• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காயத்ரி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jaalan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
111
Reaction score
361
மேரியும் , நிசாவும் இரு கைகளும் கட்டப்பட்டு முழங்காலில் நின்று கொண்டிருக்க மித்ரன் துப்பாக்கியால் தன் தாடியை சொறிந்து கொண்டிருந்தான். அவன் கண்கள் பருந்து இரையை பார்ப்பது போல நிசாவையும் மேரியையும் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

"சார்.. சார் .. " என்று ஹோம் ஒர்க் செய்ய தவறிய மாணவன் டீச்சரை அழைப்பது போல அழைத்தாள் நிசா. மித்ரன் அவளை துளைப்பது போல பார்க்க, மௌனமானாள்.
அவன் பார்வை விலகியதும் மெல்லிய குரலில் மீண்டும் தொடர்ந்தாள்,

"நாங்க தான் எல்லா உண்மையும் சொல்லிட்டோமே.. எங்கள மன்னிச்சு விட்ருங்களேன் ப்ளீஸ் ..! மன்னிக்றது தான் மனிதனாக முதல் படினு பகவத் கீதைல சொல்லிருக்காங்க.."

"அப்போ நான் இன்னும் மனுசனாகலனு சொல்றியா..?" என்றான் மித்ரன் அவள் முகத்தையே பார்க்காமல்

"பைபிள் குர்ரான் லயும் அதே தான் சொல்லிருக்காங்க" மேரியும் வாயைத் திறந்தாள்.

"என்ன சொல்லிருக்காங்க .. நான் இன்னும் மனுசனாகலேனா..?"


"அய்யோ அப்படி சொல்லல சார் .. " மேரி மேலும் பேச முயற்சிக்க மித்ரன் அவளை நிறுத்த சொல்லி கையசைத்தான்.


மேரியின் குரலில் முன் கண்டிராத நடுக்கம் நிசாவை மேலும் பதைபதைக்க செய்தது.


தன் தலையை கோதிய வாறு மித்ரன் பேசத் தொடங்கினான்.
"நாயை தேடி வந்தியோ இல்ல வேற எத தேடி வந்தியோ.. அதெல்லாம் எனக்கு தெரியாது .. ஆனா.." அவன் பேசி முடிப்பதற்குள் அவன் செல் போன் சினுங்கி அவனை தடுத்தது, சலித்துக் கொண்டு அதனை காதில் செலுத்தி அங்கிருந்து நகன்றான்.


"ஹேய்.. உன்ட்ட மொபைல் இருக்குல்ல.." கிசுகிசுத்தாள் மேரி.
நிசா ஆம் என்பது போல தலையாட்ட மேலும் தொடர்ந்தாள் மேரி,
"உடனே போலீசுக்கு போன் பன்னு.."


"கை பின்னாடி கட்டிருக்கேக்கா அவங்கட்ட டீடைலா பேச முடியாதே.."


"அப்போ அந்த மாமி சனியனுக்காச்சும் போன் பண்ணு, அதுட்ட கொடுத்த ஒரு வேலையையும் ஒழுங்கா பண்ணாம இப்படி மாட்டி விட்ருச்சே..!"


நிசாவும் தன் பங்கிற்கு காயத்ரியை வண்டை வண்டையாக திட்டி விட்டு, இடுப்பில் செருகி இருந்த தன் மொபைல் போனை லாவகமாக எடுத்தாள், கைகள் அவளை அறியாமலே நடுங்க , ஒரு வழியாக மாமியின் நம்பருக்கு டயல் செய்தாள், அதே நேரம் மித்ரனும் அவன் போன்கால்-ஐ முடித்துவிட்டு இவர்களிருக்கும் அறை நோக்கி வரத் தொடங்கினான், நிசா காலை கட் பண்ணாமல் அப்படியே லாவகமாக தன் கைகளில் மறைத்தாள், கல்லூரியில் கற்ற பிட் அடித்து ப்ரொபஸர் வந்ததும் ஒளித்து வைக்கும் வித்தை, அவளுக்கு தக்க சமயத்தில் கை கொடுத்தது. 'மாமி போன மட்டும் கட் பண்ணிராத' என்று மனதுக்குள் மாமிக்கு வேண்டுகோள் வைத்தாள். கட் பண்ணினாள் கூட பரவாயில்லையே, மாமி மிஸ்டு கால் கொடுக்கிறாள் என நினைத்துக் கொண்டு மீண்டும் இதே நம்பருக்கு கால் செய்துவிட்டாள், நிசாவிற்கு பயம் தலைக்கேறியது அவள் பயம் நியாயமானதுதான் , அவள் தான் மொபைலை சைலண்ட் இல் போட வில்லையே , காயத்ரி மட்டும் கால் செய்து விட்டால் நிசா கதை முடிந்தது.


காயத்ரி ஓர் இருட்டறையில் நடந்துக் கொண்டிருந்தாள், தூரத்தில் ஓர் வெளிச்சம் விட்டில் பூச்சியாய் அவளை ஈர்த்துக் கொண்டிருந்தது. அந்த ஒளியிலிருந்து ஓர் உருவம் வருவதை உணர்ந்தாள், அந்த உருவம் .. அது வேறு யாருமில்லை. அவளுக்கு நன்கு தெரிந்த உருவம் அவளுக்கு மட்டுமல்ல உலகுக்கே தெரிந்த இசையின் உருவம் , ஏ.ஆர். ரஹ்மான் தான் அது. அவர் காயத்ரியை நோக்கி வந்தார், திடீரென கையிலிருந்து ஒரு கிட்டாரை எடுத்து வாசிக்க தொடங்கினார். அந்த இனிமையான ட்யூன் இவளுக்கு நன்கு பரீட்சயப்பட்டது .. ஆ! இது நோக்கியா ட்யூனே தான். ஆனால் ஏ.ஆர். ரஹ்மான் ஏர்டெல் தானே வாசிப்பாரு, ஒருவேளை நோக்கியாக்கு மாறிட்டாரோ அவள் யோசித்து கொண்டிருக்கையில் ரஹ்மான் இவள் அருகே நெருங்கி ஏதோ சொல்ல எத்தனிக்க, காதை நன்கு தீட்டிக் கொண்டு என்ன ..? என்றாள்,


அவரோ "உன் போன் தான் அடிக்குது .. முன்டம்" என கத்த,
திடுக்கென துள்ளி எழுந்தாள் காயத்ரி, தன் உறக்கத்திலிருந்து. நோக்கியா ட்யூன் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்க, போனை எடுத்து நிசா என நினைத்து சொல்லுடி என்றாள் ஆனால் மறுமுனையில் கேட்டதோ மித்ரனின் மிரட்டும் குரல்,


'எனக்கும் வேற வழி தெரியல , நீங்க வர கூடாத இடத்துக்கு வந்துட்டீங்க.. ஏதாச்சும் பண்ணனும்னு ட்ரை பண்ணீங்கன்னா உங்கள இங்கேயே கொன்னுருவேன்..ஏய் கைல என்ன வச்சிருக்க.. நடுங்கிய குரலில் நிசா ஒன்னுமில்ல சார்.. திரும்புடி அதை கொடு இங்க' என மறுபடியும் மித்ரன் அங்கு ஒரு போராட்டம் நடப்பது போல ஒலிக்க கால் கரகரத்து பின் கட் ஆனது.


காயத்ரிக்கு பயத்தில் b.p ஏறுவது செக் பண்ணாமலே உணர முடிந்தது. உடலெங்கும் வேர்த்துக் கொட்டியது. படத்தில் கூட இப்படி ஒரு த்ரில்லிங் சீன் வந்தால் பார்வர்டு பண்ணி விடுவாள், வாழ்க்கையிலும் பார்வர்டு பன்னும் ஆப்சன் இருக்க கூடாத என நொந்தாள். யாரிடம் உதவி கேட்பது .. வாட்ச்மேன் எங்கே போனானென்றே தெரியவில்லை, அப்பார்ட்மென்ட் வாசிகளோ காட்ஸில்லாவே வந்தாலும் பத்து மணிக்கு மேல் கதவை திறக்க மாட்டார்கள், இப்படி எண்ணிக் கொண்டிருக்கையில் காயத்ரியின் மோர்க் குழம்பு மூளை அதிசயமாக சரியாக வேலை செய்தது
உடனே 100 க்கு தட்டினாள் போனை.


P.S : காயத்ரியின் மந்திரம் வேலை செய்யுமா இல்லை தீபாவளி புஷ்வானம் போல சில நொடி சீறி அமுங்கி விடுமா ..? பார்க்கலாம்,
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
காயூ கனவுல ஏ.ஆர். ரஹ்மான் வந்ததுதான் வந்தாரு வேற பாட்டு வாசிச்சுட்டு அப்புறம் நோக்கியாவுக்குத் தாவியிருக்கலாமில்ல ... என்னே காயூவுக்கு வந்த சோதனை ?‍♀

Interesting update Jaalan
 




Jaalan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
111
Reaction score
361
காயூ கனவுல ஏ.ஆர். ரஹ்மான் வந்ததுதான் வந்தாரு வேற பாட்டு வாசிச்சுட்டு அப்புறம் நோக்கியாவுக்குத் தாவியிருக்கலாமில்ல ... என்னே காயூவுக்கு வந்த சோதனை ?‍♀

Interesting update Jaalan
Thank u soo much
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top