• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காலங்களில் அவள் வசந்தம் 38

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
அந்த வளாகம் சுறுசுறுப்பாக இருந்தது. எங்கு நோக்கினும் கூட்டம் என பரபரத்துக் கொண்டிருந்தது. அன்று அதன் திறப்பு விழா!

ஜீயஸ் வணிக வளாகம்! இந்திய அளவில் மிக உயரமான கட்டிடமாக, தொண்ணூறு மாடிகளுடன், மிகமிக வித்தியாசமான கட்டிட வடிவமைப்புடன், அனைவரின் பாராட்டையும் வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தது.

ப்ரீத்தியின் பல வருடக் கனவு நனவாகி இருந்தது!

“சென்னையோட ஐக்கானிக் பில்டிங் ஜுபிட்டரோட ஜீயஸ் தான்ப்பா...” தன்னுடைய மாமனாரிடம் அடிக்கடி அவள் சொல்லும் வார்த்தை!

அது இன்று உண்மையாகி இருந்தது.

ஜீயஸ், கிரேக்க புராணத்தில் கடவுள்களுக்கு எல்லாம் கடவுளவர்! கடவுள்கள், மனிதர்களுக்கு மட்டுமல்ல, வானத்துக்கும் அவர் தான் அதிபதி! யாராலும் வெல்ல முடியாத மாவீரன். கிரேக்கத்தின் ஆன்ட்டி ஹீரோ!

அதனாலேயே இந்த பெயரை தேர்ந்தெடுத்து இருந்தார்கள் ஷானும் ப்ரீத்தியும்! மனைவிக்காக வானத்தையும் கூட வளைப்பான் இவன்!

வளைத்தான், இன்னமும் வளைப்பான்!

இந்தியாவின் மிக உயரமான கட்டிடம் மும்பையிலிருக்கும் வோர்ல்ட் ஒன். ப்ரீத்தியை பொறுத்தவரை அதை முறியடிக்க வேண்டும். அதோடு, கட்டிடம், புர்ஜ் கலீஃபா போல ஒரு டூரிஸ்ட் ஸ்பாட்டாக வேண்டும். மக்கள் குடியிருக்கும் ரெசிடென்ஷியல் ஏரியாவும் இருக்க வேண்டும் என்று பலவாறு யோசித்துதான், ஜீயஸ் ப்ராஜக்ட்டை எடுத்தாள்.

ஆம்! முழுமையாக அவள் மட்டுமே எடுத்துக் கொண்ட ப்ராஜக்ட் அது! அவள் தான் ஆர்க்கிடெக்ட்டை தேர்ந்தெடுத்தாள், அவள் தான் அவர்களோடு சேர்ந்து கட்டிடத்தை கட்ட, இன்னும் இரண்டு நிறுவனங்களை பணியில் அமர்த்தினாள். அவை துபாய் மற்றும் மஸ்கட்டை சேர்ந்த நிறுவனங்கள்!

மொத்தமாக இருபத்தி ஐந்து ஏக்கர் இடத்தை தேர்ந்தெடுத்து, முதல் நிலை வடிவமைப்பை முழுதாக செய்தது ப்ரீத்தி மட்டும் தான். ஷானை, அதில் இறங்க விடவில்லை மாதேஸ்வரன்.

“என்னோட மருமகளுக்கு கிடைக்க வேண்டிய கிரெடிட் எல்லாத்தையும் நீயே எடுத்துக்குவ. போடா...” என்று கூறிவிட்டார்.

மருமகளின் மேல் இருந்த அதீத நம்பிக்கையில் அவனை விரட்டிவிட்டாலும், அவ்வப்போது அவனிடமும் என்ன நடக்கிறது என்பதை கேட்டுக் கொள்வார்.

“இதுக்கு ஏன் என்னை துரத்தனும்?” என்று அவனும் கடித்துக் கொண்டே தான் அவளுக்கு தேவையான உதவிகளை எல்லாம் செய்து தருவான்.

பில்டிங் அப்ரூவல் முதல் ஏர்போர்ட் அத்தாரிட்டி அப்ரூவல் வரை, அவளாக போனாள், வழிகாட்டியது அனைத்தும் ஷான் தான், ஆனால் முன்னிறுத்தியது மனைவியை!

அவளது கனவை அவன் கண்டான். மெய்பிக்க உடன் நின்றான்!

ஒரு சிறு கட்டிடம் கட்டுவதே இமாலய சாதனை எனும் போது, இருபத்திஐந்து ஏக்கரில், தொண்ணூறு மாடிகளை உள்ளடக்கிக் கட்ட வேண்டும் என்பதும், ஐந்து பெரிய காம்ப்ளெக்ஸ்ஸோடு, அதற்கு தகுந்த வாணிகங்களை அங்கு கொண்டு வர வேண்டும் என்பது உலக சாதனை தான்.

முழுதாக நான்கு வருடங்கள்... கண் துஞ்சாமல், பசியறியாமல், பெற்ற பிள்ளையை கூட மாமனாரிடமும், தாயிடமும் விட்டுவிட்டு உயிரைக் கொடுத்து உருவாக்கி இருந்தாள்.

ஆம்!

அவர்களது திருமணமே ஒரு வேடிக்கை தான்!

ஆனால் திருமணத்துக்கு முன் ஷான் செய்ய வேண்டிய காரியங்கள் இன்னுமிருந்தன. மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது போல, நிறைய பிரச்சனைகள் ஆங்காங்கே முளைத்துக் கொண்டிருந்தன.

சரண் சிங் கைது செய்யபட்டிருந்தார். அரசாங்க அதிகாரி, தனது வருமானத்துக்கும் மேல் சொத்து சேர்த்த வழக்கு முதல் இன்னும் பல வழக்குகள் அவர் மேல் பாய்ந்திருந்தன. மருத்துவமனையிலிருந்து நேராக சிறைக்கு தான் அவர் செல்ல நேரிட்டது.

ரவி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அவன் வாயை திறக்கவில்லை. அவன் வாய்திறந்து யார் யார் சம்பந்தபட்டிருக்கிறார்கள் என்று சொன்னால், அவனது உயிர் அவனுக்கில்லை. அதே நிலை தான் சரண் சிங்குக்கும் சைலேஷுக்கும். ஏனென்றால் சரண் சிங்கிடம் பணம் கொடுத்தது அனைவரும் மிகமிகப் பெரிய அரசியல்வாதிகள். அவர்களின் பெயர்கள் எல்லாம் வெளியே வந்தால், அதோடு சரண் காலி என்பது அவருக்குத் தெரியும்.

சட்டம் தன் கடமையை செய்யும் என்று ஷான் தள்ளியிருந்தாலும், அவர்களை கண்காணித்துக் கொண்டுதானிருந்தான். மற்றவர்களை எப்படியோ, ரவியை அவனால் முழுமையாக கைவிட்டு விட முடியாது. வைஷ்ணவி அவனை விவாகரத்து செய்ய மனு தாக்கல் செய்துவிட்டாலும், வைபவ்வின் தகப்பன் அவன். அதனால், ஷான் அவனை யாருக்கும் தெரியாமல் காப்பாற்றிக் கொண்டுதான் இருந்தான்.

அவ்வப்போது சிறைக்கு சென்று அவனை பார்ப்பதும், அவனுக்காக வக்கீல் படையை அனுப்பியதும் கூட அவன் தான். ஆனால் அவனை பார்க்கக் கூட மறுத்து விட்டாள் வைஷ்ணவி.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்!

“அந்த ஒரு ஆடியோ தவிர வேறெந்த ஆடியோவையும் நான் லீக் பண்ணல மாமா. என் பக்கத்துல இருந்து இனிமே எந்த ஆதாரமும் வெளிய வராது. சரண் சிங்ல இருந்து யாரும் எதுவும் பேச முடியாது. அதை நான் பார்த்துக்கறேன். கொஞ்ச நாள் போகட்டும். இந்த பிரச்சனை எல்லாம் கொஞ்சம் அடங்கட்டும். மீடியாவும் மக்களும் இன்னும் கொஞ்ச நாள்ல மறந்துடுவாங்க. அப்புறமா நாம பெயில் வாங்கிக்கலாம்.” என்று அவன் கூறியதற்கும் அவன் எதுவும் பேசவில்லை.

மௌனமாகவே இருந்தான்.

தன்னுடைய வாழ்க்கையை வாழ்வதை விடுத்து, இன்னொருவனை கெடுத்து, தான் வாழ வேண்டும் என்று நினைத்தவனுக்கு இயற்கை ஷான் மூலமாகவே தண்டனையை கொடுத்திருந்தது. ஷான் கொடுத்தது கூட அவனை பொறுத்தவரை தண்டனை இல்லை. வைஷ்ணவி கொடுத்தது தான் தண்டனை. வைஷ்ணவியையும் தன் மகனையும் பிரிய போவது ஒன்று தான் அவனைப் பொறுத்தவரை தாள முடியாத மிகப்பெரிய தண்டனை.

அதை நினைக்கும் போதெல்லாம் அவனால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியாமல் போராடுவது வாடிக்கையாகி இருந்தது.

“எனக்கு பெயில் வாங்கறது கூட முக்கியமில்ல மச்சான். வைஷுவ கொஞ்சம் சமாதானப் படுத்தேன். இனிமே எந்த தப்பும் பண்ண மாட்டேன்னு அவளுக்கு புரிய வை டா. இதுவரைக்கும் புத்தி இல்லாம பண்ணிட்டேன்னு அவ கிட்ட சொல்லு ஷான். ப்ளீஸ்...”

“அக்கா கிட்ட பேசிட்டு தான் மாமா இருக்கேன். அவளோட டெசிஷன்ல உறுதியா இருக்கா. கொஞ்ச நாள் பொறுமையா இருங்க மாமா...”

“வைபவ்வையாவது கண்ல காட்ட சொல்லுடா...” என்று ரவி கெஞ்சியபோது அவனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.

ஆனால் மாதேஸ்வரனும் வைஷ்ணவியும் பிடிவாதமாக ஒரே சொல்லில் நிலைத்து நின்று விட்டனர்.

இனி காலமாக வைஷ்ணவியை மாற்றினால் தான் உண்டு என்று ஷானும் தீர்மானித்துக் கொண்டான்.

ரவிக்கு ஆதரவாக ஷான் இருப்பதிலும் ஒரு காரணமுண்டு. எந்த காரணம் கொண்டும், எந்த காலத்திலும், ரவியின் மூலமாக அவனுக்கோ, ஜுபிடருக்கோ எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பதுதான் அது. ஏனென்றால் ரவியின் மூலமாக கருப்பை வெள்ளையாக மாற்றிக் கொண்டிருந்த அரசியல்வாதிகளும், அண்டர்கிரவுண்ட் தாதாக்களும், பெரும் புள்ளிகளும் இப்போதெல்லாம் ஷானை தொடர்பு கொள்ளத் துவங்கி இருந்தனர்.

செய்து கொடுக்க முடியாது என்று கூறி அவர்களை எல்லாம் பகைத்துக் கொள்ள அவன் தயாராக இல்லை. அத்தனை பேரும் சேர்ந்தால், தங்களது நிறுவனத்தை ஒன்றுமில்லாமலாக்கி விடுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும்.

அப்படி இருக்கும் போது அவர்களுடன் பகைமையை வளர்த்து வாழையடி வாழையாக முன்னோர்கள் வளர்த்த நிறுவனத்தை பலி கொடுக்க அவனென்ன முட்டாளா?

மாதேஸ்வரனுக்கு தான் அதில் ஏக வருத்தம். ஆனால் அதில் வரும் வருமானத்தின் பெரும் பகுதி, நல்ல காரியங்களுக்காக போனது.

“பாவப் பணத்தை மாத்தி புண்ணியத்தை சேக்கறோம்ப்பா. விடுங்க...” என்றவனை ஆழ்ந்து பார்த்தவர்,

“வெளிய தெரிஞ்சா நம்ம பேர் கெட்டுடும்டா தம்பி...” என்றார்.

“எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கறேன் ப்பா. எவ்வளவு பள்ளத்துல விழுந்தாலும் அதுல இருந்து மேல ஏறி வர எனக்குத் தெரியும். ஆனா பள்ளத்துல விழ விட மாட்டேன்ங்கறது உங்களுக்குத் தெரியும்...” என்று முடித்து விட்டான்.

தன் மகனை பெருமையாக பார்த்துக் கொண்டார் மாதேஸ்வரன்!

‘என் மகன் இவன்!’

அடுத்ததாக அவனுக்கு பெரும் தலைவலியை கொடுத்தது, வேறு யார்? ப்ரீத்திதான்! ஐம்பது கோடி ரூபாய் ஷேரை ஒப்புக்கொள்ளவே மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தாள்.

“நான் என்ன பணத்துக்காக தான் இருக்கேனா?” என்று அவனை துவைத்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

பல நாட்களாக ஷானிடம் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. அவன் கிழக்கில் என்றால் அவள் மேற்கில் நின்றாள்.

விடாப்பிடியாக ஒரு நாள் அவளை வீட்டில் பிடித்து வைத்தவன், கெஞ்சி கொஞ்சி மிஞ்சி சமாதானப்படுத்த முயன்றான். வைஷ்ணவி மட்டும் எதுவும் பேசாமல் பார்த்தபடி இருந்தாள். கணவனின் பேச்சைக் கேட்டு, ப்ரீத்தியின் தந்தையின் அக்கௌன்ட்டுக்கு பணத்தை அனுப்பி, அதை ஷான் திரும்ப அனுப்பியதெல்லாம் நினைவுக்கு வந்தது.

வருந்தினாள்!

மாதேஸ்வரன் மகன் என்னதான் செய்கிறான் என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார், உள்ளுக்குள் சிரித்தபடி!

‘மாட்டு மகனே மாட்டு!’

“எனக்கெதுக்கு அவ்வளவு பணம்? நான் கேட்டேனா?”

“ஆல்வின் கேட்டானா? மகேஷ் கேட்டானா? அவங்களுக்கு எல்லாம் அவங்க பங்கு பணம் போச்சா இல்லையா? அவங்களும் வந்து என்கிட்ட இப்படித்தான் குதிச்சாங்களா?” ஷான் மிஞ்சினான்!

“ஆல்வினும் மகேஷும் நானும் ஒண்ணா?” அவனது கண்களை பார்த்து ப்ரீத்தி கேட்க, அவனுக்குத்தான் ஐயோவென்றிருந்தது. எந்த பக்கம் போனாலும் கேட் போடறாளே என்று நொந்து கொண்டான்.

“ஏன்டி... எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடற? நான் அப்படி சொன்னேனா?”

“அப்புறம் நீ சொன்னதுக்கு அர்த்தம் என்ன?”

“எல்லாரும் நைட்டும் பகலுமா இந்த ப்ராஜக்ட்ல வேலை பார்த்தோம். அதுக்குத் தகுந்த ஷேர் எல்லாருக்கும் போகணும்ன்னு தான சொல்றேன்...” கெஞ்சியவனை பார்த்து முறைத்தவள்,

“நான் வேலை பார்த்தது உன்கிட்ட. நான் பார்க்கற வேலைக்குத்தான் நீ சம்பளம் குடுக்கறல்ல. அப்புறம் இது எதுக்கு? எதுக்கான விலை இது? அதை முதல்ல சொல்லு...” கிடுக்கிப் பிடி போட்டவளை சமாதானப்படுத்த முடியாமல் மாதேஸ்வரனை பாவமாக பார்த்தான் ஷான்.

“ப்ரீத்திம்மா.. தம்பி அப்படி நினைக்கல...” என்று ஆரம்பிக்க, அவரை அப்படியே தடுத்து நிறுத்தினாள் ப்ரீத்தி.

“அப்பா... ஐ ம் நாட் ஃபார் சேல். அதை இவன் தான் புரிஞ்சுக்கல. நீங்களுமா?” என்று கேட்க, மாதேஸ்வரனே சற்று அதிர்ந்து நின்றுவிட்டார். பல வருடங்களுக்குப் பிறகு இந்த வார்த்தையை கேட்கிறார் அவர். ஸ்ரீமதியின் வார்த்தைகள் ப்ரீத்தியின் மூலமாக!

“அடிங்... என்னடி ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்க? நாட் ஃபார் சேலாம். அப்படியே இவளை விலைக்கு வாங்கி சாதிக்க போறேன். போவியா. உன் பேருக்கு மாத்தற ஷேர்ஸ் மாத்தறதுதான். இப்ப இல்லைன்னாலும் என் பொண்டாட்டிக்குன்னு போறது போறதுதான். விட்டா ரொம்ப பேசிட்டு போற. இங்க பொண்ணுங்க வேற பசங்க வேறன்னு எல்லாம் பார்க்க மாட்டாங்க. எல்லாரும் ஒண்ணுதான். வைஷுவுக்கு இதே மாதிரி எல்லா கம்பெனிலையும் ஷேர்ஸ் இருக்கு. அவளும் ஆக்டிவ் பார்ட்னர் தான். அதே மாதிரி தான் நீயும். ஒழுக்கமா ஆபீஸ் போனமா வேலைய பார்த்தமான்னு இரு. சும்மா நீ வீட்ல உட்கார்றதுக்கு ஷேர் குடுக்கல...” என்று அவன் குதிக்க, அவனைப் பார்த்து முறைத்தவள், அதற்கு மேலும் எதுவும் பேசவில்லை.

ஆனால் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள். பெண்களை அடக்கி வைக்கும் வீட்டினருக்கு மத்தியில் யாருக்கு கிடைக்கும் இப்படியொரு குடும்பம்?

“ஆமா ப்ரீத்திம்மா. அந்த ஷேர வெச்சு நீ ஜுபிடர் கன்ஸ்ட்ரக்ஷன் பொறுப்பை எடுத்துக்கலாம். இவனை அங்க இருந்து துரத்தி விட்டுடு. நாம என்ன நினைக்கற மாதிரி எல்லாம் பண்ணலாம்...” சிறு குழந்தைக்கு மிட்டாயை காட்டி ஊட்டுவதை போல, மாதேஸ்வரன் கூற, ப்ரீத்தி சிரித்து விட்டாள்.

ஆனால் ஷான் தான் கோபமாகவே இருந்தான்! அவன் கோபப்படுவதில் உள்ள லாபத்தைப் பற்றிதான் அவன் அறிவானே!

“பாவத்துல பங்கு கொடுன்னு சொல்லுவாளாம். கொடுத்தா வேணாம்பாளாம்...” என்று கடுப்படிக்க, அவனைப் பரிதாபப் பார்வை பார்த்தாள் ப்ரீத்தி.

“சாரி...”

“என்ன சாரி பூரி?” மிஞ்சியவன், அங்கு நிற்காமல் வெளியேறினான். புன்னகையோடு அமர்ந்திருந்த மாதேஸ்வரனையும் வைஷ்ணவியையும் பார்த்தவளுக்கு புரிந்தது, அவர்கள் யாரும் உதவிக்கு வர மாட்டார்கள் என! வேறு வழியில்லாமல், அவளே அவனை துரத்தினாள்.

“சாரி ஷான்...” என்றபடி!

“உன் சாரிய நீயே வெச்சுக்க...” என்றவன் காரிலேறிக் கொள்ள, அவசரமாக அவளும் ஏறியவள், “சாரி டா. ப்ளீஸ்...” என்றாள்.

கொஞ்ச தூரம் வரை அவளை கெஞ்ச விட்டவன், காரை ஓரமாக நிறுத்த, அப்போதுதான் அவனது திட்டமே அவளுக்குப் புரிந்தது!

அவளைப் பார்த்தவன் தன் புருவத்தை உயர்த்த, அவளது கோபச்சிவப்பு வெட்கச் சிவப்பாக மாறியது.

“திருடா... நானும் நீ நிஜமாவே கோபமா இருக்கன்னு சாரி சொல்லிட்டு இருக்கேன்...” என்று அவனை செல்லமாக அடிக்க, அவளது பின்னந்தலையை பற்றி தன்னருகேயிழுத்தவன்,

“நான் கோபமா இல்லைன்னு யார் சொன்னா?” என்று, அவனது கோபத்தை எல்லாம் முத்தத்தில் காட்டினான். அவனது வன்மையான முத்தங்கள் யாவும் அவளை பிச்சியாக்கின. அவளை மூச்சு விடக் கூட விடாமல், அவனது கோபத்தைக் காட்டினான்.

அவனது கோபமெல்லாம் குறைந்த பின், மெல்ல அவளை விடுவிக்க, மூச்சு வாங்கியது அவளுக்கு!

“சை... ஒரு காட்டான லவ் பண்ணி தொலைச்சிட்டேன்.” என்றவளின் வார்த்தைகளிலிருந்த வெட்கத்தை இனம் கண்டு கொண்டவனுக்கும் புன்னகை மலர்ந்தது!

ஒரு காதல் கடிதம் விழி போடும்

உன்னை காணும் சபலம் வர கூடும்

நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்

நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்

கண்ணே என் கண் பட்ட காயம்

கை வைக்க தானாக ஆறும்

முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்

செம் மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்

எப்போதும் போல ராஜா அவர்களுக்கு துணையிருந்தார். காதலாகி கசிந்துருகிக் கொண்டிருந்தான் ஷான். அவனது தோளில் மயங்கியிருந்தாள் மங்கை!

தொடரும்

காலங்களில் அவள் வசந்தம் கிண்டிலில் பதிவேற்றிவிட்டேன். அங்கு படிக்க விரும்புபவர்கள் அங்கு படிக்கலாம். படித்துவிட்டு உங்களது விமர்சனங்களையும் ஸ்டார் ரேட்டிங்கையும் அங்கு தர கேட்டுக் கொள்கிறேன்.

 




Last edited:

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,608
Reaction score
36,881
Location
Srilanka
🙋‍♀️🙋‍♀️🙋‍♀️Hi Shaan💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻

டேய் ஷான்😡😡😡அது எப்படி ரவிய மட்டும் காப்பாத்த நீ நினைக்கலாம்😠😠😠அவனெல்லாம் எவ்வளவு அசிங்கம் புடிச்சவன்🤮🤮🤮மாட்டினதும் சட்டுனு சாரி கேட்கிறவனெல்லாம் என்ன மனுஷன்...மாட்டலேனா எக்காலத்துக்கும் அவன் திருந்தப் போறதில்ல...காலம் முழுமைக்கும் வைஷுவ ஏமாத்திக்கிட்டுதான் இருந்திருப்பான்...கூடவே ஸ்வேதாவையும் டார்ச்சர் பண்ணிட்டு அவளை கட்டாயப்படுத்தி அவனோட காரியங்களுககு யூஸ் பண்ணிக்கிட்டு இருந்திருப்பான்...இவனிடம் இருந்து தப்பிக்கனும்னா ஸ்வேதா தற்கொலை பண்ணிக்கிட்டாதான் உண்டு...அதுக்கும் அவளுக்கு தைரியம் இல்லேனு சொல்றாள்...அப்போ ஸ்வேதாவின் நிலமை...இப்படிப்பட்டவனை எப்படி ஷான் காப்பாத்த நினைக்கிற😡😡😡நீ ரொம்ம்ப்ப்ப்பப சொதப்பி வைக்கிற ஷான்...உன் மேலதான் எனக்கு கோவம் வருது😡😡😡😡
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top