• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

, கார்த்திகா மனோகரனின் தேன்மழை அத்தியாயம் 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
இரைதேட சென்ற பறவைகள் களைத்து தன் கூட்டிற்க்கு செல்ல , கதிரவனும் ஓய்வெடுக்க செல்ல வேண்டி சோபையாக தன் கதிர்களை பூமிக்கு செலுத்திக்கொண்டிருந்த மாலை நேரம். அந்த மிகப்பெரிய மாளிகையின் பின்புறத்தில் இருந்த அழகிய நந்தவனத்தின் நடுவே இருந்தது அந்த நீர்த்தடாகம். அதன் அருகில் வெறுமையான பார்வையுடன் அமர்ந்திருந்தாள் அவள் ..... "தேவ வெண்மதி"...கண்களில் நீர் தேங்கி நின்றாலும், கீழே விழக்கூடாது என்ற திடம் அவள் மனதில்.அரண்மனை முழுதும் போர் ஆயத்த பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்க, அதற்கு காரணமானவளோ எதிலும் ஒட்டாமல் , அமைதியாய் இருந்தாள்.

கடந்த ஒரு வார காலமாக இப்படிதான்....மருந்தாய் உணவுண்டு, தூக்கமில்லாமல், மூச்சு விடுவது கூட பாரமாகிபோனது அவளுக்கு. தந்தையை எண்ணி கலங்கினாலும், அவனது துரோகமே பெரும் இடியாய் இருந்தது. அவராசெய்தார்? இருக்காது? என்று ஒரு மனமும், திட்டம்போட்டு சதி செய்துவிட்டான் என்று இன்னொரு மனமும் அவளிடம் வாதிட்டதில் வெகுவாக சோர்ந்தாள். அப்போது அவ்விடம் வந்தாள் அல்லி..

"இளவரசி!!"
முகத்தில் அத்தனை வெறுமை..."

"நான் தோற்றுவிட்டேன் அல்லி!!!! மிகவும் மோசமாக தோற்றுவிட்டேன்.....என் முட்டாள் தனத்தால் தந்தையையும் இழந்து விட்டேன். இனி என் செய்யேன்??? "

அனைத்தும் இழந்த நிர்கதியற்ற நிலை...அவளை தன் தோளில் சாய்த்து கொண்டவளின் கண்கள் கலங்கியது. அல்லிக்கு...எத்தனை தைரியமானவர்...இந்த காதல் இப்படி உருக்குழைத்து நரகத்தை காட்டவல்லதா?

இளவரசி!!! "ஒருவேளை அவர் குற்றமிழைக்கவில்லை என்றறிந்தால்.."

"ஓலைக்கு மேல் ஓலை அனுப்பியாயிற்று...அல்லி , எதற்கும் பதில் இல்லை!!!! அவர் குற்றமற்றவராய் இருந்தால் விளக்கம் அளித்திருக்க வேண்டுமே!!!! ஆனால் அவரிடமிருந்து எந்தவித பதிலும் இல்லை .....

"அதற்காக இந்த போர் அவசியம்தானா?"

"என்,தந்தை மரணத்திற்க்கு நியாயம் கிடைக்கப்பெற வேண்டும்.....என் தந்தை மரணத்திற்கு காரணம் யாராக இருந்தாலு்ம்......யாராக இருந்தாலும் அவர்கள் என் வாளுக்கு பதில் கூறியே ஆகவேண்டும்." அத்தனை சீற்றம் அவள் கண்ணில்.

"உன் காதலை துறந்தாயா?"

"என் காதல் மரித்து விட்டது...." இனி உயிர்பிக்க வழியில்லை. இனி என் வாழ்வனைத்தும் என் நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காக மட்டுமே"..

அவ்வாறு கூறும் தோழியவளை கண்டு அல்லி வருத்தமுற்றாள்.

அப்போது அங்கு வந்தான் "இளமாறன்" வெண்மதியின் சிற்றப்பாவின் மகன். அவளது அன்பு இளவல். பதின் பருவத்தில் இருந்தாலும் , வாள் பயிற்சியில் திறமையானவன். அறிவுக்கூர்மை உடையவன்....

" வணங்குகிறேன் தமக்கையே!!"

அவனை கண்டதும் இவளது முகத்தில் சிறு இளக்கம் வந்தது...வாஞ்சையுடன்
"வாருவாய் மாறா!!!!"

அவளெதிரில் அமர்ந்தவன் " "நான் ஒன்று கேட்கலாமா?"

"அதிலென்ன தயக்கம் தாராளமாக வினவலாம்"

"போர் முடிவில் தாங்கள் உறுதியாக உள்ளீரா?"

" ஏன் அவ்வாறு வினவுகிறாய்?"

"சோழரின் குற்றம் இன்னும் நிருபிக்கப்படவில்லையே!!"

"ஆனால் குற்றச்சாட்டுக்கு விளக்கமும் அளிக்கவும் அவர் முனையவில்லை...அப்படியென்றால் அதை ஒப்புக்கொள்வதாகதானே அர்த்தம்!!!" அதுவுமில்லாமல் நேரில் கண்ட சாட்சியாய் சிறிய தந்தையார் இருக்கிறார்"

"தீர விசாரிப்பதே மெய்யாகும்"

"சிறிய தந்தை ஏன் பொய்யுரைக்க வேண்டும்" எதையோ யோசித்தவன் அமைதியாகி விட்டான்.

ஆகட்டும் தமக்கையே!!!! இனி தாம் கவனமாக இருக்க வேண்டும். எங்கு செல்வதாயினும் பாதுகாப்பாக செல்ல வேண்டும்...என்று படபடத்தவனை கண்டு சிறு புன்னகை எழுந்தது அவளுக்கு....

நீ வளர்ந்து விட்டாய் மாறா!!! உன்னுடைய தமக்கையை நீ பாதுகாக்க மாட்டாயா? என்று கேட்க..

"என் உயிரை கொடுத்தாவது தங்களை காப்பேன்"

அதில் திடுக்கிட்டவள் "மாறா!!! என்ன இது நான் விளையாட்டாகதான் கூறினேன்..."

" ஆனால் நான் உண்மையையே உரைத்தேன், உங்களுக்கு எதாவது ஆபத்து ஏற்படுமாயின் அதை ஏற்படுத்துபவர் யாராயினும் அவர்களின் காலனாவேன்..".என்று உறுதியுடன் கூறியவன் ... "நாளை வெளியில் எதாவது பணிக்கு செல்கிறீர்களா?" அவனது அன்பில் நெஞ்சுருகி நின்றவள்

" ஆம் மாறா...போருக்கான ஆயத்த பணிகளை காண காலை சிறிய தந்தையுடன் செல்கிறேன்"

எதையோ நினைத்து கடினமுற்றவன் "கவனம் தமக்கையே ...நான் சென்று வருகிறேன்." என்றவன் அல்லியிடம் அவளை கவனித்துக் கொள்ளுமாறு கூறி சென்றுவிட்டான்.

"பார்த்தாயா அல்லி இவனுக்குதான் என்மேல் எத்தனை அன்பு...."

"உண்மைதான் ஆனால் இரண்டு நாட்களாக மாறனின் முகம் சரியில்லையே? வெளியே செல்வதும் , வருவதுமாக பரபரப்பாக உள்ளான்." என்று கூறவும் ...
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
"போரை பற்றிய கவலையாய் இருக்கும் சிறியவனல்லவா"

"ஆனால் எனக்கு அவ்வாறு தோன்றவில்லை..அவன் எதையோ மறைக்கிறான்" என்று மனதில் நினைத்தவள் ...சரி.சரி இருள் சூழ்ந்து விட்டது.... வா செல்லலாம்..என்று அவளை அழைத்து சென்று பசியாற அமர்த்தியவள், மிரட்டி ,மிரட்டி அவள் உண்ட பின்பே தன் இல்லத்திற்க்கு சென்றாள். தன் சோபன அறை வந்தவள் படுக்கையில் படுத்தும் உறக்கம் வராமல் தவிக்க, எழுந்து சென்று மாடத்தில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து அந்த நிலவை பார்த்தாள்... அது பல நினைவுகளை கிளறி விட்டது....


அன்று அவனுடன் சண்டையிட்டு தோற்றதால், தன்னை பற்றி கூறியவள், அவனை பற்றி அறிந்துகொள்ள நினைக்க, அவள் மனமோ அறிந்து என்ன செய்ய போகிறாய் என்று எதிர்கேள்வி கேட்க...அமைதியாகிவிட்டாள். ஆனால் இவளின் நிலை அறிந்த அல்லி அவர்களை பற்றிய விபரம் கேட்க, அவன் கூறிய விவரத்தில் இவளது மனம் பெரிதும ஏமாற்றமடைந்தது. அவர் யார் என்பதில் என் மனம் ஏமாற்றமடைந்தது...ஏன் ? எதற்காக என் மனம் ஏமாற்றமடைய வேண்டும் .....அவர் பரிசை கேட்க நினைத்த போது நீ என்ன நினைத்தாய்!! உன்னை கேட்பாரென்றா? என்று அவள் மனமே கேட்டதில் ..... ஏன் கேட்டிருக்கலாமே!! கேட்டிருந்தால் ?....நீ தந்துவிடுவாயா?.....ஏன் மாட்டேனா!!! உன் தந்தையையும், நாட்டையும் மறந்தாயா!!!! இதில் தன் மயக்கம் தெளிந்தவள் இல்லை... இது நடக்காது...இந்த பொருந்தாக்காதல் ஏன் எனக்கு வந்தது....என்று வேதனையுற்றாள்... இவ்வாறு யோசித்தவாறே தனது குடிலை வந்தடைந்தாள்.

அங்கே அவளுக்காக காத்திருந்தது அவளது "மித்ரா".அது அவள் வளர்க்கும் புறா. அதை கண்டதும் மற்றவை அனைத்தும் மறந்து அதீத மகிழ்ச்சியோடு "மித்ரா" என்றழைத்தவாறு சென்றாள். அதுவும் செல்லமாய் அவளது தோளில் அமர்ந்து கொண்டது.

"இங்கேயும் வந்துவிட்டாயா!!!" என்றவாறு அல்லி அங்குவர...அவளை பார்த்து தலையை திருப்பி கொண்டது மித்ரா. "முகத்தை திருப்புகிறாயோ!!! அது எப்படிதான் நீ இருக்கும் இடம் அவனுக்கு தெரிகிறதோ...பின்னோடே வந்துவிடுகிறான்". என்றவாறு அல்லி உள்ளே சென்றாள் மித்ராவிற்கு உணவு எடுத்துவர. ஆம் அவர்கள் குடிலில்தான் வசிக்கிறார்கள்.அவள் கானகத்திற்கு செல்கிறேன் எனவும் பாண்டியரால் இந்த சிறு குடில் அமைக்கப்பட்டு, அதை சுற்றி ஆளுயரத்திற்கு வேலி அமைக்கப்பட்டது. சமைக்க தேவையான சில மண்பாத்திரங்கள், இரண்டு படுக்கை விரிப்பு, ஆடைகள் என எளிமையாக இருந்தது அந்த குடில்.

மித்ராவை கண்டதும் வெண்மதிக்கு ஆதித்தனை பற்றிய நினைவுகள் பின்தங்கிவிட்டன...ஆனால் மறையவில்லை.அன்றே அவனை மீண்டுமொருமுறை சந்திக்க நேரிடும் என்பதை அவள் அறியவில்லை. மாலை வானம் இருட்டி கொண்டு மழை பொழிய தொடங்கியது. "அல்லி!! மித்ரா வெளியில் சென்றான் இன்னும் காணவில்லையே!!!!.." "அவன் பத்திரமாக இருப்பான் வருந்தாதே" அசுர வேகத்தில் காற்று வீச , மழை வலுக்க தொடங்கியது. அந்நேரம் குடிலின் வெளியில் இருந்து ஒரு குரல் கேட்க, வெளியே சென்று பார்த்தனர் தோழிகள் இருவரும். அங்கே முத்தழகனும், கரிகாலனும் மழையில் நனைந்தவாறு நின்றிருந்தனர்.

கரிகாலனை கண்டது வெண்மதிக்கு மகிழ்வை தந்தாலும், அதை தொடர முடியா நிலையை எண்ணி மனம் வேதனையுற்றது...தன் மனதை வெளிப்படுத்தாது இருக்க மிகவும் ப்ரயத்தன பட்டாள். அல்லி வெண்மதியை பார்க்க அவள் தலையசைத்ததும்

"வாருங்கள் தமையனாரே!!! நீங்களும் வாருங்கள் "

என்று இருவரையும் அல்லி குடிலின் உள் அழைத்தாள்.கரிகாலன்

"வேண்டாம் , பெண்கள் மட்டும் இருக்கும் குடிலின் உள் நாங்கள் வருவது முறையன்று...இப்படியே செல்கிறோம் " நன்றி.

என்று அவர்கள் செல்ல தொடங்க..

."வரும் விருந்தினரை உபசரிக்காமல் அனுப்புவதும் முறையன்று ... அதனால் தயவு செய்து இருவரும் உள்வர வேண்டும் "இப்போது அழைத்தது வெண்மதி...

. முத்தழகன் கரிகாலனை பார்க்க அவன் சம்மதமாக தலையசைக்கவும் இருவரும் உள்ளே வர, வாயிலின் அருகில் நின்றிருந்த வெண்மதி கரிகாலனை பார்த்தவாறே வழிவிட..அவனும் உள்ளே வரும் வரை வெண்மதியை பார்த்தவாறே உள்ளே வந்தான். அவனது பார்வையை சந்திக்க இயலாமல் தலையை குனிந்து கொண்டாள். எந்த ஆடவராயினும் நேருக்கு நேர் பார்த்தே பேசி பழக்கப்பட்டவள் முதன்முறையாக ஒரு ஆணின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பது இவர்களை பார்த்த அல்லிக்கு வியப்பை ஏற்படுத்தியது. அவள் முன்பே தோழியின் எண்ணபோக்கை அறிந்தாலும் இப்போது அந்த எண்ணம் இன்னும் பலப்பட்டது.

நீர் பருகுங்கள் தமையனே...என்றவள்...தங்கள் உடைமைகளை அங்கு வைக்கலாமே என்று ஒரு இடத்தை சுட்டிக்காட்டினாள். அவள் கூறியவாறே அம்புகள் இருந்த அம்புராத்தூளியையும், உறையுடன் இருந்த வாளையும் கலைந்தவன் அங்கு வைக்க, முத்தழகனும் அவ்வாறே செய்தான்.

"சிரமத்திற்க்கு மன்னிக்க வேண்டும் இளவரசி் , கோடையில் மழை இப்படி வலுக்கும் என்பதை அறியவில்லை....அப்போதுதான் இங்கே குடில் இருப்பதை கண்டு மழை ஓயும் வரை தங்க அனுமதி கேட்க வந்தோம்.ஆனால் உங்களை எதிர்பார்க்க வில்லை" என்று தயங்கியவாறு நீளமாக கூறிமுடித்தான்,முத்தழகன்.

"தாங்கள் வருத்தப்படவேண்டிய அவசியமில்லை தமையனே .... இது சிறிய உதவி அவ்வளவுதானே? என்று அவனை சமாதானப்படுத்தினாள் வெண்மதி...

"அல்லி விருந்தினர்க்கு உணவு தயாராக உள்ளதா?"
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
"ஆம் இளவரசி....இருவரும் பசியாற வாருங்கள்..." என்று அழைக்க இருவரும் உண்டு முடித்தனர் ..மழை இன்னும் விடாது பெய்து கொண்டிருந்தது. வெண்மதியும், கரிகாலனும் ஒருவரை ஒருவர் பார்வையால் தொடர்ந்தவாறு இருக்க, இதை கண்டும் காணாமல் இருந்தனர் மற்ற இருவரும். பல தடைகள் வந்தாலும் அதனை உடைத்து இருவரும் சேர வேண்டும் என்பதே இவ்விருவரின் எண்ணமாக இருந்தது. ஆனால் இவ்விருவருமே தங்கள் விருப்பத்தை பகிர்ந்து கொள்ளாத வரையில் இது சாத்தியமில்லை. என்ன செய்வது என்று அல்லி யோசிக்க ஆரம்பித்தாள். அதற்கு முதலில் அவர்களை இங்கே தங்க வைக்க வேண்டும்.

" தமையனே மழை விடுவது போல தெரியவில்லை அதனால் இன்று இரவு இங்கு தங்கி செல்லலாமே!!" வெண்மதிக்கோ அவனை காணும் நேரத்தை அதிகரிக்க நல்ல வாய்ப்பாக தோன்ற,

"ஆம். இருவரும் இன்று இங்கு களைப்பாரி விட்டு விடியலில் செல்லலாமே!!!"

கரிகாலன் "அது சரி வராது...பெண்கள் மட்டும் இருக்கும் குடிலில் ஆடவர் இரவு தங்குவது உசிதமன்று" என்று கூற.

அல்லியோ "தங்களை தமையனாக எண்ணியே இதை கூறினேன், தாங்கள் என்னை தங்கையாக நினைக்கவில்லையா?"

"அப்படி இல்லையம்மா!!!"

"நான்தான் என் தகுதியை அறியாமல் உரிமை எடுத்துக்கொண்டேன் , மன்னியுங்கள் இளவரசே" என்று கண்ணீரை ஆயுதமாக எடுக்க.....

"என்னம்மா இப்படி கூறிவிட்டாய்!!! சரி இங்கு தங்க உன் இளவரசியின் அனுமதி வேண்டுமே? அவளுக்கு என்ன ஆட்சேபனை இருக்க போகிறது...அப்படிதானே மதி...

உடனே "ஆமாம்..ஆமாம் எனக்கு மகிழ்ச்சியே "

அவள் கூறியதில் அவனுக்கும் புன்னகை வர பார்த்தது...தன்மீது அவளுக்கும் விருப்பம் இருப்பதை அறிந்து கொண்டான் .

"அப்படியானால் சரி நாங்கள் வெளி திண்ணையில் துயில் கொள்கிறோம் நீங்கள் உள்ளே உறங்குங்கள்."

"அவர்களுக்கும் அது சரியென படவே சம்மதித்தனர்."

கரிகாலன் அருகில் இருக்கிறான் என்ற நினைவே வெண்மதிக்கு அவ்வளவு உவகையை தந்தது. கரிகாலனுக்கும் அப்படியே. அவளை காலையில் தான் சந்தித்தோம் என்பதை நம்ப முடியவில்லை..காலம்காலமாக தொடரும் பந்தமோ!!! என்று எண்ணிகொண்டே துயில் கொண்டான்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா மனோகரன் டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top