• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காலங்களில் அவள் வசந்தம் 39

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
ஒரு சுபயோக சுபதினத்தில் அவளை பெண் கேட்டு, மாதேஸ்வரன் ஸ்ரீரங்கம் போனார். வைஷ்ணவி, ஷானோடு இந்த முறை ஆல்வினும் இணைந்து கொண்டான்.

முந்தைய தினமே ப்ரீத்தி ஸ்ரீரங்கம் வந்திருந்தாள். தயங்கிதயங்கித்தான் தன்னுடைய காதலை சொன்னாள். மற்ற மூவரையும் உட்கார்த்தி வைத்துக் கொண்டு!

சீதாலக்ஷ்மியின் முகம் கறுத்துவிட்டது!

“பயந்துட்டே இருந்தேன். அதே மாதிரியே பண்ணிட்டடி...” என்றவரின் குரலில் ஆதங்கமா? அங்கலாய்ப்பா? ஆத்திரமா?

“ஷான் ரொம்ப நல்ல மாதிரிம்மா. அவங்க அப்பா, அக்கா எல்லாம் இன்னும் நல்லவங்க...” பொறுமையாகக் கூறினாள் ப்ரீத்தி.

“நமக்கு சரி சமானமான வீட்ல கட்டிக் கொடுத்தாத்தான் உனக்கு மரியாதை இருக்கும். இந்த மாதிரி பெரிய வீட்டு சம்பந்தமெல்லாம் நமக்கு ஒத்து வராது. மோகம் முப்பது நாள் ஆசை அறுவது நாள். தீர்ந்தாக்கா கருவேப்பிலைய தூக்கி வெளிய போடற மாதிரி போட்டுடுவாங்கடி...”

“அப்படியெல்லாம் நடக்காதும்மா...”

“எப்படி சொல்ற? அந்த பையன் அந்த ஸ்வேதாவ லவ் பண்றாருன்னு அவர் வாயாலையே கேட்டோம். இப்ப உன்னை லவ் பண்றதா சொல்ற. நாளைக்கே இன்னொரு பொண்ணை லவ் பண்றேன்னு உன்னை தூக்கிப் போட எவ்வளவு நேரமாகும்?” என்று அவர் கேட்டதும் நியாயம் தான். ஆனால் உண்மை என்னவென அவருக்குத் தெரியாதே!

அவரிடம் எல்லாவற்றையும் கூறவும் முடியாது. இதில் ஷானின் மரியாதையும் அடங்கியிருக்கிறதே!

“அம்மா... நான் ஷானை நம்பறேன். முழுசா நம்பறேன். அவர் என்ன பண்ணினாலும் சரியாத்தான் பண்ணுவார். ஸ்வேதா விஷயத்தை பத்தி நான் ரொம்ப சொல்ல முடியாது. அதுல அவரோட மரியாதையும் அடங்கியிருக்கு. ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன், அவரை ஸ்வேதாவை வெச்சு முடிக்கலாம்ன்னு பார்த்தாங்க. அது நடக்கல. ஆறு வருஷமா ஷானை நான் பார்த்துட்டு இருக்கேன்... எனக்குத் தெரியும் மா அவரை பத்தி...” உறுதியான குரலில் கூறியவளை கண்களில் நீரோடு பார்த்தவர்,

“கண்ணை திறந்துட்டே கிணத்துல குதிக்க போறன்னு சொல்றடி...” என்றார்!

“அம்மா... நாளைக்கு ஷான், அவங்க அப்பா, அக்கா எல்லாம் வர்றாங்க. தயவு பண்ணி இப்படியெல்லாம் பேசிடாத. நல்லபடியா பேசு. அவங்க பேசறதை கேளு. உனக்கு நம்பிக்கை வந்தா கல்யாணத்தை வெச்சுக்கலாம். இல்லைன்னா என்னை இப்படியே விட்டுடு...” தீர்மானமாக கூறிவிட்டவள், அதற்கும் மேல் எதுவும் பேசவில்லை.

தாயின் சம்மதமின்மையை ஷானிடம் கூறிவிட்டு படுத்துவிட்டாள்.

ஷான் தான் யோசனையாய் தலையை பிடித்துக் கொண்டான்!

எப்படி பேசுவதென்று அவனுக்குப் புரியவில்லை. ப்ரீத்தியின் தாயார் கூறும் வார்த்தைகளனைத்தும் உண்மை தானே!

இங்கோ சீதாலக்ஷ்மிக்கு உண்மையில் மாப்பிள்ளை குறித்த பயத்தோடு, இனி தங்களது வாழ்க்கையை எப்படி இருக்கும் என்பது குறித்த பயமும் எழுந்தது.

கணவருடன் தனித்து அமர்ந்தவருக்கு இதயத்தின் மேல் ஒரு பாறாங்கல்லை வைத்தது போன்ற சுமை! காயத்ரியின் படிப்பு முடியும் வரையாவது ப்ரீத்தியை இழுத்து பிடிக்க வேண்டுமென நினைத்திருந்தார். இதை சுயநலம் என்று கூற முடியாது. அவருக்கு வேறு வழியுமில்லை. கணவன் பொறுப்பில்லாமலிருக்கும் போது அவரும் வேறு என்ன தான் செய்ய?

“என்னடி லச்சு பண்றது?” அப்பாவியாய் மோகன் கேட்க, அவரை முறைத்துப் பார்த்தார் சீதாலக்ஷ்மி!

“நல்லா கேளுங்க! நீங்க உருப்படியா இருந்திருந்தா இப்படியொரு நிலைமை வந்திருக்குமா? இன்னமும் என்ன பண்றதுன்னு என்னையே கேளுங்க...” கோபத்தில் கணவனிடம் வெடித்தார்.

“எனக்கு மட்டும் பொண்ணு கிட்ட கையேந்தனும்ன்னு ஆசையா என்ன? என்னோட எழுத்து இப்படி இருக்கு...” என்றவரின் குரல் தேய்ந்தது.

“உங்க எழுத்தில்ல. என்னோட தலையெழுத்து... உன்னை கட்டிக்கிட்டு இப்படி சீப்படனும்ன்னு எழுதி இருக்கு...”

“சரி விடு லச்சு. இப்ப என்ன பண்றதுன்னு யோசி. ப்ரீத்தி இப்ப கல்யாணமாகி போய்ட்டா என்ன பண்றதுன்னு யோசி. கல்யாண செலவுக்கே நம்மகிட்ட எதுவுமில்ல. நகை நட்டுன்னு எதுவும் சேர்த்து வைக்கல. அவ கல்யாணமாகி போய்ட்டா காயூ படிப்பு, வீட்டு செலவுன்னு எல்லாத்துக்கும் என்ன பண்றது?” என்று மட்டும் தான் யோசித்தார்.

“போய் பிச்சை எடுங்க. கூட நானும் வர்றேன்...” என்ற சீதாலக்ஷ்மிக்கு அழுகை முட்டியது.

“விளையாடாத லச்சு...”

“பின்ன வேற என்ன உனக்கு பண்ண தெரியும்? பணத்தை கொடுத்தா கொண்டு போய் அழிச்சுட்டு வருவ. இவ்வளவு நாளா பொண்ணு சம்பாதிச்சு போட்டத உட்கார்ந்து தின்ன, இப்ப அவளே வந்து எனக்கு கல்யாணம் பண்ணி வைன்னு கேக்கறா. அதுக்குக் கூட துப்பில்லாம, கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா செலவுக்கு என்ன பண்றதுன்னு கேக்கற. உனக்கே வெட்கமா இல்ல? நீயெல்லாம் மனுஷனா?”

இருக்கும் ஆத்திரத்தை எல்லாம் அவரிடம் கொட்டினார் சீதாலக்ஷ்மி!

இதையெல்லாம் கேட்டுக் கொண்டு படுத்திருந்த ப்ரீத்தியின் விழியோரம் நீர்த்துளி!

அதை பார்த்த காயத்ரியின் மனதுக்குள்ளும் பாரம்!

“நீ கவலைப்படாத ப்ரீத்திக்கா...” என்று கூறியவளை சிறு புன்னகையோடு பார்த்தாள்.

“நான் பார்த்துக்கறேன். நீ கவலைப்படாம கல்யாணத்தை பண்ணிக்கக்கா...” உறுதியாக கூறினாள் காயத்ரி!

“ஒய் சின்னக்குட்டி. உனக்கிப்ப படிக்கற வேலை மட்டும் தான். மத்ததை பத்தி நினைக்கக் கூடாதுடி...” எழுந்து அமர்ந்தவள், அவளது மண்டையில் தட்டினாள்.

“இந்த வீட்டையே பார்த்துட்டு இருந்தா உனக்கும் வயசாகிடும்க்கா. அப்புறம் நீ அறுவதாம் கல்யாணம் தான் பண்ணனும்...” தீவிரமான குரலில் ஆரம்பித்தவள், சின்ன சிரிப்போடு முடிக்க, அதை கேட்டவளுக்கும் சிரிப்பு மலர்ந்தது!

“கல்யாணம் பண்ணிக்கறது பெருசில்ல காயூ. அதை அம்மாவும் அப்பாவும் மனசு வந்து பண்ணி வைக்கணும். அதுதான் முக்கியம்...” என்றவளின் வார்த்தைகளில் நியாயமிருந்தாலும் அதை காயத்ரி ஏற்கவில்லை.

“அப்படீன்னா லைப்லாங் உன்னை சம்பாரிச்சு போட சொல்லி உட்கார்ந்துக்குவாங்க அப்பா. அம்மாவும் எதுவும் பேச முடியாதுன்னு நிப்பாங்க. இது தேவையா உனக்கு. தியாகின்னு நினைப்பா? லவ் பண்றாங்கன்னா கல்யாணம் பண்ணிட்டு போவியா... அம்மா அப்பா ஆட்டுகுட்டின்னு கிடக்கற...” தீவிரமாக கூறியவளை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

எப்போது இந்த பெண் இவ்வளவு வளர்ந்தாள் என்று கேட்க தோன்றியது!

“காயூ.. உனக்கு மட்டும் ஒன்னு சொல்லட்டா?” சற்று கீழிறங்கிய குரலில் அவள் புறம் குனிந்து கொண்டு கேட்ட ப்ரீத்தியை ஒரு மாதிரியாக பார்த்தாள் காயூ.

“சொல்லு ப்ரீத்திக்கா...”

“இப்ப ஜுபிடர்ல நான் வொர்க்கர் இல்ல...” என்று நிறுத்த, காயத்ரி கண்களை விரித்து அவளை பார்த்தாள்.

“என்னக்கா சொல்ற?”

“ஆமா... நான் இப்ப ஒன் ஆப் தி பார்ட்னர், டைரக்டர்...” என்று நிறுத்தியவள், “ஐம்பது கோடி ரூபாய்க்கு ஷேர்ஸ் என் பேருக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிருக்காங்க...” என்று கூற, காயத்ரி நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள்.

“என்னக்கா சொல்ற?”

“ஆமா. இதெல்லாம் கொஞ்சம் காம்ப்ளிகேட்டட் டீலிங் காயூ. உனக்கு சொன்னா புரியாது. இப்ப நினைச்சாலும் அந்த ஷேர்ஸ நான் என்காஷ் பண்ண முடியும். ஆனா நான் பண்ண மாட்டேன். இன்னும் எவ்வளவு கஷ்டபட்டாலும் கூட அதை நான் பண்ண மாட்டேன். தொடக் கூட மாட்டேன்.”

“ஜாக்கரதைக்கா. எனக்கே சரியா படல...” என்று பயன்தவளின் முதுகைத் தட்டிக் கொடுத்தவள்,

“பயப்படற அளவுக்கு ஒண்ணுமில்ல காயூ. ஆனா அம்மாவும் அப்பாவும் நினைக்கற அளவுக்கெல்லாம் நான் விட்டுட மாட்டேன். நீயும் என்னோட பொறுப்பு. இதெல்லாம் ஷானுக்கு நல்லாவே தெரியும். இனிமே நான் எக்சிகியுடிவ் டைரக்டர்ங்கறதால எனக்கு ப்ராஃபிட்ல ஷேர் வரும். அதோட மாச சம்பளத்தோட ஷேர் அமௌன்ட்டும் வரும். அதை அப்படியே எடுத்து முதல்ல கடனையெல்லாம் அடைக்க போறேன். அப்புறம் ஷான் கிட்ட வாங்கின அமௌன்ட் எல்லாம் கொடுக்கணும். அப்புறம் தான் கல்யாணம் காயூ. இதெல்லாம் முடிக்காம கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்...”

நிதானமாக கூறிய தமக்கையை ஆச்சரியமாகப் பார்த்தாள் காயத்ரி!

“ஐம் ரியலி ப்ரவுட் ஆப் யூ க்கா...” என்றவளின் கண்களில் லேசான கண்ணீர்!

“என்னோட கடமையை நான் சரியா செய்வேன் காயூ. நான் மட்டும் சந்தோஷமா இந்த வீட்டை விட்டு போகணும்ன்னு நினைக்கல...” என்றவளின் தொண்டை அடைத்துக் கொண்டது!

“நான் இருக்கேன் க்கா. நாளைக்கு ரெண்டு பேரும் எதுவும் பேசாம நான் பார்த்துக்கறேன்...” என்று அணைத்துக் கொள்ள, ப்ரீத்தியின் கண்களில் கண்ணீர்!

மறுநாளும் வந்தது!

மாதேஸ்வரன், வைஷ்ணவி, ஷான், ஆல்வின், வைபவ் என்று அனைவரும் வர மாலையாகி இருந்தது. காயத்ரி தான் வந்தவர்கள் அனைவருக்கும் தண்ணீர் கொடுத்தாள்.

“உன் பேர் என்னம்மா?” மாதேஸ்வரன் கேட்க, காயத்ரி புன்னகையுடன்,

“காயத்ரி அங்கிள்...” என்று கூற,

“என்ன படிக்கற காயத்ரி?” வைஷ்ணவி சிறு புன்னகையுடன் கேட்டாள். அவளுக்கும் ஷான் ப்ரீத்தியை மணப்பதில் மிகவும் விருப்பமே. ஆனால் பிரச்சனைகளால் மௌனித்து இருந்தாள்.

“பிஈ தேர்ட் இயர் க்கா...” என்றாள்.

“எந்த க்ரூப்?” ஆர்வமாக ஆல்வின் கேட்க,

“என் கொழுந்தியா எந்த க்ரூப்ன்னு தெரிஞ்சுகிட்டு நீயென்னடா பண்ண போற?” நம்பியார் பாணியில் ஷான் அவன் புறம் குனிந்து காதை கடித்தான்.

“பொது அறிவ கொஞ்சம் வளர்த்துக்கனும்டா...” என்றான் ஆல்வின்.

வீட்டுக்குள் வந்தபோதே ஆல்வின் ஷான் காதை கடித்திருந்தான்.

“ப்ரீத்திக்கு இவ்வளவு அழகான தங்கச்சி இருக்குன்னு நீ சொல்லவே இல்லையேடா...” என்றவனுக்கு,

“நீ கேக்கவே இல்லையே மச்சான்!” என்று சிரித்திருந்தான் ஷான்.

“டேய் இனிமே நாம மாமன் மச்சான் இல்ல...”

“பின்ன?”

“ப்ரோஓஓ...” என்றவனை முறைத்தவன்,

“எனக்கே இன்னும் தள்ளாடிக்கிட்டு இருக்காம். அதுக்குள்ள நீ பிராக்கட் போடறியா? விட மாட்டேன்டா...” அதே நம்பியார் வசனம் தான்.

“ப்ரோஓஓ... நாம அப்படியா பழகி இருக்கோம்?” என்று ஆல்வின் சிரிக்க, அதை நினைவில் வைத்துக் கொண்டு தான் ஷான் இப்போது நம்பியாராக மாறிக் கொண்டிருந்தான்.

எந்த க்ரூப் என்று ஆல்வின் கேட்ட கேள்விக்கு, “கம்ப்யூட்டர் சைன்ஸ் அண்ணா...” என்று பெரும் குண்டை தூக்கி ஆல்வின் தலை மேல் போட்டாள் காயத்ரி.

“ப்ரோஓஓ...” என்று ஆல்வினின் காதை கடித்த ஷானால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“டேய் இப்பல்லாம் ப்ரோன்னு ஆரம்பிச்சு லவ்ல முடியறதுதான்டா ட்ரென்ட்...” ஆல்வின் சிரித்தான். இந்த சம்பாஷனைகள் யாவும் அவர்கள் இருவருக்குள்ளாக நடந்ததால் மற்றவர்கள் அறியவில்லை.

“இந்த அங்கிள நல்லா பார்த்து வெச்சுக்க காயூ. இவர் தான் ஜிசெவன் டெக்னாலஜிஸ் சீஈஓ...” என்று காயத்ரியை பார்த்து ஷான் கூற, அவள் ஆச்சரியமாக பார்த்தாள்.

“டேய், நான் அங்கிள்னா நீ யார்டா?” பல்லைக் கடித்தான் ஆல்வின், யாருக்கும் கேட்காமல் தான்!

“அங்கிள் தான்டா. மாமாக்கு இங்க்லீஷ்ல அங்கிள் தான...” என்றான் மற்றவர்கள் அறியாமல்!

“டேய் துரோகி...” என்று பல்லைக் கடித்தவன், காயத்ரியின் புறம் திரும்பி, “ஆமா காயூ. உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்னைக் கேளு. சரி, அடுத்த வருஷ ப்ராஜக்ட் எங்க பண்ண போற? பேசாம நம்ம கம்பெனிக்கே வந்துடேன்...” என்று கூற,

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் காயூ. உனக்கு வேற நல்ல கம்பெனியா நான் பார்த்து தரேன்...” விடுவேனா என்று ஆல்வினிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தான் ஷான்.

“எதே... வேற நல்ல கம்பெனியா?” வெகுண்டான் ஆல்வின்!

அதற்கு மேலும் அவனை கலாய்க்காமல், “ஓகே ஓகே ப்ரோ... சில்...” என்றான்.

அவனது ப்ரோ அவனை சில்’லியது.

இருவரின் கேலிகளை கண்டு சிரித்தபடி அமர்ந்திருந்த மாதேஸ்வரனை கண்டதில் சீதாலக்ஷ்மிக்கும் மோகனுக்கும் வாய் எழும்பவில்லை. எவ்வளவு பெரிய மனிதர். கொஞ்சம் கூட பெருமை பார்க்காமல், இறங்கி வந்திருக்கிறாரே என்ற ஆச்சரியம் அவர்களுக்கு!

அவரோ ஒரே வார்த்தையில் முடித்தார்!

“ப்ரீத்தி எங்க வீட்டுப் பொண்ணும்மா... நீங்க கவலைப்படாதீங்க!” என்று கூற, இருவருமே மலைத்தனர். அதற்கு முன்பு வரை கூட பிரீத்தியிடம் முனகிக் கொண்டே இருந்தார். ஆனால் இப்போதோ எதுவுமே பேச முடியவில்லை. ஆனாலும் திருமணத்தை ஏற்கவும் முடியவில்லை.

“இல்லைங்க. இது சரியா வரும்ன்னு தோணலை.”

“ஏன் அப்படி சொல்றீங்கம்மா? உங்களுக்கு நம்பிக்கை வர்றதுக்கு என்ன பண்ணனும்ன்னு சொல்லுங்க?” என்று மாதேஸ்வரன் கேட்க, நெளிந்தாள் ப்ரீத்தி.

“இல்லைங்க சரி வராதுன்னா சரி வராதுதான்...”

“அதான் ஏன்னு கேக்கறேன். இப்பல்லாம் முன்ன மாதிரி இல்லம்மா. பிள்ளைங்க லவ் பண்ணா அதை ஏத்துகிட்டு போய்டணும். பழைய காலம் மாதிரி ஜாதி மதம்ன்னு எல்லாம் பார்த்துட்டு இருக்கக் கூடாது. அவங்க சந்தோஷமா இருந்தா நமக்கு போதாதா?” மாதேஸ்வரன் நியாயமாகத்தான் கேட்டார்.

சீதாலக்ஷ்மியும் நியாயமானவர் தான். ஆனால் அவரது சூழ்நிலை அவரை பிடிவாதமாக நிற்க சொன்னது.

“எங்க வசதி எல்லாம் ரொம்ப கம்மிதாங்க. நீங்க ரொம்ப பெரியவங்க. உங்களுக்கும் எங்களுக்கும் ஏணி வெச்சாலும் எட்டாது. எட்டாத மரத்து இளநி போல ஓட்டாத பேரோட உறவா நிக்காதன்னு சொல்லுவாங்க. உங்களுக்கும் எங்களுக்கும் ஒட்டவே ஒட்டாதுங்க...” என்றவரை ஆழ்ந்து பார்த்தவர்,

“அப்படி ஒன்னும் எட்டாத இளநி இல்லம்மா.. எட்டவைக்க என்ன பண்ணனும்? பொண்ணு பேர்ல சொத்து எழுதி வைக்கட்டுமா?” உண்மையாகத்தான் கேட்டார் மாதேஸ்வரன்.

“ஐயோ... அதெல்லாம் வேண்டாங்க...” என்ற சீதாலக்ஷ்மிக்கு தூக்கி வாரிப் போட்டது.

“ப்ரீத்தி பேர்ல இப்ப அம்பது கோடிக்கு ஷேர்ஸ் இருக்கு. இன்னும் எவ்வளவு ஷேர் ட்ரான்ஸ்ஃபர் பண்ணட்டும்? அதை சொல்லுங்க...” அசால்ட்டாக மனிதர் தூக்கிப் போட்டுவிட, ப்ரீத்தி அரண்டு போய் தாயை பார்த்தாள்.

அவருக்கு இதையெல்லாம் எப்படி புரியவைக்க? ஷானுக்கும் இவளுக்கும் ஏதோவொரு என்று தவறாக நினைத்து விடுவாரே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, காளியாக நின்றார் சீதாலக்ஷ்மி!

“என்னடி இது?” அவளை பார்த்து ரவுத்திரமாக கேட்க,

“ம்மா. இது வேற மாதிரிம்மா...” என்றவள் திணறினாள்.

ஷான் அதற்கு விளக்கம் கூற முயல, அவனை கையமர்த்தி விட்டு ஆல்வின், “தப்பால்லாம் ப்ரீத்திக்கு அந்த ஷேர் வரல ஆன்ட்டி. ரொம்ப பெரிய ப்ராஜக்ட் பண்ணோம். அதுல எனக்கும் ஷானுக்கும் நூறு கோடி ரூபாய் ஷேர். எங்க செட்ல இன்னொருத்தன் மகேஷ்ன்னு அவனுக்கும் ப்ரீத்திக்கும் ஐம்பது கோடி ரூபாய். எங்களுக்கு வேற மாதிரி ஷான் செட்டில் பண்ணான். ப்ரீத்திக்கு அப்படி பண்ண முடியாது. அதனால கம்பெனி ஷேர்ஸா குடுத்தான். இவ்வளவுதான் நடந்தது.”

தெளிவாக புரிய வைத்த ஆல்வினை நன்றியாக பார்த்தாள் ப்ரீத்தி.

“போதுமாம்மா?” என்று தாயைப் பார்த்துக் கேட்டவள், “ஆனா அந்த பணத்தை நான் தொட மாட்டேன். ஆல்வின் சொன்ன ப்ராஜக்ட் பண்ணது ஷானுக்காக, அந்த பணத்துக்காக இல்ல.”

“ப்பா... இந்த வேதாளம் திரும்ப முருங்கை மரம் ஏறுது...” என்று பல்லைக் கடித்தான் ஷான்.

“விடுடா தம்பி. கல்யாணத்துக்கு அப்புறம் அதையெல்லாம் நீ பேசிக்க. அப்புறம் ப்ரீத்திம்மா அதை தொட்டா என்ன தொடலைன்னா என்ன?”

“எங்களுக்கு வசதி இல்லதாங்க. ஆனா எங்க மரியாதை கொஞ்சமும் குறையாம தான் பொண்ணுங்களை வளர்த்து இருக்கோம். போற இடத்துல அவங்க மரியாதை கொஞ்சமும் குறையக் கூடாதுன்னு தான் நினைப்போம்..” என்று சீதாலக்ஷ்மி கூற,

“சொன்னாலும் சொல்லலைன்னாலும் ப்ரீத்தி எனக்கும் பொண்ணு மாதிரி தான்ம்மா. என் மருமக மரியாதைக்கு ஒரு நாளும் பங்கம் வந்திடாது.”

மோகனுக்கு மனைவி சொல்லே மந்திரம். மிகப்பெரிய இடம் என்பதோடு, ஸ்வேதா விஷயத்தை எல்லாம் பத்திரிக்கைகள் அலசி ஆராய்ந்து காயப்போட்டு இருந்தன. அப்படிப்பட்டவனுக்கு மகளை கொடுப்பதா என்ற சுணக்கம் சீதாலக்ஷ்மியின் மனதில்!

அவரது முகம் தெளியாததை பார்த்த ஷான், “ப்ரீத்தி எனக்கு பெஸ்ட் ஃப்ரென்ட்ங்கறதை தாண்டி, அவ எனக்கு அம்மா மாதிரி. இந்த ஆறு வருஷத்துல அவளுக்குத் தெரியாம நான் எந்த விஷயத்தையும் செஞ்சதே இல்ல. நாங்க ரெண்டு பேரும் அவ்வளவு க்ளோஸ். அது உங்களுக்கும் தெரியும். இனிமேலும் அப்படித்தான் இருப்பேன். அதே மாதிரி லைஃப் முழுக்க அவ வரணும்ன்னு நினைக்கறேன் ஆன்ட்டி...” என்ற ஷானை பாசமாகப் பார்த்தார்.

மாதேஸ்வரன், “அப்படியும் மீறி எதாவது கம்ப்ளைன்ட்ன்னா சொல்லுங்க. இந்த பயலை நான் பார்த்துக்கறேன்...” என்று சிரிக்க, அங்கே சிரிப்பலை பரவியது!

“அம்மா, உங்க ரெண்டு பேரோட சம்மதம் இல்லாம இந்த கல்யாணத்தை நான் பண்ணிக்க மாட்டேன். ஆனா என்னோட லைஃப் ஷான் கூட மட்டும் தான். அவர் கூட இருந்தா மட்டும் தான் நான் சந்தோஷமா இருக்க முடியும். அங்க படிச்ச, இங்க படிச்சன்னு பார்க்காத, மத்தவங்க சொல்றதை எல்லாம் கேக்காத. உன் பொண்ணு நான் சொல்றேன்... என் மேல நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டவள், “என்னோட ஷான் ஒரு பக்கா ஜென்டில்மேன். அவரைப் பத்தி எனக்குத் தெரியும்...” என்று முடிக்க, அவளை பெருமையாகப் பார்த்தார் மாதேஸ்வரன்.

“இவ்வளவு தூரம் சொல்றாங்கல்ல லச்சு. இதுக்கு மேலயும் யோசிக்காத...” என்று மோகன் கூறிவிட, அதற்கும் மேல் சீதாலக்ஷ்மி பேசவில்லை.

மாதேஸ்வரன் புன்னகையோடு தொண்டையை கனைத்துக் கொண்டார்.

“எங்க வீட்ல பொண்ணுக்கு தனி பையனுக்கு தனின்னு எல்லாம் பார்க்க மாட்டோம்மா. எல்லாமே சரிசமம் தான். அது ப்ரீத்திக்கும் தெரியும். இங்க ஷான் எப்படியோ, அதே மாதிரி தான் வைஷ்ணவியும். சொத்துபத்துலருந்து நிர்வாகம் வரைக்கும். இப்ப ப்ரீத்திக்கும் அதே மாதிரி தான். இப்போதைக்கு வைஷுக்கு கொஞ்சம் பிரச்சனை இருக்கு. உங்களுக்கே கூட தெரிஞ்சிருக்கும். மாப்பிள்ளைய நம்பி நாங்க மோசம் போய்ட்டோம்.” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே,

“ப்பா... அக்கா முன்னாடி மாமாவை பத்தி பேசாதீங்க. அந்த விஷயத்தை நான் பார்த்துக்கறேன்...” என்று ஷான் கூறிவிட,

“இனிமே எல்லாமே சின்னவங்க எல்லாரும் தான் பார்த்துக்கனும்மா. ப்ரீத்தி ரொம்ப பொறுப்பான பொண்ணு. நான் எதுவும் சொல்ல வேண்டியதே இல்ல. அதுக்கே எல்லாம் தெரியும். கல்யாண செலவுல இருந்து எல்லாம் எங்களோடது. பொண்ணை மட்டும் அனுப்பி வைங்க போதும்...” என்று மாதேஸ்வரன் முடிக்க, சீதாலக்ஷ்மியின் முகத்திலும் திருப்தி.

“ஆனா கல்யாணத்துக்கு எனக்கு டைம் வேணும். ஒரு ஆறு மாசம்...” என்று முட்டுக்கட்டையிட்டான் ஷான்.

“என்னடா தம்பி திடீர்ன்னு இப்படி சொல்ற?” என்று மாதேஸ்வரன் கேட்க,

“ஆமாப்பா. வேலை இருக்கு. ஐபிஎல் ஸ்டார்ட் ஆகிடும். அந்த வேலைய பார்க்கணுமே...” என்று கூற,

“டேய் அதை தான் போஸ்ட்போன் பண்ணி இருக்கமே...”

“அப்படியே விட்டுட முடியுமா? அதெல்லாம் நான் பார்த்துக்குவேன். மொதல்ல ஆக்ஷன ரெஸ்யும் பண்ண சொல்லுங்க.”

“சரி அதுக்கு எதுக்கு ஆறு மாசம்?”

“கல்யாணம் கிராண்டா பண்ணனும் ப்பா. அதுக்கு ஆறு மாசமாவது டைம் வேண்டாமா?” என்று கேட்க,

“அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம். ரெண்டுல இருந்து மூணு மாசம். அவ்வளவுதான் டைம்...” கறாராக முடித்தார் மாதேஸ்வரன்.

“உங்களுக்கு அவசரம்ன்னு எல்லாம் என்னால கல்யாணம் பண்ண முடியாது...” என்றவனை முறைத்தாள் ப்ரீத்தி.

“கரெக்ட் தான். அவங்க அவசரத்துக்கு எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது. அதனால மாப்பிள்ளைய மாத்திடலாம்ப்பா...” ப்ரீத்தி மாதேஸ்வரனிடம் கூற, அவர் வெடிச்சிரிப்பு சிரித்தார்.

“சூப்பர். அதுதான் நல்ல ஐடியா...” என்று ப்ரீத்திக்கு ஹைஃபை கொடுக்க,

“ஓ... மாப்பிள்ளைய மாத்தி?” பிரீத்தியிடம் வம்புக்கு நின்றான்.

“உங்களுக்குத்தான் கல்யாணம் பண்ணிக்க டைம் இல்லையே பாஸ். அதான்.. சோ சிம்பிள்... நாங்க மாப்பிள்ளைய மாத்திக்கறோம்...” அசால்ட்டாக கூற, ஆல்வின் ப்ரீத்திக்கு கை கொடுத்தான்.

“செம... நீ கலக்கு சித்தப்பு... நான் இருக்கேன்...” என்று வேறு அவன் ஏற்றிவிட, அவனையும் சேர்த்து முறைத்தான் ஷான்.

“பண்ணிடுவ?”

“ஆமா... பண்ணிடுவேன்...” என்று சரிக்கு சரியாக போட்டிக்கு நின்றாள்.

“நாளைக்கு எப்படியும் நீங்க சென்னை தான் வர போறீங்க தலைவரே!”

“உங்க மிரட்டலை எல்லாம் வேற எங்கயாவது வெச்சுக்கங்க தலைவரே...” என்று அவள் சிரிக்க, வேறு வழியில்லாமல் மூன்று மாதத்தில் திருமணத்தை வைக்க ஒப்புக் கொண்டான்.

இரண்டு மாதத்தில் ஐபிஎல்லும் நடந்தது. அதன் பின் ஷான் ப்ரீத்தியின் திருமணமும் கோலாகலமாக நடந்தது. அத்தனை முக்கியமான கிரிக்கெட் வீரர்களும் அவனது திருமணத்தில் கலந்து கொண்டு கொண்டாடி தீர்த்தனர். பல மாநிலங்களின் முக்கிய அரசியல்வாதிகளிலிருந்து, அமைச்சர்களிலிருந்து, சினிமா நட்சத்திரங்கள் என அத்தனை முக்கியஸ்தர்களும் அவனது திருமண வைபவத்தில் கலந்து கொண்டனர்!

முக்கியமாக பிடிஎஸ்...

ஆம் ப்ரீத்திக்கு மிகவும் பிடித்த பிடிஎஸ் குழுவினர் தான் தற்போதைய ஐபிஎல் சென்னை டீமின் பிரான்ட் அம்பாசிடர்கள் என்பதால், அவர்களுக்கும் திருமண அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஐபிஎல்லில் அவர்கள் கலந்து கொண்ட மேட்ச்களில் எல்லாம் இளைஞர் வெள்ளம். பிடிஎஸ் கலந்து கொள்ளும் மேட்ச் ஒவ்வொன்றும் ட்ரென்ட் அடித்தது. ட்ரென்ட் ஆனது பிடிஎஸ் ஸாலா? வெற்றி பெற்ற சென்னையின் தோனியாலா? என்று கேட்குமளவு கொண்டாட்டம் கரைபுரண்டது. அந்த வருட ஐபிஎல் ட்ராபியை சென்னை தட்டித் தூக்கினார்கள். அந்த கொண்டாட்டத்தில் கிரௌண்டில் பிடிஎஸ் பாட, ஸ்டேடியமே கொண்டாடியது!

மெகா ஹிட் அடித்த ஐபிஎல்’லை ப்ரீத்தியோடு மகிழ்ச்சியாக பார்வையிட்டுக் கொண்டிருந்தான் சஷாங்கன்!

பிடிஎஸ் குழுவோடு செல்பி எடுத்ததை பல நாட்கள் ப்ரீத்தி வாட்ஸ்அப் டிபியாக வைத்திருந்தது தனிக் கதை!

ஐபிஎல் முடிந்த கையோடு திருமணம். அதனாலேயே அந்த வளாகம் விழாக் கோலம் பூண்டிருந்தது!

காயத்ரி துணைப் பெண்ணாக அலங்கார பூஷிதையாக வலம் வர, அவளையே பார்வையிட்டுக் கொண்டிருந்தான் ஆல்வின்.

தன் பெண்ணுக்கு சீரும் சிறப்புமாக திருமணம் நடப்பதை எந்த பெற்றோர் தான் விரும்ப மாட்டார்கள்? சீதாலக்ஷ்மியும் மோகனும் கண்களில் ஆனந்த கண்ணீரோடு திருமணத்தில் கலந்து கொண்டு கன்னிகா தானம் செய்து கொடுத்தார்கள்.

வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென்னை முன்னே நிறுத்தி
அரிமுகனச்சுதன் கைம்மேலென் கைவைத்து
பொரிமுகந் தட்டக்கனாக் கண்டேன் தோழீநான்
பெண்ணின் கனா நனவானது! இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நீயே துணை என்று அவள் கைத்தலம் பற்றினான் அவள் நாயகன்!

திருமணத்தில் ஸ்வேதாவும் கலந்து கொண்டாள், முழு மனதுடன்!

அத்தனை கொண்டாட்டங்களிலும் பங்கெடுத்துக் கொண்டாள்!

அத்தனைக்கும் முதல் ஆளாக நின்றாள்!

மனதோரத்தில் சிறு ஏக்கமிருந்தாலும் அதை அவள் காட்டிக் கொள்ளவில்லை. அவளது வாழ்க்கைக்கும் எதாவது ஒரு அர்த்தமிருக்கும் என்று எண்ணிக் கொண்டாள்!

கண்டிப்பாக இருக்கும்... அவளுக்கென்று ஒரு வாழ்க்கை இல்லாமலா போய்விடும்?
 
Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,561
Reaction score
6,804
Location
Salem

Nirmala vandhachu 😍😍😍
 
Nuvali

அமைச்சர்
Joined
Aug 14, 2021
Messages
1,051
Reaction score
2,969
Location
India
:love::love::love::love:
 
Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,787
Reaction score
6,728
Location
Germany
39 padikkama 40 th episode padichittu 😝😝😝😝
அக்கா சஷிம்மா முதல்ல 39 வது எபின்னு 40 வது எபி தான் போட்டாங்க 🙄🙄🙄 போஸ்ட் போட்ட டைம்ம பாருங்க தெரியும் 😌😌😌

உண்மை தெரியாம கலாய்க்கிறீங்களா 🤨🤨🤨
 
Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top