• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கார்த்திகா மனோகரனின் தேன்மழை அத்தியாயம் 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
கதிரவன் தன் ஒளியால் இருளை விரட்டிக்கொண்டு வந்துகொண்டிருந்தான். அல்லி எழுந்தவள் எப்போதும் போல் விநாயகப் பெருமாளை துதித்தவாறு கண்விழித்தாள். பக்கத்தில் வெண்மதி நல்ல உறக்கத்தில் இருக்க, அவளை எழுப்பாதவாறு வெளியில் வந்தாள்.அங்கே கரிகாலனும், முத்தழகனும் ஆசன பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் அருகே சென்றவள்

"வணக்கம் தமையனே ...நன்றாக உறங்கினீர்களா!! என்று வினவ. சிறு புன்னகையுடன் தலையசைத்தவன்..

."தாங்கள் செய்த உதவிக்கு மிக்க நன்றியம்மா!!! உங்களிடம் சொல்லி விடைபெறவே காத்திருந்தோம் ....
நாங்கள் வருகிறோம்..."

என்றவன் அவளின் பின் தேட அவன் யாரை தேடுகிறான் என்று அறிந்தவள்

"இளவரசி இன்னும் உறங்குகிறார்... நீங்கள் சற்று பொறுத்திருங்கள் நான் சென்று அருவியில் இருந்து நீர் கொண்டு வருகிறேன்" ...

"இல்லையம்மா தாமதமாகிவிடும்"

"தமையனே இளவரசிக்கு பாதுகாப்பாக சிறிது நேரம் இருந்தீர்களேயானால் நான் விரைவாக வந்துவிடுவேன்..."

"ஹா..ஹா..ஹா என்று சிரித்தவன் தங்கள் இளவரசிக்கு நான் காவலா!!!!

திருதிருவென முழித்தவள்
"அது...அது அவர் விழித்திருக்கும்போது தேவையில்லை...ஆனால் அவர் உறங்குகிறார் அதனால்தான்...." என்று இழுக்க...

"சரி..சரி சென்று வா" ஆனால் விரைவில் வந்துவிடவேண்டும். "

அவன் பதிலில் சிட்டாக பறந்தவள் மண்பானை எடுத்துக்கொண்டு வெளியில் வர, முத்தழகனை அழைத்தவன் அல்லிக்கு பாதுகாப்பாக செல்ல கூற, தடுக்க வந்தவள் எதையோ நினைத்தவாறு சரியென்று முன் செல்ல முத்தழகன் பின் தொடர்ந்தான்.

மெல்ல உறக்கம் கலைந்த வெண்மதியின் நினைவுகளில் உடனே வந்தவன் கரிகாலன் தான். சென்றுவிட்டானோ? என எண்ணியவள் வேகமாக எழுந்து வெளியில் வர, அவன் திரும்பி நின்றவாறு சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருக்க....அவனை கண்டவளது உலகம் ஸ்தம்பித்தது மேலாடையின்றி இரு கைகளையும் மேலே தூக்கி சூரியனை வணங்கியவாறு, பயிற்சியை ஆரம்பித்தவனது ஒவ்வொரு அசைவையும் ரசித்துக் கொண்டிருந்தாள்.

பயிற்சியை முடித்தவன் திரும்ப அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் செயலற்ற நிலை கண்டு அவனுக்கு புன்னகை வந்தது...அவன் அருகில் வர அதைகூட உணராமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.அருகில் வந்தவன் இன்னும் அவள் இயல்பு நிலைக்கு வராமல் இருக்க..அவளது கலைந்த முடிகள் முகத்தில் படர்ந்திருக்க...அதை மெதுவாக ஒதுக்கியவன்

"தேவி"

என அழைக்க....

"கூறுங்கள் ஆதித்தரே"

என ஒருவித மயக்கத்திலே கூற, அவனது அழைப்பில் அவனது முகம் பிரகாசமடைந்தது.... அவள் இன்னும் சுய நினைவு அடையவில்லை என்றறிந்தவன்...அவளது முகத்தில் மெலிதாக காற்று ஊத....அதில் மயங்கி் கண் மூடியவள் அதை ரசித்திருக்க.. .இந்த நிலை மேலும் அவனை சோதிக்க ஒற்றை விரல் கொண்டு முகவடிவை அளந்தவாறு "

தேவி"

என காதோரத்தில் கிசுகிசுக்க படக்கென்று கண்திறந்தவள் .... என்ன காரியம் செய்து விட்டாய் வெண்மதி...என்று பதற. அவனை விட்டு விலகி திரும்பி நின்று கொண்டாள். இருதயம் படபடக்க ஆரம்பித்து, கை, கால்கள் நடுங்க ஆரம்பித்தன. அவள் பின்னே வந்தவன் நெருங்கி அவள் தோளை தொட , இன்னும் வெளிப்படையாக நடுங்க ஆரம்பித்தாள்.

"வேண்டாம்!!!" தாங்கள் இவ்வாறு" .....

அதற்க்குள் வார்த்தை தந்தியடிக்க.... "

"ஏன் தேவி? எதற்காக விலகல் ..உன் மனதில் நான் இல்லையா!! உன் கண்களில் நான் கண்ட காதல் மாயையா!!!"

"இல்லையே...என்று மனது ஓலமிட"

"என்னை பார் தேவி",

என்று அவளை திருப்ப அவளோ இவனை கானாமல் தலை குணிந்து நின்றாள். தவறு செய்த சிறுபிள்ளை போல கைகளை பிசைந்தவாறு தலை குனிந்து நின்றவளை பார்த்து , புன்னகை அரும்பியது.

" நேற்று என்னிடம் சண்டையிட்ட பெண்ணை அறிவாயா தேவி"அதற்கும் பதிலில்லை, பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன் ,

"ஒன்றை அறிவாயா தேவி , கானகத்திற்க்கு வேட்டையாட வந்தேன், ஆனால் வந்த இடத்தில் நானே வேட்டையாடப் பட்டேன்" என்றதும் அவசரமாக நிமிர்ந்து அவனை ஆராய்ந்தாள் காயம் எதாவது ஏற்பட்டுவிட்டதா என்று. அவளது தேடல் எதற்கு என்று அறிந்தவன்

"காயம் இங்கே என்று இருதய பகுதியை சுட்டிக் காட்டியதும், அவன் எதனை கூறுகிறான் என்பதை அறிந்து கொண்டாலும் இது நடவாத ஒன்று என்று அவள் மனம் வேதனை கொண்டது.

" கடவுளே இவர் இதற்கு மேல் பேசாமல் இருந்தால் நலமாக இருக்கும் அவசரமாக வேண்டுதல் வைத்தாள்.

" ஏனென்றால் அவன் பேசபேச இவள் மனம் எப்போது வேண்டுமானாலும் வெடிக்க தயாராக இருந்தது. அவள் கைகளை அழுந்த பறறியவன்

"என்மீது என்ன பிழை? அதுவும் என் மீதான நேசத்தை மறைக்கும் அளவிற்கு."
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
அவன் கைகளை விலக்க முயற்சித்தவாறு

"இல்லை அப்படி ஒன்றும் இல்லை"

"அப்படியென்றால் என் கண்ணை பார்த்து சொல்"

அவள் கையை தன் தலை மீது வைத்தவன் "என் மேல் ஆணை!!! உண்மையை யாதென கூறுவாய் தேவி"

இச்செயலில் அதிர்ந்தவள் "என்ன காரியம் செய்கிறீர்கள் கையை விடுங்கள் " கண்களில் நீருடன் மன்றாட..

அவன் அசைவதாக இல்லை. இவன் விடப்போவதில்லை என்று அறிந்தவள்...

" ஒப்புக்கொள்கிறேன்...நான் தங்களை நேசிப்பது உண்மையே!!! எதனால்? எப்பொழுது? என்பதை அறியேன், ஆனால் தோன்றிய நொடியே இது நடவாத காரியம் என்று என்,மனதை கட்டுபடுத்த தொடங்கி விட்டேன்!! இதற்கு மேல் எதையும் கேட்காதீர்கள்" குரல் மெலிதாக இருந்தாலும் அழுத்தமாக உரைத்தாள்.

"நடக்காமல் போவானேன், எது தடையாக இருந்தாலும் அதை தகர்த்து உன்னை கைபிடிப்பேன்."

"நானே தடையாக இருந்தால்"

"எதற்காக இந்த வேலி?"

"திருமனமானால் வது, வரனோடு அவரது தேசம் செல்ல வேண்டும்..என்னால் என் தந்தையையும், நாட்டையும் விட்டு உங்களோடு வர இயலாது"

"அப்படியென்றால் திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்கிறாயா?"

"இதுவரை அப்படியொன்றை யோசிக்கவில்லை, என்றவள் அவனை பார்த்தவாறே இனியும் யோசிக்க போவதில்லை"

" கந்தர்வ மனம் புரிந்து கொள்வோமா?"

" என்னை பொறுத்தவரை அதற்கு அர்த்தமே இல்லை"

"ஏன் அரச குலத்தில் இவ்வகை திருமணங்கள் நடப்பவைதானே!!"

"இருக்கலாம்...ஆனால் இருவர் மட்டும் முடிவெடுத்து யாரும் அறியாமல் வாழ்வது என்னால் இயலாது...எனது திருமணம் நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட வேண்டும்..எனது திருமணத்தால் தந்தைக்கு உண்டாகும் மகிழ்ச்சியை கண்ணார காண வேண்டும்.... எனது அன்னை தவறிய பின் வேறொரு திருமணம் புரியாமல் என்னையே உலகமாய் நினைத்து வாழ்ந்து வரும் அவருக்கு இதுவே நான் தரும் மரியாதை அதனால் என்னை கட்டாயப்படுத்த வேண்டாம்". என்னை புரிந்துகொள்ளேன் என்னும் பாவனையுடன் நின்றிருந்தவளை எக்காரனம் கொண்டும் இழக்க கூடாது என்ற எண்ணம் அவனுள் வலுப்பெற்றது.

"அத்தனை தடைகளையும் தகர்த்து, உன் விருப்பத்தையும் நிறைவேற்றி உன்னை கைபிடிப்பேன் என்று வாக்களிக்கிறேன் இப்போது சம்மதம்தானே!!!

அவனின் இந்த உறுதியில் , அவள் கண்களில் கண்ணீரோடு சம்மதமாய் தலையசைக்க....

"என்னோடு சேர்ந்து என் காரியம் யாவிலும் துணை நிற்பாயா தேவி!" என்று தன் கையை நீட்ட, தயக்கமின்றி கையோடு கை சேர்த்தாள் வெண்மதி....

அப்போது படபடவென்று சத்தம் கேட்க வருவது யாரென்று அறிந்தவள் "மித்ரா" என்று திரும்ப ..அவன் சமத்தாய் தோளில் தஞ்சமடைந்தான்...

"எங்கே சென்றாய் , நான் பயந்து விட்டேன் , இனி என்னிடம் பேசாதே" என்று சிறுபிள்ளைபோல் அதனிடம் கோபிக்க அதுவோ இவளின் கன்னத்தை கொத்தி கொத்தி சமாதானப் படுத்தியது.

இவர்களின் ஊடலை ரசித்த கரிகாலன்

"ம்....சமாதானம் பலமாக இருக்கிறதே...இவர் யாரென்று அறியலாமா? என்றான் மித்ரனை தடவியவாறு...

இவன் "மித்ரன் " என் நண்பனை போன்றவன்...எங்கு சென்றாலும் என்னுடன் வந்து விடுவான்.
மித்ரன் இன்னும் தன் சமாதானத்தை கைவிடவில்லை....

"ம்ஹும் ....கொடுத்து வைத்தவன் என்னிடமும் ஊடல் கொண்டால் நானும் இவ்வாறு சமாதானப்படுத்துவேன்..."

அதை கேட்டவள் கன்னம் சிவக்க "ஆதித்தரே" என்று சிணுங்க... "

"வேண்டாம் தேவி உன்னுடைய இந்த அழைப்பு என்னை போதை கொள்ள செய்கிறது...பிறகு என்னை குற்றம் சொல்லக்கூடாது."

இப்போது மித்ரன் அவன் தோள் சேர்ந்தது...

"இது என்ன அதிசயம் இவன் யாரிடமும் செல்ல மாட்டான்...அல்லியை கண்டாளே முகத்தை திருப்புவான்..உங்களிடம் வந்துவிட்டான்."

"அவனது பிரியமான எஜமானியின் நேசத்திற்குரியவன் என்று அறிந்திருப்பான் அப்படிதானே மித்ரா" அவன் ஆமென்று தலையசைக்கவும் இருவரிடமும் புன்னகை விரிந்தது.

அப்போது அங்கு வந்த அல்லியும் ,முத்தழகனும் இவர்களை கண்டு மகிழ்ந்தனர்...
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
அன்று நாள் இனிமையாக சென்றது...வெண்மதியும், கரிகாலனும் வேட்டைக்கு செல்ல அல்லியும், முத்தழகனும் குடிலில் இருந்துவிட்டனர். நிறைய விடயங்களை கற்றுகொடுத்தான்...அவ்வப்போது சீண்டவும் செய்தான்...கூடவே மித்ரனும் கரிகாலனுடன் கூட்டு சேர்ந்து கொண்டான்.

கரிகாலனுடன் இருக்கும் போது தந்தையுடன் இருப்பது போல பாதுகாப்புணர்வு கொடுக்க அதை மிகவும் விரும்பினாள். மாலை வந்து இருள் சூழ தொடங்கியபோதே இருவரும் குடில் வந்தனர். இரவு உணவு உண்டபின் கரிகாலன் குடிலின் வெளியே செல்ல...வெண்மதியும் பின்னே சென்றாள்... கைகளை கட்டியவாறு வானத்தை பார்த்து நின்றிருந்தவனை

"ஆதித்தரே" அவளின் குரலில் இருந்த கலக்கம் அவனையும் வருத்தியது ...கண்களாலே அழைப்பு விடுக்க, அவன் மார்பில் தஞ்சம் அடைந்தாள்.

"பயமாக உள்ளது ஆதித்தரே , நம் எண்ணம் ஈடேறுமா?

"கவலை ஏன் தேவி நான் இருக்கிறேன்"

" நாளை அரண்மனை செல்கிறோம் இனி எப்போது தங்களை காண்பேன்" அவளது அணைப்பு இறுகியது.

"மித்ரன் எதற்கு இருக்கிறான், நம் எண்ணங்களை அவன் இணைப்பான் " என்று இலகுவாக வழி சொன்னவனை கண்டு புன்னகைத்தவள் இன்னும் இறுக்கி கொண்டாள்.

அடுத்த நாள் இருவரும் அவரவர் அரண்மனைக்கு செல்ல, மித்ரன் பாலமாக செய்திகளை பரிமாறி கொண்டிருந்தான். சில சமயங்களில் அக்கறையாக நலம் விசாரிப்பவன் ...கன்னங்கள் குங்குமமாக சிவக்கும் அளவிற்கு சீண்டவும் செய்வான்....அவனது மடலை ஆவலாக எதிர்பார்த்து ஏங்கும் அளவு மாறிப்போனாள். இப்பொழுதே அவன் மார்பில் தஞ்சம் அடைய மாட்டோமா என ஏங்கிய மனதை அடக்கும் வழியறியாது மடலாக எழுதி தூதனுப்பினாள்.

"ஆதித்தரே... நிலவு வெய்யோனாக மாறி என்னை எரிக்கிறது... கழண்டு விழும் காப்பும், ஒட்டியாணமும் என்னை கேலி செய்கின்றன.... தென்றல் காற்றும் சூறாவளியாய் என்னை நோகடிக்கிறது....தங்களின் வரவை எதிர்பார்த்து கண்கள் உறக்கம் கொள்ளாமல் கருமை சாயம் பூசிக்கொண்டது, சிறிது சிறிதாய் உயிர் பறவை என்னை பிரிகிறது....முழுதாய் போகும்முன் வந்து என்னை மீட்பீராக" உங்கள் நினைவால் தேயும் நிலாப்பெண்.....

இதை கண்ட பின்பும் ஆதித்தன் அங்கு இருப்பானா என்ன?

" காத்திருப்பு முடிவடையும் நேரம் நெருங்கி விட்டது என் நிலாபெண்ணே....தடைகளை தகர்த்து உனைச்சேர விரைகிறேன் காத்திரு.....உன் ஆதித்தன்"

மித்ரா மூலம் தூது அனுப்பிவிட்டு...இவன் புரவியில் பறந்தான்....உடன் முத்தழகனும்.
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,016
Location
madurai
ஏங்க வைப்பதும் ஏனோ .... நிலப்பெண்ணின் ஆதித்யநினைவுகள் தமிழில் அழகாய் மிளிர்கிறது.... இதுக்கு ஒரு situation சாங் போடறேன் நல்ல இல்லனா சொல்லுங்க எடுத்துரலாம்.....

 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
ஏங்க வைப்பதும் ஏனோ .... நிலப்பெண்ணின் ஆதித்யநினைவுகள் தமிழில் அழகாய் மிளிர்கிறது.... இதுக்கு ஒரு situation சாங் போடறேன் நல்ல இல்லனா சொல்லுங்க எடுத்துரலாம்.....

situation song super:love::love:....thanks pa
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா மனோகரன் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top