்கு தைரியம் சொன்னாள் சவிதா. தேவி அவளைப் பார்த்துப் புன்னகைக்க முயன்றாள்.

ராகேஷ், முத்து, பிரபு மூவரும் ஹாலில் இருந்த சோபாவில் சென்று அமர்ந்தனர். சத்தம் கேட்டு அறைக்குள் இருந்து வெளியே வந்த குமரன் “என்ன பா? எல்லாரும் சேந்து வந்துருக்கீங்க...” என்றுக் கேட்டு அங்கிருந்த சோபாவில் அவர்களுக்கு எதிரில் அமர்ந்தார்.

ராகேஷிற்கும் பிரபுவிற்கும் நடுவில் அமர்ந்திருந்தான் முத்து. “என்னமோத் தெரியாத மாதிரிக் கேக்குறாருப் பாரு...” என்று முணுமுணுத்தவனை “சும்மா இரு டா” என்று அடக்கினான் ராகேஷ்.

“சித்தப்பா... இன்னும் எதுக்கு வெயிட் பண்ணுறீங்க? தேவிக்கு வரன் பார்க்க ஆரம்பிக்கலாம்ல?” என்றுப் பேச்சை ஆரம்பித்தான் பிரபு.

ஒரு முறை எதிரில் அமர்ந்திருந்த மூவரையும் பார்த்தவர் “இந்த விஷயம் பேசுறதுக்கு எதுக்கு இவனக் கூடக் கூட்டிட்டு வந்த?” என்று முத்துவை காட்டிக் கேட்டார் குமரன்.

பிரபு “அவனுக்கும் உங்க முடிவென்னன்னுத் தெளிவாப் புரிய வெக்கணும்னு தான். நீங்க சொல்லுங்க” என்றான் விடாமல். “எனக்கு...” என்று அவர் ஆரம்பிக்கும்போதே “எனக்கு இந்தப் பயலக் கண்டாலே ஆகல சித்தப்பா. இவனத் தவிர வேற யாருக்கு வேணா என் தங்கச்சியக் கட்டிக் குடுங்க” என்றான் பிரபு.

சமையலறையில் இருந்து இவர்கள் பேச்சைக் கேட்ட பூமா அனைவருக்கும் காபி எடுத்து வந்துக் கொடுத்தார். எல்லோரும் கப்பை எடுத்துக் கொண்டதும் சென்று தேவியின் மறுபுறம் நின்றுக் கொண்டார்.

காபியை சுவைத்துக் கொண்டே “எனக்கும் இதுல விருப்பம் இல்ல தான்” என்று இழுத்தார் குமரன். “அப்பறம் எதுக்குங்க முதல் தடவை இவன் தேவிய வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தப்போ எப்போக் கல்யாணத்த வெச்சுக்கலாம்னுக் கேட்டீங்க?” என்று நிதானமாக அவரைக் கேள்விக் கேட்டான் ராகேஷ்.

இதற்கு என்ன பதில் சொல்வதென்றுத் தெரியாமல் விழித்தவர் அதை முகத்தில் காட்டிக் கொள்ள கூடாது என்றெண்ணி தலையைத் தாழ்த்தி காபிப் பருகுவது போல் பாவனைச் செய்தார். அந்த சில நொடிகளைப் பயன்படுத்திய ராகேஷ் பிரபுவிடம் கண்ணைக் காட்டினான்.

நடப்பதனைத்தையும் ஒருப் பார்வையாளனாக நடுவில் அமர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்த முத்து ராகேஷ் கண்ணைக் காட்டவும் “நடத்துங்க டா” என்றுக் கூறி சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்.

“ஆமா... பின்னப் பொண்ணக் கூட்டிட்டு பைக்ல வீடு வரைக்கும் வந்தா... கட்டிக்கிற எண்ணம் இருக்கான்னுக் கேக்க தான் செய்வோம்” என்றான் பிரபு.

தன் கையிலிருந்த காபிக் கோப்பையை முன்னால் இருந்த டேபிளில் வைத்த ராகேஷ் பிரபுவின் புறம் திரும்பி அமர்ந்து “கட்டிக் குடுக்கற எண்ணம் இல்லன்னா எதுக்கு அப்படிக் கேக்கணும்?” என்றுக் கேட்டான்.

ராகேஷ் செய்ததுப் போலவே தானும் அவன் புறம் திரும்பி அமர்ந்த பிரபு “பொண்ணப் பெத்தவங்க பயப்பட தான செய்வோம்” என்றான்.

“எதுக்கு பயப்படணும்? அவனும் கட்டிக்குறேன்னு தானக் கேக்குறான்...” என்றான் ராகேஷ்

“அவன் எங்கக் கேட்டான்? அந்தப் புள்ளைக்கிட்ட மணிக்கணக்குலப் பேசுறான்... எங்கக்கிட்ட எங்கப் பேசுறான்?” என்றுக் குற்றம் சாட்டினான் பிரபு.

“அதுலயே நீங்கப் புரிஞ்சுக்க வேண்டாமா? அவனுக்கு இஷ்டம் இருக்குன்னு... சரி இப்போ என்ன? கேக்கணும்... அவ்வளவு தான... நான் கேக்குறேன்... தேவிய முத்துவுக்கு கட்டிக் குடுப்பீங்களா?” என்று விட்டுக் கொடுப்பதுப் போல் பேசினான் ராகேஷ்.

“எனக்கு இஷ்டம் இல்ல” பட்டென்று வந்தது பிரபுவின் பதில்.

“அதான் ஏன்? அவன் படிச்சுருக்கான். இன்னும் கொஞ்ச வருஷத்துல நல்ல நெலமைக்கு வந்துப் பெரிய அட்வோகேட் ஆயிடுவான். அப்பறம் என்ன?” குமரனின் முகத்தைப் பார்த்துக் கொண்டேக் கேட்டான் ராகேஷ்.

“பொண்ண நல்லாப் பார்த்துப்பான்னு எப்படி நம்புறது?” என்று பதில் கேள்விக் கேட்டான் பிரபு.

“அதெல்லாம் பார்த்துப்பான்... இத்தன நாள் அவங்க ரெண்டுப் பேரும் பழகுறதப் பாக்குற உங்களுக்குத் தெரியாதா? அவன் எப்படிப் பாத்துப்பான்னு?”

இவ்வளவு நேரம் ராகேஷயும் பிரபுவையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த குமரன் ஒருப் பெருமூச்சை வெளியேற்றித் தன் கையில் இருந்தக் கோப்பையைக் கீழே வைத்தார்.

அவர் குனிந்ததும் “டேய் அவரே டயர்ட் ஆயிட்டாரு... போதும் டா” என்றான் முத்து. அதே நேரம் “பசங்க நல்லா தான் பேசுறாங்க...” என்று சவிதாவிடம் கூறி சிரித்தார் பூமா.

“சரி பா... கட்டிக் குடுக்கறோம்... ஆனா கல்யாணத்த உடனே வெக்கணும். இவன் மேல எங்களுக்கு நம்பிக்க இல்ல... கொஞ்ச நாள் கழிச்சு மாறிடான்னா...” என்றான் பிரபு.

கல்யாணம் என்றுப் பேச்சு வரவும் அவசரமாகத் திரும்பி இவ்வளவு நேரம் எதுவும் பெசாதத் தன் மனைவியையும் மகளையும் பார்த்தார் குமரன்.

பூமா மகளை அணைத்துக் கொண்டிருந்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன... ஆனால் அதற்கு மாறாக அவர் உதட்டில் புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது.

தேவி சவிதாவின் கையை இறுகப் பற்றி தன் தாயின் தோளில் சாய்ந்திருந்தாள். சவிதாவிற்கு பெரியப் பிரச்சனை எதுவும் வராமல் இது வரை எல்லாம் சுமூகமாக முடிந்ததை எண்ணி நிம்மதியாக இருந்தது.

கிடைத்த இந்த இடைப்பட்ட நேரத்தில் “சூப்பர் மச்சான்...” என்று உணர்ச்சி வசப்பட்டு பிரபுவிற்கு கைக் கொடுத்தான் முத்து. ஒரே நேரத்தில் அவன் பின் மண்டையில் ஓங்கி அடித்தனர் பிரபுவும் ராகேஷும்.

குமரன் இவர்கள் புறம் திரும்பியதும் “என்ன சித்தப்பா அடுத்த முகூர்த்தத்துலக் கல்யாணத்த வெச்சுகலாம்ல?” என்றுக் கேட்டான் பிரபு.

“வெச்சுக்கலாம் தம்பி. தேதிப் பாத்து சொல்லுங்க” என்று சிரிப்புடன் கூறினார் குமரன்.

உடனே பிரபு பூமாவைத் திரும்பிப் பார்க்க அவரும் புரிந்துக் கொண்டவராக அங்கிருந்த காலெண்டரில் நாள் பார்த்துக் கூறினார்.

“சரி பா. இன்னும் 15 நாள்ல கல்யாணம்” என்றுக் கூறி எழுந்து முத்துவிடம் வந்த குமரன் அவன் கைப் பற்றி “சந்தோஷமா மாப்ள?” என்றுக் கேட்டார்.

32 பற்களும் தெரிய சிரித்து வைத்தான் முத்து. அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை என்பதைப் போல் குமரன் தன் அறைக்குச் சென்றார்.

அவர் பின்னாலேயே தேவியை நோக்கிச் சென்ற முத்துவை அவன் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்த ராகேஷ் “டேய் நில்லு டா ஒழுங்கா” என்று அடிக் குரலில் கூறினான்.

பிரபுவும் திரும்பி முறைக்கவும் “ம்ம்கும்ம்... விட மாட்டாய்ங்களே...” என்றுக் கூறி தேவியை பார்த்து கண்ணடித்து அமைதியாக நின்றான் முத்து.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
33

தேவியின் வீட்டில் இனியும் தாமதிப்பது சரி வராது என்றுத் தோன்றவே “அப்போ நாங்கக் கிளம்பறோம்” என்று பூமாவிடம் கூறினான் ராகேஷ். “என்ன மா சந்தோஷமா?” என்று பிரபு தேவியிடம் கேட்க “தாங்க்ஸ்ணா...” என்றுப் புன்னகையுடன் கூறினாள் தேவி.

“அப்பறமா போன் பண்ணுறேன் தேவி... வரேன் ஆன்டி” என்றுக் கூறி அவர்களிடம் விடைப் பெற்றாள் சவிதா. தேவியின் வீட்டிலிருந்துக் கிளம்பிய அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

பைக்கில் அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்யப் போன பிரபுவின் கைப் பேசி அலறியது. ஸ்டேஷனிலிருந்து அழைக்கிறார்கள் என்றதும் உடனே எடுத்தான். எதிர்முனையில் பேசியவர் சேகர் உண்மையை ஒத்துக் கொண்டதாகக் கூறினார்.

பிரபு பேசிக் கொண்டிருப்பதால் அவனுக்காக மற்றவர்கள் காத்திருந்தனர். அழைப்பைத் துண்டித்ததும் “சேகர் உண்மைய ஒத்துக்கிட்டானாம்...” என்றுக் கூறினான் பிரபு. ராகேஷ் “மூர்த்தி சார்க்கு போன் பண்ணி சொல்லு பிரபு” என்றான்.

“இங்க நிக்க வேண்டாம் டா... உள்ளேருந்து சித்தப்பா வந்தா ஆயிரத்தெட்டுக் கேள்விக் கேப்பாரு... என் பின்னாடியே வாங்க...” என்றுக் கூறி பைக்கை எடுத்தான் பிரபு. சவிதா ராகேஷின் பின்னால் அமர, ராகேஷும் முத்துவும் பிரபுவை பின் தொடர்ந்தனர்.

தேவியின் வீடு இருக்கும் தெருவை விட்டு சிறிது தூரம் தள்ளிச் சென்று ஒரு சிறிய மளிகைக் கடையின் அருகில் நிறுத்திய பிரபு பைக்கை விட்டு இறங்கி மூர்த்திக்கு அழைத்து விஷயத்தைக் கூறினான்.

“சரி பிரபு. நானும் கெளம்பி ஸ்டேஷன் வரேன். நீங்க அப்படியே நேரா அங்க வந்துடுங்க” என்றுக் கூறிய மூர்த்தி ஒரு நொடி யோசித்து “ராகேஷ் கிட்ட போன் குடு” என்றார்.

பிரபு ராகேஷின் அருகில் வந்து “சார் உன்கிட்டப் பேசணுமாம்” என்றுக் கூறி அவன் மொபைலை நீட்டினான். பைக்கை ஸ்டாண்ட் போட்டு மொபைலை வாங்கி சற்றுத் தள்ளி வந்தவன் “சொல்லுங்க பா” என்றான்.

“ராகேஷ் இப்போவே மணி 8 ஆச்சு. இனி நம்ம ஸ்டேஷன் போயிட்டு வேலையெல்லாம் முடிச்சுட்டு வரதுக்கு டைம் ஆகிடும்... அதுக்கப்பறம் நீங்க வீட்டுக்கு போகணும். இந்த நேரத்துல சவிதாவ ஸ்டேஷன் அழைச்சுட்டு வர வேணாம்.

எப்படியும் அவ வீட்டுலத் தனியா இருக்கணும்... பேசாம டிரஸ் எடுத்துட்டு நம்ம வீட்டுக்கு வந்து அவள விட்டுடு. பிரேமா கூட இருக்கட்டும். நம்ம இங்கேந்து ஸ்டேஷன் போயிட்டு வந்துடலாம்... நைட் இங்கத் தங்கிடுங்க...” என்று ஒருவாறு விஷயத்தைக் கூறி முடித்தார் மூர்த்தி.

ராகேஷ் சிரிப்புடன் “வீட்டுக்கு வந்து தங்கு டா னு சொன்னா வரப் போறேன்... அதுக்கு ஏன் பா இவ்வளவுத் தயங்குறீங்க? இன்னும் 15 நிமிஷத்துலப் போய் டிரஸ் எடுத்துட்டு வரோம் பா” என்றுக் கூறி வைத்தான்.

மற்றவர்களிடம் வந்த ராகேஷ் மொபைலை பிரபுவிடம் கொடுத்து விட்டு “நானும் சவியும் வீட்டுக்குப் போயிட்டு மூர்த்தி சார பார்த்துட்டு அவர் கூட ஸ்டேஷன் வரோம்...” என்றான்.

“இந்தா இருக்க ஸ்டேஷனுக்குப் போறதுக்கு எதுக்கு டா ஊற சுத்துற? ரெண்டுப் பேரும் சேர்ந்து ஏதோ பிளான் பண்ணிட்டீங்கப் போல” என்றான் முத்து. ராகேஷ் பிரபுவின் முன் மூர்த்தியை அப்பா என்றழைக்காததால் “அப்பாவும் பையனும் ஏதோ பிளான் பண்ணிட்டீங்கப் போல” என்றுக் கூற வந்ததை மாற்றி அவ்வாறுக் கூறினான்.

சவிதாவிற்கும் அவ்வாறேத் தோன்றியது. “சரி வா சேந்தேப் போகலாம்” என்றான் பிரபு. ஸ்டேஷன் வந்துவிட்டால் முத்துவின் கல்யாண விஷயம் குறித்து மூர்த்தியிடம் பேச முடியாது என்பதால் அவனும் அவரை அவர் வீட்டில் சந்திக்க விரும்பினான்.

பைக்கில் வரும்போது “எதுக்கு மாமா வீட்டுக்கு?” என்றுக் கேட்டாள் சவிதா. “அப்பா நம்மள ஒரு நாள் வந்துத் தங்க சொல்லிக் கேட்டாங்க சவி... அதான். வீட்டுக்குப் போனதும் சீக்கிரம் ரெண்டுப் பேருக்கும் ட்ரெஸ் எடுத்து வை” என்று அவளுக்குத் தகவல் கூறினான் ராகேஷ்.

அதைக் கேட்ட சவிதாவிற்கு மகிழ்ச்சியே. மூர்த்தி ராகேஷை தன் மகனைப் போல் அல்லாமல் மகனாகவே நினைக்கிறார் என்றுத் தோன்றியது. இதனால் பிரேமவிற்கும் மிகுந்த சந்தோஷம் உண்டாகும் என்று எண்ணினாள்.

அனைவரும் ராகேஷின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். “உள்ள வாங்க டா...” என்று ராகேஷ் அழைக்க முத்துவும் பிரபுவும் மறுத்து விட்டனர். “அவசரமாப் போறப்போ எதுக்கு டா... முதல் தடவ உங்க வீட்டுக்கு வரோம் ஒரு நாள் சாப்பிட வரோம் மா...” என்று இருவரும் கூறினர்.

அவர்கள் வெளியே நிற்பதால் வேகமாக வீட்டைத் திறந்து உள்ளே வந்து கையில் கிடைத்தப் பையில் ஒரு செட் டிரஸ் எடுத்து வைத்தாள் சவிதா. அதை கவனித்த ராகேஷ் அவள் கைப் பிடித்துத் தடுத்தான்.

சவிதா புரியாமல் அவனை நிமிர்ந்துப் பார்க்க “ ரெண்டு செட் எடுத்து வெச்சுக்கோ சவி. இன்னும் ஒரு நாள் இருந்துட்டு வருவோம். அப்பா இதக் கேக்கவே யோசிச்சாங்க... இன்னொரு நாள் தங்குங்கன்னுக் கண்டிப்பா சொல்ல மாட்டாங்க....” என்றுக் கூறி சிரித்து விட்டு சில பைல்களை எடுத்து பையில் வைத்தான்.

அனைத்தையும் எடுத்துக் கொண்டு ஹாலிற்கு வந்த சமயம் “சவி... நீ... அப்பா உன்ன ஸ்டேஷன் வர வேணாம்னு சொன்னாங்க...” என்றுத் தயங்கி தயங்கி மெதுவாகக் கூறி அவள் முகம் பார்த்தான் ராகேஷ்.

“ம்ம் நானே சொல்லணும்னு நெனச்சேன்... ரொம்ப டயர்டா இருக்கு ராகேஷ்... நான் வீட்டுல இருந்து நீங்க வரதுக்குள்ள நாளைக்குத் தேவையான நோட்ஸ் எடுக்கறேன்...” என்றுக் கூறினாள்.

அப்போதும் ராகேஷ் அவள் முகத்தையே அமைதியாகப் பார்க்கவும் “காலைல ஏதோத் தெரியாம கோவப்பட்டுட்டேன்... அதுக்காக நீங்க சொல்லுறத எப்பயுமேப் புரிஞ்சுக்க மாட்டேன்னு முடிவுப் பண்ணிட்டீங்களா ராகேஷ்?

எதுக்கு இப்படித் திருட்டு முழி முழிச்சுக்கிட்டு நிக்குறீங்க? வாங்கப் போகலாம்... நமக்காக ரெண்டுப் பேர் வெளில வெயிட் பண்ணிட்டு இருக்காங்க...” என்று சிரித்துக் கொண்டே கூறினாள் சவிதா.

அவள் கைப் பிடித்து அருகில் இழுத்து ஒரு முறை இறுக்கி அணைத்து அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன் “வாப் போலாம்” என்றுக் கூறி முன்னே நடந்தான்.

வீட்டை விட்டு வெளியே வந்தவர்களைக் கண்டதும் “ஏன் டா... என்னைய தேவி கிட்டப் பேசக் கூட விடாம இழுத்துட்டு வந்துட்டு... உங்க ரெண்டுப் பேருக்கும் இந்த தம்மாத்துண்டு பேக பாக் பண்ண இவ்வளவு நேரமா டா?” என்றுக் கேட்டான் முத்து.

“அண்ணா... பேசாம வண்டிய எடுங்க...” என்று அதட்டி ராகேஷின் பின்னால் பைக்கில் அமர்ந்தாள் சவிதா. பிரபு சிரிக்க “வர வர நீயும் சரி இல்ல சவிதா” என்றுக் கூறி பைக்கை ஸ்டார்ட் செய்தான் முத்து.

அவர்கள் மூர்த்தியின் வீட்டை அடைந்தபோது வெளியே அவர் தயாராக நின்றிருந்தார். பிரபு முதலில் தேவியின் வீட்டில் நடந்தவற்றை சுருக்கமாக அவரிடம் கூறினான்.

மூர்த்தி சிரிக்கவும் “சித்தப்பா அப்படி தான் சார்... எதையும் தானா யோசிக்க மாட்டாரு... அடுத்தவங்க சொல்லுறதக் கேட்டு தான் செய்வாரு... இப்போ நாங்க சொன்னதும் ஒத்துக்கிட்டாரு...” என்றுக் கூறி முடித்தான் பிரபு.

“எப்படியோ சாதிச்சுட்ட...” என்று முத்துவுக்கு கைக் கொடுத்த மூர்த்தி “நீ வீட்டுக்குக் கெளம்பு டா... நாளைக்கு கோர்ட்ல பாப்போம்.... இன்னைக்கு எப்படியும் ஒண்ணும் வேல இருக்காது. காலைல போன் பண்ணி சொல்றேன்” என்றார்.

“சரி சார்” என்றுக் கூறி வேகமாகக் கிளம்பிச் சென்றான் முத்து. பிரபுவிற்கு கால் வர பேசுவதற்காக தள்ளிச் சென்றான். முத்துவை பார்த்து சிரித்துக் கொண்டே “விட்டாப் போதும்னு ஓடுறான் பாரு” என்று மூர்த்தி கூற “ம்ம்..... கல்யாணம் நிச்சயமாகிருக்கு... அவன் அப்படி தான் ஓடுவான்... பின்ன...” என்றார் பிரேமா.

அவரைத் திரும்பிப் பார்த்த மூர்த்தி “நீ பக்கத்துல இருக்கன்றத மறந்துட்டுப் பேசிட்டேன்...” என்று அங்கிருந்து சற்றுத் தள்ளி நடந்துச் சென்று நின்றுக் கொண்டார். அவரின் செய்கையில் சிரித்து விட்டாள் சவிதா.

“உனக்கென்ன இங்க சிரிப்பு? நீ இன்னும் வீட்டுக்குள்ளப் போகல?” என்று சவிதாவைப் பார்த்து மிரட்டலாகக் கேட்டார் மூர்த்தி. “அதுக்கு முதல்ல உள்ளக் கூப்பிடணும்...” என்று முணுமுணுத்த பிரேமா “நீ வா சவி...” என்று அவளை உள்ளே அழைத்துச் சென்றார்.

“ஷ்ஷ்ஷ்ஷ்.... நம்ம மேலக் கொஞ்சமாவது பயம் இருக்காப் பாரு...” என்றுக் கூறிய மூர்த்தி “ கெளம்புவோம்... ராகேஷ் பைக் எடுக்காத கார்லயேப் போவோம்...” என்றார்.

“நான் ஓட்டுறேன்...” என்று ராகேஷ் கூறியதும் கார் சாவியை அவனிடம் கொடுத்து விட்டு மறுப்பக்கம் சென்று அமர்ந்தார். அதற்குள் போன் பேசி முடித்து வந்திருந்த பிரபு அவன் பைக்கை எடுத்தான்.

ஸ்டேஷனில் இவர்கள் நுழைந்ததும் அவர்களிடம் வந்த ஒரு காவலர் “உண்மைய சொல்லிட்டான் சார். அவன் வேலப் பார்க்குற நகக் கட ஓனர் தான் செய்ய சொல்லி இருக்காரு.

முதல்ல எனக்கு முருகன் யாருன்னேத் தெரியாதுன்னு சலம்புனான். ஏற்கனவே நீ முருகனோட போன்லப் பேசுனதெல்லாம் நாங்க ட்ரேஸ் பண்ணி எடுத்துட்டோம். நீ உண்மைய சொல்லலன்னா நீ தான் கொல்ல சொன்னேன்னு கேஸ முடிச்சுடுவோம்னு சொல்லி அடிச்சதும் சொல்லிட்டான் சார்” என்றார்.

“சேகர பார்க்கணும்” என்று மூர்த்தி கூறியதும் “வாங்க சார்” என்று உள்ளே அழைத்துச் சென்றார். லாக்கப்பில் சுருண்டுப் படுத்திருந்தான் சேகர். பிரபு உள்ளேச் சென்று அவனை எழுப்பி நிற்க வைத்தான். மூர்த்தியும் ராகேஷும் அவன் முகத்தை உற்று கவனித்து மனதில் பதிய வைத்துக் கொண்டனர்.

பின் வெளியே வந்ததும் “எப்படியும் நாளைக்கு தான் அரெஸ்ட் வாரன்ட் வாங்க முடியும்” என்றான் பிரபு. “ம்ம்... சிம்பிளா ஒரு இன்வெஸ்டிகேஷன் ரிப்போர்ட் குடுக்க முடியுமா பிரபு?” என்று மூர்த்தி கேட்க “அப்படியே என்னென்ன எவிடென்ஸ் நம்மக் கையில இருக்குன்னு ஒரு லிஸ்ட் இருந்தா நல்லா இருக்கும்” என்றான் ராகேஷ்.

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இப்போவே ரெடி பண்ணித் தர சொல்லுறேன்” என்றுக் கூறி அவர்களை அங்கே அமர வைத்து, நாளை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களையும், கோர்ட்டில் வாதாட மூர்த்திக்கு தேவையான பேப்பர்களையும் தயார் செய்ய உத்தரவிட்டான் பிரபு.

அனைத்தும் கைக்கு வந்ததும் நாளை மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றைக் குறித்து சிறிது நேரம் கலந்தாலோசித்து விட்டு ஸ்டேஷனிலிருந்துப் புறப்பட்டனர் மூர்த்தியும் ராகேஷும்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
34

பிரபுவிடம் பேசி முடித்து மூர்த்தியும் ராகேஷும் வீடு வந்து சேர இரவு 11 மணி ஆகியது. காரை நிறுத்தியதும் இறங்கிய மூர்த்தி வீட்டின் உள்ளேச் சென்றார். ஹாலில் பிரேமா கையைக் கட்டிக் கொண்டு சோபாவில் அமர்ந்திருந்தார்.

அவர்கள் இருவரும் உள்ளே நுழையவும் அவர்களை நிமிர்ந்து ஒருப் பார்வைப் பார்த்து விட்டு மீண்டும் அசையாமல் அப்படியே அமர்ந்தார். இத்தனை வருடங்களில் பிரேமாவின் நடவடிக்கைப் புரியாதவரா மூர்த்தி...

“கோவமா இருக்கா... நீயேப் போய் பேசு” என்று ராகேஷின் காதைக் கடித்தார். அவரைத் திரும்பி “கோத்து விடுறீங்களே” என்பது போல் பார்த்து விட்டு பிரேமாவின் அருகில் சென்று அமர்ந்தான் ராகேஷ்.

பிரேமா அவனைக் கண்டுக் கொள்ளாது அமர்ந்திருக்கவும் தொண்டையை சரி செய்து “மா... ஸ்டேஷன்ல கொஞ்சம் லேட் ஆகிடுச்சு... அதான் நாங்க...” என்று விளக்கம் கூறத் துவங்கினான்.

அவன் பேசுவதைக் காதில் வாங்காமல் “ஏன் டா உன் பொண்டாட்டி உன்ன மாதிரியே இருக்கா?” என்று சற்றுக் குரலை உயர்த்தி பிரேமா கேட்கவும் ஒன்றும் புரியாமல் மூர்த்தியை திரும்பிப் பார்த்தான் ராகேஷ்.

அவரோ “அப்பாடா... அப்போ நம்ம மேலக் கோவம் இல்லப் போல...” என்று நினைத்து தைரியமாக சோபாவை நெருங்கி பிரேமாவின் மற்றொருப் பக்கம் அமர்ந்து “ஏன் என்னாச்சு?” என்றுக் கேட்டார்..

“நீங்கக் கெளம்புனப்போ வீட்டுக்குள்ள வந்தவ... வந்ததும் உங்க அபீஸ் ரூமுக்கு போனா... அவ்வளவு தான்... எத்தன தடவ சாப்பிடக் கூப்பிட்டேன்... நீங்க சாப்பிட்டுப் படுங்கத்தன்னு சொல்லிட்டு என்னத்தையோ எழுதறா எழுதறா...”

இவ்வளவு நேரம் ராகேஷையும் மூர்த்தியையும் மாறி மாறிப் பார்த்துப் பேசிய பிரேமா இப்போது மூர்த்தியின் புறம் திரும்பி “அது எப்படி உங்களுக்கேத்த ஆளா பாத்துக் கூட்டு சேக்குறீங்க?” என்றுப் பொரிந்துத் தள்ளினார்.

இவ்வளவு தானா விஷயம் என்றெண்ணி நிம்மதி அடைந்த மூர்த்தி “சரி நீ சாப்பாடு எடுத்து வை...” என்றுக் கூறி ராகேஷிற்கு கண்ணைக் காட்டி விட்டு எழுந்தார்.

“இதுக்கெல்லாம் போய் டென்ஷன் ஆவாங்களாம்மா... நாங்கக் கூட்டிட்டு வரோம்... நீங்க எடுத்து வைங்க மா... பசிக்குது...” என்றுக் கூறி ராகேஷும் மூர்த்தியின் பின்னால் சென்றான்.

மூர்த்தியின் அபீஸ் ரூமில் சவிதா மும்முரமாக குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள். அருகில் அரவம் கேட்கவும் நிமிர்ந்துப் பார்த்தவள் “வந்துட்டீங்களா?” என்று உற்சாகமாகக் கேட்டாள்.

ஸ்டேஷனில் நடந்தவற்றைக் கூறினான் ராகேஷ். சவிதா அவன் பேச்சில் கவனமாக இருக்க அவள் எழுதி வைத்திருந்தக் குறிப்புகளை எடுத்து ஆராய்ந்தார் மூர்த்தி.

அதை மேலோட்டமாகப் படித்துப் பார்த்தவர் “எப்படி மா தனியா உக்காந்து இவ்வளவையும் எடுத்த?” என்று ஆச்சரியமாகக் கேட்டுப் புன்னகைத்தார்.

அப்போது உள்ளே வந்த பிரேமா இவர்களைப் பார்த்து இடுப்பில் கை வைத்து “இது தான் நீங்க அவளக் கூட்டிட்டு வர லட்சணமா? மூணும் ஒரேக் குட்டைல ஊறுன மட்ட...” என்றுக் கத்தினார்.

மூவரும் அவரைத் திரும்பிப் பார்க்க “ஏய் எழுதனதுப் போதும்... எந்திச்சு வா டி... ராகேஷ் நீ போ டா முதல்ல...” என்றுக் கூறியவர் மூர்த்தியைப் பார்த்து “வந்துத் தொலைங்க... மனுஷனுக்குப் பசி உயிர் போகுது...” என்றுக் கூறி வேகமாக வெளியேச் சென்றார்.

“என்னமா மரியாத குடுக்கறாப் பாத்தியா?” என்றுக் கூறிக் கொண்டே இருவரையும் வெளியில் அழைத்து வந்தார் மூர்த்தி. அனைவரும் சாப்பிட அமர்ந்ததும் மூர்த்தி “பிரேமா நீ உக்காரு” என்றுக் கூறி அனைவருக்கும் அவரேப் பரிமாறினார்.

எல்லோருமே நல்லப் பசியில் இருந்ததால் அமைதியாக உண்டு முடித்து எழுந்தனர். “ராகேஷ் நீங்க மேல ரூம்லப் படுத்துக்கோங்க... உங்க பேக் அங்க வெச்சிருக்கேன்...” என்றுக் கூறினார் பிரேமா.

“சரி மா” என்றவன் சவிதாவிற்கு மேலே செல்வதாகக் கண்ணைக் காட்டி விட்டுப் படிகளில் ஏறிச் சென்றான். “கோவம் போச்சா?” என்று மூர்த்தி கேட்க “ஆமா... கோவப்பட்டா மட்டும் அப்படியே என் பேச்சக் கேட்டு நடக்கப் போற மாதிரி...” அலுத்துக் கொள்வதுப் போல் கூறினாலும் புன்னகையுடனேக் கூறினார் பிரேமா.

மூர்த்தி பதில் ஏதும் கூறாமல் சிரித்து விட்டுச் சென்றார். அவர்களின் புரிதல் சவிதாவை வியக்க வைத்தது. பிரேமாவிற்கு அனைத்தையும் எடுத்து வைப்பதில் உதவி விட்டு சவிதாவும் மேலேச் சென்றாள்.

அறைக்குள் ராகேஷ் கட்டிலில் படுத்திருக்க சவிதா நுழைந்ததும் கையை நீட்டி வா என்றழைத்தான். வேகமாகச் சென்று அவன் அருகில் படுத்தாள் சவிதா. ராகேஷ் அமைதியாக அவள் முடிக் கொதியபடிப் படுத்திருந்தான்.

“எனக்கு என்னமோப் புதுசா ஒருத்தர் வீட்டுலத் தங்குற மாதிரியே இல்ல சவி... ஏதோ என்னோட வீடு மாதிரித் தோணுது” என்றுக் கூறினான் ராகேஷ். அவன் நெஞ்சில் தலை வைத்துப் படுத்திருந்த சவிதா “ம்ம்... நான் ஒண்ணுக் கேக்கவா?” என்றாள். குனிந்து அவளைப் பார்த்தான் ராகேஷ்.

“நம்ம அடிக்கடி இங்க வரலாமா? முடிஞ்சா அப்பப்போ வந்துத் தங்கலாம் ராகேஷ். மாமா ரொம்ப சந்தோஷப் படுவாங்க... கண்டிப்பா அத்தையக் கைலப் புடிக்க முடியாது...” என்றுக் கூறி நிமிர்ந்து ராகேஷின் முகம் பார்த்தாள்.

அவள் கூறியதைக் கேட்டுப் புன்னகைத்த ராகேஷ் “நான் கேக்கணும்னு நெனச்சேன்... நீ கேட்டுட்ட” என்றுக் கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டான். “வரலாம் சவி” என்று அவன் கூற சவிதா அமைதியாகி விட்டாள்.

சிறிது நேரம் கழித்து ராகேஷ் மீண்டும் குனிந்து சவிதாவின் முகம் பார்த்தான். அவள் எதையோத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பதுத் தெரிந்தது. மெல்ல அவள் கன்னம் வருடியவன் அப்போதும் அவள் கவனம் தன் பக்கம் இல்லை என்றதும் “என்ன சவி?” என்றுக் கேட்டான்.

“ம்ம்ஹும்...” என்றவள் முகத்தை அவன் மார்பில் புதைத்துக் கொண்டாள். அவள் தாடையைப் பிடித்து அவள் முகத்தை நிமிர்த்தியவன் என்ன என்றுக் கண்களால் கேள்விக் கேட்டான். அவனையே இமைக்க மறந்து சில நொடிகள் பார்த்தாள் சவிதா.

“எதையும் நம்ப முடியலல்ல?” என்று அவள் கேட்க “எத நம்ப முடியல?” என்றுப் புரியாமல் கேட்டான் ராகேஷ். மீண்டும் அவன் நெஞ்சில் முகத்தை புதைத்துப் படுத்தவள் “யாரையும் எடைப் போட முடியல ராகேஷ்” என்றாள்.

அவளைத் தன்னிடமிருந்து விளக்கிப் படுக்க வைத்து அவள் புறம் திரும்பிக் கையைத் தலைக்கு முட்டுக் கொடுத்துப் படுத்தவன் “யாரப் பத்திப் பேசுற?” என்றுக் கேட்டான்.

“நம்மள சுத்தி இருக்கவங்க தான்... நீங்க, மாமா, தேவியோட அப்பா...” என்று சவிதா கூற அமைதியாக அவளைப் பார்த்தான் ராகேஷ். அவனைப் போலவே அவன் புறம் திரும்பிப் படுத்த சவிதா “உங்கள முதல் தடவைப் பார்த்ததுக்கும் இப்போப் பார்க்குறதுக்கும் எவ்வளவு வித்தியாசம்?” என்றாள்.

அவள் கூறிய விதத்தில் சிரித்துவிட்டான் ராகேஷ். “சிரிக்காதீங்க... உண்மைய தான் சொல்றேன்...” என்று சவிதா முறைக்க “ம்ம்... சரி... அப்பறம்” என்றான்.

“மாமாவ முதல் தடவைப் பார்த்தப்போ... அம்மாடியோவ்... எவ்வளவு பயமா இருந்துது... ஆனா இப்போ... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி... எல்லாரும் வீட்டுலயும் வெளியவும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்கல்ல... என்ன தான் இருந்தாலும் குழந்தை இல்லைன்ற வருத்தம் அத்தைக்கு இருந்துட்டே தான் இருக்கும்.

அது மாமாவுக்கும் இருக்கும். இருந்தாலும் அதை மறைச்சுக்கிட்டு அத்தையப் புரிஞ்சுக்கிட்டு... எந்த விஷயத்துலயும் அவங்க மனசு நோகாம நடந்துக்குறாங்களே... அவங்க ரெண்டுப் பேரையும் பார்த்தா சில நேரம் பொறாமையாக் கூட இருக்கு ராகேஷ்...”

சவிதாவின் விழியோரம் வழிந்தக் கண்ணீரை ஒற்றை விரலால் சுண்டினான் ராகேஷ். சவிதா புன்னகைக்கவும் “அதான் நம்ம இருக்கோமே... இனிமே அவங்களுக்கு எல்லாமே நம்ம தான்... இதுக்கு எதுக்கு இப்படிக் கண் கலங்குற?” என்று ஆதரவாகக் கூறினான்.

உடனே தன்னை சரி செய்துக் கொண்ட சவிதா “தேவியோட அப்பா... எடுத்ததும் பொண்ணோடக் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டு அப்பறம் மாத்திப் பேசி... என்னமோ... அது அவங்கக் குடும்பப் பிரச்சன...” என்றுத் தோளைக் குலுக்கினாள்.

ராகேஷ் “ம்ம்... அது நமக்குத் தேவையில்ல” என்றான். “சில சமயங்கள்ல நம்மள சுத்தி இருக்கவங்கள எடுத்தவுடனே நம்மளாலப் புரிஞ்சுக்க முடியாமப் போயிடுது... அவங்கள நம்மப் பார்க்குற முதல் பார்வை வெறும் கானல் நீரா மாறிடுதுல்ல...”

ராகேஷ் புன்னகையுடன் “அர்த்த ராத்திரியில உன் ஆராய்ச்சி நல்லா இருக்கு” என்றுக் கிண்டலாகக் கூறினான். சவிதா அவனை முறைக்கவும் “சரி... என்னை நீ முதல்லப் பார்த்தப்போ என்ன நெனச்ச? இப்போ நான் எப்படி மாறிட்டேன்னு சொல்லுற?” என்று ஆர்வமாகக் கேட்டான்.

“அதெல்லாம் சொல்ல முடியாது... அர்த்த ராத்திரில உங்கக் கேள்வி நல்லாவே இல்ல...” என்றுக் கூறி அவனுக்கு முதுகுக் காட்டிப் படுத்தாள் சவிதா. “ஓஹோ... அப்போ வேற என்ன நல்லா இருக்கும்?” என்றுக் கேட்டபடி அவளைப் பின்னால் இருந்து அணைத்தான் ராகேஷ்.

அடுத்த நாள் காலை கோர்ட்டிற்கு மூர்த்தி, ராகேஷ், சவிதா மூவரும் ஒன்றாகக் கிளம்பிச் சென்றனர். மூர்த்தி முன்னே காரில் செல்ல ராகேஷும் சவிதாவும் பைக்கில் பின் தொடர்ந்தனர். பிரேமா இதைப் பார்த்து உதட்டில் உறைந்தப் புன்னகையுடன் வீட்டினுள் சென்றார்.

முத்து இவர்களுக்கு முன் வந்து கோர்ட்டில் காத்திருந்தான். ஹியரிங் மதியம் என்பதால் அதற்குள் அரெஸ்ட் வாரன்ட் வாங்கி அந்த நகைக் கடை ஓனரைக் கைது செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் விரைவாகச் செய்து முடித்தான் பிரபு.

அவர் வீட்டிற்கேச் சென்று அவரைக் கைது செய்தனர். முருகனும் சேகரும் ஏற்கனவேப் பிடிப்பட்டு எல்லா உண்மைகளையும் கூறி விட்டதால் அவரும் இதற்கு மேல் மறைக்க முடியாது என்று குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

“என் எதிர்க்க சின்னக் கடை வெச்சிருந்தப் பய... என்கிட்டயே வந்து 'கடைய விரிவுப் படுத்தி திறப்பு விழா வெக்கப் போறேன்... நீங்க தான் வந்துத் தொரந்துக் குடுக்கணும்’ னு சொன்னா எப்படி இருக்கும்?

அவனெல்லாம் நிக்க வெச்சு சுடணும்னுக் கோவம் வந்துச்சு... அதான் சேகர் வந்து ஆக்சிடெண்ட் மாதிரி செட்டப் பண்ணிப் போடலாம்னு முருகன் சொன்னதா சொன்னப்போ சுட்டு தான் கொல்லணும்னு சொல்லிட்டேன்” என்று அவர் வாக்கு மூலம் கொடுத்த போது பிரபுவிற்கு அவரை அரைய வேண்டும் என்றுத் தோன்றியது.

இதைக் கேட்ட மூர்த்தி “மனுஷனுக்கு பொறாமை வந்துட்டா புத்தி மழுங்கிடும் போல” என்றுக் கூறி விட்டு கோர்ட்டில் ஆக வேண்டியக் காரியங்களை கவனித்தார். தேவையான சாட்சியங்கள் இருந்ததாலும் குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக் கொண்டதாலும் அவர்களுக்கு உடனே தண்டனை வழங்கப் பட்டது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
35

நீதிமன்றத்தில் அணைத்து வேலைகளையும் முடித்து விட்டு வீட்டிற்கு வந்த சவிதா, ராகேஷ், மூர்த்தி மூவரும் மிகவும் களைத்திருந்தனர். முத்து அங்கிருந்தேக் கிளம்பிச் சென்றிருந்தான்.

முன் தினம் போல் கோபிக்காமல், அவர்களின் சோர்ந்த முகத்தைப் பார்த்தவுடன் அமைதியாக இருந்தார் பிரேமா. நேரம் கடந்து விட்டதால் விரைந்து உணவை எடுத்து வைத்தார். எதுவும் பேசாமல் உண்டவர்கள் களைப்புத் தீர சிறிது நேரம் தூங்கி எழுந்தனர்.

மாலை ராகேஷ் கண் விழித்தபோது சவிதா அவன் அருகில் படுத்து அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். “ஏய்... எந்திரிச்சு போ டி... எப்போப் பாரு குறு குறுன்னு வெச்சக் கண்ணு வாங்காமப் பாத்துக்கிட்டே இரு...” என்று அருகில் இருந்தத் தலையணையை அவள் மீது எடுத்து எறிந்தான்.

வாய் விட்டு சிரித்த சவிதா “நான் அப்படி தான் பார்ப்பேன்...” என்றுக் கூறி எழுந்து அறையை விட்டு ஓடி விட்டாள். அவள் கீழே வந்தபோது பிரேமா மாலை சிற்றுண்டித் தயார் செய்துக் கொண்டிருக்க அவருடன் பேசிக் கொண்டே அவருக்கு உதவினாள்.

ராகேஷும் எழுந்து வந்ததும் அனைவரும் ஹாலில் அமர்ந்து டீ குடித்து, கொறித்துக் கொண்டே பேசத் துவங்கினர். “அப்பா நாங்க நாளைக்கும் இங்கத் தங்குறோம்” என்றுக் கூறி ஒரு பிஸ்கட்டை எடுத்து சாப்பிட்டான் ராகேஷ். “இது உன் வீடு டா” என்றுக் கூறிய மூர்த்தி இந்த கேஸைக் குறித்து பிரேமாவிடம் சொல்ல ஆரம்பித்தார்.

பிரேமா மூர்த்தி பேசுவதைக் கேட்டாலும் சவிதாவின் கையை அழுந்தப் பற்றியிருந்தார். சவிதா ஒரு முறை அவரை திரும்பிப் பார்த்து புன்னகைத்து விட்டு மூர்த்தியின் பேச்சைக் கேட்க ஆரம்பித்தாள். ராகேஷும் இதை கவனித்தாலும் முகத்தில் எதையும் காண்பிக்கவில்லை.

முத்து கோர்ட்டிலிருந்து நேராக தேவியின் வீட்டிற்குச் சென்றான். “உன்ன இங்க வர வேணாம்னு சொன்னேன்ல?” என்றுக் கையைப் பிசைந்து ஹாலில் அமர்ந்திருந்த தந்தையைப் பதட்டமாகப் பார்த்தாள் தேவி.

அவளை ஒரு முறைப் பார்த்து விட்டு நேராக அவள் தந்தையிடம் சென்றவன் “மாமா நான் தேவிய எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன். நாளைக்கு நாள் நல்லா இருக்கு. பொண்ணுப் பாக்க வந்துட்டு அப்படியேத் தட்டு மாத்திக்கலாம்னு அம்மா சொல்ல சொன்னாங்க” என்றான். “சரி பா” என்று சிரித்துக் கொண்டே கூறினார் குமரன்.

தேவியைப் பார்த்து “சீக்கிரம் கெளம்பு” என்று முத்து கூறியதும் துள்ளி குதித்து உள்ளே ஓடியவள் பத்து நிமிடத்தில் தயாராகி வந்தாள். அதற்குள் பூமா கொடுத்த டீயை குடித்து முடித்திருந்தான் முத்து.

தேவி வந்ததும் அவர்களிடம் சொல்லிக் கொண்டுக் கிளம்பினான். வண்டியில் தேவியின் வீட்டுத் தெருவைத் தாண்டியதும் “ஏன் முத்து இந்தப் பக்கம் போற? உங்க வீடு அந்த சைட் இருக்கு...” என்றாள் தேவி.

“எல்லாம் தெரியும்... இப்படியும் போகலாம்...” என்றுக் கூறி வண்டியை ஓட்டினான் முத்து.

“இந்த ரூட்ல ட்ராபிக் அதிகம் முத்து...”

“பாத்தாலேத் தெரியுது...”

“இப்படிப் போனா ஒன் வே முத்து...”

“போர்ட் பாத்தேன்...”

“ஐயோ இப்போ எதுக்கு பஸ் ஸ்டாண்டுக்குப் போற?”

“பஸ் ஸ்டான்ட பாக்குறதுக்கு...”

“உங்க வீட்டுக்கு இந்த சந்துலப் போனா சீக்கிரம் போய்டலாம்...”

“எங்க வீட்டுக்குப் போக எனக்குத் தெரியும்...”

“ஏதாவதுக் கடைக்குப் போகணுமா?”

“ஏன் உனக்குப் போகணுமா?”

“எதுக்கு இந்தப் பக்கம் போற? உங்க வீட்டுக்கு எதிர் சைட் போகணும் முத்து...”

“நீ எனக்கு வழி சொல்லுறியா?”

“ஒரு மணி நேரமா எதுக்கு டா இப்படி ஊற சுத்திக் காமிக்குற?”

“புரிஞ்சா சரி”

கடைசியாக முத்துவின் வீட்டின் வெளியே வண்டியை நிறுத்தியதும் இறங்கிய தேவி அவனை முறைத்தாள். “உள்ளப் போடி... நானும் இப்படி உன்ன பைக்ல வெச்சு ஊர் சுத்தணும்னு எத்தன நாளா ஆசப் பட்டேன்... விட்டாரா உங்கப்பா... அதான்...” என்றுக் கூறி அவள் கை பற்றி உள்ளே அழைத்துச் சென்றான்.

முத்துவின் வீட்டில் தேவியை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினர். முத்துவின் தாய் அறையை விட்டு வெளியேச் சென்ற நேரம் தேவியை அணைத்து அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டு விடுவித்து விட்டு “மா சாப்பாடு எடுத்து வை” என்றுக் கூறிக் கொண்டே வெளியேச் சென்று விட்டான் முத்து.

தேவி தான் அவனின் திடீர் தாக்குதலில் நிலைக் குலைந்துப் போனாள். அதன் பின் அவனுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட போதும் அவனுடன் மீண்டும் பைக்கில் வீடு வரை வந்த போதும் அவள் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. வீட்டிற்குள் செல்லும் முன் முத்துவை திரும்பிப் பார்த்தவள் “ஐ லவ் யூ” என்றுக் கூறி உள்ளே ஓடிச் சென்றாள்.

முத்து சிரிப்புடன் மொபைலை எடுத்து “இந்த பர்ஸ்ட் கிஸ் லைப் புல்லா மறக்க மாட்டேன்” என்று அவளுக்கு மெசேஜ் அனுப்பி விட்டு பைக்கை ஸ்டார்ட் செய்துக் கிளம்பிச் சென்றான்.

அடுத்த நாள் தேவியின் வீட்டிற்குப் பெண் பார்க்க வந்துப் பெரியவர்கள் கலந்தாலோசித்துக் கல்யாண நாளை உறுதி செய்துக் கொண்டனர். முத்து “அப்போ நான் தேவிய வெளிலக் கூட்டிட்டுப் போலாம்ல மாமா?” என்று ஆர்வமாகக் கேட்டதற்கு “இன்னும் 13 நாள் தான் இருக்கு... அப்படியெல்லாம் வெளில அனுப்ப முடியாது” என்றுக் கறாராகக் கூறி விட்டான் பிரபு.

அவனை முறைத்து அமைதியானான் முத்து. திருமணம் வரை முத்துவும் தேவியும் போனில் தங்கள் காதலை வளர்க்கத் தீர்மானித்தனர். தேவியை ப்ராக்டீஸ் செய்யத் தயார் செய்யக் கூறினான் முத்து.

மூர்த்தியின் வீட்டில் சவிதாவும் பிரேமாவும் சேர்ந்து மூர்த்தியையும் ராகேஷயும் இம்சித்துக் கொண்டிருந்தனர். சவிதா “அத்தை... இவங்க செய்யுற பிரியாணியை நீங்க தான் சாப்பிட்டு இருப்பீங்களே... என்ன இருந்தாலும் நம்ம செய்யுறதெல்லாம் அப்படி வர மாட்டேங்குது இல்ல அத்தை...” என்று ராகேஷை பார்த்துக் கொண்டே ராகம் போட்டாள் சவிதா.

“ஆமா அமா... ராகேஷ் நீ பிரியாணி செஞ்சே ரொம்ப நாள் ஆச்சு டா...” என்று பிரேமா கூற “இன்னைக்கு செய்யேன்” என்றார் மூர்த்தி.

“செய்யேன்னா? போய் சிக்கென் வாங்கிட்டு வந்துக் குடுங்க...” என்று அவரை விரட்டினார் பிரேமா.

“உன் முன்னாடி வாயேத் தொறக்க முடிய மாட்டேங்குது...” என்று முனகியபடிக் கிளம்பிச் சென்று சிக்கென் வாங்கி வந்தார் மூர்த்தி.

ராகேஷ் சவிதாவை முறைத்து சமையலறையுள் சென்றுத் தேவையான மசாலாவை அரைக்க ஆரம்பித்தான். மூர்த்தி கடையில் இருந்து வந்து சிக்கென் கவரை நீட்டவும் “புள்ள சமைக்குறான்... உங்களுக்கு என்ன இங்க வேல... போய் ஹெல்ப் பண்ணுங்க” என்றுக் கூறி மூர்த்தியையும் கிட்செனுள் தள்ளி விட்டார் பிரேமா.

மூர்த்தி கடுப்புடன் அருகில் இருந்த கரண்டி ஒன்றை எடுத்து ராகேஷின் முகத்தின் முன்னால் நீட்டி “டேய் நான் அட்வகேட் டா... ஜட்ஜ்லேருந்து ரௌடி வரைக்கும் ஒருப் பய என் முன்னாடி வாயத் தொறக்க மாட்டான்... வீட்டுல இருக்கவக் கொஞ்சமாவது பயப்படுறாளா? இப்படி நான் கிட்சென் உள்ள நிக்குறத எவனாவதுப் பார்த்தான்........” என்றுப் புலம்பினார்.

“நான் கட்டுனவ மட்டும் எனக்கு பயப்படுறாளா? விடுங்க பா... நம்ம வீட்டுல நம்ம சமைக்குறோம்... சரி..... அப்படியே அந்தக் கரண்டிய வெச்சு இதக் கொஞ்சம் கிண்டுங்க... நான் மசாலா அறைச்சுக்குறேன்” என்று ராகேஷ் கூறியதும் “ச்சை... இதெல்லாம் ஒருப் பொழப்பு...” என்றுப் புலம்பிக் கொண்டே அவன் கூறியவற்றை செய்யத் துவங்கினார் மூர்த்தி.

சமைத்து முடித்ததும் “நீங்க ரெண்டுப் பேரும் போய் உட்காருங்க...” என்று சவிதா கூற “நாங்கப் பரிமாருறோம்” என்றார் பிரேமா. “சமச்ச எங்களுக்குப் பரிமாறவும் தெரியும்” என்றுக் கடுப்புடன் மூர்த்தி கூற “நீங்கப் போய் உட்காருங்க” என்றான் ராகேஷ். பிரேமாவும் சவிதாவும் சிரித்தபடியே சென்று சாப்பிட அமர்ந்தனர்.

அடுத்த நாள் காலை ராகேஷும் சவிதாவும் புறப்பட்ட போது “நீங்கக் கிளம்பிட்டா வீடே வெறிச்சோடிப் போயிடும் டா...” என்றுக் கூறி சவிதாவின் தலைக் கோதினார் பிரேமா.

மூர்த்தி ராகேஷின் அருகில் நின்று இதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் திரும்பிய ராகேஷ் “கண்டிப்பா அடிக்கடி வந்துத் தங்குறோம் பா” என்றுக் கூறினான். மூர்த்தி அவனை ஒரு முறை தோளோடு அணைத்து விட்டார்.

அங்கிருந்துக் கிளம்பி வீடு வந்து சேர்ந்தனர் ராகேஷும் சவிதாவும். வெளியில் மாட்டி வைத்திருந்த நேம் போர்டை பார்த்ததும் அதன் அருகில் சென்று நின்று ஒருக் கையால் போர்டின் ஒருப் பகுதியை மறைத்து “Mrs. Rakesh” என்று சிரிப்புடன் கூறி வீட்டின் உள்ளேச் சென்றாள் சவிதா.

புன்னகையுடன் அவள் பின்னால் வந்த ராகேஷ் கையிலிருந்த கேஸ் கட்டுகளை டேபிளில் வைத்து விட்டு சோபாவில் அமர்ந்தான். பாகை அறைக்குள் வைத்து விட்டு ப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடித்தாள் சவிதா.

அவளைப் பார்த்து வா என்றுக் கண்ணை மூடித் திறந்துக் கையை நீட்டி அழைத்தான் ராகேஷ். சவிதா ஒரு கையில் பாட்டிலுடன் அருகில் வந்து அவன் கையில் தன் கையை வைத்ததும் வேகமாக அவளை இழுத்துத் தன் மடியில் அமர வைத்தவன் அவளைப் பின்னாலிருந்து கட்டி அணைத்து அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.

சவிதா முதலில் அதிர்ந்து பின் ராகேஷின் தலை மீது தன் தலையை சாய்த்துக் கொண்டாள். “இனிமே இப்படி தான் இருப்போம் இல்ல... கேஸ் கோர்ட்டுன்னு ஒண்ணா சேந்துப் போயிட்டு வந்து... என்ன... கொழந்தப் பொறந்தா தான் கஷ்டம்...” என்றுக் கூறி சிறிது இடைவெளி விட்டான்.

சவிதா ராகேஷ் கூறியதைக் கேட்டுத் தலைக் குனிந்துக் கொண்டாள். அவன் அவ்வாறுக் கூறியதுமே ராகேஷை போலவே ஒரு குழந்தை அவளை வம்பிழுப்பதுப் போல் கற்பனை செய்துப் பார்த்தாள்.

“சீக்கிரம் ரெடிப் பண்ணிடலாமா? உன்ன மாதிரியே அழகா...”என்று ராகேஷ் கூறத் திரும்பி தன் கையில் இருந்த பாட்டிலை வைத்து அவன் வாயில் லேசாக அடித்து “போங்க ராகேஷ்...” என்றுக் கூறி எழுந்து ஓடினாள். “நில்லு டி... நெஜமா தான் கேக்குறேன்...” என்றுக் கூறி அவள் பின்னால் சென்றான் ராகேஷ்.

முற்றும்
 




BUVANESWARI

இணை அமைச்சர்
Joined
Jan 18, 2019
Messages
677
Reaction score
805
Location
thirunelveli
Nalla iruku sis story..........ana Rakesh avan own patents ahh rmba consider pannadha mathiri iruku🙄🙄🙄.......😅😅y........story super sis....congrates
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
2

காலை கல்லூரியை அடைந்த சவிதா உள்ளே நுழையும்போதேத் தன் நண்பனுடன் பேசிக் கொண்டே நடந்துச் சென்ற ராகேஷை கண்டாள். அவனைப் பின்னால் இருந்துப் பார்த்தவுடன் எப்படித் தன்னால் அடையாளம் காண முடிந்தது என்ற யோசனையுடனே அவர்கள் இருவரின் பின்னால் நடக்க ஆரம்பித்தாள்.

நான்கடி நடந்ததும் முன்னேச் சென்ற இருவரின் நடையின் வேகமும் குறைந்ததால் இவளும் அவர்களுக்கேற்றார் போல் மெதுவாக நடந்தாள். அடுத்த இரண்டடியில் அவர்களின் வேகம் இன்னும் மட்டுப்பட்டது.

அவ்வளவு மெதுவாக நடப்பதுக் கஷ்டமாக இருந்ததால் அவர்களைக் கடந்து செல்ல நினைத்தாள். அவர்கள் வலதுப் புறமாக நகர்ந்து நடப்பதுத் தெரிந்ததும் இவள் இடது புறமாக அவர்களைத் தாண்டிச் செல்ல முயன்றாள். ஆனால் அவள் ஓரடி எடுத்து வைத்ததுமே அவர்கள் இருவரும் இடது புறம் நகரவும் எரிச்சலடைந்தாள் சவிதா.

இவர்கள் ஏன் இப்படி நடக்கிறார்கள் என்றுத் தெரிந்துக் கொள்ள அவர்களை விட்டு சிறிதுத் தள்ளி வந்து எட்டிப் பார்த்தாள். அந்த இருவரின் முன் மூன்று மாணவிகள் பேசி சிரித்து இடமும் வலமும் ஆடியபடி மெதுவாக நடந்துக் கொண்டிருந்தனர். அவர்களால் தான் ராகேஷும் அவன் நண்பனும் இப்படி நடக்கின்றனர் என்று சவிதாவிற்கு புரிந்தது.

அவள் இதை ஊகித்த சமயம் “ஏய்” என்று கர்ஜித்தான் ராகேஷ். அந்த மாணவிகளின் செய்கைகளை ஆராய்ந்தபடி நடந்த சவிதாவிற்கு ராகேஷின் குரல் கேட்டுத் தூக்கி வாரிப் போட்டது.

ராகேஷிற்கு சிறிது இடைவெளி விட்டுப் பின்னால் இருந்த சவிதாவிற்கே இந்த நிலைமை என்றால், அவனுக்கு ஓரடி தொலைவில் முன்னால் இருந்த மூன்று மாணவிகளில் ஒருத்தி “அம்மா” என்றுக் கத்தியே விட்டாள்.

அந்த மூன்றுப் பெண்களும் வேகமாகத் திரும்பிப் பார்த்தனர். ராகேஷை கண்டதும் ஒருத்திக் கத்தியவளைக் கையைப் பிடித்து இடதுப் பக்கம் இழுத்துச் செல்ல மற்றொருத்தி வலதுப் புறம் நகர்ந்தாள்.

அந்த மூன்று மாணவிகளும் வழி விட்டதும் “ஆடி அசஞ்சுக்கிட்டு...” என்று எரிச்சலாக முணுமுணுத்து விட்டு வேக நடையுடன் அவர்களைக் கடந்துச் சென்றான் ராகேஷ்.

“என்ன இப்படிக் கத்துறாங்க? ஆனா இந்தப் பொண்ணுங்களும் எவ்வளவு மெதுவா நடந்துப் போறாங்க... வழியும் விடாம... ச்ச...” என்று அந்த மூவரையும் ஒரு முறைப் பார்த்த சவிதா அவர்களைக் கடந்து வகுப்பறை நோக்கிச் சென்றாள்.

ராகேஷ் அவன் நண்பர்கள் இருக்குமிடம் வந்தான். “வா டா...” என்று சரவணன் வரவேற்கவும் அவனுக்குத் தலையசைத்து விட்டு “முத்து அவிங்க என்ன சொன்னாய்ங்க?” என்று இதுவரை அவனுடன் நடந்து வந்த நண்பனிடம் கேட்டான் ராகேஷ்.

“அவிங்க என்னத்த டா சொல்லுவாய்ங்க? அதையே தான் திரும்பத் திரும்ப சொல்லிட்டுத் திரியுறாய்ங்க... எல்லாம் அந்த வசந்த் பய பண்ணுற வேலை... அவன நாலுத் தட்டு தட்டுனா அடங்குவாய்ங்க மாப்புள... அது வர இப்படி அளப்பறையக் குடுத்துட்டு தான் இருப்பாய்ங்க...” என்றான் முத்து.

“அவன் மேலக் கை வெச்சா அதையே சாக்கா வெச்சு அவன் கூட இருக்கவய்ங்க ஓவரா பண்ணுவாய்ங்க... கொஞ்ச நாள் பாப்போம்...” என்றுப் பொறுமையாக எடுத்துக் கூறினான் ராகேஷ்.

“என்னத்தப் பாப்பியோ? இந்த வசந்த் ஏன் பங்காளி இப்படி இருக்கான்... நம்ம செட் தான அவனும்... ஜூனியர் ஒரு பய அவன மதிக்கறதில்ல... எல்லா எடத்துலயும் போய் சவுண்ட் குடுத்து அசிங்கப்பட்டு வரான்...

ஆனாத் தெளிவா கோஷ்டித் தகறார ஆரம்பிச்சு வெச்சுட்டு எஸ்கேப் ஆகிடறான்... ஒவ்வொரு வாட்டியும் இவனுக்கு மட்டும் எங்கேந்து தான் காரணம் கெடைக்குதோ மூட்டி விட?” என்று அலுத்துக் கொண்டான் முத்து.

முத்து கூறியதைக் கேட்டதும் அவன் அருகில் நின்றிருந்த சரவணன் “அவனுக்கு ஜால்ரா தட்டுறதுக்கும் ஒரு கும்பல் இருக்கு டா... ஜூனியர்ஸ் சிலப் பயலுகள அடக்கி வெக்கணும்... அவிங்க தான் மச்சான் இவனுக்காகப் பிரச்சனப் பண்ணுறது...” என்றான.

சரவணன் சொன்ன விஷயம் ஒன்றும் புதிதில்லை. சில வருடங்களாக இவர்கள் கண் கூடாகப் பார்த்து, பல நாட்களாகத் தங்களுக்குள் பேசி விவாதிக்கும் விஷயம் என்பதால் “ம்ம்... சான்ஸ் கெடைக்காமயாப் போயிடும்? அப்போப் பார்த்துக்கலாம்...” என்றான் ராகேஷ்.

“எங்க டா... போன வருஷம் இப்படி தான்... ஜூனியர்ஸ்கு காலேஜ் தொறந்து முதல் நாளே என்னத்தையோ சொல்லி அந்தப் புதுப் பயலுகளுக்குள்ள மூட்டி விட்டுட்டான். வந்தன்னைக்கே ஆவாமப் போச்சுன்னா அப்பறம் வருஷம் முச்சூடும் அடிச்சுட்டு தான இருப்பாய்ங்க? இந்த வசந்த் நடுலப் பூந்து நாட்டாமை பண்ணுறேன்னுத் தெளிவா அவனுக்கு சப்போர்ட் பண்ண ஆள் சேர்த்துக்கறான்” என்றான் முத்து கடுப்பாக.

இவ்வளவு நேரமாக அமைதியாக நின்ற செந்தில் “அவன் நம்ம கேங் ல எல்லாரையும் பாத்து சவுண்ட் விடுவானேத் தவிர பய புள்ளைக்கு உள்ளுக்குள்ள ஒரு டர்ர் இருக்கு... எங்கக்கிட்டயாவது சவுண்ட் குடுக்கறான். உன்னப் பாத்தா மட்டும் தான் டா பம்முறான்... அதனால தான் மச்சான் உன்ன தட்ட சொல்லுறோம்...” என்று ராகேஷிடம் கூறினான்.

“சரி டா... கிளாஸ் போங்க... நான் மூர்த்தி சார் பார்த்துட்டு வரேன்... இன்னைக்கு காலேஜ் வந்திருக்காராம்...” என்றுக் கூறி நண்பர்களிடம் விடைப்பெற்று அவ்விடம் விட்டு நகர்ந்தான் ராகேஷ்.

சவிதா கிளாஸ் செல்லும் வழியில் சில மாணவர்கள் கும்பலாக நிற்க அவர்களைத் தாண்டி செல்லும்போது “ஹே புள்ள இங்க வாத்தா (வா ஆத்தா)... சீனியர்ஸ் நிக்குறோம்... கண்டுக்காமப் போற?” என்றுக் கூவினான் ஒருவன்.

அங்கே அவனுடன் சேர்த்து ஐந்து மாணவர்கள் நின்றிருக்க சவிதா “வேற வேலையே இல்லையா இவிங்களுக்கு?” என்று மனதிற்குள் திட்டியபடி அவர்கள் முன் போய் நின்றாள்.

“உன் பேரு என்ன?” என்றான் அங்கு நடுவில் நின்றிருந்த ஒருவன். “மூஞ்சியப் பாரு கருங்கொரங்கு மாதிரி...” என்று மனதிற்குள் அவனை வசைப் பாடி விட்டு “சவிதா” என்றாள் அலட்சியமாக.

“என்னண்ணே இந்தப் பொண்ணு உங்களுக்கு பயப்பட மாட்டேங்குது...” என்று அவன் அருகில் நின்ற ஒருவன் ஏத்தி விடும் வேலையை மிகச் சரியாக செய்தான்.

அவனைத் திரும்பிப் பார்த்து விட்டு சவிதாவிடம் “இந்தாப் புள்ள... நான் சொல்லுறதுக்கெல்லாம் ஆப்போசிட் சொல்லு...” என்றான் பெயரைக் கேட்டவன். “ம்ம்” என்று மீண்டும் அலட்சியமாகவே சொன்னாள் சவிதா.

“ரைட்”

“லெப்ட்”

“குட்”

“பாட்”

“பாய்”

“கேர்ள்” சவிதாவிற்கு பொறுமைப் பறந்துக் கொண்டிருந்தது.

“ஐ ஹேட் யூ”

...... “அடக் கொரங்கே...” என்று மனதிற்குள் நினைத்து அவனுக்கு என்ன பதிலடிக் கொடுப்பது என்று யோசித்து அவனைத் திட்ட வாயைத் திறந்தாள் சவிதா.

திடீரென்று “ஹான்... ஐ லவ் யூ...” என்று நக்கலாக அவளுக்குப் பின்னாலிருந்துக் கேட்டக் குரலில் மற்றவர்களின் பேச்சு நின்று அந்த இடமே நிசப்தமாகியது.

திரும்பிப் பார்த்தவள் அங்கு ராகேஷ் இவர்களை நோக்கி வருவதைக் கண்டாள். நடந்து வரும்போதே சவிதாவை கேள்விக் கேட்டவனிடம் பேச ஆரம்பித்தான் ராகேஷ்.

“பரதேசி... பொம்பளப் புள்ளைங்கக் கிட்ட வெச்சுக்காதன்னு உனக்கு எத்தன தடவ டா சொல்றது?” என்று உறுமினான் ராகேஷ்.

“வேணாம் ராகேஷ்...”

அதற்குள் ராகேஷை கண்டதும் அங்கு நின்றிருந்த மாணவர்கள் “அப்பறம் பாப்போம் வசந்த் அண்ணா” என்றுக் கூறி ஓட்டம் எடுத்தனர்.

அவர்களைப் பார்த்து “ஓடுறது எல்லாம் உன் அல்லக்கையா?” என்றுக் கேட்டான் ராகேஷ்.

முகத்தில் துளிர்த்திருந்த வியர்வை முத்துக்களை உள்ளங்கையால் துடைத்து “இதுல நீ தலையிடாத...” என்று நடுங்கியக் குரலில் கூறினான் வசந்த்.

“ராக் பண்ணுற மொகறையப் பாரு... ஹைதர் அலி காலப் பழைய டெக்னிக் டா இது...”

“அதப் பத்தி நீ சொல்லாத... நான்...”

இப்போது சவிதா அருகில் வந்திருந்தான் ராகேஷ். வசந்தின் தலையில் ஓங்கி ஒரு அடி வைத்தவன் “ஓடிடு...” என்று அடிக் குரலில் கூறினான். ராகேஷ் அடித்ததும் தலையை பிடித்த வசந்திற்கு அவனை சுற்றி இருந்த அனைத்துமே சுற்றுவதுப் போல் இருந்தது. ஒரு விதத் தள்ளாட்டத்துடன் அங்கிருந்து நகர்ந்தான்.

வசந்த் சென்றதும் தன் அருகில் நின்ற சவிதாவிடம் திரும்பிய ராகேஷ் “அவன் கூப்பிட்டுக் கேட்டா... இப்படி தான் பதில் சொல்லிட்டு நிப்பியா? போத்தா...” என்றுக் கூறித் தன் வழியேச் சென்றான்.

இது வரை வசந்திடம் அவ்வளவுக் கோபமாகப் பேசியவன் தன்னிடம் பேசும்போது எப்படி அவ்வளவுக் கோபத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்து சாதாரணமாக பேசினான் என்று ஆச்சர்யப் பட்டாள் சவிதா.

தன் தரப்பை விளக்குவதற்கு அவகாசமேக் கொடுக்காமல் சென்று விட்டானே என்று நினைத்தபொழுதேத் தோழிகள் அவனைக் குறித்துக் கூறியவை நினைவிற்கு வந்தன. நம்மிடம் பேசியதேப் பெரிய விஷயம் என்று எண்ணி நடக்க ஆரம்பித்தாள்.

வசந்த் சவிதாவை அழைத்தபோதே அந்தப் பக்கமாக வந்த முத்து அதைப் பார்த்து விட்டு முதலில் சவிதாவை காப்பாற்ற வசந்திடம் பேச எண்ணி ஒரு அடி எடுத்து வைத்தான்.

அப்போது அங்கு வந்த ராகேஷை கண்டதால் இனி அவன் பார்த்துக் கொள்வான் என்றுப் பேசாமல் நின்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான். வசந்திடமும் சவிதாவிடமும் பேசி முடித்து ராகேஷ் நகரவும் அவனிடம் சென்ற முத்து “நீ இருக்கன்ற தைரியத்துல அவன் முன்னாடிப் போய் நிப்பாளுங்களோ? இந்த வசந்த் திருந்தவே மாட்டான் டா...” என்றுக் கூறி அவனுடன் சேர்ந்து நடந்தான்.

சவிதா வகுப்பறைக்குள் நுழைந்ததும் “என்ன டி இவ்வளவு லேட்டா வர?” என்று தெய்வா கேட்கக் காலையில் நடந்ததைத் தோழிகளிடம் அப்படியே ஒப்பித்தாள் சவிதா. “ராகேஷ் அண்ணா உன்கிட்டப் பேசுனாரா?” என்று சம்பந்தமே இல்லாமல் தோழிகளுக்கு நடுவில் புகுந்து ஆச்சர்யமாகக் கேட்டாள் ப்ரியா.

சவிதா அவளை முறைத்து “உன் வேலையப் பாத்துட்டு போ...” என்று எரிச்சலுடன் கூற, ப்ரியா “ஹ்ம்ம்...” என்று வாயை கோணிக் கூறி விட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

ப்ரியா சென்றதும் “இது ஒரு லூசு... எப்போப் பாரு அடுத்தவங்க விஷயத்துல மூக்க நுழைக்கறதும்... ஓசில வாங்கித் திங்குறதுமே வேலையா வெச்சுக்கிட்டுத் திரியுது...” என்று அலுத்துக் கொண்டாள் தேவி.

அதன் பின் அன்று முழுவதும், அடுத்த நாளும் சவிதாவிற்கு ராகேஷை பார்க்கும் சந்தர்ப்பம் அமையாமல் போனது.

வெள்ளியன்று மாலை வீட்டிற்கு வந்த சவிதாவை வாசலிலேயே வழி மறித்து நிறுத்தினாள் பிரவீனா. “நாளைக்கு உனக்கு லீவ் தான?” என்றுக் கேட்டவளிடம் “ஆமா டி... அதுக்கு என்ன இப்போ?” என்று இருந்தக் களைப்பில் எரிச்சலாகக் கேட்டாள் சவிதா.

“சென்னைல தான் பெரியக் கோலம் போட முடியல... நீ தான் ரொம்ப பீல் பண்ணியே... சரி நாளைக்கு நம்ம வீட்டுக்கு முன்னாடியே கலர் கோலம் போடலாம்னு நெனச்சேன்... வேணாம்னா விடு...” என்றுக் கூறி வீட்டிற்குள் சென்றவளின் முன் வேகமாகப் போய் நின்ற சவிதா “நெஜமாவா ப்ரவீ? கலர் இல்லையே... என்ன செய்யுறது?” என்றுக் கேட்டாள்.

“இல்லன்னாப் போய் வாங்கிட்டு வருவோம். கெளம்பு சீக்கிரம். ஆனா அம்மாக்கிட்ட நீதான் கேக்கணும்” என்ற பிரவீனாவை முறைத்து “இதெல்லாம் மட்டும் கரெக்டா என்னை மாட்டி விட்டுடு” என்றுக் கூறிய சவிதா “மா...” என்றுக் கத்தியபடி செல்வியை தேடிச் சென்றாள்.

“என்ன சவி?” என்று செல்வி வீட்டின் பிற்பகுதியிலிருந்துக் குரல் கொடுக்க அங்கேச் சென்ற சவிதா “இங்க தான் நம்ம வீட்டு முன்னாடிப் பெரிய வாசல் இருக்கே மா... கோலம் போடலாம் மா... கலர் பொடி வாங்கிட்டு வந்துடறோம்... கொஞ்சம் காசு குடேன்” என்றுக் கேட்டாள்.

துணியைக் கோடியில் உலர்த்திக் கொண்டிருந்த செல்வி “ஆரம்பிச்சுட்டியா நீ? அது என்ன டி அப்படிக் கோல பைத்தியம் உனக்கு? இந்த நேரத்துல எங்கப் போவீங்க? நாளைக்குப் போகலாம்” என்றார்.

“எல்லாம் இந்த ஊருலப் பொறந்தவங்க தான? நாங்க என்னத் தொலஞ்சாப் போயிடப் போறோம்? தேர்முட்டில வருசையாக் கடைங்க இருக்கும் அங்க எல்லாக் கலரும் கிடைக்கும்னு என் பிரெண்ட்ஸ் சொன்னாளுங்க... சீக்கிரம் வந்துடுவோம் மா...” என்று அக்காவிற்கு வக்காலத்து வாங்கினாள் பிரவீனா.

“தேர்முட்டி எங்க இருக்குன்னாவதுத் தெரியுமா உனக்கு? வந்துட்டாப் பேச...” என்று செல்வி அதட்டவும் “அந்த முட்டி எங்க இருக்கோ...” என்று சவிதாவிற்கு மட்டும் கேட்குமாறு மெல்லக் கூறியவள் “நாங்கப் போறோம் போ... உன் பர்ஸ்லேந்துக் காசு எடுத்துக்கறோம்... பை மா...” என்றுக் கத்தி செல்வி தடுக்கும் முன் சவிதாவின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள் பிரவீனா.

விசாரித்து விசாரித்து எப்படியோக் கடையைக் கண்டுப் பிடித்து வந்து சேர்ந்தனர். “யம்மாடியோவ்... இவ்வளவு தூரம்னுத் தெரிஞ்சிருந்தா உனக்கு இந்த ஐடியாவேக் கொடுத்திருக்க மாட்டேன் சவி... முடியல டி... சீக்கிரம் வாங்கு”

புலம்பும் பிரவீனாவை கண்டுக் கொள்ளாது அங்கிருந்த வண்ணங்களைப் பார்த்த சவிதா அதிலேயே லயித்திருந்தாள். அவள் ஒவ்வொரு கலராக எடுக்க சொல்ல பிரவீனா “எல்லாக் கலருலயும் இவக் கேட்ட அளவுப் போட்டு சீக்கிரம் குடுங்கக்கா...” என்றுக் கூறி சவிதாவை முறைத்தாள்.

கடையை விட்டு வெளியே வந்ததும் “சவி சவி... இரு... அந்தக் கடையிலக் கொஞ்சம் கிளிப் வாங்கிக்குறேன்... காலையில ஒண்ணு உடஞ்சுப் போச்சு” என்றுக் கூறி வேகமாக அருகில் இருந்த சிறியக் கடைக்குள் நுழைந்து இரண்டு கிளிப்களை வாங்கினாள் பிரவீனா.

வழியில் தென்பட்ட பாணி பூரி கடையில் ஆளுக்கொரு ப்ளேட் மசாலா பூரி வாங்கி சற்று ஒதுங்கி நின்று அதை சுவைக்கத் துவங்கினர்.

“அது என்ன சவி உனக்குக் கோலம் போடுறதுன்னா அப்படி ஒரு ஆச?” என்ற பிரவீனாவின் கேள்விக்கு “ஸ்கூல்ல ஒருப் பொண்ணு சொல்லிக் குடுத்தா ப்ரவீ... நோட்ல வரைவேன்... ஆனா நம்ம இருந்த வீட்டுக்கு முன்னாடி சின்னதா தான் போட முடியும். அதான் ஒரு நாளாவதுப் பெரியக் கோலம் போடணும்னு ஆச” என்று பதில் கூறினாள் சவிதா.

மீண்டும் பஸ் பிடித்து செல்லத் தெம்பில்லாமல் ஒரு ஆட்டோப் பிடித்து வீடு வந்து சேர்ந்தபோது இரவாகியிருந்தது. “எவ்வளவு நேரம்? அப்போவே சொன்னேன் கேட்டீங்களா ரெண்டுப் பேரும்?” என்றுக் கோபித்த செல்வியை “விடு மா... ஊருப் புதுசுல்ல... தேடி அலையை வேண்டியதாப் போச்சு...” என்று சமாதனப் படுத்தினாள் பிரவீனா.

“வந்து சாப்பிடுங்க... அப்பா உங்களுக்காக தான் வெயிட் பண்ணுறாங்க...” என்று செல்வி கூறியதும் வேகமாகச் சென்று உடை மாற்றி வந்து சாப்பிட அமர்ந்தனர். “எங்கப் போனீங்க?” என்று தர்மராஜ் கேட்டதும் “கோலப் பொடி வாங்க போனோம் பா” என்றாள் சவிதா.

“வாங்கியாச்சா?” என்ற அவர் கேள்விக்கு “ம்ம்... கலர் பொடி வாங்கினோம்...” என்றாள் சவிதா. “சீக்கிரம் வீட்டுக்கு வாங்கம்மா... அம்மா டென்ஷன் ஆகுறாங்க உங்களால...” என்று அவர் மெதுவாகக் கூற “இனிமே இப்படி லேட் ஆகாது பா” என்றாள் பிரவீனா.

படுக்க செல்லும் முன் தான் இதுவரைக் கோலங்கள் வரைந்துப் பழகிய ஒரு நோட்டை எடுத்து வந்தாள் சவிதா. “அழகா வரஞ்சிருக்க சவி... இந்தக் கோலம் நல்லா இருக்கு... இதையே நாளைக்குப் போடுவோமா?” என்று பிரவீனா கேட்க அது சவிதாவிற்கும் பிடித்து விடவே செல்வியிடமும் ஒரு முறைக் காண்பித்து விட்டு அந்தக் கோலத்தையேப் போடலாம் என்று முடிவு செய்தாள்.

அதிகாலை 4 மணிக்கே அலாரம் வைத்து விழித்த பிரவீனா சவிதாவையும் செல்வியையும் எழுப்பினாள். நேரம் போவதுத் தெரியாமல் அவர்கள் கோலம் போட்டு ஒருவரை ஒருவர் சீண்டி சிரித்துக் கொண்டிருந்தனர். பொழுதும் புலர்ந்து வெளிச்சமும் வரத் துவங்கியது. அவர்கள் கோலம் போட்டு முடிந்த பாடில்லை.

“சவி இந்த கிரீன் தீந்துடுச்சு கலந்து எடுத்துட்டு வா” என்றுக் கூறினாள் பிரவீனா. “அப்படியே மணி என்னன்னுப் பாரு சவி. சீக்கிரம் போட்டு முடிக்கணும்...” என்றார் செல்வி. “சரிம்மா...” என்றுக் கூறி பிரவீனா கையிலிருந்த டப்பாவை வாங்கி வீட்டிற்குள் சென்றாள் சவிதா.

“இன்னுமா கோலம் போடுறீங்க? மணி 6 ஆச்சு...” என்றார் தர்மராஜ். “முடிக்கப் போறோம் பா” என்று சவிதா கூற “காபி கூடக் கலந்துக் குடுக்காம உங்கம்மாவையும் இழுத்து வெச்சிருக்கீங்க... சீக்கிரம் அவளையாவது அனுப்பி வைங்க...” என்றார் தர்மராஜ்.

“இன்னும் பத்து நிமிஷம் தான் பா... முடியலைன்னாலும் அம்மாவ வந்துப் பால் காய்ச்ச சொல்லுறேன்” என்றுக் கூறி வேகமாக பச்சை நிறப் பொடியைக் கோல மாவுடன் கலந்து எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் சவிதா.

அவள் வரண்டா கேட் அருகில் வந்து படி இறங்கக் காலை வைத்த போது அவள் வீட்டிற்கு இரண்டு வீடுத் தள்ளி பைக்கில் ராகேஷ் வருவதைக் கண்டு அப்படியே நின்றாள்.

சவிதாவின் வீடு மூன்றுப் படிகள் ஏறி செல்லும் அளவிற்கு உயர்த்திக் கட்டப்பட்டிருப்பதால் மேல் படியில் நின்று அவளால் சாலையை நன்றாகப் பார்க்க முடிந்தது. “இவங்க இந்த ஏரியாவா?” என்று மனதில் எழுந்தக் கேள்வியுடன் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இதுவரை கருப்பு பாண்ட் வெள்ளை சட்டையில் மட்டுமேப் பார்த்திருந்தவனை வெளிர் நீல நிற ஜீனும் வெள்ளையில் பிரிண்ட் செய்யப்பட்ட அடர் நீல நிற ரவுண்டு நெக் டீ ஷர்ட்டும் அணிந்து அதிகாலை சூரியனின் ஒளியில் பைக்கில் பார்த்ததும் ஒரு நொடி அசந்துப் போனாள்.

சவிதாவின் பக்கத்து வீட்டருகில் பைக்கை ப்ரேக் போட்டு நிறுத்திய ராகேஷ் ஒரு நொடிக் கோலத்தைப் பார்த்து விட்டு வண்டியைத் திருப்ப எத்தனித்தான்.

“பரவாயில்ல தம்பி... வீடு இந்தப் பக்கமா? நீங்க இப்படியேப் போங்க...” என்று செல்வி கூற “இல்லங்க... பிரண்ட் வீட்டுக்கு... நான் சுத்திப் போயிக்கறேன்...” என்றுக் கூறினான் ராகேஷ்.

அவன் பேசியபொழுது இதழ் பிரித்து சிரிக்கவில்லை. ஆனால் அவன் முகத்தில் சிரிப்பின் சாயல் இருந்தது. அவன் கண்களில் அந்த சிரிப்பு ஒட்டிக் கொண்டிருந்தது.

“ஒருத்தரோடக் கண்ணு இவ்வளவு அழகா சிரிக்குமா?” என்று அச்சர்யமாகப் பார்த்தாள் சவிதா. ராகேஷ் வண்டியைத் திருப்பிக் கொண்டு சென்று விட்டான்.

மெய்மறந்து அவன் போனத் திக்கையேப் பார்த்துக் கொண்டிருந்த சவிதாவை “சீக்கிரம் கொண்டு வா சவி...” என்ற பிரவீனாவின் குரல் இவ்வுலகிற்குக் கொண்டு வர வேகமாகப் படி இறங்கி வாசலுக்குச் சென்றாள் சவிதா.

“கஷ்டப்பட்டு இவ்வளவுப் பெருசாக் கோலம் போட்டுக் கொஞ்ச நேரமாவது இல்லன்னா எவ்வளவு வருத்தமா இருக்கும்... நல்ல வேல அந்தத் தம்பி சுத்திப் போயிக்கறேன்னு சொல்லித் திரும்பிப் போயிடுச்சு...” என்றுத் தன் போக்கில் பேசிக் கொண்டே கலர் கொடுத்தார் செல்வி.

அவர் அருகில் அமர்ந்து அதைக் கேட்டும் கேட்காதவளாய் கலர் கொடுத்துக் கொண்டிருந்தாள் சவிதா. கோலம் முழுதாகப் போட்டு முடித்து வீட்டிற்குள் சென்றதும் பிரவீணாவுடன் வம்பு வளர்த்துப் பொழுதுப் போக்கியவள் ராகேஷை மறந்தாள்.
Rakesh rude ah irundhalum nalla paiyan polaye 😊
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
12

சவிதா கல்லூரிப் படிப்பை முடிக்க இன்னும் சில வாரங்களே இருந்தத் தருணம்... கடைசி செமஸ்டரின் போது மாணவர்கள் ஏதோ ஒருத் தலைப்பில் ஆய்வு நடத்தி அதை 100 பக்கங்களுக்குக் குறையாமல் விரிவாக விளக்கி சமர்ப்பிக்க வேண்டும் (dissertation).

அதற்காகத் தன் பெராசியர்களில் ஒருவரை கைடாக தேர்ந்தெடுத்து அவரிடம் அவ்வபோது ஆலோசனைப் பெற்றாள் சவிதா. பொறியியல் கல்லூரிகளில் சமர்ப்பிக்கப்படும் ப்ராஜக்ட் போன்றது. அதற்காக நீதிமன்றத்திற்குச் சென்று அங்கு நடக்கும் வாதங்களை நேரடியாகப் பார்க்க மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப் பட்டது.

அப்படி ஒரு நாள் சவிதா நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்தபோது மதிய உணவு இடைவேளை முடிந்து நீதிபதி வந்திருக்கவில்லை. அதனால் அடுத்த வழக்கின் விசாரணைத் துவங்க இன்னும் நேரம் இருந்ததால் நீதிமன்றத்தை சுற்றி வர எண்ணி நடந்தாள்.

மூர்த்தி சார் இப்போது எடுத்துக் கொண்டிருந்த வழக்கு சம்பந்தமான சில ஆவணங்களைப் பெற நீதிமன்றத்திற்கு வந்தான் ராகேஷ். சவிதா உள்ளே இருப்பதைப் பார்த்தவுடன் வண்டியை நிறுத்தி விட்டு அவசரமாக அவளை நோக்கிச் சென்றான்.

நீதிமன்றம் என்பது வழக்கரிஞர்களும் நீதிபதிகளும் காவலர்களும் மட்டும் உள்ள இடம் அல்லவே. குற்றவாளிகளும் கொடும்பாவம் செய்தவர்களும் தீய எண்ணம் படைத்தவர்களும் அவ்விடத்தில் இருப்பதுண்டு.

அங்கிருந்தவர்களில் ஒருவன் நல்ல குடி போதையில் சவிதாவிடம் தள்ளாடியபடியே வந்து “என்ன புள்ள இங்க நிக்குற?” என்றுக் கோணல் சிரிப்புடன் கேட்டான்.

திடீரென்று அருகில் பேச்சுக் குரல் கேட்கவும் திரும்பிப் பார்த்த சவிதா எதிரில் நின்றவனைக் கண்டதும் அவன் குடித்திருக்கிறான் என்பதுப் புரிந்து அங்கிருந்து நகர எத்தனித்தாள்.

அந்த ஆள் சவிதாவிடம் வந்ததை கவனித்த ராகேஷ் தன் நடையின் வேகத்தைக் கூட்டினான். அவர்கள் நின்ற இடம் நுழைவாயிலை விட்டு சற்றுத் தள்ளி இருந்ததாலும் அவர்களை மற்றவர்கள் கவனிக்காததாலும் ராகேஷிற்கு கவலை அதிகமானது.

சவிதா திரும்பி நடக்கவும் அவள் முன்னால் சென்று வழி மறித்த அந்த ஆள் “கேக்குறேன்ல?” என்றுக் கூறி அவள் கைப் பற்ற தன் கையை முன்னேக் கொண்டு வந்தான்.

இப்போது ராகேஷ் அவர்கள் அருகில் வந்திருந்தான். அந்த ஆளின் முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்த சவிதா அவன் தன் கைப் பற்ற வந்ததும் கொதித்துப் போனாள். ஆத்திரம் மேலோங்க அவனை அடிக்க கையை உயர்த்தினாள்.

சரியாக அந்த நேரம் ராகேஷ் அந்தக் குடிகாரனின் எண்ணம் புரிந்து அவன் அருகில் வந்து அவனைப் பிடித்துத் தள்ள சவிதாவிற்கும் அந்த ஆளிற்கும் நடுவில் வந்ததால் சவிதா குடிகாரனுக்குக் கொடுக்க நினைத்த அரை ராகேஷிற்கு விழுந்தது.

ஒரு நிமிடம் விக்கித்து போய் நின்றாள் சவிதா. சுதாரித்ததும் என்ன செய்து விட்டேன் என்றுப் பதறினாள். சவிதா அரைந்ததும் கன்னத்தைப் பிடித்து அவளை சுட்டெரித்து விடுவது போல் பார்த்தான் ராகேஷ்.

ஏதோக் கூற வந்த அந்த ஆளின் மீதுத் தனதுக் கோபத்தைக் காட்டி அவனைப் பிடித்து வேகமாகத் தள்ளினான். அவன் கீழே விழுந்த சத்தம் கேட்டு அங்கு சிலக் காவலர்கள் வந்துக் கூடினர். மூவரையும் யார் என்று விசாரித்து விட்டு அந்த ஆளை இழுத்துச் சென்றனர்.

சவிதா இது எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. அவள் இன்னும் ராகேஷை அரைந்தப் படப்படப்பில் இருந்தாள். அவளை ஒரு முறை திரும்பிப் பார்த்து முறைத்த ராகேஷ் எதுவும் கூறாமல் கோர்ட்டினுள் சென்றான்.

ஒரு முறை தன்னைச் சுற்றிப் பார்த்தாள் சவிதா. அவர்கள் நின்றது நீதிமன்றத்தின் பிற்பகுதியை அடுத்து இருந்ததால் சவிதா அடித்ததை அந்த ஆளைத் தவிர வேறு யாரும் பார்த்திருக்கவில்லை.

தன்னைக் காத்துக் கொள்ளும் விதத்தில் அந்த ஆளை அடிக்கப் போக ராகேஷ் குறுக்கே வந்ததால் அவன் மீது அந்த அடிப் பட்டு விட்டது. இவையாவும் அறிவிற்கு எட்டினாலும் அவளுக்கு ஏனோ ராகேஷை தான் அவமானப் படுத்தியதாகத் தோன்றியது.

அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் பெராசிரியரிடம் தகவல் சொல்லி விட்டு வீட்டிற்கு கிளம்பிச் சென்றாள். யாரிடமும் எதுவும் பேசாமல் தன் அறையில் போய் படுத்தவளின் இதயம் தாறுமாறாய் துடித்தது. சிறிது நேரம் கழித்து யோசிக்கத் துவங்கியவள் முதலில் எப்படியாவது ராகேஷிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எண்ணினாள்.

அதை உடனே செய்ய வேண்டும் என்றுத் தோன்றியது. அவனுக்கு அழைக்க கைப் பேசியை எடுத்தாள். ஆனால் எப்படி என்னவென்று சொல்லி மன்னிப்பு கேட்பது என்றுப் புரியவில்லை. ஆயாசத்துடன் கைப் பேசியைக் கீழே வைத்தாள்.

தேவியிடம் இதைக் கூறலாம் என்று யோசித்தவள் “இது யாருக்குமேத் தெரியாது... எதுக்கு ராகேஷ் என் கையால அடி வாங்குனாங்கன்னு நானே எல்லார்க்கிட்டயும் சொல்லணும்?” என்று யோசித்து அந்த எண்ணத்தையும் கை விட்டாள்.

இப்படியே மனதிற்குள் போட்டுக் குழப்பிக் கொண்டவள் அதன் பின் கல்லூரியிலும் இயல்பாக இருக்க முடியாமல் தவித்தாள். இப்படி இவள் மனதிற்குள் புழுங்கித் தவித்துக் கொண்டிருக்க ராகேஷ் கல்லூரிக்கு வந்தான். வந்தவன் சவிதாவை திரும்பிப் பார்த்தானில்லை.

அது சவிதாவை இன்னும் வாட்டியது. அவனிடம் மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து அவளாக அவனிடம் பேசச் சென்றாள். சவிதா தன்னை நோக்கி வருவதை சிறிது தூரத்திலேயே கவனித்து விட்ட ராகேஷ் அவசரமாக அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

தன்னிடம் பேசக் கூட அவனுக்கு விருப்பம் இல்லையா? தன் தரப்பு நியாயத்தைக் கேட்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றவில்லையா? அன்று நடந்தது தற்செயல் என்று அவனுக்குப் புரியவில்லையா? சவிதா முழுவதுமாக உடைந்துப் போனாள்.

நேரிலேயே பேச விரும்பாதவன் போனில் கண்டிப்பாகப் பேச மாட்டான் என்று முடிவு செய்து அன்றோடு அவனுக்கு கால் செய்யும் எண்ணத்தையும் ஒதுக்கினாள் சவிதா.

கல்லூரி இறுதித் தேர்வும் முடிந்து வீட்டிற்கு வந்தவளின் மனதில் வெறுமைக் குடிக் கொண்டது. வீட்டில் வேலைகள் செய்தாலும், தோழிகளுடன் வெளியில் சென்றாலும், அவர்கள் வீட்டிற்குச் சென்றுப் பேசி சிரித்தாலும் மனதிற்குள் ஒரு நெருடல் இருந்துக் கொண்டே இருந்தது.

பிரவீனாவும் பல முறை சவிதாவிடம் ஏதாவதுப் பிரச்சனையா என்றுக் கேட்டுப் பார்த்தாள். அவள் வீட்டில் இருக்கும் நேரங்களில் சவிதாவை தனியாக விடாமல் அவளை சிரிக்க வைக்க முயன்றாள். ஆனால் பலன் தான் பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை.

இப்படியே இரண்டு மாதக் காலம் ஓடி விட சவிதாவிடம் வந்த அவள் தந்தை தர்மராஜ் “என்ன மா... மாப்பிள்ளைப் பாக்க ஆரம்பிச்சுடவா?” என்றுக் கேட்டார். அவர் கேட்டதும் ராகேஷின் முகம் கண் முன் வந்துப் போனது. எதுவும் கூறாமல் எழுந்து உள்ளேச் சென்றாள் சவிதா.

“அவ வேண்டாம்னு சொல்லலயே... நீங்க துறை அண்ணன்கிட்ட இவ ஜாதகமும் போட்டோவும் குடுத்து வைங்க... ஏதாவது நல்ல சம்பந்தம் வந்தா சொல்ல சொல்லுங்க...” என்று செல்வி கூறவும் முதல் வேலையாக அதை செய்து முடித்தார் தர்மராஜ்.

வெளியேச் சென்று வீடுத் திரும்பியக் கணவரிடம் மோர் எடுத்து வந்து நீட்டிய செல்வி “ஜாதகம் குடுத்துட்டீங்களா? என்ன சொன்னாரு?” என்றுக் கேட்க “ஒரு போட்டோ மட்டும் குடுத்தாரு செல்வி. வேற வரன் எதுவும் வந்தா சொல்லுறேன்னு சொன்னாரு.

இப்போ உடனே அவக்கிட்ட காமிக்க வேண்டாம். சாமி ர்ரோம்ல வை. அப்பறம் பார்த்துக்கலாம்...” என்றுக் கூறி ஒருக் கவரை நீட்டினார். “சரி சரி... நீங்களே அவக்கிட்டக் கேளுங்க...” என்றவர் மரகாதுக் கவரை பூஜையறையில் வைத்தார்.

ராகேஷிடம் வந்த சாந்தி “ராகேஷ் இதுல ஒருப் பொண்ணு போட்டோ இருக்கு... பாரு டா...” என்று ஒருக் கவரை அவன் முன் நீட்டினார். “எத்தன தடவ மா சொல்லுறது... இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்...” என்றுக் கடுப்பாகக் கூறினான் ராகேஷ்.

சாந்தியின் பின்னால் வந்த பாண்டியன் “நீ முதல்ல இந்த போட்டோ பாரு டா... ஒருப் பொண்ணு போட்டோ கூடப் பாக்காம இப்போ வேணாம் இப்போ வேணாம்னு சொல்லி எங்களுக்கு டென்ஷன் குடுக்காத...” என்றார்.

அவர் கூறியதும் வேகமாகத் தாயின் கையிலிருந்துக் கவரைப் பிடுங்காதக் குறையாக வாங்கி உள்ளிருந்தப் புகைப்படத்தை எடுத்துப் பிரித்தான். “பொண்ணு பேரு சவிதா” என்றார் சாந்தி.

கையில் இருந்த புகைப்படத்தைப் பார்த்தவன் “எனக்குப் புடிச்சிருக்கு... பொண்ணு வீட்டுலப் பேசுங்க...” என்றுக் கூறி போட்டோவைக் கவரினுள் வைத்து அதை சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

அவன் கூறியதைக் கேட்டு அவனை அதிசயமாக பார்த்த சாந்தியும் பாண்டியனும் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “பொண்ணப் பத்தி வேற எதுவுமேக் கேக்கல?” என்றுக் கேட்டார் பாண்டியன்.

ஒரு நொடி அமைதியாக நின்ற ராகேஷ் “காலேஜ்ல என் ஜூனியர். எனக்கு ஓகே” என்று மட்டும் கூறி அதற்கு மேல் அங்கு நிற்காமல் தன் அறைக்குச் சென்றான்.

“என்ன சாந்தி இவன்?” என்றுக் கேட்ட பாண்டியனிடம் “அவன் சரி னு சொன்னதேப் பெரிய விஷயம்... பொண்ணு வீட்டு நம்பர் இருக்குல்ல... முதல்ல அவங்கக்கிட்டப் பேசுங்க...” என்றார் சாந்தி.

தர்மராஜை அழைத்த பாண்டியன் “சார் நான் பாண்டியன் பேசுறேன்... உங்கப் பொண்ணு போட்டோ சிம்மக்கல்ல நம்ம துரை இருக்காருல்ல அவரு நேத்துக் கொண்டு வந்துக் குடுத்தாரு... நீங்க சம்பந்தம் பாக்குறதா சொன்னாரு...” என்றார்.

“ஆமாங்க... ரெண்டு நாள் முன்னாடி உங்கப் பையன் போட்டோ குடுத்தாரு... நேத்து உங்ககிட்ட பொண்ணு போட்டோ குடுத்ததையும் சொன்னாரு...” என்று தர்மராஜ் கூற “அப்போ மேற்கொண்டுப் பேசலாங்களா? எங்களுக்குப் பொண்ணுப் பிடிச்சிருக்கு... பையன்கிட்டயும் கேட்டுட்டோம்” என்றார் பாண்டியன்.

“நாங்க இன்னும் பொண்ணுக்கிட்ட எதுவும் தகவல் சொல்லலைங்க... அவக்கிட்ட ஒரு வார்த்தக் கேட்டுட்டு நானேக் கூப்பிடுறேன்...” என்று தர்மராஜ் தயக்கமாகக் கூறவும் “ஒண்ணும் அவசரம் இல்ல... நீங்கக் கேட்டுட்டு சொல்லுங்க... வெக்கறேன்” என்றுக் கூறி வைத்தார் பாண்டியன்.

“செல்வி” என்று மனைவியை அழைத்தவர் “மாப்பிள்ளை வீட்டுல இருந்து நம்மப் பொண்ணப் பிடிச்சிருக்குன்னு சொல்லிக் கேக்குறாங்க...” என்றார். “அவங்களேப் பேசிட்டாங்களா? நல்லதாப் போச்சு... அவக்கிட்டக் கேளுங்க...” என்று செல்வி கூற “நீ போய் அந்தக் கவர எடுத்துட்டு வா...” என்றார் தர்மராஜ்.

நேரே சவிதாவின் அறைக்கு வந்த தர்மராஜ் கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து ஏதோப் படித்துக் கொண்டிருந்தவளிடம் “சவிதா மா... இந்த பையன் உனக்குப் புடிச்சுருக்கா சொல்லு மா” என்றுக் கூறி அவள் முன் புகைப்படத்தை நீட்டினார்.

ராகேஷின் முகத்தைப் பார்த்து அதிர்ந்த சவிதா “அப்பா இது...” என்று மேலே என்னக் கேட்பதென்றுத் தெரியாமல் விழித்தாள். “பையன் வீட்டுலப் புடிச்சுருக்குன்னு சொல்லி நம்ம சம்மதம் கேக்குறாங்க. நீ என்ன மா சொல்லுற?” என்றார்.

“பையன் வீட்டுலப் புடிச்சுருக்கா? அப்போ ராகேஷ்கு தெரிஞ்சு தான் கேக்குறாங்களா? ‘நான்’னுத் தெரிஞ்சு தான் ஒத்துக்கிட்டாங்களா?” என்று யோசித்தவள் “மாப்பிள்ளைக்குப் பிடிச்சுருக்கா பா?” என்றுக் கேட்டாள்.

அங்கு வந்த செல்வி “மாப்பிள்ளைக்குப் பிடிச்சதால தான் மா நம்மக்கிட்டக் கேக்குறாங்க” என்றார் சிரிப்புடன். ராகேஷிற்கு இதில் சம்மதம் எனும்போது தனக்கு மறுக்கக் காரணம் எதுவும் இல்லை என்று நினைத்த சவிதா மெல்லியக் குரலில் “பிடிச்சுருக்கு மா” என்றாள்.

சவிதா சம்மதம் கூறியதும் ஆசையுடன் அவள் கன்னத்தை வழித்த சாந்தி “பையன் வீட்டுலப் பேசுங்க” என்றுக் கணவரிடம் கூறினார். உடனே பாண்டியனுக்கு அழைத்த தர்மராஜ் “எங்களுக்கும் சம்மதம்...” என்றுக் கூறவும் “அப்போ வர புதன் கிழமை நாள் நல்லா இருக்கு...

முறைப்படிப் பொண்ணுப் பார்க்க வந்துட்டு மேற்கொண்டுப் பேசிக்குவோம்... உங்களுக்கு அன்னைக்கு வசதிப்படுமா?” என்றுக் கேட்க அருகில் நின்ற செல்வியிடம் ஒரு முறைக் கேட்டு விட்டு “அன்னைக்கே வாங்க...” என்றுக் கூறி சம்மதம் தெரிவித்தார் தர்மராஜ்.

சவிதாவிற்கு இந்தத் திருமணம் நடப்பது சந்தோஷமாக இருந்தாலும் அதை அனுபவிக்க முடியாமல் அன்றைய நாள் நினைவுகள் அவளை அலைக்கழித்தன. மொத்தத்தில் ஒருக் குழப்பமான மன நிலையில் இருந்தாள்.

மாலை பிரவீனா வந்தவுடன் செல்வி மூலம் விஷயத்தைக் கேள்விப் பட்டவள் முதல் வேலையாக மாப்பிள்ளையின் போட்டோவை பார்த்துவிட்டு சவிதாவிடம் சென்றாள். “ஏய் உண்மையா சொல்லு டி... உன் சீனியராமே... அப்போ காலேஜ்லப் பார்த்திருப்பியே... இல்ல லவ் எதுவும் பண்ணி நீயா கல்யாணத்த செட்டப் பண்ணுறியா?” என்றுக் கிண்டலாகக் கேட்டாள்.

“சும்மா இரு ப்ரவீ... வீட்டுலக் கேட்டாங்க சரின்னு சொன்னேன் அவ்வளவு தான்...” என்ற சவிதாவை அப்போதும் விடாமல் மேலும் கிண்டல் செய்தாள் பிரவீனா.

அவள் தொல்லைத் தாங்காமல் தேவியின் வீட்டிற்குக் கிளம்பிச் சென்றாள் சவிதா. விஷயத்தைக் கேள்விப்பட்ட தேவி “நாங்க தான் அப்போவே சொன்னோமே டி... கடைசி வரைக்கும் இல்ல இல்லன்ன?” என்றாள் சிரித்துக் கொண்டே.

அந்த நேரம் தேவியின் வீட்டிற்கு வந்த முத்துவிடம் இதைக் கூறினாள் தேவி. “வாழ்த்துக்கள் சிஸ்டர்” என்றுக் கூறிப் புன்னகைத்த முத்து சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்துக் கிளம்பியவன் வழியிலேயே வண்டியை நிறுத்தி ராகேஷிற்கு கால் செய்தான்.

ராகேஷ் எடுத்ததும் “கன்க்ராட்ஸ் டா... எங்கக்கிட்டலாம் அப்படி எதுவும் இல்லன்னு சொல்லிட்டு... கடைசில சவிதா சிஸ்டர தானக் கல்யாணம் பண்ணப் போற?” என்றான் முத்து.

“வீட்டுலக் கேட்டாங்க. சரின்னு சொல்லிட்டேன்...”

“இப்பயும் ஒத்துக்க மாட்டியே?”

சில நொடிகள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் ராகேஷ். தனக்குத் திருமணம் முடிவானதை இன்னும் ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை என்பது அப்போது தான் நினைவு வந்தது.

“உனக்கு எப்படித் தெரியும்?”

“தேவி வீட்டுக்குப் போயிருந்தேன் டா... அங்க சவிதாவ பாத்தேன்”

“சரி டா... நான் வெளிலப் போறேன். சாயந்தரம் பாப்போம்” என்றுக் கூறி வைத்தான் ராகேஷ்.
Rakesh Savitha kita kochikitaara?☹
Theriyama dhana adichitanga....😔
Epadiyo Sekrm avanga sanda mudinja sari 😊
Marriage aaga poguthu 😍❤
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
13

காலை எழுந்தது முதல் ஏதோ ஒருப் பரப்பரப்புத் தொற்றிக் கொண்டது சவிதாவை. இன்று ராகேஷ் வீட்டிலிருந்து அவளைப் பெண் பார்க்க வருகின்றனர். முதல் நாளே இன்றுக் கட்ட வேண்டியப் புடவையைத் தேர்வு செய்து வைத்தபோதும் பிரவீனாவை அழைத்து மீண்டும் புடவைத் தேர்வு செய்தாள்.

“சவிதா... என்னாச்சு உனக்கு? இந்தப் புடவை தானக் கட்டப் போறதா நைட் சொன்ன?” என்று அவள் முதலில் எடுத்து வைத்திருந்தப் புடவையைக் காட்டிக் கேட்டாள் பிரவீனா.

“ம்ம்... ஆமா... அது நல்லா இருக்கா?” என்றுக் கேட்ட சவிதாவை விநோதமாகப் பார்த்த பிரவீனா “இந்தக் கேள்விய நேத்துலேருந்து ஆயிரம் வாட்டியாவதுக் கேட்டிருப்ப... போய் குளிச்சுட்டு வா... உனக்கு என்னமோ ஆகிடுச்சு...” என்றுக் கூறிச் சென்று விட்டாள்.

குளித்துத் தயாராகி அமர்ந்திருந்த சவிதாவிடம் சாப்பிடுமாறு செல்வி எவ்வளவு வற்புறுத்தியும் மறுத்து விட்டாள். “எப்படி அவங்க முகத்தைப் பார்ப்பேன்? அவங்க ஏதாவதுக் கேட்டா என்ன சொல்லுறது? பேசாம அவங்கள நிமிர்ந்தேப் பார்க்காம இருந்திட வேண்டியது தான்...” என்று முடிவெடுத்தாள்.

ஆனால் சிறிது நேரத்திலேயே “நம்ம நிமிர்ந்தேப் பாக்கலன்னா அப்பறம் அவங்க என்ன நினைக்குறாங்கன்னு எப்படித் தெரிஞ்சுக்கறது? இல்ல இல்ல... அவங்க முகத்தைப் பாத்து அவங்க மனசுல என்ன நினைக்குறாங்கன்னு எப்படியாவதுக் கண்டுப் பிடிச்சுடணும்...” என்று மாற்றி யோசித்தாள்.

சவிதாவை பெண் பார்க்க வருகின்றனர் என்றதும் தேவி அவள் வீட்டிற்கு வந்தாள். ஏற்கனவே அலங்காரம் செய்து அமர்ந்திருந்த சவிதாவின் அருகில் அமர்ந்து அவளுடன் பேசிக் கொண்டிருந்தாள். தேவி அருகில் இருப்பது சவிதாவிற்கு கொஞ்சம் தெம்பாகவே இருந்தது.

ஆனால் அது எல்லாம் பிரவீனா வந்து தேவியை பார்க்கும் வரை தான். இவர்கள் இருவரும் பேச ஆரம்பித்ததும் சவிதாவை கண்டுக் கொள்ளவில்லை. “இதுங்க ரெண்டும் எப்போப் பாருக் கூட்டு சேர்ந்துக்குதுங்க... கொஞ்ச நேரம் என்கிட்டப் பேசினாலாவது நான் நிம்மதியா இருப்பேன்ல...” என்று மனதிற்குள் புலம்பினாள் சவிதா.

மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்து விட்டதாக அறிவிப்பு வந்ததும் மீண்டும் சவிதாவிற்கு டென்ஷன் அதிகமானது. “பேசாம இந்த மாப்பிள்ளை வேண்டாம்னு சொல்லி இருக்கலாம்... இப்படி முள்ளு மேல நிக்குற மாதிரி இருந்திருக்காது ச்ச...” என்று நொந்துக் கொண்டாள்.

பெரியவர்கள் அனைவரும் சம்பிரதாயமாக அறிமுகம் ஆகிப் பேசி முடித்ததும் சவிதாவை ஹாலிற்கு அழைத்தனர். நீண்டதொரு மூச்சை இழுத்து விட்டு அறையை விட்டு வெளியே வந்தாள் சவிதா.

அவள் கையில் ஒரு ட்ரேயை கொடுத்த செல்வி அனைவருக்கும் காபிக் கொடுக்க சொன்னார். யாருக்குக் கொடுக்கிறோம் என்றேத் தெரியாமல் அங்கிருந்தவர்களுக்குத் தலைக் குனிந்தபடியே காபியை நீட்டினாள்.

ராகேஷிடம் வந்தபொழுது மட்டும் காபியை நீட்டி விட்டு அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். ராகேஷ் அவள் முகத்தைப் பார்க்காமல் காபியை எடுத்துக் கொண்டான். சவிதாவால் அந்த சில நொடிகளில் அவன் முகத்திலிருந்து எதுவும் கண்டறிய முடியவில்லை.

அதன் பின் உறவினர்கள் கூடி ஏதேதோப் பேசினர். அது எதுவும் சவிதாவின் காதுகளில் விழவில்லை. அவ்வபோது அங்கு அமர்ந்திருந்தவர்களைப் பார்க்கும் சாக்கில் ராகேஷை ஓரக் கண்ணால் பார்த்தாள். அவன் மற்றவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தான்.

சவிதாவின் அருகில் நின்ற தேவி “என்ன புள்ள சைட் அடிக்குறியா?” என்றுக் கிண்டலாகக் கேட்டாள். “சும்மா இரு டி” என்றுக் கூறி அவளை அடக்கினாள் சவிதா. அவர்கள் அருகிலேயே நின்ற செல்வி “என்ன மா?” என்றுக் கேட்டதும் “ஒண்ணும் இல்ல” என்றுக் கூறி சமாளித்தனர் இருவரும்.

திருமண நாள் நிச்சயிக்கப் பட்டது. அனைவரும் புறப்படத் தயாராக எழுந்தனர். வந்ததிலிருந்து அவ்வளவு நேரம் சவிதாவின் பக்கம் திரும்பாமல் இருந்த ராகேஷ் கிளம்பும் முன் ஒரு முறை சவிதாவை திரும்பிப் பார்த்தான்.

அவன் பார்க்கிறான் என்றதும் அவன் புறம் திரும்பினாள் சவிதா. அவளுக்கு இருந்தப் பதட்டத்தில் “அவங்கக் கோவமா பாக்குறாங்களா... இல்ல எல்லாத்தையும் மறந்துட்டு சாதரணமாப் பாக்குறாங்களா... ஒண்ணுமேப் புரியலயே கடவுளே...” என்றுத் தலையைப் பிய்த்துக் கொண்டாள்.

தேவியும் பிரவீனாவும் சேர்ந்து “மாப்பிள்ளைப் பிடிச்சிருக்கா சவி? பிடிக்கலைன்னாக் கல்யாணத்த நிறுத்திடலாம்...” என்றுக் கேட்டு அவளைப் பாடாய் படுத்த “இதுங்கள தனித் தனியா சமாளிக்குறதேப் பெரிய விஷயம்... நம்மளால முடியாது டா சாமி...” என்று நினைத்து அவர்களுக்கு ஒருப் பெரிய கும்பிடாய் போட்டு செல்வியிடம் சென்றாள் சவிதா.

திருமண வேலைகள் ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருக்க அது எதிலும் முழு மனதாக ஈடுபட முடியாமல் ஒதுங்கியே இருந்தாள் சவிதா. மனம் ஏனோ நிலைக் கொள்ளாமல் தவித்தது.

என்ன தான் குழப்பங்கள் இருந்தாலும் ராகேஷை இன்னொரு முறைப் பார்க்கும் ஆவலும் எழாமல் இல்லை. அதற்காகவே புடைவை எடுக்கச் செல்ல வேண்டிய நாளன்று வேகமாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள் சவிதா.

இன்று எப்படியும் ராகேஷை காணலாம் என்ற எண்ணமே அவள் கன்னம் சிவக்க வைத்தது. அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தவள் கை பேசி சிணுங்கவும் அறைக்குள் சென்று அதை எடுத்துப் பார்த்தாள். அதில் தெரிந்த ராகேஷ் என்ற பெயரைப் பார்த்து ஒரு நொடி செயலிழந்து அப்படியே நின்றாள்.

அவன் தான் நம்பர் கொடுத்தான். ஆனால் இது வரை அழைத்ததில்லையே... கைப்பேசி அடித்துக் கொண்டே இருக்கவும் தன் யோசனையைக் கைவிட்டு காலை அட்டெண்ட் செய்து “ஹலோ” என்றாள். “முகூர்த்தப் புடவை ஏற்கனவே செலக்ட் பண்ணிட்டேன். கடைலக் காமிப்பாங்க. இன்னைக்கு என்னால வர முடியாது. வேல இருக்கு” என்றுக் கூறி வைத்தான்.

முதலில் அவன் குரலைக் கேட்டுப் பேச்சு வராமல் நின்றவள் பின் அவன் கூறியதை உள் வாங்கி அவனுக்கு பதில் சொல்ல வாயைத் திறந்தபோது பீப் சத்தமேக் கேட்டது. அவன் கட் செய்து விட்டான் என்பது அப்போது தான் புரிந்தது.

“என்ன மாதிரியானப் பேச்சு இது? இதுக்கு என்ன அர்த்தம்? என்னால உன் கூட வர முடியாதுன்னு சொல்ல வராங்களா? இல்ல உன் புடவை எல்லாம் நான் பாக்க மாட்டேன்னு சொல்லுறாங்களா?

அப்படின்னா எதுக்கு முன்னாடியேப் போய் புடவை செலக்ட் பண்ணணும்? இவங்க என்ன நெனச்சு இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்க?” என்று யோசித்துக் குழம்பினாள் சவிதா.

வீட்டிலிருந்துக் கிளம்பும்பொழுதுக் காலையில் இருந்து மனதில் இருந்த உற்சாகம் சுத்தமாக வடிந்திருந்தது. ஜவுளிக் கடையின் வெளியே ராகேஷின் உறவினர்கள் காத்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும் செயற்கையாக ஒருப் புன்னகையை உதட்டில் பூசிக் கொண்டாள் சவிதா.

பட்டு புடவைப் பிரிவிற்குச் சென்றதும் ராகேஷின் தந்தை பாண்டியனைக் கண்ட கடை ஊழியர் அவர்களை வரவேற்று முதலில் ராகேஷ் தேர்வு செய்து வைத்திருந்ததை எடுத்துக் காண்பித்தார். “நீ உனக்குப் புடிச்சதையும் பாரு மா” என்றுக் கூறி வேறுப் புடவைகளும் காண்பிக்க சொன்னார் சாந்தி.

அவர் கூறியதற்காக சில புடவைகளைப் பார்த்தாலும் சவிதாவின் கவனம் முழுவதும் ராகேஷ் தேர்வு செய்து வைத்திருந்தப் புடவையிலேயே இருந்தது. சிறிது நேரத்திற்குப் பின் “எனக்கு இதுவே ரொம்பப் புடிச்சுருக்கு அத்...” என்று பாதியில் நிறுத்தினாள். “அத்தைன்னே கூப்பிடு மா. இதையே எடுத்துக்கலாம்” என்று சிநேகமாய் கூறினார் சாந்தி.

நகைக் கடைக்கு செல்லும் நாளன்று “புடவை எடுக்க தான் என்னைக் கூட்டிட்டுப் போகல... நகையும் இப்படி எனக்குக் காலேஜ் இருக்க அன்னைக்கு தான் போய் எடுக்கணுமா?” என்றுப் புலம்பியபடியேக் கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்றாள் பிரவீனா.

எப்படியும் ராகேஷ் வர மாட்டான் என்ற எண்ணம் தோன்றவே வேண்டா வெறுப்பாகக் கிளம்பினாள் சவிதா. கடைக்குள் நுழைந்தபோது அங்கு நின்றிருந்தவனைக் கண்டதும் பரவசமானாள். சவிதா அவன் முகத்தைப் பார்த்தாலும் ராகேஷ் அவளைக் கண்டுக் கொள்ளாது அவளின் பெற்றோர்களை வரவேற்று அவர்களை விசாரித்தபடியே உள்ளே அழைத்துச் சென்றான்.

முதலில் நெக்லஸ் பிரிவிற்குச் சென்றனர். தர்மராஜ் செவியுடன் பேசிக் கொண்டே சவிதாவின் அருகில் அமரப் போனார். வேகமாக தர்மராஜிற்கும் சவிதாவிற்கும் இடையில் இருந்த இடைவேளையில் ஒரு சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தான் ராகேஷ்.

ராகேஷ் தன் அருகில் அமர்வான் என்று எதிர்ப்பாராத சவிதா முதலில் சிறிதுத் தடுமாறினாள். ஆனால் ராகேஷ் தர்மராஜூடன் இயல்பாகப் பேசிக் கொண்டிருக்கவும் “ஒரு வேல அப்பாக் கூடப் பேசறதுக்காக இங்க வந்து உட்கார்ந்தாங்கப் போல...” என்று எண்ணி நகைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

சிலவற்றைப் பார்வையிட்டவள் தனக்குப் பிடித்த ஒன்றை கையில் எடுத்தாள். “கழுத்துல வெச்சுக் காமி. அப்போ தான உனக்கு அது நல்லா இருக்கா இல்லையான்னுத் தெரியும்” என்று அவள் புறம் லேசாகக் குனிந்து அவளுக்கு மட்டும் கேட்குமாறுக் கூறினான் ராகேஷ்.

அவன் தன்னிடம் பேசியதை நம்ப முடியாமல் அவனை இரண்டு நொடி இமைக்காமல் பார்த்த சவிதா பின் அதை தன் கழுத்தில் வைத்தாள். கண்ணாடி பார்ப்பதுப் போல் சற்றுத் திரும்பி ராகேஷிற்கு நன்றாகத் தெரியுமாறுக் காண்பித்து அவன் முகம் பார்த்தாள்.

நல்லா இருக்கு என்றுக் கண்களை மூடித் திறந்து ராகேஷ் சம்மதம் கூறியதும் அதையேத் தேர்வு செய்தாள். இதுவே அடுத்தடுத்து எடுத்த எல்லா நகைகளுக்கும் தொடர்ந்தது. அவன் கேட்காமலேயே அனைத்தையும் அணிந்துக் காண்பித்தாள். அவன் முகம் பார்த்து அவன் சம்மதம் பெற்றப் பின்னரே அதைத் தேர்வு செய்தாள்.

இவர்களின் இந்த நாடகத்தைப் பெரியவர்கள் தெரிந்துக் கொண்டாலும் கண்டுக் கொள்ளவில்லை. இடையில் தாலி செயின் பார்த்த நேரம் மட்டும் ராகேஷ் சவிதாவின் பக்கம் திரும்பவே இல்லை. தன் மொபைலில் எதையோ ஆராய்ந்துக் கொண்டிருந்தான்.

சவிதா இரண்டு செயினைக் கையில் வைத்து ராகேஷின் முகத்தை நொடிக்கொரு முறைப் பார்ப்பதைக் கண்ட சாந்தி “ராகேஷ் உனக்கு எது புடிச்சுருக்கு சொல்லு பா” என்று அவனிடம் கேட்டார்.

நிமிர்ந்து அவரைப் பார்த்து “நீங்கப் பாத்து எடுங்க மா” என்று மட்டும் கூறி மீண்டும் மொபைலில் மூழ்கினான். சவிதாவிற்கு ஏனோ அது மிகவும் வருத்தமாக இருந்தது. வேறு வழி இல்லாமல் அவளே ஒன்றைத் தேர்வு செய்தாள்.

அதன் பின் பார்த்த நகைகளுக்கு வழக்கம் போல் அவன் கண்களாலேயே “நல்லா இருக்கு” “நல்லா இல்லை” “வேண்டாம்” என்றெல்லாம் கூறவும் சவிதாவிற்கு குழப்பமாக இருந்தது. “அது என்ன தாலி செயின் மட்டும் செலக்ட் பண்ண மாட்டாங்களா?” என்று யோசித்தாள்.

அனைத்தும் வாங்கி முடித்துக் கிளம்பும்போது எல்லோரிடமும் சொல்லிக் கொண்ட ராகேஷ் சவிதாவை திரும்பியும் பார்க்கவில்லை. வீட்டிற்கு வந்தவளுக்கு சிறிதுக் கோபம் எட்டிப் பார்த்தது.

“அது என்ன... புடவை செலக்ட் பண்ணுவாங்களாம்... நகை எல்லாம் செலக்ட் பண்ணுவாங்களாம்... தாலி செயின் மட்டும் செலக்ட் பண்ண மாட்டாங்களாம்... போகும்போது சொல்லிட்டுப் போக மாட்டாங்களாம்... என் பக்கமேத் திரும்பலையே...” என்று மனதிற்குள் கறுவினாள்.

இதை இப்படியே விடக் கூடாது. பேசாமல் அவனை போனில் அழைத்துக் கேட்டுவிட வேண்டும் என்று முடிவெடுத்து ஒரு வேகத்தில் அவன் எண்ணிற்கு அழைத்தாள். அவன் போனை எடுத்து “சொல்லு” என்றுக் கூறியதும் அந்தக் குரல் அவளை உலுக்கியது.

ஒரு நிமிடம் அவள் முதன் முதலில் கல்லூரியில் கண்ட ராகேஷ் அவள் கண் முன் வந்துப் போனான். நா வறண்டு வார்த்தைகள் அனைத்தும் தொண்டைக்குழியில் சிக்கித் தவித்தன.

அவள் அமைதியாக இருக்கவும் ராகேஷ் “என்ன?” என்றான். கோபம், எரிச்சல், அதிகாரம், அலட்சியம்... இப்படி இத்தனை உணர்வுகளை ஒற்றை வார்த்தையில் காட்ட முடியுமா? முடியும் என்று உணர்த்தியது ராகேஷின் அந்த ஒரு சொல்.

“ஒண்ணுமில்ல” என்று வேகமாகக் கூறி கட் செய்தாள் சவிதா. அவளின் படப்படப்பு அடங்க ஒரு சில நொடிகள் தேவைப் பட்டன. “இவங்களுக்கு இனிமே போன் பண்ணக் கூடாது டா சாமி........” என்று வாய் விட்டுக் கூறியவள் மொபைலை வைத்து விட்டு எழுந்துச் சென்றாள்.

இடையில் ஒரு நாள் மாப்பிள்ளை வீட்டைப் பார்க்கவென தர்மராஜும் செல்வியும் இவர்கள் திருமணம் நடக்கக் காரணமாய் இருந்த துரை என்பவருடன் ராகேஷின் வீட்டிற்கு வந்தனர். திருமணம் குறித்தப் பேச்சு நீண்டுக் கொண்டேப் போக “மாமா கல்யாணத்துக்கு அப்பறம் நானும் சவிதாவும் தனி வீட்டுல தான் இருப்போம்...” என்று இடையில் புகுந்துக் கூறினான் ராகேஷ்.

ஏற்கனவே இதை அவன் பெற்றோர்களிடம் ராகேஷ் கூறியிருந்தான். எப்போதும் அவன் பேச்சுக்கு மறுப்புத் தெரிவித்துப் பழகியிராத அவன் பெற்றோர் இதற்கும் ஒன்றும் கூறவில்லை. இப்போது பெண் வீட்டார் இதை எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்றுக் கவலையாக அவர்கள் முகம் பார்த்தனர்.

“இதுல நாங்க சொல்ல என்ன மாப்ள இருக்கு... உங்க விருப்பம் போல செய்ங்க... சவிதாகிட்ட சொல்லிடுறோம்...” என்ற தர்மராஜ் அதற்கு மேல் அதைக் குறித்து விவாதிக்கவில்லை.

திருமணத்திற்கு முந்தைய தினம் நிச்சயதார்த்தம் நடக்க ஏற்பாடு செய்திருந்தனர். மோதிரம் மாற்றிக் கொள்ள மேடையில் எதிர் எதிரில் நின்றனர் ராகேஷும் சவிதாவும்.

மோதிரம் அணிவிக்கும் முன் சவிதாவின் கண்களை நேராய்ப் பார்த்தான் ராகேஷ். அதன் பின் அவள் கைப் பிடித்து மோதிரம் அணிவித்து அவள் கை விட்டவரை அந்தப் பார்வையை அவன் விளக்கவே இல்லை.

சவிதா முதலில் அவன் பார்வையில் கட்டுண்டு அவன் கண்களைப் பார்த்தாள். அவன் அவள் கைப் பிடித்ததும் எழுந்த சிலிர்ப்பில் குனிந்து அவன் கைகளைப் பார்த்தவள் அதன் பிறகுத் தலை நிமிரவில்லை.
Rakesh manasula enadhan iruku? 🤔😅
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top