• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காலம் கடந்தும் காதல் 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
போன பதிவுக்கு லைக் அண்ட் கமெண்ட் பண்ண எல்லாருக்கும் நன்றிகள் பல ?????

இந்த எபியும் படிச்சிட்டு மறக்காம உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்க.

சின்ன பதிவு தான்.. சிறுபிள்ளையை மன்னிச்சு விட்டுடுங்க ????












எழுந்து மணியை பார்க்க.. மீண்டும் மணி நான்கு முப்பது.இது என்னடா அன்னிக்கு வந்த கனவு மாதிரியே வருது.மணி கூட நாலரைனே காமிக்குது.

சாதரண கனவா இருந்தா தொடர்கதை மாதிரி தொடர்ந்தா வரும்?இந்த கனவு ஏதோ சொல்ல வருதோ?இல்ல எப்பையோ படிச்ச கதை எல்லாம் இப்ப கனவுல வருதோ? இப்படி பல வினாக்கள் மனதை சுற்றி வந்தன அர்ஜுனுக்கு.


சிறிது நேரத்தில் பல பறவைகளின் குரல்லால் சிந்தனை கலைந்தான்.பின்பு போர்வைக்குள் சுருண்டிருந்த கதிரின் கனவை கலைக்கும் வேலையே தொடர்ந்தான்.


"இப்ப என்ன டா உனக்கு பிரச்சினை. மிட் நைட்ல வந்து எழுப்பிட்டு இருக்க;நானே நைட் தூக்கம் வராம லேட்டாத்தான் படுத்தேன்" -கதிர்


"மச்சி எனக்கு மறுபடியும் அந்த கனவு வந்துச்சு டா"-அர்ஜுன்

"எந்த கனவுடா, ஒழுங்கா சொல்லு"-கதிர்

"அதான் டா அன்னிக்கு ஒரு பொண்ணுகிட்ட போகாதேனு சொல்லுற மாதிரி வந்துச்சுனு உன்கிட்ட சொன்னேன்ல"-அர்ஜுன்

"இப்பவும் போகாதேனு சொன்னியா" -கதிர்

"இல்லடா இது வேற மாதிரி;எங்கோ காட்டுக்குள்ள போற மாதிரி டா "-அர்ஜூன்

"இது என்னனு எனக்கும் புரியலடா.. கொஞ்சம் பொறுமையா இரு..இங்க எங்க செல்லத்தாயி பாட்டி இருக்காங்க..இந்த மாதிரி விசயத்துக்கு எல்லாம் அவுங்க தான் கரைக்ட்டான பதில் சொல்லுவாங்க" -கதிர்

"இத முன்னாடியே சொல்லுறதுக்கு என்ன உனக்கு, இப்பவே வா போலாம்" -அர்ஜூன்

"வாயில ஏதாவது நல்ல வார்த்தை வந்துடும்..மணிய பாருடா..நாலே முக்கால் தான் ஆகுது.. கொஞ்சம் மனசாட்சியோட பேசுடா" -கதிர்

"சரி அப்போ அப்புறமா போய் பார்ப்போம்;இப்ப தூங்கு" -அர்ஜூன்

முறைத்து பார்த்த கதிரிடம்,சரி டா, ரொம்ப பண்ணாம தூங்கு என்று சொன்னான் அர்ஜுன்.

மீண்டும் தூங்க மனம்மில்லாமல் , சிறிது நேரம் நடக்கலாம் என்று தோன்ற அறையை விட்டு வெளியே வந்தான் அர்ஜுன்.

"என்னப்பு கருகல்லுலே முழிச்சிடிங்க..காப்பி தரவா டீ தரவா?"-பாரதி

தூக்கம் வரல அம்மா.அது தான் முழிப்பு வந்துடுச்சு.அப்புறம் எல்லாருக்கும் என்ன கலக்குறீங்களோ அதே தாங்க அம்மா.

அதுவும் சரித்தான்.புது இடம்ல அது தான் தூக்கம் வர சத்த சிரம்மமா இருக்கு போல,பழகிட்டா ஒன்னும் தெரியாது தம்பி.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்து சிறியதாக சிறித்து வைத்தான்.

"அப்புறம் தம்பி,இங்க எல்லாரும் நீராகாரம்த்தான் குடிப்போம்.ஏன்னா வெறும் வகுத்துல காப்பி,டீ குடிச்சா தலைய சுத்தும்.உங்களுக்கு அதுனால என்ன வேனும்னு சொல்லுங்க."

"எனக்கும் அந்த நீராகரத்தே குடுங்கம்மா; குடிக்கிறேன்".

"சரி தம்பி இங்கனயே இருங்க எடுத்துட்டு வரேன்".

மண்பானையில் இருந்ததால் சில்லென்ற தண்ணீரும் உப்பும் மோரும் சீரகமும் சேர்ந்து; வெறும் வயிற்றுக்குள் அமிர்தமாக இறங்கியது அர்ஜுனுக்கு.

“எங்கமா எல்லாரும் வேக வேகமா கிளம்பிட்டு இருக்காங்க?”என்ற கேள்வியுடன் கிளாசை பாரதியிடம் கொடுத்தான் அர்ஜுன்.

நேத்தே சொன்னேன்ல தம்பி; இன்னிக்கு வயலுல நடவுனு; அதான் நேரத்தோட கிளம்புறாங்க.

நாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவோம்.நீங்க ரெண்டு பேரும் குளிச்சு முழுகி விரசா வயலுக்கு வந்து சேருங்கப்பு..என்று சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் பாரதி.

பின்பு மீண்டும் மாடி ஏறி கதிரின் தூக்கத்தை கலைக்கும் வேலையை கனகச்சிதமாக செய்ய தொடங்கினான் அர்ஜுன்.

"ஏன்டா இப்படி தூங்க விடாம படுத்துற"-கதிர்

"இன்னிக்கு வயலுல நடவு நட போறாங்கலாம் டா. நா இது எல்லாம் பார்ததே இல்ல. அதுனால வா போய் பார்க்கலாம்". –அர்ஜூன்

"டேய் நா நிறைய தடவ பார்த்துட்டேன் டா. நீ வேணும்னா அம்மா கூட போய் பாரு. இப்போதைக்கு என்ன தூங்க விடு". -கதிர்

பார்த்தியா உன்ன நம்பி வந்ததுக்கு என்ன வெளில கூட கூட்டிட்டு போக மாட்டிங்கிற. இதுல பதினஞ்சு நாள் உன்கூட இருக்க வந்தேன்ல என்ன தான் சொல்லனும்.

அர்ஜுன் இப்படி சொல்லிய நிமிடம் போர்வையை உதறிய கதிர்; அடேய் ராசா தயவு செஞ்சு இப்படி மட்டும் டையலாக் அடிக்காத; கேட்க சகிக்கல; இப்ப என்ன உன் கூட வரனும். அவ்வளவு தானே; நா போய் குளிக்குறேன்.போகலாம் இரு என்று கூறி பாத்ரூமிற்குள் நுழைந்தான்.



பின்பு அர்ஜுனும் குளித்து முடித்து வர. இருவரும் கீழ் இறங்கினார்கள்.


"என்னடா அதுக்குள்ளேயும் எல்லாரும் போய்டாங்க "-அர்ஜூன்

"பக்கம் தான்டா வயலு..வா போகலாம்" -கதிர்


அங்கே கதிரின் பக்கத்து வயலில் இருப்பவர் கதிரை பேச்சில் இருத்திக்கொள்ள.. அர்ஜுன் மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.

எவ்வளவு கஸ்டத்திற்க்கும் முடிவு என்னும் ஒரு சூரியன் இருப்பது போல..இருட்டு எனும் கஸ்டத்தை விழுங்கி செஞ்சூரியன் கிழக்கில் உதிக்க ஆரம்பித்து இருந்தது.

சூரியனுக்கு இணையாய் சிகப்பு பாவாடை சட்டையும், ஆரஞ்சு தாவணி உடுத்தியும்,இடை தொடும் கருங்கூந்தல் முன்னே வழிய,எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல்..சிரிப்பை மட்டுமே ஒப்பனையாய் கொண்டு, கால் கொலுசுகள் அவள் எடுத்து வைக்கும் பாத அளவிற்கு ஏற்ப ஒலியை சிந்தி செல்கிறது. அப்படித்தான் அர்ஜுனையும் கடந்து சென்றது அந்த ஒலி.

"என்ன மச்சி இங்கே நின்னுட்ட? இன்னும் நடவு ஆரம்பிக்கல வா போகலாம்". -கதிர்

கதிரின் குரலுக்கு கால்கள் நடந்தாலும்..மனம் என்னவோ அவளை பார்த்த இடத்திலே நின்று விட்டது அர்ஜுனிற்கு.

பின்பு ஒருவழியாக கதிரின் வயல் வர..பாரதி, அனு, கருப்பையா மேலும் வேலைக்கு வந்து இருப்பவர்கள் அனைவரும் ஒன்றாய் நின்றனர்.

"ஏன்மா! இன்னும் நடவு ஆரம்பிக்கலையா? "-கதிர்

இல்லப்பா நாலு வருசமா நம்ம தமிழு தான்..சாமிய கும்பிட்டு ஆரம்பிச்சு வைக்குது நடவ..அமோகமா நெல்லு எல்லாம் விழஞ்சு வருது..அதான் தமிழுக்காக காத்திருக்கோம் என்று சொல்லி முடிப்பதற்குள் தமிழ் அவர்களின் அருகில் வர ஆரம்பித்து விட்டாள்.

அர்ஜுனை தாண்டி சென்று கதிரிடம் நலம் விசாரிக்கும் பொழுதும், பாரதியிடம் பேசும் பொழுதும்; அர்ஜுனிற்க்கு ஓசைகள் மட்டும் விடுபட்டு; ஸ்லோமோசனில் அவளின் முகபாவங்களும், காது ஓரமாய் சுருண்டுயிருந்த சிறு முடியும், அந்த கண்கள் மட்டுமே தெரிந்து கொண்டிருந்தது.

பின்பு நடவு வேலையை ஆட்கள் பார்க்க ஆரம்பிக்கவும்.. தமிழ் அந்த இடம் விட்டு நகர்ந்தாள்.

அதுவரையும் ஒலியில்லா படமாய்.. அவள் மட்டுமே அவன் கண்களுக்கு தெரிந்து கொண்டிருந்தாள்.

"என்ன மச்சி..வயலையே முறச்சு பார்த்துட்டு இருக்க "-கதிர்

கதிரின் குரலுக்கு 'என்னடா' என்று வாய் மட்டுமே பதில் கூறியது அர்ஜூன் சார்பாக.

"என்ன பார்கிறேன்னு கேட்டேன்" -கதிர்

"இப்ப ஒரு பொண்ணு வந்தால..அவ பேரு என்ன." -அர்ஜூன்

நீ நாங்க பேசும் போது கவனிக்கலையா..அவ பேரு தமிழரசி டா.

தமிழரசி என்று பெயருக்கும் உதட்டுக்கும் வலிக்காமல் அர்ஜுன் உரைத்த நிமிடம் தூரத்தில் சென்று கொண்டிருந்த தமிழ் ஒரு முறை நின்று திரும்பி பார்த்தாள்.
 




Last edited:

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,440
Location
Vellore
தமிழரசி வந்தாச்சா... இனி ஆக போவது என்ன? அடுத்த பதிவோட சீக்கிரம் வாங்க சகி, பெரிய பதிவோட வாங்க??????????
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,398
Reaction score
22,046
Location
Tamil Nadu
84b1e73459a00fdf4fae088afbcd0e3a.jpgகல்யாணப் பெண்ணின் நினைவில் நாங்கள் இருப்பதே அதிகம். . அதில் நீங்கள் எங்களுக்காக பதிவிடுவதில் எல்லையில்லா ஆனந்தம். ...

??தமிழரசி என்னம்மா மின்னல் மாதிரி கொஞ்ச நேரம் தானா. ..
❤ ❤ ❤ ❤ அர்ஜுனின் மனதில் பட்டாம்பூச்சியா. .
 




Last edited:

Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
அடுத்த பதிவில் கொஞ்சம் பெரிதாக கொடுக்கவும்.
தமிழ்தான் ஹீரோயினா?
தூரத்தில் பேர் சொல்லும் போது திரும்பிப் பார்க்கிறாள் என்றால் அப்போ அவள் யட் சினியா? தேவதையா?
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
தமிழரசி வந்தாச்சா... இனி ஆக போவது என்ன? அடுத்த பதிவோட சீக்கிரம் வாங்க சகி, பெரிய பதிவோட வாங்க??????????
Vanthururen ka??

???????

????ka
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
View attachment 15829கல்யாணப் பெண்ணின் நினைவில் நாங்கள் இருப்பதே அதிகம். . அதில் நீங்கள் எங்களுக்காக பதிவிடுவதில் எல்லையில்லா ஆனந்தம். ...

??தமிழரசி என்னம்மா மின்னல் மாதிரி கொஞ்ச நேரம் தானா. ..
❤ ❤ ❤ ❤ அர்ஜுனின் மனதில் பட்டாம்பூச்சியா. .
???????????

Varum pathivula niraya varuva ka..

???Ka
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
சூப்பர்
அடுத்த பதிவில் கொஞ்சம் பெரிதாக கொடுக்கவும்.
தமிழ்தான் ஹீரோயினா?
தூரத்தில் பேர் சொல்லும் போது திரும்பிப் பார்க்கிறாள் என்றால் அப்போ அவள் யட் சினியா? தேவதையா?
???????

????ka

Yatchiniya devathaiya nu theriyala ka??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top